எம்எஸ்எக்செலில் தரவு பகுப்பாய்விற்கான pivot எனும் அட்டவணையை உருவாக்குதல்

பெரிய தரவுத்தொகுப்புகளை ஒரு தனியான, சுருக்கமான அட்டவணையில் தானாக ஒடுக்க ஒரு ஊடாடும் தரவுகளின் சுருக்கக் கருவியாக இந்த பிவோட் (pivot )எனும் அட்டவணையைப் பயன்படுத்தலாம். ஒரு பெரிய தரவுகளின்தொகுப்பின் தகவலறிந்த சுருக்கத்தை உருவாக்க அல்லது முக்கிய விற்பனைக்கு இடையில் ஒப்பீடுகளைச் செய்ய இதைப் பயன்படுத்தலாம்
பிவோட் (pivot)அட்டவணைஎன்றால்என்ன?
புள்ளிவிவரங்களை நிருவகிக்க பெரிய தரவுகளின்தொகுப்புகளை எளிதாக்குவதற்கான ஒரு வழிமுறையான பிவோட் அட்டவணை எனும் வசதியாகும் இதனை கொண்டு . புதிய போக்குகள் , தரவுகளுக்கிடை யேயான இணைப்புகளைக் கண்டறிய தரவுகளை முன்னிலைப்படுத்த பிவோட் அட்டவணை எனும் வசதியைப் பயன்படுத்திகொள்ளலாம்.இது எக்செல்லில் தரவுகளை உள்ளீடு செய்வதற்கான முதன்மை வழிமுறையான வழக்கமான தட்டையான அட்டவணை, போன்றதாகும்
தட்டையான அட்டவணையில் தரவுகளை கொண்ட பல்வேறுநெடுவரிசைகளும் கிடைவரிசைகளும் உள்ளன. இந்த தரவுகளின் மூலம் ஒரு சில அடிப்படை போக்குகளை அறியலாம், குறிப்பாக ஒரு சிறிய தரவுத்தொகுப்பு மூலம். இதனை அறியலாம் இருப்பினும், நம்மிடம் ஆயிரக்கணக்கான அல்லது மில்லியன் கணக்கான உள்ளீடுகளைக் கொண்ட தரவுகளின்தொகுப்பு இருந்தால், அவைகளின் போக்குகளை ஒரே பார்வையில் புரிந்து கொள்ள முடியாது. அந்த சந்தர்ப்பத்தில், கிடைக்கக்கூடிய வகைகளைப் பயன்படுத்தி தரவுகளை வரிசைப்படுத்தவும் இணைக்கவும் ஒரு மைய அட்டவணையை உருவாக்கலாம்
பிவோட் அட்டவணையைப் பற்றிய சிறந்த செய்திகளில் ஒன்று, தரவுகளை மறுசீரமைக்கக்கூடிய வேகம். சிக்கலான ஒப்பீட்டு சூத்திரங்களை புரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லைஎன்பதுதான், மேலும் ஒரு மைய அட்டவணையுடன் பணிபுரிய எக்செல் சார்பாக இருக்கத் தேவையில்லை. இன்னும் சிறப்பாக, நாம் விரும்பும் போதெல்லாம் பிவோட் அட்டவணையை மீட்டமைத்து புதிதாக தொடங்கலாம்.
எக்செல்லில்பிவோட்அட்டவணையை எவ்வாறு உருவாக்குவது?
எம்எஸ்எக்செல்லானது ஒரு சிறந்த ஒருங்கிணைந்த பிவோட் அட்டவணை வாய்ப்பினைக் கொண்டுள்ளது. பிவோட் அட்டவணைகளைப் பயன்படுத்தும் ஒரு விரிதாளின் நிரலிலிருந்து எக்செல் வெகு தொலைவில் உள்ளது என்பதை கவணத்தில்கொள்க. மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸின் மாற்றுகளான லிப்ரே ஆபிஸின் Spreadsheet கூகுளின் G-Suite ஆகிய அனைத்தும் இந்த பிவோட் அட்டவணைகளுக்கான ஆதரவைக் கொண்டுள்ளன.
பிவோட் அட்டவணையை உருவாக்க, Insert எனும் தாவலின் திரைக்குச் சென்று PivotTable என்பதைத் தேர்ந்தெடுத்திடுக. பின்னர் இந்த பிவோட் அட்டவணையில் நாம் சேர்க்க விரும்பும் அட்டவணை அல்லது தரவு வரம்பைத் (data range )தேர்ந்தெடுத்திடுக.. இதில்வெளிப்புற தரவு மூலத்தை (அதாவது, MS Access) இணைக்க வாய்ப்புகள் உள்ளன என்பதை காண முடியும் , அல்லது இருக்கும் பணித்தாளில் பிவோட் அட்டவணையை வைத்திடுக. பிந்தைய வாய்ப்பிற்காக, புதிய பிவோட் அட்டவணையானது ஏற்கனவே இருக்கும் தரவை மறைக்காது அல்லது உடைக்காது என்பதை சரிபார்த்திடுக (ஏதாவது நடந்தால் செயல்தவிர்க்க எப்போதும் CTRL + Z ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக!).
பிவோட்அட்டவணைதரவைவரிசைப்படுத்துதல்
அடுத்து OK எனும் பொத்தானைஅழுத்தினால், வலதுபுறத்தில்முன்னிலை அட்டவணை புதிய பணித்தாளில் காலியாகத் துவங்குகிறது. , திரையில் PivotTable Fields எனும் பலகத்தை காணலாம். இந்த குழுவில் பெயர்கள், முகவரிகள், விற்பனை , இதுபோன்ற பல தரவுத் தொகுப்பிலிருந்து தரவு வரம்புகள் உள்ளன. இங்கேயிருந்து, நம்முடைய முன்னிலை அட்டவணையில் தரவுகளைச் சேர்க்க நமக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன:
1. இழுத்து சென்றுவிடுதல்(Drag and Drop): வலது புறத்தில் பட்டியலிடப்பட்டுள்ள மைய அட்டவணை புலங்களை கீழே உள்ள நான்கு பகுதிகளுக்கு (வடிப்பான்கள், நெடுவரிசைகள், வரிசைகள் , மதிப்புகள்) இழுத்து சென்றுவிடலாம். எந்தவொரு வேறுபாட்டிற்கும் எதிராக நாம் குறுக்கு-குறிப்பினை விரும்பும் குறிப்பிட்ட தரவு உருப்படிகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
2. அறிக்கையில் சேர்த்தல்(Add to Report): தனிப்பட்ட தரவுத்தொகுப்பு புலங்களைக் சொடுக்குவதால் அவை நேரடியாக காத்திருப்பு அறிக்கை அட்டவணையில் சேர்க்கப்படும். கிடைக்கக்கூடிய தரவை விரைவாக உருவாக்க, பகுப்பாய்வு செய்ய, இணைக்க , மாற்ற இந்த முறையைப் பயன்படுத்திகொள்க.
இந்த இரண்டு வழிமுறைகளும் ஒரே மாதிரியான முடிவுகளை வழங்கும் அதே வேளையில், அறிக்கையில் சேர்த்தலானது நம்முடைய விருப்பமான தரவுத் துறையைத் தேர்ந்தெடுத்து, நம்முடைய அறிக்கை அட்டவணை உருமாறும் போது ஆச்சரியப்படுவதை அனுமதிக்கிறது. கூடுதலாக, ஒவ்வொரு முறையும் ஒரு புதிய தரவு புலத்தை நாம் சொடுக்கும் போது, அது தானாகவே எக்செல் சரியானது எனக் கருதப்படும் பகுதிக்குச் சேர்க்கின்றது, அதே நேரத்தில் நெடுவரிசைப் பகுதிக்கு 16384 க்கும் மேற்பட்ட உருப்படிகளைக் கொண்ட ஒரு தரவு புலத்தை சேர்க்க முடியாது என்பதை நினைவூட்டுகிறது.
பிவோட்அட்டவணைதரவுவரம்புகளைத்தேர்ந்தெடுப்பது
நாம் பயன்படுத்தும் பிவோட் அட்டவணையின் எடுத்துக்காட்டு அடிப்படையை. புரிந்துகொள்ள எளிதான ஒரு சில மாதிரி தரவு புள்ளிகள் இதில் உள்ளன.பிவோட் அட்டவணையின் புலங்கள் பட்டியலிலிருந்து, County , Sales Volume, Sales Total, Product. ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்திடுக.
இப்போது நம்முடைய பிவோட் அட்டவணையின் தரவைப் பார்த்து எந்த போக்குகளுக்கும் தரவை பகுப்பாய்வு செய்யலாம். ஒவ்வொரு பிரிவின் கண்ணோட்டத்தையும் காண விரும்பினால், சுட்டியின் வலது புறம் சொடுக்குதல் செய்தபின் விரியும் சூழ்நிலை பட்டியில் Expand/Collapse => Collapse Entire Field => என்றவாறு கட்டளைகளைத் தெரிவுசெய்து சொடுக்குக.
பிவோட்அட்டவணையில்தரவைவடிகட்டுதல்
எந்த வகையான தரவு சுருக்கமான தொடர்புகளை உருவாக்குகிறது என்பதை அறிந்துகொள்க, எந்த தரவு புலங்களுக்கு அவற்றின் ரகசியங்களை வெளிப்படுத்தவும் வடிகட்டி அமைப்புகளின் மதிப்பு நடவடிக்கைகளை புரிந்து கொள்ளவும் தேவைப்படுகிறது என அறிந்துகொள்க:
1. விரும்பிய தரவு புலத்தின் மீது வட்டமிட்ட, உரையின் வலதுபுறத்தில் சிறிய கருப்பு அம்புக்குறியைக் கவனித்திடுக
2. கருப்பு அம்புக்குறியைத் தேர்ந்தெடுப்பது ஒரு கீழிறங்கு ‘Filter’ எனும் பட்டியலை வெளிப்படுத்துகிறது – ஒரு புலத்தில் தரவை தனிமைப்படுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், அல்லது பல தரவு மூலங்களில் ஒத்த தரவு வரம்புகளுக்கு இடையிலான ஒப்பீடுகளை செய்திடலாம்.
3. County எனும்வடிகட்டி பட்டியலைத் தேர்ந்தெடுத்திடுக.
4. இயல்பாக, எல்லா தரவு வரம்புகளும் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. Unselect all (select all என்பதை அழுத்துவதன் மூலம்), அதைத் தொடர்ந்து மீண்டும் தேர்ந்தெடுப்பது ஒருசில நாடுகளில் செய்யப்படுகின்றது

இது இந்த நாடுகளுக்கான தரவை தனிமைப்படுத்துகிறது, முன்னிலை அட்டவணையை சுருக்கமான, ஒப்பீட்டு தரவுகளால் நிரப்புகிறது, சாத்தியமான போக்குகளுக்கு பகுப்பாய்வு செய்யத் துவங்க முடியும்.
கிடைக்கக்கூடிய ஒவ்வொரு புலத்தின் வடிப்பான்களையும் மாற்றியமைப்பது, முன்னிலை அட்டவணையில் வழங்கப்பட்ட தரவை எப்போதும் நேரடியாக மாற்றும், மேலும் இது தரவின் உண்மையான திறனைத் திறப்பதற்கான ஒரு நிச்சயமான முறையாகும்.
தரவு போக்குகளைக் கண்டறிய பிவோட் அட்டவணைகளைப் பயன்படுத்திடுக
தரவை புதிய கோணங்களில் செயல்படுவதற்கு ஒரு பிவோட் அட்டவணையைப் பயன்படுத்தலாம், பணி, வணிகம் அல்லது பிறவற்றிற்கான புதிய போக்குகள் மற்றும் புள்ளிவிவரங்களைக் கண்டறிய உதவுகிறது. பிவோட் அட்டவணைகளில் பணி செய்ய அதிக அளவு தரவு, பல தரவு புலங்கள் மற்றும் சில நகல் தரவு புலங்கள் இருக்கும்போது சிறப்பாக செயல்படுகின்றன.

லிபர் ஆஃபிஸ் தொடர்-பகுதி-6- லிபர்ஆஃபிஸ் பேஸில் படிவத்தை மாறுதல் செய்தல்

நாம் கடந்த லிபர் ஆஃபிஸ் தொடர்-பகுதி-5 இல் பார்த்தவாறு படிவம் ஒன்றை உருவாக்கிய பின் அதன் வாயிலாக தரவுகளை உள்ளீடு செய்வதற்கு முன்பாக ஒருசில மாறுதல்களை அப்படிவத்தில் செய்யவிரும்புவோம் பொதுவாக இந்த படிவத்தில் பல்வேறு புலங்கள்(fields) அப்புலங்களுக்கான பெயர்கள்(labels)என இதனுடைய கட்டுபாடுகள்(controls) அமைக்கபட்டுள்ளன. அவற்றுள் புலங்களின் கட்டுபாடுகளை மட்டும் அல்லது அப்புலங்களுக்கான பெயர்களின் கட்டுப்பாடுகளை மட்டும் அல்லது அனைத்து கட்டுப்பாடுகளையும் திருத்தி மாறுதல் செய்திட விரும்புவோம்.
இந்நிலையில் 1.ctrl + குறிப்பிட்ட புலம் அல்லது அப்புலத்திற்கான பெயரில் இடம்சுட்டியை வைத்து விசைப்பலகையில் சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குதல் அல்லது
2 குறிப்பிட்ட புலம் அல்லது அப்புலத்திற்கான பெயரில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குதல் அல்லது
3 குறிப்பிட்ட புலம் அல்லது அப்புலத்திற்கான பெயரில் இடம்சுட்டியை வைத்து விசைப்பலகையில் தாவியின் (tab) விசையை தெரிவுசெய்துசொடுக்குதல் செய்தால் அதனுடைய கட்டுப்பாடு ஒரு பச்சை வண்ண எட்டுகைப்பிடிகளுடன்(படம்-1) நாம் மாறுதல் செய்வதற்கு தயாராக திரையில் தோன்றிடும்

படம்-1
இவ்வாறு மாறுதல் செய்யும்போது திரையின் ஓரப்பகுதியில் ரூலரை தோன்றசெய்து அதில் சென்டிமீட்டராக அதன்அளவை மாற்றியமைத்துகொள்வது நல்லது என பரிந்துரைக்கபடுகின்றது இதற்காகTools => Options =>libreOffice.org Writer => View=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் திரையின் மேல் ,இடதுபுற ஓரம் தோன்றிடும் ரூலரின் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குவதன்வாயிலாக விரியும் சூழ்நிலை பட்டியில் சென்டிமீட்டர் அளவை தெரிவுசெய்து சொடுக்கிஅமைத்துகொள்க
படிவத்தை மாறுதல் செய்வதற்கான படிமுறைகள்
படிமுறை.1. நாள் புலத்தை மாறுதல் செய்தல்: மேலே கூறியவாறு மாறுதல் செய்யவிரும்பும் நாள் புலத்தின் கட்டுபாட்டினை(date fields control) தெரிவு செய்து திரையில் தோன்றசெய்க பின்னர் வலதுபுறத்தின் மையத்திலுள்ள பச்சைவண்ண கைப்பிடிக்கு இடம்சுட்டியை கொண்டு சென்றவுடன் அது இருதலை அம்புக்குறியாக மாறிவிடும் உடன்சுட்டியின் இடதுபுற பொத்தானை இதன்அளவு ரூலரில் 6 சென்டிமீட்டர் வரும்வரை அப்படியே பிடித்துகொண்டிருந்து அதன்பின் விடுக அதன்பின்னர் திரையின் மேலே Form Controls toolbar இல் உள்ள Controls என்ற படம்-2-ல் சிவப்பு வண்ணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-2
உடன் நாள்புலத்தின் பண்பியல்பு உரையாடல் பெட்டி தோன்றிடும் அதில் Date format propertyஎன்ற பகுதிக்கு சென்று அதனுடைய கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து அதில் Standard (long) என்பதை தெரிவுசெய்து சொடுக்கி இயல்புநிலையில் No என்றிருப்பதை Yes என மாற்றியமைத்து கொள்க
படிமுறை. 2. புலத்தின் அகலத்தை மாற்றியமைத்தல்: ஒருசில புலங்களானது இயல்பு நிலையில் அதற்கென உள்ளீடு செய்யபடும் தரவுகளுக்கான ஒதுக்கவேண்டிய அளவைவிட மிகப்பெரியதாக இருக்கும் அதனால் அவைகளில் மிகுதி காலியான இடம் வீணாக இருக்கும் அதனை சரிசெய்து அமைப்பதற்காக முன்பு கூறியவாறே BPaymentஎன்ற புலத்தினை தெரிவு செய்து கொள்க பின்னர் வலதுபுறத்தின் மையத்திலுள்ள பச்சைவண்ண கைப்பிடிக்கு அருகில் இடம்சுட்டியை கொண்டு சென்றவுடன் அது இருதலை அம்புக்குறியாக மாறிவிடும் உடன் சுட்டியின் இடதுபுற பொத்தானை இதன்அளவு ரூலரில் 2.5 சென்டிமீட்டர் வரும்வரை அல்லது தரவுகளின் அளவிற்கு பொருத்தமாக அமையும்வரை அப்படியே பிடித்து கொண்டிருந்து அதன்பின் விடுக அவ்வாறே Lpayment, Spayment, SnPayment, Mpayment, and MiscPaymentஆகிய புலங்களின் அளவுகளையும் மாற்றியமைத்திடுக
படிமுறை .3. ஒரு குழுவிலுள்ள தனித்தனி புலத்தினை அதன் வகைக்கு ஏற்றவாறு இடம்மாற்றியமைவு செய்தல்:

படம்-3
நாம் மேலே கண்ட படிமுறையின்படி ஒரு குழுவிற்குள் உள்ள பல்வேறு புலங்களை வகைக்கேற்றவாறு தெரிவுசெய்துபிடித்துகொண்டு இழுத்து சென்று (படம்-3)இடம் மாற்றி யமைத்து கொள்க
படிமுறை. 4. புலங்களின் பெயரை மாற்றியமைத்தல்:மாறுதல் செய்யவிரும்பும் புலத்தின் பெயரை தெரிவுசெய்து கொண்டு அதன்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும சூழ்நிலை பட்டியில் Control என்ற(படம்-4) கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது Form Controls toolbar இல் உள்ள Controls என்ற படிமுறை 1-ல் குறிப்பிடபட்டுள்ளவாறு அதனுடைய உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-4
உடன் தோன்றிடும் labeled Propertiesஎன்ற உரையாடல் பெட்டியில் labelஎன்ற பகுதியை தெரிவு செய்து அதில் நாம் விரும்புவதுபோன்று பெயரினை மாறுதல் செய்து அமைத்து கொண்டு இந்த உரையாடல் பெட்டியைமூடிவிடுக
படிமுறை. 5 . புலங்கள் புலங்களின் பெயர்கள் ஆகியவற்றின் அகலத்தை மாற்றியமைத்தல்: அகலத்தினை மாற்றியமைத்திட விரும்பும் புலம் அல்லது புலத்தின் பெயரை அதனுடைய கட்டு பாட்டினை தெரிவுசெய்து திரையில் தோன்றசெய்க பின்னர் வலதுபுறத்தின் மையத்திலுள்ள பச்சை வண்ண கைப்பிடிக்கு இடம்சுட்டியை கொண்டு சென்றவுடன் அது இருதலை அம்புக் குறியாக மாறிவிடும் உடன் சுட்டியின் இடதுபுற பொத்தானை இதன்அளவு ரூலரில் 2 சென்டிமீட்டர் வரும்வரை அல்லது நாம் விரும்பும் அளவிற்கு அப்படியே பிடித்துகொண்டிருந்து அதன்பின் விடுக இவ்வாறே மற்ற புலம் அல்லது புலத்தின் பெயரை அதன் அகலத்தினை மாற்றி யமைத்து கொள்க
படிமுறை. 6. ஒரு புலத்திற்கு பதிலாக வேறொரு புலமாக மாற்றியமைத்தல்: ctrl + Breakfast இனுடைய Payment என்ற புலத்தில் இடம்சுட்டியை வைத்து விசைப்பலகையில் சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக உடன் இதனுடைய கட்டுப்பாடு ஒரு பச்சை வண்ண எட்டுகைப்பிடிகளுடன் நாம் மாறுதல் செய்வதற்கு தயாராக திரையில் தோன்றிடும் பின்னர் அக்கைப்பிடிக்குள் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலை பட்டியில் Replace with => List Box=> என்றவாறு (படம்-5)கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-5
பின்னர் Form Controls toolbar இல் உள்ள Controls என்ற படிமுறை 1-ல் குறிப்பிடபட்டுள்ளவாறு அதனுடைய உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-6
உடன் தோன்றிடும் பண்பியல்பு உரையாடல் பெட்டியில் General என்ற (படம்-6) தாவிபொத்தானின் திரையை தோன்றசெய்க அதிலுள்ள Drop down என்ற பெட்டியில் இயல்புநிலையில் No என்றிருப்பதை Yes என (படம்-6)மாற்றியமைத்து கொள்க
இதே உரையாடல் பெட்டியின் data என்ற தாவிபொத்தானின் திரையை தோன்றசெய்க அதிலுள்ள Type of list contents என்ற பெட்டியில் Sql என(படம்-7) மாற்றியமைத்து கொள்க

படம்-7
இதே உரையாடல் பெட்டியின் tab என்ற தாவிபொத்தானின் திரையை தோன்றசெய்க அதிலுள்ள list contents என்றபெட்டியில் SELECT “Type”, “Type” FROM “Payment Type” என (படம்-7) மாற்றியமைத்து கொள்க அவ்வாறே இதே படிமுறையை பின்பற்றி Lunch, Supper, Motel, Snacks, Miscஆகியவற்றின் payment புலங்களுக்கும் மாற்றி யமைத்து கொள்க

படம்-8
படிமுறை. 7 . குறிப்பு புலத்தினை மாற்றியமைத்தல்: ctrl + note என்ற புலத்தில் இடம்சுட்டியை வைத்து விசைப்பலகையில் சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக உடன் இதனுடைய கட்டுப்பாடு ஒரு பச்சை வண்ண எட்டுகைப்பிடிகளுடன் நாம் மாறுதல் செய்வதற்கு தயாராக திரையில் தோன்றிடும் பின்னர் Form Controls toolbar இல் உள்ள Controls என்ற படிமுறை 1-ல் குறிப்பிடபட்டுள்ளவாறு அதனுடைய உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
உடன் தோன்றிடும் பண்பியல்பு உரையாடல் பெட்டியில் General என்ற தாவிபொத்தானின் திரையை தோன்றசெய்க அதிலுள்ள Scroll bar என்ற புலத்தினுடைய பெட்டியின் கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து அதில் இயல்புநிலையில் none என்றிருப்பதை vertical என (படம்-9) மாற்றியமைத்து இந்த உரையாடல் பெட்டியை மூடிவிடுக பின்னர் படிமுறை 5 ஐ பின்பற்றி இதனுடைய நீள அகலத்தை மாற்றியமைத்துகொள்க

படம்-9
படிமுறை .8. ஒரு துனைப்படிவத்தில் புலத்தின் பெயர் புலத்தினை மாற்றியமைத்தல்: payment type என்ற புலப்பெயரில் இடம்சுட்டியை வைத்து படிமுறை 6 இல் கூறியவாறு Replace with (படம்-8) => List Box(படம்-5)=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் மீண்டும் இதே payment type என்ற புலப்பெயரில் சூழ்நிலை பட்டியை தோன்றசெய்து column என்ற (படம்-8)கட்டளையை தெரிவுசெய்து சொடுக்கி இதனுடைய பண்பியல் உரையாடல் பெட்டியை தோன்றசெய்க பின்னர் படிமுறை 6 இல் கூறியவாறு அதிலுள்ள Type of list contents என்ற பெட்டியில் Sql என மாற்றியமைத்து கொள்க இதே உரையாடல் பெட்டியின் tab என்ற தாவிபொத்தானின் திரையை தோன்றசெய்க அதிலுள்ள list contents என்றபெட்டியில் SELECT “Type”, “Type” FROM “Payment Type”என மாற்றியமைத்து கொள்க பிறகு இந்த உரையாடல் பெட்டியை மூடிவிடுக
படிமுறை .9 . குழுவிற்கான தலைப்பைஅமைத்தல்: இடம்சுட்டியானது மேலே இடதுபுற மூலையில் இருப்பதை உறுதி செய்து கொள்க பின்னர் உள்ளீட்டு விசையை அழுத்துவதன் மூலம் Heading 2. இன் கிடைவரிசைக்கு இடம்சுட்டியை கொண்டு செல்க. அதில் இயல்பு நிலையில் இருப்பதை அதனுடையApply Styles என்ற கீழிறங்கு பட்டியலை விரியச்செய்க அதில் Meals snacks என்றவாறு தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்தி subformஇற்குள் இடம் சுட்டியை கொண்டு சென்று Fuel Data என இதனுடைய தலைப்பையும் மாற்றியமைத்திடுக
படிமுறை .10 . படிவத்தின் பின்புலத்தினை மாற்றியமைத்தல்: ஒரு படிவத்தின் பின்புலத்தில் Tools => Options =>libreOffice.org => Colors=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி . வண்ணத்தையும், வரைகலை ,படம் ஆகியவை இருக்குமாறும் மாற்றியமைத்திடலாம் இவ்வாறு பின்புலத்தினை மாற்றியமைக்கும்போது புலங்களையும் அவற்றின் பெயர்களையும் திரையில் நம் கண்ணிற்கு புலப்படுமாறும் அதனை நம்மால் படித்தறிந்து கொள்ளுமாறும் அமைத்திட வேண்டும் என்பதை மனதில் கொள்க படம்-3-ல் உள்ள படிவத்தின் முதல்வரிசை புலங்களின் பெயர்களில் உள்ள Control+ Date label ஐ தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் Control+shift+ rest of the labels களை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின் Design Form toolbarஎன்பதில் உள்ளControlஎன்ற உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இதனுடைய பண்பியல்பு உரையாடல் பெட்டியை திரையில் தோன்ற செய்க அதன்பின்னர் பின்புல வண்ணம் இயல்புநிலையில் Light cyan. என்றிருப்பதை அதனுடைய கீழிறங்கு பட்டியலிலிருந்து தேவையான வண்ணத்தை தெரிவுசெய்து கொள்க அவ்வாறே மற்ற புலங்களின் பெயர்களுக்கும் பின்புல வண்ணத்தை மாற்றி் யமைத்து கொண்டு இந்த பண்பியல்பு உரையாடல் பெட்டியை மூடிவிடுக
அதன்பிறகு படிவத்தின் பின்புலத்தில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் page என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்கியபின் தோன்றிடும் உரையாடல் பெட்டியில் background என்ற (படம்-10) தாவியின் திரையை தோன்றசெய்க அதில் As என்பதன் கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து அதில் color என்பதற்கு பதிலாக graphic என்பதை தெரிவுசெய்து கொள்க

படம்-10
பின்னர் File என்ற பகுதியில் browseஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் விரியும் உரையாடல் பெட்டியில் Gallery என்ற மடிப்பகத்தை தேடிபிடித்து அதில் sky.gif என்ற கோப்பினை தெரிவுசெய்து open என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் type என்ற பகுதியில் உள்ள area என்ற வானொலி பொத்தானை தெரிவுசெய்து கொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
படிமுறை 10 படிவத்தின் தாவியின்வரிசையை மாற்றியமைத்தல்: ஒரு படிவத்தில் உள்ள புலங்களின் வாயிலாக தரவுகளை உள்ளீடு செய்திடும்போது ஒரு புலத்திலிருந்து மற்றொரு புலத்திற்கு இடம்சுட்டி மாறிசெல்வதற்கு விசைபலகையிலுள்ள tab என்ற விசையை அழுத்தவேண்டும் இவ்வாறு tab என்ற விசையை அழுத்திடும் போது எந்த புலத்திலிருந்து ஆரம்பித்து அடுத்தடுத்து வரிசைகிரமமாக எந்தபுலம் வரை செல்லவேண்டும் என நாம் விரும்பியவாறு மாற்றியமைத்து கொள்ளமுடியும் இதற்காக Control+ Date field ஐ தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் form controls toolbar இல் form design என்றஉருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது View => Tool bars => Form Design=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குக உடன் விரியும் கருவிபட்டியில் Activation Order என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் தோன்றிடும்Tab Order என்ற உரையாடல் பெட்டியில் தேவையான புலங்களை தெரிவுசெய்து கொண்டு Move Up அல்லது move down ஆகிய இரு பொத்தான்களில் ஒன்றினை தேவையானவாறு தெரிவுசெய்து சொடுக்கி முன்பின் வரிசை கிரமத்தை சரிசெய்து நாம்விரும்பியவாறு வரிசையாக அமைத்து கொண்டு okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பிறகு இந்த படிவத்தையும் தரவுதளத்தையும் சேமித்து வெளியேறுக

லிபர் ஆஃபிஸ் தொடர்-பகுதி-5- லிபர்ஆஃபிஸ் பேஸில் படிவம் ஒன்றை உருவாக்குதல்

பொதுவாக தரவுதளம் எனில் தரவுகளை தேக்கிவைக்க உதவிடும் ஒரு அமைப்பாகும் இந்த தரவுதளத்திற்குள் தேக்கிவைக்க விரும்பும் தரவுகளை உள்ளீடு செய்ய உதவுவதே தரவுதள படிவமாகும் தரவுதளபடிவம் ஆனது ஒரு தரவுதளத்திற்குள் தரவுகளை உள்ளீடு செய்யவும் அவ்வாறு உள்ளீடு செய்த தரவுகளை மாறுதல்கள் செய்யவும் பயன்படுகின்றது ஒரு சாதாரண படிவம் ஆனது ஒரு அட்டவணையில் இருக்கும் புலங்களை உள்ளடக்கியதாகும் இதனோடு மேலும் கூடுதலான உரை ,வரைகலைஅமைவு ,தேர்வுசெய்பெட்டிகள், இதரஉறுப்புகள் உள்ளடக்கியதே ஒருகலவையான தரவுதள படிவமாகும்
ஒரு தரவுதளத்தின் இடதுபுறபலகத்தின் மூன்றாவதாக உள்ளதே தரவுதளபடிவத்தை கையாள உதவிடும் உருவபொத்தான்ஆகும் அந்த படிவஉருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் வலதுபுற பலகத்தில்1.Creating Form in Design View, 2.Use Wizard to Create Formஆகிய இருவாய்ப்புகள் தோன்றிடும். நாம்இப்போதுதான் முதன்முதலில் இந்த தரவுதளத்திற்குள் உள்நுழைவு செய்யும் புதியவர், எனில் இந்த இரண்டாவது வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக
\
5.1
படிமுறை-1Select fields:உடன் விரியும் Select the fields of your form என்ற உரையாடல் பெட்டியில்Tables or queries என்பதன் கீழுள்ள கீழிறங்கு பட்டியிலிருந்து நாம் ஏற்கனவே அட்டவணையாக உருவாக்கியிருந்த Table:vacationsஎன்ற அட்டவணையை தெரிவுசெய்து சொடுக்குக உடன் available fields என்பதன் கீழ் நாம் தெரிவுசெய்த அட்டவணையிலுள்ள புலங்கள் பட்டியலாக விரியும் அதற்கு அருகில் வலதுபுறம் உள்ள >> என்ற இரட்டைக்குறியுள்ள பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் available fields என்பதன் கீழ் பட்டியலாக விரிந்த புலங்கள் அனைத்தும் Fields in the form என்ற பகுதிக்கு போய்ச்சேரும் பின்னர் இந்த உரையாடல் பெட்டியில் next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக .

படிமுறை-2Set up a subform.: நாம் ஏற்கனவே fuel, vacationsஆகிய இரு அட்டவணைகளுக்கிடையே உறவுகளை உருவாக்கியிருந்தால் அதனை பயன்படுத்தி கொள்ளலாம் இல்லையெனில் படிமுறை 4 ஐ பயன் படுத்தி இவ்விரு அட்டவணைகளுக்கிடையேயான உறவை உருவாக்குக.
இதன்பின் தோன்றிடும் Decide if you want to setup a sub formஎன்ற உரையாடல் பெட்டியில் Add Sub form என்ற தேர்வுசெய் பெட்டியை தெரிவுசெய்து கொள்க. பின்னர் இதன் கீழுள்ளsub form based on existing relationஎன்ற வானொலி பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் fuel என்ற உறவு புலபெயர் அருகிலுள்ள உரைபெட்டியில் தோன்றிடும் அதனை தெரிவுசெய்துகொண்டு இந்த உரையாடல் பெட்டியில் next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக .

5.2
படிமுறை-3Add subform fields: இந்த படிமுறையானது ஏறத்தாழ படிமுறை 1 ஐ போன்றதே ஆயினும் இந்த படிமுறையில் துனைபடிவத்திற்குள் அனைத்து புலங்களையும் கொண்டுவந்து சேர்க்கவிரும்பு வதில்லை அதனால் முதலில் available fields என்பதன் கீழ் நாம் தெரிவுசெய்த அட்டவணையிலுள்ள புலங்களுக்கு அருகில் வலதுபுறம் உள்ள >> என்ற இரட்டைக்குறியுள்ள பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் available fields என்பதன் கீழ் பட்டியலாக விரிந்த புலங்கள் அனைத்தும் Fields in the form என்ற பகுதிக்கு போய்ச்சேரும் பின்னர் Fields in the form என்பதன் கீழ் வந்து சேர்ந்த புலங்களில் FuelIDஎன்ற புலத்தை மட்டும் தெரிவுசெய்து கொண்டு அருகில் இடதுபுறம் உள்ள < என்ற ஒற்றைக்குறியுள்ள பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் available fields என்பதன் கீழ் நம்மால் தெரிவுசெய்து நீக்கம் செய்யபட்ட FuelIDஎன்ற புலம் தவிர மிகுதி புலங்கள் அப்படியே இருக்கும் பின்னர் இந்த உரையாடல் பெட்டியில் next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
படிமுறை-4Get joined fields: இந்த படிமுறையானது நாம் உருவாக்கிய அட்டவணைகளில் அல்லது வினாக்களில் அவைகளுக்கிடையே உறவை உருவாக்காமல் இருந்தால் அவைகளுக்கிடையே உறவை உருவாக்கிட உதவுகின்றது. Date என்ற புலத்தை இவ்விரு அட்டவணைகளுக்கிடையே உறவு புலமாக உருவாக்கிய இணைக்க விரும்புவதாக கொள்வோம்.

5.3
அதனால் உடன் தோன்றிடும் Select the joins between your forms என்ற உரையாடல் பெட்டியில் இடதுபுறம் first joined subform field என்பதன்கீழுள்ள கீழிறங்கு பட்டியலிருந்து date என்ற புலத்தின் பெயரை தெரிவுசெய்துகொள்க இந்த புலமானது fuel அட்டவணைக்கு அடிப்படை திறவுகோள் (primary key)அன்று அதனால் இதனை அயலர்திறவுகோள்(foreign key)என்பர். பின்னர் வலதுபுறம் first joined main form field என்பதன்கீழுள்ள கீழிறங்கு பட்டியலிருந்த date என்ற புலத்தின் பெயரை தெரிவுசெய்துகொள்க இங்கு இந்த புலமானது vacations என்ற அட்டவணைக்கு அடிப்படை திறவுகோள் (primary key)ஆகும் இதற்குமேலும் வேறுபுலத்தை இவ்வாறு உறவுபுலமாக உருவாக்கிட விரும்பினால் Second joined sub form field என்பதன் கீழ் முன்பு கூறியவாறு செயல்படுத்துக பின்னர்இந்த உரையாடல் பெட்டியில் next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
படிமுறை-5Arrange controls: இந்த படிமுறையில் ஒரு படிவத்தின் கட்டுபாடுகளை உருவாக்கும் வழிமுறையை தெரிந்து கொள்ளவிருக்கின்றோம் ஒரு கட்டுபாடு என்பது label ,field ஆகிய இரண்டு பகுதிகளை உள்ளடக்கியதாகும் திரையில் உள்ள முதன்மை படிவத்தில் (Arrangement of the main form ) Columnar – Labels on top என்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன் அந்தந்த புலங்களின் பெயர் அதனதன் மேல்பகுதியில் பிரதிபலிக்கும் துனைபடிவத்தில் (Arrangement of the subform) As Data Sheetஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரிதாளினை போன்று புலங்களின் பெயரானது நெடுவரிசைகளின் தலைப்பாகவும் அதற்கு கீழ்காலியான புலங்களும் தோன்றிடும் பின்னர்இந்த உரையாடல் பெட்டியில் next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
படிமுறை-6Set data entry : ஏதேனும் புலத்தில் தரவை உள்ளீடு செய்யத்தேவையில்லை எனும் போதுமட்டும் தேவையான புலத்தின் தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்துகொள்க அனைத்து புலங்களிலும் தரவுகளை உள்ளீடு செய்ய வேண்டுமெனில் இயல்புநிலையில் இருப்பதை ஏற்று இந்த உரையாடல் பெட்டியில் next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
படிமுறை-7Apply styles : இந்த படிமுறையில் ஒவ்வொரு புலத்திற்குமான வண்ணம் புலத்தின் ஒரஅமைப்பு ஆகியவற்றை நாம்விரும்பியவாறு தெரிவுசெய்துகொண்டு பின்னர்இந்த உரையாடல் பெட்டியில் next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
படிமுறை-8Set name.: இறுதியாக இந்த படிவத்திற்கு ஒரு பெயரிட்டு இங்கு Fuel என்ற பெயரை இட்டு Modify the form என்பதன் வானொலி பொத்தானை தெரிவுசெய்துகொண்டு பின்னர்இந்த உரையாடல் பெட்டியில் next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
உடன் படிவமானது மாறுதல் செய்வதற்கு தயாராக Edit mode என்ற நிலையில் திரையில் தோன்றிடும்.

லிபர் ஆஃபிஸ் பேஸ் தொடர்-பகுதி-2-லிபர் ஆஃபிஸ் பேஸில் ஒரு அட்டவணையை அதன் வழிகாட்டி மூலம் உருவாக்குதல்

படிமுறை1:கடந்த லிபர் ஆஃபிஸ் பேஸ் தொடரில் கடைசியாக Table Wizard என்ற வழிகாட்டியினுடைய திரை தோன்றிடும் என பார்த்தோம் , புதியவர்கள் எவரும் அட்டவணையொன்றை எளிதாக உருவாக்குவதற்கு வசதியாக அந்தTable Wizard என்ற வழிகாட்டியினுடைய திரையில் Stepsஎன்ற இடதுபுற பலகத்தில் Select fields என்ற முதல் படிமுறை இயல்புநிலையில் தெரிவுசெய்யபட்டிருக்கும் அதனை ஏற்றுகொள்க. இந்த வழிகாட்டியினுடைய வலதுபுற பலகத்தில்Select fields for your tableஎன்ற தலைப்பின்கீழுள்ள Business ,personal ஆகிய இருவகைகளில் இந்த அட்டவணையை நாம் உருவாக்கமுடியும் என இதிலுள்ள வகைகள்(category) காண்பிக்கின்றது .இயல்புநிலையில் Business என்ற வகையின் வானொலி பொத்தான் தெரிவுசெய்ய பட்டிருக்கும் நாம் CD Collection Sample என்ற அட்டவணையை உருவாக்கிட இருப்பதால் இரண்டாவது வகையான personal என்ற வகையின் வானொலி பொத்தானை தெரிவுசெய்து கொள்க பின்னர் இவ்வாறு மேலே நாம் தெரிவு செய்வதற்கேற்ற வகையின் அட்டவனையின் பெயர் பட்டியல் ஆனது Sample tablesஎன்ற கீழிறங்கு பட்டியலில் மாறியமைந்திருக்கும் அவைகளை விரியசெய்துCD Collection என்பதை (படம்-1) தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் தெரிவுசெய்வதற்கேற்ற அட்டவணையிலுள்ள புலங்களின் பெயர்கள் Available fields என்ற இடதுபுற பட்டியலில் மாறியிருக்கும் அதன் வலதுபுறம் Select fieldsஎன்ற பகுதி காலியாக இருக்கும் இதில்தான நாம் உருவாக்கவிரும்பும் அட்டவணையினுடைய புலங்களை கொண்டுவந்து சேர்க்கவிருக்கின்றோம்

1
பிறகு நாம் விரும்பும் புலங்களின் பெயர்களைAvailable fields என்ற இடதுபுற பட்டியலில் இருந்து ஒவ்வொன்றாக தெரிவுசெய்து வலதுபுற Select fieldsஎன்ற பகுதிக்கு கொண்டுவந்து சேர்த்திடு வதற்காக Select fields, available fields ஆகிய இருபகுதிகளுக்கும் மையபகுதியிலுள்ள > என்ற ஒற்றைகுறியுள்ள பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அனைத்து புலங்களையும் எனில் >> என்றஇரட்டைக் குறியுள்ள பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
முதலில் Available fields என்ற இடதுபுற பட்டியலில் இருந்து CollectionID, AlbumTitle, Artist, DatePurchased, Format, Notes, ,NumberofTracks ஆகிய புலங்களை ஒவ்வொன்றாக தெரிவுசெய்து கொண்டு Select fields, available fields ஆகிய இருபகுதிகளுக்கும் மையபகுதியிலுள்ள > என்ற ஒற்றைக்குறியுள்ள பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
உடன் நாம் தெரிவுசெய்த புலங்களின் பெயர்கள் Select fieldsஎன்ற பகுதியில் பிரதிபலிக்கும் மேலும் Photoஎன்றவாறு புலம் ஒன்று நமக்குத் தேவையெனில் அதனை மற்ற மாதிரி அட்டவணையில் எங்கேனும் உள்ளதாவென தேடிபிடித்து தெரிவுசெய்யவேண்டும்
அதற்காக category என்பதில் Business என்ற வகையையும் Sample tablesஎன்ற கீழிறங்கு பட்டியலில் Employee என்பதையும் available fields என்ற இடதுபுற பட்டியலில் இருந்து Photo என்ற புலத்தை தெரிவுசெய்து கொண்டுSelect fields, available fields ஆகிய இருபகுதிகளுக்கும் மைய பகுதியிலுள்ள > என்ற ஒற்றைக் குறியுள்ள பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.உடன் நாம் தெரிவுசெய்த Photoஎன்ற புலத்தின் பெயர் Select fieldsஎன்ற பகுதியில் பிரதிபலிக்கும்
இவ்வாறே Select fieldsஎன்ற பகுதியில் நம்மால் பட்டியலிடபட்ட புலங்களின் வரிசை கிரமங்கள் மாறியிருந்தால் அதனை மாற்றியமைத்திடுவதற்காக இதன் அருகிலுள்ள Up அல்லதுDown ஆகிய அம்புக்குறிகளில் தேவையானதை தெரிவுசெய்து பிடித்து நகர்த்தி வரிசையை மாற்றியமைக்கவிரும்பும் புலம் ஏதேனுமுள்ளதாவென தேடிபிடித்திடுக பின்னர் அதனை மாற்றியமைத்திடுவதற்காக நாம் மாற்றியமைக்க விரும்பும் புலத்தின் பெயரை ஒவ்வொன்றாக தெரிவுசெய்து கொண்டு கீழ்நோக்கு அல்லது மேல்நோக்கு அம்புக்குறியுள்ள பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி தேவையான இடத்தில் சென்று அமரச்செய்க

2
அவ்வாறே Select fieldsஎன்ற பகுதியில் நாம் விரும்பாத புலங்கள் ஏதேனும் சேர்ந்திருந்தால் முதலில் அவ்வாறான புலம் ஏதேனும் உள்ளதாவென தேடிபிடித்திட இதன் அருகிலுள்ள Up அல்லதுDownஆகிய அம்புக்குறிகளில் தேவையானதை தெரிவுசெய்து பிடித்து நகர்த்தி அவ்வாறான புலம் ஏதேனுமுள்ளதாவென தேடிபிடித்திடுக பின்னர் அதனை தெரிவுசெய்து கொண்டுSelect fields, available fields ஆகிய இருபகுதிகளுக்கும் மையபகுதியிலுள்ள < என்ற ஒற்றைக் குறியுள்ள பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம்விரும்பாத புலத்தின் பெயர் Select fieldsஎன்ற பகுதியில் நீக்கபட்டு available fields என்ற பகுதிக்குசென்றுவிடும் பிறகு வழிகாட்டியினுடைய திரையின் கீழ்பகுதியிலுள்ளnext என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
படிமுறை2 முந்தைய படிமுறையில் புலங்களை நகர்த்துவதற்கு மட்டும் பார்த்தோம் தேவையற்ற புலங்களை இந்த பகுதியிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்வதற்காக அவ்வாறான புலத்தை தெரிவுசெய்து – என்ற குறியீட்டு பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி நீக்கிவிடுக
எச்சரிக்கை நன்கு அனுபவம் பெற்றபிறகு இந்த வழிமுறையை பின்பற்றி புலத்தை நீக்கம் செய்வது நல்லது என பரிந்துரைக்கபடுகின்றது
set types and format என்ற இந்த இரண்டாவது படிமுறையின் set field types and formats என்ற தலைப்பில் தோன்றிடும் வழிகாட்டித்திரையின் selected fields என்பதன்கீழுள்ள ஒவ்வொரு புலத்திற்குமான பண்பியல்புகளை வலதுபுற பகுதியிலுள்ள field information என்பதன்கீழுள்ள ஒவ்வொரு பண்பியல்பையும் அதனுடைய கீழிறங்கு பட்டியலில் இருந்து நாம்விரும்பியவாறு மாற்றியமைத்திடலாம் அல்லது ஏற்கனவே இயல்புநிலையில் உள்ளபண்பியல்புகளை ஏற்றுகொள்ளலாம்
குறிப்பு ஒவ்வொரு புலத்தையும் தெரிவுசெய்து சொடுக்கியவுடன் தோன்றிடும் திரையில் குறிப்பிட்ட புலத்தின் வாயிலாக தரவுகளை உள்ளீடு செய்யவிரும்பினால் field information என்பதன்கீழுள்ள entry required என்ற பண்பியல்பு no என்றிருப்பதை yesஎன அதிலுள்ள கீழிறங்கு பட்டியலை விரியசெய்து தெரிவுசெய்து கொள்க
புலங்களின் பெயரை மாற்றியமைத்திட விரும்பினால் Field name என்பதற்கருகிலுள்ள உரைபெட்டியில் இடம்சுட்டியை வைத்து தேவையான பெயரை தட்டச்சு செய்து கொள்க
.ஒவ்வொரு புலத்தின் எழுத்தின் அளவு இயல்புநிலையில் இந்த லிபர் ஆஃபிஸ் பேஸ் ஆனது VCHARஎன்பதை உரைபுலத்திற்கான புலவடிமைப்பை பயன்படுத்தி கொள்கின்றது அதனால் நாம் எவ்வளவு எழுத்துகள் தேவையென Lengthஎன்ற பண்பியல்பில் தேவையான எண்ணிக்கையை அமைத்துகொள்க
முதல் புலமான CollectionID என்பதன்Auto value என்ற பண்பியல்பு no என்றிருப்பதை yesஎன அதிலுள்ள கீழிறங்கு பட்டியலை விரியசெய்து தெரிவுசெய்து கொள்க இயல்புநிலையில் உள்ள மற்ற பண்பியல்புகளை அப்படியே ஏற்று கொள்க
AlbumTitle என்ற புலத்தின் entry required என்ற பண்பியல்பு no என்றிருப்பதை yesஎன அதிலுள்ள கீழிறங்கு பட்டியலை விரியசெய்து தெரிவுசெய்து கொள்க இயல்புநிலையில் உள்ள மற்ற பண்பியல்புகளை அப்படியே ஏற்று கொள்க
Artistஎன்ற புலத்தின் entry required என்ற பண்பியல்பு no என்றிருப்பதை yesஎன அதிலுள்ள கீழிறங்கு பட்டியலை விரியசெய்து தெரிவுசெய்து கொள்க இயல்புநிலையில் உள்ள மற்ற பண்பியல்புகளை அப்படியே ஏற்று கொள்க
DatePurchased என்ற புலத்தின் இயல்புநிலையில் உள்ள பண்பியல்புகளை அப்படியே ஏற்று கொள்க
Format என்ற புலத்தின் entry required என்ற பண்பியல்பு no என்றிருப்பதை yesஎன அதிலுள்ள கீழிறங்கு பட்டியலை விரியசெய்து தெரிவுசெய்து கொள்க இயல்புநிலையில் உள்ள மற்ற பண்பியல்புகளை அப்படியே ஏற்று கொள்க
Notes என்ற புலத்தின் இயல்புநிலையில் உள்ள பண்பியல்புகளை அப்படியே ஏற்று கொள்க
,NumberofTracks என்ற புலத்தின் field type என்ற பண்பியல்பில் வரிகளின் எண்ணிக்கை999 இற்குள் எனில் Tiny Integer [TINYINT]என்பதையுயம் அதற்குமேல் வரிகளின் எண்ணிக்கை99999 வரையெனில் Small Integer [SMALLINT] என்பதை தெரிவுசெய்து கொள்க இயல்புநிலையில் உள்ள மற்ற பண்பியல்புகளை அப்படியே ஏற்று கொள்க
. Photo என்ற புலத்தின் இயல்புநிலையில் உள்ள பண்பியல்புகளை அப்படியே ஏற்று கொள்க
இவ்வாறு நாம் உருவாக்கிய புலம் ஒவ்வொன்றையும் தெரிவுசெய்து அதனதன் பண்பியல்பை நாம்விருமபியவாறுஅல்லது நமக்குத்தேவையானவாறு மாற்றியமைத்துகொண்ட பிறகு வழிகாட்டியினுடைய திரையில் கீழ்பகுதியிலுள்ளnext என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

3
படிமுறை3உடன் இடதுபுறம் steps என்பதன் கீழ்set primary key என்ற படிமுறைக்கு மாறியிருக்கும் table wizard ஆனது set primary keyஎன்ற தலைப்பில் விரியும் இதன்கீழ் create a primary key என்ற தேர்வுசெய்பெட்டியின் வாய்ப்பும் automatically add a primary key என்ற வானொலி பொத்தானின் வாய்ப்பும் auto value என்ற தேர்வுசெய்பெட்டியின் வாய்ப்பும் இயல்புநிலையில் தெரிவுசெய்யபட்டிருக்கும்
இவ்வாறான வாய்ப்பு இந்த வழிகாட்டியானது தனக்கு கட்டளையிடபட்ட முதல்புலத்தை திறவுகோளாக தெரிவுசெய்து கொள்ளும் ஆனால் நாம் விரும்பும் புலத்தை திறவுகோளாக மாற்றியமைத்திட use an existing fields as a primary keyஎன்ற வானொலி பொத்தானின் வாய்ப்பை தெரிவுசெய்து கொண்டு field nameஎன்பதற்கருகிலுள்ள கீழிறங்கு பட்டியலை விரியசெய்து தேவையான புலத்தின் பெயரை தெரிவுசெய்தவுடன் auto value என்ற தேர்வுசெய்பெட்டியின் வாய்ப்பு இயல்புநிலையில் தெரிவுசெய்யபட்டுவிடும்
ஒன்றுக்குமேற்பட்ட புலங்களை திறுவுகோளாக மாற்றிட விரும்பினால் define primary key as combination of several key மூன்றாவது வானொலி பெத்தானின் வாய்ப்பை தெரிவுசெய்து கொண்டு primary key field என்பதில் தேவையான புலங்களை படிமுறை ஒன்றில் கூறியவாறு தெரிவுசெய்து கொண்டபிறகு வழிகாட்டியினுடைய திரையில் கீழ்பகுதியிலுள்ளnext என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
குறிப்பு ஒரு அட்டவணையின் குறிப்பிட்டதொரு ஆவணத்தை தேடிபிடிப்பதற்கு இந்த primary key எனும் திறவுகோள் பயன்படுகின்றது அதனால் சிக்கலில்லாது ஒற்றையான புலத்தை திறவுகோளாக தெரிவுசெய்து கொள்வது நல்லது என பரிந்துரைக்கபடுகின்றது

4
படிமுறை4உடன் இடதுபுறம் steps என்பதன் கீழ் create table என்ற படிமுறைக்கு மாறியிருக்கும் table wizard ஆனது create tableஎன்ற தலைப்பில் விரியும் இதன்கீழ் what do you want to name your table? என்பதன் கீழுள்ளCD-Collection என்ற பெயரை தேவையானால் மாற்றி யமைத்துகொள்க. what do you want to do next ? என்ற கேள்வியின்கீழ் உடனடியாக தரவுகளை உள்ளீடு செய்யவிரும்பினால்insert data immediately என்ற வானொலி பொத்தானின் வாய்ப்பை தெரிவுசெய்துகொண்டு finish என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இ்ந்த வழிகா்டடியின் திரையின் பணியைமுடிவிற்கு கொண்டு வருக. பிறகு தோன்றும் தரவுஉள்ளீட்டு சாளத்திரையை மூடி tables, queries, forms, reports ஆகியவைஅடங்கிய முதன்மைத்திரைக்கு வந்து சேருக -தொடரும்

லிபர் ஆஃபிஸ் பேஸ் தொடர்-பகுதி-1- பேஸ் ஒரு அறிமுகம்

லிபர் ஆஃபிஸ் பேஸ் என்பது தரவுகளை கையாளக்கூடிய ஒரு பயன்பாடாகும். இவ்வாறு தரவுகளை கையாளுவதற்காக இது HSQLஎன்ற தரவுதள பொறியை பயன்படுத்தி கொள்கின்றது இந்த தரவுதள பொறியானது உருவாக்கப்படும் அனைத்து கோப்புகளையும் சுருக்கிய கோப்புகளாக(Zipped files) தேக்கிவைக்கின்றது. பொதுவாக ஒரு தரவுதளம் என்பது அட்டவணை(Table), வினா(Query), படிவம்(Form),அறிக்கை(Report) ஆகிய நான்கு கட்டமைப்பை கொண்டதாகும் இவையனைத்தும் தனித்தனியான தரவுகளை உள்ளடக்கிய ஏராளமான புலங்களால் கட்டபட்ட தொகுதியாகும் .அதாவது எந்தவொரு தரவுதளத்திற்கும் புலங்களே அடிப்படையாகும்
இந்த தரவுதளத்தில் குழுவான புலங்களையே ஒரு அட்டவணை (Table)என்பர் . எந்தவொரு அட்டவணையையும் உருவாக்குவதற்கு முன்பு அதனுடைய அடிப்படையாக விளங்கும் புலங்கள் ஒவ்வொன்றும் எவ்வாறு இருக்கவேண்டும் அதன் வகை, பண்பியல்புகள் போன்றவிவரங்களை முன்கூட்டியே நிர்ணயம் செய்யவேண்டும்
ஒரு வினா(Query) என்பது தரவுதளத்தில் நாம் சேமித்து வைத்துள்ள தரவுகளிலிருந்து நாம் கோரும் தகவலை மட்டும் திரையில் பிரதிபலிக்க செய்ய உதவும் ஒரு அட்டவணையாகும்
ஒரு படிவம்(Form) என்பது தரவுகளை தரவுதளத்திற்குள் உள்ளீடு செய்ய உதவிடும் முன்கூட்டியே கட்டமைக்கபட்ட அட்டவணை போன்ற உருவமாகும்
ஒரு அறிக்கை(Report) என்பது நம்மால் தரவுதளத்தில் சேமித்து வைக்கபட்டுள்ள தரவுகளிலிருந்து நாம்விரும்பியவாறு தகவல்களை கணக்கிட்டு சரிசெய்து திரையில் ஒருஆவணமாக பிரதிபலிக்க செய்ய உதவுவதாகும்
எச்சரிக்கை:இந்த லிபர் ஆஃபிஸ் பேஸ் என்ற பயன்பாடு நம்முடைய கணினியில் இயங்குவதற்கு Java Runtime Environment (JRE). என்ற கோப்பு நம்முடைய கணினியில் நிறுவப்பட்டு இருக்கவேண்டும் இல்லையெனில் http://www.java.com என்ற தளத்திலிருந்து ஜாவா 5.0 அல்லது அதற்குபிந்தைய பதிப்பை பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்க
இந்த லிபர் ஆஃபிஸ் பேஸ் ஆனது மை எஸ்க்யூஎல் ,ஆரக்கிள் என்பன போன்ற உறவு தரவுதளங்களுடன்(relational databases) ஒத்தியங்கும் தன்மையுடன் விளங்குகின்றது
இது ஒரு உறவுதரவதளத்தை உருவாக்குவதால் நம்மால் மிகச்சுலபமாக தரவு தளத்திலுள்ள புலங்களுக்கிடைய உள்ள உறவுகளால் எந்தவொரு தரவு தளத்தையும் உருவாக்கி பராமரிக்கமுடியும்
உதாரணமாக ஒரு நூலகத்திலுள்ள புத்தகங்களை பற்றிய விவரங்களான புத்தகத்தின் எண் ,அதனுடைய பெயர், அதனை எழுதிய ஆசிரியரின் பெயர், பதிப்பித்த ஆண்டு என்பன போன்ற விவரங்களுடன் உறவுதரவுதள அட்டவணையொன்றை உருவாக்கிடுவார்கள் இந்த அட்டவணையை கொண்டு அவ்வாசிரியரின் பெயரை வைத்து one-to-many relationship என்ற அடிப்படையில் அவர் எழுதிய புத்தகங்களின் விவரங்களையும் புத்தகத்தின் பெயரை கொண்டு அதனை எழுதிய ஆசிரியரின் பெயரையும் எளிதில் அறிந்துகொள்ள இந்த உறவுதரவதளம் உதவுகின்றது
கணிதத்தில் பயன்படுத்தபடும் கணங்கள் எனப்படும் தொகுதியை (sets): elements, subsets, unions, intersections ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த உறவுதரவு தளத்தை விவரிக்கமுடியும் எந்தவொரு தரவுதளத்திலும் புலங்களே elements ஆகும் அட்டவணையானது subsets ஆகும் அவைகளுக்கு இடையேஉள்ள உறவே unions, intersections ஆகும் இவையனைத்தும் அடங்கிய தொகுதியே sets ஒரு தரவுதளமாகும்
முதலில் ஒரு தரவுதள கோப்பினை உருவாக்குதற்கு முன்பு நம்கைவசம் என்னென்ன விரங்கள் உள்ளன அவைகளை எத்தனை புலங்களாக உருவாக்கமுடியும் அவற்றின்வகை, பண்பியல்பு, அடிப்படை கட்டமைப்பு ஆகியவை எவ்வாறு இருக்கவேண்டும் என முடிவு செய்து பட்டியலிட்டுக்கொள்ள வேண்டும்
ஒரு புதிய தரவுதளத்தினை உருவாக்குதல்

start=>libreoffic=>Database=>என்றவாறு கட்டளைகளை செயற் படுத்தியபின் தோன்றிடும் வழிகாட்டியின் உதவியால் முதன்முதலாக இந்த பயன்பாட்டினை திரையில் தோன்றிட செய்யமுடியும்
1
பின்னர் விசைப்பலகையில் உள்ள Ctrl+N என்றவாறு விசைகளை தெரிவுசெய்து சேர்த்து அழுத்துக அல்லது இந்த பயன்பாட்டு திரையின் மேலே கட்டளை பட்டையிலுள்ள Newஎன்பதற்கு அருகிலுள்ள கீழிறங்கு பட்டியலை தோன்ற செய்தபின் அதிலுள்ள Databaseஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது File => New => Database=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக

2
உடன் Data base wizard என்ற வழிகாட்டியானது Welcome to the libreoffice Database Wizard என்ற வரவேற்புடன் திரையில் தோன்றிடும்
படிமுறை1:அதில் இடதுபுறத்தில் Steps என்பதன்கீழ் இயல்புநிலையில் select data base என்ற வாய்ப்பு தெரிவுசெய்யபட்டிருக்கும் அதன் வலதுபுறத்தில் what do you want to do? என்ற கேள்வியின் கீழ் 1.Create a new database ,2.open an existing database files ,3.connecting to an existing databaseஆகிய மூன்று வாய்ப்பகளின் வானொலி பொத்தான்கள் நாம் தெரிவு செய்வதற்காக தயார்நிலையில் இருக்கும் இயல்புநிலையில் இந்த வாய்ப்பின் பொத்தான்களை தெரிவுசெய்யாமல் இருந்தாலும் நாம் இப்போதுதான் புதியதாக தரவுதள கோப்பினை உருவாக்கிட இருப்பதாலும் அவற்றுள் Create a new database என்ற முதல்வாய்ப்பின் வானொலி பொத்தானை மட்டும் தெரிவுசெய்து கொண்டு கீழ்பகுதியிலுள்ள next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

3
படிமுறை2: . உடன் Data base wizard என்ற வழிகாட்டியானது Decide how to proceed after saving the data base என்ற தலைப்புடன் தோன்றிடும் திரையின் இடதுபுறத்தில் Steps என்பதன்கீழ் இயல்புநிலையில் save and proceed என்ற வாய்ப்பு தெரிவு செய்யபட்டிருக்கும் அதன் வலதுபுறத்தில் Do you want to the wizard to register the database in libreoffice.? என்ற வினாவிற்கு yes register the database for me என்ற வாய்ப்பு இயல்புநிலையில் தெரிவு செய்யபட்டிருக்கும் விரும்பினால் இதனை ஏற்றுக்கொள்க அல்லது இரண்டாவது வாய்ப்பான no do not register the databaseஎன்பதை தெரிவுசெய்து கொள்க.அவ்வாறே after the database file has been saved, what do you want to do? என்ற வினாவிற்கு ஏற்கனவே உள்ள தரவுதளத்தினை மாறுதல் செய்வதெனில் இயல்புநிலையில் தெரிவு செய்யபட்டிருக்கும் வாய்ப்பினை ஏற்றுக்கொள்க இல்லையெனில் Open the database for editing என்ற முதல் வாய்ப்பினை தெரிவு செய்க அல்லது create tables using the table wizards என்ற இரண்டாம் வாய்ப்பினை தெரிவு செய்துகொண்டு finish என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

4
பின்னர் விரியும் திரையில் இந்தகோப்பிற்கு myfirstdatabase.odb என்றவாறு ஒரு பெயரிட்டு saveஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் myfirstdatabase.odb என்ற தரவுதளம்(படம்-5) திரையில் தோன்றிடும் பின்னர் அதன் இடதுபுற பலகத்தில் Database என்பதன் கீழ் தரவுதளத்தின் அடிப்படை கட்டமைவுகளான Tables Queries, Forms, Reports ஆகிய உருவபொத்தான்கள் ஒன்றன்கீழ் ஒன்றாக வரிசையாகஇருக்கும் அவற்றுள் Tables என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விசைப்பலகையில் Alt+a ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக உடன் இதன் வலதுபுற பலகத்தில் Tasks என்பதன்கீழ் 1.Create Table in Design view ,2.Use Wizard to create 3.,Table Create view ஆகிய மூன்றுசெயலிகளின் உருவபொத்தான்களுடன் தோன்றிடும்

5
Create Table in Design view என்ற முதல் வாய்ப்பானது ஒரு அட்டவணையில் உருவாக்கப்போகும் புலங்களின் பெயர் (Field name) அதன் பண்பியல்புகள்(field properties) அதில் உள்ளீடு செய்யவிருக்கும் தரவுகளின் வகைகள்(Field types) அதனைபற்றிய விவரம்(Description) ஆகிய கட்டமைப்பை நாம் அட்டவணையை உருவாக்குவதற்கு ஏதுவாக அதனுடைய வடிவமைப்புநிலையில் அமைந்து உதவதயாராக இருக்கின்றது

6
Table Create view என்ற மூன்றாம் வாய்ப்பானது நேரடியாக புலங்களை வினாவின் மூலம் Add tables என்ற உரையாடல் பெட்டியின் வாயிலாக Add என்ற பொத்தானை சொடுக்கி உருவாக்கமுடியும்

7
2.Use Wizard to create என்ற இரண்டாம் வாய்ப்பானது புதியவர்கள் ஒரு அட்டவணையை எவ்வாறு உருவாக்குவது என இந்த வழிகாட்டியினுடைய படிமுறைகளின் வாயிலாக நமக்கு வழிகாட்டுகின்றது

லிபர் ஆஃபிஸின் பேஸ் ஒரு அறிமுகம்

பொதுவாக நாமெல்லோரும் தனியுடைமை மென்பொருளான எம்எஸ் ஆஃபிஸ் எனும் மென்பொருளை பயன்படுத்தி வருவது அனைவரும் அறிந்த செய்தியேயாகும் இந்த எம்எஸ் ஆஃபிஸ் என்பதற்கு மாற்றாக லிபர் ஆஃபிஸ் எனும் கட்டற்ற பயன்பாடும் கட்டணமில்லாமல் கிடைக்கின்றது என்ற செய்தியை மனதில் கொள்க இதில் எம்எஸ் வேர்டிற்கு மாற்றாக லிபர் ஆஃபிஸ் ரைட்டர் என்பதும் , எக்செல்லிற்கு மாற்றாக லிபர் ஆஃபிஸ் கால்க் என்பதும், பவர்பாய்ன்ட்டிற்கு மாற்றாக லிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் என்பதும் , அக்சஶிற்கு மாற்றாக லிபர் ஆஃபிஸ் பேஸ் என்பதும் உள்ளன இந்த எம்எஸ் ஆஃபிஸ் பயன்பாடுகளில் உள்ள அத்தனை வசதி வாய்ப்புகளும் இந்த லிபர் ஆஃபிஸிலும் உள்ளன கூடுதலாக இந்த லிபர் ஆஃபிஸானது லினக்ஸ் மட்டுமல்லாது விண்டோ ,மேக் ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது மிகமுக்கியமாக ஆண்ட்ராய்டு கைபேசியிலும் இந்த லிபர் ஆஃபிஸ் கோப்புகளை காட்சியாக கண்டு படித்திடலாம் அதைவிட எம்எஸ் ஆஃபிஸில் வேர்டை பயன்படுத்திகொண்டிருக்கும்போது எக்செல் பயன்பாட்டினை திறக்க வேண்டுமெனில்வழக்கமாக அதற்கான உருவப்பொத்தானை செயல்படுத்திடவேண்டும் ஆனால் லிபர் ஆஃபிஸில் நாம் திறந்த பணிபுரியும் லிபர் ஆஃபிஸ் பயன்பாட்டின் திரையின் மேலே கட்டளைபட்டையில் File=>New=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் விரியும் பட்டியில் நாம் விரும்பும் பயன்பாட்டின் பெயரை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் போதும் உடன் தொடர்புடைய பயன்பாடு திரையில் தோன்றிடும் மேலும் இருவேவ்வேறு பயன்பாடுகளை எம்எஶ் ஆஃபிஸில் ஒரே திரையில் அருகருகே திறந்து பணிபுரியும் வசதி கிடையாது ஆனால் இந்த லிபர் ஆஃபிஸின் ரைட்டரில் பணிபுரியும்போது மேலே கூறிய வழிமுறையை பின்பற்றி நாம் விரும்பும்மற்றொரு பயன்பாட்டினை இதே திரையில் தோன்றிட செய்து இவையிரண்டும் அருகருகே வைத்து கொண்டு ஒப்பீட்டு பணியை எளிதாக செய்திடலாம் அதுமட்டுமல்லாது லிபர் ஆஃபிஸின்ரைட்டரில் நாம் உருவாக்கிய கோப்பினை நம்முடைய நன்பர்களுக்கு பிடிஎஃப் கோப்பாக உருமாற்றம் செய்து அனுப்ப விரும்பினால் அதற்காக தனியான பயன்பாடு எதனையும் செயல்படுத்த தேவையில்லை அதற்கு பதிலாக திரையின் மேலே கட்டளை பட்டையில் File=> என்றவாறு கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் விரியும் பட்டியில் Export as PDFஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் போதும் உடன்விரியும் உரையாடல் பெட்டியில் Export என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் உரையாடல் பெட்டியில் இந்த கோப்பிற்கான பெயர் சேமிக்கவேண்டிய இடம் ஆகிய-வற்றை தெரிவுசெய்து கொண்டு save என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் உள்ளீடு செய்த பெயரில் நாம் விரும்பிய இடத்தில் பிடிஎஃப் கோப்பாக உருமாற்றமாகிவிடும் மேலும் இந்த லிபர் ஆஃபிஸ் நாம் எம்எஸ் ஆஃபிஸின் எம்எஸ்ஆஃபிஸ் 97-2003, எம்எஸ் ஆஃபிஸ் 2007-2013 போன்ற எந்தவொரு கோப்பினையும் திறந்து பணிபுரியலாம் பணிபுரிந்து முடிந்த பின்னர் லிபர் ஆஃபிஸ் கோப்பாக அல்லது எம்எஸ் ஆஃபிஸின் எம்எஸ்ஆஃபிஸ் 97-2003, எம்எஸ் ஆஃபிஸ் 2007-2013 போன்ற எந்தவொரு வகை கோப்பாகவும் சேமித்து கொள்ளலாம் அதைவிட நாம் செல்கின்ற இடத்தின் கணினியில் இந்த லிபர் ஆஃபிஸ் பயன்பாடு இல்லையென்றாலும் பரவாயில்லை நம்முடைய பென்ட்ரைவிலிருந்தபடியே லிபர் ஆஃபிஸ் போர்ட்டபள் என்ற வசதியினை கொண்டு நாம் லிபர் ஆஃபிஸை செயல்படச்செய்து நம்முடைய பணியை முடித்துகொள்ளலாம் எம்எஸ் ஆஃபிஸில் அவ்வப்போது புதிய பதிப்புகள் வெளியிடுவதை போன்றே இந்த லிபர் ஆஃபிஸிலும் ஒவ்வொரு ஆறுமாதத்திற்கு ஒரு முறை புதிய பதிப்புகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிடபடுகின்றனஎன்ற கூடுதல் செய்தியையும் மனதில் கொள்க . இவ்வாறு ஏராளமான பல்வேறு வகைகூடுதலான பயன்கள் இந்த லிபர் ஆஃபிஸில் உள்ளன
அவ்வாறான எம்எஸ் ஆஃபிஸின் அக்சஸிற்கு இணையானஅதைவிட கூடுதலான வசதி வாய்ப்புகளுள்ள லிபர் ஆஃபிஸின்பேஸ் என்ற பயன்பாட்டினை பற்றி லிபர் ஆஃபிஸின் பேஸ் ஒரு அறிமுகம் எனும் கட்டுரை தொடரில் உங்களின் முன் சமர்ப்பிக்கின்றேன் வாருங்கள் இந்த லிபர் ஆஃபிஸினை உங்களின் தேவைக்கு பயன்படுத்தி பயன்பெறுக என கூறிக்கொண்டு இந்த லிபர் ஆஃபிஸின் பேஸ் ஒரு அறிமுகம் எனும் கட்டுரை தொடரினை துவங்குகின்றேன்