ஜிமெயிலின் புதிய வசதிவாய்ப்புகள்

நம்முடைய மின்னஞ்சலில் நம்முடைய கையெழுத்து அல்லது முக்கியமான பழமொழிகளை தானாகவே உருவாகுமாறு செய்து அனுப்பலாம் இதற்காக ஜிமெயிலின்மேலே வலதுபுற மூலையிலுள்ள cog என்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் பட்டியலில் Settings என்ற வாய்ப்பையும் பின்னர் விரியும் Settings எனும் பட்டியலில் General எனும் தாவிபக்கத்தை விரியச்செய்திடுக அதன்பின்னர் விரியும் General எனும் தாவிபக்கத்தில் Signature எனும் பகுதியில் நம்முடைய கையெழுத்து அதற்கான வண்ணம் பாவணைகள் இணைப்புகள் உருவப்படங்கள்போன்றவைகளை உருவாக்கி இணைத்துகொண்டு save changesஎனும் பொத்தானை சொடுக்குக இதன்பின்னர் நாம் அனுப்பிடும் மின்னஞ்சல்கள் நம்முடைய கையெழுத்தானது நாம் கட்டமைத்தவாறு தானாகவே உருவாவதை காணலாம்
இந்த ஜிமெயிலின் சேவையை இணைய இணைப்பில்லாத போதும் பயன்படுத்திக் கொள்ள முடியும் இதற்காக ஜிமெயிலின்மேலே வலதுபுற மூலையிலுள்ள cog என்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் பட்டியலில் Settings என்ற வாய்ப்பையும் பின்னர் விரியும் Settings எனும் பட்டியலில் Offline எனும் தாவிபக்கத்தை விரியச்செய்திடுக பின்னர் விரியும் Offline எனும் தாவிபக்கத்தில்  Install Gmail Offline எனும் பொத்தானை சொடுக்குக அதன்பின்னர்  Install Gmail Offline எனும் பக்கத்தில்  Add to Chrome > Add app.என்றவாறு கட்டளைகளைதெரிவுசெய்து சொடுக்குக பின்னர்chrome://apps/ என்ற இணையபக்கத்திற்கு சென்று Gmail Offline என்பதை தெரிவுசெய்து சொடுக்குக இதன் பின்னர் நம்முடைய ஜிமெயிலை இணைய இணைப்பில்லாத போதும் பயனபடுத்தி கொள்ளமுடியும்
இதுமட்டுமில்லாது Google Drive,Google Maps,Google Keep,YouTubeஎன்பன போன்ற பல்வேறு வசதிகளும் இந்த ஜிமெயிலில் உள்ளன அவைகளையும் பயன்படுத்தி கொள்க

போலியான வேலைவாய்ப்புஅழைப்பாணையை எவ்வாறு அறிந்து கொள்வது

தற்போதைய இணையயுகத்தில் அதிலும் கைபேசியிலும் இணையத்தை பயன்படுத்திடும் தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறைவாககிடைத்திடும் இன்றைய சூழலில் நம்முடைய மின்னஞ்சல் பெட்டிகளில் வந்து குவியும் ஏராளமான அளவில் மின்னஞ்சல்களுள் போலியான வேலை வாய்ப்பிற்கான அழைப்பாணையை எவ்வாறு அறிந்து கொள்வது என்பதுதான் மிகப்பெரிய சவாலாகும் அதாவதுஇணையத்தில் நாம் உலாவரும்போது நாம் வழங்கிடும் நம்மைபற்றிய அனைத்து தகவல்களை கொண்டு நம்முடைய நிலையைஎளிதாக அறிந்துகொண்டு நம்மிடமிருந்து தங்களுக்கு தேவையான வருமானத்தினை ஈட்டுவதற்காக குறிப்பிட்ட பணியை நமக்கு வழங்குவதாகவும் அந்த பணியில் சேருவதற்குகுறிப்பிட்ட காப்புத்தொகையை உடனடியாக செலுத்திடுமாறு நம்மிடம் கோரி ஏராளமான போலியான மின்னஞ்சல்கள்வந்து சேருகின்றன இவைகளுள் போலியானவை எவையெனஎவ்வாறு காண்பது எனபின்வரும் விவரங்களிலிருந்து அறிந்து கொள்க பொதுவாக போலியான நிறுவனம் எனில் abc_recruitment_drive@yahoo.com,abc_recruitment_drive@gmail .com, abc_recruitment_drive@hotmail .com, போன்றவாறு மின்னஞ்சல் முகவரி இருக்கும் ஆனால் உண்மையானநல்ல நிறுவனம் எனில்@abc.com or @abc.org or @abc.net போன்றவாறு மின்னஞ்சல் முகவரி இருக்கவேண்டும்
நாம் குறிப்பிட்ட துறையில் வல்லவர் நல்லவர் என நம்மை புகழ்ந்துஅதனால் நமக்குஇந்த பணியாணையை வழங்குவதாக கூறுவது போலியானது என அறிந்து கொள்க அடுத்ததாக அனுப்படும் அழைப்பாணையானது பணிஅழைப்பாணை என்று துவங்கிடும் மேலும் வண்ணமயமாக அந்த அழைப்பானை பார்வையாளர்களை கவருமாறான எழுத்துருக்களுடன் அமைக்கப்பட்டிருக்கும் நல்லவை எனில் இவவாறு வண்ணமயமாகவோ வித்தியாசமான எழுத்தருக்களுடனோ இருக்காது மேலும் அந்த போலியானஅழைப்பாணையில் எழுத்துப்பிழைகளும் இலக்கணபிழைகளும் அதிகஅளவில் மலிந்துள்ளதை காணலாம் மேலும் மிகப்பெரிய பதவியை நமக்கு வழங்குவதாக இந்த போலியான அழைப்பாணையில் இருப்பதையும் நம்பவேண்டாம் இவ்வாறான மின்னஞ்சல்களுக்கு இயல்பாக நம்மில் பலர் பதில்மின்னஞ்சல்அனுப்பிடுவோம் அது மனித இயல்புதான் எச்சரிக்கை இவ்வாறு பதில் மின்னஞ்சல்அனுப்புவது நாமே வலியஇந்த வலையில்விழுவதற்கு தயாராக இருக்கின்றோம் என்ற செய்தியை இவர்கள் அறி்ந்து கொள்ள வழிவகுப்பதாக ஆகிவிடும் போலியான பணிஅழைப்பாணையானது மின்னஞ்சலின் இணைப்பாக உருவப்பட கடிதமாக இருக்கும் நல்லநிறுவனமானது எம்எஸ் வேர்டு போன்ற அமைப்பினை மட்டுமே பயன்படுத்திடும்என்ற செய்தியையும் தெரிந்து கொள்க கடைசியாக மிகமுக்கியமாக போலியான பணிஅழைப்பாணையானது இந்த பணியில் சேருவதற்காக குறிப்பிட்ட தொகையை காப்புத்தொகையாக செலுத்திடுமாறு கோரும் இதனை கண்டிப்பாக தவிர்த்திடுக

2018 ஆம் ஆண்டின்மின்னஞ்சல் வாயிலான சந்தையிடுதலைபற்றி தெரிந்து கொள்க

நல்லசந்தைபடுத்துதலின் கொள்கையே எந்தவொருநிறுவனத்தின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் அடிப்படையாகும் எந்தவொரு வியாபார நிறுவனத்திற்கும் வாடிக்கையாளர்களே முதன்மையானவர்களாவார்கள் அவ்வாறான வாடிக்கையாளர்களின் கவனத்தை நம்முடைய நிறுவனபொருட்களின் மீது திருப்புவதற்கு மின்னஞ்சல் வாயிலாக சந்தைபடுத்திடுதல் முக்கியமான கருவியாகும் 2018 ஆம் ஆண்டில் இந்த மின்னஞ்சல் வாயிலான சந்தையின் போக்கானது
1. நம்முடைய நிறுவனத்திலிருந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியிடபடும் செய்திகடிதங்களை தொடர்ந்துபெறுவதற்காக இலவசசந்தாரராக அதிக அளவு நபர்களை சேர்த்திடுக அதாவது நம்முடைய நிறுவனத்தின் இணையபக்கத்திற்கு உள்நுழைவுசெய்திடும் வாடிக்கையாளரின் முதல் பணியாக தொடர்ந்து நம்முடைய செய்திகடிதங்களை தொடர்ந்துபெறுவதற்காக இலவசசந்தாரராக சேருவதற்கான subscripஎனும்பொத்தானை தெரிவுசெய்திடுமாறு அமைத்திடுக
2 அடுத்துதாகநம்முடைய நிறுவனத்தின் இணையபக்கத்திற்கு உள்நுழைவுசெய்திடும் வாடிக்கையாளரின் கவணத்தை ஈர்க்கின்ற மேல்மீட்பு பட்டியலை தோன்றசெய்து அதில் வாடிக்கையாளர் yesஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குமாறுசெய்திடுக
3 மூன்றாவதாக மிகப்பிரபலமான நீயுயார்க் டைம்ஸ் எனும் செய்தி பத்திரிகையானது பார்வையாளர்கள் சந்ததாரராக சேர்ந்தால் மாதத்திற்க 10 கட்டுரைகளை இலவசமாக மின்னஞ்சல் வாயிலாக படித்தறிந்து கொள்ளலாம் அதற்குமேல்எனில் கட்டணம்செலுத்தவேண்டும்என கடைவிரித்துள்ளது அவ்வாறு நம்முடைய நிறுவனத்திலும் பொருத்தமான ஏற்பாட்டினைசெயல்படுத்திடுக
4 நான்காவதாக வாடிக்கையாளர்களின் கவணத்தை நம்முடைய நிறுவனத்தின் பக்கம் திருப்புவதற்காக சுற்றி வளைத்திடாமல் நேரடியான கேள்விபதில் வாயிலாக அவர்களின் மனநிலையை தெரிந்து கொள்வ தற்காக அமைத்திடுக
5 இறுதியாகA/B testingஎன்பதை பின்பற்றிடுக அதாவது email campaigns, trickle campaigns , newsletter போன்றவற்றின் வாயிலானCall to action Subject line Body Layout of the given message The headline போன்ற வசதிகளை பயன்படுத்திடுக

தனிப்பட்ட தகவல்களைபாதுகாப்பாக வழங்கிடும் சிறந்த மின்னஞ்சல் சேவைகள்

கூகுள்நிறுவனத்தின் ஜிமெயில் எனும் மின்னஞ்சலில் பரிமாறிகொள்ளபடும் மின்னஞ்சல்களின் உள்ளடக்கங்களை தனிநபர்களின் தகவல்களை அரசாங்கம் விரும்பினால் அறிந்து கொள்ளமுடியும் என்ற பாதுகாப்பற்ற அவல நிலைதான் தற்போதுஉள்ளது யாகூ அவுட்லுக் போன்ற வைகளின் மின்னஞ்சல் சேவையும் அவ்வாறே உள்ளன ஆயினும் நம்பிக்கை நட்சத்திரங்களாக பின்வரும் மின்னஞ்சல் சேவைகள்எந்தவொருமூன்றாவது நபரும் அவ்வாறு எளிதாக மின்னஞ்சல்களின் உள்ளடக்கங்களை சம்பந்தபட்டநபர்களின் அனுமதியில்லாமல் அறிந்து கொள்ள அல்லது தெரிந்து கொள்ளமுடியாது
1. Runboxஎனும் மின்னஞ்சல் சேவையானது PGP (Pretty Good Privacy)எனும் அடிப்படையில் நாம் அனுப்பும்மின்னஞ்சலானது பாதுகாப்பாக பூட்டப்பட்டு encryption key எனும் திறவுகோள் இல்லாமல் குறிப்பிட்ட மின்னஞ்சலை திறந்து பார்வையிட முடியாது இந்த சேவையை பெறுவதற்கு வருட சந்தா 20 டாலர் பிட்காயினாக செலுத்தினால் போதும் நம்முடைய மின்னஞ்சலில் விளம்பரங்கள் எதுவும் உடன்வந்து சேராது
2 Mailfence எனும் மின்னஞ்சல் சேவையானது OpenPGP (Pretty Good Privacy)எனும் அடிப்படையில் நாம் அனுப்பும்மின்னஞ்சலானது பாதுகாப்பாக பூட்டப்பட்டு end-to-endencryption key எனும் திறவுகோள் இல்லாமல் குறிப்பிட்ட மின்னஞ்சலை திறந்து பார்வையிட முடியாது.இதற்கான இணையதளமுகவரி https://mailfence.com/en/ ஆகும் ஆயினும் இதனுடைய மின்னஞ்சல் சேவையை பெறுவற்காக இந்த தளத்திற்குள் உள்நுழைவு செய்தவுடன் Secure and private email service என்று கோரும் வாய்ப்பில் Yesஎன தெரிவுசெய்தால் இந்த தளத்தின் மின்னஞ்சல் சேவையையும் No எனத்தெரிவுசெய்தால் வழக்கமான ஜிமெயில் சேவைபக்கத்திற்கு நம்மைதிருப்பிவிடு்ம்
3 ProtonMail இந்த மின்னஞ்சல் மட்டுமே NSA ஆல் அனுகமுடியாததாகும் இதனை வழக்கமான ஐபிமுகவரியை கொண்டுஅனுகமுடியாது பாதுகாப்பாக பூட்டப்பட்டு end-to-end encryption key எனும் திறவுகோள் இல்லாமல் குறிப்பிட்ட மின்னஞ்சலை திறந்து பார்வையிட முடியாதுஇது கட்டணமற்றதாகும் இதற்கான இணையதளமுகவரி https://protonmail.com/ ஆகும்
4 Tutanota. இந்த மின்னஞ்சல் சேவையானது கட்டற்ற கட்டணமற்றதாகும் இது
நாம் அனுப்பும்மின்னஞ்சலானது பாதுகாப்பாக பூட்டப்பட்டு end-to-end encryption key எனும் திறவுகோள் இல்லாமல் குறிப்பிட்ட மின்னஞ்சலை திறந்து பார்வையிட முடியாது செல்பேசிகளில் செயல்படும் ஆண்ட்ராய்டு ,ஐஓஎஸ் பயன்பாடுகளில் இந்த மின்னஞ்சல் சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்இதற்கான இணையதளமுகவரி https://tutanota.com/ ஆகும்
5 Posteo.de இந்த மின்னஞ்சல் சேவையில் நாம் அனுப்பும்மின்னஞ்சலானது பாதுகாப்பாக பூட்டப்பட்டு end-to-end encryption key எனும் திறவுகோள் இல்லாமல் குறிப்பிட்ட மின்னஞ்சலை திறந்து பார்வையிட முடியாது POP3 ,IMAP ஆகியவற்றை ஆதரிக்ககூடியது இது மாதக்கட்டணமாக ஒருடாலரில் இதன்சேவைகிடைக்கின்றது இதனுடைய சேவையை பெறுவதற்காக நம்முடைய தனிப்பட்ட தகவல்கள் எதையும் நம்மிடம் கோராது இதற்கான இணையதளமுகவரி https://posteo.de/ ஆகும்
6Kolab Now எனும் மின்னஞ்சல் சேவையானது கட்டற்ற திறமூல பயன்பாட்டு சேவையாகும் இது 4.99 டாலர் கட்டணத்துடன் கிடைக்கின்றது இது சிறிய நடுத்தர நிறுவனங்கள் தனிநபர்களுக்கு போதுமான வகையில் இதனுடைய சேவை அமைந்துள்ளது இது ஒருங்கிணைந்த குறிப்பெடுத்திடும் பயன்பாடு போன்ற பல்வேறு துனைசேவைகளையும் வழங்குகின்றது இதனுடைய இணைய முகவரி https://kolabnow.com/ ஆகும்
7 Countermail இந்த மின்னஞ்சல் சேவையானது OpenPGP (Pretty Good Privacy)எனும் அடிப்படையில் நாம் அனுப்பும்மின்னஞ்சலானது பாதுகாப்பாக பூட்டப்பட்டு end-to-endencryption key எனும் திறவுகோள் இல்லாமல் குறிப்பிட்ட மின்னஞ்சலை திறந்து பார்வையிட முடியாது. இது USB வாயிலின்வழியாக USB திறவுகோளின் மூலம் மட்டுமே இதனை அனுகமுடியும் என்றகூடுதல் பாதுகாப்பு கொண்டதாகும் இது IMAP ஆதரிக்ககூடியது இது லினக்ஸ், விண்டோ, மேக் ஆகிய அனைத்து இயக்க முறைகளின் சூழலிலும் செயல்படும் திறன்மிக்கதுஇதனுடைய இணைய முகவரி https://countermail.com/ ஆகும்

ஜிமெயில் எனும் தனியுடைமை பயன்பாட்டிற்கு இணையான கட்டற்ற மி்ன்னஞ்சல்பயன்பாடுகளை பயன்படுத்தி கொள்க

நம்மில் பெரும்பாலானோர் இந்த ஜிமெயில் எனும் தனியுடைமை பயன்பாட்டினை பயன்படுத்தி வருவது அனைவருக்கும் தெரிந்த செய்தியேயாகும் ஆயினும் இதற்கு மாற்றாக பல்வேறு கட்டற்றஅல்லது திறமூலமின்னஞ்சல் பயன்பாடுகள் கூட ஏராளமான அளவில் உள்ளன அவைகளைகொண்டு சிறிய நிறுவனங்கள் முதல் பெரியநிறுவனங்கள் வரை தமக்கென்ற தனியாக மின்னஞ்சல் சேவையாளரை உருவாக்கி பராமரித்து பயன்பெறமுடியும் என்ற செய்தியை மனதில் கொள்க.
1.Roundcube என்பது கட்டற்ற GPLv3 எனும் அனுமதியுடனான செந்தர LAMP (Linux, Apache, MySQL, and PHP) கட்டமைவுடன் வெளியிடபட்டதொரு பயன்பாடாகும் இது 70 இற்குமேற்பட்ட மொழிகளின் ஆதரவு , எழுத்து பிழைகளை தானாகவே சரிசெய்தல், மொழிமாற்றம்செய்தல், மின்னஞ்சலிற்கான மாதிரி பலகம் , .மிகக்கட்டுபாடான முகவரிகள் ஒருங்கிணைப்பு, ஏராளமான சாலைவழி படவசதி, பயனாளர் இடைமுகப்பு என்பன போன்ற பல்வேறு வசதி வாய்ப்புகளை கொணடது
2 Zimbra என்பது webmail வாடிக்கையாளரையும் email சேவையாளரையும் தன்னகத்தே கொண்டது கட்டற்ற GPLv2 எனும் அனுமதியுடன் கிடைக்கின்றது நிறுவனங்கள் தங்களுக்கென்ற தனியானமின்னஞ்சல் சேவையை இந்த Zimbra எனும் கட்டற்றமின்னஞ்சல் பயன்பாட்டினை கொண்டு மின்னஞ்சல் சேவையை எளிதாக பராமரித்திடலாம்
3 SquirrelMailஎன்பது 1999 இல் GPL. எனும் அனுமதியுடன் வெளியிடப்பட்டது இது PHP எனும் கணினி மொழியால் உருவாக்கப்பட்டது இதுவாடிக்கையாளர் பகுதியையும் சேவையாளர்பகுதியையும் பயன்படுத்தி கொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது
4 Rainloop என்பது சமீபத்திய புதிய அல்லது இளைய தலைமுறை மக்களுக்காக வெளியிடபட்டுள்ளது இது Facebook, Twitter, Google, Dropbox ஆகியவற்றின் கணக்குகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும் திறன் மிக்கது இது PHP எனும் கணினி மொழியால் உருவாக்கப்பட்டு AGPLஅனுமதியுடன் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கிடைக்கின்றது

ஜிமெயிலில் இடம்சுட்டியின் உருவத்தை நாம் விரும்பியவாறு மாற்றியமைத்திடலாம்

ஜிமெயில் எனும் மின்னஞ்சல் பெட்டியை திறந்து பார்வையிடும்போது இடம்சுட்டியின் உருவமானது சிறிய கைபோன்று மாறிவிட்டதே இதனை எவ்வாறு நாம் விரும்பும் உருவிற்கு கொண்டுவருவது என சந்தேகம் அனைவருக்கும்எழும் நிற்க இவ்வாறான நிலையில் திரையின் மேலே தேடிடும் பெட்டியில் change how the mouse pointer looksஎன தட்டச்சுசெய்து விசைப்பலகையின் உள்ளீட்டு விசையை அழுத்துக பின்னர் விரியும் திரையில் Mouse Properties எனும் பட்டியலை தோன்றிடசெய்து அதில் Pointersஎனும் தாவிபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் விரியும் திரையில் Customizeஎன்பதன்கீழ் நாம் பயன்படுத்திடும் இடம்சுட்டியின் உருவை சரிபார்த்து கொள்க பிறகு திரையின் கீழ்பகுதிக்கு சுட்டியை நகர்த்தி சென்றால் அங்கு Link Selectஎன்பது இயல்புநிலையில் இருப்பதை காணலாம் இடம் சுட்டிக்கு வேறு உருவை மாற்றி தெரிவுசெய்திடவிரும்பினால் Browse என்பதை தெரிவுசெய்துசொடுக்குக அதன்பின்னர்விரியும் திரையின் Cursors எனும் கோப்பகத்தில் உள்ளவைகளில் நாம்விரும்பும் இடம்சுட்டியின் உருவை தெரிவுசெய்துகொண்டு Open.எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக நாம் தெரிவுசெய்த இடம்சுட்டியின் உருவம் நமக்கு திருப்தியாக இருந்தால் OK அல்லது Applyஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இதன்பின்னர் நம்முடைய இடம்சுட்டியின் உருவமானது நாம் விரும்பிய நாம்தெரிவுசெய்த உருவத்தில் இருப்பதை காணலாம்

தவறுதலாக அனுப்பிய மின்னஞ்சலைநிறுத்தம் செய்திடலாம்

நண்பர்கள் அல்லது பிறநபர்களுக்கு மின்னஞ்சலை உருவாக்கி அனுப்பிடுவோம்போதுஅது முழுமையாக இல்லாமல் அறைகுறையாக இருக்கின்ற நிலையில் நாம் அம்மின்னஞ்சலை தவறுதலாக அனுப்பியிருந்தால் அதனை திரும்ப பெறுவதற்காக நாம் undoஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் மின்னஞ்சல்அனுப்பியதை நிறுத்தம் செய்திடமுடியாது ஆனாலும் அவ்வாறு தவறுதலாக அனுப்பிய மின்னஞ்சலை வெறும் 30 நொடிகளில் திரும்ப பெறமுடியும் அதற்காக இந்த மின்னஞ்சல் பயன்பாட்டில் BEFORE எனும் வாய்ப்பினை செயல்படுத்தி தயாராக இருக்குமாறு செய்திருக்கவேண்டும் இதற்கான படிமுறை பின்வருமாறு முதலில் நம்முடைய ஜிமெயிலி்ன் Inboxஎனும் மின்னஞ்சல் உள்வருகை பெட்டியை திறந்து கொள்க

பின்னர் இந்த மின்னஞ்சல் உள்வருகை பெட்டித்திரையின் மேலே பற்சக்கரம் போன்ற உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் கீழிறங்கு பட்டியலில்Settings எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் general எனும் தாவிப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இந்த தாவிப்பொத்தானின் திரையை தோன்றிடசெய்திடுக இதன்பின்னர் general எனும் தாவிப்பொத்தானின் திரையின் கீழ்பகுதிக்கு இடம்சுட்டியை நகர்த்தி சென்று  Send and Archiveஎன்பதன் கீழுள்ள Undo Send எனும் தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்திடுகமேலும் அதற்கருகில் Enable Undo Send sendஎன்பதன்கீழ் cancellation period என்பதற்கருகிலுள்ள கால அவகாசத்திற்கான கீழிறங்கு பட்டியலில் நாம் விரும்பும் கால அளவை அதிக பட்சம் 30 நொடிவரை மின்னஞ்சலை நீக்கம் செய்யவேண்டும் என தெரிவுசெய்து கொள்க

இதன்பின் மீண்டும் இடம்சுட்டியை கீழே நகர்த்தி சென்று Save Changes ,  Click on Save Changes ஆகிய இருவாய்ப்புகளில் ஒன்றினை தெரிவுசெய்து கொண்டு மின்னஞ்சலொன்றினை தயார்செய்து அனுப்புவதற்கு தயாராகும்போது Undo , View Message ஆகிய இருவாய்ப்புகள் மேல்மீட்புபட்டியலாக தோன்றிடும் அவற்றுள் Undo எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து மின்னஞ்ல் அனுப்பிடும் செயலை நீக்கம்செய்திடுக

Previous Older Entries Next Newer Entries