உலகின் மிகப்பழமையான தொழில் எது

ஒருநாள் மருத்துவர்ஒருவர், கட்டுமானபொறியாளர்ஒருவர், கணினிநிரலாளர் ஒருவர் ஆகியமூவரும் முக்கியமான விழாவில் சந்தித்து கொண்டனர் இம்மூவரும் பல்வேறு செய்திகளை தங்களுக்குள் பரிமாறிகொண்டே இருந்தபோது தாங்கள் செய்துவரும் தங்களின் மூவருடைய தொழில்களில் உலகின் மிகவும் பழமையான தொழில் எது என்று கருத்து விவாதத்திற்கு வந்தது . அப்போது மருத்துவர் , “நண்பர்களே , கடவுள் முதன்முதலாக ஆதாமினுடைய விலா எலும்பிலிருந்து சிறிது எலும்பினை எடுத்து ஏவாளைப் படைத்ததாகவும் அதிலிருந்துதான் இந்த உலகமக்களாகிய நாமனைவரும் உருவானார்கள் என்றும் பைபிள் கூறுகின்றது. அறுவை சிகிச்சையின் வாயிலாக மட்டுமே ஆதாமினுடைய விலா எலும்பிலிருந்து சிறிது எலும்பினை எடுக்கமுடியும் என இதிலிருந்து தெரியவருகின்றதல்லவா அதனால் இந்த கூற்றிலிருந்துஇவ்வுலகில் முதன்முதலாக ஏவாளைப் படைப்பதற்கு அறுவை சிகிச்சை தேவையென தெளிவாக தெரியவருகின்றது, எனவே மருத்துவ தொழில்தான் உலகின் மிகவும் பழமையான தொழில் என்று நான் அறுதியிட்டுக் கூற முடியும். ” என தன்னுடைய வாதத்தினை துவங்கினார்
உடனடியாக கட்டுமான பொறியாளர் அந்த மருத்துவரின் வாதத்தில் குறுக்கிட்டு, “ஆனால் மருத்துவர் அவர்களே அதற்கு முன்பு ஆதியாகமம் புத்தகங்களில் கூட, கடவுளானவர் ஒரே குழப்பமாக இருந்த வானத்தினை ஒழுங்கு செய்து தெளிவாக்கி அதிலிருந்துதான் நாம் தற்போது வாழ்கின்ற இந்த புவியை படைத்தார் என்று கூறுகிறது. அதனால் இந்த புவயின் படைப்புதான் கட்டுமான பொறியியலின் முதலாவதும் நிச்சயமாக மிகவும் தெளிவானதுமான ஒரு எடுத்துகாட்டாகும். எனவே, நியாயமாக மருத்துவரே, நீங்கள் சொல்வது தவறு: என்னுடைய கட்டுமான பொறியியல் தான் உலகின் மிகப் பழமையான தொழிலாகும். ”என தன்னுடைய வாதத்தினை எடுத்து வைத்தார் .இவ்விரண்டு வாதங்களையும் கேட்டுகொண்டிருந்த கணினி நிரலாளர் தனது நாற்காலியில் நன்கு சாய்ந்து அமர்ந்து கொண்டு, மெல்லிய புன்சிரிப்புடன் மிகவும் நம்பிக்கையுடன், “ஆஹா, கட்டுமான பொறியாளரே ஆனால் கடவுள் வானத்திலிருந்து குழப்பத்தை தெளிவாக்கி இந்த உலகை படைத்தார் என்று கூறினீர் உண்மைதான் ஆனால் அவ்வாறான குழப்பத்தை உருவாக்கியவர் யார்? தெரியுமா என்னைபோன்ற கணினி நிரலாளர்கள்தான் அதனால் கணினி நிரலாளர் தொழில்தான் உலகில் மிகப்பழமையான தொழிலாகும் . ” என இறுதியாக அந்த விவாத்தினை முடித்தார்
என்ன வாசகரே நீங்கள் உலகில் மிகப்பழமையானது எந்த தொழில் என்று இந்த வாதபிரிதிவாதத்திலிருந்து ஒரு முடிவிற்கு லந்துவிட்டீர்களா

கணினி பணிக்கான நேர்காணல்

அகிலன்என்பவர் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகத்தின் கணினி பட்டதாரியாவார் அவர் , ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிக்கான நேர்காணலுக்கு செல்கிறார்.
அகத்தியன்என்பவர் ஒரு வயதான அனுபவமிக்க நேர்காணல் குழுவின் தலைவர் ஆவார் . அவர் அகிலனிடம் கேட்கும் முதல் கேள்வி, “நீங்கள் கணினியின் தர்க்கத்தில்( logic) வல்லவரா?”‘
“ஆம் நிச்சயமாக”, என்று அகிலன் பதிலளித்தார்.
“நான் அந்த கணினி தர்க்கம் (logic ) குறித்து உங்களைச் பரிசோதிக்க விரும்புகின்றேன்”, என்று அகத்தியன் கூறினார் தொடர்ந்து . “இரண்டு தொழிலாளர்கள் ஒரு தொழிற் சாலையின் புகைபோக்கியில் பணிசெய்தபின் கீழே இறங்கி வருகின்றார்கள். ஒருவர் சுத்தமான முகத்துடன் வருகின்றார், மற்றொருவர் அழுக்கு முகத்துடன் வெளியே வருகின்றார். இருவரில் யார் தன்னுடைய முகத்தை கழுவ வேண்டும்? ” என்று கணினியின் தர்க்கம் (logic ) குறித்து கேள்வியை அகத்தியன்அகிலனிடம் கேட்டார்
அந்த சேள்வியை அகிலன் செவிமடுத்தவுடன் அகத்தியனை முறைத்துப் பார்த்தார். “இது கணினியின் தர்க்கத்திற்கான ஒரு பரிசோதனை கேள்வி யா? “என சந்தேகம் கேட்டபோது “ஆம்”, என அகத்தியன் தலையசைக்கிறார்.
“அழுக்கு முகம் கொண்டவர் தன்னுடைய முகத்தைக் கழுவுவார் “, என அகிலன் பதிலளித்தார்.
அதனை தொடர்ந்து அகத்தியன் “தவறு. சுத்தமான முகம் கொண்டவர் தன்னுடைய முகத்தை கழுவுகிறார். ஏனென்று இதிலுள்ள எளிய கணினி தர்க்கத்தை ஆராயுங்கள். அழுக்கு முகம் கொண்டவர் சுத்தமான முகத்துடன் இருப்பவரைப் பார்த்து, தன்னுடைய முகம் சுத்தமாக இருப்பதாக நினைக்கிறார். சுத்தமான முகம் கொண்டவர் அழுக்கு முகத்துடன் இருப்பவரைப் பார்த்து, தன்னுடைய முகம் அழுக்காக இருப்பதாக எண்ணுகின்றார். அதனால், சுத்தமான முகம் கொண்டவர் தன்னுடைய முகத்தை கழுவுகின்றார். ” என கணினி தர்க்கத்தை பற்றி விளக்கமாக கூறினார்
“ஹ்ம். நான் அதை ஒருபோதும் நினைத்ததில்லை,” என்று அகிலன் பதில்கூறினார். “எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள்.”‘என அகிலன் வேண்டிகொண்டார்
அகத்தியன் தன்னுடைய கையின் இரண்டு விரல்களை உயரேதூக்கி காட்டிக் கொண்டு, “இரண்டு தொழிலாளர்கள் ஒருதொழிற்சாலையின் புகைபோக்கியில் பணிசெய்தபின் கீழே இறங்கி வருகின்றார்கள். ஒருவர் சுத்தமான முகத்துடன் வருகின்றார், மற்றொருவர் அழுக்கு முகத்துடன் வெளியே வருகின்றார். இருவரில் யார் தன்னுடைய முகத்தை கழுவ வேண்டும்?”‘ என்ற கேள்வியை அகத்தியன்மீண்டும் கேட்டார்
“இந்த கணினி தர்க்கத்தைதான் ஏற்கனவே நிறுவிவிட்டோமே. சுத்தமான முகம் கொண்டவர்தான் தன்னுடைய முகத்தை கழுவுவார்.” என அகிலன் பதில் அளித்தார்
அதனை தொடர்ந்து அகத்தியன்"தவறு. இருவரும் தங்களுடைய முகங்களை கழுவுகின்றார்கள். ஏனென்று இதிலுள்ள எளிய கணினி தர்க்கத்தை ஆராயுங்கள். அழுக்கு முகம் கொண்டவர் சுத்தமான முகத்துடன் இருப்பவரைப் பார்த்து, தன்னுடைய முகம் சுத்தமாக இருப்பதாக நினைக்கிறார். சுத்தமான முகம் கொண்டவர் அழுக்கு முகத்துடன் இருப்பவரைப் பார்த்து, தன்னுடைய முகம் அழுக்காக இருப்பதாக நினைக்கிறார். எனவே, சுத்தமான முகம் கொண்டவர் தன்னுடைய முகத்தை கழுவுகின்றார். அழுக்கு முகத்துடன் இருப்பவர் சுத்தமான முகத்துடன் இருப்பவர் தன்னுடைய முகத்தைக் கழுவுவதைப் பார்த்து அவரும் தன்னுடைய முகத்தைக் கழுவுகிறார். எனவே இருவரும் தங்களுடைய முகங்களை கழுவுகின்றார்கள்." என கணினியின் தர்க்கத்தை பற்றி விளக்கமளித்தார் ' "நான் அதைப் பற்றியும் நினைக்கவில்லை!" என அகிலன் பதில் கூறினார். " கணினி தர்க்கத்தில் நான் பிழை செய்வேன் என்பது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கின்றது. எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளியுங்கள் ! " என அகிலன் மீண்டும் வேண்டி கொண்டார் அகத்தியன்தன்னுடைய கையின் இரண்டு விரல்களை உயரேதூக்கி காட்டிக் கொண்டு, "இரண்டு தொழிலாளர்கள்ஒரு தொழிற்சாலையின் புகைபோக்கி யில் பணிசெய்தபின் கீழே இறங்கி வருகின்றார்கள். ஒருவர் சுத்தமான முகத்துடன் வருகின்றார், மற்றொருவர் அழுக்கு முகத்துடன் வெளியே வருகின்றார். இருவரில் யார் தன்னுடைய முகத்தை கழுவ வேண்டும்?" என்ற கேள்வியை மீண்டும் கேட்டார் ' "இருவரும் தங்களுடைய முகங்களைக் கழுவிக்கொள்வார்கள்."'என அகிலன் பதில் கூறியபோது "தவறு. இருவருமே தஙகளுடைய முககங்களைக் கழுவுவதில்லை. . ஏனென்று இதிலுள்ள எளிய கணினி தர்க்கத்தை ஆராயுங்கள். அழுக்கு முகம் கொண்டவர் சுத்தமான முகத்துடன் இருப்பவரைப் பார்த்து, தன்னுடைய முகம் சுத்தமாக இருப்பதாக நினைக்கிறார். அதனால் கழுவ தேவையில்லை எனவிட்டு விடுகின்றார் சுத்தமான முகம் கொண்டவர் அழுக்கு முகத்துடன் இருப்பவரைப் பார்த்து, அழுக்கு முகம் கொஂண்டவரே தன்னுடைய முக்ததை கழுவவில்லை நாம் எதற்காக தன்னுடைய முகத்தை கழுவவேண்டும் தேவையில்லை என நினைக்கிறார். . எனவே யாரும் முகத்தை கழுவுவதில்லை."'என அகத்தியன்விளக்கமளித்தார் அகிலன் மிகுந்த சேர்வுடன் இருக்கின்றார். இருந்தபோதிலும் "நான் இந்த வேலைக்கு தகுதியானவன். தயவுசெய்து எனக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுங்கள்! " என மன்றாடி கேட்டுகொண்டார் தொடர்ந்து அகத்தியன் தனது இரண்டு விரல்களைத் உயரே தூக்கி, காட்டிக் கொண்டு, “இரண்டு தொழிலாளர்கள் ஒரு தொழிற்சாலையின் புகைபோக்கி யில் பணிசெய்தபின் கீழே இறங்கி வருகின்றார்கள். ஒருவர் சுத்தமான முகத்துடன் வருகின்றார், மற்றொருவர் அழுக்கு முகத்துடன் வெளியே வருகின்றார். இருவரில் யார் தன்னுடைய முகத்தை கழுவ வேண்டும்? ” என்ற அதே கேள்வியை மீண்டும் கேட்டார் ‘
“நான் இந்த தர்க்கத்தை நன்றாக கற்றுக்கொண்டேன். யாரும் முகத்தைக் கழுவுவதில்லை ” என்று அகிலன் கூக்குரலுடன் பதிலளித்தார்,` ‘
“தவறு, அகிலன், உங்களுக்கு இந்த பணிக்கான நிரலாக்க அறிவு போதுமானதாக இல்லை ஏன் என்று இப்போது பார்க்கிறீர்களா? , இரண்டு தொழிலாளர்கள் ஒரு தொழிற்சாலையின் ஒரே புகைபோக்கியில் பணிசெய்த பின்னர் கீழே இறங்கி வரும்போது எப்படி, ஒருவர் சுத்தமான முகத்துடனும் மற்றவர் அழுக்கு முகத்துடனும் வெளியே வருவார்கள்? அந்த வளாகத்தில் உள்ள குறைபாட்டை நீங்கள் காணவில்லையா? அந்த தருக்க அறிவு உங்களுக்கு இல்லை நீங்கள் செல்லலாம்” என கூறி அகிலனுக்கு அகத்தியன் விடை கொடுத்தனுப்பினார்

வாடிக்கையாளர் தேவைகளை நிறைவுசெய்வதற்கேற்ப கணினி பயன்பாட்டினை உருவாக்கி வழங்கிடும் நிறுவனம் செய்ய வேண்டிய – நிரலாக்கத்திற்கான வழிகாட்டி

வாடிக்கையாளர்: “எங்களுடைய அடுத்த தேவைஒரு பெரிய யானைமட்டுமே, இது உங்களுக்கேத் தெரிந்த செய்திதான்,
நிறுவனத்தின் தகவல்தொழில்நுட்ப குழு: ஆனால் நீங்கள் எருமையை ஏன் யானைக்கு பதிலாக சரிசெய்து கொள்ளக்கூடாது, அது கூட பெரியது…. கருப்பு வண்ணத்தில் உள்ளது .சிறிய வால்உடையது? ”
வாடிக்கையாளர்: இல்லையில்லை எங்களுக்கு ஒரு யானை மட்டுமே தேவை, எங்களுடைய தற்போதைய செயல்முறையை விளக்குகிறேன் …… ”(என வாடிக்கையாளர் ஒரு மணி நேரம் தங்களுடைய தேவையை விளக்குகிறார்)
நிறுவனத்தின் தகவல்தொழில்நுட்ப குழு: மிகவும் நன்றி, உங்களுடைய தேவையை நாங்கள் புரிந்துகொண்டோம். ஆனால் எங்களுடைய கணினியானது ஒரு எருமையை மட்டுமே ஆதரிக்கிறது.
வாடிக்கையாளர்: எங்களுக்கு யானை மட்டுமே தேவை!
நிறுவனத்தின் தகவல்தொழில்நுட்ப குழு: சரிபரவாயில்லை , நாங்கள் வழக்கமாக உருவாக்குகின்ற நிரலாக்கத்தினை உங்களுக்காக தனிப்பயனாக்க முடியுமா என்று பார்க்கின்றோம் ”
அதாவது வாடிக்கையாளருக்கு ஒரு பெரிய கருப்பு வண்ணம் கொண்ட நான்கு கால்களுடைய விலங்கு, நீண்ட வால், முறம்போன்ற இரு காதுகள் ,குறைந்த முடி இருக்கவேண்டும். துதிக்கை வைத்திருப்பது கட்டாயமாகும். இந்த வாடிக்கையாளரின் தேவைகள் அனைத்தும் மிகச்சரியாக ஆவணப்படுத்தப்பட்டது, அந்த ஆவணத்தில் இருதரப்பாராலும் கையொப்பமிடப்பட்டு பயன்பாடு களின்மேம்படுத்துதல் மையத்திற்கு அனுப்பப்பட்டது!
நிரலாாக்கநிறுவனத்தின் பயன்பாடுகளின் மேம்படுத்திடும் மையத்தில்,
பயன்பாட்டின் வடிவமைப்பு / மேம்பாடு – வாடிக்கையாளரின்தேவைகளின் அடிப்படையில் அனைத்து அம்சங்களும் அடிப்படை நிரலாக்கத்தில் (எருமையாக) ஆதரிக்கப்படுகின்றன, உடற்பகுதி, துதிக்கை ,காதுகள் ஆகியவற்றிற்கும் மட்டும் தனியானதொரு தனிப்பயனாக்கம் செய்யப்படு கின்றது.

நிரலாாக்கநிறுவனத்தின் பயன்பாடுகளை மேம்படுத்திடும் மையத்தில் பணிபுரியும் நிரலாளர்கள் மகிழ்ச்சியுடன் மேலே வாடிக்கயாளர் கூறியவாறான அனைத்து தேவைகளையும் நிறைவேற்றினார்கள், ஆனால் அதைவாடிக்கையாளர் கோரியாவாறு உருவாவதற்கேற்ப நிரலாக்கத்தில் இடையிடையே சேர்க்க, அந்நிறுவனத்தின் நிரலாக்க பரிசோதனையாளர்கள் தங்களுடைய பரிசோதனை செயல்களை பின்வருமாறு நிறைவு செய்தனர்:

விளக்கங்கள் : வாடிக்கையாளரின் தேவைகள் : இறுதியாக வாடிக்கை யாளருக்கு வழங்கியது
பெரிய விலங்கு : ஆம் : ஆம்
கருப்புவண்ணம் : ஆம் : ஆம் இருக்கின்றது
நான்கு கால்கள் : ஆம் : ஆம் உள்ளன
சிறிய வால் : ஆம் : ஆம் உள்ளது
முறம்போன்ற இருகாதுகள்: ஆம் : ஆம் உ ள்ளன
உடலில் குறைவான முடி : ஆம் : ஆம் உ ள்ளன
ஒரு துதிக்கை : ஆம் : ஆம் இருக்கின்றது
எங்களுடைய மதிப்பு கூட்டல் :- : பால் வழங்குமாறு செய்தது

இறுதியாக அவ்வாறு தனிப்பயனாக்கம் செய்தபின்னர் பயன்பாட்டினை வாடிக்கையாளருக்குக் காண்பிக்கப்படுகிறது: உடன் வாடிக்கையாளர் இந்த இறுதி தனிப்பயனாக்கம் செய்த பின்னரான உருவத்தினை பார்த்தவுடன் மயக்கம் அடைந்து வீழ்ந்தார்!

பல்வேறு விலங்குகளுக்கும் முகநூலில்(Face Book) கணக்கு இருந்தால்


மனிதர்களாகிய நமக்கு முகநூல்(Face Book) எனும் சமூக இணையதளத்தில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கணக்கு ஒன்று இருக்கின்றது அதைபோன்று இந்த புவியில் நம்மோடு வாழும் பல்வேறு விலங்குகளுக்கும் இந்த முகநூல்(Face Book) எனும் சமூக இணையதளத்தில் தனித்தனியாக கணக்கு ஒன்று இருந்தால் எவ்வாறு இருக்கும் என்ற கற்பணையைஇந்த பகுதியில் காணலாம்
அவ்வாறு பல்வேறு விலங்குகளுக்கும்முகநூலில்(Face Book) தனியாக கணக்கு இருந்தால், அவை பெரும்பாலும் அவற்றின் நிலையானவைகளாக புதுப்பிப்புகளாக இருக்கலாம்:
கரப்பான் பூச்சி: நிம்மதியுடன் உயிர்வாழ்வதற்காக மனிதர் ஒருவரின் காலடியிலிருந்து மிதிபடுவதை தவிர்க்க இந்த முகநூல்(Face Book) கணக்கு நிர்வகிக்கப்படுகிறது .. மனிதனே, நான் உன்னால் ஏதாவதொருநாளில் கொல்லப்படக்கூடிய ஒரு ஆபத்தான வாழ்க்கை முறையின்படி நான் வழிநடத்தப்படுகின்றேன்! :
பூனை: என் னுடைய ஏழாவது குழந்தை தன்னுடைய அப்பா யார் என்று கேட்கின்றது..நான்அதற்கு எவ்வாறு பதிலளிப்பது ? என்ன சொல்ல வேண்டும் ?, நீங்களே ஒரு ஆலோசனை கூறங்களேன் எனக்கு அதற்கான நினைவு எதுவும் இல்லை:
கொசு: நான் ஒரு எச்.ஐ.வி பாசிட்டிவ்,ஆகஇருக்கின்றேன் ஆயினும் இது ஒருதவறான உறிஞ்சுதலால் ஏற்படுகிறது !!! :
கோழி: நாளை நான் எனது நிலையை புதுப்பிக்கவில்லை எனில், KFC இல் பணியாற்றிடும் நிலைக்கு நான் தள்ளப்படுவேன் என்பதுதான் உண்மை நிலைவரமாகும் இருந்தபோதிலும். நான் அனைவரையும் நேசிக்கிறேன் ?
ஆக்டோபஸ்: என் னுடைய உடல் முழுவதும் மையால் நிரப்பப்பட்டது.என்பதுஉண்மையா !! நீங்களே கூறுங்களேன்^
பன்றி: ஓ மனிதர்களே நான்தான் காய்ச்சலைப் பரப்புகின்றேன் என்ற கிசுகிசுக்களை அனைவரிடமும் பரப்புகின்றீர்களே உண்மையில் இதுசரியா !! : இது நியாயமா ! நீங்களே கூறுங்களேன் !
ஆடு: நண்பர்களே, வெளியே யாரிடமும் செல்ல வேண்டாம், ,உடனடியாக ஈத், போன்ற விடுமுறைநாட்கள் வருகின்றன: ‘(பன்றி ஆட்டின் நிலை குறித்து ஒரு கருத்தை எழுதுகின்றார்: “அதிர்ஷ்டவசமாக நான் ஹராம்” என்பதால் உன்னை போன்று என்னை யாரும் கொல்லமாட்டர்கள்||
உடன் அதற்கு ஆடு பதிலளிக்கிறது: “ஈத் ஆனது சீன ஆண்டு என்பது உங்களுக்கு நினைவில் இல்லையா .!.

கணினியை கையாளதெரிந்த கிளிகளின் விற்பணை


ஒருமனிதன் கிளிஒன்றினை வாங்கி கொண்டுவந்து தன்னுடைய வீட்டில் வளர்க்கவேண்டும் என நீண்டாநாளைய ஆசையை தீர்வசெய்வதற்காக அவ்வூரிலிருந்த கடைத்தெருவிற்கு சென்று கூண்டுகளில் கிளிகளை அடைத்து வைத்து விற்பணைசெய்துவருக்கின்ற ஒரு கடைக்குள் சென்று “ஐயா! இந்த கிளி என்னவிலை?” என வினவினார் .உடன் அந்த கிளிகளின் கடைக்காரர் “அந்த கிளியின் விலை ரூ. 500 “, என கூறியதை தொடர்ந்து அம் மனிதன் “சின்னஞ்சிறிய ஒரு கிளிக்கு ஏன் அவ்வளவு விலை ?”என வினவியபோது, கடைக்காரர் “அந்த கிளியானது நாம் பயன்படுத்தி கொண்டுவரும் கணினியில் Word, Excel , Power Point போன்ற பயன்பாடுகளை தானாகவே செயல்படுத்திடும்திறன்மிக்கது அதனால்தான் அதனுடைய விலை ரூ. 500 ” என பதில் கூறினார் .”சரிதான்” என ஆமோதித்த பின்னர் அடுத்த கிளியை சுட்டிகாட்டி “இரண்டாவதாக இருக்கும் இந்த கிளியன் விலைஎன்ன?” என அந்த மனிதன் வினவியபோது “இரண்டாவது கிளியின் விலை ரூ 1000 .ஏனெனில் இது கணினியில் Word, Excel, Power Point போன்ற பயன்பாடுகளை தானாகவே செயல்படுத்திடுவது மட்டுமல்லாமல் அவ்வாறான பயன்பாடுகளை உருவாக்கும் நிரலாக்கதிறன் பெற்றது.” என கடைக்காரர் கூறியவுடன் “ஆகா பரவாயில்லையே அவ்வளவு திறன்வாய்ந்ததா மிகவும் சரி” மூன்றாவதாக தூங்கி கொண்டிருந்த ஒரு கிளியை காண்பித்து “அதனுடைய விற்பணைவிலை எவ்வளவு ?”என வினவியபோது “அதனுடைய விலை ரூ. 5000 ” என கடைக்காரர் கூறியவுடன் “ஏன்கடைக்காரரே! அந்தகிளிக்கு மட்டும் அவ்வளவு அதிக விலை கூறுகின்றீர்! அந்த கிளிக்கு என்னென்னவெல்லாம் தெரியும்.என கூறுங்களேன் ” என அந்த மனிதன் வினவியபோது “அதுஎன்ன செய்கின்றது என நான் பார்க்கவில்லை ஐயா! இருந்தபோதிலும் இந்த இரண்டுகிளிகளும் தங்களுடைய பணிமுடிவடைந்தவுடன் தலைவரே! அடுத்து நாங்கள் என்ன செய்வது என கணினியின் நிரலாக்க குழுத்தலைவரிடம்(Team Leader) அனுமதி கேட்பதை போன்று அதனிடம் அனுமதிகேட்டு அதன்படி தங்களுடைய பணியை செய்கின்றன” என விளக்கமளித்தார்

ஒரு நிறுவனத்தின் நிரலாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு

நிறுவனத்தின் நிருவாகி: உன்னைபற்றி சொல்.

நிரலாளர்: நீ என்பதற்கான பதில் பெயரே உன்னை என்பதாகும் ஐயா!

நிறுவனத்தின் நிருவாகி: இந்த நிறுவனத்தில் நீ என்னஎதிர்பார்க்கின்றாய்?

நிரலாளர்: தற்போதைய கொரானா பாதித்த சூழலில் நிறுவனம் மாதா மாதம் எனக்கு சரியாக சம்பளம் கொடுக்குமா என்பதே என்னுடைய எதிர்பார்ப்புகள் ஐயா!

நிறுவனத்தின் நிருவாகி: முந்தைய நிறுவனத்தில் பணிபுரியும்போது உன்னுடைய சாதனை என்ன?

நிரலாளர்: அங்கு மதியம் சாப்பிட்டபின்னர் பணியிடத்தில் தூங்காமல் விழித்திருப்பதுதான் என்னுடைய மிகமுக்கியமான சாதனையாகும் ஐயா!

நிறுவனத்தின் நிருவாகி: ஏன் இந்த நிறுவனத்திற்கு பணிபுரிய வரவிரும்புகின்றாய்?

நிரலாளர்: தற்போதைய கொரானா பாதித்த சூழலில் வேறு எந்த வொரு நிறுவனமும் என்னை நேர்முகத்தேர்விற்கு அழைக்கவில்லைஐயா! அதைவிட இந்த நிறுவனம் என்னுடைய வீட்டிற்கு அருகில் உள்ளது அதனால்தான் ஐயா!

நிறுவனத்தின் நிருவாகி: ஏன் முந்தைய நிறுவனத்தின் பணியை விட்டு விலகி வந்துவீட்டீர்?

நிரலாளர்: முன்பு நான் பணிபுரிந்த நிறுவனமானது தற்போதைய கொரானா பாதித்த சூழலில் தன்னுடைய அலுவலகத்தை வேறு எங்கோ இடம் மாற்றிகொண்டதுஐயா! அலுவலகத்தினை எங்கு மாற்றினார்கள் என அதன் மாற்றப்பட்ட முகவரியை பற்றிய விவரம் மட்டும் எனக்கு தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை ஐயா!அதனால் அந்தநிறுவனத்தின் பணியை விட்டுவிட்டேன்ஐயா!

நிறுவனத்தின் நிருவாகி: இந்த நிறுவனத்தில் மாதத்தில் இருபத்திநான்கு நாட்கள் வெளியில்பயனம் செய்து வாடிக்கையாளரின் கோரிக்கையான நிரலாக்கங்களை வாடிக்கையாளர் திருப்தியுறுமாறு சரிசெய்து தரவேண்டும் அவ்வாறான பணியை செய்யமுடிமா?

நிரலாளர்: (மனதிற்குள் "ஆஹா!”) ஊர்சுற்றும் பணியென்றால் எனக்கு மிகவும் விருப்பமானதுதான் ஐயா! ஆனால் நான் எங்கு செல்கின்றேன் என்றுமட்டும் என்னிடம் கேள்விகேட்ககூடாது ஐயா!

கணினி நிரலாளர் பணிக்கான நேர்காணல் தேர்வு

கணினி நிரலாளர் பணிக்கான நேர்காணலிற்கு ஒருவர் கலந்துகொள்கின்றார்.
முதிலில் கணினிநிரலாளரிடம் நேர்காணல் செய்பவர்: “நீங்கள் ஒரு சாலையில் நடந்து செல்கிறீர்கள் அங்கு ஒரு வீடு தீப்பற்றி எரிகின்றது. நீங்கள் என்ன செய்வீர்கள்?”
அதற்கு கணினி நிரலாளர்: “நான் உடன் தீயணைப்புதுறையினருக்கு தொலைபேசிவாயிலாக அவ்விடத்தில் வீடு ஒன்று தீப்பிடித்ததாக கூறி உடனடியாக அந்த தீயை அணைப்பதற்கு வருமாறு கோருவேன்.”
மீண்டும் கணினி நிரலாளரிடம் நேர்காணல் செய்பவர்: “மிகவும் சரி . இப்போது, நீங்கள் அதே சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள் , அதே வீடு இப்போது தீ ப்பிடிக்காமல் உள்ளது என்பதை நீங்கள் காண்கிறீர்கள். நீங்கள் இப்போதுஎன்ன செய்வீர்கள்?”
இரண்டாவது கேள்விக்கா கணினி நிரலாளர்: * சிறிது நேரம் யோசித்து * “ நான் முன்பு மிகச்சரியாக வீடுஒன்று தீபிடித்த எரியும் பிரச்சினைக்கு தீர்வு செய்ததை போன்று அதே சிக்கலிற்கு வேறுயாராவது தொருவர் தீர்வுசெய்வதற்கு ஏதுவாக நான் இப்போது அதே வீட்டிற்கு தீ வைத்துவிட்டு சென்று கொண்டேயிருப்பேன், .”

கடவுள் முட்டாள்களை மட்டும்தான் காத்திடுவாரா

பழைய மனுநீதியிலும் வேதங்களிலும் புராண இதிகாசங்களிலும் கடவுள் தன்னை நினைத்து வேண்டிகொண்டவர்கள் அனைவரையும் அதுவும் முட்டாள்களாக இருந்தாலும் பாதுகாத்திடுவார் என்று கூறி இருப்பதை சரிபார்த்திட ஒரு கணினி நிரலாளர் திட்டமிட்டார் அதாவது தற்போது கொரானா முடக்கத்தால் வீட்டிலியே முடங்கி இருப்பதால் அவ்வாறு கூறுவதை அனுபவபூர்வமாக பரி சோதிக்க முடிவு செய்தார். அதனால் தன்னுடைய வீட்டின் ஜன்னல் வழியாக வீட்டிற்கு வெளியே ” கடவுளே ! என்னை காப்பாற்று ! “என கத்தி கொண்டே குதித்தார் . ஆனால் கடவுள் ஒன்றும் நேரில் வந்து அவரை காத்திடவில்லை அவ்வாறு உயரே இருந்து தரையில் குதித்ததால் அவருடைய ஒரு காலின் கட்டைவிரல்மட்டும் உடைந்து. இரத்தம் ஒழுகிகொண்டு இருந்தது இந்த பழைய மனுநீதியிலும் வேதங்களிலும் புராண இதிகாசங்களிலும் கடவுளை வேண்டினால் வந்து ஆபத்திலிருந்து காத்திடுவார் என பொய்தானே கூறியுள்ளன என வித்தியாசமாக,நிநனைத்து கொண்டார் மேலும் உடல் வலியினால் துன்பமுற்றாலும் , : ” ஓஹோ நான் ஒன்றும் முட்டால் இல்லை அறிவாளி போலும் அதனால்தான் கடவுடள் என்னை காக்க வரவில்லை ஆயினும் நான் என்னை ஒருபோதும் முட்டாள் என்று கருதவில்லை, ஆனாலும் பரவாயில்லையே நான் புத்திசாலி என்பது எனக்கே இப்போதுதான் தெரிவருகின்றது! “என மகிழ்ச்சியுடன் சிரித்தார் அந்த புத்திசாலி கணினி நிரலாளர்

மலையிலிருந்து வண்டி கீழே இறங்கி வருவது

ஒரு பெரிய நிறுவனத்தின் மேலாளர், இயந்திர பொறியாளர் , மென்பொருள் ஆய்வாளர் ஆகியமூவரும் இந்த கொரானா முடக்ககாலத்தில் முன்அனுமதி பெற்ற ஏற்காட்டில் நடந்த ஒரு மிகமுக்கியமான கூட்டத்தில் கலந்து கொண்டு மலையிலிருந்து கீழே தரைக்கு மலைப்பாதை வழியாக திரும்பி வந்து கொண்டிருந்தனர். திடீரென்று, ஒருதிருப்பத்தில் காரின் பிரேக்குகள் வெளியே கழன்று சென்றதால் அந்த வண்டியானது கிடுகிடு பள்ளத்தில் எட்டிபார்ப்பது போன்று நின்றுவிட்டது நல்லவேலை உயிர்தப்பினோம் என . சேதத்தை மதிப்பிடுவதற்காக மூவரும் வண்டியை விட்டு வெளியேறினார்கள் .
மேலாளர் , “முதலில்இந்த சிக்கல் எவ்வாறு உருவானது எவ்வாறு தீர்க்க முடியும் என்பது குறித்த ஆலோசனைகளை கூறுவதற்காக ஒரு குழுவை உருவாக்குவோம்.” எனக்கூறினார்
இயந்திர பொறியாளர் , “முதலில் நாம் இந்த காரை அக்கக்காக பிரித்தெடுத்து ஒவ்வொரு பகுதியையும் பகுப்பாய்வு செய்தால் ஏன் இந்த பிரச்சினை வந்தது என தெரிய வரும்.”பரிந்துரைத்தார்
மென்பொருள் ஆய்வாளர் , “அவையெதுவும் தேவையில்லை மீண்டும் மலையின் மேலே கொண்டு சென்று அங்கிருந்து இந்த காரை தள்ளிவிட்டு பார்த்தால் எந்தஇடத்தில் இந்த பிரச்சினை எழுகின்றது என தெரிந்து கொள்ளலாம் .”என முத்தாய்ப்பாக கூறினார்என்ன வாசகரே உங்களுள் யாருக்காவது இவ்வாறு ஏற்காட்டு மலையிலிருந்து வண்டி கீழே இறங்கி வரும்போது காரின் பிரேக்குகள் வெளியே கழன்று சென்றதை சரிசெய்து தரமுடியுமா என ஆலோசனை கூறுங்களேன்

கணினி நிரலாளரின் படகோட்டும் பயிற்சி

ஒருநாள் மாலைநேரம் கணினி நிரலாளர் ஒருவர் ஒருநாள் கிழக்கு கடற்கறை சாலைக்கு அருகில் மீன்பிடி துறைமுகத்தில் உலாவ சென்றிருந்தார் மீனவர்கள் கடலிற்குள் சென்று மீன்பிடித்து கொண்டுதிரும்பி கொண்டிருந்தனர் அவர்களுள் ஒரு மீனவரிடம் “ஐயா! உங்களுடைய படகை சிறிது நேரம் இரவல் கொடுத்தால் பயிற்சிக்காக படகினை கடலிற்குள் கொஞ்சம் தூரம் மகிழ்ச்சியாக ஓட்டிசென்று திரும்பிவருவேன் ” என கோரினார் “சரி ஐயா! அதிக தூரம் செல்லவேண்டாம் ஒரு இருநூறு மீ்ட்டர் தூரம் வரை படகினை பத்திரமாக ஓட்டிசென்றுவருக ஏதேனும் உதவி தேவையனில் என்னை அழைத்திடுக!” என கூறி அனுமதித்தார் தொடர்ந்து நம்முடைய கணினி நிரலாளர் அந்த படகிற்குள் ஏறி அமர்ந்து படகினை கடலிற்குள் ஓட்டிசென்றார் மீனவர் குறிப்பிட்டதில் பாதிதூரம் கடக்கும்போது ஒரு பெரிய அலை வந்து அவருடைய படகினை புரட்டி போட்டுவிட்டது கணினி நிரலாளர் படகோட்டுவதில் புதியவர் ஆகையால் கணினி நிரலாளரால் அந்த அலையில் சமாளித்து படகினை ஓட்டமூடியாமல் கடலிற்குள்மூழ்கினார் கணினியை பயன்படுத்திடும்போது குறிப்பிட்ட பயன்பாடு செயல்படாமல் தொங்கலாக நின்றுவிட்டால் உடனடியாக விசைப்பலகையிலுள்ள F1 எனும் செயலி விசையை அழுத்தவேண்டும் உடன் அந்த பிரச்சினையை எவ்வாறு சமாளிப்பது என உதவிகுறிப்புகள் திரையில் தோன்றிடும் அந்த உதவிகுறிப்புகளை கொண்டு சரிசெய்தவுடன் கணினியை வழக்கமான இயக்கத்திற்கு கொண்டுசெல்லமுடியும் என்ற தகவல் கணினி நிரலாளருக்கு நினைவில் தோன்றியது அதனால் அவர் உடனடியாக “F1 F1″ என உதவிகோரி கத்த ஆரம்பித்தார் கடற்கரையில் ஏராளமானவர்கள் இருந்தும் யாருக்கும் இவ்வாறு கணினி நிரலாளர்”F1 F1” என கத்துவது அவருக்கான உதவிக்காக என தெரியவில்லை ஐயா வாசகரே நீங்களாவது அவருக்கு உதவி செய்யுங்களேன்

Previous Older Entries