மேககணினிசேவையை பெறுபவர்கள் தவிர்க்கவேண்டிய தவறுகள்

சொந்தமான கணினிவளங்கள் இல்லாமல் தங்களுக்குதேவையான கணினியின் பணிகளை செய்துமுடிப்பதற்காக இந்த மேககணினி சேவையாளர்கள் மிகமுக்கிய பங்குவகிக்கின்றன அதிலும்ஒவ்வொருசேவைக்கும் வெவ்வேறுமேககணினி சேவையாளரை பயன்படுத்தி கொள்ளும்போது தேவைப்பட்டால் கூடுதலாக சுறுசுறுப்பான உயர்ந்த ஆற்றலுடன் கூடிய மேககணியின் சேவையை பெறுவதற்காக தவிர்க்கவேண்டியதவறுகள் பின்வருமாறு
1.முதலாவதாக SaaS , IaaSபோன்ற பயன்பாடுகளை வழங்கிடும் போட்டியாளர்களின் சேவையானது நம்முடைய தேவையை நிறைவுசெய்வதாக உள்ளதாவென சரிபார்த்து பெற்றிடுக அதாவது முழுமையான சேவையை ஒருசேவையாளரே வழங்கதயாராக இருக்கும்போது ஒவ்வொரு சேவைக்கும் ஒவ்வொரு சேவையாளர்என குழப்பவேண்டாம்
2. அடுத்ததாக Load balancing ,Health monitoring, Latency,Code deployment,Securityபோன்றவைகளை முதலில் வடிவமைத்துகொண்டு அதற்கேற்ற மேககணினிசேவையைபெற்றிடுக
3.மூன்றாவதாக மேககணினியின் சேவையை பெறுவதற்கானongoing management cost, maintenance costஆகிய செலவினங்களை கவணத்தில் கொள்க
4.நான்காவதாக தற்போதுஉள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் அல்லது அரண்கள் அப்படியே பல்லடுக்கு மேககணினிசேவையிலும் தொடர்கின்றதா என்பதை உறுதிபடுத்தி கொள்க
5.ஐந்தாவதாக மேககணினிசேவையாளர் வேறு ஒருங்கிணைந்த மேககணினிசேவையாளர் வேறுஎன்ற அடிப்படையை புரிந்து கொண்டு அதற்கேற்ப நம்முடைய தேவைக்கேற்ற மிகவும் பொருத்தமான மேககணினிசேவையாளரை பயன்படுத்தி கொள்க

Bluemix எனும் சேவையாளர் ஒரு அறிமுகம்

இது ஒரு திறமூல செந்தரமான மேககணினிஅடிப்படையில்செயல்படும் பயன்பாடுகளை உருவாக்கி பராமரித்திடஉதவும் Platform as a Service (PaaS) ஆக கருதப்படும் சேவையாளராகும் இது மேம்படுத்துநர்களுக்கு ஒரு முகப்பு பக்கத்தை வழங்கி அதன்வாயிலாக சேவைகளையும் பயன்பாடுகளைும் உருவாக்கி பராமரித்து கண்கானித்திட உதவுகின்றது இது ஜாவா, பைத்தான்,ரூபீஆன்ரெயில்,பிஹெச்பி, நோட்.ஜோஎஸ் ஆகிய கணினிமொழிகளை ஆதரிக்கின்றது இது ஐபிஎம் நிறுவனத்தின் மென்பொருள்தளத்தின்மீது Infrastructure as a Service(IaaS) என்றவாறு கட்டமைக்கப்-பட்டுள்ளது. இது Cloud Foundry ஐ திறமூல PaaS ஆக பயன்படுத்தி கொள்கின்றது அதனால் குறிமுறைவரிகளை Cloud Foundry வாயிலாக மிகப்பாதுகாப்பாக செயல்படச்செய்கின்றது இது பல்வேறுதளங்களையும் பல்வேறு கணினி-மொழிகளையும ஆதரிக்கின்றது இதில் குறைந்த பதிவு செயல்களைகொண்டே இதனைபயன்படுத்தி கொள்ளமுடியும் இதனை முதலில் 30 நாட்கள் மாதிரிசெயலாக பயன்படுத்தி கொள்ளலாம் அதன்பின்னர் ஒவ்வொரு சேவைக்கும் குறைந்த கட்டணைத்தையே கோருகின்றது இது செல்லிடத்து பேசிகளியே செயல்படும் திறன்மிக்கது மிகவிரைவாக கட்டமைவுசெய்வதையும் இயங்குவதையும் உறுதிபடுத்திடுகின்றது
இதனை பயன்படுத்தி கொள்ள https://console.ng.bluemix.net/registration/ எனும் தளத்திற்கு சென்று உங்களுக்கென தனியாக கணக்கு ஒன்றினை உருவாக்கிகொள்க பின்னர் இந்த தளத்திற்குள் உள்நுழைவுசெய்திடுக அதன்பின்னர் நம்முடைய பகுதியைEnvironment, dev,test,uat, pre-prod prod ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கிகொண்டு I am ready.Good to Go என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்நமக்கு ஒதுக்கப்பட்ட முகப்பு பக்கத்தில் Cloud Foundry 2GB,Virtual Server 0 ஆகிய அனைத்தும் சரியாக இருக்கின்றது எனில்Create app எனும் பொத்தானை சொடுக்குக . அதனை தொடர்ந்து நாம் இணையபக்கத்தினை உருவாக்கவிருப்பதால் ஜாவா என்பதை தெரிவுசெய்து கொண்டுContinue எனும் பொத்தானையும் பின்னர் மற்றவழிமுறைகளையும் பின்பற்றி இறுதியாக Finishஎனும் பொத்தானையும் சொடுக்குதல்செய்து இந்த பணியை முடிவிற்கு கொண்டுவருக . உடன் நாம்விரும்பிய நமக்கான இணைய பயன்பாடு ஒன்று உருவாகி நாம் பயன்படுத்தி கொள்வதற்காக தயாராகிவிடும்

OwnCloudஎனும் கட்டற்ற மேககணினி பயன்பாட்டினை பயன்படுத்தி கொள்க

OwnCloudஎன் பது ஒரு கட்டற்ற கோப்புகளை ஒத்தியங்கசெய்து பகிர்ந்து கொள்ள(file sync and share) உதவும் ஒரு மேககணினி பயன்பாடாகும் தனிநபர் முதல் பெரிய நிறுவனங்கள், கணினி சேவையாளர்கள்வரை அனைவரும் கட்டணமில்லாமல் இதனை பயன்படுத்தி கொள்ளலாம் இதன்மூலம் நம்முடைய கணினியில் உள்ள ஒன்றிற்கு மேற்பட்ட கோப்புகளையும் கோப்பகங்களையும் ஒத்தியங்க செய்து பகிர்ந்து கொள்ளலாம் நம்முடைய கணினியில் வைத்துள்ள கோப்புகளையும் கோப்பகங்களையும் இந்த பயன்பாட்டின் வாயிலாக மற்ற கணினி அல்லது ஆண்ட்ராய்டு செல்லிடத்து பேசி ஐஓஎஸ் செல்லிடத்து பேசிகளுடன் பகிர்ந்து கொள்ளமுடியும் இந்நிலையில் மேககணினியில் எத்தனையோ வகை நாம் பயன்படுத்தி கொள்வதற்காக தயாராக இருக்கும்போது அவைகளை பயன்படுத்தி கொள்ளாமல் இந்த OwnCloudஎன்பதை மட்டும்ஏன் பயன்படுத்திகொள்ளவேண்டும் என்ற நியாயமான கேள்வி நம்முடைய அனைவரின் மனதிலும் கண்டிப்பாக எழும் ஏனெனில்இது ஒரு கட்டற்ற கட்டணமற்ற நம்முடைய சொந்த கணினியையே சேவையாளர் கணினியாக செய்து செயற்படுத்த உதவும் ஒரு எளியதொரு கருவியாக விளங்குகின்றது இதனை நிறுவுகை செய்து செயல்படுத்திகொள்வதற்கு 128எம்பி ரேம் (512 எம்பி ரேம் பரிந்துரைக்கபடுகின்றது) ,அப்பாச்சி2.4 mod_php, PHP5.4+,MySQL MariaDB ஆகியவை அடிப்படை தேவையாகும் இந்தபயன்பாட்டினை https://owncloud.org/ , https://github.com/owncloud/ ஆகிய தளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்க இதனை கொண்டு மின்னஞ்சல் சேவையாளர் போன்றும் ,பல்லூடுக செயலியாகவும் ,மேலும் பல்வேறு வகையான பயன்பாடுகளுள் நமக்கு தேவையானதை செயல்படுத்திடுவதற்காக இதனுடைய apps.owncloud.com எனும் தளத்திலிருந்து பதிவவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்