நச்சுநிரலால் பாதிக்கப்பட்ட எக்செல் கோப்புகளை எவ்வாறு சரிசெய்வது

நான்கு வழிமுறைகளில் சரிசெய்திடலாம்
1.முதல் வழிமுறையாக மைக்ரோசாப்ட் ஆஃபிஸ்பொத்தானை சொடுக்குக பின்னர் Openஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்திடுக உடன் விரியும் Openஎனும் உரையாடல்பெட்டியில் பாதிக்கப்பட்ட எக்செல்லை கோப்பினை தெரிவுசெய்து திறந்து கொள்க அதன்பின்னர் இதில் Openஎனும் தாவிபொத்தானிற்கு அடுத்துள்ள Open and Repairஎனும் வாய்ப்பினைதெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் Repair எனும் வாய்ப்பினை தெரிவுசய்து சொடுக்குக அல்லது Extract Data எனும் பொத்தானை தெரிவசெய்து சொடுக்குக
2.இரண்டாவது படிமுறையாக இவ்வாறு பாதிக்கப்பட்ட கோப்பினை லிபர்ஆஃபிஸ் கால்க் எனும்பயன்பாட்டின் வாயிலாக திறந்திடுக பின்னர்Save as எனும் பொத்தானை சொடுக்குதல்செய்து எக்செல்வடிவமைப்புகோப்பாக சேமித்திடுக உடன் XLS அல்லது XLSX பின்னொட்டுடன் கூடிய எக்செல் கோப்பினை வடிகட்டி சரிசெய்து விடுகின்றது
3.மூன்றாவது படிமுறையாக பாதிக்கப்பட்ட எக்செல் கோப்பினை திறந்து கொள்க பின்னர்அதனை Save as எனும் பொத்தானை அழுத்தி HTML வடிவமைப்புகோப்பாக சேமித்திடுகஉடன் XLS அல்லது XLSX பின்னொட்டுடன் கூடிய எக்செல் கோப்பினை வடிகட்டி சரிசெய்து விடுகின்றது
4.நான்காவது படிமுறையாக பாதிக்கப்பட்ட எக்செல் கோப்பினை திறந்து கொள்க பின்னர்அதனை Save as எனும் பொத்தானை அழுத்தி SYLK வடிவமைப்புகோப்பாக சேமித்திடுக இந்த வழிமுறையில் பாதிக்கப்பட்ட XLS அல்லது XLSX பின்னொட்டுடன் கூடிய எக்செல் கோப்பினை வடிகட்டி சரிசெய்து விடுகின்றது

விசைப்பலகை பூட்டு( Keylogger) என்றால் என்ன

Keylogger எனும் விசைப்பலகை பூட்டு என்பது தீங்கு விளைவிக்க உதவிடும் ஒரு உளவாளி கட்டளைத்தொடராகும் அதாவது இது நம்முடைய கணினியில் ஓரமாக எங்காவது மூலையில் அமர்ந்துகொண்டு நாம் தரவுகளை உள்ளீடு செய்வதற்காக விசைப்பலகயில் தட்டச்சு செய்வதை ஒவ்வொன்றாக கவணித்து கொண்டே இருந்து அந்த தகவல்களை அவ்வப்போது அதை உருவாக்கியவர்களுக்கு அனுப்பிடுகின்றது அதனடிப்படையில் நம்முடைய நடவடிக்கைகள் அனைத்தையும் அந்த நபர் கண்காணிப்பு செய்கின்றார் அதனை தொடர்ந்து தமக்கு தேவையானசெயலை நமக்கெதிராக செய்து முடிக்கின்றார் ஆயினும் இந்த Keylogger என்பதை கொண்டு நம்முடைய பிள்ளைகள் குறிப்பிட்ட இணைய தள பக்கங்களுக்கு செல்லாமல் தடுக்கவும் பழக தகுதியற்ற தீயவர்களுடன் குழுவிவாதம் செய்வதை தடுத்திடவும் அவர்களின் இணைய உலா நடவடிக்கையை கண்காணிக்கவும்முடியும் மிகமுக்கியமாக ஒருநிறுவனத்தின் முதலாளியானவர் தன்கீழ் பணிபுரியும் பணியாளர்களின் இணைய உலா நடவடிக்கையை கண்காணித்து அவர்கள் நிறுவன பணியை மட்டும் பணிநேரத்தில் செய்திடுமாறு வழிகாட்டிட இதுஉதவுகின்றது
இந்த Keylogger இன் வாயிலாக தனிநபரின் கணினியில் அவருடைய இணைய வங்கி கணக்கிற்குள் உள்நுழைவு செய்வதற்காக உள்ளீடு செய்திடும் பயனாளர் பெயர் கடவுச்சொற்கள் ஆகியவற்றை கண்காணித்து அவைகளின் உதவியால் வேறொரு இடத்தில் இருந்துகொண்டே நம்முடைய வங்கி கணக்கில் உள்நுழைவுசெய்து நம்முடைய பணத்தினை அபகரித்துகொள்ளும் பாதக செயலும் நடைபெறஏதுவாகின்றது இதனை தவிர்க்க நம்முடைய கணினியில் தரமான எதிர்நச்சு நிரலை பயன்படுத்துக அடுத்ததாக நம்முடைய கைபேசியின் வழியாக கூடுதலாக ஒருமுறை பயன்படுத்திடும் கடவுச்சொற்களின் மூலம் உள்நுழைவுசெய்திடும் வழிமுறையை பின்பற்றிடுக அவ்வாறே எந்தவொருநபரும் நம்முடை வங்கி கணக்கில் உள்நுழைவு செய்தால் நமக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தி வருமாறு செய்திடுக மேலும் இவ்வாறான செயலை தடுப்பதற்காக சில இணைய பக்கங்கள் சிறு உரைபெட்டியில் தோன்றிடும் எழுத்துருக்களை உள்ளீடு செய்திடுமாறு கோருகின்ற கூடுதலான பாதுகாப்பும் வழங்கப்படுகின்றது
அதனால் நம்முடைய கணினியில் இந்த Keylogger என்பது இல்லாமல் உள்ளதாவென உறுதிபடுத்திகொள்க அதற்கான எதிர்நச்சு நிரல்தொடரை நிறுவுகை செய்து பாதுகாத்து கொள்க

எச்சரிக்கை: நாமனைவரும் தற்போது பயன்படுத்திவரும் நம்முடைய கணினிகளில் தகவல்களை வன்தட்டில் பூட்டிவைத்திடும் Ransomware எனும் நச்சுநிரல் பரவுகின்றது

5

தற்போது நம்முடைய கணினியின் வன்தட்டில் உள்ள நம்முடைய தனிப்பட்ட தகவல்களின் கோப்புகளை பூட்டிவைத்திட்டு நம்மிடம் குறிப்பி்ட்ட தொகை வழங்கினால் மட்டுமே அவைகளை நாம் அனுகஅனுமதி அளிக்கமுடியும் என்ற கோரிக்கையைநம்மிடம் விடுக்கும் மிகமோசமாக நம்மை ஏமாற்றிடும் PETYA Crypto-ransomware எனும் நச்சுநிரலானது மிகவேகமாக பரவிவருகின்றது மிகமுக்கியமாக இது மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளின் தகவல்களை பூட்டிவைத்துகொண்டு அவைகளை அனுகுவதற்கு குறிப்பி்ட்டத்தொகை வழங்கினால் மட்டுமே அனுமதிக்கமுடியும் என மருத்துவமனைகளை குறிவைத்து தாக்குதல் செய்கின்றது இதனை தவிர்ப்பதற்காக மறையாக்கம் செய்கின்றேன் என தகவல்களை மறையாக்கம் செய்தாலும் பயனேதும் இல்லாததாக ஆக்கி விட்டு வன்தட்டினை பூட்டி கணினியின் இயக்கவேமுடியாதவாறு தடைகற்களாக இது விளங்குகின்றது இந்த நச்சுநிரல் பாதித்த கணினியை இயங்கத்துவங்கியவுடன் படத்தில்உள்ளவாறு திரையின் தோற்றத்தை மாற்றியமைத்து கணினியை துவங்கமுடியாதவாறு செய்துவிடுகின்றது பெரும்பாலும் மின்னஞ்சல் வழியாக இந்த நச்சுநிரல் வந்து நம்முடைய கணினிக்கு சேருகின்றது அதனை திறந்து பார்த்து அதனுடைய இணையமுகவரியை தொடர்ந்து cloud storage,Dropbox ஆகிய இணய பக்கத்திற்கு சென்றால் போதும் உடன் நம்முடைய கணினியில் நம்மிடம் குறிப்பிட்ட தொகையை வழங்குமாறு கோருகின்றது வழங்கவில்லை எனில் கணினியின்தகவல்களை பாதிப்படையச்செய்கின்றது அதனால் எதிர்நிச்சுநிரல் போன்ற பாதுகாப்பு அரண்களை நம்முடைய கணினியில் அவ்வப்போது நிகழ்நிலை படுத்தி மேம்படுத்தி கொண்டேஇருங்கள் மேலும் தேவையற்ற மின்னஞ்சல்களின் இணைப்புகளை தொடர்ந்து செல்லவேண்டாம்என அறிவுறுத்தபடுகின்றது