நாம் நம்முடைய வருமான வரிசெலுத்தவதை குறைப்பதற்கான வழிகாட்டிடும் எக்செல்

நாம் வாங்கிய வீட்டுகடனிற்கானவட்டியை கழித்து கொண்டு நிகரத்தொகைக்குவருமானவரி கணக்கிட்டு செலுத்திட்டால் போதும் அவ்வாறானவட்டித்தொகை எவ்வளவு என வீட்டுகடன்வழங்கிடும் நிறுவனங்களோ வங்கிகளோ விவரங்களை வழங்காது இந்நிலையில்எக்செல் எனும் பயன்பாடு இருக்கும்போது நாம் கவலைப்படத்தேவையில்லை இதற்காக எக்செல்லில்=ISPMT([rate], [period], [nper], [value])எனும் வாய்ப்பாடு கைகொடுக்கின்றது இதில் rate என்பது வங்கியின் வட்டிவிகிதமாகும் period என்பது எந்த காலததிற்கு வட்டி கணக்கிடவேண்டும் nper என்பது எத்தனைமாதத்திற்கு கடன்திருப்பவேண்டும value என்பது கடன் தொகையாகும் உதாரணமாக ரூபாய் 250000 ,5சதவிகிதம் வட்டி,20 வருடங்கள் எனில் =ISPMT(.05, 1, 10, 250000) உடன்ரூபாய்11875.00 என்ற தொகை வட்டியாகும் என நமக்குஅறிவிக்கின்றது
அவ்வாறே நாம் அவசரத்தேவைக்கு கடன் வாஙகிடுவோம் கடன்வழங்குவோர் ஒவ்வொரு மாதமும் கடனையும் வட்டியைசமதவணையாக செலுத்திடவேண்டுமென்றும் தவறினால் மூன்று மாதத்திற்கு கொருமுறை செலுத்தப்படாத வட்டி அசலாக மாற்றி அந்த அசலிற்கும் சேர்த்து கூட்டுவட்டியாக கணக்கிடப்படும் என்ற நிபந்தனை விதித்தால் வருடாந்தர வட்டிவிகிதம் என்னவாகஇருக்கும் என கணக்கிடுவதற்காக எக்செல்லில் =EFFECT([nominal_rate], [nper]) எனும் வாய்ப்பாடு கைகொடுக்கின்றது இதில் nominal_rate என்பது அனுமதிக்கப்பட்ட வட்டிவிகிதமாகும் nper என்பது வருடத்தில் எத்தனைமுறை கூட்டுவட்டியாக கணக்கிடும் என்பதாகும் உதாரணமாக வட்டிவிகிதம் 7.5 சதவிகிதம் ஒவ்வொருமமூன்றுமாதத்திற்கு ஒருமுறை கூட்டுவட்டி கணக்கிடபடும் எனில் =EFFECT(.075, 4) உடன்7.71 சதவிகிதம் என நமக்குஅறிவிக்கின்றது
அவ்வாறே நம்முடைய வீட்டிற்கான அல்லது சொத்துகளுக்கான தேய்மானம் எவ்வளவு என கணக்கிடவும் எக்செல்லின் =DB([cost], [salvage], [life], [period]) எனும் வாய்ப்பாடுஉதவுகின்றது இங்கு cost என்பது சொத்தின்மதிப்பு salvage என்பது அந்தசொத்தின் இறுதியானமதிப்பு life என்பது அந்த சொத்து எவ்வளவுநாள் பயன்படும் period என்பது எந்தஆண்டிற்கான தேய்மானம் கணக்கிடவேண்டும் என்பதாகும் உதாரணமாக சொத்தின் மதிப்பு ருபாய் 45000.00 இறுதி மதிப்பு ரூபாய்12000.00 சொத்தின் வாழ்நால் 12 ஆண்டுகள் முதல் வருடத்திற்கு தேய்மானம் கணக்கிடவேண்டுமெனல் =DB(45000, 12000, 8, 1)உடன் ரூபாய்6,840 என நமக்கு அறிவிக்கின்றது

எக்செல் எனும் பயன்பாட்டினை பயன்படுத்திடுவதற்கான எளிய ஆலோசனைகள்

1 நாம் எக்செல்எனும் பயன்பாட்டினை பயன்படுத்தி அட்டவணையொன்றினை தயார்செய்திடவிழைவோம் அதில் நெடுவரிசை யில்மாதவாரியாகவும் கிடைவரிசையில் பணியாளர்வாரியாகவும் விற்பணை அல்லது உற்பத்தி திறனை பட்டியலிடுவோம் இவ்வாறான நெடுவரிசை கிடைவரிசை தலைப்பிற்குஒட்டுமொத்த தலைப்பினை எவ்வாறு அமைத்திடுவது என தெரியாததால் அப்படியே அமைத்திடாமல் விட்டிடுவோம் அதனை தவிர்த்திட Home  Fonts  Format Cells என்றவாறு கட்டளைகளைசெயற்படுத்திடுக உடன்விரியும் Format Cells எனும் உரையாடல் பெட்டியில் Border எனும் தாவியின் திரையை தோன்றிடசெய்க அதில் கீழே வலதுபுற மூலையில்உள்ளdiagonal split எனும் வாய்ப்பான உருவப்பொத்தானாை தெரிவுசெய்து கொள்க பிறகு நம்முடைய அட்டவணையின் நெடுவரிசை கிடைவரிசை சந்திக்கும்முதல் கலணிற்கு சென்று monthஎன தட்டச்சு செய்துகொண்டு Alt + Enter ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக பின்னர் Sales Rep என தட்டச்சு செய்து கொண்டு வெளியேறுக தற்போது இந்த அட்டவணையானது பின்வருமாறு தலைப்பு இருப்பதைகாணலாம்

1
2 ஒருசில நேரங்களில் எக்செல் எனும் பயன்பாட்டின் அட்டவணையின் நெடுவரிசைகளின் தலைப்புகள் ஒவ்வொன்றும் மிகநீண்டதாக இருக்கும் அதனால் இந்த அட்டவணையை ஒரேபக்கத்தில் வைத்திடமுடியாமல் திண்டாடுவோம் இந்நிலையில் இவ்வாறான நீண்டதலைப்புகளுள்ள நெடுவரிசைகளை தெரிவுசெய்துகொண்டுHome  Alignment  Orientation  Angle Counterclockwise என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் உரையாடல் பெட்டியில் நகரும்கடிகார முள்ளினை45o என்றவாறு கோண அளவினை வைத்து கொண்டு மீண்டும் Home  Font  Borders  All Borders. என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து அமைத்து கொள்க இதன்பின்னர் நெடுவரிசையின் அளவை மாற்றியமைத்து சரிசெய்து கொள்க தற்போது பின்வருமாறு அட்டவணையானது அமைந்திருபபதை காணலாம்
2

லிபர் ஆஃபிஸ் பேஸிலும் லிபர் ஆஃபிஸ் கால்க்கிலும் நம்முடைய பரஸ்பர சகாயநிதி எனும் மியூச்சுவல் ஃபன்டினை மிக எளிதாக கையாளமுடியும்

பொதுவாக எந்தவொருமியூச்சுவல் ஃபன்டிற்கும் உலகளாவிய பாதுகாப்பு சுட்டி எண்(International Securities Identification Number) சுருக்கமாக ISINஎன அழைக்கபடும் எண் ஒன்று கண்டிப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் அதனடிப்படையில் நம்முடைய மியூச்சுவல் நிதியின் நிகரமதிப்பினை காண்பதற்கு amfindia.com என்ற தளம் மிகப்பேருதவியாக இருக்கின்றது ஒன்றுக்கு மேற்பட்டஅளவில் ஏராளமாகபட்டியலாக நம்மிடம் இந்த பரஸ்பர சகாயநிதியானது உள்ளன எனில் அவைகளின் நிகர-மதிப்புகளை இந்த பட்டியலிலிருந்து குறிப்பிட்ட நிறுவனத்தின் நிகரமதிப்பைகாண லிபர் ஆஃபிஸ் கால்க்கினை பயன்படுத்தி கொள்ளலாம் இதற்காக பைவேட் அட்டவணை உதவுகின்றது முதலில் லிபர் ஆஃபிஸ் கால்க்கின் திரைக்கு சென்று அதில் பைவேட் அட்டவணையை உள்ளிணைத்து கொள்க அதற்கடுத்ததாக லிபர் ஆஃபிஸில் பதிவுசெய்துள்ள தரவுமூலத்தை(Data Source) தெரிவுசெய்து கொள்க இந்த தரவுமூலமானது ISIN, No of units, NAV, Cur.value என்றவாறான கட்டமைவில் இருக்கும் பின்னர்NAVDBஎன்பதை தெரிவுசெய்து கொள்க பிறகு பைவேட் அட்டவணையின் புலத்தினை தெரிவுசெய்திடுக பிறகு நாம் தெரிவுசெய்யவேண்டிய புலங்களை நம்மிடம் கோரும்அதில்ISIN, NAV,ஆகிய புலங்களை குறிப்பிட்டால் போதும் உடன்புதிய pivot என்பது கால்க்கின் புதிய தாளில் நம்முடைய பரஸ்பர சகாயநிதி பற்றிய செய்தி தோன்றிடும்
இதையே லிபர் ஆஃபிஸின் பேஸிலும் சரிபார்த்திடலாம் இதற்காக நம்முடைய கணினியில் லிபர் ஆஃபிஸுடன்MYSQLJDBCdriver என்பது நிறுவுகை செய்யப்-பட்டுள்ளதாவென சரிபார்த்து கொள்க பின்னர் லிபர் ஆஃபிஸின் பேஸை செயல்படுத்தி அதில் புதிய தரவுதளத்தினை உருவாக்கிடுக தொடர்ந்து இதனுடன் நடப்பிடலுள்ள பரஸ்பர சகாயநிதியின் தரவுதள கோப்பினை MYSQLJDBC துனையுடன் இணைப்பு ஏற்படுத்துக பொதுவாக இது உள்ளூர் இணைப்பாக தரவுதளத்தின் navdb ஆனது இருக்கும்இதனை அனுகுவதற்கான கடவுச்சொற்கள் போன்ற தகவல்களுடன் உள்நுழைவு செய்திடுக உடன் எஸ்கியூஎல் வினாவுடன் நம்முடையபரஸ்பர சகாயநிதியின் மதிப்பைலிபர் ஆஃபிஸின் பேஸின் திரையில் காட்சியாக காணலாம்

பிறந்த நாளினை நினைவூட்டுமாறு எக்செல்லில் செய்திடலாம்

நம்முடைய நண்பர்கள் உறவினர்கள் அவர்களுடைய பிறந்த நாளில் பிறந்தநாள் வாழ்த்து மின்னஞ்சல் அனுப்புவது நம்முடைய மிகமுதன்மையான செயலாகும் அவ்வாறெனில் அவர்களின் பிறந்தநாட்களை எவ்வாறு நினைவில் கொள்வது என்பதுதான் மிகச்சிரமமான செயலாகும் இவ்வாறான நிலையில் நம்முடைய நண்பர்களின் பிறந்த நாட்களை நமக்கு நினைவூ்டடுமாறு எக்செல் பயன்பாட்டில் செயற்படுத்திடமுடியும்அதற்காக முதலில் பிறந்தநாள் நினைவூட்டுதல் என்ற பெயரில் ஒரு எக்செல் கோப்பினை துவங்கிடுக பின்னர் அதனுடைய பணித்தாளில் ஏதேனும் ஒரு date format வடிவமைப்பை தெரிவுசெய்து கொள்க அதன்பின்னர் =IF(MONTH(C3)MONTH(TODAY()),” “,IF(DAY(C3)DAY(TODAY()),” “,”இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்”))எனும் வாய்ப்பாட்டினை ஒருகலனில் உள்ளீடு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக
இங்கு C3 எனும் கலணானது நாம் பிறந்த நாள் வாழ்த்து கூறவிரும்புவோரின் பிறந்த நாளாகும். C3 எனும் கலணிற்கு பதிலாக வேறு கலண்களை நாம் பிறந்த நாள் வாழ்த்து கூறவிரும்புவோர்களுக்கு அவரவர்களின் பிறந்த நாளினை உள்ளீடு செய்து கொள்க இதன்பின்னர் குறிப்பிட்ட நாளில் எக்செல் தாளினை திறந்தவுடன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என குறிப்பிட்ட நண்பரின் பிறந்த நாளினை நமக்கு நினைவூட்டுதல் செய்திடும் உடன் நாமும் இது யாருக்கானது என அறிந்து தொடர்புடைய நபருக்கு பிறந்தநாள் மின்னஞ்சலைஅனுப்பி வைத்திடமுடியும்

லிபர் ஆஃபிஸ் கால்க்கில் பயனாளர்கள் தாம் விரும்பியவாறு பட்டியல்களை ,கருவிபட்டியல்களை , புறவமைப்புகளை மாற்றி யமைத்துகொள்ளமுடியும்

இதற்காக செய்யவேண்டியதெல்லாம் திரையின் மேலே கட்டளைபட்டையில் Tools => Options=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால்போதும் உடன்விரியும் Options எனும் உரையாடல் பெட்டியின் இடதுபுறபலகத்தில் LibreOffice என்பதன்கீழ் உள்ள+எனும் விரிவாக்கத்துடன் கூடிய முக்கோன அம்புக்குறியை தெரிவுசெய்து சொடுக்குக
1-1
1
உடன் User Data,General,Print,Color,Security,Appearanceஆகிய வாய்ப்புகள் கீழிறங்கு பட்டி.லாக விரியும் அவைகளுள் தேவையானதை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் விரியும் வலதுபுற பலகத்தில் தேவையானவாறு அமைவுகளை தெரிவுசெய்து அமைத்து கொள்க
1-2
2
மிகமுக்கியமாக இடதுபுறபலகத்தில்Load Saveஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்தவுடன் விரியும் வலதுபுறபலகத்தின் Load/Save – Microsoft Officeஎனும்பக்கத்தில் [L]எனும் வாய்ப்பினைதெரிவுசெய்து அமைத்திட்டால் மைக்ரோசாப்ட் அமைவு கோப்பினை லிபர் ஆஃபிஸ் அமைவு கோப்பாக நினைவகத்தில் மேலேற்றபட்டு நாம் பணிபுரிதற்கு தயாராக இருக்கும் [S]எனும் வாய்ப்பினைதெரிவுசெய்து அமைத்திட்டால் லிபர் ஆஃபிஸ் அமைவு கோப்பானது மைக்ரோசாப்ட் அமைவு கோப்பாக சேமிக்கப்படும் தொடர்ந்து LibreOffice Calcஎன்பதன் கீழ் உள்ள+எனும் விரிவாக்கத்துடன் கூடிய முக்கோன அம்புக்குறியை தெரிவுசெய்து சொடுக்குக உடன் General, Default, Calculate, Formula, Grid ஆகிய வாய்ப்புகள் கீழிறங்கு பட்டியலாக விரியும் அவைகளுள் தேவையானதை மட்டும்தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் விரியும் வலதுபுற பலகத்தில் தேவையானவாறு அமைவுகளை தெரிவு செய்து அமைத்து கொள்க அதனை தொடர்ந்து கட்டளைப்பட்டிகளின் எழுத்துருக்களின் அளவை மாற்றியமைத்திடுவதற்காக திரையின் மேலே கட்டளைபட்டையில் Tools => Options => LibreOffice => View=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் திரையில் Use system font for user interface என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து கொண்டு OK எனும் பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக.
1-3
3
இதிலுள்ள கட்டளைபட்டியைகூட நாம் விரும்பியவாறு மாற்றியமைத்திடலாம் அதற்காக திரையின் மேலே கட்டளைபட்டையில் Tools =>Customize=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் உரையாடல் பெட்டியில் Menusஎனும் தாவியின் திரையை விரியச்செய்து அதிலுள்ளLibreOffice Calc Menus எனும் பகுதியில் நாம்விரும்பியவாறு புதிய பட்டியை சேர்த்திடவோ இருப்பதை மாறுதல்செய்திடவோ முடியும் அவ்வாறே Toolsஎனும் கருவிபட்டியின் தாவியின் திரையை விரியச்செய்து கருவிகளின் பட்டியிலும் நாம் விரும்பியவாறு புதிய கருவிபட்டியை உருவாக்குதல் ஏற்கனவே இருப்பதை மாறுதல்கள்செய்து அமைத்து கொள்ளலாம லிபர் ஆஃபிஸ் கால்க்கின் கூடுதல்பயன்பாடுகள் ஏதேனும் இணையத்தில் தற்போது இருந்தால் அதனை விரிவாக்க வசதிமூலம் இணைத்துகொள்ளமுடியும் இதற்காக திரையின் மேலே கட்டளைப்பட்டையில் Tools => Extension Manage=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் Extension Manage எனும் உரையாடல் பெட்டியில் Get more extensions online எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து புதிய விரிவாக்க வசதிகளை பதிவிறக்கம் செய்து அமைத்துக் கொள்க
இந்த லிபர் ஆஃபிஸ் கால்க்கினை சுட்டியையோ அல்லது கட்டளைபட்டியையோ பயன்படுத்தாமல் விசைப்பலகையில் சுறுக்குவழி விசைகளை பயன்படுத்தி குறிப்பிட்ட செயல் நடைபெறுமாறு செய்திடமுடியும் இதற்காக F1முதல் F12 வரையுள்ள செயலி விசைகளை பயன்படுத்தி கொள்க அல்லதுCtrl, Alt, Shift ஆகிய விசைகளுடன் மற்ற விசைகளை சேர்த்து அழுத்தி அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள செயல்களை செயல்படுத்தி கொள்க இதுமட்டுமல்லாது குறிப்பிட்டஎழுத்துகளை சமக்குறிக்கு அடுத்து தட்டச்சு செய்தால் குறிப்பிட்ட செயல்களை செய்திடும் பல்வேறு செயலிகளை தன்னகத்தே கொண்டுள்ளது உதாரணமாக கூடுதல் காண = Sum( ) எனும் செயலியும் எண்ணிக்கையிடுவதற்காக =Count எனும் செயலியும் போன்று ஏறத்தாழ முன்னூறுக்கும் அதிகமான செயலிகளை நாம் பயன்படுத்திடுவதற்காக தயாராக உள்ளன இந்த செயலிகள் பொதுவானவை ,நிதிதொடர்பானவை, புள்ளியியல் தொடர்பானவை ,தரவுதள தொடர்பானவை ,விரிதாள் தொடர்பானவை ,உரைதொடர்பானவை என பல்வேறு வகைகளில் வகைப்படுத்து பட்டு நாம் பயன்படுத்தி கொள்ளத்தயாராக உள்ளன இவைகளை பற்றிய விவரம் முழுவதையும் அறிந்து கொள்வதற்காக http://help.libreoffice.org/Calc/Functions_by_Category எனும் இணைய பக்கத்திற்குசெல்க
இந்த லிபர் ஆஃபிஸ் கால்க்கின் விரிதாளினை பயன்படுத்தி கொண்டிருக்கும்போது நாம் எதிர்பார்க்குமாறு இல்லாமல் #NAME?, #REF! , #### என்பன போன்ற பிழைகள் திரையில் தோன்றிடும் 1-4
4
அதனால் நாம் நம்முடைய பணியை தொடர்ந்து செய்திடாமல் நின்றுவிடுவோம் #### என்ற பிழைக்குறியானது நாம் பயன்படுத்திடும் கலணின் அகலம் போதுமானதாக இல்லை எனக்குறிப்பதாகும் அவ்வாறே#REF! ன்ற பிழைக்குறியானது நாம் பயன்படுத்திடும் குறிப்பிட்ட கலணின் மேற்கோள் கலண் தவறானது எனக் குறிப்பதாகும் இவ்வாறே ஒவ்வொரு பிழைக்கும் அதற்கான விளக்கத்தினை தெரிந்து கொண்டு அதனை சரிசெய்து அமைத்திட்டு நம்முடைய பணிதொடர்ந்து நடைபெறு பார்த்து கொள்க

லிபர் ஆஃபிஸ்-4 கால்க்-தொடர்-65 கால்க் ஆனது எளிய தரவுதளமாகும்

கால்க்கின் விரிதாளானது மேம்ப்பட்ட பல்வேறுவகையான வடிகட்டிகளின் உதவியுடன் எட்டு நிபந்தனைகள் வரை கையாளும் திறன் மிக்கதாகும் ஆயினும் ஒரு சாதராண வடிகட்டியானது அதிபட்சம் மூன்று நிபந்தனைகளை மட்டுமே கையாளும் திறன் கொண்டது இந்த மேம்பட்ட வடிகட்டியின் நிபந்தனைகளை கால்க்கானது தன்னுடைய விரிதாளில் சேமித்து வைத்து கொள்கின்றது இதனை செயலி்ல் கொண்டுவருவதற்தான முதல்படிமுறையாக இந்த எட்டு நிபந்தனைகளை விரிதாளில் உருவாக்குக அதற்காக முதலில் காலியான விரிதாளினை திறந்துகொள்க அதில் எட்டுநெடுவரிசைகளை கொண்ட அட்டவணை போன்று தெரிவுசெய்து கொள்க பின்னர் தரவுகளை வடிகட்டு-வதற்கான அதிகபட்சம் எட்டுவகை நிபந்தனைகளை நெடுவரிசைகளின் தலைப்பாக உள்ளீடு செய்திடுக இந்த நிபந்தனைகளின் ஒவ்வொரு நெடுவரிசையும் AND எனும் சொல்லுடனும் நிபந்தனைகளின் ஒவ்வொரு கிடைவரிசையும் மற்றொரு நெடுவரிசையுடன் OR. எனும் சொல்லுடனும் அமைத்திடுக அதன்பின்னர் வடிகட்டவேண்டிய தரவுகளிருக்கும் பகுதியை தெரிவுசெய்து கொள்க பின்னர் திரையின் மேலே கட்டளை பட்டையில் Data => Filter => Advanced Filter=>என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குக உடன் விரியும் Advanced Filterஎனும் உரையாடல் பெட்டியில் நிபந்தனைகளுக்கான வாய்ப்புகளை தேவையானவாறு தெரிவு செய்து கொண்டு OKஎனும் பொத்தானை தெரிசெய்து சொடுக்குக

65
இந்த மேம்பட்ட வடிகட்டியை பின்வரும் கட்டளைவரிகளின் மேக்ரோவை கொண்டு எளிதாக உருவாக்கலாம்
Use an advanced filter.
Sub UseAnAdvancedFilter()
Dim oSheet ‘A sheet from the Calc document.
Dim oRanges ‘The NamedRanges property.
Dim oCritRange ‘Range that contains the filter criteria.
Dim oDataRange ‘Range that contains the data to filter.
Dim oFiltDesc ‘Filter descriptor.
REM Range that contains the filter criteria
oSheet = ThisComponent.getSheets().getByIndex(1)
oCritRange = oSheet.getCellRangeByName(“A1:G3”)
REM You can also obtain the range containing the
REM filter criteria from a named range.
REM oRanges = ThisComponent.NamedRanges
REM oRange = oRanges.getByName(“AverageLess80”)
REM oCritRange = oRange.getReferredCells()
REM The data that you want to filter
oSheet = ThisComponent.getSheets().getByIndex(0)
oDataRange = oSheet.getCellRangeByName(“A1:G16”)
oFiltDesc = oCritRange.createFilterDescriptorByObject(oDataRange)
oDataRange.filter(oFiltDesc)
End Sub
தேவையெனில் இந்த வடிகட்டியின் நடவடிக்கையை மாற்றுவதற்காக வடிகட்டியின் பண்பியல்புகளை மாற்றி யமைத்திடுக இதில் உள்ளவெளியீட்டு நிலையை பின்வரும் கட்டளைவரிகளின் மூலம் மாற்றி யமைத்திடுக
Copy filtered results to a different location.
REM Copy the output data rather than filter in place.
oFiltDesc.CopyOutputData = True
REM Create a CellAddress and set it for Sheet3,
REM Column B, Row 4 (remember, start counting with 0)
Dim x As New com.sun.star.table.CellAddress
x.Sheet = 2
x.Column = 1
x.Row = 3
oFiltDesc.OutputPosition = x
வடிகட்டப்பட்ட தரவுகளை மாற்றியமைத்தல் இவ்வாறு மேம்பட்ட வடிகட்டிமூலம் வடிகட்டியபின்னர் புதிய இடத்தில் நகலெடுக்கப்பட்ட தரவுகளை கொண்டு தேவையெனில் தெரிவுசெய்தல், மறுதல் செய்தல் , நீக்கம் செய்தல் ஆகிய செயல்களை செயல்படுத்திடலாம் பொருத்தமில்லாத தரவுகளின் கலணை கால்க்கானது மறைத்து வைத்திடும் தரவுகளுள்ள கலண்களை outline, data filterr the hide commandஆகிய வற்றை பயன்படுத்தி மறைத்திடலாம் இந்த தரவுகளை புதிய இடத்திற்கு கொண்டு செல்வதற்காக நகலெடுத்தல் அல்லது வெட்டி எடுத்தல் செய்தபின்னர் புதிய இடத்தில் ஒட்டுதல்செய்திடும்போது மறைத்து வைக்கப்பட்ட கலண்களும் சேர்ந்து புதியஇடத்தில் வந்து சேரும் ஆயினும்வடிகட்டிடும்போது காட்சியாகஇருக்கும் தரவுகள் மட்டுமே வடிகட்டப்படும் கால்க்கின் AVERAGEஎனும் செயலிமுதல் VLOOKUPஎனும் செயலிவரைஉள்ள அனைத்து செயலிகளும் தரவுதள செயலிகளை போன்றவைகளாகும் COUNTIFஎனும் செயலியை கொண்டு எண்ணாக=COUNTIF(B1:C16; 95) , உரையாக, =COUNTIF(B1:C16; “95”) வழக்கமான வெளிப்பாடாக =COUNTIF(B1:C16; “9.*”) மேற்கோள் செய்வதாக =COUNTIF(B1:C16; B3) வடிகட்டிடுமாறு அமைத்திடலாம் ஆனால் SUMIF எனும் செயலியைகொண்டு மூன்றாவது தருக்கம் மட்டும் மாறி =SUMIF(A1:A16; “B.*”; B1:B16) என்றவாறு வழக்கமான வெளிப்பாடாக அமைந்திருக்கும் SUBTOTAஎனும் செயலியானது மறைக்கப்பட்ட தரவுகளை தவிர மற்றவைகளை AVERAGE,MAX,miniபோன்ற கூடுதல் செயலிகளுடன் அமைத்திடலாம்
கால்க்கானது ஏராளமான வழிமுறைகளை தரவுகளை கண்டுபிடிப்பதற்காக வைத்துள்ளது எளிய வழிமுறையாக திரையின் மேலே கட்டளை பட்டையில் Edit => Find &Replace=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விசைப்பலகையில் Ctrl + F ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக உடன்விரியும் உரையால் பெட்டியில் தேவையான தரவுகளை உள்ளீடு செய்துகொள்க. இந்த உரையாடல் பெட்டியில் நம் தேடிடவிரும்பும் தரவுகளை எத்தனைமுறை வேண்டுமானாலும் திரும்ப திரும்ப Findஎனும் பொத்தானை அழுத்தி தாள் முழுவதும் தேடிகண்டுபிடித்திடலாம் அல்லது Data => Filter=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து குறிப்பிட்ட தரவை மட்டும் தேடிபிடித்திடலாம் இதற்குபதிலாக VLOOKUP எனும் செயலிகொண்டு VLOOKUP(search_value; search_range; return_column_index)
VLOOKUP(search_value; search_range; return_column_index; sort_order)ஆகிய இருவகையில் கிடைவரிசையில் மட்டும் தரவுகளை தேடிக்கண்டுபிடித்து அதேகிடைவரிசையில் கொண்டுவந்து சேர்த்திடலாம் அவ்வாறே HLOOKUP எனும் செயலிகொண்டு HLOOKUP(search_value; search_range; return_row_index)
HLOOKUP(search_value; search_range; return_row_index; sort_order) ஆகிய இருவகையில் நெடுவரிசையில் மட்டும் தரவுகளை தேடிக்கண்டுபிடித்து அதேநெடுவரிசையில் கொண்டுவந்து சேர்த்திடலாம்
அதேபோன்று LOOKUP எனும் செயலிகொண்டு LOOKUP(search_value; search_range) , LOOKUP(search_value; search_range; return_range)ஆகிய இருவகையில் ஒற்றையான வடிகட்டப்பட்ட நெடுவரிசை அல்லது கிடைவரிசையிலிருந்து தரவுகளை தேடிக்கண்டுபிடித்து அதே நெடுவரிசை அல்லது கிடைவரிசையில் கொண்டுவந்து சேர்த்திடலாம்
மேலும் MATCH எனும் செயலியைகொண்டு =MATCH(search_value; search_range)
=MATCH(search_value; search_range; search_type)ஆகிய இருவகையில் ஒற்றையான நெடுவரிசை அல்லது கிடைவரிசையிலிருந்து தரவுகளை தேடிக்கண்டுபிடித்து கொண்டு வந்து சேர்த்திடலாம்
அதனோடு ADDRESSஎனும் செயலிகொண்டு நெடுவரிசையில் கிடைவரிசையில் ஒருதாளில் உள்ள எழுத்துகளின் தொகுப்பினை தேடிக்கண்டுபிடித்திடலாம் இந்த செயலியுடன் MATCH எனும் செயலியை கொண்டு தேடுதலை மிகமேம்பட்டதாக செய்திடலாம் INDIRECT எனும் செயலியைகொண்டு இதில் குறிப்பிடும் எழுத்துசரத்தினை கலணின்முகவரியாக INDIRECT(G1)என்றவாறு மாற்றி பயன்படுத்தி கொள்ளலாம் OFFSETஎனும் செயலியைகொண்டு ஒரு கலணை அல்லது பகுதியை ஒரு குறிப்பிட்ட நெடுவரிசைகளாகவோ கிடைவரிசை-களாகவோ மேற்கோள் பகுதியைகொண்டு மாற்றிடலாம் இவையனைத்தும் சேர்ந்த மேக்ரோவாக பின்வருமாறு அமைத்திடலாம்
Complex example of OFFSET.
=SUM(OFFSET(INDIRECT(ADDRESS(MATCH(“Bob”;A1:A16; 0); 4)); 0; 0; 1; 2))

இந்த மேக்ரோவை மேலும்பின்வருமாறு மேம்பட்டதாக அமைத்திடலாம்
Better use of OFFSET.
=SUM(OFFSET(A1; MATCH(“Bob”; A1:A16; 0)-1; 3; 1; 2))
அதனை தொடர்ந்து INDEXஎனும் செயலியின் உதவியால் =INDEX(B2:D3; 1; 1) என்றவாறு நெடுவரிசைஅல்லது கிடைவரிசையை குறிப்பிடலாம் அதைவிட Return Bob’s quiz scores =SUM(OFFSET(INDEX(A2:G16; MATCH(“Bob”; A2:A16; 0)); 0; 3; 1; 2)) என்றவாறு குறிப்பிட்டப் பகுதியைகுறிப்பிடலாம்
DAVERAGE,DSUM,DMAXபோன்ற செயலிகள் தரவுதளத்தில் மட்டும் பயன்படுபவையாகும் DAVERAGE எனும் தரவுதளத்திற்கு மட்டும் உரிய செயலியைகொண்டு பின்வருமாறு மேக்ரோ அமைத்திடலாம்
“Test 2” is column 3.
=DAVERAGE(A1:G16; “Test 2”; Sheet2.A1:G3)
=DAVERAGE(A1:G16; 3; Sheet2.A1:G3)
பொதுவாக காலக்கானது பெரும்பாலான மக்கள் திருப்தியுறும் வகையில் போதுமான தரவுதளை கையாளும் செயலிகளை தன்னகத்தே கொண்டுள்ளது OFFSET, INDEX போன்ற அடிக்கடி பயன்படுத்தி கொள்ளப்படும் செயலிகள் அதிக பயனுள்ளவைகளாக அமைகின்றன

லிபர் ஆஃபிஸ்-4 கால்க்-தொடர்-64

பொதுவாக ஒரு கால்க் ஆவணமானது தரவுதளத்தை கையாளும்திறனுடனும் பல்வேறு பயனாளிளின் தேவைகளை நிறைவுசெய்திடுவதற்கெனபோதுமான செயலிகளை வழங்கிடும் தன்மையுடனும் விளங்குகின்றது. ஆயினும் ஒரு தரவுதளம் என்பது ஒருகுழுவான தொடர்புடைய தரவுகளின் பொருட்களை ஒற்றையான தகவலாக பராமரிப்பதாகும். இந்த ஆவணத்தின் ஒவ்வொரு பொருட்களும் புலங்கள் என அழைக்கப்படும் ஒரு தரவுதள அட்டவணையானது இந்த ஆவணங்களால் கட்டமைக்கப் பட்டதாகும் இந்த தரவுதள அட்டவணையின் ஒவ்வொரு ஆவணமும் விரிதாளின்அட்டவணையின் அதே கட்டமைவில் இருக்கும். இங்கு அட்டவணை என்பது ஒரு தொடர்வரிசையான நெடுவரிசை கிடைவரிசை தகவல்களை காண்பிக்கும் அமைப்பாகும் இதில் உள்ள ஒவ்வொரு கிடைவரிசையும்ஒரு ஒற்றையான ஆவணமாகவும் அதன் ஒவ்வொரு நெடுவரிசையும ஒரு புலமாகவும் விளங்குகின்றன. லிபர்ஆஃபிஸ் கால்க்கின் விரிதாளானது ஒரு தரவுதள அட்டவணையின் கட்டமைவை போன்றதாகும். இந்த விரிதாளின் ஒவ்வொரு கலணும் ஒருதரவுதள ஆவணத்தில் ஒரு புலம் போன்றுள்ளன. மேலும் இந்த விரிதாளினை பயன்படுத்திடுவதற்காக இதில் தரவுதளத்தை கையாள போதுமான செயலிகள் இருக்கின்றன அதனால் இந்த விரிதாளினை கையாளுவதற்காகவென தனியான தரவுதள பயன்பாடுகளோ செயலிகளோ தேவையில்லை என ஒரு சிலர் தவறாக வாதிடுவார்கள் உதாரணமாக ஒரு கல்வி நிறுவனத்தின் ஒரு வகுப்பில் உள்ள மாணவர்களின் பெயர் ஒவ்வொன்றும் ஒரு கிடைவரிசையாகவும் அவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் பெறும் மதிப்பெண்களை ஒரு நெடுவரிசையாகவும் கொண்டால் இந்த அட்டவணையும் ஒரு தரவுதள அட்டவணை போன்றதேயாகும் எனக்கூறுவார்கள் இந்த விரிதாளின் தொடர்ச்சியான குழுவான கலண்களை ஒரு பகுதியென பெயரிடுக இந்த பகுதிபெயரானது வேறு ஒரு இடத்தில் பயனுள்ள பெயராக மேற்கோள் செய்வதற்கு வசதியாக இருக்கும் நாமே முயன்று ஒரு தரவுதள பகுதி பெயரை அல்லது தரவுதள செயலியை உருவாக்கிடமுடியும் இந்த பகுதி பெயரானது பின்வரும் காரணங்களினால் வழக்கமாக ஒத்தியங்கிடும் 1. பயனுள்ள பெயராக படிப்பதற்கு மேம்படுத்துவதுடன் பகுதியை ஒத்தியங்க செய்வதற்கு 2. இந்த பகுதி பெயரை பல்வேறு இடங்களில் மேற்கோள் செய்திடும்போது இதையே வேறொரு இடத்தில் மேற்கோள் செய்திடவும் இவையனைத்தையும் சேர்த்து புதிய இடத்தில் மேற்கோள்செய்திடுவதற்கு 3. F5என்ற செயலிவிசையை அல்லது இதற்கான உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குவதன் வாயிலாக வழிகாட்டியில் காண்பிக்குமாறு இந்த பகுதி ஒத்தியங்கும் செயலை காண்பிப்பதற்கு .
பெயரிடப்பட்ட பகுதி பயனுள்ள பெயருடன் ஒரு பகுதியின் கலண்களை ஒத்தியங்க செய்வதற்கு இதனுடைய பெயரைசெயல்படசெய்வதே இதனுடைய பொதுவான பயனாகும் உதாரணமாக கால்க்கின் விரிதாளில் தேர்வில் வெற்றி பெற்றவர்களை குறிப்பதற்காக Scores,எனும் ஒரு பெயரிடப்பட்ட பகுதியாக வரையறைச் செய்வதற்காக முதலில் தேவையான குழுவான கலண்களை தெரிவுசெய்து கொண்டு திரையின் மேலே கட்டளைபட்டையில் Insert ==>Names => Define==> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Define Names எனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அதில் பகுதியின் பெயரை புதியதாக சேர்த்து கொள்க அல்லது ஏற்கனவே இருக்கும் பெயரை மாறுதல்கள் செய்து கொள்க. ஒரு கால்க் ஆவணத்தில் ஒரு மேக்ரோவை பயன்படுத்தி பெயரிடப்பட்ட பகுதியை அனுகுவதற்கும் ,உருவாக்குவதற்கும் ,நீக்கம் செய்வதற்கும் இந்த பெயரிடப்பட்ட பகுதிகளின் (Named Ranges) பண்பியல்புகள் பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது இந்நிலையில் ஒரு பெயரிடப்பட்ட பகுதியை(NamedRange) சரிபார்த்திடவும் மீளப்பெறவும் hasByName(name) , getByName(name) ஆகிய வழிமுறைகளை பின்பற்றிடுக. அனைத்து பெயரிடப்பட்ட பகுதிகள் (Named Ranges)தொகுதியான பெயர்களின் உள்ளடக்கங்களை get Element Names() எனும் வழிமுறையானது திருப்பிவிடுகின்றது இந்த பெயரிடப்பட்ட பகுதி (Named Range) பொருளானது addNewBynameஎனும் வழிமுறையை ஆதரி்க்கின்றது தொடர்ந்து இந்த வழிமுறையானது name, content, position, typeஆகிய நான்கு தருக்கங்களை ஆதரிக்கின்றது ஒரு பெயரிடப்பட்ட பகுதியை உருவாக்கிட பின்வரும் மேக்ரோவரிகள் உதவுகின்றன
Create a named range that references $Sheet1.$B$3:$D$6.
Sub AddNamedRange()
Dim oRange ‘ The created range.
Dim oRanges ‘ All named ranges.
Dim sName$ ‘ Name of the named range to create.
Dim oCell ‘ Cell object.
Dim s$
sName$ = “MyNRange”
oRanges = ThisComponent.NamedRanges
If NOT oRanges.hasByName(sName$) Then
REM Obtain the cell address by obtaining the cell
REM and then extracting the address from the cell.
Dim oCellAddress As new com.sun.star.table.CellAddress
oCellAddress.Sheet = 0 ‘The first sheet.
oCellAddress.Column = 1 ‘Column B.
oCellAddress.Row = 2 ‘Row 3.
REM The first argument is the range name.
REM The second argument is the formula or expression to use.
REM The second argument is usually a string that
REM defines a range.
REM The third argument specifies the base address for
REM relative cell references.
REM The fourth argument is a set of flags that define
REM how the range is used, but most ranges use 0.
REM The fourth argument uses values from the
REM NamedRangeFlag constants (see Table 10).
s$ = “$Sheet1.$B$3:$D$6”
oRanges.addNewByName(sName$, s$, oCellAddress, 0)
End If
REM Get a range using the created named range.
oRange = ThisComponent.NamedRanges.getByName(sName$)
REM Print the string contained in cell $Sheet1.$B$3
oCell = oRange.getReferredCells().getCellByPosition(0,0)
Print oCell.getString()
End Sub
இதில் உள்ள addNewByName()எனும் வழிமுறையின்நான்காவது தருக்கமானது flagsஉடன் உடனிணைந்ததாகும் இது ஒரு பெயரிடப்பட்ட பகுதியை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளமுடியும் எனக்குறிப்பிடுகின்றது பெரும்பாலும் பொதுவாக இதில் மதிப்பானது 0 வாக இருக்கும் இதனை ஒரே மதிப்பாக வரையறுக்கப் படவில்லை
FILTER_CRITERIAஎன்பது வடிகட்டிடும் நிபந்தனையை குறிப்பிடுகின்றது
PRINT_AREAஎன்பது அச்சிடும் பகுதியை குறிப்பிடுகின்றது
COLUMN_HEADER என்பது அச்சிடும் நெடுவரிசையின் தலைப்பை குறிப்பிடுகின்றது
ROW_HEADER என்பது அச்சிடும் கிடைவரிசையின் தலைப்பை குறிப்பிடுகின்றது
இதிலுள்ள மூன்றாவது தருக்கமானது ஒரு கலணின் முகவரியானது ஒரு தொடர்புடைய வழியில் கலண்களை மேற்கோள் செய்வதற்காக தரவுதள முகவரியாக செயல்படுகின்றது கலணின் பகுதியை ஒருமுழுமையான முகவரியாக குறிப்பிடப்படவில்லையெனில் விரிதாளின்பகுதியின் பெயராக பயன்படுத்துவதை தரவுதளத்தில் வேறு ஒரு வித்தியாசமான பகுதியின் பெயராக மேற்கோள்-காட்டப்பெறும் பின்வரும் கட்டளைவரிகளில் தொடர்புடைய நடவடிக்கையை குறிப்பிட பெறுகின்றது இது ஒரு பெயரிடப்பட்ட பகுதியின் கணக்கீட்டை வரையறுக்கும் மற்றொரு பயனாகும் இந்த மேக்ரோவானது AddLeftஎனும் பெயரிடப்பட்ட பகுதியை உருவாக்குகின்றது இதில் C3எனும் கலணுடன் A3+B3 எனும் கணக்கிட்ட மேற்கோள் கலணாக காண்பிக்கின்றது இதில் மேற்கோள் கலண் எண்ணான C3என்பதை C4 என மாறுதல் செய்தால் AddLeftஎனும் கணக்கீட்டின் விடையை தவறாக காண்பிக்கச்செய்கின்றது
Create the AddLeft named range.
Sub AddNamedFunction()
Dim oSheet ‘Sheet that contains the named range.
Dim oCellAddress ‘Address for relative references.
Dim oRanges ‘The NamedRanges property.
Dim oRange ‘Single cell range.
Dim sName As String ‘Name of the equation to create.
sName = “AddLeft”
oRanges = ThisComponent.NamedRanges
If NOT oRanges.hasByName(sName) Then
oSheet = ThisComponent.getSheets().getByIndex(0)
oRange = oSheet.getCellRangeByName(“C3”)
oCellAddress = oRange.getCellAddress()
oRanges.addNewByName(sName, “A3+B3”, oCellAddress, 0)
End If
End Sub
தலைப்புகளும் தரவுகளையும் உள்ளடக்கங்களாக கொண்டிருக்கும் பகுதியினை தெரிவுசெய்து கொண்டு திரையின் மேலே Insert => Names => Create==>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Create Namesஎனும் உரையாடல் பெட்டித் திரையில் தோன்றிடும் இதில் Create Names fromஎன்பதன் கீழுள்ள top row, bottom row, right column , left columnஆகிய தேர்வுசெய்பெட்டிகளின் அடிப்படையில் ஒரே சமயத்தில் பலபெயரிடப்பட்ட பகுதிகளை(named ranges) உருவாக்கிடமுடியும் ஒருtop rowஎனும் தேர்வுசெய்பெட்டியின் அடிப்படையில் இந்தnamed ranges ஐ உருவாக்கினால் ஒவ்வொரு நெடுவரிசைக்கான தலைப்பையும் ஒரு named ranges ஆக உருவாக்கிட வேண்டும் இந்த named rangesஇல்லை யென்றாலும் பரவாயில்லை தலைப்பின் பெயரே பகுதியின் பெயராக பயன்படுத்தி கொள்ளப்படும்
Create many named ranges.
Sub AddManyNamedRanges()
Dim oSheet ‘Sheet that contains the named range.
Dim oAddress ‘Range address.
Dim oRanges ‘The NamedRanges property.
Dim oRange ‘Single cell range.
oRanges = ThisComponent.NamedRanges
oSheet = ThisComponent.getSheets().getByIndex(0)
oRange = oSheet.getCellRangeByName(“A1:C20”)
oAddress = oRange.getRangeAddress()
oRanges.addNewFromTitles(oAddress, _
com.sun.star.sheet.Border.TOP)
End Sub
இதில் addNewFromTitles().எனும் வழிமுறையை பயன்படுத்தி பல பகுதிகளின் தலைப்புகளின் இடஅமைவை நிர்ணயம் செய்திடப்படுகின்றது இதில் உள்ள TOP என்பது மேல்பகுதி கோட்டினை தெரிவுசெய்திடவும் BOTTOMஎன்பது கீழ்பகுதி கோட்டினை தெரிவுசெய்திடவும் RIGHTஎன்பது வலதுபுற கோட்டினை தெரிவுசெய்திடவும் LEFTஎன்பது இடதுபுற கோட்டினை தெரிவுசெய்திடவும் பயன்படுகின்றன
தரவுதள பகுதி ஒரு தரவுதள பகுதியானது வழக்கமான பெயரிடப்பட்ட பகுதியாக பயன்படுத்திக் கொண்டிருந்தாலும் தரவுதள பகுதியானது விரிதாளின் கலண்களின் பகுதியை தரவுதளமாக பயன்படுத்தி கொள்ள வரையறுக்கின்றது இதில் ஒவ்வொரு கிடைவரிசையும் தொடர்புடைய ஆவணமாகவும் ஒவ்வொரு கலணும் தொடர்புடைய புலமாகவும் குறிப்பிடப்பெறுகின்றது இந்த பகுதியை தரவுதள கணக்கீடுகளான sort, group, searchஆகியவற்றிற்கு பயன்படுத்தி கொள்ள முடியும் ஒரு தரவுதள பகுதியானது தரவுதளதொடர்புடைய அனைத்து செயல்களையும் செயற்படுத்தி நம் பயன்பெறுமாறு அதன் நடைமுறையில் நமக்கு வழங்குகின்றது உதாரணமாக ஒரு அட்டவணையில் முதல்கிடைவரிசையின் தலைப்பை குறிப்பிட்டபின் Data => Define Range==>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்க உடன் விரியும் Define Data Range எனும் உரையாடல் பெட்டியின் உதவியுடன் புதிய தரவுதளபகுதியை உருவாக்கிடவும் ,ஏற்கனவே இருப்பதை மாறுதல் செய்திடவும் அல்லது நீக்கம் செய்திடவும் முடியும் ஒரு மேக்ரோவை கொண்டு ஒரு தரவுதளபகுதி.யை அந்த தரவுதளபகுதி.யிலிருந்து அனுகவும் உருவாக்கிடவும் நீக்கம் செய்திடவும் செயற்படுத்திடமுடியும் பின்வரும் கட்டளை வரிகளில் MyName எனும் தரவுதள பெயரிடப்பட்ட பகுதியொன்று உருவாக்கப்-பட்டு அதில்தானியங்கி வடிகட்டியாக செயல்படுமாறுசெய்யப்பட்டுள்ளது
Create a database range and an auto filter.
Sub AddNewDatabaseRange()
Dim oRange ‘DatabaseRange object.
Dim oAddr ‘Cell address range for the database range.
Dim oSheet ‘First sheet, which will contain the range.
Dim oDoc ‘Reference ThisComponent with a shorter name.
oDoc = ThisComponent
If NOT oDoc.DatabaseRanges.hasByName(“MyName”) Then
oSheet = ThisComponent.getSheets().getByIndex(0)
oRange = oSheet.getCellRangeByName(“A1:F10”)
oAddr = oRange.getRangeAddress()
oDoc.DatabaseRanges.addNewByName(“MyName”, oAddr)
End If
oRange = oDoc.DatabaseRanges.getByName(“MyName”)
oRange.AutoFilter = True
End Sub
அடுக்குதல் கால்க்கின் விரிதாளில் உள்ள தரவுகளை நாம் விரும்பியவாறு சரிசெய்து அடுக்கிடும் செயலிற்கான தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது இதன் முதல்படிமுறையாக அவ்வாறு அடுக்கிடவிரும்பும் தரவுகளை தெரிவுசெய்து கொள்க அதில் தலைப்பு பெயர் இருந்தால்அதனை கண்டிப்பாக குறிப்பிடுக பின்னர் திரையின் மேலே கட்டளை பட்டையில் Data => Sort==>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் Sortஎனும் உரையாடல் பெட்டியின் உதவியுடன் ஒரே சமயத்தில்மூன்று நெடுவரிசைகளை அல்லது கிடைவரிசைகளை அடுக்கிடமுடியும் இந்த உரையாடல் பெட்டியில் optionஎனும் தாவியின் திரையை தோன்றிடச்செய்க அதில் நெடுவரிசையின் தலைப்பும் வரிசை படுத்தி அடுக்கிடாமல் பாதுகாத்து மிகுதி தரவுகளை மட்டும் அடுக்குவதற்காக Range contains column labels எனும் தேர்வு செய் பெட்டியை தெரிவுசெய்து-கொள்க நாம் அடுக்கி வைத்திட விரும்பும் தரவுகளானது ஏற்கனவே இருக்கும் நிலையிலும் இருக்கவேண்டும் வரிசையாக அடுக்கியதரவுகளும் வேண்டும் என்ற நிலையில் Copy sort results எனும் தேர்வுசெய் பெட்டியை தெரிவுசெய்துகொண்டு அடுக்கவேண்டிய இடத்தை குறிப்பிடுக மேலும் முன்கூட்டியே வரையறுக்கப்பட்ட மதிப்பு பட்டியலின்படி அடுக்குவதற்காக Custom sort orderஎனும் தேர்வுசெய் பெட்டியை தெரிவுசெய்து கொள்க இவ்வாறு நம்முடைய பட்டியலை வரையறுப்பதற்காக திரையின் மேலே கட்டளைபட்டையில்Tools => Options => LibreOffice Calc => Sort Lists==> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் திரையில் நம்முடைய சொந்த வரையறையை அமைத்துகொள்க
வடிகட்டுதல் இவ்வாறு தரவுகளை வரிசைபடுத்தி அடுக்கிடும்போது குறிப்பிட்ட வகை அளவு தரவுகள் மட்டுமே திரையில் பிரதிபலிக்கவேண்டும் என நாம் விரும்பிடும்போது அவ்வாறான வகையில் திரையில்தோன்றிட செய்வதற்கு இந்த வசதி பயன்படுகின்றது இந்த வசதியின்படி நாம் எதையும் குறிப்பிடவில்லையெனில் பொதுவாக தானியங்கி வடிகட்டுதலே செய்திடும் பல்வேறு வகையான பயன்பாடுகளிலும் தானியங்கியான வடிகட்டி வசதியே பயன்படுத்திக் கொள்ளப்-படுகின்றது ஒரு தானியங்கி வடிகட்டியை ஒருகுறிப்பிட்ட நெடுவரிசையில் உருவாக்கிய பிறகுஅந்த நெடுவரிசைக்கு combo boxஎன்பது சேர்க்கப்படும் இது தானியங்கி வடிக்கட்டி வகையை விரைவாக அனுகுவதற்கான வசதியை அளிக்கின்றது கண்ணால் காணும் அனைத்து கிடைவரிசைகளையும் இந்த தானியங்கி வடிகட்டி பாதிப்படைய செய்கின்றது செந்தர தானியங்கி வடிகட்டியானது Standard Filterஎனும் உரையாடல் பெட்டியை தோன்றிடசெய்து செந்தர வடிகட்டி போன்று செயல்படுத்திட பயன்படுகின்றது இதிலுள்ள Top 10 என்பது நெடுவரி்சையில் அதிக மதிப்புள்ளவைகளை மட்டும் உயர் மதிப்பிலிருந்து கீழிறங்கு வரிசையில் அடுக்குவதற்கு ஏதுவாக அதில combo boxஐ சேர்த்து விடுகின்றது இந்நிலையில் இதிலுள்ள கீழிறங்கு பட்டியிலின் வாயிலாக தேவையானவாறு வடிகட்டிடலாம் நாம் தெரிவுசெய்த நெடுவரிசை தரவுகள் மட்டுமே இதன்மூலம் வடிகட்டப்படுகின்றதுஎன்ற செய்தியை மனதில் கொள்க திரையின் மேலே கட்டளைபட்டையில் Data => Filter => AutoFilter==> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் விரியும்திரையில் தானியங்கி வடிகட்டியை நீக்கம் செய்து கொள்க அதனை தொடர்ந்து இந்த நெடுவரிசையில் combo box உம் நீக்கம் செய்யப்பட்டுவிடுகின்றது ஒரு செந்தர வடிகட்டியை அமைவுசெய்வதற்காக திரையின் மேலே கட்டளைபட்டையில் Data => Filter => Standard Filter==>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Standard Filterஎனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் இதில் தேவையானவாறு செந்தர வடிகட்டியை கட்டமைவு செய்துகொள்க இந்த செந்தர வடிகட்டியை நீக்கம் செய்வதற்காக திரையின் மேலே கட்டளை பட்டையில் Data => Filter => Remove Filter==>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக ஒரு சாதாரண வடிகட்டியைஒரு நெடுவரிசையில் உருவாக்குவதற்காக பின்வரும் மேக்ரோ பயன்படுகின்றது
Create a simple sheet filter.
Sub SimpleSheetFilter()
Dim oSheet ‘ Sheet that will contain the filter.
Dim oFilterDesc ‘ Filter descriptor.
Dim oFields(0) As New com.sun.star.sheet.TableFilterField
oSheet = ThisComponent.getSheets().getByIndex(0)
REM If argument is True, creates an empty filter
REM descriptor. If argument is False, create a
REM descriptor with the previous settings.
oFilterDesc = oSheet.createFilterDescriptor(True)
With oFields(0)
REM You could use the Connection property to indicate
REM how to connect to the previous field. This is
REM the first field, so this is not required.
‘.Connection = com.sun.star.sheet.FilterConnection.AND
‘.Connection = com.sun.star.sheet.FilterConnection.OR
REM The Field property is the zero based column
REM number to filter. If you have the cell, you
REM can use .Field = oCell.CellAddress.Column.
.Field = 5
REM Compare using a numeric or a string?
.IsNumeric = True
REM The NumericValue property is used
REM because .IsNumeric = True from above.
.NumericValue = 80
REM If IsNumeric was False, then the
REM StringValue property would be used.
REM .StringValue = “what ever”
REM Valid operators include EMPTY, NOT_EMPTY, EQUAL,
REM NOT_EQUAL, GREATER, GREATER_EQUAL, LESS,
REM LESS_EQUAL, TOP_VALUES, TOP_PERCENT,
REM BOTTOM_VALUES, and BOTTOM_PERCENT
.Operator = com.sun.star.sheet.FilterOperator.GREATER_EQUAL
End With
REM The filter descriptor supports the following
REM properties: IsCaseSensitive, SkipDuplicates,
REM UseRegularExpressions,
REM SaveOutputPosition, Orientation, ContainsHeader,
REM CopyOutputData, OutputPosition, and MaxFieldCount.
oFilterDesc.setFilterFields(oFields())
oFilterDesc.ContainsHeader = True
oSheet.filter(oFilterDesc)
End Sub
இந்த மேக்ரோவின் வாயிலாக வடிகட்டியை ஒருவிரிதாளில் செயல்படுத்திடும்போது ஏற்கனவே உள்ள வடிகட்டிக்கு பதிலாக காலியான வடிகட்டியை அமைவு செய்கின்றது அதனை தொடர்ந்து ஏற்கனவே இருக்கும் வடிகட்டியை நீக்கம் செய்வதற்கு பின்வரும் மேக்ரோ பயன்படுகின்றது
Remove the current sheet filter.
Sub RemoveSheetFilter()
Dim oSheet ‘ Sheet to filter.
Dim oFilterDesc ‘ Filter descriptor.
oSheet = ThisComponent.getSheets().getByIndex(0)
oFilterDesc = oSheet.createFilterDescriptor(True)
oSheet.filter(oFilterDesc)
End Sub
மேலும் மேம்படுத்தப்பட்டவடிகட்டியாக இரண்டு நெடுவரிசைகளில் வழக்கமான வெளிப்பாடுகளுடன் பின்வரும் மேக்ரோ அமைக்கின்றது இதனை பயன்படுத்தி எந்வொரு விரிதாளிலும் அந்த விரிதாளின் குறிப்பிட்ட பகுதியில்அல்லது விரிதாள் முழுவதும் வடிகட்டியை செயல்படுமாறு அமைத்திடலாம்
A simple sheet filter using two columns.
Sub SimpleSheetFilter_2()
Dim oSheet ‘ Sheet to filter.
Dim oRange ‘ Range to be filtered.
Dim oFilterDesc ‘ Filter descriptor.
Dim oFields(1) As New com.sun.star.sheet.TableFilterField
oSheet = ThisComponent.getSheets().getByIndex(0)
oRange = oSheet.getCellRangeByName(“E12:G19”)
REM If argument is True, creates an
REM empty filter descriptor.
oFilterDesc = oRange.createFilterDescriptor(True)
REM Setup a field to view cells with content that
REM start with the letter b.
With oFields(0)
.Field = 0 ‘ Filter column A.
.IsNumeric = False ‘ Use a string, not a number.
.StringValue = “b.*” ‘ Everything starting with b.
.Operator = com.sun.star.sheet.FilterOperator.EQUAL
End With
REM Setup a field that requires both conditions and
REM this new condition requires a value greater or
REM equal to 70.
With oFields(1)
.Connection = com.sun.star.sheet.FilterConnection.AND
.Field = 5 ‘ Filter column F.
.IsNumeric = True ‘ Use a number
.NumericValue = 70 ‘ Values greater than 70
.Operator = com.sun.star.sheet.FilterOperator.GREATER_EQUAL
End With
oFilterDesc.setFilterFields(oFields())
oFilterDesc.ContainsHeader = False
oFilterDesc.UseRegularExpressions = True
oSheet.filter(oFilterDesc)
End Sub

Previous Older Entries