புதிய ராஸ்பெர்ரி பிஐ3 மாதிரிA+ என்பது தற்போது வெளியிடப்பட்டுள்ளது

மிகச்சிறிய அளவில் குறைந்த எடையில் ethernetஇல்லாமல்WiFi உடனும்,ஒன்றிற்கு மேற்பட்ட USB portsஉடனும், கூடுதலான RAMஉம் சேர்த்து மிககுறைந்த மின்சாரத்தில் செயல்படும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது இது 25 அமெரிக்க டாலர் எனும் மிகக்குறைந்தவிலையில் கிடைக்கின்றது ஆயினும் கல்விபணிக்கெனில் கட்டணமில்லாமலும் கிடைக்கின்றது இதனை கொண்டு குறைந்த இடவசதியில் மிகுதியான பயன்களை கொண்ட பல்லூடக மையமாக நாம் கட்டமைத்து கொள்ள முடியும் அதுமட்டுமல்லாதுபடத்திலுள்ளவாறு மிகச்சிறியஅளவு இயந்திர மனிதனைகூட இதன் வாயிலாக மிகஎளிதாக விரைவாக கட்டமைவு செய்து தானியங்கியான பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ளமுடியும்


மேலும் விவரங்களுக்கு https://www.raspberrypi.org/ எனும் இணையமுகவரிக்கு சென்று அறிந்து பயன்படுத்தி கொள்க

Kodi எனும் இயக்கமுறைமையை கொண்டு Raspberry Pi ஐ நம்முடைய வீட்டின் பல்லூடக மையமாக மாற்றியமைத்துகொள்க

நம்முடைய வீடுகளில் கணினியைபல்லூடக மையமாக அமைப்பதற்கு மிகபொருத்தமாக இருப்பது Kodi எனும் கட்டற்ற பயன்பாடாகும் அதிலும் Raspberry Pi ஐ சேர்த்து பல்லூடகமையமாக அமைப்பது செலவு குறைவான எளிதானசெயலாகும் இதற்கு தேவையானவை Raspberry Pi 3B+அல்லது சமீபத்திய வெளியீடு இரண்டாவதாக விருப்பப்பட்டால் USB Wi-Fi dongle என்பது மூன்றாவதாக HDMIஎனும் இணைப்பு கம்பி நான்காவதாகஇந்தRaspberry Pi 3B+ இற்கு பொருத்தமான மின்சாரம்வழங்கும் வாயில்கள் ஐந்தாவதாக 8 GB அல்லது அதற்குமேலும் நினைவகத்தொகொண்ட MicroSDஎனும் அட்டை ஆகியவைமட்டுமேயாகும்

நாம் நம்முடைய Raspberry Pi இல் Raspbian Jessieஎன்பதை செயல்படுத்துபவராக இருந்தால் மிகஎளிதாக கட்டளைவரி சாளரத்தை திறந்து கொண்டு
sudo apt-get install kodi
எனும் கட்டளை வரியை உள்ளீடு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக தொடர்ந்து
sudo nano /etc/default/kodi
எனும் கட்டளை வரியை உள்ளீடு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக பின்னர் விரியும் திரையில்
ENABLED=1
என்றவாறு ENABLEDஅமைவை மாற்றியமைத்திட்டு Ctrl + Z ஆகிய விசைகளை சேர்த்து அழுத்தி இந்த அமைவினை சேமித்து வெளியேறுக அதற்கு பதிலாக Kodi எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது கட்டளைவரி சாளரத்தை திறந்து கொண்டுkodi எனும் கட்டளை வரியை உள்ளீடு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக வேறொரு வகையில் kodiஎனும் இயக்கமுறைமையை Raspberry Pi இல் நிறுவுகை செய்திட LibreELEC, OpenElec ,OSMC.ஆகிய மூன்று வாய்ப்புகள் தயாராகவுள்ளன முதலாவதற்கான libreelec.tvஎனும் கோப்பினை பதிவிறக்கம் செய்து கொள்க இரண்டாவதற்கான openelec.tvஎனும் கோப்பினை Raspberry Pi இல்செயல்படும் NOOBS எனும் பயன்பாட்டின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்க.அவ்வாறே மூன்றாவதின் osmc.tvஎனும் கோப்பினைRaspberry Pi இல்செயல்படும் NOOBS எனும் பயன்பாட்டின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்க

அடுத்து etcher.io எனும் பயன்பாட்டினை பதிவிறக்கம் செய்து நம்முடைய MicroSDஎனும் அட்டையில் நிறுவுகைசெய்து கொள்க இந்த அட்டையானது நம்முடைய கணினியுடன் card reader பகுதியில் இணைக்கப்பட்டுள்ளதை உறுதிபடுத்தி கொள்க Select image என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் Select drive என்பதன் கீழ்நாம் தெரிவுசெய்தது சரியான இயக்ககமாவென உறுதிபடுத்திகொண்டு Flash என்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன் MicroSDஎனும் அட்டையில் Etcher எனும் பயன்பாடானது OpenElec அல்லது OSMC image கோப்பு எழுதப்படும் செய்தியை திரையில் பிரதிபலிக்கும்


இந்த பணி முடிவடைந்ததும் MicroSDஎனும் அட்டையை கணினியிலிருந்து வெளியிலெடுத்து Raspberry Pi உடன் இணைத்திடுக உடன் இந்த Raspberry Pi செயல்படச்செய்தால் kodiஎனும் இயக்கமுறைமையை Raspberry Pi இல் செயல்படத்தயாராகவிடும்

தொடர்ந்து நல்ல தரமான படத்தையும் ஒலியையும் கொண்டுவருவதற்காக Ethernet கம்பியை பயன்படுத்திகொள்க அருகலை இணைப்பு தேவையில்லை தொடர்ந்து சரியான USB வாயிலில் HDMI கம்பியின் வாயிலாக தரமான ஒலியை பெறுவதற்கு Full-HD PCM5122 Amplifier X400 Expansion Board என்பதைபயன்படுத்தி கொள்க IR receiver ஐ இணைத்து தொலைவிலிருந்து கட்டுபடுத்துவதற்காக IR Remoteஆக பயன்படுத்தி கொள்க பல்லூடக கோப்புகளை கையாள 8GB microSD அட்டையே போதுமானதாகும் 64GBஅளவு அட்டையில் பல்லூடகம் சரியாக செயல்படாது அதனால் தேவையில்லை SATA இயக்ககம் வாயிலாக 8GB microSD அட்டையை Raspberry Pi இல் இணைத்து கொள்க இறுதியாக Niche எனும் கூடுதல் இணைப்பை ( add-ons) ஏற்படுத்தி YouTube, Hulu, Spotify, BBC iPlayer போன்றவைகளை செயல்படச்செய்து கண்டுகளிக்கலாம் இந்தபல்லூடகத்தை உடனடியாக நம்முடைய வீட்டின் வரவேற்பறையில் அல்லது படுக்கைஅறையில் உடன் கட்டமைத்துபயன்படுத்திக் கொள்க

பொருட்களுக்கான இணையமான Android Thingsஎன்பதை ராஸ்பெர்ரி பிஐ3 எனும் கணினியுடன் எவ்வாறு இணைப்பது

இதற்கான படிமுறை பின்வருமாறு
படிமுறை.1: முதலில் இதற்காகRaspberry Pi 3 ,2.8GB MicroSD Card ,3.Android Things Image ,4Win32DiskImager ஆகிய நான்கையும் சேகரித்து கொள்ளவேண்டுமென பட்டியலிடுக
படிமுறை.2: அடுத்து https://developer.android.com/things/index.htmlஎனும் இணையதளத்திற்கு செல்க அங்கு Get Developer Preview எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் திரையில் “Raspberry Pi 3என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் Latest preview Image என்பதை தெரிவுசெய்து சொடுக்குக இதன்பின்னர் தேவையான Android Thingsஇன் இமேஜ் கோப்பின் பெயரை தெரிவுசெய்து download எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குகு பின்னர் விரியும் திரையின் நிபந்தனைகளை ஏற்றுகொண்டபின்னர் பதிவிறக்கம் ஆகும்
படிமுறை.3: மேலே படிமுறை2இல் கூறியவாறு பதிவிறக்கம் செய்த கட்டப்பட்ட கோப்புகளிலிருந்து Android Thingsஇன்இமேஜ் கோப்பினை வெளியிலெடுத்திடுக அதனை தொடர்ந்து Win32DiskImager எனும் பயன்பாட்டினை செயல்படசெய்திடுக உடன்தோன்றிடும் திரையில் நம்முடையAndroid Thingsஇன் இமேஜ் கோப்பினை தெரிவுசெய்து கொள்க மேலும்MicroSD Card என்பதையும் தெரிவுசெய்து கொள்க பின்னர் Write எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் MicroSD அட்டையில் Android Thingsஇன் இமேஜ் கோப்பானது எழுதப்படும் இந்த பணிமுடிவடைந்ததும் MicroSD அட்டையை வெளியேற்றி எடுத்திடுக
படிமுறை.4: நம்முடைய Raspberry Pi 3 கணினியில் நாம் ஏற்கனவே Android Thingsஇன் இமேஜ் கோப்பினை எழுதிய MicroSD அட்டையை அதற்கான வாயிலில் உள்செலுத்தி பொருத்துக பின்னர் துவக்கஇயக்கம் நடைபெறுவதற்காக சிறிதுநேரம் காத்திருக்கவும் தொடர்ந்து Android Things ஆனது ராஸ்பெர்ரி பிஐ3 உடன் இணைந்து முதன்மை திரை தோன்றிடும் அவ்வளவுதான் நான்கே படிமுறையில் பொருட்களுக்கான இணையமான Android Thingsஎன்பதை ராஸ்பெர்ரி பிஐ3 எனும் கணினியுடன் இணைத்து திரையில் தோன்றிட செய்துவிட்டோம்
நன்றி. கணியம் இணைய இதழ்

பொருட்களுக்கான இணையமான Android Thingsஎன்பதை ராஸ்பெர்ரி பிஐ3 எனும் கணினியுடன் எவ்வாறு இணைப்பது

இதற்கான படிமுறை பின்வருமாறு
படிமுறை.1. முதலில் இதற்காகRaspberry Pi 3 ,2.8GB MicroSD Card ,3.Android Things Image ,4Win32DiskImager ஆகிய நான்கையும் சேகரித்து கொள்ளவேண்டுமென பட்டியலிடுக
படிமுறை.2. அடுத்து https://developer.android.com/things/index.htmlஎனும் இணையதளத்திற்கு செல்க அங்கு Get Developer Preview எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் திரையில் “Raspberry Pi 3என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் Latest preview Image என்பதை தெரிவுசெய்து சொடுக்குக இதன்பின்னர் தேவையான Android Thingsஇன் இமேஜ் கோப்பின் பெயரை தெரிவுசெய்து download எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குகு பின்னர் விரியும் திரையின் நிபந்தனைகளை ஏற்றுகொண்டபின்னர் பதிவிறக்கம் ஆகும்
படிமுறை.3. மேலே படிமுறை2இல் கூறியவாறு பதிவிறக்கம் செய்த கட்டப்பட்ட கோப்புகளிலிருந்து Android Thingsஇன்இமேஜ் கோப்பினை வெளியிலெடுத்திடுக அதனை தொடர்ந்து Win32DiskImager எனும் பயன்பாட்டினை செயல்படசெய்திடுக உடன்தோன்றிடும் திரையில் நம்முடையAndroid Thingsஇன் இமேஜ் கோப்பினை தெரிவுசெய்து கொள்க மேலும்MicroSD Card என்பதையும் தெரிவுசெய்து கொள்க பின்னர் Write எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் MicroSD அட்டையில் Android Thingsஇன் இமேஜ் கோப்பானது எழுதப்படும் இந்த பணிமுடிவடைந்ததும் MicroSD அட்டையை வெளியேற்றி எடுத்திடுக
படிமுறை.4. நம்முடைய Raspberry Pi 3 கணினியில் நாம் ஏற்கனவே Android Thingsஇன் இமேஜ் கோப்பினை எழுதிய MicroSD அட்டையை அதற்கான வாயிலில் உள்செலுத்தி பொருத்துக பின்னர் துவக்கஇயக்கம் நடைபெறுவதற்காக சிறிதுநேரம் காத்திருக்கவும் தொடர்ந்து Android Things ஆனது ராஸ்பெர்ரி பிஐ3 உடன் இணைந்து முதன்மை திரை தோன்றிடும் அவ்வளவுதான் நான்கே படிமுறையில் பொருட்களுக்கான இணையமான Android Thingsஎன்பதை ராஸ்பெர்ரி பிஐ3 எனும் கணினியுடன் இணைத்து திரையில் தோன்றிட செய்துவிட்டோம்

NODE’s Raspberry Pi என்பதை சிறிய பணிகளின் சேவையாளராகபயன்படுத்தி கொள்ளலாம்

நாம் இணையதளத்தை அணுகும்போதும் அல்லது இணைய அடிப்படையிலான சேவையை அணுகும்போதும்,ஏதேனுமொரு மிகப்பெரிய நிறுவனங்களின் தொழில்நுட்ப வலிமையையும் நல்லெண்ணத்தையும் நம்பியிருக்க வேண்டியுள்ளது.மேலும் இவ்வாறான இணையத்தை அணுகிடும் செயலானது நம்முடையISP ஆல் கட்டுப்-படுத்தப்படுகிறது, இந்த ISP ஆனது சிறிய எண்ணிக்கையிலான பல்வேறு பிரதான முனையங்கள் வாயிலாக நாம் இணையத்தை சென்றடைவதற்கான வழிகளை மாற்றியமைக்கின்றது. பொதுவாக இணையதளமானது எங்காவதுஉள்ளதொரு சேவையாளர் தொகுப்புகளால் வழி நடத்தப்படுகின்றது, ஆயினும் நம்முடைய தரவுகளானது உண்மையான வலைதளம் அல்லது சேவையால் பொருந்தக்கூடியதாக இருப்பினும் அவற்றைப் பயன்படுத்தலாம் என்பதை மையபடுத்துவதற்குபதிலாக பரவலாக்கப்பட்ட இணையதளங்கள் உறுதிசெய்கின்றது இதுவே மிகச்சரியானதும் உறுதியானதுமாகும் இந்த நோக்கத்திற்காக NODE’s Raspberry Pi Mini Server என்பதே மிகபொருத்தமானதாகும் எந்தவொன்றையும் NODE ஆல் வடிவமைப்பு செய்வதை போன்று ஒரு குறிப்பிட்ட சிறிய பணியையும் சிறப்பாக செய்திடும்பொருட்டு இந்த சிறிய சேவையாளரும் NODE ஆல் வடிவமைப்பு செய்யப்படுகின்றது ஆயினும் இந்த சிறியசேவையாளரும் வெளிப்புற கூண்டுமட்டுமே அதன்உள்ளக கட்டமைப்பு போதுமானதாகஒரு ராஸ்பெர்ரி பை யினால் கட்டமைப்பு செய்யப்பட்டு சேவையாளராக பயன்படுத்தப்படுகின்றது இவ்வாறான சிறு சேவையாளர்களின் போட்டியாளர்களான Asus Tinker Board , ODroid-C2ஆகியவைவிட இந்த ராஸ்பெர்ரி பை மிகத்திறன்வாய்ந்ததாக விளங்குகின்றது ஒரு முப்பரிமான அச்சுப்பொறியால் NODE இன் சிறு சேவையாளர் கூண்டினை உருவாக்கிடமுடியும் ஆயினும் இதனுள் கட்டமைக்கப்படும் ராஸ்பெர்ரி பையிற்கு மட்டும் ஒருசில மாறுதல்களும் சில கூடுதலான ஏற்பான்களும் தேவையாகும் ஏனெனில் HDMI , SD card போன்றவைகளின் வாயில்கள் பின்புறத்தில் அமைந்திருக்கின்றது. இதனை கட்டமைவு செய்திடுவதற்காக தேக்கும் திறன் 3டிபி விரிவாக்கத்திறனுடன் கூடிய ஒரு 2.5″ SATA மடிக்கணினியின் வன்தட்டும் ஒரு ஏற்பானும் போதுமானதாகும் நாம் இவைகளை கொண்டு NODE’s Raspberry Pi Mini Server எனும் சிறிய சேவையாளரை உருவாக்கி பயன்படுத்தி கொள்ளமுடியும்