எந்தவொரு ஜாவா நிரலாளரும் பயன்படுத்தி கொள்வதற்கான சிறந்த இயந்திரமொழிமாற்றிகள்

ஜாவா எனும் கணினிமொழியில் குறிமுறை எழுவது என்பது மிகவும் சிலிர்ப்பூட்டும் அனுபவமாக அமைகின்றது அதிலும் ஜாவாவில் சிறிது அனுபவம் பெற்று ஒருசில துனுக்கு குறிமுறைவரிகளை எழுதி பிரபலமான IDEs களையும் கருவிகளையும் கொண்டு ஏற்புகை செய்துஇயந்திர மொழிக்கு மொழிமாற்றம் செய்து செயல்படுத்தி பெறப்படும் முடிவுகளை கண்டவுடன் எதையும் வெற்றிகொள்ள முடியும் என நம்முடைய மனதில் ஏற்படும் புதியதொரு புத்துணர்விற்கு இவ்வுலகிள் ஈடு இணைஏதுமில்லை தற்போது அவ்வாறான ஜாவாவின் இயந்திரமொழிமாற்றிகள் ஏராளமான வகையில் இணையத்தில் கிடைக்கின்றன அவைகளை பற்றிய ஒரு பறவை பார்வை பின்வருமாறு
1. CompileJava ஜாவாகுறிமுறைவரிகளை மிகஎளிமையாக இயந்திரமொழிக்கு மாற்றிட இது உதவுகின்றது மொழிமாற்றம் செய்வதுமட்டுமல்லாமல் அதனை செயல்படுத்தினால் உருவாகும் இறுதிவிளைவுகளை இணையத்தின் வாயிலாக காணவும் தேவைப்பட்டால் குறிமுறைவரிகளில் இணையத்தின் வாயிலாகவே மாறுதல் செய்திடவும் இது பயன்படுகி்ன்றது இதற்காக நம்முடைய ஜாவா குறிமுறைவரிகளை நகலெடுத்து இந்த தளத்தில் ஒட்டுவதுமட்டுமே நம்முடைய பணியாகும் அதன்பின் இந்த தளமானது அந்த குறிமுறைவரிகளை இயந்திரமொழிக்கு மொழிமாற்றம் செய்து கொண்டு அதனை செயல்படுத்தினால் இறுதி விளவு என்னவாக இருக்கும் என ஒரு சில நொடிகளில் திரையில் காண்பிக்கின்றது நாம் இந்த குறிமுறைவரிகளுக்கான பெயரை இடத்தேவை-யில்லை இந்த தளமானது நம்முடைய குறிமுறைவரிகளை அலசிஆராய்ந்து குறிமுறை-வரிகளை பிரித்து public class என்பது எங்கிருக்கின்றது என தேடிகண்டுபிடித்து தானாகவே இந்த குறிமுறைவரிகளுக்கு ஒரு பெயரை சூட்டிவிடுகின்றது ஒரே பதிப்பானில் ஒன்றிற்கு மேற்பட்ட public classகளை இதில் உள்ளீடு செய்திட முடியும் இந்த தளத்தினை பயன்-படுத்தி கொள்வதற்காக கட்டணம் எதுவும் நாம் செலுத்ததேவையில்லை இதற்கான இணைய முகவரி http://Compilejava.net/ ஆகும்
2. Ideaoneஎன்பது மிகவும் சிக்கலான அதிக சிரமமத்திற்குரிய ஜாவாகுறிமுறை வரிகளுக்கு இது மிகசிறந்ததொரு கருவியாக விளங்குகின்றது இதுவும் இணையத்தின் வாயிலான குறிமுறைவரிகளை இயந்திரமொழிக்குமாற்றிடுகின்ற கருவியாகும்.இது 60 இற்குமேற்பட்ட கணினிமொழிகள் இயங்குவதற்காக அனுமதிக்கின்றது இதிலிருந்து மூலக்குறிமுறை-வரிகளை பதிவிறக்கம் செய்தல் பொதுமக்கள் பயன்படுத்திடும் குறிமுறைவரிகளை பார்வையிடுதல் அதிலுள்ள பிழைகளை சுட்டிகாட்டிடுதல் ஆகியவை நிரலாளர்களால் விரும்பபடும் இதன் சிறப்பு தன்மையாகும் API ஐ மொழிமாற்றம் செய்வதற்காக ஒரு சேவையாக கிடைப்பதே இதனுடைய மற்றொரு சிறப்பு தன்மையாகும் அதாவது இந்த API இன் சேவையின் வாயிலாக நம்முடைய சொந்த IDE, ஐ நம்முடைய இணைய-பக்கத்தில் நாமே கட்டமைவு செய்து பயன்படுத்தி கொள்ளமுடியும் இது ஜாவா 9 பதிப்பை மட்டும் ஆதரிக்கின்றது இதனுடைய இணையமுகவரி http://Ideaone.com/ஆகும்
3.Codiva என்பது புதியவர்கள் மட்டுமல்லாது அனுபவமிக்கவர்களும் பயன்படுத்தி கொள்ள ஆர்வமூட்டுமொரு மொழிமாற்றி இணையதளமாகும் இதனுடைய compiler boxஇல் நம்முடைய ஜாவா குறிமுறைவரிகளை உருவாக்க துவங்கிய அடுத்த நொடியே இது தன்னுடைய பணியை துவங்கி வெளியீடு என்னவாக இருக்குமென நாம் முடிக்குமுன் பிழைகளை தனித்தனியாக பிரித்து காண்பிக்கசெய்து சரிசெய்திடுமாறு வழிகாட்டுகின்றது அதற்கடுத்ததாக நாம் குறிமுறைவரிகளின் ஓரிரு எழுத்துகளை உள்ளீடுசெய்திடும் போதே auto-complete எனும் வசதியால் மிகுதிகுறிமுறைவரிகளை தானாகவே பூர்த்தி செய்து-கொள்கின்றது இது பல்வேறு கோப்புகளையும் கட்டுகளையும் எளிதாக கையாளுகின்றது மிகமுக்கியமாக இவ்வாறு செயல்களை நம்முடைய கைபேசியிலிருந்தே செயல்படுத்தி பயன்படுத்தி கொள்ளமுடியும் என்பதுதான் இதன் சிறப்பு தன்மையாகும் அதாவது நாம் எங்கிருந்தும் எந்தநேரத்திலும் நம்முடைய திறன்பேசி வாயிலாக இதனை பயன்படுத்தி கொள்ளமுடியும் இதற்கான இணைய முகவரி http://Codiva.com/ ஆகும்
4. Jdoodle என்பது ஜாவா மட்டுமல்லாது 70இற்கும் மேற்பட்ட கணினிமொழிகளை ஆதரிக்கின்றது நாம் தனியாக நம்முடைய குறிமுறைவரிகளுக்கு பெயரிடத்தேவை-யில்லை CompileJava போன்றே நம்முடைய குறமுறைவரிகளுக்கு இது தானாகவே பெயரிட்டுகொள்கின்றது பல்வேறு முனைமங்களின் மூலம் இதனோடு இடைமுகம் செய்து நம்முடைய புதிய செயல்தி்ட்டத்தினை உருவாக்கி செயல்படுத்தி கொள்ளமுடியும் இதனுடைய இணையமுகவரி http://Jdoodle.com/ ஆகும்
5.Browxy என்பதுமிக கடினமான பணியினால் மனஉளைச்சல் கொண்ட நிரலாளர்களும் நிம்மதியாக இருப்பதற்கேற்ப இதுமொழிமாற்றும் பணியினை எளிதாக செயல்படுத்தி நம்முடைய மனதிற்கு மகிழ்ச்சியூட்டுகின்றது அதற்காக நமக்கென தனியாக கணக்கு துவங்குவதான் நாம் செய்யவேண்டியது நம்முடைய குறிமுறைவரி துனுக்குகளை இதில் சேமித்து வைத்து கொண்டு தேவைப்படும் புதியவர்களுக்கு கூட வழங்க அனுமதிக்கின்றது இதுமிகவும் பிரபலமான மொழிமாற்றியாகும் இதனுடைய இணைய-முகவரி http://Browxy.com.com/ ஆகும்
6. Rextesterஎன்பது வழக்கமான பரிசோதிப்புபணியில் ஆரம்பித்து தற்போதுஜாவாவின் மொழிமாற்றியாக வளர்ந்துவந்துள்ளது இது ஜாவா மொழி மட்டுமல்லாது சி, சி++ போன்ற 27 இற்கும் மேற்பட்ட கணினிமொழிகளின்மொழிமாற்றியாக விளங்குகின்றது நம்முடைய தேவைகேற்ற கணினிமொழிக்கு உடனுக்குடன் மாறிகொள்ள இது அனுமதிக்கின்றது ஒன்றுக்குமேற்பட்ட பயனாளர்கள் இணயமுகவரிகளில் சிக்கல் எதுவுமில்லாமல்ஒரே கோப்பில் மட்டும் ஒரேஇணைய பக்கத்தினை பகிர்ந்து பயன்படுத்தி கொள்ள இது அனுமதிக்கின்றது இதனுடைய இணைய முகவரி http://Rextester.com/ ஆகும்