Cocospy எனும் நம்முடைய பிள்ளைகளின் கைபேசி பாதுகாப்பு பயன்பாடு

நாளுக்கநாள் வளர்ந்துவரும் தொழில்நுட்ப வளர்ச்சியினால் பயன்களும் பாதிப்புகளும் அதனோடுகூடவே உருவாகி நம்முடைய வாழ்க்கையில் நம்மைஅல்லலுற செய்கின்றன இணையத்தினை அனைவரும் எந்தநேரத்திலும் எந்த இடத்திலிருந்தும் எந்த சாதனத்திலிருந்தும் உலாவரலாம் என்ற வசதியானது அபாயத்தை குறிப்பாக சிறுவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்திடுகின்றது அதனால் பெற்றோர்களாகிய நாம் நம்முடைய பிள்ளைகளின் பாதுகாப்பிற்கு நாமேமுதன்மை பொறுப்பேற்கவேண்டும் அதற்காக நம்முடைய பிள்ளைகள் இணைய உலாவரும் செயலானது நம்முடைய கண்காணிப்புவலையத்திற்குள் இருக்குமாறு செய்வது அத்தியாவசிய தேவையாகும்
அவ்வாறான வகையில் Cocospy என்பது ஒரு இதுமிகவும் நம்பகமானதிறனுடைய கைபேசி பாதுகாப்பு பயன்பாடாகும் இதனை தற்போது உலகில் 190 இற்கும் அதிகமானநாடுகளில் வாழும் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் நம்முடைய பிள்ளைகள் நாம் கண்காணிக்கின்றோம் என அறியாமலேயே நாம் அவர்களை நம்முடைய கண்காணிப்பு வலையத்திற்குள் இதன் வாயிலாக கொண்டுவந்து ஒற்றன் போன்று அவர்களின் இணைய உலாவலின்போது அதன் பின்புலத்திலிருந்து கண்காணித்திடமுடியும் அவ்வாறு கண்காணிப்பு செய்வதற்காக rooting அல்லது jailbreaking ஆகியவை எதுவும் செய்யத்தேவையில்லை ஆண்ட்ராய்டு கைபேசிஎனில் இந்த பயன்பாட்டினை பிள்ளைகளின் கைபேசியில் நிறுவுகை செய்து கொண்டால் மட்டும் போதுமானதாகும் இதுதனியாக உருவக திரையில் காண்பிக்காது பின்புலத்தில் இயங்குவதும் தெரியாது ஆயினும் தவறான இணையஉலாவலை தடுத்துவிடும்செயலை செய்திடுகின்ற நூறு சதவிகிதம் சட்டப்படியான பாதுகாப்பான கட்டமைவாகும் இது பயனாளர்களின் இனிய நண்பனாக செயல்படுகின்றது இதுமிகவும் பிறர் காணாதவாறு செயல்படுவதால் இது செயல்படுவதற்காக மிககுறைந்த மின்சாரமும் காலிஇடமும் போதுமானவையாகும் இதனை பயன்படுத்தி கொள்ளவிழைந்தால்முதலில் இதனுடைய https://www.cocospy.com/ எனும் தளத்திற்கு செல்க அதில் குறிப்பிட்டவாறு சந்தா செலுத்திடுக நம்முடைய பிள்ளைகள் பயன்படுத்திடுவது ஐஃபோனாக இருந்தால் iCloud விவரங்களை சரிபார்த்திடுக ஆண்ட்ராய்டாக இருந்தால் பிள்ளைகளின் சாதனத்தில் 2 எம்பி அளவுள்ள இதனை ஐந்தேநிமிடத்தில் நிறுவுகை செய்துகொள்க Cocospy முகப்பு பக்கத்தில் உள்நுழைவுசெய்து செயலை துவங்கிடுக அதன்பின்னர் ‘Start’ எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து பிள்ளைகளின் இணையஉலாவலை கண்காணிக்கதுவங்கிடுக நம்முடைய பிள்ளைகள் இருக்குமிடத்தைகூட இந்த பயன்பாட்டின் வாயிலாக கண்காணித்திடமுடியும் அதாவது எந்தெந்த கைபேசிகளுடன் பேசப்படுகின்றது எந்தெந்த சமுதாய வலைபின்னல் இணைப்பில் இணையஉலாவரப்பெறுகின்றது எந்தெந்த இணையபக்கத்திற்கு இணையஉலா சென்றுவரப்பெறுகின்றது எந்தஇடத்தில்தற்போது நம்முடைய பிள்ளைகள் இருக்கின்றனர் என்பனபோன்ற பல்வேறு தகவல்களை அறிந்துகொள்ளும் வசதி வாய்ப்புகளை பயன்படுத்தி கண்காணிப்பு செய்து கொள்ளமுடியும்

கடவுச்சொற்களற்ற அங்கீகாரம் வழங்கிடும் FIDO எனும் கட்டற்றசேவையாளர் ஒரு அறிமுகம்

தற்போது மறையாக்கவிசைகளைநிருவகிப்பதற்கான தீர்வுகளை வழங்கிடும்முன்னனி நிறுவனமாக StrongKey என்பது உள்ளது இது FIDO எனும் கட்டற்ற கட்டணமற்ற சேவையாளரை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு GNU L G P L v2.1எனும்அனுமதியில் வெளியிட்டுள்ளது இது பயனாளர்கள் உள்நுழைவு செய்வதற்காக கடவுச் சொற்களில்லாம லேயே அங்கீகாரம் வழங்கிடுமாறும் நடப்பிலுள்ள பாதுகாப்பு தனியுரிமையையும் அல்லது புதியஅங்கீகாரத்தையும் ஒருங்கிணைந்து செயல்படுமாறும் கட்டமைக்கப் பட்டுள்ளது அதைவிட தொழில்துறை செந்தரங்களை மிகவிரைவாக ஏற்றிடுமாறும் நிறுவனங்களின் சமீபத்திய மிகவலுவான பலகாரணிகளைகொண்ட அங்கீகாரத்தை வழங்கிடுமாறும் வடிவமைக்கப் பட்டுள்ளது இது பிஸ்ஸிங்க், மால்வேர் தாக்குதல் ,ஹைஜாக்கிங் ஆகியவற்றிலிருந்து முழுமையான பாதுகாப்பினை வழங்குகின்றது இதனுடைய சமீபத்திய FIDO2எனும் வெளியீட்டில் மறையாக்க பொதுதிறவுகோளின் அடிப்படையில் செயல்படும் அங்கீகாரத்தை கடவுசொற்களுக்கு பதிலாக பயோமெட்ரிக்ஸ் பயன்படுத்தி கொள்ளுமாறு கட்டமைக்கப்பட்டுள்ளது இதனைhttps://github.com/StrongKey/FIDO-Server எனும் இணையமுகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க.

கையடக்கமான சிறந்த பாதுகாப்பு மென்பொருட்கள்

நம்முடைய கணினியானது பழையதா அல்லது புதியதா அவ்வாறே நம்முடைய கணினி மிகவேகமாக செயல்டுவதா அல்லது மிகமெதுவாக செயல்படுவதா என்ற வேறுபாடுஎதுவுமில்லாமல் நம்முடைய கணினிக்கு போதுமான மென்பொருட்களைகொண்டு பாதுகாப்பு செய்திடுவது அத்தியாவசிய தேவையாகும் அவ்வாறான பாதுகாப்பினை வழங்குவதற்கான கையடக்கமான சிறந்த பாதுகாப்பு மென்பொருட்கள் பின்வருமாறு
1. PWGen நம்முடைய இணைய கணக்குகளை மிகபாதுகாப்பாக வைத்திட இந்த கையடக்க கடவுச்சொற்களை உருவாக்கிடும் பாதுகாப்பு மென்பொருள் மிகச்சிறந்த தேர்வாகும் இது பல்வேறு கடவுச்சொற்களை மிகவிரைவாக உடனடியாக உருவாக்குகின்றது அதிலும் நினைவில் கொள்ளதக்க வகையிலான கடவுச்சொற்களை இது உருவாக்கி வழங்குகின்றது ஆண்ட்டி வைரஸ் கருவிகளைவிடவும் ஃபயர்வாலைவிடவும்மிகவும் இது மிகவும்பாதுகாப்பானது இணையத்தில் எந்தவொருபக்கத்திலும் கணக்குஒன்றினை துவங்குவதற்குமுன் இதன் வாயிலாக தேவையான பாதுகாப்பான நம்பகமான கடவுசொற்களை விரைவாக உருவாக்கி அதனை பயன்படுத்தி கொள்ளமுடியும் இதனைhttp://pwgen-win.sourceforge.net/ எனும் இணையமுகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க
2.TinyWall விண்டோஇயக்கமுறைமையில்வழக்கமான ஃபயர்வாலைவிடவும் இதுமிகவும் பாதுகாப்பானது நம்முடைய கணினிக்கு தேவையான ஃபயர்வாலை எளிதாக உருவாக்கி பின்புலத்தில் இயங்கச்செய்துஏதேனும் தீங்கிழைக்கும்மென்பொருட்கள் நம்முடைய கணினிக்குள் உள்நுழை செய்திடுமோ என நாம் கவலைபடாமல் நம்முடைய வழக்கமான பணியை தொடர்ந்து செயல்படுத்தி கொள்ளலாம் எந்தெந்த பயன்பாடுகள் நம்முடைய கணினிக்கு தீங்குவிளைவிக்குமோ அவைகளை blacklistஎன்றும் எவை தீங்குவிளைவிக்காதவையோ அவை whitelist என்றும் பட்டியிடுகின்றது அதனடிப்படையில் நாம் செயல்படமுடியும் இதனை https://tinywall.pados.hu/ எனும் இணையமுகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க
3. KeePass நாம்இணையத்தில் ஒவ்வொரு பக்கத்திலும் துவங்கிடும் கணக்குகளின் அனைத்து கடவுச் சொற்களையும் தொகுத்து ஒருமுதன்மைகடவுச்சொற்களின் வாயிலாக பாதுகாப்பாக வைத்து கொள்ளஇது பேருதவியாகஉள்ளது இந்த முதன்மை கடவுச்சொல் கோப்பினை நம்முடைய கையடக்க USB இல் அல்லது இணையத்தில் சேமித்து வைத்து கொள்ளலாம் கடவுச்சொற்களை பல்வேறு வடிவமைப்புகளில் சேமித்து வைத்திடலாம் இது கைபேசி திறன்பேசி ஆகிய வற்றில் கூட செயல்படும் திறன்மிக்கது இதனை https://keepass.info/ எனும் இணையமுகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க
4. Eraser கணினியில் ஏதேனும் கோப்புகளை அழித்து நீக்கம் செய்கின்றோம் எனில் தற்போது நாமனைவரும் பயன்படுத்தி கொண்டுவரும் இயக்கமுறைமைகளானவை அதனை நீக்கம் செய்து மட்டும்வைத்திடுகின்றன அந்த நினைவகத்தினை வேறு கோப்புகளை மேலெழுதும்வரை அதனுடைய தரவுகள் நினைவகத்தில்அப்படியே ஒதுக்கி வைத்திடுகின்றது இந்நிலையில் தக்கமென்பொருட்களை கொண்டு இவ்வாறு நீக்கம் செய்யப்பட்ட கோப்பகளை தீங்கிழைக்கவிழைவோர் எளிதாக மீட்டெடுத்துவிடமுடியும் பொதுவாக நாமனைவரும் நாம்தான் நம்முடைய கோப்பினை அழித்து நீக்கிவிட்டோமே என இறுமாந்திருந்தால் தீங்கு விளைவிப்போர் இந்த கோப்பினை மீட்டெடுத்து பயன்படுத்தி கொள்ளலாம் அல்லவா அவ்வாறு மீட்டெடுக்கமுடியாமல்தடுக்கவருவதுதான் Eraser எனும் பாதுகாப்பு மென்பொருளாகும் இதனை கொண்டு நீக்கம்செய்திடவிரும்பும் கோப்புகளை அல்லது கோப்பகங்களை தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் தேவையான வாய்ப்பினை தெரிவுசெய்து நீக்கம் செய்து கொள்க இதனைhttps://eraser.heidi.ie/download/ எனும் இணையமுகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க

Ghidra எனும் பின்னோக்கு பொறியியல்மென்பொருள் கருவி ஒரு அறிமுகம்

தேசிய பாதுகாப்பு முகமையானது(National Security Agency (NSA)) இந்த Ghidraஎனும் பின்னோக்கு பொறியியல்மென்பொருள் கருவியைஉருவாக்கி வெளியிட்டுள்ளது
தீங்கிழைக்கும் (malicious) குறிமுறைவரிகளையும் தீங்கிழைக்கும் தீம்பொருளையும் (malware) பகுப்பாய்வு செய்வதற்கு இந்த Ghidraஎனும்கருவியானது உதவுகின்றது , இணையபாதுகாப்ப தொழில் நுட்ப வல்லுநர்கள் தங்களுடைய வலைபின்னல்-களிலும் கணினிகளிலும் உருவாகும் பாதிப்புகளை முன்கூட்டியே அறிந்து கொள்ள இது பேருதவியாக விளங்குகின்றது.
இதனுடையமுதன்மையான வசதிவாய்ப்புகள் பின்வருமாறு
தீம்பொருளிலும் மென்பொருளிலும்பலவீனமான புள்ளிகளை கண்டறிந்து அவற்றை நீக்கி பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு இந்த கருவிபேருதவியாய் விளங்குகின்றது. அதே நேரத்தில் பல பயனாளர்களும் ஒரு பைனரியை பயன்படுத்தி தம்முடைய பாதுகாப்பினை உறுதி படுத்தி கொள்ளமுடியும்.
மென்பொருட்களின் பாதுகாப்பு குறைபாடுஉள்ள பகுதியை பிரித்தல், தொகுத்தல் , சீர்குலைத்தல், வரைபடமாகஉருவாக்குதல், ஸ்கிரிப்டிங் ஆகியவை இதனுடைய முதன்மையான திறன்களாகும்.
பலவகையான செயலி அறிவுறுத்தல்களின் தொகுப்புகளையும் இயங்கக்கூடிய வடிவமைப்புகளையும் இது ஆதரிக்கிறது அதுமட்டுமல்லாது பயனாளர் இடைமுகம் செய்யதக்கவகை, தானியக்க முறை ஆகிய இரண்டு வகைகளிலும் இயங்குகின்ற திறன்கொண்டது.இந்த கருவியானது விண்டோ லினக்ஸ் மேக்ஸ் ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது இதிலுள்ள APIஐ பயன்படுத்தி பயனாளர்கள் தமக்கு மேலும் தேவையானவசதி வாய்ப்புகளை கூடுதல் இணைப்பாக உருவாக்கி இணைத்து பயன்படுத்தி கொள்ளமுடியும் இந்த கருவியை பற்றி மேலும் அறிந்து பயன்படுத்தி கொள்வதற்காக https://ghidra-sre.org/ எனும் இணையதளபக்கத்திற்குசெல்க

சைபர் குற்றவாளிகளை எளிதாக கண்டறிய முடியுமா

சைபர் குற்றவாளிகள் தற்போது பல்வேறு வழிகளில் நம்முடைய சாதனங்களில் தங்களுடைய தீங்கிழைக்கும் தரவுகளை கொண்டுவந்து சேர்த்து தங்களுடைய கைவரிசைகளைநாம் எதிர்பார்த்திடாத பல்வேறு விளைவுகளை இக்கட்டான சூழ்நிலைகளை நமக்கு ஏற்படுத்திடுகின்றனர். இவ்வாறான நாம் கண்ணால் நேரடியாக காட்சியாக காணமுடியாதவாறு ஆவணங்களில் ,கானொளிகாட்சிகளில் ,உருவப்படங்களில் மால்வேர்களாக மறைத்து வைத்திடுவதையே Steganography என அழைப்பர் .அதனடிப்படையில்
Android/Twitoor என்பதுகுறுஞ்செய்திவாயிலாக அல்லது தீங்கிழைக்கும் இணைய முகவரிவாயிலாக தேவையற்ற செயலிகளைஅல்லது தந்திரங்களை நாமறியாமலேயேநம்முடைய கருவிகளில் இவை நிறுவுகை செய்துவிடுகின்றது
Cerber ransomware என்பது கோப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதன்வாயிலாக பரவச்செய்து குறிப்பிட்ட கோப்பினை திறந்து பயன்படுத்திடும்போது தானாகவே சாதனங்களில் நிறுவுகை செய்து கொள்ளும் திறன்மிக்கது
அவ்வாறே Stegano/Astrum exploit kit என்பது விளம்பர படங்களுக்கு பின்புலத்தில் தீங்கிழைக்கும் குறிமுறைவரிகள் நிறுவுகை செய்து பாதிப்பினை ஏற்படுத்திடுகின்றது
இவைகளைவிட தற்போதைய புதிய நவீண கால சூழலிற்கு ஏற்ப பொருட்களுக்கான இணையத்துடன்(Internet of Things (IoT)) இணைந்த பொருட்களிலும் தங்களுடைய கைவரிசைகளை காட்டமுனைந்துள்ளனர்
தற்போது இவ்வாறான தீங்கிழைக்கும் தகவல்களை மறைக்கும் தொழில்நுட்பங்கள் மெதுவாக “சாதாரண” மால்வேர்களுக்கான நடைமுறைத் தரமாக மாறி வருகின்றன.
இணையத்தின்மின் வணிக தளத்தில் Magento தொடர்பான பெரிய அளவிலான தாக்குதல்கள் கடனட்டை விவரங்களை மறைக்க image steganography பயன்படுத்துவதை வெளிப்படுத்தியது. அவ்வாறான தளங்கள் பாதிக்கப்பட்டவுடன், மால்வேரானது பண விவரங்களை சேகரித்து, பாதிக்கப்பட்ட மின்வணிக(e- commerce) தளத்தில் கிடைக்கும் உண்மையான தயாரிப்புகளின் படங்களை உள்ளே மறைத்து வைத்து விடுகின்றது.
இவ்வாறு கண்ணால் காணமுடியாத மறையாக்கத்தைகொண்டு மறைக்கப்பட்ட தரவுகளை கண்டுபிடிப்பது என்பது குவித்துவைக்கப்பட்ட வைக்கோல்போரில் குண்டூசியை தேடுவதற்கு ஒப்பான செயலாகும் அதனால் அனைவரும் எந்தவொரு சிறு செயலாக இருந்தாலும் மிகஎச்சரிக்கையுடன் செயல்படுத்தி கொள்க என எச்சரிக்கபபடுகின்றது

ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை கூகுள் ப்ளேஸ்டேரிலிருந்து எச்சரிக்கையாக பதிவிறக்கம் செய்திடுக

ஆண்ட்ராய்டுசெயல்படும் கைபேசிகளை வைத்துள்ள பயன்பாட்டாளர்கள் தங்களுக்கு தேவையான ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை கூகுள் ப்ளேஸ்டேரிலிருந்து தாம் விரும்பும் பயன்பாடுகளை தங்களுடைய சாதனங்களில் பதிவிறக்கம்செய்திடும்போது சிறிது கூடுதலான எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என எச்சரிக்கப்படுகின்றார்கள் ஏனெனில் அதனோடு ஏராளமான தீங்கிழைக்கும் பயன்பாடுகளும் (malicious apps) சேர்ந்து நம்முடைய சாதனத்திற்குள் நம்மை அறியாமலேயே வந்து நம்முடைய சமுதாய வலைபின்னல் கணக்குகளையும் மிகமுக்கியமாக நம்முடைய இணையவங்கி கணக்குகளின் உள்நுழைவு தகவல்களையும் அபகரித்து கொள்கின்றன அதனோடு இவை போலியான உரைகளின் வாயிலாக இந்த கணக்கினை அபகரிக்க செய்கின்றனஇவை battery managers, phone cleaners, device speed boosters, horoscope-themed apps என்பனபோன்ற பயன்பாடுகளுடன் நம்முடைய ஆண்ட்ராய்டு சாதனத்திற்குள் உள்புகுந்து நாசவேலைசெய்கின்றன அதனால் கூகுள் ப்ளேஸ்டேரிலிருந்து நாம் விரும்பும் பயன்பாடுகளை பதிவிறக்கம் செய்யமுயலும்போது அவை பாதுகாப்பான பயன்பாடுகளா என அறிந்து தெளிந்து சிறிது எச்சரிக்கையாக கையாளுக என அறிவுறுத்தப்படுகின்றது

நம்முடைய முகநூல் கணக்கினை அபகரிப்போர்களிடமிருந்து பாதுகாத்திடுக

தற்போது உலகம்முழுவதும் முகநூல்(face book) எனும் சமூகவலைதளமானது மிகவும் பிரபலமான வலைதளங்களில் ஒன்றாக விளங்குகின்றது. முகநூலை பயன்படுத்தி சமூக செயல்களில் ஈடுபடும் மக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் பெருக்கல் விகிதங்களில் அதிவேகமாக அதிகரித்து வருகிறன்து அதனை தொடர்ந்து ஒருசில நேரங்களில் பல இணைய ஆபத்துகளும் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் நம்முடைய முகநூல் கணக்கை பாதுகாத்துகொள்வது மிகமுக்கியமானதாகும் . இவ்வாறான ஆபத்துகளை நாம் கவனிக்கத் தவறினால், அபகரிப்போர் யாராவதொருவர் நம்முடைய முகநூல் கணக்கினை அபகரிப்பு செய்வதற்கு இது எளிதான வழியாகும். எனவே, பயனுள்ள தந்திரங்களின் வாயிலாக தீங்கிழைக்கும் தாக்குதலிலிருந்து நம்முடைய முகநூல் கணக்கைப் பாதுகாக்க ஒரு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து , ஒரு சிறந்த செயலாக நிரூபிக்க முடியும்.எனினும், நம்முடைய முகநூல் கணக்கை முற்றிலும் பாதுகாக்கப்படுவதற்கு எப்போதும் கூடுதல் கவணத்தை கைகொள்ள வேண்டும். நிச்சயமாக, நம்முடைய முகநூல் கணக்கைப் பாதுகாப்பதற்காக பயன்பாட்டிற்குப் பிறகு கையொப்பமிடுதல் போன்றசில எளிய வழிகள்உள்ளன, அவை.
1. வலுவான கடவுச்சொற்கள் எட்டுஎழுத்துகளுக்குமேல் நீண்ட வலுவான கடவுச்சொற்களை கட்டமைத்து கொள்வது நல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் அதனை மாற்றி யமைத்து கொள்க அதற்காக settings => general=> password => generate a strong password =>என்றவாறு கட்டளைகளை செயல்படுத்தி அவ்வப்போது அல்லது குறிப்பிட்ட காலஇடைவெளியில்புதிய கடவுச்சொற்களை உருவாக்கி மாற்றியமைத்துகொள்க
2. கைபேசி எண்ணை சேர்த்தல் இதன்வாயிலாக நம்முடைய கணக்கின் பாதுகாப்புத்தண்மையை வலுபடுத்தி கொள்க எவ்வாறெனில் நம்முடைய கணக்கில் கடவுச்சொற்களை மாற்றியமைத்திடும்போது OTP எனும் ஒருமுறைமட்டுமான கடவுச்சொற்களை பெறுவதன் வாயிலாக வேறுயாரும் நம்முடைய முகநூல் கணக்கின் கடவுச்சொற்களை மாற்றியமைத்திடமுடியாதவாறு செய்திடலாம் இதற்காக Settings => mobile => add a phone number =>என்றவாறு கட்டளை செயல்படுத்தி கைபேசி எண்ணை சேர்த்திடுக
3. பாதுகாப்பாகஇணையஉலாவருதல் இந்த வாய்ப்பின் வாயிலாக நாம் உலாவரும்போது வெளிப்புற பயன்பாடுகள் நம்முடைய முகநூல் கணக்கில் இணை ந்து செயல்படும்போது கட்டுபடுத்தி பாதுகாக்கின்றது இதற்காகSettings => Security => Recognized devices => check all the devices => confirm your identity & remove not related activity => save=> என்றவாறு கட்டளைகளை செயல்படுத்தி கட்டமைத்து கொள்க
4. முகநூல்கணக்கின் உள்நுழைவு அனுமதியை மாற்றியமைத்தல் அனுமதியில்லாத சாதனங்களின் வாயிலாக நம்முடைய முகநூல் கணக்கில் ஒவ்வொருமுறை உள்நுழைவுசெய்திடும்போதும் பாதுகாப்பு குறியீடுகளை (pin) உள்ளீடு செய்திடுமாறு கோரும் இதன்வாயிலாக நம்முடைய முகநூல் கணக்கினை பாதுகாத்திடலாம் இதற்காக Settings => Security => login approval=> edit link => checkout box to activate login approval => save=> என்றவாறுகட்டளைகளை செயற்படுத்திடுக
5.முந்தைய பயன்படுத்திய தகவலை நீக்கம்செய்தல் ஏதேனும் ஒரு சாதனத்தின் வாயிலாக நம்முடைய முகநூல் கணக்கினை பயன்படுத்தி வெளியேறிபின்னர் வேறுநபர் இதன் வாயிலாக நம்முடைய முகநூல் கணக்கினை அபகரித்திட ஏதுவாகிவிடும் அதனால் நம்முடைய முகநூல் கணக்கினை பயன்படுத்தி வெளியேறிடும்போது உலாவந்த தகல்களை நீக்கம்செய்து பாதுகாத்திடுக இதற்காகAccount settings => security => look for “ active section” => edit => end activity=>என்றவாறு கட்டளைகளை செயல்படுத்தி நீக்கம் செய்திடுக
6. குப்பையான இணைப்புகளை தவிர்த்திடுக நம்முடைய முகநூல்கணக்கிற்கு வரும் குப்பையான இணைப்புகளை தொடர்ந்து சென்றால் தீங்கிழைக்கும் தாக்குதல் இணைப்பிற்கு நம்மை மடைமாற்றம் செய்து அழைத்து சென்றுவிடும் அதனால் எச்சரிக்கையாக அவ்வாறான இணைப்பினை அறவே தவிர்த்திடுக மேலும் நம்முடைய பயனாளர் பெயர் கடவுச்சொற்களை இவைகளை தொடரும்போது வழங்கிடவேண்டாம்
7. நம்முடைய தணிப்பட்ட அமைவை நிகழ்நிலைபடுத்திடுக சமீபத்திய பாதுகாப்பு ஏற்பாடுகளை கொண்டு அவ்வப்போது நம்முடைய முகநூல் கணக்கின் தனிப்பட்ட அமைவைமேம்படுத்தி கொள்க இதற்காக Settings => security => Login alerts => select the mode of notifications=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக

Previous Older Entries