மொஸில்லாவின் இணையபொருட்களின் நுழைவுவாயில்(WebThings Gateway)

மொஸில்லாவின் இணையபொருட்களின் நுழைவுவாயில்(WebThings Gateway) என்பது திறனுடைய வீடுகளின் நுழைவாயில்களுக்கான ஒரு மென்பொருள் விநியோகமாகும், இது பயனாளர்கள் தங்களுடைய திறனுடைய வீட்டை இணையத்தின்வாயிலாக இடைத்தரகர் யாருடைய குறுக்கீடுகளும் இல்லாமல் நேரடியாக கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் அனுமதிக்கிறது, .
இது திறனுடைய வீட்டின் அனைத்து சாதனங்களை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் ஒரு இணைய அடிப்படையிலான பயனாளர் இடைமுகமாக விளங்குகின்றது, மேலும் அவ்வாறான திறனுடைய வீட்டின்பொருட்களை தானியக்கமாக்குவதற்கான ஒரு விதிமுறை இயந்திரம் மற்றும் தற்போதுள்ள பரந்த அளவிலான திறனுடைய வீட்டு சாதனங்களுக்கான ஆதரவுடன் நுழைவாயிலை நீட்டிக்க ஒரு துணை அமைப்பு ஆகியவற்றை வழங்குகின்றது.
இது W3C இல் வளர்ந்து வரும் இணையத்தின் பொருட்கள் (Web of Things) தரநிலைகளின் திறமூல செயல்படுத்துதலாக விளங்குகின்றது.
இது மீண்டும் பயன்படுத்தக்கூடிய மென்பொருள் கூறுகளின் தொகுப்பாகும், இது மேம்படுத்துநர்கள் தங்களுடைய சொந்த இணைய பொருட்களை(WebThings ) உருவாக்க உதவுகின்றது, இது இணையபொருட்களின் API ஐ நேரடியாக வெளியிட அனுமதிக்கின்றது.இதில்
1. ராஸ்பெர்ரி பை (Raspberry Pi )இக்காக2. டூரிஸ் ஆம்னியாவுக்காக(Turris Omnia )நம்முடைய சொந்த இணையபொருட்களின் நுழைவுவாயிலை(WebThings Gateway) உருவாக்கிடமுடியும்
இதன் வசதிவாய்ப்புகள் பின்வருமாறு 1. திறனுடைய கைபேசி பயன்பாட்டின் வாயிலாக கட்டுபடுத்திடும் வசதிகொண்டது, 2. நாம் விரும்பிவாறு புதிய திறனுடைய வீட்டு சாதனங்களை இதில் சேர்த்து நிருவகித்திடலாம் , 3.அவைகளை நிருவகிப்பதற்காகவும் வீட்டை தானியக்கமாக்கு வதற்காகவும் தேவையானவாறு விதிகளை உருவாக்கி கொள்ளலாம் : , 4. சாதனங்களின் இருப்பிடத்தை வரைபடம் வாாயிலாக அறிந்து கொள்ளலாம், 5. விரும்பினால் நுழைவாயிலின் திறன்களை விரிவாக்கம் செய்து கொள்ளலாம் மேலும் விவரங்களுக்கு https://iot.mozilla.org/gateway/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

பொருட்களுக்கான இணையத்தில் பயன்படும் மிகப்பிரபலமான இயக்கமுறைமைகள் .

தற்போது தகவல், நிதி , சமூக வலைப்பின்னல், பொழுதுபோக்கு என்பன போன்ற இணையத்தில் வாயிலாக நுகரும் பல்வேறு சேவைகளின் எண்ணிக்கை களானவை நாளுக்குநாள் மென்மேலும் உயர்ந்து கொண்டேவருகின்ற காரணத்தால் தற்போதைய நம்முடைய வாழ்க்கையே இணையத்தால்தான் இயங்குகின்றது என கூறுகின்றவாறான நிலைமையில் இன்றைக்கு நாமெல்லோரும் வாழ்ந்து வருகின்றோம் . இவ்வாறான இணையத்தில் வழங்கப்படும் சேவைகளின் பட்டியல்மிக நீளமாக வளரும்போது, இணையத்துடன் இணைக்கக்கூடிய சாதனங்களின் வகைகளை நாம் கட்டுப்படுத்துவது கட்டாயமாகின்றது. அவ்வாறான நிலையில் IoT என சுருக்கமாக அழைக்கப் பெறும் பொருட்களுக்கான இணையம் என்பது கைகொடுக்கின்றது இது பல்வேறு வகையான செயல்களையும் அதற்கான பொருட்களையும் அதனுைடய உள்கட்டமைப்புகளுடன் இணையத்தின் வாயிலாக இணைக்க உதவுகின்றது. ஏதேனும் ஒரு சாதனத்தினை அல்லது பொருளை இணையத்துடன் இணைப்பதன் மூலம், இந்த செயல்களை பயனாளருடன் மட்டுமல்லாமல் தங்களுக்குள்ளும் தொடர்பு கொள்ளும் திறனைப் பெறுகின்றன.
இந்த IoT உடன் பல்வேறு வகையிலான மிக மாறுபட்ட சாதனங்கள் இணைக்கப்பட்டு திறனுடைய வீடுகள், திறனுடைய நகரங்கள், திறனுடைய விவசாயம், திறனுடைய வாகனங்களின்போக்குவரத்து, திறனுடைய கடைகள் , திறனுடைய மருத்துவமனை போன்றவை IoT அதிகமாகப் பயன்படுத்தப்படும்மிக பிரபலமான ஒருசில களங்களாகும்
இவ்வாறு பயன்பாட்டு களங்கள் மாறுபட்டதாக இருப்பதால், IoT இன்உள்கட்டமைப்பை திறமையாக நிருவகிக்க வேண்டிய தேவையானது கண்டிப்பாக ஏற்படுகின்றது. சாதாரண கணினிகளில் செயல்படும் இயக்க முறைமைகள் வள மேலாண்மை, பயனாளர் தொடர்பு மேலாண்மை என்பன போன்ற முதன்மை செயல்பாடுகளைமட்டுமே செயல்படுத்திடு கின்றன. ஒரு சிறிய நினைவக தடம், ஆற்றல் திறன், இணைப்பு அம்சங்கள், வன்பொருள் செயல்பாடுகள், நிகழ்வுநேர செயலாக்க தேவைகள், பாதுகாப்பு தேவைகள், பயன்பாட்டு மேம்பாட்டு சுற்றுச்சூழல் அமைப்பு ஆகியமுக்கிய பண்புகள் அல்லது தேவைகள் ஆகியவற்றை கொண்டுள்ள IoT இயக்க முறைமைகளின் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள சாதனங்களின் தன்மை மற்றும் அளவு காரணமாக அவற்றினை கட்டுபடுத்த மிகப்பேருதவியாய் இவைவிளங்குகின்றன அவ்வாறான IoT இயக்க முறைமைகள் பின்வருமாறு
1. Ubuntu Core என்பது குறைந்த கொள்ளளவு கொண்ட மிகப்பிரபலமான பாதுகாப்புதான் முதல் நோக்கம் என்பதன் அடிப்டையில் வடிவமைக்கப்பட்ட தொரு IoT இயக்க முறைமை யாகும் இது பல்வேறு பாதிப்புகளை தாங்கி செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயன்பாடுகள் பல்வேறுமாறுபட்ட மூலங்களிலிருந்து வந்திருக்கலாம் என்பதால், அவற்றின் சொந்த தரவுகளில் மட்டுமே செயல்படுமாறான சலுகைகள் இதில் வழங்கப்படுகின்றன. மோசமாக வடிவமைக்கப்பட்ட ஒரு பயன்பாடு முழு கணினியையும் பாதிக்காத வகையில் இது செய்யப் பட்டுள்ளது., மற்ற தேவைகள் இயல்புநிலை இயக்க முறைமையால் ஆதரிக்கப்படுகின்றன. இது secure app store இல் பயன்படுத்தி கொள்ள கிடைக்கின்றது மேலும் விவரங்களுக்கு https://ubuntu.com/internet-of-things/appstore. எனும் இணையதள முகவரிக்கு செல்க
2.RIOT என்பது பயனாளர்களின் இனிய நண்பனைபோன்ற IoT இயக்க முறைமை யாகும்.பல்வேறு குறைந்த சக்தி கொண்ட IoT சாதனங்களையும் பல்வேறு மைக்ரோகண்ட்ரோலர் கட்டமைப்புகளையும் இதுஆதரிக்கின்றது. செந்தர Cஅலலது C++ போன்ற கணினிமொழிகளை ஆதரிக்கின்றது இதில் 8-bit, 16-bit , 32-bit ஆகியவற்றில் செயல்படுமாறான குறிமுறைவரிகளை உருவாக்கி பயன்படுத்த அனுமதிக்கின்றது CoAP, CBOR, போன்ற வைகளை இது ஆதரிக்கின்றது அதாவது இது மேம்படுத்துநர்களின் நண்பனாகவும் வளங்களின் நண்பனாகவும் திகழ்கின்றது மேலும் விவரங்களுக்கு https://riot-os.org எனும் இணையதள முகவரிக்கு செல்க
3.Contiki என்பது குறைந்த ஆற்றல் கொண்ட சாதனங்களை இணையத்துடன் இணைக்க இது உதவுகின்ற சிறிய, குறைந்த விலை யிலான ஒரு சிறந்த IoT இயக்க முறைமை யாகும் ,இது IPv6 , IPv4 ஆகிய இணைய செந்தரங்களை மட்டுமல்லாமல் 6lowpan, RPL , CoAP ஆகிய குறைந்த மின்நுகர்வு செந்தரங்களையும்ஆதரிக்கின்றது அதைவிடUDP, TCP, HTTP, 6lowpan, RPL, CoAP போன்ற வலைபின்னல் ஒழுங்குமுறைகளையும் இதுஆதரிக்கின்றது மேலும் விவரங்களுக்கு http://www.contiki-os.org எனும் இணையதள முகவரிக்கு செல்க
4.TinyOS என்பது குறைந்த திறன்கொண்ட கம்பியில்லா சாதனங்களுக்காக வடிவமைக்கப்பட்டதொரு கட்டற்ற IoT இயக்க முறைமை யாகும் இதனை உலகமுழுவதும் உள்ள கல்விநிலையங்கள் மட்டுமல்லாமல் தொழிலகங்களிலும் பயன்படுத்தி கொள்ளப்படுகின்றன ஏறத்தாழ வருடமொன்றிற்கு 35,000 முறை இதனைபதிவிறக்கம்செய்து பயன்படுத்திடுகின்றனர் இது சி எனும் கணினிமொழியில் உருவாக்கப்பட்டதாகும் மேலும் விவரங்களுக்கு https://github.com/tinyos/tinyos-main. எனும் இணையதள முகவரிக்கு செல்க மிகமுக்கியமாக சி எனும் கணினிமொழியில் எழுதப்பட்ட இதனுடைய எளிய குறிமுறைவரிகள் பின்வருமாறு
configuration Led {
provides {
interface LedControl;
}
uses {
interface Gpio;
}
}
implementation {

command void LedControl.turnOn() {
call Gpio.set();
}

command void LedControl.turnOff() {
call Gpio.clear();
}

}
5.Zephyr என்பது ஒரு நிகழ்வுநேர IoT இயக்க முறைமை யாக அமைந்துள்ளது இது பல்வேறு கட்டமைப்பிலுள்ள சாதனங்களையும் 150+ boards. ஐயும்ஆதரிக்கின்றது இதனை சுதந்திரமாகவும் நெகிழ்தன்மையுடனும பயன்படுத்தி கொள்ளலாம் இது மிகச்சிறிய வழித்தட சாதனங்களை எளிதாக கையாளுகின்றது இது மிகப்பாதுகாப்பானது மேலும் விவரங்களுக்குhttps://www.zephyrproject.org எனும் இணையதள முகவரிக்கு செல்க

IoTஎன சுருக்கமாக அழைக்கப்பெறும் பொருட்களுக்கான இணையம் சாதனங்களை உருவாக்கிடும் எளிய வழி

நம்மிடம் Raspberry Pi இருக்கிறதா? ஆம் எனில் இப்போது எதற்காகப் பயன்படுத்தப் படுகின்றது? என்ற கேள்விக்கு நம்மில் பெரும்பாலானவர்கள் ஒன்றும் செய்யாமல் ஒரு அலமாரியில் அமர்ந்திருக்கின்றது என்றே பதில் கூறிடுவார்கள் அவ்வாறு சும்மா அலமாரியில் அழகிற்காக அடுக்கி வைத்திருப்பதைவிட விரும்பினால் இதை நம்முடைய வீட்டிற்கான IoT ஆக ஏன் மாற்றக்கூடாது?
மைக்கேல் என்பவர் இந்த ராஸ்பெர்ரி பையில் இயங்கும் EdgeX Foundry IoT எனும் இயங்குதளத்தைப் பெறுவதற்கான எளிதான வழிகாட்டியை வழங்கியுள்ளார். இந்த தளமானது லினக்ஸ் அறக்கட்டளை வழங்கும் IoT சாதனங்களுக்கான ஒருங்கிணைந்த பல்லடுக்கு தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, இதனால் அவற்றை மற்ற அமைப்புகளில் கட்டுப்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் எளிதாகின்றது. இதற்கான கட்டமைப்பானது , நம்முடைய Raspberry Pi இல் இயங்கும் சாதன சேவைஎன்றும் , மேஜைக்கணினி அல்லது மடிக்கணினியில் இயங்கி நாம் கண்காணிப்பதற்கான மற்றொரு சேவையென்றும் .இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது
Docker ஐ பயன்படுத்தி எளிதாக நிறுவுகை செய்து கணினியிலும் ,Raspberry Pi இலும் சரியாக இயங்குமாறான இரு பகுதிகளையும் எவ்வாறு பெறுவது என்பது குறித்து அவருடைய வழிகாட்டி மிகவிரிவாகக் விளக்கமளிக்கின்றது. IoT சாதனத்தைப் பொறுத்தவரை, எந்தவொரு நிரலாக்கத்தையும் எழுதாமல் அதை எவ்வாறு கட்டமைப்பது என்பதைக் காட்ட அவர் உள்ளமைக்கப்பட்ட PIR சென்சார் உதாரணத்தைப் அவ்வழிகாட்டியில் பயன்படுத்துகின்றார். சாதனத்தின் சென்சார்களை கண்காணிக்கமுடியும், அதை மேஜைக்கணினியில் இருந்து நேராக Pi இன் GPIO pinகளுடன் இணைக்க முடியும். EdgeX மென்பொருள் லினக்ஸின் எந்தவொரு பதிப்பிலும் இயக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளதால், மறந்துபோன ஒற்றை பலகை கணினியைகூட நம்முடைய வீட்டு தானியங்கி அமைப்பினை மீண்டும் உருவாக்கிடும் பணியை இது எளிதாக்குகின்றது
இருப்பினும், நம்முடைய நிரலாக்க திறனில் நம்பிக்கை இருந்தால், ESP8266 போன்ற மீச்சிறு கட்டுபாட்டாளர்களின் குடும்பம் போன்ற மெலிதான ஒன்றை நாமே உருவாக்கிட முடியும் மேலும். அவர்களுடன் எரிசக்தி கட்டுபாட்டாளர் அல்லது புகை கண்டுபிடிப்பாளர் போன்ற செயல்திட்டத்தை நாம் ஏன் முயற்சி செய்யக்கூடாது?

TinyOS எனும்வயர்லெஸ் சென்சார்களுக்கான இயக்க முறைமை ஒரு அறிமுகம்

லினக்ஸின் அடிப்படையில் Yocto அல்லது Android Thingsஎன்பவை விண்டோ அடிப்படையில் server-class IoT edge, Raspberry Pi ஆகியவற்றின் அடிப்படையில் Raspbian OS என்றவாறு இறுதியாகபயன்படும் பயன்பாடுகளுக்கு ஏற்ப ஏராளமான வகையில் பொருட்களுக்கான இணையசாதனங்களை செயல்படுத்திடுவதற்காக இயக்க முறைமைகள் கட்டமைக்கப்பட்டு வெளியிடபட்டுவருகின்றன அந்தவகையில் குறைந்த மின்சாரத்திலும் செயல்படும் திறன்மிக்க வயர்லெஸ் சென்சார்களுக்கான கட்டற்ற கட்டணமற்றஇயக்க முறைமையாக TinyOS என்பது தற்போது வெளியிடபட்டுள்ளது இது ஒளி, முடுக்கம், வெப்பநிலை, அழுத்தம் , ஒலி, பொருட்கள். ஆகியவற்றை கட்டுபடுத்திட பயன்படுகின்றது இது பொதுவாக Industry 4.0 பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.
பொதுவாக குறைந்த சக்தி சென்சார்கள், அவற்றின் மட்டு படுத்தப்பட்ட வரம்பிற்குள் , இருக்கின்ற வளங்களை திறம்பட பயன்படுத்த வேண்டிய சூழலில் உள்ளன பொருட்களில் அடிப்படையிலான கட்டமைப்பில் இதனை கட்டுப்படுத்துவதற்கான குறிமுறைவரிகள் 400 இலிருந்து 500 பைட்களுக்குள் இருக்கவேண்டும் ஆகிய கட்டுபாடுகளுக்கு உட்பட்டு இது உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது .இதனுடைய நிகழ்வின் அடிப்படையிலான வடிவமைப்பானது CPU இன் பணிகளை தேவையற்றதாக நீக்கி விடுகின்றது
Environmental monitoring:Smart vehicles:Smart cities: என்பனபோன்ற முக்கிய வயர்லெஸ் சென்சார் நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தும் அனைத்து வகையான சாதனங்களிலும் இது பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது.
இந்த டைனி ஓ எஸ் என்பது மிககுறைந்த மின்சக்தியிலும் செயல்படும் திறனுடனும், மிககுறைந்த விலையிலான வயர்லெஸ் சென்சார் நெட்வொர்க்குகளுக்காகவே வடிவமைக்கப்பட்ட புதியஇயக்க முறைமையின் எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும். ஆனால் அது மட்டும் அல்லாமல் Contiki, OpenWSN, FreeRTOS and RIOT. . ஆகியவை இதனோடு ஒத்த இயக்க முறைமைகளின் உள்ளடங்கியவைகளாகும்
மேலும்விவரங்களுக்கும்பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://github.com/tinyos/tinyos-main எனும் இணையதளபக்கத்திற்கு செல்க

பொருட்களுக்கான இணையத்தொடர்பு ஒழுங்குமுறை(Protocol)

IoT என சுருக்கமாக அழைக்கப்படும் பொருட்களுக்கான இணையத்தில் இணைந்துள்ள பொருட்களும் தங்களுடைய தரவுகளை இணைந்துள்ள சேவையாளருக்கு அனுப்புகின்றன சேவையாளரில் அவை செயல்படுத்தப்பட்டு அதன்முடிவு மீண்டும் தொடர்புடைய IoT இல் இணைந்துள்ள பொருளிற்கு அனுப்பப்படுகின்றது இந்த செயல்முறையை நடைமுறை-படுத்திடுவதற்காக Sensors, IoT gateway ,Cloud server, Mobile app ஆகிய உறுப்புகள் இந்த கட்டமைவிற்குள் வைக்கப்பட்டுள்ளன இதில் Sensors என்பவை IoT முனைம உறுப்புகளாக இருக்கும் பொருட்களுடன் இணைந்து அதனுடைய தகவல்களை சேகரித்து IoT gateway எனும் இடைநிலையாளர்களுக்கு அனுப்பிவைக்கின்றன IoT gateway என்பது நுழைவாயில் போன்று Sensors வாயிலாக பெறப்படும் பல்வேறு பொருட்களின் தரவுகளும் Cloud server எனும் சேவையாளருக்கு அனுப்பி வைக்கின்றது பின்னர் சேவையாளரிடமிருந்து கிடைக்கப் பெற்ற முடிவுகளை மீண்டும் சென்சார்களுக்கு திரும்ப வழங்குகின்றது Cloud server ஆனது நுழைவுவாயில் வழியாக சென்சர்களால் சேகரிக்கப்பட்ட IoT இல் இணைந்துள்ள பொருட்களின் தரவுகளை பெற்று அதனை செயல்படுத்தி அதற்கான முடிவை திரும்ப அனுப்புகின்றது Mobile appபயன்பாடானது IoT இல்இணைந்துள்ள பொருட்களின் முனைமங்களில் சேவையாளரால் அனுப்பட்ட முடிவினை பயனாளரின் திரையில் காண்பிக்க செய்கின்றது அதனடிப்படையில் பயனாளர் தன்னுடைய பதில் செயலை செய்து கொள்ளமுடியும் இவ்வாறு பொருட்களுக்கான இணையத்தின் தரவுகளை அனுப்பு-வதற்கும் திரும்ப பெறுவதற்கும் ஒரு வரிசைகிரமமான ஒழுங்குமுறை பின்பற்றபட வேண்டும் அப்போதுதான் நடவடிக்கைகள் அனைத்தும் சரியாக நடைபெறும் இதில் IoT வலைபின்னல் ஒழுங்குமுறைகள் (IoT network protocols) , பொருட்களுக்கான இணயத்தின் தரவு ஒழுங்குமுறை ( IoT data protocols)ஆகிய இரண்டு வகைகளிலான ஒழுங்குமுறைகள் பின்பற்றப்படுகின்றன இங்குIoT data protocols எனும் பின்னதை மட்டும் இப்போது காண்போம்
1.MQTTP எனசுருக்கமாக அழைக்கப்பெறும் Messaging Queuing Telemetry Transmit ஒழுங்கு முறையானது குறைந்த அலைவரிசை வலைபின்னல்களில் மிகப்பிரபலமான குறைந்த மின்சாரத்தில் செயல்படும் குறைந்த எடையுடையதாக விளங்குகின்றது வாடிக்கையாளர் MQTTP எனும்இடைத்தரகருக்கு தரவுகளை அனுப்புவதை Publish என அழைப்பார்கள் சேவையாளருக்கு சென்று செயல்படுத்தியபின்னர் MQTTP இடைத்தரகர்வாயிலாக திரும்ப பெறுவதை Subscribe என அழைப்பார்கள் இங்கு MQTTP இடைத்தரகரானது வாடிக்கை-யாளருக்கும் சேவையாளருக்கம் இடையில் இடைநிலையாளராக செயல்படுகின்றது
2.AMQP எனசுருக்கமாக அழைக்கப்பெறும் மிகமேம்பட்ட செய்திவரிசை (Advanced Message Queuing) ஒழுங்கு முறையானது peer-to-peer (P2P)எனும் அடிப்படையில் செயல்படும் ஒரு ஒழுங்குமுறையாகும் இதில்ஒரு வாடிக்கையாளர் மற்றொருவருக்கு இடைநிலையாளராக செயல்படுகின்றார் இதில் ஒருமுறைமட்டுமான செயல்நடைபெறுகின்றது இதில் Exchange என்பது செய்திகள் வெளியிடப் பெறுவரால் பெறப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டு யாருக்கு செல்லவேண்டும் என செய்தி வரிசையை உருவாக்குகின்றது Message queue என்பது பல்வேறு தரவுகளையும் செயல்படுத்திடுவதற்காக செய்திகளை வரிசையாக்குகின்றது Binding என்பது செய்திவரிசையையும் Exchange ஐயும் இணைத்துசரியாக செல்ல உதவகின்றது இதுமிகபாதுகாப்பானது செய்தி அனுப்பட்டது பெறப்பட்டதா இல்லையாவென இதில் அனுப்பிய முனைமத்திற்கு ஏற்புகை திரும்ப கிடைக்கின்றது
3.CoAP என சுருக்கமாக அழைக்கபெறும் Constrained Application Protocol ஆனது machine-to-machine (M2M) எனும் ஒழுங்குமுறையாக இருந்து தற்போது IoT இல் பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது இது HTTP ஒழுங்குமுறையை அப்படியே பின்பற்றுகின்றது இதில் முனைமங்கள் அனுப்பும் தகவல் ‘Message’.எனும் செய்திகளாகும் அவ்வாறான செய்திகளை ‘Request/Response’ என்பது செய்திகளை அனுப்புவதற்கான கோரிக்கையும் சேவையாளரிட-மிருந்து அதற்கான பதில்செயலும் அடங்கியதாகும்
4.XMPP என சுருக்கமாக அழைக்கபெறும்Extensible Messaging and Presence Protocolஒழுங்கு முறையானது நாம் பயன்படுத்திகொண்டுவரும் வாட்ஸ்அப் எனும் சமுதாய பயன்பாட்டில் பின்பற்றப்படுகின்றது கட்டணமற்றது பயன்படுத்த எளிதானது அதனால் அனைவராலும் பின்பற்றபட்டு மிகப்பிரபலமாக விளங்குகின்றது நாம் தற்போது பயன்படுத்தி கொண்டு-வரும் நம்முடைய கைபேசிகள் அனைத்தும் இந்த வகையிலான வாடிக்கையாளர் முனைமங்களாகும் இதில் இணைந்த முனைமங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தன்மை-வாய்ந்த அடையாளம் வழங்கப்பெறும் அதன்வாயிலாக உலகின் எந்தவொரு இடத்திலிருந்தும் அனுப்புகின்ற தரவுகளானவை XMPP சேவையாளரால் பெறப்பட்டு அவை தொடர்புடைய வேறொரு கைபேசிக்கு உலகில் எங்கிருந்தாலும் அனுப்பிவைக்கப்-படுகின்றன

பொருட்களுக்கான இணையத்திற்கான (IOT)கட்டற்ற வன்பொருட்களும் கட்டற்ற இயக்க முறைமைகளும்

பொருட்களுக்கான இணையத்திற்கான(Internet Of Things( IOT))கட்டற்ற வன்பொருட்கள் பின்வருமாறு
1. Arduino Yun என்பது மீ்ச்சிறு கட்டுப்பாட்டாளரும் (microcontrollers) லினக்ஸ் இயக்கமுறைமையும் இணைந்ததாகும் இது ஆர்டினோவை ஆதரிக்கும் ATmega32u4 எனும் செயலியும் லினக்ஸின்மீது செயல்படும் Atheros AR9331 எனும் செயலியும் சேர்ந்து உருவாக்கப்பட்டதாகும் இது Wi-Fi, Ethernet, USB port, microSD card, reset buttons, போன்றவற்றுடன் இணைந்து செயல்படுமாறு கட்டமைக்கப்பட்டுள்ளது
2.BeagleBoard என்பது சிறிய கடனட்டை அளவேயஉள்ளஅட்டையில் ஆண்ட்ராய்டு, லினக்ஸ் ஆகியவை இயங்கிடும் வண்ணம் வடிவமைக்கப்பட்டதாகும் இது செயல்படுவதற்காக மிகவும்குறைந்தஅளவு மின்சாரமே போதுமானதாகும்
3.Flutter என்பது மாணவர்களுக்கும் பொறியாளர்களுக்கும் ஆனகட்டளைவரிகளை தாங்களே உருவாக்கி செயல்படுத்திகொள்ளும் வசதிகொண்ட ஆர்டினோவின் அடிப்படையில் செயல்படும் மின்னனு செயலியின் மையமாகும் இது அரைகிலோமீட்டர் சுற்றளவில்தரவுகளை கம்பியில்லாமலேயே கடத்தும் திறன் கொண்டது அவ்வாறு தரவுகளை கொண்டுசெல்வதற்காக தனியாக வழிசெலுத்தி எதுவும் தேவையில்லைஇது 256பிட்களுக்கு ஒத்திசைவு குறியாக்கமும் நெகிழ்வுதன்மையும் கொண்டது
பொருட்களுக்கான இணையத்திற்கான (IOT) கட்டற்ற இயக்கமுறைமைகள் பின்வருமாறு
1.Raspbian எனும் கட்டற்ற இயக்கமுறைமையானது ஒரு கடனட்டை அளவேயான கணினியாகும் இதுகணினி கல்விவழங்கும் சாதனங்களுக்காக உருவாக்கப் பட்டதாகும் இது டெபியன் லினக்ஸ் இயக்கமுறைமையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மிகவும் பிரபலமான ராஸ்பெர்ரி பீஐ இயக்கமுறைமையாகும்
2.Contiki I எனும் கட்டற்ற இயக்கமுறைமையானதுமீச்சிறு கட்டுப்பாட்டாளரை (microcontrollers) இணையத்துடன் ஒன்றிணைப்பு செய்வதற்கு பயன்படுகின்றது இது RPL, CoAP, IPv6 ,6lowpan ஆகிய செந்தரங்களை ஆதரிக்கின்றது
3.AllJoyn எனும்கட்டற்ற இயக்கமுறைமையானது தயாரிப்பாளர்களுடனான இணக்கமான சாதனங்களை வடிவமைக்க உதவும் சேவைகளையும் கட்டமைப்புகளையும் வழங்குகிறது மேலும்இது OS X, iOS, Windows 7 ,Androidஆகிய இயக்கமுறைமைகளில் செயல்படும் பயன்பாடுகள் போன்றவைகளுடன் செயல்படும் APIஆகும்

பொருட்களுக்கான இணையத்தின் நடைமுறையில் உள்ள பயன்பாடுகள்

தற்போது பொருட்களுக்கான இணையத்தின் பயன்பாடுகள் அங்கிங்கெனாதபடி எங்கெங்கங்கும் பரவிவருகின்றது அவைகளை பற்றிய விவரங்கள் பின்வருமாறு
1. திறனுடைய வீடு தானாகவே மாலை ஆனவுடன் வீட்டிலுள்ள விளக்குகள் எரிதல், குளிர்சாதனங்களை வீட்டின் தட்டவெப்ப நிலைக்கு ஏற்ப இயங்கச்செய்தல் நாம் வெளியே செல்லும்போது வீட்டினை பூட்டி கொள்ளுதல் நாம் உள்ளிருந்தாலும் அனுமதியற்றவர்கள் உள்நுழைவு செய்வதை தடுத்தல் என்பன போன்ற பல்வேறு பணிகளை இந்த பொருட்-களுக்கான இணையபயன்பாட்டின் வாயிலாக செயல்படுத்திடலாம் Philips, Haier, Belkin, Nest, Ecobee, Ring என்பனபோன்ற 256 இற்கு மேற்பட்ட நிறுவனங்கள் இவ்வாறான திறனுடைய வீடுகளை செயற்படுத்திடுவதில் முன்னனியில் உள்ளன
.2 அணிகலன்கள் bracelet. போன்ற நம்முடைய உடலில் அணியும் அணிகலன்கள் வாயிலாக இரத்தஓட்டம், இதயதுடிப்பு போன்ற நம்முடைய உடல்நிலையை காண்பித்து அதற்கேற்ப நாம் நம்முடைய நடைமுறையை சரியாக பின்பற்றச் செய்தல் நாம் விரும்பும் பொழுது போக்குகளை செயற்படுத்துதல் ஆகியவற்றை வழங்குகின்றன
3. திறனுடைய நகரநிருவாகம் ஒரு நகரத்தின் அனைத்து போக்குவரத்துகளையும் கட்டுபடுத்துதல் குடிநீர் வழங்குதல் கழிவுநீரை சரியாக வெளியேற்றுதல் மின்விநி-யோகத்தை கட்டுபடுத்துதல் அதிக ஒசைகளால் பாதிப்படையாமல் இருப்பதற்காக அவைகளை கட்டுபடுத்துதல் சுற்றுசூழலை அதிக மாசுபாடு அடையாமல் கட்டுபடுத்துதல் போக்குவரத்து வாகணங்களை குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தம் செய்து போக்குவரத்தினை எளிதாக்குதல் என்பன போன்ற பணிகளை பொருட்களுக்கான இணையத்தின் பயன்பாடுகளை கொண்டுசெயற்படுத்திடலாம்
4. தொழிலகங்களுக்கான பொருட்களுக்கான இணையத்தின் பயன்பாடுகள் தொழிலகங்களில் தேவையான மூலப்பொருட்களை அதிகமாக குவித்திடாமலும் மூலப்பொருட்கள் இல்லாததால் இயக்கம் நின்றுவிடாமல் இருப்பதற்கேற்ப போதுமான அளவு கொள்முதல் செய்தல் முடிவு பொருட்களின் கிடங்குகளையும் அவ்வாறே நிருவகித்தல் இயந்திரங்களுக்கு தேவையான உதிரிபாகங்களையும் உற்பத்திக்கான துனைப்பொருட்களையும் போதுமானஅளவிற்கு கொள்முதல் செய்தல் போன்றவைகளை செயற்படுத்திடவும்அடுத்த பத்தாண்டுகளில் ஏறத்தாழ 15 டிரில்லியன் மதிப்பிற்கு இந்த பொருட்களுக்கான இணையத்தின் பயன்பாடு பேரளவு துனைபுரியவிருக்கின்றன

Previous Older Entries