ஜிமெயிலின் புதிய பாதுகாப்பு வசதிகள்

சமீபத்தியபேஸ்புக்-கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா ஊழல் வெளிச்சத்திற்கு வந்ததை தொடர்ந்து, தொழில்நுட்ப துறையில் தனியுரிமை மீறப்படுகின்றதாஎன்ற கவலை நம்மனைவருடைய மனதிலும் எழுந்துள்ளது. மிகமுக்கியமாக கூகுள் நிறுவனத்தின் மின்னஞ்சல் பயன்பாட்டில் பயனர்களுக்கு மிகுந்த தனியுரிமை யும் பாதுகாப்பின் உறுதிமொழிகளும் இருந்தாலும், நம்முடைய மின்னஞ்சல்களை அணுக மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் அனுமதிக்கப்படுகி்ன்றன என கூகிள் ஜிமெயில் அஞ்சல் தளத் தளம் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையின்படி, பல வலைத்தளங்களில் செய்திமடல்களுக்கு முன்னர் கையொப்பமிட்ட பயனர்களின் இன்பாக்ஸை ஸ்கேன் செய்வதற்கு நூற்றுக்கணக்கான வெளிநாட்டு பயன்பாடுகள் உருவாக்குநர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் கடந்த செவ்வாயன்று(10.07,2018) ஒரு வலைப்பதிவு இடுகையில், பொது அணுகல் திறக்கப்படுவதற்கு முன்னர் அது புதிய பயன்பாடு உருவாக்குநர்கள் மற்றும் அவர்களின் பயன்பாடுகள் தொடர்கின்றன என கூகுள் கூறுகின்றது.ஸ்பேம் மற்றும் ஃபிஷிங் முயற்சிகள் குறைக்க மின்னஞ்சல்களின் தானியங்கி செயலாக்கத்தை செயல்படுத்துவதாகவும், விளம்பரங்களை வழங்க மின்னஞ்சல் உள்ளடக்கத்தை செயல்படுத்துவதில்லை என்றும் கூகுள் கூறுகின்றது. ஆயினும் இது தானாக செயலாக்கத்தின் நடைமுறையில் நம்முடைய மின்னஞ்சல்களை கூகுள் “படிக்கின்றது” என சிலரால் தவறுதலாக ஊகம் செய்யப்பட்டது.
ஆயினும் மூன்றாவது நபரின் பயன்பாடுகள் ஜிமெயிலை அனுகுகின்றனர் என சந்தேகம் ஏற்படுமாயின் ஜிமெயிலை திறந்திடுமுன் Has access to Gmail என்ற வசதியின்வாயிலாக மூன்றாவது நபரின் பயன்பாட்டினை பின்னினைப்பாக இணைத்திருந்தால் அவற்றை அனுகுவதை தவிர்த்திடுக அல்லது அவ்வாறான கூடுதல் இணைப்பினை தவிர்த்திடுக மிகமுக்கியமாக சமீபத்திய G Suiteஎனும் புதியவசதி மூன்றாம் நபரின் பயன்பாடுகள் நம்முடைய ஜிமெயிலின் மின்னஞ்சல் அனுகுவதை வடிகட்டி தவிர்த்திடுகின்றது

ஜிமெயிலில் பின்வரும் புதிய வசதிவாய்ப்புகளைபயன்படுத்தி கொள்க

ஜிமெயிலில் பின்வரும் பல்வேறு வசதி வாய்ப்புகள் உள்ளன அவைகளுள் நமக்கு தேவையான பொருத்தமான வசதி வாய்ப்புகளை மட்டும் அறி்ந்து பயன்படுத்தி கொள்க
1.Smart Reply நம்மிடம் Gmail or Inbox mobile எனும் பயன்பாடு இருந்தால் நமக்கு வரும் மின்னஞ்சல்களுக்கு உடனுக்குடன் தானாகவே அதற்கான பதில் மின்னஞ்சலை உருவாக்கி அனுப்பிடும்று செய்திடலாம் அதற்கு பதிலாக மின்னஞ்சல் திரையில் கீழே நகர்த்தி சென்றால் Smart Replyஎனும் வாய்ப்பு இருப்பதை காணலாம் அதனை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து உள்வரும் மின்னஞ்சல்களுக்கு தானியங்கியாக பதில் மின்னஞ்சலை அனுப்பிடுமாறு செய்திடலாம்
2.Take Actions Faster எனும் வசதிகொண்டு மிகவிரைவாக மின்னஞ்சலின் உள்வருகைபெட்டியிலுள்ள மின்னஞ்சல்களை கையாளலாம் ஒவ்வொருமுறையும திரையின் மேல்பகுதிக்கு செல்லாமல் பக்கபட்டையிலுள்ள Archive, Delete, Mark as Readஆகிய வாய்ப்புகளுள் தேவையானதை மட்டும் பயன்படுத்தி மின்னஞ்சல்களை கையாளமுடியும் மேலும் 3.Gmail keyboard shortcutஎன்ற வசதிகொண்டு மிகவிரைவாக மின்னஞ்சல்கலை கையாளலாம்
4.Display densityநமக்கு வரும் மின்னஞ்சல்களுடன் இணைப்பாக வரும் கோப்பினை குறிப்பிட்ட மின்னஞ்சலை திறக்காமலேயே அதன் உள்ளடக்கங்களை காணலாம் இதற்காக மின்னஞ்சல் உள்வருகை பெட்டியின் மேலே வலதுபுறமூலையில் இடம்சுட்டியை வைத்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில்Display densityஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் Defaultஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன் குறிப்பிட்ட மின்னஞ்சலுடன் இணைப்பாக வரும்கோப்பு திரையில்விரியும்
5.Collapsible Right Sidebarஎனும் வசதி Google Calendar, Google Keep, Google Tasks ஆகியவற்றுள் தேவையானதை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் பக்கபட்டையானது மெல்லியதாக மாறிவிடும் அதனைதொடர்ந்து புதுமையாக அல்லது பல்வேறு பணிகளை மின்னஞ்சலில் செய்திடலாம்
6.snooze எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து குறிப்பிட்ட மின்னஞ்சலிற்கு குறிப்பிட்ட நாளிற்கு பிறகு பதில் செயல் செய்திட்டால் போதும் என குறிப்பிட்டால் அதுவரை அந்த மின்னஞ்சலை நம்முடைய உள்வருகைபெட்டியில்மறைத்துவிடும் பின்னர் தோன்றிட செய்திடும்
7.Smart Composeஎனும் வசதி பதில் மின்னஞ்சலை மிகதிறனுடையதாக உருவாக்கிட நமக்கு ஆலோசனைகூறி உதவுகின்றது
8.Nudgesஎனும் வசதி நம்முடைய உள்வருகை பெட்டிக்கு வந்து மூன்று நாட்களுக்குமேல் நாம்அதனை திறந்து பார்த்திடாமல் இருந்தால் நமக்கு நினைவூட்டுதல் செய்கின்றது
9. add-ons எனும் வசதியை கொண்டு தானியங்கியாக நம்முடைய கையெழுத்தினை நாம் அனுப்பிடும் ஒவ்வொரு மின்னஞ்சலிலும் சேர்த்திடவும் குறிப்பிட்ட கோப்பினை இணைப்பாக மின்னஞ்சலுடன் சேர்த்துஇணைத்திடவும் குறிப்பிட்ட காலஇடைவெளியில் பதில்மின்னஞ்சல் தயார்செய்தடவும் பயன்படுத்தி கொள்ளலாம்

projectx/os , Raspberry Piஆகியன கொண்டு மிகக்குறைந்த செலவில் நம்முடைய சொந்தமின்னஞ்சல் சேவையாளரை உருவாக்கி கொள்க

ஜிமெயில் யாகூமெயில்போன்ற நிறுவனங்களின் மின்னஞ்சல்களை நம்முடைய நிறுவனத்திற்காக பயன்படுத்தி கொள்வது என்பது நம்முடைய நிறுவனத்தின் தகவல்கள் பாதுகாப்பானதுஎனஉறுதிகூறமுடியாது ஏனெனில் இந்த நிறுவனங்கள் தங்களுடைய மின்னஞ்சல் சேவைவாயிலாக உருவாக்கி அனுப்பபடும் அனைத்து மின்னஞ்சல்களிலும் உள்ள செய்திகளை தேவைபட்டால்எளிதாக அறிந்து கொள்ளமுடியும் மேலும் தேவையில்லாத விளம்பரங்களைநம்முடைய மின்னஞ்சல்திரையில் கொண்டுவந்து சேர்த்திடும் அதனை தவிர்த்து நமக்கென தனியாக மின்னஞ்சல்சேவையாளரை துவங்கிடுவோம்எனில்அதிக காலவிரையுமும் பொருள்செலவும் அதிக அனுபவ-மிக்கவர்களின்பணியும் தேவையும் ஆனதாக உளளதால் பெரும்பாலான நிறுவனங்கள் அதிலும் மிகச்சிறிய நிறுவனங்கள் இவ்வாறான செயலையே தவிர்த்திடுகின்றனர் ஆனால் அவர்களின் தகவல்கள் எளிதாக அபகரித்திடும் சூழலில் செயல்படும் நிலையில் உள்ளனர் இவ்வாறான நிலையில் projectx/os , Raspberry Piஆகியவற்றின் துனையுடன் மிககுறைந்த செலவில் பாதுகாப்பான நம்முடைய சொந்த மின்னஞ்சல்சேவையாளரை தொழில்நுட்ப அறிவு அதிகமில்லாமலேயே மிகஎளிதாக பின்வரும் நான்கேபடிமுறைகளை பின்பற்றி உருவாக்கி கொள்ளமுடியும்
படிமுறை1 நம்முடைய பாதுகாப்பான SD card எனும் நினைவக அட்டையில் இந்த சேவைக்கான projectx/os இன் சுருக்கி கட்டப்பட்ட கோப்புகளை பிரித்து வெளியிலெடுத்திடுக
படிமுறை2 பின்னர் நம்முடைய அருகலை கடவுச்சொற்களை கொண்டுஇந்த SD card எனும் நினைவக அட்டையில்உரைக்கோப்புகளை தேவையானவாறு திருத்தம்செயது கொள்க
படிமுறை3 இவ்வாறு திருத்தம்செய்த SD card எனும்நினைவக அட்டையை Raspberry Pi 3 என்பதன் பொருத்தும் பகுதியில் செருகுக
படிமுறை4 பின்னர் நம்முடைய திறன்பேசியைபயன்படுத்தி மின்னஞ்சல் சேவையார்(email server) பயன்பாடடினை இந்த Raspberry Pi 3 இல் நிறுவுகை செய்திடுக இதனோடு SMTP,SpamAssassin,Dovecot, webmail ஆகியதனித்தனியான தாங்கிகளும்சேர்ந்து நிறுவப்பட்டுவிடும் மேலும் பாதுகாப்பானதாக மின்னஞ்சல் சேவைஇருப்பதற்காக m-cryptஎன்பதுமறையாக்கம்செய்வதற்கும் நம்முடைய கைபேசி திறன்பேசி மடிக்கணினி கைக்கணினி ஆகியவற்றால் மட்டுமேஅனுகுமாறான ZeroTier One என்பது வலைபின்னல் வழியாக மின்னஞ்சல்களை கையாளவும் பயன்படுகின்றன மேலும் இது passcodeஎன்பதைகொண்டு பாதுகாப்பாக கையாளப்படுகின்றது

Executable என்று அழைக்கபடும் மென்பொருளின் செயலி கோப்புஒன்றினை ஒருமின்னஞ்சலுடன் இணைப்பாகஎவ்வாறு அனுப்புவது

நாம் வழக்கமாக மற்ற கோப்புகளை நம்முடைய மின்னஞ்சலுடன் இணைத்துஅனுப்புவது போன்று ஒரு Executable எனும் செயலி கோப்பினை ஒருமின்னஞ்சலுடன் இணைப்பாக அனுப்பிவைக்கமுடியாது ஆயினும் நம்முடைய நண்பர்களுக்குஅவ்வாறு அனுப்பிட விரும்பிடும்போது பின்வரும் வழிமுறைகளை பின்பற்றிடுக என பரிந்துரைக்கப்படுகின்றது முதலில் SKTestsஎன்றாவாறான கோப்பகத்தினை C: எனும் முதன்மை இயக்ககத்தில் உருவாக்கிடுகஎச்சரிக்கை Libraries, Downloads,Desktop ஆகிய பகுதிகளில் அன்று பிறகு 50 கேபிஅளவைவிட குறைவான அளவுள்ள ஏதேனும் ஒரு உருவககோப்பினை இதே கோப்பகத்திற்கு நகலெடுத்துவந்து ஒட்டுவதன் வாயிலாக கொண்டு வந்து சேர்த்திடுக பின் நாம் நம்முடைய நண்பர்களுக்கு அனுப்பிடவிரும்பும் மென்பொருளின் செயலிகோப்பினை இதே கோப்பகத்திற்கு நகலெடுத்துவந்து ஒட்டுவதன் வாயிலாக கொண்டுவந்து சேர்த்திடுக அதன்பின்னர் இந்த செயலி கோப்பினை zip அல்லது .rar வடிவமைப்புகோப்பாக உருமாற்றிடுக அல்லது குறிப்பிட்ட கோப்பினை இடம்சுட்டியால் தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் “Add to NAME-OF-YOUR-SOFTWARE.rar.”என்றவாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பிறகு Shiftஎன்ற விசையைஅழுத்தி பிடித்துகொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் “Open command window here” என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் கட்டளை வரிகளின் மூலம் செயல்படும் திரையில் C:\SKTest>copy/b email.png என்பது நம்முடைய உருவப்பட கோப்பாகும் . SK~INSTALLER-1.1~RELEASE.rar என்பது நாம் அனுப்பிடவிரும்பும் மென்பொருளின் செயலி கோப்பாகும் அவ்விரண்டிற்கும் இடையே +எனும் கூட்டல் குறியுடனும் copy/b என்பதற்கும் email.png என்பதற்கும் காலி இடைவெளியை விட்டிட்டு அமைத்திடுக அதன்பின்னர் உள்ளீட்டு விசையை அழுத்துக உடன் கோப்பானது மறையாக்கம் செய்யப்பட்டுவிட்டதாக அறிவிப்பு ஒன்றை திரையில் தோன்றிடசெய்திடும் இதன்பிறகு நாம் இந்த மறையாக்கம் செய்த கோப்பினை வழக்கமாக செய்வதை போன்று ஜிமெயிலில் இணைத்து அனுப்புவைத்திடுக ஆனால்பெறுபவர்களிடம் மட்டும் இவ்வாறான கோப்பு உள்வருகை பெட்டியில் இருக்காது அதற்கு பதிலாக இது spam எனும் பகுதியில் வீற்றிருக்கும் அங்கு சென்று இந்த கோப்பினை தெரிவுசெய்துகொண்டு திரையின் மேலிருக்கும் Not spam எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக அதன்பின்னர் இந்த கோப்புடன் கூடிய மின்னஞ்சலானது மின்னஞ்சலின் உள்வருகை பெட்டிக்கு லந்து சேரும் பின்னர் வழக்கம்போன்று இந்த கோப்பினை பதிவிறக்கம் செய்திடுக அதன்பின்னர் இதற்கென தனியாக C:எனும் முதன்மை இயக்ககத்தில் கோப்பகத்திற்கு கொண்டுவந்து சேர்த்திடுக அதனை தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் மேல்மீட்புபட்டியில் Open with என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் அதன் துனை பட்டியில் WinRar எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக

இணையதளபக்கங்களின் இணைப்புகளுடன்மின்னஞ்சலை அனுப்புவதுஎவ்வாறு?

நம்முடையமின்னஞ்சல்செய்தியில் குறிப்பிட்ட இணையதளபக்கத்திற்கு சென்றால் மேலும் விவரங்களை அறிந்து கொள்ளலாம்எனக்குறிப்பிடுவோம் அவ்வாறான இணையதள பக்கத்தின் இணைய இணைப்பு முகவரியை முழுவதுமாக பிரதிபலிக்குமாறு செய்வதற்கு பதிலாக நாம் குறிப்பிட்ட சொல்லை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் நாம் குறிப்பிடும் இணையபக்கத்திற்கு செல்லுமாறு எவ்வாறு அந்த மின்னஞ்சலில் குறிப்பிடுவது என்பதே நம்மனைவரின்முன்உள்ள மிகப்பெரிய கேள்வியாகும் ஜிமெயிலெனில் முதலில் நம்முடைய ஜிமெயிலின் புதிய செய்தியை உருவாக்குவதற்காக இதன் மேலே இடதுபுற மூலையில் உள்ளComposeஎனும் பொத்தானை சொடுக்குக பின்னர் விரியும் புதிய மின்னஞ்சலை உருவாக்கிடும் பக்கத்தில் கீழ்பகுதியில் இரண்டுவளையங்கள் இணைந்தவாறு உள்ள உருவப்பொத்தானை சொடுக்குக

உடன் விரியும்திரையில்Edit Link என்பதன்கீழுள்ள Text to display என்பதில் தேவையான செய்தியையும் Link to என்பதன் கீழுள்ள Web address, Email address ஆகிய இரு வாய்ப்புகளுள் முதல் வாய்ப்பினையும் தெரிவுசெய்து கொண்டு to what URL should this link go என்பதில் தேவையான இணைப்பு முகவரியை உள்ளீடுசெய்து கொண்டு okஎனும் பொத்தானை சொடுக்குக

யாகூமெயில் எனில் இதன் புதிய செய்தியை உருவாக்குவதற்காக இதன் மேலே இடதுபுற மூலையில் உள்ளComposeஎனும் பொத்தானை சொடுக்குக பின்னர் விரியும் புதிய மின்னஞ்சலை உருவாக்கிடும் பக்கத்தில் கீழ்பகுதியில் இரண்டுவளையங்கள் இணைந்தவாறு உள்ள உருவப்பொத்தானை சொடுக்குக

பின்னர் விரியும் திரையின் Aஎன்பதில் தேவையான செய்தியையும்B என்பதில் தேவையான இணைப்பு முகவரியையும் உள்ளீடுசெய்து கொண்டுSaveஎனும் பொத்தானை சொடுக்குக

இதன்பின்னர் நம்முடைய மின்னஞ்சலின் வழக்கமான செய்தியை உள்ளீடு செய்து அனுப்பிடுக இந்த மின்னஞ்சலை பெறுகின்ற நபர் நாம் கூறும் சொல்லினை தெரிவுசெய்து சொடுக்கினால் போதும் குறிப்பிட்ட இணையபக்கத்திற்கு செல்லமுடியும்

தமிழ் மொழியிலேயே மின்னஞ்சல் முகவரிகளை கையாளமுடியும்

தற்போது நாமெல்லோரும் ஆங்கிலமொழி யில் மட்டுமே நம்முடைய மின்னஞ்சல் முகவரிகளை பயன்படுத்தி வருகின்றோம் அதற்கு பதிலாக தமிழ் மொழியிலும் நம்முடைய மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்கி பயன்படுத்திகொள்ளும் வசதியை மைக்ரோசாப்ட்நிறுவனம் அனுமதி அளிக்கின்றது இந்த புதிய வசதியை மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் ஆஃபிஸ்365, அவுட்லுக்2016 போன்ற பயன்பாடுகளும் ஆதரிக்கின்றன ஆண்ட்ராய்டு ,ஐஓஎஸ்ஆகியவற்றில் செயல்படும் அவுட்லுக் பயன்பாடுகளிலும் இந்த வசதி செயல்படுமாறு செய்யப்பட்டுள்ளது தமிழ் மொழியில்பயன்படுத்திடும் மின்னஞ்சல் முகவரிகளை உலகமயமாக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிஅமைவும் (Email Address Internationalisation (EAI))ஆதரிக்குமாறு செய்யப்பட்டுள்ளது இவ்வாறான தமிழ் மொழியில் உருவாக்கப்படும் மின்னஞ்சல் முகவரிகளானது உலகளாவிய செந்தர குறிமுறை-வரிகளான ஒருங்கு குறியீடுகளில் (Unicode) அமைந்திருக்கவேண்டும் என்பதேஅடிப்படை நிபந்தனையாகும் மைக்ரோசாப்ட் நிறுவனமானது வருங்காலத்தில் தாங்ள் உருவாக்கப்போகும் அனைத்து மென்பொருட்களையும் இந்த தமிழ் மொழியின் மின்னஞ்சல் முகவரிகளை ஆதரிக்கூடியதாகவே மேம்படுத்தப்பட்டு வெளியிட படவுள்ளன என்ற செய்தியையும் மனதில் கொள்க
வாருங்கள் இனி நம்முடைய மின்னஞ்சல் முகவரிகளை தமிழிலேயேஉருவாக்கி பகிர்ந்து கொண்டு பயன்படுத்தி கொள்ளலாம்

ஜிமெயிலின் புதிய வசதிவாய்ப்புகள்

நம்முடைய மின்னஞ்சலில் நம்முடைய கையெழுத்து அல்லது முக்கியமான பழமொழிகளை தானாகவே உருவாகுமாறு செய்து அனுப்பலாம் இதற்காக ஜிமெயிலின்மேலே வலதுபுற மூலையிலுள்ள cog என்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் பட்டியலில் Settings என்ற வாய்ப்பையும் பின்னர் விரியும் Settings எனும் பட்டியலில் General எனும் தாவிபக்கத்தை விரியச்செய்திடுக அதன்பின்னர் விரியும் General எனும் தாவிபக்கத்தில் Signature எனும் பகுதியில் நம்முடைய கையெழுத்து அதற்கான வண்ணம் பாவணைகள் இணைப்புகள் உருவப்படங்கள்போன்றவைகளை உருவாக்கி இணைத்துகொண்டு save changesஎனும் பொத்தானை சொடுக்குக இதன்பின்னர் நாம் அனுப்பிடும் மின்னஞ்சல்கள் நம்முடைய கையெழுத்தானது நாம் கட்டமைத்தவாறு தானாகவே உருவாவதை காணலாம்
இந்த ஜிமெயிலின் சேவையை இணைய இணைப்பில்லாத போதும் பயன்படுத்திக் கொள்ள முடியும் இதற்காக ஜிமெயிலின்மேலே வலதுபுற மூலையிலுள்ள cog என்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் பட்டியலில் Settings என்ற வாய்ப்பையும் பின்னர் விரியும் Settings எனும் பட்டியலில் Offline எனும் தாவிபக்கத்தை விரியச்செய்திடுக பின்னர் விரியும் Offline எனும் தாவிபக்கத்தில்  Install Gmail Offline எனும் பொத்தானை சொடுக்குக அதன்பின்னர்  Install Gmail Offline எனும் பக்கத்தில்  Add to Chrome > Add app.என்றவாறு கட்டளைகளைதெரிவுசெய்து சொடுக்குக பின்னர்chrome://apps/ என்ற இணையபக்கத்திற்கு சென்று Gmail Offline என்பதை தெரிவுசெய்து சொடுக்குக இதன் பின்னர் நம்முடைய ஜிமெயிலை இணைய இணைப்பில்லாத போதும் பயனபடுத்தி கொள்ளமுடியும்
இதுமட்டுமில்லாது Google Drive,Google Maps,Google Keep,YouTubeஎன்பன போன்ற பல்வேறு வசதிகளும் இந்த ஜிமெயிலில் உள்ளன அவைகளையும் பயன்படுத்தி கொள்க

Previous Older Entries