லிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ்-5.2.தொடர்-14-படவில்லைகளின் காட்சி

நாம் இதுவரையில் லிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ்-5.2 எனும் இந்த தொடரில் புதிய படவில்லைகளை எவ்வாறு உருவாக்குவது ,கட்டமைவுசெய்வது, மேம்படுத்துவது, அழகூட்டுவது என்றவாறு கடந்த பதிமூன்று தொடர்களின் வாயிலாக பார்த்து வந்தோம் இவ்வாறு உருவாக்கிய படவில்லைகளை எவ்வாறு காட்சிபடுத்துவது என இந்த தொடரில் காண்போம் எந்த படவில்லையை படவில்லைகாட்சியாக எவ்வளவு கால இடைவெளியில் காண்பிப்பது படவில்லை காட்சியானது தானாகவே காண்பிக்க-வேண்டுமா அல்லது நாம் தலையிட்டு காண்பிக்கச்செய்யவேண்டுமா இரு படவில்லை-களின் காட்சிகளுக்கு இடையேயான நிலைமாற்றி எவ்வாறு இருக்கவேண்டும் ஒவ்வொரு படவில்லைக்குமான அசைவூட்டங்கள், படவில்லை காட்சியின்போது நாம் ஏதேனும் பொத்தானை சொடுக்குதல் செய்தல் அல்லது இணைப்பு செய்தால் என்ன நடைபெறும் ஒரேசமயத்தில்இருவேறு இடங்களில்படவில்லை காட்சியை எவ்வாறு காண்பிக்கச்செய்வது ஆகிய பல்வேறு தகவல்களையும் உள்ளடக்கியதே இந்த லிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸின் படவில்லை காட்சியாகும் பொதுவாக பெரும்பாலான செயல்-களனைத்தும் ஒன்றாக சேர்த்து படவில்லைகளின் சுருக்கமான வரிசைதொகுப்பில் Slide Sorterஎன்றவாறு வைக்கப்பட்டுவிடும் இதனை செயற்படுத்திடுவதற்காக திரையின் மேலே முதன்மை கட்டளை பட்டையில் View > Slide Sorterஎன்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குக அல்லது பணிநிலைய பலகத்தின் மேலே Slide Sorterஎனும் தாவி-பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Slide Sorterஎனும் படவில்லைகளின் சுருக்கமான வரிசைதொகுப்பு திரையில்தோன்றிடும் பின்னர் திரையின் மேலே முதன்மை கட்டளை பட்டையில் Slide Show > Slide Show Settingsஎன்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குக உடன் Slide Show எனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும்

1
இந்த உரையாடல் பெட்டியில் Range எனும் பகுதியில் நாம் அனைத்து படவில்லைகளிலும் அமைவை மாற்றியமைத்திடவேண்டுமென விரும்பினால் All Slidesஎன்பதையும் குறிப்பிட்ட படவில்லைமுதல் குறிப்பிட்ட படவில்லைவரை எனில் From என்பதையும் குறிப்பிட்ட படவில்லை மட்டும் எனில் custom Slide Show என்பதையும் தெரிவுசெய்து கொள்க அதுமட்டுமல்லாது பின்னிரண்டையும் தெரிவுசெய்தால் அதனருகில் உள்ள கீழிறங்கு பட்டியலின் வாயிலாக எந்த படவில்லையென குறிப்பிடுக
அதனை தொடர்ந்துType எனும் பகுதியில் Default,Window,Autoஎன்றவாறு உள்ள வாய்ப்புகளில் தேவையானதையும் Optionsஎனும் பகுதியில் நாம் விரும்பும் வாய்ப்பு-களையும் தெரிவுசெய்து கொள்க மேலும் Multiple displays எனும் பகுதியில் Presentation display என்பதன் கீழிறங்கு பட்டியலில் தேவையானவாறு தெரிவுசெய்து கொண்டு okஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
இவ்வாறு படவில்லைகளின் அடிப்படைகளை கட்டமைவுசெய்தபின்னர் படவில்லைகளின் காட்சியில் குறிப்பிட்ட படவில்லையை காட்சியாக காண்பிக்க நாம் விரும்பவில்லை எனும் நிலையில் படவில்லைகளின் பலகத்தில் அல்லது படவில்லைகளின் சுருக்க தொகுப்பு காட்சியில் மறைக்கவிரும்பும் படவில்லையை மட்டும் தெரிவுசெய்து கொள்க பின்னர் திரையின் மேலே முதன்மை கட்டளை பட்டையில் Slide Show > Hide Slide என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது திரையின் மேலே உள்ள கருவிகளின் பட்டையில் Hide Slideஎன்ற உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Hide Slideஎன்றவாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக
இவ்வாறு மறைக்கப்பட்ட படவில்லையில் படவில்லை காட்சிக்கு தேவையானவாறு மாறுதல்கள் செய்தபின்னர் அதனை மீண்டும் படவில்லைகாட்சியில் தோன்றிட செய்திட விரும்புவோம் அதற்காகபடவில்லைகளின் பலகத்தில் அல்லது படவில்லைகளின் சுருக்க தொகுப்பு காட்சியில் மீண்டும் தோன்றிடவிரும்பும் படவில்லையை தெரிவுசெய்து கொள்க பின்னர் திரையின் மேலே முதன்மை கட்டளை பட்டையில் Slide Show > Show Slide என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது திரையின் மேலே உள்ள கருவிகளின் பட்டையில் Show Slideஎன்ற உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Show Slideஎன்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக
இந்த படவில்லைகளின் காட்சியை வரிசையாக காண்பிக்கச்செய்வதற்கு பதிலாக வாடிக்கையாளர் விரும்பியபடவில்லைகளை மட்டும் காட்சியாக காண்பிக்கச்செய்யலாம் இதற்காக திரையின் மேலே முதன்மை கட்டளை பட்டையில் Slide Show > Custom Slide Show என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Custom Slide Showஎனும் உரையாடல் பெட்டிதிரையில் தோன்றிடும அதில் Newஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் DefineCustom Slide Showஎனும் உரையாடல் பெட்டிதிரையில் தோன்றிடும அதில் Nameஎன்பதில் படவில்லைகாட்சிக்கான பெயரை உள்ளீடு செய்து கொள்க
பின்னர் Existing slidesஎன்பதில் உள்ள படவில்லைகளின் பட்டியலில் தேவையான படவில்லைகளை தெரிவுசெய்துகொண்டு அதனருகில் உள்ள >>என்ற குறியீட்டினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் தெரிவுசெய்த படவில்லைகள் Selected Slidesஎன்ற பகுதிக்கு சென்று சேர்ந்துவிடும் அதன்பின்னர் okஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் Custom Slide Showஎனும் உரையாடல் பெட்டியில் Use Custom Slide Show எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து கொண்டு okஎனும் பொத்தானை சொடுக்குக

2
இதன்பின்னர் வாடிக்கையாளர் விரும்பியவாறு திருத்தம் செய்வதற்காக இதேCustom Slide Showஎனும் உரையாடல் பெட்டியில்Edit என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் திரையில் தேவையானவாறு மாறுதல்கள் செய்து கொள்க ஒரு படவில்லை காட்சியின் படவில்லையை மற்றொரு படவில்லை காட்சியின் கோப்பிற்கு நகலெடுத்திடுவதற்காக இதே உரையாடல் பெட்டியில்copy எனும் பொத்தானை சொடுக்கு-வதன் வாயிலாக நகலெடுத்து செல்லமுடியும் படவில்லைகளின் காட்சியை முன்காட்சியாக காண startஎனும் பொத்தானை சொடுக்குதல் செய்திடுக இறுதியாக okஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
ஒரு படவில்லையிலிருந்து மற்றொரு படவில்லைக்குகாட்சி மாறும்போது எவ்வாறு இருக்கவேண்டும் என கட்டமைவுசெய்வதையே படவில்லைமாறுகை அல்லது படவில்லை நிலைமாற்றி (Slide Transition) என அழைப்பர்

3
அதனை புதியதாக சேர்த்திடுவதற்காக குறிப்பிட்ட படவில்லைக்கு மட்டும் எனில் அதனைமட்டும் தெரிவுசெய்து கொள்க அனைத்து படவில்லைகளுக்கும் எனில் அவ்வாறு தெரிவுசெய்திடவேண்டாம் படவில்லையின் பக்கபட்டையில் Slide Transitionஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Slide Transitionஎனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் இவ்வுரையாடல்பெட்டியில் Apply to selected slides என்பதன் கீழுள்ள பட்டியல்களில் தேவையானதை மட்டும் தெரிவுசெய்து கொள்க இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட வாய்ப்புகளுடன் இயல்புநிலையில் உள்ளவைகளில் Modify transition என்ற பகுதியில் உள்ள sound,Speed ஆகியவற்றின் கீழிறங்கு பட்டியலின் வாயிலாக நாம் விரும்பியதை மட்டும் தெரிவுசெய்து கொள்க இதில் sound என்பதை தெரிவுசெய்திருந்தால் இதிலுள்ள கீழிறங்கு பட்டியலில் Other soundஎனும் வாய்ப்பினையும் தொடர்புடைய இசையையும் தேடிபிடித்து தெரிவுசெய்து கொள்க இந்நிலையில் இவைகளுக்கு கீழுள்ள Loop until next soundஎனும் வாய்ப்பு தானாகவே தெரிவுசெய்து கொள்ளப் பட்டுவிடும்.மேலும் Advanced Slideஎன்ற பகுதியிலுள்ள நாம் தெரிவுசெய்வதுஎனில் On mouse clickஎன்பதையும் அல்லது தானாகவே எனில் Automatically after என்பதையும் அதில் எவ்வளவு நேரம் என்பதையும் தெரிவுசெய்துகொண்டு அனைத்து படவில்லைகளுக்கும் எனில் Apply to All Slides என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இவ்வாறு செய்த மாறுதல்கள் படவில்லை காட்சியில் எவ்வாறு செயல்படுத்திடப்படுகின்றது என அறிவதற்கு இதனை தொடர்ந்துSlideShow. என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக நாம் செய்துவரும் மாறுதல்கள் உடனுக்குடன் அறிந்து கொள்வதற்காக Automatic previewஎனும் வாயப்பினை தெரிவுசெய்து கொள்க இவ்வாறான மாறுதல்களை உடனுக்குடன் படக்காட்சியில் பார்வை-யிடுவதற்காக Playஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
இவ்வாறு மாறுகை செய்யப்பட்டபின்னர் தேவையில்லை எனில் Slide Transitionஎனும் இதே உரையாடல் பெட்டியில் No Transitionஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து நீக்கம் செய்துகொள்க அவ்வாறே இயல்புநிலை கால அளவை அமைத்திடுவதற்காக Slide Transitionஎனும் இதே உரையாடல் பெட்டியில் No Transitionஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து கொண்டபின்னர் Automatically after என்பதையும் எவ்வளவு நேரம் என்பதையும் தெரிவுசெய்து கொண்டு அனைத்து படவில்லைகளுக்கும் எனில் Apply to All Slides என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
ஒவ்வொரு படவில்லைக்கும் ஒவ்வொரு காலஅளவை அமைத்திடுவதற்காக திரையின் மேலே முதன்மை கட்டளைபட்டையில் Slide Show > Rehearse Timingsஎன்றவாறு கட்டளைகள தெரிவுசெய்து சொடுக்குக அல்லதுSlide Show எனும் கருவிகளின் பட்டையில் Rehearse Timingsஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் படவில்லை காட்சியானது முழுத்திரையிலும் தோன்றிடும் அதனோடு காலஅளவு திரையின் கீழே வலதுபுற மூலையிலும் தோன்றிடும் குறிப்பிட்ட படவில்லை காட்சியானது வேகமாக முடிவுற்று அடுத்த படவில்லையை திரைக்கு கொண்டுவர காலஅளவை மட்டும் தெரிவுசெய்துசொடுக்குக இயல்புநிலை காலஅளவு போதுமெனில் படவில்லையை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக இவ்வாறு படவில்லைகள் முழுவதையும் அமைத்து கொள்க இவ்வாறுஒவ்வொரு படவில்லைக்கும் நாம் அமைத்திட்ட கால அளவை Automatically afterஎன்ற பகுதியில் காணலாம் இந்த நிலையிலிருந்து வெளியேறுவதற்காக Escஎன்ற விசையை அழுத்துக அல்லது படவில்லையில் சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில்EndShow என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக
இதே படவில்லை காட்சியை மீண்டும் தானாகவே செயல்படுவதற்காக திரையின் மேலே முதன்மைபட்டையில் Slide Show > Slide Show Settingsஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும்Slide Show எனும் உரையாடல் பெட்டியில் Autoஎன்ற பொத்தானை தெரிவுசெய்து கொண்டு படவில்லைகளுக்கிடையே எவ்வளவு கால இடைவெளிவிடவேண்டும்என்பதை தெரிவுசெய்துகொள்கதேவையெனில்Show logoஎன்பதை தெரிவுசெய்துகொண்டுOKஎன்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக
படவில்லைகளில்அசைவூட்டத்தை அமைத்தல் இது மாறுகை போன்றதே ஆனால் இதில் ஒருபடவில்லை-யிலுள்ள title, chart, shape, or individual bullet point ஆகிய உறுப்புகள்

4
ஒவ்வொன்றிற்கும் இது அமைக்கப்படுகின்றது பார்வையாளர்களுக்கு நாம் கூறவிரும்பும் கருத்துகளை எளிதாக சென்றடைய செய்வதற்குக இந்த அசைவூட்டம் முக்கிய பங்காற்றுகின்றது சாதாரண காட்சிநிலையில் ஒரேயொரு படவில்லையில் உள்ள பொருட்களுக்கு இந்த அசைவூட்டம் அமைக்கப்படுகின்றது ஒரு படவில்லையில் இந்த அசைவூட்டத்தை அமைத்திடுவதற்காக திரையின் மேலே முதன்மைபட்டையில் View > Normal என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது பணியிடத்தில் Normal என்ற தாவிபொத்தானின் திரையை தோன்றசெய்திடுக இதன்பின்னர் அசைவூட்டம் அமைத்திட விரும்பும் படவில்லையை தெரிவுசெய்துகொள்க பின்னர் பக்கப்பட்டையில் Custom Animationஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியம் திரையில் Addஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Custom Animationஎனும் உரையாடல்பெட்டிதிரையில் தோன்றிடும் படவில்லையின் பொருட்களை திரையில் தோன்றுவதற்கு Entranceஎனும் தாவிபக்கத்தின் திரையில் உள்ள வாய்ப்புகளையும் படவில்லையின் எழுத்துருக்களின் வண்ணம் அளவு போன்றவைகளுக்கு Emphasisஎனும் தாவிப்பக்கத்தின் திரையில் உள்ள வாய்ப்புகளையும் படவில்லையிலிருந்து அசைவூட்ட பொருட்கள் மறைவதற்கு Exitஎனும் தாவிப்பக்கத்தின் திரையில் உள்ள வாய்ப்புகளையும் படவில்லையின் பொருட்கள் நேராகவும்வளைந்தும் அசைந்தாடுவதற்காக Motion Paths எனும் தாவிப்பக்கத்தின் திரையில் உள்ள வாய்ப்புகளையும் இவையில்லாத வேறுவகை வேண்டுமெனில் Misc Effectsஎனும் தாவிப்பக்கத்தின் திரையில் உள்ள வாய்ப்புகளையும் எவ்வளவு நேரம் அசைவூட்டம் வேண்டுமென்பதற்காக Speedஎன்பதன் கீழிறங்கு பட்டியலில் தேவையான வாய்ப்பினையும் நாம் செய்த மாறுதல்கள் உடனுக்குடன் திரையில் காட்சியாக காண Automatic previewஎன்ற வாய்ப்பினையும் தெரிவு செய்து கொண்டுஇறுதியாகOKஎன்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக மேலும்Custom Animationஎனும் ;செயல் பலகத்திரையில் இந்த அசைவூட்டம் எப்போது தோன்றவேண்டுமெனEffect Fly in என்ற பகுதியின் Startஎன்ற கீழிறங்கு பட்டியிலிலிருந்து On click,With previous,After previousஆகியவற்றில் தேவையான வாய்ப்பினை தெரிவுசெய்துகொள்க அவ்வாறே இந்த அசைவூட்டமானது எந்ததிசையில்துவங்கி எந்த திசைநோக்கி செல்லவேண்டும் என்பதற்காக Direction என்ற கீழிறங்கு பட்டியிலிலிருந்து தேவையான வாய்ப்பினை தெரிவுசெய்துகொள்க எவ்வளவு நேரம்என்பதற்கு Speed என்ற கீழிறங்கு பட்டியிலிலிருந்து தேவையான வாய்ப்பினை தெரிவுசெய்துகொள்க நாம் அமைத்த அசைவூட்டம் எவ்வாறு இருக்கும் என playஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து அவ்வப்போது சரிபார்த்து கொள்க படவில்லைகாட்சி முழுவதையும்எனில் Slide Show என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து சரிபார்த்து கொள்க இவ்வாறு அமைத்திட்ட அசைவூட்டத்தை மாறுதல்கள் செய்திடCustom Animationஎனும் செயல் பலகத்திரையில் Change எனும் பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குகஉடன் மாறிடும் திரையில்Applying animation effectsஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக படவில்லைகாட்சியில் இவ்வாறான அசைவூட்டம் எதுவும் தேவையில்லை எனில்இதே Custom Animationஎனும் ;செயல் பலகத்திரையில்Remove என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
ஒவ்வொரு பொருளின் அசைவூட்டத்தின் பண்பியல்புகள் அல்லது வாய்ப்புகளையும் தேவையானவாறு மாற்றி யமைத்திடமுடியும் இதற்காக பக்கபபட்டையில் Custom Animationஎனும் செயல் பலகத்திரையின் பட்டியலில் தேவையான அசைவூட்ட பொருளை தெரிவுசெய்து கொண்டு Direction என்பதற்கு வலதுபுறமுள்ள Effect எனும் மூன்று புள்ளி பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்தோன்றிடும் EffectOptionsஎனும் உரையாடல்பெட்டியின் Effect,Timing,Text animation ஆகிய தாவிபக்கங்களின் திரையில் தேவையான வாய்ப்புகளை அமைத்து கொண்டு OKஎன்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக
படவில்லை காட்சி காண்பிக்கும்போது இடையிடையே நாம் தலையிட்டு தேவையானவாறு காட்சியை ஒழுங்குபடுத்துவதற்கு nteractionஎனும் வாய்ப்பு பயன்படுகின்றது படவில்லையிலுள்ள குறிப்பிட்ட பொருளை தெரிவுசெய்துகொண்டு திரையின் மேலே முதன்மைபட்டையில் Slide Show > Interactionஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குகஅல்லது குறிப்பிட்ட பொருளை இடம்சுட்டியால் தெரிவுசெய்து கொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைப்டடையில் Interactionஎன்றவாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் Interactionஎனும் உரையாடல் பெட்டியில்Action at mouse clickஎன்பதற்கருகிலுள்ள கீழிறங்கு பட்டியலில் தேவையான வாயப்பினை தெரி்வுசெய்துகொண்டு OKஎன்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக

6
இவ்வாறு அரும்பாடுபட்டு உருவாக்கிய படவில்லைகளின் காட்சியை எவ்வாறு செயல்படுத்துவது என இப்போது காண்போம் தேவையான படவில்லைகாட்சிக்கான லிபர்ஆஃபிஸின் இம்ப்பிரஸ் கோப்பினை தெரிவுசெய்து திறந்து கொள்க பின்னர்
திரையின் மேலே முதன்மைபட்டையில் Slide Show > Slide Showஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குகஅல்லதுSlide Sorterஎனும் கருவிகளின் பட்டையில் அல்லது Presentation எனும்கருவிகளின் பட்டையில் உள்ள Slide Show எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விசைப்பலகையில்F5 எனும் விசையை அழுத்துக படவில்லையின் மாறுகையின்Automatically after என்பதில் போதுமான காலஅளவு அல்லது இயல்புநிலைஅளவு அமைக்கப்பட்டிருந்தால் உடன் படவில்லைகாட்சி திரையில் தோன்றிடும் On mouse clickஎன்பது தெரிவு செய்யபபட்டிருந்தால் உடன் சுட்டியின் இடதுபுற பொத்தானை சொடுக்குதல் அல்லது விசைப்பலகையின் காலிஇடைவெளி விசையை அழுத்துதல் ,கீழ்நோக்கு அம்புக்குறியை அழுத்துதல்,பக்கம் கீழ்தள்ளுதல்விசை ஆகிய விசைகளை அழுத்தும் செயல்களின் வாயிலாக படவில்லைகாட்சியை செயல்படசெய்திடலாம்
படவில்லை காட்சியிலிருந்து வெளியேறுவதற்காக Click to exit presentation.எனும் செய்திபெட்டியை தெரிவுசெய்து சொடுக்குதல் அல்லது விசைப்பலகையில்Escஎனும் விசையை அழுத்துதல் செய்து வெளியேறலாம்
ஒன்றிற்குமேற்பட்ட படவில்லைகள் எனில் எந்தவொரு படவில்லையிலும் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் Next,Previous,Go to Slide,End Showஆகிய நாம்விரும்பும் வாய்ப்பினை தெரிவுசெய்து செயற்படுத்திகொள்க
இதுமட்டுமல்லாது இந்த படவில்லை காட்சியானது நம்முடைய கணினியிலும் பார்வையாளர்கள் காண்பதற்காக பெரியதிரையிலும் ஒரேசமயத்தில் இருஇடங்களிலும் படவில்லைகாட்சியை Presenter Consoleஎனும் வாய்ப்பின் வாயிலாக லிபர் ஆஃஆபிஸ் இம்ப்பிரஸானது கையாளும் திறன்கொண்டதாக ஆக்கப்பட்டுள்ளது இதன்வாயிலாக Previous , Nextஆகிய அம்புக்குறி பொத்தான்களையும்,Notes,Slidesஆகிய உருவபொத்தான்களையும் பயன்படுத்தி படவில்லை காட்சிய கட்டுபடுத்திடலாம்Exchange எனும் உருவபொத்தானை சொடுக்குவதன்வாயிலாக படவில்லைகாட்சிகளுக்குஇடையே மாறிகொள்ளலாம்

7

லிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ்-5.2.தொடர்-13 படவில்லைகளை சேர்த்தலும் வடிவமைத்தலும் அதனோடு அடிக்குறிப்புகளையும் வெளியீடுகளையும் சேர்த்தல்

லிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸின் படவில்லையின் காலிபணியிடத்தில் இடம் சுட்டியை வைத்து சுட்டியின்வலதுபுற பொத்தானை சொடுக்குதல் செய்தவுடன் விரியும் சூழ்நிலை பட்டியில் Slideஎன்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் அல்லது அருகிலுள்ள கட்டைவிரல் அளவேயிருக்கும் படவில்லைபலகத்தில் இடம்சுட்டியைவைத்து சுட்டியின்வலதுபுற பொத்தானை சொடுக்குதல் ஆகிய இரண்டு வழிகளில் சூழ்நிலை பட்டியல்கள் நாம் பயன்படுத்திடுவதற்காக தயாராக தோன்றுகின்றன. இந்த சூழ்நிலை பட்டியில் New Slide என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது திரையின் மேலே முதன்மை கட்டளை பட்டையில் Insert > Slideஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக

1
மற்ற கோப்புகளில் உள்ளபடவில்லையை இணைப்பதற்காக திரையின் மேலே முதன்மை கட்டளைபட்டையில் Insert > Fileஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் Insert Fileஎனும் உரையாடல்பெட்டியில் தேவையான படவில்லைகள் உள்ள கோப்பினை தேடிப்பிடித்து தெரிவுசெய்தபின் அதன்அருகிலுள்ள சிறிய முக்கோண வடிவஉருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் படவில்லைகளில் தேவையான படவில்லையை தெரிவுசெய்து கொண்டு இதே உரையாடல் பெட்டியிலுள்ள Linkஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து கொண்டு okஎன்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

2
நகலெடுத்து ஒட்டுவதன் வாயிலாககூடபடவில்லைகளை சேர்க்கமுடியும் அதற்காக நகலெடுக்கவிரும்பும் படவில்லை கோப்பினை திறந்துகொண்டு திரையின் மேலே முதன்மை கட்டளைபட்டையில் View > Slide Sorterஎன்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குகஅல்லது Slide Sorterஎனும் தாவிப்பொத்தானின் திரையை தோன்ற செய்திடுக பின்னர் நகலெடுத்திடவிரும்பும் படவில்லையை தெரிவுசெய்து கொண்டு திரையின் மேலே முதன்மை கட்டளைபட்டையில் Edit > Copyஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குகஅல்லது இந்த படவில்லையின் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Copyஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது திரையின் மேலே கருவிகளின் பட்டையில் Copyஎனும் உருவகருவிபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது தேவையான படவில்லையை தெரிவுசெய்து கொண்டு விசைப்பலகையில் Ctrl+Cஆகிய இரு விசைகளை சேர்த்து அழுத்துக இதன்பிறகு ஒட்டப்படவேண்டிய கோப்பில் புதியபடவில்லையினை திரையில் தோன்றிடசெய்திடுக பின்னர் திரையின் மேலே முதன்மை கட்டளைபட்டையில் View > Normal அல்லதுView > Slide Sorter என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குகஅல்லது Normalஅல்லது Slide Sorterஎனும் தாவிப்பொத்தானின் திரையை தோன்ற செய்திடுக பின்னர் ஒட்டிடவிரும்பும் படவில்லையை தெரிவுசெய்து கொண்டு திரையின் மேலே முதன்மை கட்டளை பட்டையில் Edit > Pasteஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குகஅல்லது இந்த படவில்லையின் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் Pasteஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது திரையின் மேலே கருவிகளின் பட்டையில் Paste எனும் உருவகருவிபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது தேவையான படவில்லையை தெரிவுசெய்து கொண்டு விசைப்பலகையில் Ctrl+Vஆகிய இரு விசைகளை சேர்த்து அழுத்துக உடன் நாம் தெரிவுசெய்துகொண்டு வந்த படவில்லை-யானது புதிய இடத்தில் ஒட்டப்பட்டுவிடும்
அதனை தொடர்ந்து திரையின் மேலே முதன்மை கட்டளைபட்டையில் View > Slide Sorterஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குகஅல்லது Slide Sorterஎனும் தாவிப்பொத்தானின் திரையை தோன்ற செய்திடுக பின்னர் தேவையான பட-வில்லையை தெரிவுசெய்து கொண்டு அப்படியே இடம்சுட்டியால் பிடித்து இழுத்து வந்து காலிபணியிடத்தில் விட்டிடுக
பின்னர் திரையின் மேலே முதன்மை கட்டளைபட்டையில் Insert > Duplicate Slideஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குகஅல்லதுபடவில்லையின் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் Duplicate Slideஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக
மேலும் சாதாரண படவில்லைகாட்சியில் சூழ்நிலைபட்டியலை தோன்றிடசெய்தபின்னர் அதில் Slide >Rename Slideஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது Slide Sorterஎனும் தாவிப்பொத்தானின் திரையில் சூழ்நிலைபட்டியலை தோன்றிடசெய்க

3

அதில்Rename Slideஎனும் வாய்ப்பினை தோன்றிடசெய்திடுக உடன்விரியும் Rename Slideஎனும் உரையாடல் பெட்டியில் படவில்லைக்கு வேறுபெயரை உள்ளீடுசெய்து கொண்டு okஎன்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
ஒருசில படவில்லைகளில் படித்து செய்தியை அறிந்து கொள்ளமுடியாத அளவிற்கு ஏராளமான அளவில் செய்திகள் குவியலாக இருக்கும் அந்நிலையில் படவில்லையின் செய்தியை மற்றொரு படவில்லைக்கு கொண்டுசென்றால் நன்றாக அமையும் என விரும்பிடுவோம் இந்நிலையில் திரையின் மேலே முதன்மை கட்டளைபட்டையில் Insert > Expand Slideஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக

4
அதுமட்டுமல்லாது படவில்லைகளின் காட்சிகளை உருவாக்கியபின்னர் அவைகள் ஒவ்வொன்றின் தலைப்பினை ஒட்டுமொத்தமாக தொகுத்து பட்டியலாக எந்தெந்த படவில்லையில் என்னென்ன செய்திகள் உள்ளன என காண்பிக்கச்செய்திடும் summary slidesஎனும் படவில்லையை உருவாக்கிடுவதற்காக திரையின் மேலே முதன்மை கட்டளை பட்டையில் Insert > Summary Slideஎன்றவாறு கட்டளைகளை சொடுக்குக

5
மிகமுக்கியமாக தேவையற்ற படவில்லையை நீக்கம் செய்வதற்காக சாதாரண காட்சிதிரையில் திரையின் மேலே முதன்மை கட்டளைபட்டையில்Edit > Delete Slideஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குகஅல்லது இந்த படவில்லையின் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் Slide> Delete Slideஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது தேவையான படவில்லையை தெரிவுசெய்து கொண்டு விசைப்பலகையில் Delete விசையை அழுத்துக

6
அதைவிட லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையில் இருந்தும் சுற்றெல்லையை கொண்டு படவில்லையை உருவாக்கிடலாம் இதற்காக ரைட்டர் திரையை தோன்றிடசெய்திடுக அதன் திரையின்மேலேமுதன்மை கட்டளைபட்டையில்File > Send > Outline to Presentation என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் புதிய படவில்லை உருவாக்கப்பட்டு இம்ப்பிரஸ் திரை தோன்றிடும் அதில் Expand Slide,Duplicating slidesஆகியவற்றில் கூறிய வழிமுறைகளை பின்பற்றிடுக

7
மேலும் இந்த படவில்லைகளின் ஒட்டுமொத்த தகவல்களை தானியங்கியாக உருவாக்கிடுவதற்காக திரையின்மேலேமுதன்மை கட்டளைபட்டையில்File > Send > AutoAbstract to Presentationஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றிடும் Create AutoAbstract எனும் உரையாடல் பெட்டியில் Included outline levels, Paragraphs per level.ஆகிய வாய்ப்புகளின் தேவையான நிலையை தெரிவு செய்து கொண்டு okஎன்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
லிபர் ஆஃபிஸ் ரைட்டரி்ன் கோப்பிலுள்ள படவில்லையின் புறவெளி அமைப்பை சரிசெய்திடுவதற்காக திரையின் மேலே முதன்மை கட்டளைபட்டையில் Edit > Copy என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குகஅல்லது இந்த படவில்லையின் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் Copyஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக
படவில்லையை வடிவமைப்பு சரிசெய்திடுவதற்காக திரையின் மேலே முதன்மை கட்டளைபட்டையில் Format > Page onஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குகஅல்லது இந்த படவில்லையின் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் Page Setupஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குகஅதன்பின்னர் தேவையான வாய்ப்பினை கொண்டு படவில்லையை வடிவமைத்தபின்னர் okஎன்றபொத்தானை தெரிவு செய்து சொடுக்குக அதனை தொடர்ந்து படவில்லைகளின் அனைத்து படவில்லைகள் அல்லது குறிப்பிட்ட படவில்லைகளை கொண்டு slide mastersஆக தொகுக்கலாம்

8
இதற்காக படவில்லை பட்டையில் Master Pagesஎனும் உருவகருவிபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Master Pagesஎனும் பகுதி திரையில் தோன்றிடும் அதில்தேவையான தொகுப்பினை தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் அனைத்து படவில்லைகளிலும் Apply to All Slidesஎனில் என்றவாய்ப்பினையும் குறிப்பிட்ட படவில்லைகளை மட்டும் எனில்Apply to Selected Slides எனும் வாய்ப்பினையும் தெரிவுசெய்து சொடுக்குக ஒரேசமயத்தில் படவில்லைகளில் பலர் பணிபுரியும்போது அவரவர்களின் கருத்துகளை அந்தந்த படவில்லைகளில் உள்ளீடு செய்து தோன்றிடுமாறு செய்திடலாம்

9
இதற்காக படவில்லையின் சாதாரண காட்சிதிரையில் திரையின் மேலே முதன்மை கட்டளைபட்டையில் Insert > Commentஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விசைப்பலகையில் Ctrl+Alt+Cஆகிய மூன்று விசைகளையும் சேர்த்து அழுத்துக உடன் விரியும் கருத்துரைபெட்டியில் நம்முடைய கருத்துகளை உள்ளீடு செய்து இதன் படவில்லையில் வெளியேஇடம்சுட்டியை வைத்து சொடுக்குக பின்னர் இந்த கருத்து பெட்டியை தெரிவுசெய்து உள்நுழைவுசெய்து கொண்டு மேலும் தேவையானவாறு மாறுதல்கள்செய்து கொள்ளலாம் ஒன்றிற்கு மேற்பட்டவர்கள் படவில்லையில் பணிபுரிந்துகொண்டிருக்கும்போது மற்றவருடைய கருத்திற்கு பதிலை அளிப்பதற்காக அவ்வாறான கருத்துபெட்டியை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது அதன்மீது இடம் சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும்சூழ்நிலைபெட்டியில் Replyஎன்ற வாய்ப்பினைதெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின் தேவையான பதிலுரையை உள்ளீடுசெய்து கொள்க

10
இதே கருத்துரை பெட்டியின்மீது சூழ்நிலைபட்டியை தோன்றிடசெய்து Deleteஎன்ற வாய்ப்பினை தெரிவுசெய்து கருத்து பெட்டியை நீக்கம் செய்து கொள்க
படவில்லைகளில் நம்முடைய குறிப்புரையை சேர்த்திடமுடியும் இதற்காக Notesஎனும் தாவியின் திரையை தோன்றிட செய்திடுக அல்லது திரையின் மேலே முதன்மை கட்டளைபட்டையில் View > Notes Pageஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் Click to add notesஎனும் பகுதியை சொடுக்குதல் செய்து படவில்லையில் நம்முடைய குறிப்புரையை தட்டச்சுசெய்திடுக இவ்வாறு தேவையான படவில்லைகளில் நம்முடைய குறிப்புரைகளை உள்ளீடு செய்துமுடித்தபின் படவில்லையின் சாதாரன காட்சிக்கு திரும்பிடுக
இந்த குறிப்புரைய வடிவமைப்பு செய்வதற்காக Notesஎனும் தாவியின் திரையை தோன்றிட செய்திடுக அல்லது திரையின் மேலே முதன்மை கட்டளைபட்டையில் View > Notes Page என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் குறிப்புரை திரையில் திரையின் மேலே முதன்மை கட்டளைபட்டையில் View > Master > Notes Master என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் திரையின் மேலே முதன்மை கட்டளைபட்டையில் Format > Page என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குகஅல்லது குறிப்புரைமீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் Page Setup என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் விரியும்Page Setup எனும் உரையாடல் பெட்டியில் இந்த குறிப்புரையில் தேவையானவாறு பக்கவடிவமைப்பு செய்து கொண்டு okஎன்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
Header area , Date and Time area, Footer area , Slide அல்லது page number areaஆகிய பகுதிகள் இந்த குறிப்புரை பகுதியில் தானாகவே வடிவமைப்பு செய்துகொள்வதற்காக Notesஎனும் தாவியின் திரையை தோன்றிட செய்திடுக அல்லது திரையின் மேலே முதன்மை கட்டளைபட்டையில் View > Notes Pageஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் குறிப்புரை திரையில் திரையின் மேலே முதன்மை கட்டளைபட்டையில் View > Master > Notes Master என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் திரையின் மேலே முதன்மை கட்டளைபட்டையில் Insert > Page Number அல்லது Insert > Date and Time என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Header and Footerஎன்ற உரையாடல்பெட்டி திரையில் தோன்றிடும் அதில் Notes and handoutஎனும் தாவியின் திரையை தோன்றிடசெய்திடுக பின்னர் இந்த திரையில் Header , Date and Time , Footer area , Slide அல்லது page number ஆகிய தேர்வுசெய்வாய்ப்புகளை தெரிவுசெய்துகொண்டு தேவையான தகவல்களை உள்ளீடுசெய்து கொண்டு Apply to Allஎன்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

11
இதே குறிப்புரையை தேவையெனில் அச்சிட்டு பெறலாம் இதற்காக இதே படவில்லை திரையின் notesஎனும் திரையின் மேலே முதன்மை கட்டளை பட்டையில் File > Print என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது Ctrl+Pஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக உடன் Print எனும் உரையாடல் பெட்டிதோன்றிடும் அதில் Generalஎனும் தாவிபொத்தானின் திரையை தோன்றசெய்து அதில் Print > Documentஎனும் கீழிறங்கு பட்டியலில் Notesஎன்பதை தெரிவுசெய்து கொண்டு அச்சிடுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் தெரிவுசெய்து கொள்க இறுதியாக okஎன்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இதையே PDFஆக பெறுவதற்காக இதே notesஎனும் திரையின் மேலே முதன்மை கட்டளை பட்டையில் File > Export as PDF என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் PDF Optionsஎனும் உரையாடல் பெட்டிதோன்றிடும் அதில் Generalஎனும் தாவிபொத்தானின் திரையை தோன்றசெய்து அதில் தேவையானவாறு அனைத்து வாய்ப்புகளையும் தெரிவுசெய்து கொள்க இறுதியாக Exportஎன்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

12
Handout எனும் விளக்கவுரையை படவில்லையில் சேர்த்திடலாம்இதற்காக திரையின் மேலே முதன்மை கட்டளை பட்டையில் View > Handout Page என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லதுHandout எனும் தாவியின் திரையை தோன்றிட செய்திடுக இதனை எத்தனை படவில்லைகளில் சேர்க்கவிருக்கின்றோம் என thumbnail எண்ணிக்கையை தெரிவுசெய்து கொள்க பின்னர் திரையின் மேலே முதன்மை கட்டளை பட்டையில் Format > Page என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லதுHandout பகுதியில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில்Slide > Page Setup என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் Page Setupஎனும் உரையாடல் பெட்டியில்paper size, orientation (portrait or landscape), margins, and other print options. ஆகியவற்றில் தேவையானவாறு அமைத்து கொண்டு okஎன்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
இதே Handout ஐஅச்சிடுவதற்காக இதே Handout திரையின் மேலே முதன்மை கட்டளை பட்டையில் File > Print என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது Ctrl+Pஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக உடன் Print எனும் உரையாடல் பெட்டிதோன்றிடும் அதில் Generalஎனும் தாவிபொத்தானின் திரையை தோன்றசெய்து அதில் Print > Documentஎனும் கீழிறங்கு பட்டியலில் Handout என்பதை தெரிவுசெய்து கொண்டு அச்சிடுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் தெரிவுசெய்து கொள்க இறுதியாக okஎன்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இதையே PDFஆக பெறுவதற்காக இதே Handout எனும் திரையின் மேலே முதன்மை கட்டளை பட்டையில் File > Export as PDF என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் PDF Optionsஎனும் உரையாடல் பெட்டிதோன்றிடும் அதில் Generalஎனும் தாவிபொத்தானின் திரையை தோன்றசெய்து அதில் தேவையானவாறு அனைத்து வாய்ப்புகளையும் தெரிவுசெய்து கொள்க இறுதியாக Exportஎன்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

லிபர் ஆஃபிஸ் இம்பிரஸ்-5.2 தொடர்- 12.படவில்லையில் விரிதாள் வரைபடம் உரை போன்றவைகளை உள்பொதிந்துஇணைப்பு செய்தல்

OLEஎன சுருக்கமாக அழைக்கப்படும் பொருட்களை இணைத்தலும் உட்பொதிதலும்(Object Linking and Embedding) என்பது ஒரு இம்பிரஸில் லிபர் ஆஃபிஸின் விரிதாட்கள் ,வரைபடங்கள், உருவப்படங்கள்.கணிதசூத்திரங்கள், உரை போன்றவைகளை படவில்லைக்குள் இணைத்தலுக்கும் உட்பொதிதலுக்கும் அனுமதிக்கின்றஒரு மென்பொருள் தொழில்நுட்பமாகும் இந்த OLEதொழில்நுட்பத்தின் வாயிலாக அவ்வாறு இணைக்கபட்டு உள்பொதியபட்ட பொருட்களை தேவையானவாறு அவைகளில் திருத்தம் செய்தல் தேவையற்றவைகளை நீக்கம் செய்தல் போன்ற பணிகளை விரைவாகவும் எளிதாகவும் செயற்படுத்திடமுடியும் இந்த OLEதொழில்நுட்பசெயல்களை பயன்படுத்தி புதிய கோப்பினை உருவாக்கிடுதல்அல்லது ஏற்கனவே நடப்பில் உள்ள கோப்பினை திருத்தம் செய்தல் ஆகியபணிகளை செயற்படுத்திடமுடியும்

இந்த OLEதொழில்நுட்பத்தின் வாயிலாக பொருட்களை இணைத்து உள்பொதியவிரும்பிடும் ஒரு படவில்லையை தெரிவுசெய்துகொள்க பின்னர் திரையின் மேலே கட்டளை பட்டையில் Insert > Object > OLE Objectஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து செயற்படுத்திடுக உடன் திரையில் Insert OLE Objectஎன்ற சிறுஉரையாடல்பெட்டியொன்று தோன்றிடும்
1
இதனை புதியதாக உருவாக்கவேண்டுமெனில் Create new எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து கொண்டுobject type என்பதன்கீழுள்ள லிபர் ஆஃபிஸின் விரிதாட்கள் ,வரைபடங்கள், உருவப்படங்கள்.கணிதசூத்திரங்கள், உரை ஆகியவைகளில் இணைத்து உள்பொதியவிரும்பும் வகையை மட்டும் தெரிவுசெய்து கொண்டு OKஎன்ற பொத்தானை சொடுக்குக உடன் புதியOLE பொருட்கள் உருவாக்கப்பட்டு திருத்தம் செய்வதற்கான கருவிகளுடன் தயாராக தோன்றிவிடும் நாம் ஏற்கனவே இந்த OLE பொருட்களின் கோப்பினை உருவாக்கியிருந்தால் அதனை படவில்லைக்குள் இணைத்து உள்பொதிய விரும்பிடும்போது இதே Insert OLE Objectஎன்ற சிறுஉரையாடல்பெட்டியை மேலேகூறிய நடைமுறையை பின்பற்றி திரையில் தோன்றசெய்திடுக பின்னர் அதிலுள்ள create from file எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குகஉடன் விரியும் File என்பதன்கீழ் நம்முடைய கோப்பு இருக்குமிடத்தை தேடிபிடித்து தெரிவுசெய்து கொள்க பின்னர் Link to fileஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து கொண்டு OKஎன்ற பொத்தானை சொடுக்குக உடன் நாம் தெரிவுசெய்தOLE பொருட்கள் படவில்லைக்குள் இணைத்து உள்பொதியப்பட்டு அதற்கான கருவிகளுடன் திருத்தம் செய்வதற்காக தயாராக தோன்றிவிடும்
2
இவ்வாறு இணைக்கப்பட்ட OLE பொருட்களில் நாம் விரும்பியவாறு திருத்தம் செய்திடுவதற்காக படவில்லையில் உள்ள நாம் திருத்தம் செய்திடவிரும்பும் OLE பொருட்களின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானைஇருமுறை சொடுக்குக உடன் நாம் திருத்தம் செய்வதற்கு தேவையான கருவிகளுடன் திரைதோற்றம் மாறியமைந்திடும் பிறகுஇந்த OLE பொருட்களில் தேவையானவாறு திருத்தம் செய்து கொண்டபின்னர் இந்த OLE பொருட்களுக்கு வெளியே இடம்சுட்டியை வைத்து சொடுக்குக
3.
இவ்வாறே லிபர் ஆஃபிஸ் கால்க்கின் விரிதாள் கோப்பு ஒன்றினை படவில்லையில் இணைத்து உள்பொதிந்தபின்னர் அதனை விரும்பும் இடத்திற்கு நகர்த்தி சென்று மிகச்சரியாக அமையுமாறு செய்திடலாம் அல்லது அதன் அளவை படவில்லையின் அளவிற்கு ஏற்ப மிகப்பொருத்தமாக அமைந்திடுமாறு சுருக்கி அல்லது விரியச்செய்து அமைத்திடலாம் மேலும் வழக்கமான லிபர் ஆஃபிஸ்கால்க்கில் செய்கின்ற அனைத்து பணிகளையும் இந்த படவிலைக்குள் இணைத்து உள்பொதிந்த விரிதாளில் செய்திடலாம் அதாவது புதிய விரிதாளினை உள்ளிணைத்தல் ,தேவையற்ற விரிதாளினை நீக்கம் செய்தல் , இந்தவிரிதாளிற்கு வேறு பெயரிடுதல், நகலெடுத்து ஒட்டுதல், வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்தல் ,விரிதாளிற்குள் தரவுகளை உள்ளீடுசெய்தல், விரிதாளினை வடிவமைத்தல், விரிதாளில் கலண்களை சேர்த்தல், நீக்கம்செய்தல் வி்ரிதாளின் நெடுவரிசைகளையும் கிடைவரிசைகளையும் தேவையானவாறு சேர்த்தல், நீக்கம் செய்தல், பிரித்தல் ஆகிய பல்வேறு வழக்கமான பணிகளை லிபர் ஆஃபிஸின் கால்க்கின் விரிதாளில் பணிபுரிவதைபோன்றே அனைத்து பணிகளையும் செயற்படுத்திடமுடியும்
4
மேலும் இந்த லிபர் ஆஃபிஸ் இம்பிரஸின் படவில்லையில் தேவையான வரைபடத்தை இணைத்து உள்பொதிவதற்காக பதிய படவில்லையாயின் Insert Chartஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்க அல்லது திரையின் மேலே கட்டளை பட்டையில்Insert > Chart என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக அல்லது செந்தர கருவிகளின் பட்டையில் Chartஎன்றவாறு உள்ள உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் வரைபடம் ஒன்று இந்த படவில்லைக்குள் இணைத்து உள்ளிணைக்கப்பட்டுவிடும் அதன்பின்னர் படவில்லையில் உள்ள இந்த வரைபடத்தை பிடித்து தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து நாம் விரும்பும் வரைபடவகையாக மாற்றியமைத்தல், தேவையற்ற வரைபடத்தினை நீக்கம் செய்தல் , இந்தவரைபடத்திற்கு வேறு பெயரிடுதல், நகலெடுத்து ஒட்டுதல், வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்தல் , சரியான இடத்தில் அமைவுசெய்தல் பின்புல வண்ணத்தை நாம்விரும்பியவாறு மாற்றியமைத்தல் வரைபடத்தை வடிவமைத்தல் ஆகிய பல்வேறு வழக்கமான வரைபடத்தில் பணிபுரிவதைபோன்றே அனைத்து பணிகளையும் செயற்படுத்திடமுடியும்
அதுமட்டுமல்லாது கானொளி படங்களையும் இசைகளையும் இந்த லிபர் ஆஃபிஸ் இம்பிரஸின் படவில்லையில் உள்ளிணைத்திடுவதற்காக பதிய படவில்லையாயின் Insert Movieஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது திரையின் மேலே கட்டளை பட்டையில்Insert > Movie and Sound என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Movie and Sound எனும் உரையாடல் பெட்டிதிரையில் தோன்றிடும் அதில் தேவையானபல்லூடக கோப்பினை தெரிவுசெய்துகொண்டுOpen என்ற பொத்தானை சொடுக்குக உடன் நாம் தெரிவுசெய்த பல்லூடகம் இணைக்கப்பட்டு அதற்கான கருவிகளுடன் திருத்தம் செய்வதற்காக தயாராக தோன்றிவிடும் இந்நிலையில் இந்த பல்லூடகங்களின் கோப்பு இணைக்கப்பட்டுமே இருக்கும் உள்பொதியபடாது என்ற செய்தியை மனதில் கொள்க இந்த பல்லூடகம் உள்பொதியபட வேண்டுமெனில் திரையின் மேலே கட்டளை பட்டையில்Tools > Gallery என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக அல்லது திரையின் மேலே கட்டளை பட்டையில்View > Toolbars > Media Playback என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக அல்லது திரையின் மேலே கட்டளை பட்டையில்Tools > Media Player என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக பிறகு தோன்றிடும் பல்லூடக கருவிகளின் பட்டையில் தேவையானபல்லூடக கருவியின் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
5
அதைவிட கணித சூத்திரங்களை படவில்லையில் இணைத்து உள்பொதிந்திடுவதற்காக திரையின் மேலே கட்டளை பட்டையில்Insert > Object > Formulaஎன்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக உடன் கணிதசூத்திரம் படவில்லைக்குள் இணைக்கப்பட்ட உள்பொதியப்பட்டுவிடும்
மிகமுக்கியமாக உரை, இதர பொருட்கள் போன்றவைகளை படவில்லைக்குள் இணைத்து உட்பொதிந்திடுவதற்காக திரையின் மேலே கட்டளை பட்டையில் Insert > Fileஎன்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக உடன் படவில்லையுடன் ஒத்தியங்கிடும் கோப்புடன் உரையாடல் பெட்டி யொன்று தோன்றிடும் அதில் தேவையான கோப்பினை தெரிவுசெய்து சொடுக்குக

லிபர் ஆஃபிஸ் இம்பிரஸ்-5.2 தொடர்-11-வரைகலை பொருட்களை வடிவமைத்தல்தொடர்ச்சி

Area எனும் உரையாடல் பெட்டியின் படித்தரம்(Gradients) எனும் தாவிபொத்தானின் திரையில் நடப்பில் உள்ள படித்தரத்தை(Gradients) திருத்தம் செய்யலாம் அல்லது நாம் விரும்பும் நம்முடைய சொந்த படித்தரத்தை(Gradients) உருவாக்கலாம் லிபர் ஆஃபிஸில் ஏராளமான அளவில் இவைகள் முன்கூட்டியே கட்டமைக்கப்பட்டுள்ளன இவைகளுள் வாடிக்கையாளர் விரும்பியவாறு உருவாக்கிடவும் அல்லது மாறுதல்கள் செய்திடவும் Properties என்பதன் அருகில் உள்ள Type என்பதன் Linear, Axial, Radial, Ellipsoid, அல்லதுSquareஆகிய வாய்ப்புகளுடன் கூடிய கீழிறங்கு பட்டியலை விரியச்செய்க அல்லது தேவையான படித்தர(Gradient) வகையை முன்காட்சி பெட்டியில் தோன்றச்செய்க பின் இவற்றுள் தேவையானதை மட்டும் தெரிவுசெய்து கொண்டு Add எனும் பொத்தானை சொடுக்குக தொடர்ந்து New Gradient என்பதில் Okஎனும் பொத்தானை சொடுக்குதல் செய்து சேமித்து கொள்க அதனை தொடர்ந்துArea எனும் உரையாடல்பெட்டியில் Okஎனும் பொத்தானை சொடுக்குதல் செய்து இந்த உரையாடல் பெட்டியை மூடிவெளியேறுக

11.1
இவ்வாறு நம்மால் உருவாக்கப்பட்ட படித்தரத்தை(Gradients) மற்ற படவில்லைகளுக்கும் கொண்டுசெல்லவேண்டுமெனில் திரையின் மேலே கருவிகளின் பட்டையிலுள்ள Save Gradients Listஎனும் உருவப்பொத்தானை சொடுக்குதல் செய்தபின் தோன்றிடும் Save as எனும் உரையாடல் பெட்டியில் தேவையானவாறு அமைத்து சேமித்துகொள்க நாம் ஏற்கனவே மேலே கூறியவாறு சேமித்த படித்தரத்தை(Gradients) திரையில் கொண்டுவருவதற்காக திரையின் மேலே கருவிகளின் பட்டையிலுள்ள Load Gradients Listஎனும் உருவப்பொத்தானை சொடுக்குக உடன் விரியும் உரையாடல் பெட்டியில் தேவையான படித்தரத்தை(Gradient) மட்டும் தெரிவுசெய்துகொண்டு Openஎனும் பொத்தானை சொடுக்குக

11.2
அதுமட்டுமல்லாமல் மேம்பட்ட படித்தர(Gradients) கட்டுப்பாடுகளை கொண்டுவந்து செயல்படுத்திடு-வதற்காக முதலில் தேவையான வரைகலை பொருளை தெரிவுசெய்து கொள்க பின்னர் திரையின் மேலே கட்டளை பட்டையில் View => Toolbars => Mode =>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Mode எனும் கருவிப்பட்டை திரையில் தோன்றிடும் மேலும் Area எனும் உரையாடல் பெட்டியின் படித்தரம்(Gradients) எனும் தாவிபொத்தானின் திரையை தோன்றிட செய்திடுக அதனை தொடர்ந்து Mode எனும் கருவிப்பட்டையில் படித்தர(Gradient) உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் தெரிவுசெய்த வரைகலைபொருளில் எந்த வண்ணத்திலிருந்து எந்த வண்ணத்தை மாற்றவிருக்கின்றோம் என From and Toஎன்றவாறுபடித்தரம்(Gradients) எனும் தாவிபொத்தானின் திரையில் பண்பியல்புகள்(Properties) என்பதில் காண்பிக்கும் அதன்பின்னர் இதிலுள்ள Linear gradients,Axial gradients,Radial gradients, Ellipsoid gradients,Square gradientsஆகிய இந்த படித்தர(Gradient) வகைக்கேற்ப சரிசெய்து கொள்க பின் இவ்வாறான அமைவில் திருப்தியுற்றால் வரைகலை பொருளிற்கு வெளியே இடம்சுட்டியை வைத்து சொடுக்குக

11.3

தொடர்ந்து இதே Area எனும் உரையாடல் பெட்டியின் வரிவேய்தல் (Hatching) எனும் தாவிப்பொத்தானின் திரையில் நடப்பில் உள்ள வரிவேய்தலில் (Hatching) திருத்தம் செய்யலாம் அல்லது நாம் விரும்பும் நம்முடைய சொந்த வரிவேய்தலை(Hatching)உருவாக்கலாம் இதற்காக முன்கூட்டியே கட்டமைக்கப்பட்டு பயன்படுத்த தயார்நிலையில் உள்ள தேவையான படித்தர(Gradient) வகையை முன்காட்சி பெட்டியில் தோன்றச்செய்க பின் அதிலுள்ள கோடுகளின் அமைவுகளில் தேவையானதை மட்டும் தெரிவுசெய்து கொண்டு Add எனும் பொத்தானை சொடுக்குக தொடர்ந்து New Hatching என்பதில் Okஎனும் பொத்தானை சொடுக்குதல் செய்து சேமித்து கொள்க பின்னர்Area எனும் உரையாடல்பெட்டியில் Okஎனும் பொத்தானை சொடுக்குதல் செய்து இந்த உரையாடல் பெட்டியை மூடிவெளியேறுக

11.4

இவ்வாறு நம்மால் உருவாக்கப்பட்ட வரிவேய்தலை(Hatching) மற்ற படவில்லைகளுக்கும் கொண்டுசெல்லவேண்டுமெனில் திரையின் மேலே கருவிகளின் பட்டையிலுள்ள Save Hatches Listஎனும் உருவப்பொத்தானை சொடுக்குதல் செய்கபின்னர் தோன்றிடும் Save asஎனும் உரையாடல் பெட்டியில் தேவையானவாறு அமைத்துசேமித்துகொள்க நாம் ஏற்கனவே மேலே கூறியவாறு சேமித்த வரிவேய்தலை(Hatching) திரையில் கொண்டுவருவதற்காக திரையின் மேலே கருவிகளின் பட்டையிலுள்ள Load Hatches Listஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் உரையாடல் பெட்டியில் தேவையான வரிவேய்தலை(Hatching) மட்டும்தெரிவுசெய்துகொண்டு Openஎனும் பொத்தானை சொடுக்குக

11.5

மேலும் இதே Area எனும் உரையாடல் பெட்டியின் துன்மிபடம் (Bitmap) எனும் தாவிபொத்தானின் திரையில் துன்மிபட(Bitmap) வகையை Blankஎன தெரிவுசெய்து கொள்க பின்னர் Properties என்பதற்கும் கீழ் Pattern Editorஎன்பதற்கும் கீழுள்ள காலியான சதுரங்களாலான புள்ளிகளை (squares (pixels)) தெரிவு செய்து கொண்டு Foreground color: Background Color: ஆகியவற்றின் கீழிறங்கு பட்டியிலிருந்து இந்த துன்மிபடத்திற்கான பின்புல வண்ணம் முன்புலவண்ணம் ஆகியவற்றை தேவையானவாறு தெரிவுசெய்து கொண்டு முன் காட்சி திரையில் இவைகளை கண்டு திருப்தியுற்றால் Add எனும் பொத்தானை சொடுக்குக தொடர்ந்து Open எனும் உரையாடல் பெட்டியில் நம்முடைய துன்மிபடத்திற்கு ஏற்கனவே இயல்புநிலையில் உள்ள Bitmap 1, Bitmap 2போன்றவாறான பெயர்களை தவிர்த்து நல்ல பெயரினை உள்ளீடு செய்து கொண்டு Okஎனும் பொத்தானை சொடுக்குக இவ்வாறு நம்மால் உருவாக்கப்பட்ட துன்மி படத்தை மேலும் நாம் விரும்பியவாறு மாறுதல்கள் செய்துகொள்ளமுடியும் அதற்காக இதே Area எனும் உரையாடல் பெட்டியின் துன்மிபடம் (Bitmap) எனும் தாவிபொத்தானின் திரையில் துன்மிபட(Bitmap) வகையில் தேவையானதை மட்டும் தெரிவு செய்து கொண்டு Modifyஎனும் பொத்தானை சொடுக்குக பின்னர் தேவையானவாறு மாறுதல்கள் செய்து கொண்டு Open எனும் உரையாடல் பெட்டியில் நம்முடைய துன்மிபடத்திற்கு வேறொரு நல்ல பெயரினை உள்ளீடு செய்து கொண்டு Okஎனும் பொத்தானை சொடுக்குக அதுமட்டுமல்லாது வேறு கோப்புகளில் உள்ள துன்மிபடத்தையும் உள்ளே கொண்டுவரமுடியும் இதற்காக இதே Area எனும் உரையாடல் பெட்டியின் துன்மிபடம் (Bitmap) எனும் தாவிபொத்தானின் திரையில் importஎனும் பொத்தானை சொடுக்குக உடன் விரியும் Open எனும் உரையாடல் பெட்டியில் தேவையான துன்மிபடத்தை தேடிபிடித்து தெரிவுசெய்துகொண்டு Okஎனும் பொத்தானை சொடுக்குக
இவ்வாறு நம்மால் உருவாக்கப்பட்ட துன்மிபடத்தை(Bitmap) மற்ற படவில்லைகளுக்கும் கொண்டுசெல்லவேண்டுமெனில் திரையின் மேலே கருவிகளின் பட்டையிலுள்ள Save Bitmap Listஎனும் உருவப்பொத்தானை சொடுக்குதல் செய்கபின்னர் தோன்றிடும் Save asஎனும் உரையாடல் பெட்டியில் தேவையானவாறு அமைத்துசேமித்துகொள்க நாம் ஏற்கனவே மேலே கூறியவாறு சேமித்த துன்மிபடத்தை(Bitmap) திரையில் கொண்டுவருவதற்காக திரையின் மேலே கருவிகளின் பட்டையிலுள்ள Load Bitmap Listஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் உரையாடல் பெட்டியில் தேவையான துன்மிபடத்தை(Bitmap) தெரிவுசெய்துகொண்டு Openஎனும் பொத்தானை சொடுக்குக
அதனைதொடர்ந்து படவில்லையிலுள்ள வரைகலை பொருளை தெரிவுசெய்துகொண்டு Line and Filling எனும் கருவிப்பட்டையில் நிழலுரு(Shadow) எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இயல்புநிலையிலுள்ள நிழலுரு(Shadow) உருவாகிவிடும் மேலும் நாம் விரும்பியவாறு இதே Area எனும் உரையாடல் பெட்டியின் நிழலுரு(Shadow) எனும் தாவிபொத்தானின் திரையில் உருவாக்கி கொள்ளலாம் அதற்காக படவில்லையிலுள்ள வரைகலை பொருட்களில் தேவையானதை தெரிவுசெய்துகொண்டு திரையின் மேலே கட்டளைபட்டையில் Format=> Area=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது அந்த பொருளின் மீது இடம்சுட்டியை வைத்துகொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் Area எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Area உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அதில் நிழலுரு(Shadow) எனும் தாவிபொத்தானின் திரையை தோன்றிட செய்திடுக பின்னர் Properties என்பதற்கு கீழுள்ள Use shadowஎனும் தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்து கொண்டுPosition, Distance ,Color, Transparency ஆகியவைகளை தேவையானவாறு அமைத்துகொண்டு Okஎனும் பொத்தானை சொடுக்குக

11.6
அதுமட்டுமல்லாது படவில்லையிலுள்ள வரைகலை பொருட்களில் தேவையானதை தெரிவுசெய்துகொண்டு திரையின் மேலே கட்டளைபட்டையில் Format=> Area=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது அந்த பொருளின் மீது இடம்சுட்டியை வைத்துகொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் Area எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Area எனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அதில் ஒளியூடுருவுதல்(Transparency) எனும் தாவிப்பொத்தானின் திரையை தோன்றிட செய்திடுக பின்னர் அதில் Transparency modeஎன்பதன் கீழுள்ள Transparency எனும் தேர்வுசெய்பெட்டியைதெரிவுசெய்துகொண்டு அதனருகிலுள்ள கீழிறங்கு பட்டியில் அதன் அளவை தெரிவுசெய்துகொள்க மேலும் இதற்கு கீழுள்ள கீழுள்ள gradientஎனும் தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்து கொண்டு அதனுடைய பல்வேறு வாய்ப்புகளை தேவையானவாறு தெரிவுசெய்துகொண்டு Okஎனும் பொத்தானை சொடுக்குக

11.7
மேலும் படவில்லையிலுள்ள வரைகலை பொருட்களின் உரையை வடிவமைத்திட அவ்வாறானதை தெரிவுசெய்துகொண்டு திரையின் மேலே கட்டளைபட்டையில் Format => Text=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது அந்த பொருளின் மீது இடம் சுட்டியை வைத்துகொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் உரை(Text) எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் உரை(Text) எனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அதில் உரை(Text) எனும் தாவிபொத்தானின் திரையை தோன்றிட செய்திடுக இதில் Text என்பதன் கீழுள்ள Fit width to text, Word wrap text in shape, Fit to frameபோன்றவைகளின் தேர்வுசெய்பெட்டிகளில் தேவையானவைகளை தெரிவுசெய்துகொண்டு Okஎனும் பொத்தானை சொடுக்குக

11.8

இந்த உரையை அசைவூட்டம் செய்திடமுடியும் அதற்காக இதே உரை(Text) எனும் உரையாடல் பெட்டியில் Text Animationஎனும் தாவிபொத்தானின் திரையை தோன்றிடசெய்திடுக இந்த திரையில் Effects என்பதனருகிலுள்ள கீழிறங்கு பட்டியிலின் Blink,Scroll inபோன்றவற்றில் தேவையான அசைவூட்டத்தை மட்டும் தெரிவுசெய்துகொண்டு எந்த திசையில் அசைவூட்டம் செயல்படவேண்டும் என்பதற்காக Directionஎன்பதற்கு அருகிலுள்ள நான்கு திசைகளில் ஒன்றினை தெரிவுசெய்து கொண்டு Okஎனும் பொத்தானை சொடுக்குக

11.9

இருவரைகலை பொருளை ஒன்றுடன் மற்றொன்றை இணைப்பதற்காக இணைப்பான்(Connector) என்பது பயன்படுகின்றது இதனை செயற்படுத்துவதற்காக தேவையான வரைகலை பொருட்களை தெரிவுசெய்து கொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில்இணைப்பான்(Connector)எனும் வாய்ப்பினை தெரிவுசெய்துசொடுக்குக உடன் விரியும் இணைப்பான்(Connector) எனும் உரையாடல் பெட்டியில் என்தன் கீழிறங்கு பட்டியலில் தேவையான இணைப்பின் வகையை தெரிவுசெய்துகொண்டபின் Line skew, Line spacingஆகியவற்றின் கீழுள்ளவைகளில் தேவையானவற்றை தெரிவுசெய்துகொண்டு Okஎனும் பொத்தானை சொடுக்குக

11.10

உருவப்படத்தின் பாணிகளை அமைத்திடுவதற்காக முதலில் தேவையான வரைகலை பொருளை தெரிவுசெய்துகொள்க பின்னர் திரையின் மேலே கட்டளைபட்டையில் Format => Styles and Formatting=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்துசொடுக்குக அல்லது வரைகளை பொருளின் மீது இடம்சுட்டியை வைத்துகொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் Styles and Formatting எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விசைப்பலகையில் F11 எனும் செயலி விசையை அழுத்துக உடன் Styles and Formatting எனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அதில் New Style என்பதை தெரிவுசெய்து சொடுக்குக

11.11

அதற்கு பதிலாக இந்த உரையாடல் பெட்டியின் தலைப்பட்டையில் Image Stylesஎனும் உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது வரைகலை பொருளின் மீது இடம் சுட்டியை வைத்துகொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் New எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Image Stylesஎனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் இதில் Organizerஎனும் தாவிப்பொத்தானின் திரையை தோன்றசெய்து அதில் Style என்பதன் கீழ் name.என்பதில் இதற்கொரு சரியான பெயரையும் Linked withஎன்பதன் கீழிறங்கு பட்டியலிலிருந்து தேவையான இணைப்பையும் Categoryஎன்பதில் தேவையான வகையையும் தெரிவுசெய்து அமைத்து கொள்க மேலும் Font, Font Effects, Indents & Spacing, Alignment, Tabs, Asian Typography,Dimensioning,Text, Text Animation, Connector, Line, Area, Shadowing, Transparencyஆகிய தாவிப்பொத்தான்களின் திரைகளில் தேவையானவாறு கட்டமைவுசெய்துகொண்டு Okஎனும் பொத்தானை சொடுக்குக

11.12
ஏற்கனவே இவ்வாறு புதிய பாணியை கட்டமைத்த வரைகலை பொருளை தெரிவுசெய்து அதில் தேவையானவாறு அதன் தோற்றத்தை மாற்றியமைத்துகொள்க பின்னர் Styles and Formatting எனும் உரையாடல் பெட்டியை திரையில் தோன்றசெய்திடுக அதில் New Style from Selection எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக உடன் Create Style எனும் உரையாடல் பெட்டி தோன்றிடும் அதில் Style Name என்பதில் இதற்கு புதிய பெயரை உள்ளீடு செய்துகொண்டு Okஎனும் பொத்தானை சொடுக்குக

11.13

வரைகலை பொருளின் பாணியை மாற்றியமைத்திடுவதற்காக Styles and Formatting எனும் உரையாடல் பெட்டியை திரையில் தோன்றசெய்திடுக அதில் மாற்றியமைத்திடவிரும்பும் பாணியை தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Modifyஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்துசொடுக்குக பின்னர் அந்த பாணியில் தேவையான மாறுதல்கள் செய்து கொண்டு Okஎனும் பொத்தானை சொடுக்குக
இவ்வாறு மாறுதல்கள் செய்தவை நம்முடைய வரைகலை பொருளில் நிகழ்நிலை படுத்திடுவதற்காக தேவையான வரைகலை பொருளை தெரிவுசெய்துகொண்டு Styles and Formatting எனும் உரையாடல் பெட்டியை திரையில் தோன்றசெய்திடுக அதில் நிகழ்நிலை படத்திடவிரும்பும் பாணியை தெரிவுசெய்து கொண்டு Update Styleஎனும் உருவப் பொத்தானை சொடுக்குக
இந்த பாணியை வரைகலைபொருளில் செயல்படுத்திடுவதற்காக Styles and Formatting எனும் உரையாடல் பெட்டியை திரையில் தோன்றசெய்திடுக அதில் Image Stylesஎனும் உருவப் பொத்தானை சொடுக்குக பின்னர் தேவையான வரைகலை பொருளை தெரிவுசெய்துகொண்டு நாம் விரும்பும் mage Styles எனும் பெயரை தெரிவுசெய்து கொண்டு சுட்டியின் பொத்தான இருமுறை சொடுக்குக அல்லது Fill Format Modeஎனும் உருவப் பொத்தானை சொடுக்குக உடன் இடம்சுட்டியானது சிறிய வண்ணம் கொட்டும் வாளிபோன்ற உருவில் மாறிவிடும் அதனை தேவையானபொருளில் கொண்டுசென்று வைத்து சுட்டியை சொடுக்குக முடிந்தபின்னர் இதே Fill Format Modeஎனும் உருவப் பொத்தானை சொடுக்குக
நாம் உருவாக்கிய பாணியை நீக்கம் செய்துகொள்வதற்காகStyles and Formatting எனும் உரையாடல் பெட்டியை திரையில் தோன்றசெய்திடுக அதில் நீக்கம்செய்திடவிரும்பும் பாணியை தெரிவுசெய்து கொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Deleteஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்துசொடுக்குக உடன் நாம் நீக்கம் செய்திட விரும்பும் செயலை ஆமோதிக்கின்றோமா என் பதற்கான உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதில் Yesஎனும் பொத்தானை சொடுக்குக.ஆனால் முன்கூட்டியே கட்டமைக்கப்பட்டுள்ள பாணியெதையும் இவ்வாறு நீக்கம் செய்திடமுடியாது

லிபர் ஆஃபிஸ் இம்பிரஸ்-5.2 தொடர்-10-வரைகலை பொருட்களை வடிவமைத்தல்

லிபர் ஆஃபிஸ் இம்பிரஸில் கைவசம் தயாராக உள்ள வரைகலை கருவிகளை கொண்டு இதனுடைய படவில்லையிலுள்ள ஒவ்வொரு வரைகலை பொருளும் அதனுடைய அளவு, சுழற்சி, நிலை ஆகியஅமைவை தவிர கோடு, உரை, காலி இடத்தை நிரப்புதல் ஆகியசெயல்களை வரையறுக்கும் ஏராளமான பண்புக்கூறுகளால் தீர்மாணிக்கபடுகின்றது இந்த பண்புக்கூறுகளே ஒரு வரைகலையின் பாவணையையும் வழங்குகின்றது இந்த தொடரில் நாமே நம்முடைய கைகளால் முயன்று எவ்வாறு இந்த வரைகலை பாவணைகளை உருவாக்குவது ,செயற்படுத்துவது,மாறுதல்கள் செய்வது தேவையற்றதை நீக்கம் செய்வது என காணலாம்
கோடுகளை வடிவமைத்தல்
படவில்லையில் உள்ள ஒரு வரைகலைப் பொருளின் சுற்றெல்லையின் அமைப்பையேஇந்த கோடுகள் தீர்மாணிக்கின்றன இந்த கோடுகளானது கண்ணிற்கு புலப்படும் கோடுகள், விட்டுவிட்டு செல்லும் கோடுகள், கண்ணிற்கு புலப்படாத கோடுகள் ஆகிய பலவகைகளில் உள்ளன மேலும் இந்த கோடுகளின் அகலத்தையும் வண்ணத்தையும் வடிவமைப்பு செய்திடலாம் இந்த கோடுகளை வடிவமைப்பு செய்வதற்காக Line and Filling எனும் கருவிகளின் பட்டை பேருதவியாய் உள்ளன
இந்த Line and Filling எனும் கருவிகளின் பட்டை திரையில் தோன்றிடவில்லையெனில் திரையின் மேலே கட்டளைபட்டையில் View => Toolbars => Line and Filling =>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக
அதனை தொடர்ந்து வடிவமைப்பு செய்திடவிரும்பும் கோட்டினை தெரிவுசெய்துகொண்டு Line and Filling எனும் கருவிகளின் பட்டையிலுள்ள கருவிகளுள் நாம் விரும்பும் கருவியை மட்டும் தெரிவு செய்து வடிவமைப்பு செய்துகொள்ளலாம் மேலும் நாம் வடிவமைப்பு செய்திட விரும்பும் கோட்டினை மட்டும் தெரிவு செய்து கொண்டு திரையின் மேலே கட்டளைப்பட்டையில் Format => Line=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குக அல்லது வடிவமைப்பு செய்திட விரும்பும் கோட்டின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Lineஎனும் கட்டளையை மட்டும் தெரிவு செய்து சொடுக்குக அல்லது திரையின் மேலே Line and Filling எனும் கருவிகளின் பட்டையிலுள்ள எழுதிடும் பேனாமுள் போன்றுள்ள உருவப்பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக

10.1
உடன் Lineஎனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் இந்த உரையாடல் பெட்டியில் Line, Shadow, Line Styles, Arrow Stylesஆகிய நான்கு தாவிப்பொத்தான்களின் திரைகள்உள்ளன இயல்புநிலையில் Lineஎனும் தாவிப்பொத்தானின் திரையானது தோன்றி நாம் பயன்படுத்துவதற்காக தயாராக இருக்கும் இந்த பக்கத்தில் Line properties, Arrow styles, Width, Corner and cap styles ஆகிய பகுதிகளும் இதனுடைய கீழ்பகுதியில் நாம் தெரிவுசெய்த வாய்ப்பிற்கேற்ற உருவம் எவ்வாறு திரையில் தோன்றும் என முன்காட்சியாக காண்பிக்கின்ற previewஎனும்பகுதியும் உள்ளன
இந்தLineஎனும் உரையாடல் பெட்டியில் Shadow எனும் தாவிப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் Shadow எனும் தாவிப்பொத்தானின் திரையில் இந்த கோடுகளின் நிழலுருவம் எவ்வாறு இருக்கவேண்டும் என தெரிவுசெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன இந்த shadow எனும் தாவிப்பொத்தானின் திரையை செயற்படுத்துவதற்கு பதிலாக நேரடியாக Line and Filling எனும் கருவிகளின் பட்டையிலுள்ள Shadowஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து அமைத்து கொள்ளமுடியும் ஆனால் இந்த வாய்ப்பில் ஏற்கனவே இயல்புநிலையில் உள்ள நிழலுருக்களை மட்டுமே கொண்டுவரமுடியும் என்றசெய்தியை மனதில்கொள்க
இதனை தொடர்ந்து இதே Lineஎனும் உரையாடல் பெட்டியில் Line Stylesஎனும் தாவிப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் Line Styles எனும் தாவிப்பொத்தானின் திரையில் இந்த கோடுகளின் பாவணை எவ்வாறு அமையவேண்டும் என இதிலுள்ள properties எனும் பகுதியின் கீழுள்ள Line Styles ,Type, Number, Length, Spacing ஆகிய பல்வேறு வாய்ப்புகளின் கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து தேவையானவாறு அமைத்தபின்னர்தேவையெனில் Fit to line widthஎனும் தேர்வுசெய் பெட்டியை தெரிவுசெய்துகொண்டு ADDஎனும் பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக
ஏற்கனவே உள்ளவையெனில் இதே Lineஎனும் உரையாடல் பெட்டியில் Arrow Stylesஎனும் தாவிப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் Arrow Styles எனும் தாவிப்பொத்தானின் திரையில் இந்த கோடுகளின் அம்புக்குறிகளின் பாவணை எவ்வாறு அமையவேண்டும் என இதிலுள்ள organization arrow styles எனும் பகுதியின் கீழுள்ள Title என்பதன் தலைப்பின் பெயரை உள்ளீடு செய்து கொண்டு Arrow styleஎனும் வாய்ப்பின் கீழிறிங்கு பட்டியலில் தேவையான வாய்ப்பினை மட்டும் தெரிவுசெய்துகொண்டு இதனுடைய கீழ்பகுதியில் நாம் தெரிவுசெய்த வாய்ப்பிற்கேற்ற உருவம் எவ்வாறு திரையில் தோன்றும் என முன்காட்சியாக காண்பிக்கின்ற previewஎனும்பகுதியில் பார்வையிட்டபின்னர்ADDஎனும் பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக ஏற்கனவே உள்ளவையெனில் Modifyஎனும் பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக
சரியாக இருக்கின்றது எனில் okஎனும் பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குகஇவ்வாறு நம்மால் உருவாக்கப்பட்ட அம்புக்குறிபாவணைகள் மற்ற படவில்லைகளுக்கும் கொண்டு செல்ல வேண்டுமெனில் திரையின் மேலே கருவிகளின் பட்டையிலுள்ள Save Line Stylesஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின் தோன்றிடும் உரையாடல் பெட்டியில் தேவையானவாறு அமைத்துகொள்க நாம் ஏற்கனவே மேலே கூறியவாறு சேமித்த அம்புக்குறி கோடுகளின் பாவணைகளை திரையில்கொண்டுவருவதற்காக திரையின் மேலே கருவிகளின் பட்டையிலுள்ள Load Line Stylesஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் உரையாடல்பெட்டியில் தேவையான அம்புக்குறி பாவணையை தெரிவுசெய்துகொண்டு Open எனும் பொத்தானை சொடுக்குக

10.2

திரையின் மேலேயுள்ள கருவிகளின் பட்டையை அல்லது இதற்கான உரையால் பெட்டியை அல்லது சூழ்நிலை பட்டியை பயன்படுத்திடுவதற்கு பதிலாக படவில்லையின் வரைகலை பொருளை தெரிவுசெய்து கொண்டபின்னர் லிபர் ஆஃபிஸ் இம்பிரஸ் திரையின் பக்கப்பட்டையின் (Sidebar) Lineஎனும் பகுயின் Width, Color, Transparency, Style, Arrow, Corner style and Cap styleஆகிய வாய்ப்புகளை பயன்படுத்தி சரிசெய்து அமைத்து கொள்ளலாம்
காலிஇடத்தை நிரப்புதல்(area fill) எனும் வடிவமைப்பு
ஒரு படவில்லையில் நம்மால் வரையப்படும் rectangle, circle, star, pentagonபோன்ற வரைகலை பொருட்களின் உட்பகுதியை ஒரேமாதிரியான color, gradient, hatching pattern, bitmapஆகியன கொண்டு நிரப்புதல்கள் செய்து அவைகளுக்கு நல்ல தோற்றத்தை வழங்குவதே காலிஇடத்தை நிரப்புதல் (area fill) எனும் வடிவமைப்பு வாய்ப்பாகும் இந்த வாய்ப்பினை கொண்டு வரைகலை பொருளிற்கு பின்புறம் இருக்கும் பொருளை பகுதியாக அல்லதுமுழுமையாக ஊுடுருவி காணுமாறு(transparent) அல்லது நிழலுருவுடன் தோன்றிடுமாறும் அமைத்திட முடியும்
இதனை மிகவிரைவாக செயல்படுத்திடுவதற்காக தேவையான பொருளின் காலி இடத்தினை இடம்சுட்டியால் தெரிவுசெய்து கொண்டு திரையின்மேலேLine and Fillingஎனும் கருவிகளின் பட்டையின் இடதுபுறத்திலுள்ள காலி இடத்தினை நிரப்பிடும் பல்வேறு வாய்ப்புகளுடைய உருவப்பொத்தான்களின் கீழிறங்கு பட்டியல்களை பயன்படுத்தி கொள்க அவ்வாறே இதே கருவிகளின் பட்டையின் வலதுபுறத்திலுள்ள வண்ணங்கள் இதரவாய்ப்புகளுக்கான உருவப்-பொத்தான்களின் கீழிறங்கு பட்டியல்களை பயன்படுத்தி கொள்க
இதற்குபதிலாக தேவையான பொருளின் காலி இடத்தினை இடம்சுட்டியால் தெரிவுசெய்து கொண்டு திரையின் மேலே கட்டளைபட்டையில் Format => Area =>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது Line and Fillingஎனும் கருவிகளின் பட்டையின் Area எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது தேவையான பொருளின் காலி இடத்தில் இடம்சுட்டியை வைத்துகொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் Area எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Area எனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அதில் Area எனும் தாவிபொத்தானின் திரையில் Fill என்பதன்கீழ் உள்ள பல்வேறு வண்ணங்களுக்கான வாய்ப்புகளை கொண்ட color என்பதன் கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து தேவையான வண்ணத்தைதெரிவுசெய்துகொண்டு okஎனும் பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக

10.3
இதே காலிஇடத்தில் Gradientஐ கொண்டு நிரப்புதல் செய்வதற்காக Fill என்பதன்கீழ் உள்ள பல்வேறு Gradientஇற்கான வாய்ப்புகளை கொண்ட Gradient என்பதன் கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து அவற்றுள் தேவையானதை மட்டும் தெரிவுசெய்து கொள்க மேலும்இதன் அருகில் incrementsஎன்பதன் கீழுள்ள Automaticஎனும் தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்துகொண்டு okஎனும் பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக
இதே காலிஇடத்தில் Hatchingஐ கொண்டு நிரப்புதல் செய்வதற்காக Fill என்பதன்கீழ் உள்ள பல்வேறு Hatchingஇற்கான வாய்ப்புகளை கொண்ட Hatching என்பதன் கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து அவற்றுள் தேவையானதை மட்டும் தெரிவுசெய்து கொள்க மேலும்இதன் அருகில் colorsஎன்பதன் கீழள்ள Background colorஎனும் தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்துகொள்க பின்னர் செயலில் இருக்கும் இதனுடைய கிழிறங்கு பட்டியலில் தேவையானதை தெரிவுசெய்து கொண்டு okஎனும் பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக
இதே காலிஇடத்தில் Bitmapsஐ கொண்டு நிரப்புதல் செய்வதற்காக Fill என்பதன்கீழ் உள்ள பல்வேறு Bitmapsஇக்கான வாய்ப்புகளை கொண்ட Bitmaps என்பதன் கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து அவற்றுள் தேவையானதைமட்டும் தெரிவுசெய்து கொள்க மேலும் இதன் வலதுபுறத்தில் Size,என்பதன் கீழ் தேவையான வாய்ப்பினையும் அவ்வாறேPosition என்பதன் கீழ் தேவையான வாய்ப்பினையும் அவ்வாறே Offset என்பதன் கீழ் தேவையான வாய்ப்பினையும் தெரிவுசெய்து கொண்டு okஎனும் பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக

10.4
திரையின் மேலேயுள்ள கருவிகளின் பட்டையை அல்லது இதற்கான உரையால் பெட்டியை அல்லது சூழ்நிலை பட்டியை பயன்படுத்திடுவதற்கு பதிலாக படவில்லையின் வரைகலை பொருளை தெரிவுசெய்து கொண்டபின்னர் லிபர் ஆஃபிஸ் இம்பிரஸ் திரையின் பக்கப்பட்டையின் (Sidebar) areaஎனும் பகுயின் Fill என்பதன் கீழுள்ள Color, Transparency போன்ற மேலே கூறியவாறான பல்வேறு வாய்ப்புகளில் நமக்கு தேவையானதை மட்டும் பயன்படுத்தி சரிசெய்து அமைத்து கொள்ளலாம் இதே பக்கப்பட்டையைகொண்டு Area எனும் உரையாடல் பெட்டியை திரையில் தோன்றிட செய்வதற்காக இதனுடைய மேலே வலதுபுறமூலையிலுள்ள More Optionsஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் இந்த உரையாடல் பெட்டியில் வழக்கம் போன்று செயல்படுத்தி கொள்க

10.5
புதிய area fills என்பதை உருவாக்கி அதில் வாடிக்கையாளர் விரும்பியவாறுகூடமாறுதல்கள் செய்திடமுடியும் இதற்காக Area எனும் உரையாடல் பெட்டியின் colors எனும் தாவிப்பொத்தானின் திரையில் properties என்பதன் கீழுள்ள Name என்பதில் நாம் உருவாக்கப்போகும் வண்ணத்திற்கு ஒரு பெயரினை உள்ளீடு செய்துகொள்க பின்னர் RGB என சுருக்கமாகஅழைக்கும் Red (R), Green (G), Blue (B)ஆகிய மூன்று அடிப்படை வண்ணங்கள் அல்லது CMYKஎன சுருக்கமாகஅழைக்கும் Cyan (C), Magenta (M), Yellow (Y), Black (K)ஆகிய நான்கு அடிப்படை வண்ணங்கள் ஆகிய இரு வண்ணக்-கலவைகளின் இந்த கலவையானது 0 முதல் 255 வரையுள்ள அளவுகளிலும் 0%முதல்100% வரை சதவிகிதங்களிலும் தெரிவுசெய்து கொண்டு Addஎனும் பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக உடன் இந்த வண்ணக்கலவையானது புதியவண்ணமாக கீழிறங்கு பட்டியலில் சென்றமர்ந்துவிடும் அவ்வாறே ஏற்கனவே கீழறங்கு பட்டியலில் உள்ள வண்ணக்கலவையை தெரிவுசெய்து இதில்கலந்துள்ள வண்ணங்களின் அளவுகளையும் சதவிகிதங்களையும் தேவையானவாறு மாற்றி யமைத்துகொண்டு Modifyஎனும் பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குதல் செய்து மாற்றி யமைத்து கொள்ளலாம்
இதுமட்டுமல்லாது Color Pickerஎனும் உரையாடல் பெட்டியை திரையில் தோன்றிட செய்து இந்த RGB அல்லது CMYK அல்லது HSB (Hue,Saturation, Brightness) ஆகியவற்றின் மதிப்பை மாற்றியமைத்துகொண்டு okஎனும் பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக

Colorஎனும் உரையாடல் பெட்டியில் Modifyஎனும் பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக பின்னர் Area எனும் உரையாடல் பெட்டியில் okஎனும் பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக
இவ்வாறு நம்மால் உருவாக்கப்பட்ட வண்ணக்கலவைகள் மற்ற படவில்லைகளுக்கும் கொண்டுசெல்லவேண்டுமெனில் திரையின் மேலே கருவிகளின் பட்டையிலுள்ள Save Color Listஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின் தோன்றிடும் உரையாடல் பெட்டியில் தேவையானவாறு அமைத்துகொள்க நாம் ஏற்கனவே மேலே கூறியவாறு சேமித்த வண்ணக்-கலவைகளை திரையில் கொண்டுவருவதற்காக திரையின் மேலே கருவிகளின் பட்டையிலுள்ள Load Color Listஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் உரையாடல் பெட்டியில் தேவையான வண்ணக்கலைவையை தெரிவுசெய்துகொண்டு Openஎனும் பொத்தானை சொடுக்குக
இதற்கு பதிலாக திரையின் மேலே Tools => Options => LibreOffice => Colors=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து வண்ணக்கலவைகளை சேர்த்து கொள்க

லிபர் ஆஃபிஸ் இம்பிரஸ்-5.2 தொடர்-9-வரைகலை பொருட்களை நிருவகித்தல்-தொடர்ச்சி

லிபர் ஆஃபிஸ் இம்பிரஸின் படவில்லையில் உள்ள இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட பொருட்களை தெரிவுசெய்து சரியான நிலையில்அமையச்செய்வதற்காக சரிசெய்திடும் கருவிகள் நாம் பயன்படுத்திடுவதற்கு தயாராக உள்ளன இவ்வாறு விரும்பும் பொருட்களை தெரிவுசெய்து கொள்க பின்னர் திரையின் மேலே Line and Filling toolbarஎனும் கருவிகளின் பட்டையில் உள்ள Alignmentஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது இந்தகருவியானது கருவிகளின் பட்டையில் காணவில்லையெனில் திரையின் மேலே கட்டளைபட்டையில் View > Toolbars > Align Objectsஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன்இந்த கருவியானதுLine and Filling toolbarஎனும் கருவிகளின் பட்டையில் தோன்றிடும் அல்லது இம்பிரஸின் படவில்லையில் உள்ள இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட பொருட்களை தெரிவுசெய்துகொண்ட பின்னர் சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Alignmentஎன்ற வய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக இதன்பின்னர் விரியும் Alignmentஎன்பதில் உள்ள Left, Centered, Right, Top, Center, Bottomஆகிய துனை வாய்ப்புகளில் தேவையான வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக
ஒருசிலநேரங்களில் குறிப்பிட்ட பொருளானது படவில்லையில் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே தோன்றிடவேண்டும் அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட படவில்லைகளில் மிகச்சரியாக ஒரேமாதிரியான இடத்தில் மட்டுமே அமையவேண்டும் என்றிடும்போது Grid , Snap Linesஆகிய இரு தொழில்நுட்பங்கள் நமக்கு உதவுகின்றன
இந்த Grid என்பது திரையில் காணவில்லையெனில் திரையின் மேலே கட்டளை பட்டையில் View > Gridஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது இம்பிரஸின் படவில்லையில் காலியான பகுதியில் இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Gridஎன்ற வய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக இதன்பின்னர் விரியும் Gridஎனும் வாய்ப்பில் உள்ள Display Grid, Snap to Grid, Grid to Frontஆகிய துனைவாய்ப்புகளில் தேவையான வாய்ப்பினை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக அதனை தொடர்ந்து இந்தவாய்ப்பினை அமைவுசெய்வதற்காக திரையின் மேலே கட்டளை பட்டையில்Tools > Options > LibreOffice Impress > Gridஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக
இந்தSnap Lines என்பது திரையில் காணவில்லையெனில் திரையின் மேலே கட்டளை பட்டையில் View > Snap Linesஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது இம்பிரஸின் படவில்லையில் காலியான பகுதியில் இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Snap Lines என்ற வய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக இதன்பின்னர் விரியும் Snap Lines என்பதில் உள்ள Display Guides, Snap to Snap Lines, Snap Lines to Frontஆகிய துனை-வாய்ப்புகளில் தேவையான மட்டும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக
படவில்லையில் ஒரு புதிய snap pointஅல்லதுline உருவாக்கிடுவதற்காக இம்பிரஸின் படவில்லையில் காலியான பகுதியில் இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுற-பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Insert Snap Point/Line என்ற வய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்New Snap Object எனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அதிலுள்ள Positionஎன்பதில் X ,Y ஆகிய அச்சுகளின் அளவுகளையும் Type என்பதில் Point, என்பது கோடுஎனில்Vertical ,Horizontal ஆகியவற்றில் தேவையானதையும் தெரிவுசெய்து கொண்டு OK எனும் பொத்தானை சொடுக்குக
குறிப்பு படவில்லையில் கட்டம்கட்டமாக கோடுகள் இருந்தால்அதனடிப்படையில் பொருட்களை பிடித்து இழுத்து சென்று சரிசெய்து அமைத்திடமுடியும் இவை படவில்லையில் தோன்றிட செய்வதற்காக திரையின் மேலே கட்டளைபட்டையில் View > Rulersஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக
snap pointஐ அல்லதுline ஐ மாறுதல்கள் செய்திடுவதற்காக மாறுதல்கள் செய்திட விரும்புவதின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Edit Snap lineஎன்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் உரையாடல் பெட்டியில் X ,Y ஆகிய அச்சுகளின் அளவுகளை தேவையானவாறு மற்றி யமைத்துகொண்டு OK எனும் பொத்தானை சொடுக்குக இதனை நீக்கம் செய்வதற்கு இதே சூழ்நிலைபட்டியல் Delete Snap lineஎன்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து நீக்கம் செய்துகொள்க
படவில்லையில்உள்ள பொருட்களை தேவையானவாறு அடுக்கிவைத்திடுவதற்காக இவ்வாறு விரும்பும் பொருட்களை தெரிவுசெய்து கொள்க பின்னர் திரையின் மேலே Line and Filling toolbarஎனும் கருவிகளின் பட்டையில் Arrangeஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விரும்பும் பொருட்களை தெரிவுசெய்து கொண்டு அதன்மீது இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Arrangeஎன்ற வய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக இதன்பின்னர் விரியும் Positionஎனும் கருவிகளின் பட்டையில் உள்ள Bring to front, Bring forward, Send backwards, Send to back,In front of object, Behind object ,Reverse ஆகிய கருவிகளில் தேவையான கருவியை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக
படவில்லைகளின் பொருட்களின் சுற்றெல்லையிலுள்ள glue points என்பதன் வாயிலாக அவைகளை ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தி நிலையாக இணைப்பு செய்து flowchart, organization chart, schematics, அல்லதுdiagrams ஆகியவற்றை உருவாக்கிடுவதற்காக கோடுகளை பயன்படுத்துவதைவிட connectorஎன்பதை பயன்படுத்துவது சிறந்தது என பரிந்துரைக்கப் படுகின்றது
படவில்லையிலுள்ள பொருட்களுக்கு இடையே இந்த connectorஎன்பதனை உருவாக்கு-வதற்காக திரையின் மேலேDrawing toolbarஎனும் கருவிகளின் பட்டையில் Connector என்பதற்கருகிலுள்ள முக்கோணவடிவ உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் பட்டியலான இணைப்புக்கருவிகளில் தேவையான இணைப்புக் கருவியை மட்டும் தெரிவுசெய்து கொண்டு இணைக்கவேண்டிய பொருட்களில் ஒன்றின் சுற்றெல்லையில் உள்ளglue points என்பதில் வைத்து சொடுக்குதல் செய்து பிடித்து கொண்டு அப்படியே பிடித்து இழுத்து சென்று இணைப்பை வரைந்து சென்றுஅப்படியே அடுத்த பொருளின் சுற்றெல்லையில் உள்ளglue points என்பதில் வைத்து பிடியைவிட்டிடுக
இங்கு glue points என்பது ஒரு பொருளை இணைப்புக்கோட்டுடன் இணைத்திட உதவிடும் பொருளின் சுற்றெல்லையில் இருக்கின்றதொரு புள்ளியாகும் இந்தglue points என்பதை கையாளுவதற்காக திரையின் மேலேDrawing toolbarஎனும் கருவிகளின் பட்டையில்Gluepoints எனும் உருவப் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இது திரையில் தோன்றிடவில்லையெனில்திரையின் மேலே கட்டளைபட்டையில் View > Toolbars >
Gluepoints என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக படவில்லையின் ஒரு பொருளில் இதனை உள்ளிணைத்திடுவதற்காக Gluepointsஎனும் கருவிகளின் பட்டியில் Insert Glue Pointஎனும் கருவிபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பொருளின் அளவை சரிசெய்திட Glue point relativeஎனும் கருவிபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
படவில்லையில் 3D Objectsஎனும் முப்பரிமான பொருட்களைகூட கையாளமுடியும் காலியான படவில்லையில்முப்பரிமான பொருளை உருவாக்கிடுவதற்காக திரையின் மேலே Drawing toolbarஎனும் கருவிகளின் பட்டையிலுள்ள3D Objectsஎன்பதற்கருகிலுள்ள முக்கோணவடிவ உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் 3D Objectsஎனும் பட்டியில் தேவையான கருவிப்பொத்தானை தெரிவுசெய்து கொண்டு காலியான படவில்லையில் தேவையான முப்பரிமான உருவத்தை வரைக
இந்த முப்பரிமான கருவிகளின் பட்டையில் திரையில் தோன்றவில்லையெனில் திரையின் மேலே கட்டளைபட்டையில் View > Toolbars > 3D-Objects என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக
படவில்லையில் ஏற்கனவே உள்ள பொருட்களைமுப்பரிமானமாக உருமாற்றிடுவதற்காக தேவையானபொருளை தெரிவுசெய்து கொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலைபட்டியில் Convert > To 3Dஅல்லது To 3D
Rotation Object என்றுவாறு கட்டளைகளைதெரிவுசெய்து சொடுக்குக .அதற்குபதிலாக தேவையான பொருளை தெரிவுசெய்துகொண்டுDrawing toolbarஎனும் கருவிகளின் பட்டையிலுள்ள Extrusion on/offஎனும் கருவிப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் 3D-Settings toolbarஎனும் முப்பரிமான கருவிகளின் பட்டையில் தேவையான கருவியை மட்டும் தெரிவுசெய்து பயன்படுத்தி கொள்க
படவில்லையிலுள்ளஒரு பொருளை வெவ்வேறு வகையான பொருளாக உருமாற்றம் செய்திடமுடியும் இதற்காக தேவையான பொருளின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலைபட்டியில் Convertஎன்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் To Curve, To Polygon , To Contour, To 3D, To 3D Rotation Object,To Bitmap, To Metafileஆகிய இதனுடைய துனை-வாய்ப்புகளில் தேவையான வாய்ப்பினை தெரிவுசெய்துகொண்டு தேவையானவாறு உருமாற்றிகொள்க
குறிப்பு கருவிகளின் பட்டையில் காலியான இடத்தில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Visible Buttons.எனும் என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து To Curve, To Polygon , To Contour, To 3D, To 3D Rotation Object, ஆகிய கருவிகளை Drawing toolbarஎனும் கருவிகளின் பட்டையிலேயே கொண்டுவரலாம்

9.1
படவில்லையிலுள்ளஒரு பொருளுடன் இடைமுகம் செய்வதற்காக இவ்வாறு விரும்பும் பொருட்களை தெரிவுசெய்து கொள்க பின்னர் திரையின் மேலே Line and Filling toolbarஎனும் கருவிகளின் பட்டையில் Interactionஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விரும்பும் பொருட்களை தெரிவுசெய்து கொண்டு அதன்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Interactionஎன்ற வய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக இதன்பின்னர் விரியும் Interactionஎனும் உரையாடல பெட்டியில் Action at mouse click என்பதற்கருகிலுள்ள தேவையான செயலை தெரிவுசெய்து கொண்டுOK எனும் பொத்தானை சொடுக்குக எந்த செயலும் தேவையில்லையெனில்இதே உரையாடல் பெட்டியில்No action எனும் செயலை தெரிவு செய்து கொண்டுOK எனும் பொத்தானை சொடுக்குக

9.2
படவில்லையிலுள்ள எழுத்துருவை நாம் விரும்பியவாறு வடிவமைத்து மாற்றியமைத்திடலாம் இதற்காக திரையின் மேலே Drawing toolbarஎனும் கருவிகளின் பட்டையிலுள்ளFontwork Galleryஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது Fontwork toolbar எனும் கருவிகளின் பட்டையிலுள்ளFontwork Galleryஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் Fontwork Galleryஎனும் உரையாடல் பெட்டியில் தேவையான மாதிரியைதெரிவுசெய்து கொண்டு OK எனும் பொத்தானை சொடுக்குக Fontwork toolbar எனும் கருவிகளின் பட்டை திரையில் தோன்ற-வில்லையெனில் திரையின் மேலே கட்டளைபட்டையில் View >Toolbars > Fontwork என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக இந்த கருவி பட்டையிலுள்ள மிகுதியான Fontwork Shape, Fontwork Same Letter Heights, Fontwork Alignment , Fontwork Character Spacingஆகிய கருவிகளை தேவைகேற்ப பயன்படுத்தி கொள்க

9.3
படவில்லையின் பொருட்களுக்கு நாம் விரும்பியவாறு அசைவூட்டம் செய்திடலாம் இதற்காக இவ்வாறு விரும்பும் பொருட்களை தெரிவுசெய்து கொள்க பின்னர் திரையின் பக்கப் பகுதியிலுள்ள Sidebarஎனும் பக்கப்பட்டையிலுள்ள Custom Animationஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதனை தொடர்ந்து பக்கப்பட்டையிலுள்ள Custom Animationஎன்பதிலுள்ள Add Effect, Remove Effect , Modify Effect, Move Up, Move Down, Preview Effect , Start, Direction, Speed, Automatic preview ,Effect Options ஆகிய வாய்ப்புகளுள் தேவைக்கேற்ப தேவையானதை தெரிவுசெய்து அமைத்து கொள்க

9.4
அல்லது விரும்பும் பொருட்களை தெரிவுசெய்து கொண்டு அதன்மீது இடம்-சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Custom Animationஎன்ற வய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது திரையின் மேலே கட்டளை பட்டையில் Slide Show > Custom Animationஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் விரியும்Custom Animation எனும் உரையாடல் பெட்டியின் Entrance, Emphasis,Exit, Motion Paths , Misc Effects , Automatic previewஆகிய தாவிப்பொத்தான்களின் பக்கங்களில் உள்ள வாய்ப்புகளில் தேவைக்கேற்ப தேவையானதை மட்டும் தெரிவுசெய்து கொண்டு OK எனும் பொத்தானை சொடுக்குக

9.5
அவ்வாறே Effect Options எனும் உரையாடல் பெட்டியின் Effect,Timing ஆகிய தாவிப்-பொத்தான்களின் பக்கங்களில் உள்ள வாய்ப்புகளில் தேவைக்கேற்ப தேவையானதை மட்டும் தெரிவுசெய்து கொண்டு OK எனும் பொத்தானை சொடுக்குக
படவில்லையில் ஏற்கனவே நம்மால் உருவாக்கப்பட்டுள்ள அசைவூட்டத்துடன் கூடிய பொருளை உள்ளிணைத்திடலாம் இதற்காக திரையின் மேலே கட்டளைபட்டையில் Insert >
Animated Image என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Animationஎனும் உரையாடல் பெட்டிதிரையில் தோன்றிடும் அதனை தொடர்ந்து நம்மால் உருவாக்கப்-பட்டுள்ள அசைவூட்டத்துடன் கூடிய பொருளை தெரிவுசெய்து கொண்டுApply Object எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் transformationஅல்லது rotation, change color, add அல்லதுremove characters,போன்றவைகளில் தேவையான வாய்ப்பினை தெரிவுசெய்து அமைத்துகொள்கஇவ்வாறே தேவையான வெவ்வேறு அசைவூட்டம் கொண்டபொருட்களை உள்ளிணைத்திடுக இது குழுவானது எனில் Animation groupஎன்பதன் கீழுள்ள வாய்ப்புகளில் தேவையானதை பயன்படுத்தி கொள்க இதில் தனித்தனியாக அசைவூட்டம் அமைத்திடுவதற்காக Apply objects individuallyஎனும் உருவப்பொத்தானை சொடுக்குக

9.6

லிபர் ஆஃபிஸ் இம்பிரஸ்-5.2 தொடர்-8 வரைகலை பொருட்களை நிருவகித்தல்

இந்த தொடரில் லிபர் ஆஃபிஸ் இம்பிரஸின்ஒரு படவில்லையில் உள்ள வரைகலை பொருட்களை எவ்வாறு சுழலச்செய்வது, திருத்துதல் செய்வது, வரிசை படுத்துவது ,நிலைநிறுத்துவது ஆகிய விவரங்களை காணலாம் இந்த செயல்கள் அனைத்தும் ஒரு படவில்லைக்குள் பதிவிறக்கம் செய்யப்பட்ட உருவப்படத்திற்கும் பொருந்தும் என்ற செய்தியை மனதில் கொள்க இயல்புநிலையில் வரைகலை கருவிப்பட்டையானது அதற்காக திரையின் மேலே தோன்றவில்லையெனில் திரையின் மேலே கட்டளைப் பட்டையில் View =>Toolbars =>Drawing=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து தோன்றிட செய்க அதனை தொடர்ந்து திரையில் தோன்றிடும் இதில் உள்ள கருவிகள் போதுமானதாக இல்லாதிருந்தால் இந்த வரைகலை கருவிகளின் பட்டையில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலை பட்டியில் Visible Buttons என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்விரியும் உரையாடல் பெட்டியில் நமக்குகூடுதலாக தேவையான கருவிகளை தெரிவுசெய்து நிறுவுகை செய்து கொள்க அல்லது தேவையற்றதை நீக்கம் செய்து கொள்க
இதன்பின்னர் இந்த வரைகலை கருவிகளின்பட்டையில் தேவையான கருவிகளின் உருவப்பொத்தானை இடம்சுட்டியால்தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின்னர் படவில்லையில் உருவப்படம் வரையவிழையும் இடத்தில் இடம்சுட்டியை வைத்து சொடுக்குதல் செய்து சுட்டியின் இடதுபுற பொத்தானை அப்படியே பிடித்து கொண்டு சுட்டியை இழுத்துவந்து போதுமானஉருவம் கிடைத்தவுடன் பிடித்திருந்த இடதுபுறபொத்தானை விட்டிடுக
இந்த கருவிகளின் பட்டையில் வழக்கமான உருவங்களாக Rounded rectangle, rounded square, Circle pie,Cylinder , cube போன்ற அடிப்படை உருவங்களும் Smiley face,Sun, moon , heart,Left brace, right brace போன்ற குறியீட்டு உருவங்களும் Left arrow, right arrow, up arrow, down arrow, left and right arrow, up and down arrow,போன்ற தொகுப்பான அம்புக்குறிகளும் நாம் பயன்படுத்துவதற்காக தயார்நிலையில் உள்ளன
வளைவுகளை வரைதல்
இதற்காக இந்த வரைகலை கருவிகளின் பட்டையிலுள்ள Curve filled அல்லது Curveஆகியவற்றில் ஏதேனுமொரு கருவியின்உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்துகொண்டு படவில்லையில் வளைவினை வரையவிழையும் இடத்தில் இடம்சுட்டியை வைத்து சொடுக்குதல் செய்து சுட்டியின் இடதுபுற பொத்தானை அப்படியே பிடித்து இழுத்துவந்து போதுமானஉருவம் கிடைத்தவுடன் பிடித்திருந்த இடதுபுறபொத்தானை விட்டிடுக
பலகோணங்களை வரைதல்
மேலே கூறியதை போன்றே இந்த வரைகலை கருவிகளின் பட்டையிலுள்ள Polygon filled அல்லது Polygonஆகியவற்றில் ஏதேனுமொரு கருவியின் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்துகொண்டு படவில்லையில் பலகோணம் வரையவிழையும் இடத்தில் இடம்சுட்டியை வைத்து சொடுக்குதல் செய்து சுட்டியின் இடதுபுற பொத்தானை அப்படியே பிடித்து இழுத்துவந்து போதுமான கோட்டினை வரைந்தபின்னர் பிடித்திருந்த இடதுபுறபொத்தானை விட்டிடுக பின்னர் மீண்டும் அந்த புள்ளியிலிருந்து மற்றொரு கோட்டினை வரைக இவ்வாறே போதுமானபலகோணகோடுகள் வரைந்தபின்னர் முடிவுபுள்ளியில் சுட்டியின் பொத்தானை இருமுறை சொடுக்குதல்செய்து விட்டிடுக
இதேபோன்று 45 பாகை பலகோணத்தையும் இந்த வரைகலை கருவிகளின் பட்டையில் உள்ள Polygon (45°) filled அல்லது Polygon (45°) ஆகியவற்றில் ஏதேனுமொரு கருவியின் உருவப்பொத்தானை தெரிவுசெய்து வரைந்திடுக
அதுமட்டுமல்லாது தனியான சுதந்திரமான கோடுகளை இந்த வரைகலை கருவிகளின் பட்டையில் உள்ள Free form line filled அல்லது Freeform line. ஆகியவற்றில் ஏதேனுமொரு கருவியின் உருவப்பொத்தானை தெரிவுசெய்து வரைந்திடுக

1
வரைகலை பொருட்களை குழுவாக தொகுத்தல்
இவ்வாறு படவில்லையில் நம்மால் வரையப்பட்ட வரைகலை பொருட்களை குழுவாக தொகுத்திடமுடியும் இதற்காக முதலில் படவில்லையிலுள்ள குழுவாக தொகுத்திட விரும்பும் பொருட்களை selection tool எனும் கருவியின் உருவப்பொத்தானின் உதவியுடன்தெரிவுசெய்து கொண்டபின்னர் அதனைசுற்றி ஒரு செவ்வகத்தை வரைந்து கொள்க அல்லது Shift key எனும் விசையை பிடித்து கொண்டு படவில்லையில் குழுவாக தொகுத்திட விரும்பும் பொருட்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக தெரிவுசெய்து கொள்க பின்னர் திரையின் மேலே கட்டளைப் பட்டையில் Edit => Select All=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விசைப்பலகையிலுள்ள Ctrl+A.ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக உடன் தெரிவுசெய்திடும் கைப்படியானது இவைகளை சுற்றி தெரிவு-செய்தவாறு திரையில் பிரிதிபலிக்கும் அதன்பின்னர் திரையின் மேலே கட்டளைப் பட்டையில் Format =>Group =>Group=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விசைப்பலகையிலுள்ள Ctrl+Shift+G.ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக அல்லது இந்த குழுவின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியன் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Groupஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக
பொருட்களை திருத்தம் செய்தல் அல்லது வடிவமைப்பு செய்தல்
இவ்வாறு தொகுக்கப்பட்ட வரைகலை பொருட்களின் குழுவினை அல்லது தனித்தனி பொருட்களை திருத்தம் செய்திடலாம் அல்லது வடிவமைப்பு செய்திடலாம் இதற்காக தேவையான தொகுக்கப்பட்ட வரைகலை பொருட்களின் குழுவினை தெரிவுசெய்து கொள்க பின்னர் திரையின் மேலே கட்டளைப் பட்டையில் Format =>Group =>Enter Group=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விசைப்பலகையிலுள்ள F3எனும் செயலிவிசையை அழுத்துகஅல்லது இந்த குழுவின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியன் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Enter Groupஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக
பொருட்களின் குழுவிலிருந்து வெளியேறுதல்
இவ்வாறு திருத்தம் அல்லது வடிவமைப்பு செய்தபின்னர் திரையின் மேலே கட்டளைப் பட்டையில் Format =>Group =>Exit group=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விசைப்பலகையிலுள்ள Ctrl+F3ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துகஅல்லது இந்த குழுவின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியன் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Exit Groupஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக
பொருட்களின் குழுவிலிருந்து தனித்தனியாக பிரித்தல்
இவ்வாறு குழுவாக தொகுக்கப்பட்ட வரைகலை பொருட்களின் குழுவினை பிரித்து விடுவித்திடலாம் அதற்காக திரையின் மேலே கட்டளைபட்டையில் Format =>Group =>Ungroup=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விசைப்பலகையிலுள்ள Ctrl+Alt+Shift+Gஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக அல்லது இந்த குழுவின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Ungroupஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக
வரைகலை பொருட்களை நாம் வேண்டும் நிலையில் நிலைநிறுத்துவதற்காக
இதனை இடம்சுட்டியால் தெரிவுசெய்து பிடித்து இழுத்து சரிசெய்திடலாம் அதற்குபதிலாக தேவையான வரைகலை பொருளை அல்லது குழுவினை தெரிவுசெய்து கொண்டு திரையின் மேலே கட்டளைப்பட்டையில் Format =>Position and Size=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விசைப்பலகையிலுள்ள F4எனும் செயலிவிசையை அழுத்துகஅல்லது இந்த வரைகலை பொருள் அல்லது குழுவின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Position and Size எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Position and Sizeஎனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அதில் Position and Sizeஎனும் தாவிப்பொத்தானின் திரைக்கு செல்க அதில் கிடைமட்டஅளவிற்கு Position-X என்பதில் தேவையான பாகையையும் செங்குத்து அளவிற்கு Position-Y என்பதில் தேவையான பாகையையும் அமைத்து கொள்க Size என்பதில் நீள அகலத்தின் அளவுகளையும் அமைத்து கொள்க Protectஎன்பதில் தேவையான வாய்ப்பினையும் தெரிவுசெய்து கொண்டு OKஎனும் பொத்தானை சொடுக்குக

2
இதே செயலை பக்கப்பட்டையிலுள்ள Propertiesஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் Propertiesஎனும் உருவப்படத்தின் Position and Sizeஎனும் துனைப்பகுதியில் கூட்டல் குறியை சொடுக்குதல் செய்திடுக பின்னர் X(horizontal) எனும் உரைப்பெட்டியில் கிடைமட்டஅளவையும் Y (vertical)எனும் உரைப்பெட்டியில் செங்குத்து அளவையும் குறிப்பிடுக அவ்வாறே நீள அகலத்தின் அளவுகளையும் அமைத்து கொள்க குறிப்பு இந்த பக்கப்பட்டையின் moreஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் உடன் Position and Sizeஎனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும்
வரைகலை பொருட்களின் அளவை சரிசெய்தல்
இதனை இடம்சுட்டியால் தெரிவுசெய்து பிடித்து இழுத்துவந்து சரிசெய்திடலாம் அதற்குபதிலாக தேவையான வரைகலை பொருளை அல்லது குழுவினை தெரிவுசெய்து கொண்டு திரையின் மேலே கட்டளைப்பட்டையில் Format =>Position and Size=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விசைப்பலகையிலுள்ள F4எனும் செயலிவிசையை அழுத்துகஅல்லது இந்த வரைகலை பொருள் அல்லது குழுவின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Position and Sizeஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Position and Sizeஎனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அதில் Position and Sizeஎனும் தாவிப்பொத்தானின் திரைக்கு செல்க அதில் அடிப்படை அளவையும் மேல்பகுதி அளவையும் தெரிவுசெய்து கொள்க அதைவிடSize என்பதில் நீளத்தின் அளவையும் உயரத்தின் அளவையும் தேவையானவாறு அமைத்து கொள்க இவ்வாறு மாறுதல்கள் செய்திடுமுன் Keep ratioஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து கொள்க இதனால் அடிப்படை அளவை சரிசெய்தால் அதற்கேற்றார் போன்று மேல்பகுதியும் அகலத்தை சரிசெய்தால் அதற்கேற்றார் போன்று உயரத்தையும் தானாகவே சரிசெய்துகொள்ளும் பின்னர்Protectஎன்பதில் தேவையான வாய்ப்பினையும் தெரிவுசெய்து கொண்டு OKஎனும் பொத்தானை சொடுக்குக
இதே செயலை பக்கப்பட்டையின் வாயிலாக செயற்படுத்திடுவதற்காக பக்கப்-பட்டையிலுள்ள Propertiesஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் Propertiesஎனும் உருவப்படத்தின் Position and Sizeஎனும் துனைப்பகுதியில் கூட்டல் குறியை சொடுக்குதல் செய்திடுக பின்னர் Size என்பதில் நீளத்தின் அளவையும் உயரத்தின் அளவையும் தேவையானவாறு அமைத்து கொள்க இவ்வாறு மாறுதல்கள் செய்திடுமுன் Keep ratioஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து கொள்க இதனால் அடிப்படை அளவை சரிசெய்தால் அதற்கேற்றார் போன்று மேல்பகுதியும் அகலத்தை சரிசெய்தல் அதற்கேற்றார் போன்று உயரத்தையும் தானாகவே சரிசெய்துகொள்ளும்

3
குறிப்பு இந்த பக்கப்பட்டையின் more எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் உடன் Position and Sizeஎனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும்
இவ்வாறான அடிப்படை செயலைத்தவிர ஏராளமான சிறப்பு செயல்களுக்கான கருவிகளும் இந்த கருவிகளின் பட்டையில் உள்ளன அவைகள் கண்ணிற்கு புலப்படவில்லையெனில் திரையின் மேலே கட்டளைப்பட்டையில் View =>Toolbars =>Mode=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து தோன்றிடசெய்திடுக இதனை பற்றி மேலும் விரிவாக பின்வரும் பகுதிகளில் காணலாம்
வரைகலை பொருட்களை சுழலச்செய்தல்
சுழலச்செய்திடவிரும்பும் வரைகலை பொருட்களை இடம்சுட்டியால் தெரிவுசெய்து கொண்டு வரைகலை கருவிகளின் பட்டையில்உள்ள Rotateஎனும் கருவியின் உருவப்பொத்தானை தெரிவுசெய்து கொண்டவுடன் கைப்பிடிபோன்ற உருவம் அந்த வரைகலை பொருளை சுற்றி தோன்றிடும் அதனை பிடித்து தேவையானவாறு நகர்த்தி சுழற்றி அமைத்து கொள்க

4
அதற்குபதிலாக தேவையான வரைகலை பொருளை அல்லது குழுவினை தெரிவுசெய்து கொண்டு திரையின் மேலே கட்டளைப்பட்டையில் Format =>Position and Size=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விசைப்பலகையிலுள்ள F4எனும் செயலிவிசையை அழுத்துகஅல்லது இந்த வரைகலை பொருள் அல்லது குழுவின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Position and Sizeஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Position and Sizeஎனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அதில் Rotationஎனும் தாவிப்பொத்தானின் திரைக்கு செல்க அதில்Pivot point எனும் பகுதியின் கீழுள்ள Position X எனும் உரைபெட்டியில் கிடைமட்டஅளவையும் Position Y எனும் உரைப்பெட்டியில் செங்குத்து அளவையும் குறிப்பிடுக மேலும் Rotation angleஎனும் பகுதியில் சுழலும் கோணத்தையும் குறிப்பிட்டபின்னர் OKஎனும் பொத்தானை சொடுக்குக
இதே செயலைபக்கப்பட்டையின் வாயிலாக செயற்படுத்திடுவதற்காக பக்கப் பட்டையிலுள்ள Propertiesஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் Propertiesஎனும் உருவப்படத்தின் Position and Sizeஎனும் துனைப்பகுதியில் கூட்டல் குறியை சொடுக்குதல் செய்திடுக பின்னர் Rotationஎனும் பகுதியில் சுழலும் கோணத்தை Rotation angleஎனும்சுட்டுதலை பிடித்து இழுத்து தேவையானவாறு அமைத்து கொள்க அல்லது Rotation angleஎனும் உரைப்பெட்டியில் தேவையான சுழலும் கோணத்தின் அளவை அமைத்து கொள்க அல்லது இதனுடைய கீழிறங்கு பட்டியிலிருந்து தேவையான சுழலும் கோண அளவினை தெரிவுசெய்து அமைத்து கொள்க
வரைகலை பொருட்களை ஏற்றுதல் இறக்குதல் செய்தல்
தேவையான வரைகலை பொருட்களின் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Flip =>Horizontally=>அல்லது Flip =>Vertically=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக

5
இதற்கு பதிலாக வரைகலைகருவிகளின் பட்டையிலுள்ள இதற்கான கருவிகளை கொண்டும் செயற்படுத்திடலாம் அதற்காக தேவையான வரைகலை பொருளை தெரிவுசெய்து கொண்டு வரைகலைகருவிகளின் பட்டையிலுள்ள Flipஎனும் கருவியின் உருவப்பொத்தானை தெரிவுசெய்து கொண்டவுடன் கைப்பிடிபோன்ற உருவம் அந்த வரைகலை பொருளை சுற்றி தோன்றிடும் அதனை பிடித்து தேவையானவாறு நகர்த்தி அமைத்து கொள்க
இதே செயலைபக்கப்பட்டையின் வாயிலாக செயற்படுத்திடுவதற்காக பக்கப்பட்டையிலுள்ள Propertiesஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் Propertiesஎனும் உருவப்படத்தின் Position and Sizeஎனும் துனைப்பகுதியில் கூட்டல் குறியை சொடுக்குதல் செய்திடுக பின்னர் Rotationஎனும் பகுதியில் Flip Verticalஅல்லது Flip Horizontal ஆகியஇரண்டில் தேவையான உருவப்பொத்தானை மட்டும் தெரிவுசெய்து பிடித்து நகர்த்தி சரிசெய்து கொள்க
இதே செயலை கண்ணாடி போன்ற பிரதிபலிக்கும் நகலான பொருட்களிலும் செயற்படுத்துவதற்காக காலியான இடத்தில் இந்த பொருளை நகலெடுத்து ஒட்டியபின்னர் அதில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில்Alignment எனும்வாய்ப்பினை தெரிவுகொள்க பின்னர் விரியும் படுக்கைவசமானது எனில் Top, Center, அல்லது Bottomஆகியத் துனை வாய்ப்புகளிலும் செங்குத்து வசமானது எனில் Left, Centered, அல்லது Right ஆகியத் துனை வாய்ப்புகளிலும் தேவையான வாய்ப்பினை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக
உருவத்தை திரி்த்து அமைத்தல்
இந்த செயலை வரைகலைகருவிகளின் பட்டையிலுள்ள Distort,Set to Circle (slant), Set in Circle (perspective)ஆகிய மூன்று கருவிகளின் உருவப்பொத்தான்களின் வாயிலாக செயற்படுத்திடமுடியும் இதற்காக தேவையான வரைகலை பொருட்களை தெரிவுசெய்து கொண்டு வரைகலைகருவிகளின் பட்டையிலுள்ள இந்த கருவிகளில் தேவையானதை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் உரையாடல் பெட்டியில் Yesஎனும் பொத்தானை சொடுக்குக உடன் நாம் தெரிவுசெய்ததற்கேற்ற உருவாக திரிந்து உருமாறிவிடும்

Previous Older Entries