லினக்ஸ் இயக்கமுறைமையைபயன்படுத்திடும் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டிய முக்கியகட்டளைவரிகள்

இணைய பயன்பாடுகளின் சேவையாளர்கணினிகள்ஏறத்தாழ 90சதவிகிதம் லினக்ஸ் சேவையாளராகவே உள்ளன மேலும் 3.74 பில்லியன் இணைய பயனாளர்கள் லினக்ஸையே பயன்படுத்திடுகின்றனர் நாம் பயன்படுத்திடும் ஆண்ட்ராய்டு கைபேசி இந்த லினக்ஸின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது உலகின் முதன்மையான 500 அதிவேககணினிகள் இந்த லினக்ஸ் இயக்கமுறைமையிலேயேசெயல்படுகின்றன என்பதன் அடிப்படையில் லினக்ஸ் இயக்கமுறைமையை எங்கெங்கும் நீக்கமற நிறைந்துள்ள இன்றையநிலையில் நாம் பயன்படுத்திவரும் எந்தவொரு நிகழ்வின் பின்புலத்திலும் இந்த லினக்ஸ் இயக்கமுறைமையே இயங்கிவருகின்றது என்ற செய்தியை கவணத்தில் கொள்க அதனால் பின்வரும் முக்கிய கட்டளைகளை கருத்தில் கொள்க
1. lsஎனும்கட்டளையானது கணினியில் கோப்புகள் கோப்பகங்கள் இயக்ககங்களை காண உதவுகின்றது
2. cd எனும்கட்டளையானது கோப்பகங்களுக்கிடையே இடம்மாறி செல்லவும் இயக்ககங்களுக்கிடையே இடம்மாறிசெல்லவும்பயன்படுகின்றது
3. mv எனும்கட்டளையானது கோப்புகளை கோப்பகங்களுக்கிடையே இடமாற்றம் செய்திட உதவுகின்றது
4. mkdir எனும்கட்டளையானதுபுதிய கோப்பகங்களை அல்லது இயக்ககங்களை உருவாக்க பயன்படுகின்றது
5. touch எனும்கட்டளையானதுபுதிய கோப்புகளை உருவாக்க பயன்படுகின்றது
6. at எனும்கட்டளையானது குறிப்பிட்ட நேரம்வரை லினக்ஸ் இயக்கமுறைமையை செயல்படசெய்திடுமாறு கட்டளையிட பயன்படுகின்றது
7. rmdir எனும்கட்டளையானது நமக்கு தேவையில்லாத கோப்பகங்களை அல்லது இயக்ககங்களை நீக்கம்செய்திட பயன்படுகின்றது
8. rm எனும்கட்டளையானதுதேவையற்ற கோப்புகளை நீக்கம் செய்திட பயன்படுகின்றது
9. locate எனும்கட்டளையானது குறிப்பிட்ட பெயர்அல்லது சொல் எந்தஇடத்தில்அல்லது கோப்பில்உள்ளது என கண்டுபிடித்திட பயன்படுகின்றது

தற்போதைய சூழலில் வியாபார நிறுவனங்களுக்கு லினக்ஸ் சேவையாளர் கண்டிப்பாக தேவையா

.வருங்காலத்தில் நம்முடைய வியாபார நிறுவனத்தின் பயன்பாடு இயங்குவதற்கு நிலைத்த பாதுகாப்பான சூழல் தேவையெனில் கண்டிப்பாக லினக்ஸ் சேவையாளர் தேவையாகும் நம்முடைய நிறுவனத்தின் உற்பத்தி திறன் உயரவும் சேவையை விரைவாக வழங்கவும் பணியானது நெகிழ்வு தன்மையுடன் அமைந்திடவும் நவீணகால கணினி,மெய்நிகர் கணினி,தாங்கி கணினி,பொதுஅல்லதுதனிநபர் மேககணினி போன்றவைகளை மிகத்திறனுடன் பயன்படுத்தி கொள்வதற்கு அடிப்படையாக இந்த லினக்ஸ் சேவையாளர் அத்தியாவசிய தேவையாகும் இவையனைத்தும் பாதுகாப்பான தளத்தில் கிடைப்பதை லினக்ஸ் சேவையாளர் உறுதிபடுத்திடுகின்றது தற்போதைய வளர்ந்துவரும் உலகளாவிய தரவுகளின் மையமானது வாடிக்கையாளர் தெரிவுசெய்வதற்கேற்ற பல்வேறு வகையான கட்டமைப்புகள்,வானூர்திகள் கட்டுபாட்டுமையம் ,போன்றஅனைத்தும் பிரச்சினை எதுவுமில்லாமல் சிறப்பாக செயல்பட நம்பகமான லினக்ஸ் சேவையாளரே அடிப்படை தேவையாகும் தற்போது நாம் பயன்படுத்திவரும்பெரும்பாலான திறன்பேசிகள் ஆண்ட்ராய்டு கைபேசிகள் முதன்மையான 500 அதிவேக கணினிகள் தொலைத்தொடர்பு சாதனங்கள் பொருட்களுக்கான இணையம் ஆகியஅனைத்தும் இந்த லினக்ஸ் சேவையாளர் என்ற அடிப்படையின் மீதே செயல்படுகின்றன வியாபார பயன்பாடான இணைய வலைபின்னல் அமைவு நிருவாகம்,தரவுதளநிருவாகம்,இணையசேவை போன்றவை நிலைத்ததாக ,பாதுகாப்பாக நெகிழ்வுதன்மையுடன்செயல்பட CentOS,Debian,Ubuntu Server,Slackware, andGentooஆகிய லினக்ஸ் சேவையாளர் பெரும்பங்காற்றுகின்றது இவைAnsible,Chef,Salt,Puppet, PCI-DSS,DISA STIG,OpenSCAPபோன்ற கருவிகளை கொண்டு இணைய சேவையை தடங்களின்றி வழங்குகின்றன

கணினியில் ஏற்படும் பிரச்சினைகை தீர்வுசெய்வதற்கான லினக்ஸ் கருவிகள்

தவறுதலாக கணினியில் கோப்புகளை அழித்துவிடுதல் உள்நுழைவுசெய்வதற்கான கடவுச்சொற்களை மறந்து போதல் கணினியின்துவக்கமுடியாதுபோதல் வன்தட்டு அழிந்தபோதல் போன்ற பல்வேறு பிரச்சினைகளில் மாட்டிகொண்டு தவிக்கும்போது அவைகளை தீர்வுசெய்து வெற்றிகரமாக செயல்படுவதற்காக லினக்ஸ் கருவிகள் பல உள்ளன அவைகளை குறுவட்டு அல்லது யூஎஸ்பி வழியாக சரிசெய்திட உதவுகின்றன
1 . Clonezilla என்பது நினைவகத்தின் கோப்புகளை மீட்டெடுக்கஉதவிடும் கட்டற்ற Norton Ghostஇற்குமாற்றான கருவியாகும் இதில்பல்வேறு செயல்களின் வாய்ப்புகளின் பட்டியலின் வாயிலாக நமக்கு தேவையானபணியை செயல்படுத்தி பயனடையலாம் இது ஜிஎன்யூபொதுஅனுமதி2 இன் படி வெளியிடபபட்டுள்ளது Clonezilla Serverஎனும் இதன் மேம்பட்ட பதிப்பையும் பயன்படுத்தி கொள்ளமுடியும்
2.Rescatuxஎனும் கருவி கணினியில் எதிர்பாரமல் நிகழும் எந்தவொரு பிரச்சினையும் சரிசெய்து வழக்கம்போன்று கணினியில் பிரச்சினை எதுவுமில்லாமல்செயல்பட உதவுகின்றது
3 .Redo Backup & Recoveryஎனும் கருவி Clonezilla வைவிட சிறந்த வரைகலை சூழலில் நினைவகத்தின் கோப்புகளை மீட்டெடுக்கஉதவிடும் கட்டற்ற Norton Ghostஇற்குமாற்றான கருவியாகும்இது ஜிஎன்யூபொதுஅனுமதி3 இன் படி வெளியிடபபட்டுள்ளது
4 .SystemRescueCDஎ னும்கருவி கைவிடப்பட்ட கணினியை புதுப்பித்து பழையநிலையில் செயல்படசெய்வதற்கு உதவுகின்றது இது ஜிஎன்யூபொதுஅனுமதி3 இன் படி வெளியிடப்பட்டுள்ளது
5. Trinity Rescue Kitஎனும்கருவி கடவுச்சொற்களை மறுஅமைவுசெய்வது Clam AV, F-Prot, BitDefender, Vexira, and Avast ஆகியவற்றை கொண்டு கணினிநச்சுநிரலை நீக்கம்செய்வது தற்காலிக கோப்புகளையும் குப்பைகூடையில் சென்று கோப்புகளையும் அறவே நீக்கம் செய்வது போன்ற பல்வேறு வசதிகளை தன்னகத்தே கொண்டுள்ளது இது ஜிஎன்யூபொதுஅனுமதி2 இன் படி வெளியிடப்பட்டுள்ளது

ஆண்ட்ராய்டு செல்லிடத்து பேசியில் லினக்ஸ் இயக்கமுறைமையை நிறுவுகைசெய்து பயன்படுத்திகொள்க

நம்முடைய செல்லிடத்து பேசியில் ஏற்கனவே இருக்கும் இயக்கமுறைமையுடன் லினக்ஸ் இயக்கமுறைமையையும் நிறுவுகைசெய்து கொண்டால் கையடக்க இணையஇணைப்பு வலைபின்னலாகவும்பரிசோதனை சாதனமாகவும் மென்பொருட்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுசெய்திடும்கருவியாகவும் நம்முடைய ஆண்ட்ராய்டு செல்லிடத்து பேசியை பயன்படுத்தி கொள்ளமுடியும் இதற்காகமுதலில் Linux Deploy எனும் பயன்பாட்டினை நிறுவுகைசெய்து செயல்படச்செய்கபின்னர் தோன்றிடும் Linux Deployஇன் திரையில் Propertiesஎனும் பொத்தானைதெரிவுசெய்துசொடுக்குக உடன்விரியும் Propertiesஎனும் சாளரத்தின் Deploy எனும்பகுதியில் லினக்ஸ் இயக்க முறைமையின் விநியோக பட்டியலில் பொருத்தமான வெளியீட்டின் பதிப்பை Distribution Suiteஎன்ற பட்டியலிலிருந்து தெரிவுசெய்து கொள்கபின்னர் http://mirror.math.princeton.edu/pub/fedora/linux/releases/25/Everything/x86_64/os/ எனும் முகவரியை உள்ளீடுசெய்திடுக அதன்பின்னர் Installation Typeஎனும் பட்டியலிலிருந்து லினக்ஸை நிறுவுகைசெய்வது தனியான இமேஜ் கோப்பாகவா அல்து குறிப்பிட்ட கோப்பகமாகவா அல்லது நினைவக பகுதியை பிரித்தா என குறிப்பிடுக பின்னர் GUIஎன்ற வாய்ப்பை இயலுமைசெய்திடுக தொடர்ந்து SSH ,VNC ஆகியவை தனித்தனியாகவா அல்லது இரண்டும் சேர்த்தா எனக்குறிப்பிடுக அதனை தொடர்ந்துதிரையின் தோற்றம் இதர விவரங்களை VNC இல் குறிப்பிடுக அனைத்தும் சரியாக இருக்கின்றது எனில் <<< end: installஎன்ற திரைதோன்றிடும் பிறகு Startஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து லினக்ஸ் வாயிலாக துவங்கிடுக தொடர்ந்து திரையில் கூறும் அறிவுரைகளை பின்பற்றிடுக

லினக்ஸின் கோப்பமைவைபற்றி தெரிந்துகொள்வோம்

துவக்கத்தில் யுனிக்ஸ் எனும் இயக்க-முறைமையில் பயன்படுத்தப்பட்டுவந்த MINIX எனும் கோப்பமைவே அனைவராலும் பயன்படுத்தப்பட்டது ஆயினும் இது அப்போது இலவசமாகவோ திறமூலமென்பொருளாகவோ வழங்கப்படவில்லை அதற்குபதிலாக இது69 டாலர் விலையில் பயன்படுத்தஅனுமதிக்கப்பட்டுவந்தது இதில் கோப்பின் பெயர் அதிகபட்சம் 14எழுத்துகளும் தேக்கும்திறனாக 64எம்பிஅளவில் மட்டுமே இருந்துவந்தது
பின்னர் லினக்ஸ் இயக்கமுறைமை புழக்கத்திற்கு வந்தபோது இதன் கொடையாளர் டோர்வால்டு என்பவர் 255 எழுத்துகளை கையாளும் திறனுடனும் 2ஜிபி தேக்கும்திறனுடனும் ext எனும் கோப்பமைவை இந்த கோப்பினை உருவாக்குதல்,அனுகுதல், மாறுதல்செய்தல் போன்ற இன்றைய நடவடிக்கைகளுக்கு முன்னோடியாக உருவாக்கப்பட்டு பொதுமக்களின் புழக்கத்திற்கு விடபட்டது
இது பின்னர்ext 2 எனும் கோப்பமைவாக மேம்படுத்தப்பட்டு தற்போதும் நாம் பயன்படுத்திடும் யூஎஸ்பியில் பயன்படுத்திடும் வண்ணம் அறிமுகபடுத்தப்பட்டது இதனுடைய தேக்கும்திறன் டெர்ராபைட்டாக உயர்ந்தாலும்அவ்வப்போது அழிந்துபோதல், மின்சாரம் இல்லாது போனால் தரவுகள் இழந்துவிடுதல் ,தரவுகள் துண்டுதுண்டாக பிரிந்து சிதறிகிடத்தல் போன்ற சிரமங்கள் இந்த வகையில் இருந்துவருகின்றன
அதன்பிறகு FAT, FAT32, HFS போன்ற கோப்பமைவுகளுக்கு சமமான ext 3எனும் கோப்பமைவு லினக்ஸின் கெர்னல்2.4.5 இல் அறிமுகபட்டத்த பட்டது இது 32-bit ,அளவும்குறைந்தபட்சம் 2 TiB முதல் அதிகபட்சம் 16 TiB கோப்பளவை கையாளும் திறன் கொண்டதாக விளங்குகின்றது இது journal,ordered, writeback ஆகியமூன்று நிலைகளில் செயல்படுத்தபட்டுவருகின்றது
தற்போது நம்முடைய புழக்கத்தில் உள்ள ext 4எனும் கோப்பமைவுலினக்ஸின் கெர்னல்2.6.28 இல் அடுத்ததலைமுறை கோப்பமைவாக வெளியிடபட்டது மிகமேம்பட்டதிறனுடனும் தரவுகள் சிதறி கிடப்பதை தவிர்த்திடும் தன்மையும்கொண்டது தானாகவே ext 3எனும் கோப்பமைவ தன்மயமாக்குமதிறன்மிக்கது இது 48-bit அளவும்அதிகபட்சம் 50 TiB வரை ஒருசிலசமயங்களில் 100 TiB வரை தேக்கும்திறன்கொண்டதாக விளங்குகின்றது பொதுவாக ext 2 அல்லது ext 3 கோப்பமைவானது இணையத்தில் நேரடியாக சிதறிகிடந்திடும் தரவுகளை ஒருங்கிணைப்பு செய்திடாது ஆனால் ext 4சிதறி கிடந்திடும் தரவுகளை மிகஎளிதாக ஒருங்கிணைப்பு செய்திடும்
இந்த ext கோப்பமைவுபோன்றே XFSஎனும்கோப்பமைவும் 32பிட் அளவுகையாளும்திறனுடன் பயன்படுத்துபட்டுவந்தது ரெட்ஹெட் லினக்ஸ் இந்த XFS கோப்பமைவிலேயே இயல்பு-நிலையில் செயல்படுமாறு வெளியிடபட்டுவருகின்து இது 50 TiB தேக்கும் திறன்மிக்கதாக இருந்துவருகின்றது
அதற்கடுத்ததாக ZFS எனும் கோப்பமைவு 1 ட்ரில்லியன் கிகாபைட் தேக்கிடும்திறனுடன் அடுத்ததலைமுறை கோப்பமைவாக ext 4எனும் கோப்பமைவை போன்று வெளியிடப்-பட்டுள்ளது
Btrfsஎன சுருக்கமாக அழைக்கும் B-Tree எனும்கோப்பமைவில் வெளியிடபட்டுள்ளது ஒற்றையான வன்தட்டுகள் முதல் பல்லடுக்கு வன்தட்டுகள் வரை பயன்படுத்தி கொள்வதற்கேற்ப இது கட்டமைக்கப்பட்டுளளது

விண்டோ பயன்பாடுகளை லினக்ஸில் இயங்க உதவும் Wineஎனும் கருவி

என்னதான் பல்வேறு வகையில் தனியுடமை இயக்கமுறைமைக்கு பதிலாக லினக்ஸ் எனும் கட்டற்ற இயக்கமுறைமைக்கு மாறுங்கள் என விழிப்புணர்வு பிரச்சாரம் செய்துமனம் மாறி லினக்ஸ் இயக்கமுறைமையை பயன்படுத்த தயாராக இருந்தாலும் பழக்கப்பட்ட விண்டோ பயன்பாடுகளை விடமுடியாது அதனையே லினக்ஸிலும் பயன்படுத்துவேன் என அடம்பிடிப்பவர்கள் பலர் உள்ளனர் அவ்வாறானவர்களுக்கு Wineஎனும் கருவியானது லினக்ஸ் எனும் இயக்கமுறைமையின்மீது விண்டோ பயன்பாடுகளை செயல்படுத்தி பயன்பெறுவதற்கு உதவுகின்றது இதனை பின்வரும் படிமுறைகளை பின்பற்றி செயற்படுத்தி பயன்பெறுக.
படிமுறை1 Ctrl- Alt- T எனும் முனைமத்தை திறந்து கொண்டு அதில் sudo add-apt-repository ppa:ubuntu-wine/ppa எனும் கட்டளைவரியை செயல்படுத்திடுக
படிமுறை2 sudo apt-get update && sudo apt-get install wine1.7எனும் கட்டளைவரிவாயிலாக wineஎன்பதை நம்முடைய லினக்ஸ் இயக்கமுறைமை செயல்படும் கணினியில் நிறுவுகை செய்திடுக
படிமுறை3பின்னர் இதனை கட்டமைவு செய்திடுவதற்காக winecfgஎன்ற கட்டளைவரியினை செயல்படுத்திடுக அதன்பின்னர்Libraries எனும் தாவிபொத்தானின் திரையில் Riched20 என்பதை தெரிவுசெய்து சேர்த்துகொண்டு Okஎனும் பொத்தானை சொடுக்குக தற்போது இந்த Wineஎனும் கருவியானது வெற்றிகரமாக நிறுவுகை செய்யப்பட்டு கட்டமைவு செய்யப்பட்டுவிடும்
படிமுறை4 பிறகு விண்டோ அலுவலக பயன்பாடு இயங்குவதற்கேற்ற 32பிட் சூழலை லினக்ஸில் கொண்டுவருவதற்கு exportWINEPREFIX=$HOME/wine32 என்ற கட்டளைவரியை செயல்படுத்திடுக அல்லது 64 பிட் சூழலை லினக்ஸில் கொண்டுவருவதற்கு exportWINEPREFIX=$HOME/wine64 என்ற கட்டளைவரியை செயல்படுத்திடுக
படிமுறை5 பின்னர் 32பிட் சூழல் எனில்export WINEARCH=wine32எனும் கட்டளைவரிவாயிலாக இயலுமை செய்திடுக அல்லது 64பிட் சூழல்எனில்export WINEARCH=wine64எனும் கட்டளைவரிவாயிலாக இயலுமை செய்திடுக
படிமுறை6 Microsoft Office setup என்பதை திறந்து கொண்டு அதிலுலுள்ள Setup.exe எனும் கோப்பின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் open with wine என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக
படிமுறை7 உடன் நிறுவுகை திரை தோன்றிடும் அதில் Install Nowஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
படிமுறை8 மைக்ரோசாப்ட் நிறுவன அலுவலக பயன்பாடு நிறுவுகைசெய்திடும் பணிதுவங்கி முடிவுபெறும் பிறகு கணினியின் இயக்கத்தை நிறுத்தம் செய்து மறுபடியும் செயல்டசெய்திடுக இதன்பின்னர் லினக்ஸ் இயக்கமுறை செயல்படும் கணினியில் விண்டோ அலுவலக பயன்பாடுகளை பயன்படுத்தி கொள்ளலாம்

குறிப்புஇந்த Wineஎனும் கருவியை கொண்டு லினக்ஸ் செயல்படும் கணினியில் .exe என்ற பின்னொட்டுடன் முடியும் அனைத்து விண்டோ பயன்பாடுகளையும் எளிதாக செயல்படுத்தி பயன்பெறமுடியும்

விண்டோஇயக்கமுறைமைக்கு மாற்றாக ஏன் லினக்ஸை பயன்படுத்திடவேண்டும்

ஒருசிலஆண்டுகள்வரையிலும்லினக்ஸ்எனும் இயக்கமுறைமையானது சேவையாளர் கணினிகளுக்கு மட்டுமே பயன்படுத்தமுடியும் என்றும் தனிநபர் பயன்படுத்திடும் மேஜைக்கணினிக்கு பயன்படாது என்றே இருந்துவந்தது ஆனால் இதனுடைய பயனாளர் இடைமுகவசதி பாமரனும் எளிதாக பயன்படுத்திகொள்ளமுடியும் என்ற நிலை ஆகியவற்றால் தற்போது விண்டோவிற்கு மாற்றாக அனைவரும் பயன்படுத்திடும் வண்ணம் லினக்ஸ் எனும் இயக்கமுறைமை பிரபலமாகி கொண்டு வருகின்றது தனிநபர்மட்டுமல்லாது கல்வி நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள் ஆகியவைகூட தத்தமது தேவைகளுக்கு கட்டணத்துடன் கூடிய விண்டோ இயக்கமுறைமைக்கு மாற்றாக கட்டணமற்ற இந்த லினக்ஸ் இயக்கமுறைமைய பயன்படுத்த துவங்கியுள்ளனர் இதனை ஏன் விண்டோவிற்கு மாற்றாக பயன்படுத்திடவேண்டும்என்ற கேள்விக்கு பின்வரும் இதனைபற்றிய தெளிவான விவரங்களை அறிந்து கொண்டபின்னர் நாம் இதனை பயன்படுத்துவது பற்றிமுடிவுசெய்திடலாம்
1 லினக்ஸ் இயக்கமுறைமையானது அனைத்துவகையான வன்பொருட்களையும் கையாளும் திறன்மிக்கது பொதுவாக விண்டோவின் புதிய இயக்கமுறைமை வெளியிடும்போது ஏற்கனவே பயன்படுத்திடும் வன்பொருட்கள் வழக்கொழிந்ததாகவும் புதிய வன்பொருட்களை மட்டுமே கையாளும் தன்மையுடனும் வெளியிடுவது வழக்கமான நடைமுறையாகும் அதிலும் இந்த வெளியீட்டிற்கு பிறகு பயன்படுத்தபடும் புதியவன்பொருட்களை மட்டுமே கையாளுவதற்காக அதற்கடுத்த இயக்கமுறைமையை கொள்முதல் செய்திடவேண்டும் அல்லது கட்டணம் செலுத்தி புதிய மென்பொருட்களை கையாளும் தன்மைக்கு மேம்படுத்திகொள்ளவேண்டும் என்ற இக்கட்டான நிலை விண்டோ இயக்கமுறைமையை பயன்படுத்திடும்போது ஏற்படும் ஆனால் லினக்ஸில் ஏற்கனவே உள்ள வன்பொருட்கள் மட்டுமல்லாத புழக்கத்திற்குவரும் அனைத்து புதிய வன்பொருட்களையும் கையாளும் திறனை அவ்வப்போது கட்டணமெதுவும் செலுத்தாமல் நிகழ்நிலை படுத்தி மேம்படுத்தி கொள்ளலாம்
2 லினக்ஸ் இயக்கமுறைமையானது பயன்படுத்திட எளிதானது விண்டோவை போன்று வரைகலை பயனாளர் இடைமுகப்பு போன்றில்லாமல் கட்டளைவரிகளின் வாயிலாக மட்டுமே லினக்ஸை பயன்படுத்திடமுடியும் எனும் தவறான கருத்து அனைவரின் மனதிலும் இருந்துவருகின்றது அவ்வாறான தவறான கண்ணோட்டத்தை இன்றே விட்டுவிடுக லினக்ஸ் இயக்கமுறைமையை கட்டளைவரி இல்லாமலேயே விண்டோவை போன்றே வரைகலை பயனாளர் இடைமுகப்பின் வாயிலாக செயல்படுத்திடமுடியும் மேலும் விண்டோவில் மட்டும் செயல்படும் பயன்பாடுகளை லினக்ஸ் இயக்கமுறைமையில் Wine(windoemulater)உதவியுடன் செயல்படுத்தி பயன்பெறலாம் விண்டோவில் பயன்படுத்திடும் அனைத்து விளையாட்டுகளையும் Play on Linuxஎன்பதை நிறுவுகை செய்வதன்வாயிலாக பயன்படுத்தி கொள்ளலாம்
3லினக்ஸ் இயக்கமுறைமையில் வாடிக்கையாளர் விரும்பியவாறு மாற்றியமைத்தல் இணைய உலாவி, டிவிடி இயக்குதல், வரைகலைபயனார் இடைமுகப்பு, சின்னஞ்சிறிய பயன்பாடுகளை கையாளுதல்ஆகிய அனைத்தையும் வாடிக்கையாளர் தாம் விரும்புவதற்கேற்ப மாற்றியமைத்து பயன்படுத்தி கொள்ளமுடியும்
4லினக்ஸ் இயக்கமுறைமையை கல்விநிலையங்களில்பயன்படுத்துதல் கல்விநிலையங்களில் பயிலும்மாணவர்கள் எந்தவொரு மென்பொருளும் எவ்வாறு செயல்படுகின்றது அதனை மாறுதல்கள் செய்தால் என்னவிளைவு ஏற்படும் அதனை விரிவாக்கம்செய்தால் என்ன நிகழ்வு ஏற்படும் என்பனபோன்ற செயல்முறைகளை கட்டணமில்லா லினக்ஸ் இயக்கமுறைமையில் செயல்படுத்தி சரிபார்த்து தங்களுடைய கல்வியறிவை மேம்படுத்திட கொள்ளமுடியும்
5 லினக்ஸ் இயக்கமுறைமைக்காக செயல்படும் பல்வேறு உதவிக்குழுக்கள் எந்தநேரத்திலும் நமக்கு ஏற்படும் எந்தவொரு சிக்கலையும் தீர்வுசெய்வதற்கு தயாராக இந்த உதவிகுழுக்கள் இருக்கின்றன
அதுமட்டுமல்லாது லினக்ஸ் இயக்கமுறைமையானது கட்டணமற்றது கட்டற்றது மிகவும் பாதுகாப்பானது

Previous Older Entries