பைதான் எனும் கணினிமொழி நிரலாளர்களுக்கு உதவிடும் IDEs

தற்போது நாம் பயன்படுத்திவருகின்ற முதன்மையான இணையதளங்கள் கணினி பயன்பாடுகள் செயற்கை நினைவக பயன்பாடுகள் போன்ற அனைத்தும் பைதான் எனும் கணினிமொழியின் வாயிலாகவே கட்டமைத்து உருவாக்கப்பட்டுள்ளன. மிகமுக்கியமாக OpenShot, Blender, Calibre போன்றபிரபலமான செயல்திட்டங்கள் இதனுடைய வாடிக்கையாளர்-களாகும் என்ற செய்தியை மனதில் கொள்க அவ்வாறான பைதான் எனும் கணினி-மொழியில் நிரல்தொடர்எழுதவிரும்புவோர்களுக்கு பின்வரும் ஒருங்கிணைந்த மேம்படுத்திடும் சூழல் மிகமுதன்மை வாய்ந்தவைகளாகும்
PyCharmஎனும் ஒருங்கிணைந்தபயன்பாட்டினை மேம்படுத்திடம் சூழலானது பைதான் எனும் கணினிமொழியினை அறிந்து கொள்ள விழையும் துவக்கநிலையாளர்களும் பைதான் எனும் கணினிமொழியில் நல்ல அனுபவம் உள்ளவர்களும் பயன்படுத்தி கொள்ளுமாறு ஏராளமான வசதிவாய்ப்புகளை கொண்டமிகப்பிரபலமானதாகும் இது அப்பாச்சி2. அனுமதியின் அடிப்படையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது மேலும் விவரங்களுக்கும்பதிவிறக்கம் செய்து கொள்ளவும் https://www.jetbrains.com/pycharm/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க
Spyder எனும் ஒருங்கிணைந்தபயன்பாட்டினை மேம்படுத்திடம் சூழலானதுபைதான் எனும் கணினிமொழியினை அறிவியில் ஆய்விற்கு பயன்படுத்தி கொள்பவர்களுக்கு பேருதவியாய் விளங்குகின்றது மேலும் விவரங்களுக்குhttps://github.com/spyder-ide/spyder எனும் இணையதளமுகவரிக்கு செல்க
PyDevஎனும் ஒருங்கிணைந்தபயன்பாட்டினை மேம்படுத்திடம் சூழலானதுபைதான் எனும் கணினிமொழியினை கொண்டு பயன்பாடுகளை உருவாக்கிடும்போது பணியை எளிதாக்கிடும் பொருட்டு code completion, debugging, adds a token browser, refactoring tools போன்ற வசதிவாய்ப்புகளை வழங்குகின்றது மேலும் விவரங்களுக்கும்பதிவிறக்கம் செய்து கொள்ளவும் http://www.pydev.org/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க
Eclipseஎனும் ஒருங்கிணைந்தபயன்பாட்டினை மேம்படுத்திடம் சூழலானதுபைதான் எனும் கணினிமொழியினை கொண்டு பயன்பாடுகளை பயனாளர்களின் கற்பணைத்திறனிற்கு ஏற்றவாறு மாற்றியமைத்திட அனுமதிக்கின்றது மேலும் விவரங்களுக்கும்பதிவிறக்கம் செய்து கொள்ளவும் https://eclipse.org/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க
.மேலும் PyScripter,LeoEditor, Bluefish,Geany ஆகிய ஒருங்கிணைந்தபயன்பாட்டினை மேம்படுத்திடம் சூழல்களானதுபைதான் எனும் கணினிமொழியில் நிரலாளர்கள் பயன்படுத்தி கொள்ள தயாராக இருக்கின்றன

பைதான் எனும் கணினிமொழியானது வானிலை ஆய்வாளர்களுக்குகூட உதவுகின்றது

அது எவ்வாறு சாத்தியம் எனும் வினா நம்மனைவரின் மனதிலும் எழும் நிற்க. வானிலை முன்னறிவிப்பு செய்வதற்காக உதவிடும்ForecastWatch.com எனும் இணைய-தளமானது 100% பைதான் எனும் கணினிமொழியால் கட்டமைக்கப்பட்டதாகும்
இதில் தரவுகளைப் பெறுவதற்கான உள்ளீட்டு செயல்முறை, தரவு திரட்டல் இயந்திரம் , வலை பயன்பாட்டு கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கிடைக்கப்பெறும் வானியல் ஆய்வு தரவுகளை கொண்டு இது மிகச்சரியாக வானிலையை முன்கணிப்பு செய்து முன்னறிவிப்பு செய்கின்றது இந்த கட்டமைவில் முன்னறிவிப்பு பாகுபடுத்தி, உண்மை பாகுபடுத்தி ஆகிய இருமுக்கியஉள்ளீட்டு செயலிகள் உள்ளன அவற்றுள். ஒவ்வொரு முன்னறிவிப்பு வழங்குபவர்களிடமிருந்தும் இணையத்தின் வாயிலாக முன்கணித்தலைக் கேட்டுக்கொள்வதற்கு முன்னறிவிப்பு பாகுபடுத்தி பொறுப்பு வகிக்கின்றது. இது முன்கணிப்பை அதன் பக்கங்களிலிருந்து பிரித்து அந்த தரவை ஒரு தரவுத்தளத்தில் உண்மையான தரவுடன் ஒப்பிடும் வரை சேர்க்கின்றது. உண்மை பாகுபடுத்தியானது உண்மையான தரவுகளை தேசியவானிலை தகவல்-மையத்திலிருந்து பெறுகின்றது அதன்பிறகு இவ்வாறான தரவுகளை தரவு திரட்டல் இயந்திரத்தின் வாயிலாக செயல்படுத்தி இறுதிவிளைவை வலை பயன்பாட்டு கட்டமைப்பின் வாயிலாக வெளியிடவும் தரவுகளை பிற்காப்பும் செய்கின்றது ForecastWatch.com எனும் இணையதளத்தின் பின்புல சேவைமுதல் பயனாளர் செயல்படுத்திடும் முன்புறசேவைகள்வரை அனைத்து உள்ளுறுப்புகளும் பைதான் எனும் கணினிமொழியால் கட்டமைக்கப்பட்டுள்ளன ஏனெனில் வானிலை முன்னறிவிப்பிற்கு தேவையான தரவுகளை இணய தளங்களிலிருந்து சேகரித்தல் ,பாகுபடுத்தி ஆய்வுசெய்தல் இறுதிவிளைவை சேமித்தல் ஆகிய அனைத்து பணிகளையும் பைதானின் expression library, thread library, object serialization library, gzip data compression library.ஆகிய நூலகங்களின் உதவியுடன் எளிதாக செயல்படுத்தப்படுகின்றது இவைகளுடன் HTTP இற்கான ClientCookie , HTML இன் அட்டவணை பாகுபடுத்திக்காக ClientTableஆகிய மூன்றாம் தரப்பு செயலிகளும் பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது மேலும் இது வினாக்களை பயன்படுத்தி தரவுகளை MySQLdb வாயிலாக MySQL தரவுதளத்தில் சேமித்து கொள்கின்றது

பைதானில் வரைகலைநிரல்தொடரை Pythonic இன் உதவியுடன் கொண்டுவரலாம்

Pythonicஎன்பது ஒரு வரைகலை நிரலாக்க கருவியாகும், இது பயனர்கள் பைதான் பயன்பாடுகள் உருவாக்குவதை ஆயத்த செயல் தொகுதிகளை பயன்படுத்துவதன் வாயிலாக எளிதாக்குகிறது புதியவர்களை நல்ல நிரலாளர்களாக உருவாக்குவதுதான் PyQt5 அடிப்படையிலான Pythonic எனும்பயன்பாட்டுகருவியின் முதன்மையான நோக்கமாகும், ஆயினும் அனுபவமிக்க பயனர்கள் தங்களுடைய சொந்த பைத்தான் குறிமுறைவரிகளைகூட இந்த பயன்பாட்டில் இணைத்திட முடியும்.
ஒரு சில சொடுக்குகள் கொண்ட ஒரு வர்த்தக bot இன் நிலையான அம்சங்களையும் பண்புகளையும் வழங்குவதில் உள்ள ஆலோசனையிலிருந்து Pythonicஎன்பது உருவானது. இவ்வாறு, திட்டமிடுதல்( scheduler), நிபந்தனை-கிளைகள்(if-branches) , இணைப்புகள் , உள்நுழைவு செயலிகள் போன்ற அடிப்படை செயல்பாடுகளை உரையாடல் பெட்டிக்கு வெளியே பயன்படுத்தி கொள்வதோடு தொடர்புடைய வரைகலைஇடமுகப்பை(GUI ) பயன்படுத்தி அளவுருவப்படுத்தலாம். செயல்பாடுகளின் நோக்கம் நிறுவப்பட்டNode-RED அடிப்படையிலானதாகும், அதனால் Pythonic உடன் சேர்த்து crypto-வர்த்தக அரங்கத்திலிருந்து கூட எளிய முறையில் செயல்படுத்திட முடியும்.
மேலும் Node-RED, போன்றில்லாமல் ஒரு செயல் உருவாக்கப்பட்டவுடன் ஒவ்வொரு வரைகலைஉறுப்பும் தனித்தனியாக செயலியை செயல்படுத்தக்கூடியதாகும் .
ஒவ்வொரு உறுப்பும் ஒரு தனித்துவமான வரைகலை உள்ளீடு முகமூடி கொண்டதாகும். ஒரு செயல்முறை வெற்றிகரமாக முடிந்தபின், திரும்பப் பெறப்பட்ட விளைவானது அடுத்த பயன்பாட்டிற்கும் அடுத்தடுத்த செயல்-முறைக்கும் மாற்றப்படும். கூடுதலாக, காத்திருக்கும்வெளிப்புற நிகழ்வுகள் அடுத்தவொரு நிகழ்வு வரும் போது மற்றொரு செயல்முறையை உருவாக்குகின்ற செயலை தொடருகின்றது .கேட்போர் ,பயன்பாடுகள் போன்ற சேவையாளர் செயல்முறைகளை பின்னணியில் இணையாக வைக்க முடியும். இந்த வழிமுறைகளையே அனைத்து செயல்முறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றது. timersஇலும் அல்லது TCP / IP சேவை பயன்பாடுகளிலும் பயன்படுவதைஇதற்கு எடுத்துக்காட்டாக கொள்ளமுடியும்.
திட்டமிடல் தொகுதியில் நேரக்கட்டுப்பாட்டு பணிகளை செயல்படுத்த முடியும்.
Pythonic ஆனதுGPLv3 எனும் அனுமதியின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது இந்த Pythonic ஐ ஆங்கிலம் ஜெர்மனி ஸ்பானிஸ் சீன ஆகிய மொழிகளில் பயன்படுத்தி கொள்ளுமாறு தற்போது வெளியிடபட்டுள்ளது இதனை PyPI)எனும் கட்டுகளின்வாயிலாக நிறுவுகை செய்து பயன்படுத்தி கொள்ளமுடியும்

இதனை push / pop / insert / append ஆகிய பல்வேறு வழிகளில் அனுகமுடியும் அதனோடு இயக்கநேரத்தில் crypto- வர்த்தக பரிமாற்றத்திற்காக ஒருங்கிணைந்த API ஆனதுஇதன் உள்ளடக்கங்கள் காட்சிதிரையாக பட்டியலிடப்படுகின்றது
சேவையக நேரத்தை ஒத்திசைவுசெய்தல், சந்தைத் தரவைப் பதிவிறக்குதல் போன்ற செயல்களைஇது இயலுமைசெய்கின்றது