லிபர் ஆஃபிஸ் பயன்பாட்டினை ஆண்ட்ராய்டு கைபேசியின்திரையில் காணமுடியும்

ஆண்ட்ராய்டு சாதனங்களில் லிபர் ஆஃபிஸ் பயன்பாட்டினை காட்சியாக காண முடியும் இதற்கான மென்பொருளை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து நம்முடைய திறன்பேசியில் நிறுவுகை செய்து பயன்படுத்தி காட்சியாக பார்வையிட முடியம் இவ்வாறு ஆண்ட்ராய்டு பயன்படுத்திடும் திறன்பேசியில் லிபர் ஆஃபிஸ் பயன்பாட்டினை காட்சியாக காண்பதற்கான வசதியை வழக்கமான மேஜைக்கணினியின் விண்டோ லினக்ஸ் மேக் ஆகிய இயக்கமுறைமைகளில் செயல்படும் இயந்திர அமைவையே இதற்கும் பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது மேஜைக்கணினியில் பார்வையிட்டு படிப்பதை போன்றே லிபர் ஆஃபிஸ் பயன்பாட்டினை ஆண்ட்ராய்டில் செயல்படும் ஃபயர்ஃபாக்ஸ் அடிப்படையில் செயல்படச்செய்யப்பட்டுள்ளது ஆண்ட்ராய்டில் லிபர் ஆஃபிஸ் பயன்பாடானது செயல்படுவதற்காக ஆண்ட்ராய்டு பதிப்பு 4உம்அதற்கு பிந்தைபதிப்பும் 50எம்பி ஏபிகே கோப்பு இந்த பயன்பாட்டினை நிறுவுகை செய்வதற்கான போதுமான காலி நினைவகம் ஆகியவை மட்டும் போதுமானவையாகும் தற்போது இதனுடைய பீட்டா பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது மேலும் விவரங்களுக்கு https://wiki.documentfoundation.org/Android எனும் இணைய பக்கத்திற்கு செல்க இவ்வாறு காட்சியாக திறன்பேசியில் லிபர் ஆஃபிஸ் பயன்பாட்டினை கண்டுவரும்போது தேவையான வாறு திருத்தம் செய்வதற்காக அடுத்தகட்ட செயல்பாட்டினைதற்போது துவக்கியுள்ளனர்

தற்போது வெளியிடபட்டுள்ள லிபர் ஆஃபிஸ் 5.2 எனும் புதிய பயன்பாட்டினை பயன்படுத்தி கொள்க

இது TSCP எனும் செந்தரத்தின் அடிப்படையில் பல்வேறு இரும கையொப்பத்தினை ஆதரிக்கும் தன்மையுடன் வெளியிடபட்டுள்ளது இதனுடைய ஆவணங்களில்மிக விரைவாகவும் எளிதாகவும் திருத்தம் செய்வதற்காகப்பல்வேறு புதிய கருவிகளின் பொத்தான்களும் உரையாடல் பெட்டிகளும் அறிமுகப்படுத்தபட்டுள்ளன
இதனுடைய விரிதாளினை பயன்படுத்தி கொள்ளும் சுலபமாக இருப்பதற்காக கருவி ஆலோசனைகள் புதிய செயலிகள் புதிய காட்சிகளின் வாய்ப்புகள் நிலைப்பட்டைகள் விரைவாக நெடுவரிசைகளையும் கிடைவரிசைகளையும் உறையவைத்திடும் வசதி ஒரேயொரு கருவிபட்டை ஆகிய பல்வேறு வசதிகளுடன் அறிமுகபடுத்தபட்டுள்ளது
எளிதாக படகாட்சிகளை வழங்கும் திறனுடன் இதனுடைய இம்ப்பிரஸ் எனும் பயன்பாடு உள்ளது பண்பியல்பு பக்கப்பட்டையில் புதிய படவில்லை பலகம் வாடிக்கையாளர் விரும்பும் அசைவூட்டம் விரைவாக கருவிகளை காட்சியாக காணவும் மறையச்செய்திடுவதற்கான வசதி ஆகியவை அறிமுகபடுத்தப்பட்டுள்ளன
Filled Curve/Polygon/Freeform Line, Polygon (45°)ஆகிய புதிய வசதி இதனுடைய ரைட்டரில் கொடுக்கபட்டுள்ளது மேலும் Insert => Bookmark=> எனும் கட்டளைவரிகளின் வாயிலாக Bookmark எனும் உரையாடல் பெட்டியை திரையில் தோன்றிடசெய்துபயன்படுத்தி கொள்ளலாம்
RAWSUBTRACT, FORECAST.ETS. CONCAT. TEXTJOIN,WEEKDAY ஆகிய புதிய செயலிகள் இதனுடைய விரிதாளில் அறிமுகபடுத்தப்பட்டுள்ளன

லிபர் ஆஃபிஸின் பல்வேறு பயன்களை கொண்ட விரிவாக்க வசதிகளை பயன்படுத்தி கொள்க

லிபர் ஆஃபிஸானது ஒரு சிறந்த கட்டற்ற இலவசமான பயன்பாடாக விளங்குகின்றது இதில் ஏராளமான வசதிகள் முன்கூட்டியே கட்டப்பட்டு பயனாளர்கள் பயன்படுத்தி கொள்வதற்காக தயார்நிலையில் இருந்தாலும் பயனாளர்களுக்கு மேலும் கூடுதல் வசதிகளை அளிப்பதற்காக தேவையெனில் கூடுதல் கருவிகளாக சேர்த்து பயன்படுத்திக் கொள்வும் தேவையில்லையெனில் நீக்கிக்கொள்ளவும் கூடிய பின்வரும் விரிவாக்க வசதிகளானவை நாம் எப்போது வேண்டுமாணாலும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்வதற்காக தயாராக உள்ளன
1. MultiFormatSave எனும் கூடுதல் விரிவாக்க வசதியை பயன்படுத்தி மிகமுக்கியமாக எம்எஸ் ஆஃபிஸ் பபயன்பாட்டினை விட்டுவெளியேற தயங்கி மயங்கி இருப்பவர்கள் தாம் உருவாக்கிடும் கோப்புகளை PDF, ODF ஆகிய வடிவமைப்புகளிலும் எம்எஸ் ஆஃபிஸின் பழைய அல்லது புதியவடிவமைப்புகளிலும் சேமித்திடமுடியும்
2. AltSearch இந்த கூடுதல் விரிவாக்க வசதியை கொண்டு ரைட்டரின் Find & Replace எனும் உரையாடல் பெட்டிக்கு மாற்றாக Bookmarks, Notes, Text fields, Cross-references ஆகியவற்றை தேடுதல், மேற்கோள்களின் content, name or mark references ஆகியவற்றை தேடிஉள்ளிணைத்தல் , Footnote and Endnote ஆகியவற்றை தேடுதலும் உள்ளிணைத்தலும் Table, Pictures , Text ஆகியவற்றின் பெயரின் அடிப்படையில் தேடுதல் manual page and column break ஆகியவற்றை தேடுதல் போன்ற எண்ணற்ற செயல்கள் பயனாளர்களுக்கு பெரிதும் உதவுகின்றன
3. Pepito Cleaner எனும் கூடுதல் விரிவாக்க வசதியானது பயனாளர்களின் ஆவணங்களை வருடுதல் , PDF கோப்பினை பதிவிறக்கம் செய்தல் PDF கோப்பினை ODF வடிவமைப்பிற்கு மாற்றியமைத்திடும்போது ஏற்படும் சிக்கல்களை தீர்வுசெய்தல் என்பன போன்ற செயல்களக்கு பெரிதும் பயன்படுகின்றது
4. ImpressRunner எனும் கூடுதல் விரிவாக்க வசதியானது லிபர் ஆஃபிஸின் படவில்லை காட்சி பயன்பாடான இம்ப்ரஸ் கோப்பினை கூட்டஅரங்கிலும் நிகழ்வுகளிலும் இடையிடையே நின்றுவிடாமல் படவில்லைகளை தொடர்ந்து தானியங்கியாக திரையில் காண்பிக்குமாறு செய்வதற்காக பயன்படுகின்றது
5. Export as Images எனும் கூடுதல் விரிவாக்க வசதியானது லிபர் ஆஃபிஸின் இம்ப்பிரஸ் , ட்ரா ஆகிய பயன்பாடுகளின் கோப்புகளை பதிவேற்றம் செய்திடும்போது JPG, PNG, GIF, BMP, and TIFF ஆகிய வடிமைப்புகளில் உருவப்படமாக பதிவேற்றம் செய்திட உதவுகின்றது
6. Anaphraseus எனும் கூடுதல் விரிவாக்க வசதியானது பயனாளர்கள் கணினியின் உதவியுடன் ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழிமாற்றம் CAT (Computer- Aided Translation) செய்திடும்போது அதற்கான கோப்பினை உருவாக்கிடவும் பராமரித்திடவும் மொழிமாற்ற நினைவகத்தினை நிருவகித்திடவும் சொற்களை அங்கீகரித்தல் TMX எனும் வடிவமைப்பில் கோப்பினை பதிவேற்றம் செய்தல் பதிவிறக்கம் செய்தல் ஆகிய செயல்களை செய்திட உதவுகின்றது

கைபேசியிலேயே லிபர் ஆஃபிஸின் ஆவணங்களை பார்வையிடமுடியும்

தற்போது வெளியிடப்பட்டுள்ள லிபர் ஆஃபிஸ் பதிப்பு 5.1.2 இன் சிறப்பியல்புகள்

ஒவ்வொரு ஆறுமாதத்திற்கு ஒருமுறை புதிய பதிப்பினை வெளியிடும் கொள்கைக்கு ஏற்ப 07.04.2016 அன்று லிபர் ஆஃபிஸின் பதிப்பு 5.1.2 எனும் அலுவலக பயன்பாடு வெளியிடபட்டுள்ளது இதில் ஏராளமான பல்வேறு புதிய வசதிகளுடனும் வாய்ப்புகளுடனும் பல்வேறு பிழைகளை களைந்தும் அனைத்து பயனாளர்களுக்கும் பொருந்தும் வண்ணம் நிலையான வகையில் பயன்படுமாறு வெளியிடபட்டுள்ளது இந்த பயன்பாடானது விண்டோ இயக்க முறைமையில் செயல்படும்போது ஏதேனும் பிரச்சினை எழுந்தால் உடன் பதிவுஅமைப்பில் முழுவதுமாக மாறுதல் செய்து அமைத்து கொள்க இந்த புதிய பதிப்பினை http://libreofficeportable.org எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கையடக்க பென்ட்ரைவில் நிறுவுகை செய்து கொண்டு நாம் செல்லும் இடத்தின் கணினியில் லிபர் ஆஃபிஸ் எனும் அலுவலக பயன்பாடு இல்லையென்றாலும் பென்ட்ரைவிலிருந்தே லிபர் ஆஃபிஸின் ரைட்டர் ,கால்க், பிரசன்டேசன் போன்ற அனைத்து அலுவலக பயன்பாட்டினையும் செயல்படுத்தி பயன்படுத்தி கொள்ளலாம்

இணைய உலாவியிலிருந்தும் அதன்விரிவாக்கமாக இதனை அமைத்துகொண்டு இந்த பயன்பாட்டினை பயன்படுத்தி ரைட்டர், கால்க், பிரசன்டேசன் போன்ற அனைத்து அலுவலக பயன்பாட்டின் ஆவணங்களையும் பார்வையிடலாம் மிகமுக்கியமாக ஆண்ட்ராய்டு இயக்கமுறைமை பயன்படுத்தப்படும் செல்லிடத்து பேசிகளிலேயே லிபர் ஆஃபிஸின் ரைட்டர், கால்க், பிரசன்டேசன் போன்ற அனைத்து அலுவலக பயன்பாட்டின் ஆவணங்களை பார்வையிடமுடியும் இவ்வாறான ஆவணங்களின் காட்சியானது மெஜைக்கணினியில் பார்வையிடுவதை போன்றே இருக்கும் இவ்வாறான வசதியை கூகுள் ப்ளே தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்திகொள்ளலாம் அல்லது F-Droid வாயிலாக நிறுவுகைசெய்தும் பயன்பெறலாம் மேலும் விவரங்களுக்கு http://libreofficeportable.org எனும் தளத்திற்கு சென்று அறிந்து பயன்படுத்தி பயன்பெறுக

வேர்டு அமைவில் உள்ள உரைக்கோப்பினை எம்எஸ் வேர்டு பயன்பாடுஇல்லாமல் கையாளலாம்

நம்முடைய கணினியில் வேர்டு உரைக்கோப்பு இருக்கின்றது ஆனால் எம்எஸ்வேர்டு போன்ற பயன்பாடுகள் எதுவும் இல்லை ஆயினும் இந்த கோப்பினை திறந்து படிக்கவும் திருத்தம் செய்திடவும் விரும்புகின்றோம் என்றநிலையில் வேர்டு பேடு எனும் பயன்பாட்டின் வாயிலாக திறந்து கையாளலாம் இந்த வேர்டுபேடானது நம்முடையை உரைக்கோப்பானது .docxஎனும் பின்னொட்டுடன்கூடிய கோப்பகளையும் திறந்து கையாள உதவும் திறன்மிக்கதாகும்.

8.1

இரண்டாவது வாய்ப்பாக அவுட்லுக் இணைய பக்கத்திற்கு சென்று கட்டணமற்ற நேரடியாக இணையத்தின் வாயிலாக செயல்படும் அலுவலக பயன்பாட்டின் வாயிலாக திறந்து கையாளமுடியும் .

மூன்றாவதாக லிபர் ஆஃபிஸ் எனும் கட்டற்ற கட்டணமற்ற அலுவலக பயன்பாடு நாம்பயன்படுத்திட தயாராக இருக்கும்போது நாம் எதற்காக கவலைப்படவேண்டும் இந்த லிபர் ஆஃபிஸ் எனும் கட்டற்ற அலுவலக பயன்பாட்டின் உதவியுடன் நாம் திறக்கவிரும்பும் கோப்பு எந்த வடிவமைப்பில் இருந்தாலும் திறந்து பணிபுரியவும் பணிமுடிந்தபின் நாம் விரும்பும் வடிவமைப்பில் சேமித்திடவும் ஏன் ப்பிடிஎஃப் அமைவுகோப்பாக கூட உருமாற்றி சேமித்திடவும் முடியும்

Impress Remote எனும் ஆண்ட்ராய்டின் பயன்பாட்டின் வாயிலாக லிபர் ஆஃபிஸின் இம்ப்ரஸ் எனும் பயன்பாட்டினை கணினியில் இயக்கலாம்

இதற்காக நம்மிடம் லிபர் ஆஃபிஸ் 4.1 பதிப்பும் அதற்கு பிந்தைய பதிப்பும்  அதனுடன் புளூடூத் அல்லது வொய்பீ வாயிலாக கணினியுடன் இணையும் வசதியும் தேவையாகும்.  முதலில்  லிபர் ஆஃபிஸை திறந்து அதன் முகப்பு திரையில் மேல்பகுதியின் கட்டளை பட்டையில் Tool=>Options=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்திடுக  உடன் விரியும் பலகத்திரையில் LibreOfficeImpress => General=>  என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக.  பின்னர் விரியும் திரையில் presentation என்பதன்கீழ் Enable Remote control என்ற வாய்ப்பினை தெரிவுசெய்துகொள்க  அவ்வாறே மீண்டும்  மேல்பகுதியின் கட்டளை பட்டையில் Tool=>Options=> LibreOffice => Advanced=>  என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்திடுக   அதன்பின்னர் விரியும் திரையில் Enable experimental features என்ற வாய்ப்பினைதெரிவுசெய்து சொடுக்கி இயலுமை செய்துகொள்க.  பின்னர் நம்முடைய ஆண்ட்ராய்டு சாதனத்திற்கு வந்து அங்கு Impress Remote என்ற பயன்பாட்டினை திறந்துகொள்க அதில்    Blue Toothஅல்லது  Wi-Fi ஆகிய இரண்டில் ஒரு இணைப்பை தெரிவுசெய்துகொள்க அதன் பின்னர் LibreOffice Ipமுகவரியிட்டு அதனை இணைத்து கொள்க பின்னர்   Libre Office முகப்புதிரைக்கு சென்று அதன் திரையின் மேலே SlideShow =>ImpressRemote=>  என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் தோன்றிடும் திரையில் preview ,timer, submenu போன்றவாய்ப்புகளை சரியாக அமைத்து  படவில்லை காட்சியை இயக்கி  காட்சியை திரையில் காண்க இந்த வழிமுறையில் லிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் கோப்பினை படிக்கமட்டுமேமுடியும் திருத்தம் செய்யமுடியாது .

7

இப்போது கிடைக்கின்றது லிபர் ஆஃபிஸ5. புதிய வசதிகளுடன்

 எம்எஸ் ஆஃபிஸிற்கு மாற்றாக உள்ள லிபர் ஆஃபிஸில் தற்போதுலிபர் ஆஃபிஸ்5.0 எனும் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதிப்பு செல்லிடத்து பேசி,உபுண்டுவின்தொடுதிரை, வரவிருக்கும் மேகக்கணிணி பதிப்பு ஆகிவற்றிற்கு ஏற்ப பயன்படுமாறு உள்ளது என்பதே இதன் மிகமுக்கியமான சிறப்பம்சமாகும். மேலும் முதன்முதலாக 64பிட் அளவுள்ள விண்டோ இயக்கமுறைமையிலும் செயல்படும்வண்ணம் கட்டமைவுசெய்யபட்டுள்ளது.

லிபர் ஆஃபிஸ் ரைட்டரானது தற்போதைய தேவைக்கேற்ப அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய உரையாவணங்களை கையாளும் திறன் கொண்டதாகஉள்ளது. மேலும் இது எழுத்துபிழைகளை தானாகவே சரிசெய்துகொள்ளும் வசதி கொண்டது. அதுமட்டுமல்லாது இதில் உருவாக்கபடும் ஆவணத்தை நேரடியாக புத்தகமாக அச்சிடும் திறன்கொண்டதாக இது உள்ளது.

லிபர் ஆஃபிஸ் கால்க்கில் புதியவர்கள் கூட எளிதாக சிக்கலான ஃபார்முலாவை கையாளுதல் உருவப்படங்களை கையாளுதல் புதிய செயலிகள் அதிகதிறனுடையநிபந்தனையுடன்கூடிய வடிவமைப்பு அட்டவணைக்கான முகவரி என்பனபோன்ற எண்ணற்ற புதிய வசதிகளை தன்னகத்தை கொண்டுள்ளது.

11.1

புதியஉருவப்பொத்தான்கள் அதிகஅளவு மேம்படுத்தபட்ட பட்டியலையும் பக்கப்பட்டையும் கொண்டதாக இந்த லிபர் ஆஃபிஸ்5.0 எனும்புதிய பதிப்பு உள்ளது.

மிகசரியாக செய்ல்படவும் புத்தாக்கங்களை உருவாக்கிடஉதவும் கருவியாகவும் இந்த லிபர் ஆஃபிஸ்5.0 எனும்புதிய பதிப்பு உள்ளது

இது மேலும் கூடுதலாக பாவணைகளை நிருவகிப்பதில் சரியான தோற்றத்தை வழங்ககூடியதாக உள்ளது.

எம்எஸ் ஆஃபிஸ் ப்பிடிஎஃப் ஆர்ட்டிஎஃப் ஆகிய வடிவமைப்பு கோப்புகளாக பதிவேற்றம் செய்திடவும் பதிவிறக்கம் செய்திடவும் புதிய வடிகட்டும் கட்டமைவை தன்னகத்தே கொண்டுள்ளது.

நீடித்த நிலைப்புதன்மையை அனைத்து ஆவணங்களுக்கும் இது வழங்குகின்றது. இது ஒரு கட்டணமில்லாத கட்டற்ற பயன்பாட்டு மென்பொருளாகும்.

மிகமுக்கியமாக எம்எஸ் ஆஃபிஸின் அனைத்து வகை வடிவமைப்பு ஆவணத்தையும் கையாளும் திறன்கொண்டதாக இது விளங்குகின்றது .அதாவதுஎம்எஸ் ஆஃபிஸின் எந்தவொரு வடிவமைப்பு ஆவணத்தையும் திறந்து பயன்படுத்திகொள்ளவும் பணிமுடிந்தபின்னர் எம்எஸ் ஆஃபிஸின் எந்தவொரு வடிவமைப்பிலும் சேமித்திடும் திறன்கொண்டதாக இது விளங்குகின்றது.

11.2

Previous Older Entries