தற்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக JBoss Web Server 5 எனும் பயன்பாடு Tomcat 9 என்பதுடன் சேர்ந்து கிடைக்கின்றது

ரெட்ஹெட் எனும் நிறுவனம் பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்வதற்கு வசதியாக ZIP அல்லது RPM வடிவமைப்பில் கட்டற்ற தொழில்நுட்பத்துடன் நிறுவனங்களின் அனைத்து தேவைகளுக்கும் ஒரேதீர்வான புதிய JBoss Web Server 5 எனும் இணைய பயன்பாட்டினை மிகமேம்பட்டபொறியானTomcat 9 என்பதுடன் சேர்த்து தற்போது வெளியிட்டுள்ளது இது HTTP/2 ஐஆதரிக்கின்றது மேலும் Servlet 4.0 எனும் விவர வரையறை கொண்டது அதுமட்டுமல்லாது JSSE எனும் இணைபபானுடன் சேர்ந்த TLS என்பதற்காக OpenSSL ஐ கொண்டது மிகமுக்கியமாக இயல்புநிலையிலான HTTP/1.1 என்பதற்காக NIO எனும் இணைப்பானை கொண்டது.அதைவிட இதனுடைய TLS ஆனது மெய்நிகர் SNI ஐ ஆதரிக்கின்றது இது உள்பொதிந்த வழங்கல்களை ஆதரிக்கின்றது இதில் tomcat-vault எனும் நிறுவுகை செயல் மேம்படுத்தப்பட்டுள்ளது இதில் பல்லடுக்கு பண்புகளுடன் கூடிய கோப்புகளை கட்டமைக்கமுடியும் இந்த JBoss Web Serverஇல் log4jis என்பதுடன் சேர்த்துஉள்நுழைவு செய்திடமுடியும்

ஆண்ட்ராய்டு பயன்பாடு உருவாக்குநர்களுக்கும் பயனாளர்களுக்கும் புதிய ஆண்ட்ராய்டின் AppBundleஎன்பது பேருதவியாக வருகின்றது

தற்போதைய நிலையில் பல்வேறு சாதனங்களின் சிபியு கட்டமைவு,திரையின் அமைவு,குறிப்பிட்ட சாதனத்தின் பல்வேறு வளங்களை நிருவகித்தல், பயனாளர் விரும்பும் மொழியை நிருவகித்தல் என்பன போன்ற உலகம் முழுவதும் புழக்கத்தில் உள்ள பல்வேறு வகையான ஆண்ட்ராய்டு சாதனங்களிலும் நாம் உருவாக்கிடும் ஆண்ட்ராய்டு பயன்பாடு பிரச்சினை இல்லாமல் செயல்பட்டு எதிர்பார்த்திடும் பயனை வழங்குவது எவ்வாறு என்பதுதான் ஒவ்வொரு ஆண்ட்ராய்டு பயன்பாட்டினை உருவாக்குபவரின் அடிப்படையான தலையாய பிரச்சினையாகும் இதனை தீர்வுசெய்திடுவதற்காக பல்லடுக்கு Android Package Kits (APK) கோப்பமைவுகள் நடைமுறையில் இருக்கின்றன ஆயினும் இது பல்வேறு வடிவமைப்பு கோப்புகளையும் ஒன்றாக ஒருங்கிணைந்து பெரியஅளவிலான பேரளவு கோப்பாக இருப்பதுதான் மிகமுக்கிய குறைபாடாகும் இதனை தீர்வுசெய்து குறிப்பிட்ட சாதனத்திற்கேற்ற வடிவமைப்பை மட்டும் பதிவிறக்கம் செய்திடுவதற்கான .aap எனும்வடிவமைப்பில்APP Bundle எனும் புதிய வசதியை தற்போது கூகுளானது அறிமுகபடுத்தியுள்ளது. ஒரு பயனாளி கூகுள் ப்ளே ஸ்டோரை அனுகி குறிப்பிட்ட பயன்பாட்டினை பதிவிறக்கம்செய்திட விழையும் விருப்பத்தை தெரிவுசெய்தால் உடன் கூகுளானது அந்த பயனாளியினுடைய ஆண்ட்ராய்டு சாதனத்தினை சரிபார்த்து அதற்கேற்ற பொருத்தமான பயன்பாட்டினை மட்டும் பதிவிறக்கம்செய்திட அனுமதிக்கின்றது இந்த கூகுளின்APP Bundle எனும் புதிய வசதியானது split APKஎனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெரியஅளவுள்ள APK கோப்புகளை சிறியஅளவுள்ள Base APK, Configuration APK, DymicfeatureAPKஆகிய மூன்று கோப்புகளாக பிரித்திடுகின்றது இதில்முதலிரண்டும் கண்டிப்பாக தேவையாகும் மூன்றாவது தேவையெனில் பயன்படுத்தி கொள்க இதனை பயன்படுத்திடுவதற்காக Android Studio 3.2 previewபதிப்பை பதிவிறக்கம்செய்து நிறுவுகை செய்து செயல்படச்செய்திடுக உடன் தோன்றிடும் திரையில் நம்முடைய ஆண்ட்ராய்டு பயன்பாட்டு குறிமுறைவரிகளை மேலேற்றம் செய்திடுக தொடர்ந்து இதனுடைய திரையின் மேலே கட்டளைபட்டையில்Build => Build Bundle/APK(s)=> Build Bundle =>அல்லது Build => Generate Signed Bundle / APK=> Generate Signed Bundle =>என்ற வாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன்Generate Bundle or APK எனும்உரையாடல் பெட்டிதிரையில் விரியும்
அதில் Android App Bundle என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து கொண்டு Next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும்திரையில் Keystore என்பதையும் மற்ற விருப்பங்களையும் APK என்பதை உருவாக்கிடும்போது பின்பற்றிய அதேவழிமுறையை பின்பற்றினால் இறுதியாக .aap எனும்வடிவமைப்பில்APP Bundle உருவாகிவிடும் இதனை கூகுள் ப்ளேஸ்டோரிற்கு பதிவேற்றம் செய்திடலாம்

மேம்பட்ட கைபேசி பயன்பாடுகளை உருவாக்குவதற்காக Ionicஎனும் வரைச்சட்டத்தை(Framework) பயன்படுத்தி கொள்க

இதற்குமுன் ஒரே பயன்பாடானது வெவ்வேறு செல்லிடத்து பேசிகளி்ன் இயக்கமுறைமை-களிலும் செயல்படுமாறு செய்வதற்காக குழுவான உருவாக்குநர்கள் நாள்கணக்கில் முயன்று பணிபுரிந்து வந்தனர் அதனை எளிமையாக்கிடும்பொருட்டுAngularJS என்பது அறிமுகபடுத்தப்பட்டது அதனைதொடர்ந்து புதிய Hybrid Apps பிறந்தன அதாவது சதாரன இணைய காட்சியானது HTML, CSS, JSSWeb போன்றவைகளால் மேம்படுத்தப்டடு புதியமேம்பட்ட கைபேசி பயன்பாடுகள் பயன்பாட்டிற்கு வந்தன பத்தாண்டுகளுக்கு முன்புகூட ஃப்ஸ்புக் ஆனது HTML5 இல் IOSஇற்கான பயன்பாட்டினை உருவாக்கி பயன்பாட்டிற்கு வெளியிட்டிருந்தாலும் ஒருசில குறைபாடுகள் அதில் இருந்தன தற்போது அவையனைத்தும் சரிசெய்யப்பட்டு புதிய மேம்பட்ட கைபேசி பயன்பாடுகள் உருவாக்குவது மிகஎளிய செயலாகிவிட்டது அதாவது எந்தவொரு பயன்பாட்டினையும் அதன் துவக்க முதல் முடிவு வரை அனைத்தையும் உருவாக்கிடாமல் நாம் விரும்பும் கைபேசியின் எந்தவொரு பயன்-பாட்டினையும் அதற்கு தேவையான தனித்தனியாக உறுப்புகளை அவற்றுக்கு பொருத்தமானவைகளை மட்டும் தெரிவுசெய்து ஒருங்கிணைத்து புதிய கைபேசி பயன்பாட்டினை கட்டமைத்து கொள்ளும்வசதி இந்த வரைச்சட்டத்தில்(Framework) கிடைக்கின்றது தற்போது Phone gap, Cordova, Ionic போன்ற பிரபலமான வரைச்சட்டங்கள் நாம் பயன்படுத்தி கொள்வதற்காக தயாராக இருக்கின்றன அதிலும் Ionic வரைச்சட்டமானது Cordova இன் அடிப்படையில் செயல்படுமாறு உருவாக்கப்பட்டது அதைவிட இது AngularJS இன் சமீபத்திய பதிப்பிற்கேற்ப நிகழ்நிலைபடுத்தப்பட்டு பயன்படுத்த தயாராக இருக்கின்றது மேலும் ஆயிரகணக்கான பயன்பாட்டு உறுப்புகள் நாம் பயன்படுத்தி கொள்வதற்காக இதில் தயார்நிலையில் உள்ளன அதனால் இதனுடைய Collection -repeateஎனும் வாய்ப்பினை பயன்படுத்தி மிகவிரைவாக நாம்விரும்பும் கைபேசி பயன்பாடுகளை இதன் உறுப்பகளின் மூலம் கட்டமைத்து பல்வேறு பயனாளர்களும் பயன்படுத்தி கொள்வதற்காக வெளியிடமுடியும்மேலும் விவரங்களுக்கு https://ionicframework.com/எனும் இணையமுவகரிக்கு செல்க

விண்டோ10 இயக்கமுறைமைகளில் ஏற்படும் பிரச்சினைகளை எளிதாக தீர்வுசெய்து கொள்க

முதலில் நம்முடைய விண்டோ10 இயக்கமுறைமை நிகழ்நிலைபடுத்தப்பட்டுள்ளதாவென உறுதி படுத்தி கொள்க அதன்பின்னர் Windows key + I ஆகிய விசைகளை அழுத்துக உடன்விரியும் திரையில் Update & Security > Windows Update என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக நிகழ்நிலை படுத்தியபின் கணினியின் இயக்கத்தை நிறுத்தம்செய்து மறுதுவக்கம்செய்திடுக பொதுவாக நம்மில் பலர் கணினியில் அச்சுபொறி போன்ற பல்வேறு துனைச்சாதனங்களை இணைத்து இயக்கி பயன்பெறுவோம் அவைகளை OBit Driver Boosterஅல்லது Snappy Driver Installerஎனும் பயன்பாட்டின் வாயிலாக நிகழ்நிலை படுத்தி கொண்டால் பிரச்சினைஏதுமில்லாமல் இவை சரியாக செயல்பட ஏதுவாகவிடும் அடுத்து FixWin 10எனும் பயன்பாடுஇயக்க முறைமையில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை சரிசெய்து சரியாக இயங்கசெய்கின்றது அதற்கடுத்ததாகUltimate Windows Tweaker 4எனும் பயன்பாடு விண்டோ இயக்கமுறைமையில் செயல்படும் பல்வேறு பயன்பாடுகளை தூண்டிவிட்டு தொடர்ந்து நன்கு இயங்கிடுமாறு செய்கின்றது Windows Repairஎனும் பயன்பாடு விண்டோ 10 இயக்கமுறைமையில் ஏற்படும் பல்வேறு பழுதுகளையும் சரிசெய்து சரியாக இயங்க உதவுகின்றது ஏதேனும் வசதி வாய்ப்புகளை விண்டோ10 இயக்கமுறைமையில்நிறுவுகைசெய்திடாமல் இருந்திட்டால் அதை நிறுவுகைசெய்து பயன்படுத்தி கொள்ளMissed Features Installerஎனும் பயன்பாடு மிகப்பேருதவியாக விளங்குகின்றது

நமக்கு பல்வேறு வகைகளில் உதவிடும் திறன்பேசிகளில்அல்லது கைபேசிகளில் செயல்படும் பயன்பாடுகள்

1.Be My Eyesஎனும் பயன்பாடு குறிப்பிட்ட பார்வை குறைபாடுஉடையவர்களையும் வழக்கமான பணியை தடங்களின்றி செய்திட ஐஓஎஸ் ஆண்ட்ராய்டு சாதனங்களின் செயல்படும் பயன்பாடுகள் பேருதவியாக விளங்குகின்றனஅவ்வாறான வகையில்Be My Eyesஎனும் பயன்பாடு பார்வை திறனற்றவர்கள் தங்களுடைய குரலொலி வாயிலாக தமக்கு தேவையான உணப்பொருள்களை பெற்றிடவும் புத்தகங்களை படித்தறியவும் வீட்டின் பொருட்களை கண்டுபிடித்திடவும் பயன்படுகின்றது
2. OLIOஎனும் பயன்பாடு குறிப்பிட்ட கூட்டங்களில் கலந்து கொள்ள கொண்டு சென்று விடுதல் நண்பர்களை சந்தித்தல் தேவைப்படுவர்களுக்கு நன்கொடை வழங்கவும் பயன்படுகின்றது
3.Wakieஎனும் பயன்பாடு நண்பர்கள் குழுவாக இணைந்து குரலொலி வாயிலாகவும் உரைவாயிலாகவும் குழுவிவாதம்செய்திட உதவுகின்றது
4. Golden Volunteer Opportunities எனும் பயன்பாடு தன்னார்வாளர்கள் ஒன்றிணைந்து கிராமப்பகுதியில் தேவையான உதவிகளை செய்திட உதவுகின்றது
5. Blood Donor எனும் பயன்பாடு இரத்தகொடை வழங்குபவர்களை ஒன்றிணைக்க பயன்படுகின்றது

சிறுவர்களின் கல்விக்கான விளையாட்டு பயன்பாடுகள்

சிறுவர்களுக்கு விளையாட்டுகளுடன் கல்வி கற்பிப்பது மிகஎளிதாக அச்சிறுவர்கள் கல்வி கற்பதற்கான வழிமுறையாகும் ஆரம்ப பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கட்டணமற்ற கணினிவிளையாட்டுகளுடன் கல்வி கற்பிப்பது மிகவிருப்பமுடன் கல்விகற்பதற்கான சிறந்த கருவியாக விளங்குகின்றது அவ்வாறான கட்டற்ற கட்டணமற்ற கல்விக்கான கணினி விளையாட்டுகள் பின்வருமாறு
1. Animals Kingdom என்பது விளங்குகளின் பெயர்களும் அவற்றின் உருவப்படங்களும் தனித்தனிபட்டியலாக வைக்கப்பட்டுள்ளன குறிப்பிட்ட விளங்கின் உருவப்படத்தையும் அதற்கான பெயரையும் பொருத்தமாக 20 நொடிகளில் இணைத்திடவேண்டும் இந்த விளையாட்டின்மூலம் விளங்குகளின் பெயர்சொற்களை சிறுவர்களால் எளிதாக நினைவு கொள்ளமுடியும் அதுமட்டுமல்லாது புதிய மொழியை அறிந்து கொள்ளவும் இந்த விளையாட்டினை பயன்படுத்தி கொள்ளமுடியும் இந்த விளையாட்டிற்கான இணைய முகவரி https://chrome.google.com/webstore/detail/animals-kingdom/bljikedmcopkefpphhjcffncbgahpeii ஆகும்
2.Fruits Kingdom இது Animals Kingdom எனும் விளையாட்டினை போன்றே பழங்களின் பெயர்களும் அவற்றின் உருவப்படங்களும் தனித்தனிபட்டியலாக வைக்கப்பட்டுள்ளன இதில் குறிப்பிட்ட பழத்தின் உருவப்படத்தையும் அதற்கான பெயரையும் பொருத்தமாக இணைத்திட வேண்டும்இந்த விளையாட்டின்மூலம் பழங்களின் பெயர் சொற்களை சிறுவர்களால் எளிதாக நினைவு கொள்ளமுடியும் இந்த விளையாட்டிற்கான இணைய முகவரி https://chrome.google.com/webstore/detail/fruits-kingdom/ajlibigiakbameokhpdedomphpgfffmm ஆகும்
3.Left Right Word Game எனும் விளையாட்டு சிறுவர்களுக்கு சவாலான விளையாட்டாகும் அதாவது இரு சிறுவர்களின் படங்களுக்குமேல்பகுதியில் மேல்மீட்பு பட்டிகளில் தனித்தனியான சொற்றொடர்கள் இருக்கும் அதற்கானமிகச்சரியான ஒற்றையான சொல்லை ஒவ்வொன்றிலும் தெரிவுசெய்திடவேண்டும் உதாரணமாக Bite andByte, Toe andTow, Stairs andStares என்பனபோன்று சொற்கள் சிறிது வித்தியாசமாக அதாவது ஒரே உச்சரிப்புகொண்ட இருவேறு சொற்களை சிறுவர்களால் எளிதாக நினைவு கொள்ள முடியும் மிகச்சரியாக தெரிவுசெய்தால் மதிப்பெண்வழங்கப்படும் இவ்வாறு பத்துமுறை செய்தபின் இறுதியாக உங்களுடைய மொத்த மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம் இந்த விளையாட்டிற்கான இணைய முகவரி https://chrome.google.com/webstore/detail/left-right-word-game/kkgjemofbnjllhnalghekceohbdkgmhp ஆகும்
4. Wonders in Math Landஎனும் விளையாட்டு Animals Kingdom எனும் விளையாட்டினை போன்றே கணித உருப்படங்கள் அவற்றிற்கான பெயர்கள் குறிப்பிட்ட கணித உருவப்-படத்தையும் அதற்கான பெயரையும் பொருத்தமாக இணைத்திடவேண்டும்இந்த விளையாட்டின் மூலம் கணித உருப்படங்களின் பெயர் சொற்களை சிறுவர்களால் எளிதாக அறிந்து நினைவு கொள்ளமுடியும் அதனை தொடர்ந்து அடுத்தநிலையில் குறிப்பிட்ட கணித உருப்படத்தை எவ்வாறு வரைவது என்ற கேள்விக்கான பதிலை தெரிவுசெய்து கொண்டே வந்தால்குறிப்பிட்ட கணிதஉருவப்படம் முழுமையடையும்இந்த விளையாட்டிற்கான இணைய முகவரிhttps://chrome.google.com/webstore/detail/wonders-in-math-land/bfjffnginaejlenpjofdadfdlnnkdldf ஆகும்
5. Max Phonics Gamesஎன்ற விளையாட்டில் Words Within, Words Builder,Memory, Wise Guy ஆகிய ஐந்துவகை விளையாட்டுகள் உள்ளன இதன் வாயிலாக சிறுவர்களின் spelling, vocabulary, memory, motor skills ஆகிய திறன்களை மேம்படுத்தி கொள்ளமுடியும் இதில் மேலும் புதிய விளை-யாட்டினையும் நாம் உருவாக்கி கொள்ளமுடியும் இந்த விளையாட்டிற்கான இணைய முகவரிhttps://chrome.google.com/webstore/detail/max-phonics-games/beaoljonpdcpkmdiiphomkdjhgbiaabj ஆகும்
6. Yolaroo ABC இதில்ஆங்கில எழுத்துகள் ஒவ்வொன்றிற்கும் ஒன்றிற்குமேற்பட்ட சொற்கள் அதற்கான உருவப்படங்கள் என உள்ளன இதில் ஆங்கில எழுத்து அல்லது சொற்களை தெரிவுசெய்தால் அவை தொடர்பான உருவப்படங்கள் பிரிபலிக்கும் தொடர்புடைய அந்த சொல்லிற்கான உருவப்படத்தினை தெரிவுசெய்திடவேண்டும் இதன் வாயிலாக ஆங்கில எழுத்துகளையும் சொற்களையம் ஐயம் திரிபற அறிந்து கொள்ள முடியும் இந்த விளை-யாட்டிற்கான இணைய முகவரி https://chrome.google.com/ webstore/detail/yolaroo-abc/eogeaamkgkigjmnbhbmjjknkimijfiep ஆகும்
7.Feed Mypetdog Numbersஎன்ற விளையாட்டு கணிதத்தில் 1 முதல்10 வரைஉள்ள எண்களை கொண்டு அடிப்படை கூட்டல் கழித்தல் கணக்குகளைஎளிதாக கற்றுகொள்ள உதவுகின்றது இந்த விளையாட்டிற்கான இணைய முகவரி https://chrome.google.com/ webstore/detail/feed-mypetdog-numbers/nnicoedplgaiebgbgckklfhjjmblmcdd ஆகும்

Your Time On Facebook எனும் புதிய வாய்ப்பு

முகநூல் எனும் சமூதாயஇணையதளத்தின் நம்முடைய கணக்கில்உலாவரும்நேரத்தை கட்டுபடுத்திட Your Time On Facebook எனும் புதிய வாய்ப்பு வெளியிடபட்டுள்ளது
நம்மில் ஒருசிலர் சாப்பாடு தூக்கம் தவிர மற்றபணிகள் எதனையும் செய்திடாமல் பெரும்பாலான நேரத்தினை இந்த முகநூல் எனும் சமூதாயஇணையதளத்தில் உலாவருவதற்காகவே பயன்படுத்தி வருவது நாம் அறிந்த செய்தியே. அவ்வாறானவர்கள் இந்த முகநூல் இணையதளத்திற்கு அடிமையாகவே ஆகிவிட்டனர் ஆயினும் அவ்வாறானவர்களை இந்த அடிமைைதளையிலிருந்து விடுபட செய்வதற்காக முகநூல் எனும் சமூதாயஇணையதளமானது Your Time On Facebook எனும் புதியவசதியை வெளியிட்டுள்ளது இதன் வாயிலாக தினமும் நாம் எவ்வளவுநேரம் மட்டும் இந்த இணையபக்கத்தை பயன்படுத்திடலாம் என அமைத்து கொண்டால் போதும் குறிப்பிட்ட நேரம்முடிந்தவுடன் இந்த முகநூல் இணையதளத்தினை நம்மால் அனுகுமுடியாதவாறு தடுத்திடுகின்றது ஏற்கனவே ஆப்பிள் கூகுள் ஆகியவற்றில் இவ்வாறான வசதி வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன அதேபோன்று தற்போது Facebook இணையதளத்திலும் இந்த புதியவசதி கொண்டுவரப்பட்டுள்ளது மிகமுக்கியமாக ஐஓஎஸ் ஆண்ட்ராய்டு கைபேசிகளில் இந்த வசதி மிகப்பேருதவியாக இருக்குமாறு செய்யப்பட்டுள்ளது என்ற மிகமுக்கிய செய்தியை மனதில் கொள்க

Previous Older Entries