FreeMeshஎனும்விரைவாக செயல்படும், திறமூல வலையமைப்பு

FreeMesh என்பது விலைமலிவான, செயல்திறன்மிக்க, தனியுரிமையை மதிக்கும் 10 நிமிடங்களுக்குள் கட்டமைக்கமுடிந்த ஒருவலை அமைப்பாகும்.இந்த திறமூல வலையமைப்பானது விரைவில் முழுமையாக மக்களிடம் கொண்டுசெல்லவிருப்பதாக உறுதியளிக்கின்றது.
நாம் இந்த திறமூல வலையமைப்பை பயன்படுத்துவதற்கான காரணம் பின்வருமாறு: இது தனியுரிமையை மதித்து நம்முடைய தரவுகள் நமக்குமட்டுமே உரியது என்ற அடிப்படையில் நம்முடைய தரவுகளை க் கண்காணிக்கவோ சேகரிக்கவோ செய்யாது இதனை நாம் எளிதாக சரிபார்க்கமுடியும்

அடுத்து இது பாதுகாப்பினையும் செயல்திறனையும் அவ்வப்போது புதுப்பித்தல்களை உறுதியாக தவறாமல் தொடர்ந்து செய்து கொண்டேயிருக்கின்றது அதாவது நாம் விரும்பும் வரை இதனை புதுப்பிக்க நமக்கு சுதந்திரம் அளிக்கின்றது

இந்த வலைபின்னல் அமைப்பில் ஒற்றையான, மிகப் பெரிய கம்பியில்லா வலைபின்னலை ஒளிபரப்ப பல்வேறு கம்பியில்லா திசைவிகள்( routers) ஒன்றிணைந்து செயல்படுகின்றன. இதனுடைய ஒரு வலைபின்னலில் உள்ள ஒவ்வொரு திசைவியும் நம்முடைய தரவுகளுக்கான சிறந்த “பாதையை” வழங்க மற்ற வைகளுடன் புத்திசாலித்தனமாக தொடர்பு கொள்கிறதுஇதிலுள்ள சிவப்பு வலைபின்னலானது ஒற்றையான கம்பியில்லா திசைவியைக் குறிக்கிறது, பச்சை வண்ணமானது ஒரு வலைபின்னலாகும். இதில் செந்தரம் ,4G LTE ஆகியஇரண்டு தொகுப்புகள் உள்ளன அவற்றுள் ஒன்றினை பெற்று இந்த FreeMesh ஐ துவங்கி பயன்படுத்திகொள்க

, 4G LTE எனும் பெயர் குறிப்பிடுவதை போன்றுஇந்த 4G LTE தொகுப்பானது செல்லுலார் தரவு இணைப்புகளை ஆதரிக்கின்றது. இந்த வசதி நுகர்வோர் வலைபின்னல் அமைப்பில் அரிதானதாகும், மேலும் இது ஒருசிலருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. இதனை முழு வேக-தோல்வியில்லா திறனுடன் மின்வழங்கல் , செல்பேசி சேவைஆகியவைகளுடன் நாம் விரும்பும் இடத்தில் எங்கு வேண்டுமானாலும் இந்த கையடக்க வலைபின்னலை அமைத்து பயன்படுத்திகொள்ளலாம்.
இந்த ஃப்ரீமெஸ் கருவிகளானவை முதன்மை திசைவிகளுடனும் இரண்டு முனைமங்களுடனும் கிடைக்கின்றன. இதனுடைய திசைவியும் முனைமங்களும் 802.11ac, 802.11r , 802.11s ஆகிய செந்தரங்களைப் பயன்படுத்துகின்றன. இதில் சேர்க்கப்பட்ட firmware சாதனங்களுக்கான லினக்ஸ் வெளியீடான OpenWrtஇன் உட்பொதிக்கப்பட்டு தனிப்பயனாக்கப்பட்ட பதிப்பில் இதுஇயக்குகின்றது.
இதனுடைய திசைவியானது ஒருசில நல்ல ஒளியூடுருவும்தன்மையைக் கொண்டுள்ளது:
இதில் மையசெயலி : : Dual-core 880MHz MediaTek MT7621AT (two cores/four threads!)
தற்காலிக நினைவகம் :: DDR3 512MB.
இடைமுகங்கள்:: 1x GbE WAN, 4x GbE LAN, 1x USB 2.0 ports, 1x microSD card slot, 1x SIM slot
ஆண்டெனா: 2x 5dBi 2.4GHz, 2x 5dBi 5GHz, 2x 3dBi 3G / 4G (உள்ளமைக்கப்பட்ட)
4G LTE modem: TE category 4 module, 150Mbps downlink and 50Mbps uplink

ஆகியவை வன்பொருட்களை கொண்டுள்ளது
FreeMesh ஐ கட்டமைத்தல்
இதனோடு கிடைக்கின்ற இதனுடைய README எனும் கையேடானது எளிய வழிமுறைகளையும் வரைபடங்களையும் வழங்குகிறது. அதனைபடித்தறிந்து கொண்டு இதனை கட்டமைப்பது மிகஎளிதான செயலாக அமைகின்றது .முதலில் முதன்மை திசைவி அமைப்பதன் மூலம் இதனைதுவகலாம். பின்வரும் எளிய வழிமுறைகளைப் பின்பற்றிடுக:
1. முதல் முனைமத்தை (நீல வண்ணத்திலுள்ளWAN வாயில்) முதன்மை திசைவியுடன் (மஞ்சள் வண்ண LAN வாயில்) இணைத்திடுக.

2. சுமார் 30 முதல் 60 வினாடிகள் காத்திருந்திடுக. அமைவு முடிந்ததும் முனைமமாநது அதனுடைய LEDs விட்டுவிட்டு எரிவதை காணலாம்.
3. முனைமத்தினை வேறொரு இடத்திற்கு நகர்த்திடுக.
அவ்வளவுதான்! பணிமுடிந்தது இதன்மபின்னர் முனைமங்களை இணைப்பதற்காகவென தனியாக கையேடு எதுவும் தேவையில்லை; நாம் அவற்றை முதன்மை திசைவிக்குள் செருகினால் போதும், மீதமுள்ள செயல்களை அதுவேபார்த்து செய்து கொள்கின்றது. நாம் அதே வழிமுறையில் ஒன்றிற்கு மேற்பட்ட முனைமங்களை மேலே கூறிய படிமுறைகளை மீண்டும் செய்தபின்னர்முனைமங்களை செருகி இணைப்பினை சேர்க்கலாம்;.
இதனுடைய வசதிவாய்ப்புகள்
பெட்டியின் வெளியே,இதனுடையOpenWRT , LuCI ஆகியவற்றின் கலவையை இயக்குகிறது. இது ஒரு திசைவியிலிருந்து நாம் எதிர்பார்க்கும் அனைத்து வசதி வாய்ப்புகளையும் கொண்டுள்ளது.
FreeMesh இன்செயல்திறன்
இந்த வலை அமைப்பை அமைத்த பிறகு, நம்முடைய வீடுமுழுவதும் பல்வேறு இடங்களுக்கு முனைமங்களை நகர்த்தி அலைவரிசையை சோதிக்க iPerf ஐப் பயன்படுத்தி சரிபார்த்திடும்போது 150Mbps கிடைப்பதை காணலாம். எந்தவொரு சுற்றுச்சூழல் மாறுபாடுகளாலும் அருகலையானது பாதிக்கப்படலாம், எனவே தூர அளவு மாறுபடலாம். முனைமங்களுக்கும் முதன்மை திசைவிக்கும் இடையிலான தூரம் அலை வரிசையில் ஒரு பெரிய காரணியாக விளங்குகின்றது. இருப்பினும், இதனுடைய உண்மையான பயன் அதன் மேல்-இறுதி வேகம் அன்று, ஆனால் ஒரு இடைவெளி முழுவதும் சிறந்த சராசரி வேகம் கிடைக் கின்றது . வீட்டின் வெகு தொலைவில் கூட, கானொளி விளையாட்டுகளை விளையாடவும், இடையூறு இல்லாமல் பணிசெய்திடவும் முடியும் வீட்டின் கொல்லைப்புறத்திற்கு செல்வதற்கு முன் ஒரு சாளரத்தின் முனைமங்களில் ஒன்றை மாற்றியமைத்தால் போதும்.அங்குஅமர்ந்து கூட பணியைஎளிதாக செய்ய முடியும்

HomeBankஎனும்திறமூலநிதி கட்டுப்பாட்டுகருவி

நேரடியாக வங்கிக்கு செல்லாமல் நாம் இருக்கின்ற இடத்திலிருந்தவாறு Home Bank எனும் திறமூலநிதி கட்டுப்பாட்டுகருவியை பயன்படுத்தி நம்முடைய அனைத்து நிதிசெலவினங்களையும் கையாளமுடியும்.-,

இது தனிநபர் வங்கிகணக்குகளை கையாளஉதவிகின்ற ஒரு கட்டற்றகட்டணமற்ற பயன்பாட்டு கருவியாகும் இது லினக்ஸ், விண்டோஸ் , மேக் ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் இயங்கும்திறன்மிக்கது, மேலும் இது நம்முடைய கணினியில் பயன்படுத்திடும் இயக்க முறைமை, நாம் பேசுகின்ற மொழி ஆகிய எதையும் பொருட்படுத்தாமல் நமக்கான வங்கி சேவைகள் கிடைப்பதை உறுதி செய்கின்றது.
நாம் இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து நிறுவியை இயக்கியவுடன், தொகுத்தல், உள்ளமைவு அல்லது கூடுதல் படிமுறைகள் ஆகிய எதுவும் இல்லாமல் இது தானாகவே இயங்கத் துவங்கிவிடும்.

இந்த பயன்பாட்டினை எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கான ஒத்திகையை செய்ய இதிலுள்ளஒரு சில தகவல்களைப் பயன்படுத்திகொள்க.
இதில் புதிய கணக்கைத் துவங்குவதற்கான எளிதான வழி நம்முடைய வங்கியில் இருந்து தரவுகளின் கோப்பை பதிவிறக்கும் செய்து கொள்வதுதான். இதற்காக நம்முடைய வங்கியின் வலைத்தளத்திற்குச் சென்று நம்முடைய வங்கி கணக்கில் உள்நுழைக. நம்முடய வங்கி கணக்கின் பரிமாற்றங்களை ஏற்றுமதி செய்வதற்கான விருப்பத்தைக் கண்டறிந்து, நாம் விரும்பும் காலஅளவிற்கான பரிமாற்றங்களை குறிப்பிட்டபின்னர் நாம் விரும்பும் கோப்பின் வகைக்கான வாய்ப்பாக QFX என்பதை தெரிவுசெய்திடுக. இந்தகோப்பின் வகையையே பரவலாக பெரும்பாலானவர்கள் பயன்படுத்திகொள்கின்றனர், அதாவது பெரும்பாலான நிதிதிட்டமிடுதல் / நிதி பயன்பாடுகளுக்கு இதனை பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது.
தொடர்ந்து HomeBank எனும் நம்முடைய புதிய பயன்பாட்டின்திரைக்கு திரும்பி, File => Import => OFX/QFX=> என்றவாறு கட்டளைகளை சொடுக்குதல் செய்து செயற்படுத்தி தரவுகளின் கோப்பை பதிவிறக்கம் செய்க. உடன்நாம் தேர்ந்தெடுத்த கால அளவிலான அனைத்து பரிமாற்றங்களுடனும் நம்முடைய புதிய கணக்கு உருவாக்கப்படும்
கவல்களை கைமுறையாக உள்ளிடுவதன் மூலம் கணக்கினைத் துவங்குவது கடினமான வழிமுறையாகும். இருந்தபோதிலும் அதற்காக புதிய தொரு கோப்பை உருவாக்கி உரிமையாளர் பெயர், நாணயம், மொழி போன்றவிவரங்களுடன் அதன் பண்பியில்புகளை அமைத்திட்டு ஒரு கணக்கை உருவாக்கிடுக.
இவை அனைத்தும் அமைக்கப்பட்டதும், Transaction => Add=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குவதன் வாயிலாக பரிமாற்றங்களைச் சேர்த்திடுக. உடன் பரிமாற்றங்களுக்கான விவரங்களை சேர்க்கக்கூடிய படிவம் திரையில் தோன்றும். வெளிச்செல்லும் அனைத்து பரிமாற்றங்களும் எதிர்மறை எண்ணைக் கொண்டிருக்க வேண்டும். நேர்மறை எண்களுடன் பரிமாற்றங்கள் வரவுகளாக கருதப்படுகின்றன
இதில் போதுமான பரிமாற்றங்களை சேர்த்தபின்னர் தரவுகளை அறிக்கை தயார் செய்வதற்கும் வெளியிடுவதற்காகவும் பயன்படுத்தலாம். இது நம்முடைய பணம் எங்கெங்கு செல்கிறது என்பதைக் காண்பதற்கான வழியை வழங்குகிறது மேலும் நிதிதிட்டமிடுதலின் போக்குகளை அடையாளம் காண உதவுகிறது.
தரவுகளைக் காண்பிக்கவரைபட வகையைத் தேர்வுசெய்க இதற்காக திரையின் மேலே உள்ள பட்டியல் நம்மை அனுமதிக்கின்றது. இங்கே, ஒரு மாதத்திற்கு அல்லது ஒரு வருடத்திற்கு என்பன போன்ற தரவுகளை காலப்போக்கில் பயன்படுத்தி கொள்ளலாம்.
கூடுதல் தகவல்களைச் சேர்க்கும்போது தேவைகளின் அடிப்படையில் ஒரு நாளைக்கு அல்லது ஒரு வருடத்திற்கு அல்லது ஒரு மாதத்திற்கு என்பன போன்ற தரவுகளை காலப்போக்கில் பயன்படுத்தி கொள்ளலாம்.
இதனுடைய வசதி வாய்ப்புகள்: சர்வதேச பரிமாற்றங்னைகளைக் கொண்டிருக்கும் போது அல்லது ஒரு பயணத்தை மேற்கொள்ளும்போது, சரியான நாணயத்துடன் ஒரு நிதிதிட்டமிடுவதற்காக இயக்க வேண்டியிருக்கும் போது இதனுடைய பல்வேறு நாணயங்களுக்கான ஆதரவு பயனுள்ளதாக இருக்கும்.
தொடர்ச்சியான செலவுகள் சம்பள காசோலைகள் போன்ற அனைத்தையும் கண்காணிக்க இதனுடைய திட்டமிடல் வார்ப்புரு பேருதவியாகவிளங்குகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட வார்ப்புருவை விரைவாக உருவாக்கி அவையனைத்தையும் ஒரே நேரத்தில் ஒன்றுசேர்க்க முடியும். இந்நிலையில் உள்வருகின்ற வெளிச் செல்கின்ற அனைத்து நடவடிக்கைகள் என்னென்னவென்று நமக்கு தெரிய வருவதால் நமக்கு இன்னும் நிலையான நிதிதிட்டமிடல் திறனைவழங்குகின்றது.
இறுதியாக,வாகனத்தைப் பயன்படுத்துவதற்கான செலவைப் பார்ப்பது, வீட்டிலிருந்து அதிக பணியைச்செய்வதற்கும், அலுவலகத்திற்குச் செல்வதற்கு ஒரு சவாரி-பகிர்வு சேவையைப் பயன்படுத்துவதற்கும் இடையில் நேரத்தைப் பிரிப்பது கூடுதல் அர்த்தமுள்ளது என்பதை தீர்மானிக்க உதவுகின்றது
சுருக்கமான கண்ணோட்டத்தில்மறைக்கக்கூடியதை விட அதிகமானவற்றை இது வழங்குகிறது, ஆனால் இந்த ஆண்டு நிதிதிட்டமிடுதலின் கூடுதல் கட்டுப்பாட்டைப் பெற இந்த அடிப்படைகள் ஒருசில நல்ல யோசனைகளைத் தருகின்றது இந்த மென்பொருளானது தரவுகளைப் பயன்படுத்தி அதிக பகுப்பாய்வு செய்யவும் செலவுகளை கட்டுபடுத்தவும் சிறந்த தேர்வுகளை செய்ய நமக்குவாய்ப்பளிக்கிறது. கூடுதல் தகவல் தேவைப்பட்டால், அதற்காக இது ஒரு விரிவான ஆவணங்களை வழங்குகிறது, மேலும் இதன் வசதி வாய்ப்புகள் எல்லாவற்றையும் அறிந்து கொண்டு பயன்படுத்தி கொள்ள விரும்பினால், இதனுடைய http://homebank.free.fr/en/ எனும் வலைத்தளத்திற்கு செல்க.

Lua எனும் கணினிமொழி

லுவா ஆனது மிகச்சிறிய கணினிமொழியாகும் அதாவது சி எனும் கணினிமொழியில் எழுதப்பட்ட இதனுடைய குறிமுறைவரிகள் வெறும் 24,000வரிகளைமட்டுமே கொண்டதாகும்
இந்நிலையில் இவ்வளவு சிறிய கணினிமொழியைகொண்டு உருப்படியாக எந்தவொரு பணியையும் செயற்படுத்தி பயன்படுத்தி கொள்ளமுடியுமா எனும் சந்தேகம் எழும் நிற்க , உண்மையில் லுவா ஆனது GUI எனும் வரைகலை பயனாளர் இடைமுகப்பு கருவி உட்பட மூன்றாம் தரப்பு நூலகங்களின் பரந்த தொகுப்பைக் கொண்டுள்ளது, இது கானொளி விளையாட்டுகள் ,முப்பரிமான திரைப்படத் தயாரிப்பில் விரிவாகப் பயன்படுத்தப்படுகிறது, இது கானொளி விளையாட்டு பொறிகளுக்கான பொதுவான ஸ்கிரிப்டிங் மொழியாகும்.
லுவா ஒரு நிரூபிக்கப்பட்ட, வலுவான கணினிமொழியாகும் இதுஒரு சக்திவாய்ந்த, திறமையான, இலகுரக, உட்பொதிக்கக்கூடிய ஸ்கிரிப்டிங் கணினிமொழியாகும். இது நடைமுறை நிரலாக்கம், பொருள் சார்ந்த நிரலாக்கம், செயல்பாட்டு நிரலாக்கம், தரவு உந்துதல் நிரலாக்கம் , தரவு விளக்க நிரலாக்கும் ஆகியவற்றை ஆதரிக்கின்றது. இது துணை வரிசைகள், விரிவாக்கக்கூடிய சொற்பொருள்களின் அடிப்படையில் சக்திவாய்ந்த தரவு விளக்கக் கட்டமைப்புகளுடன் எளிய நடைமுறை தொடரியலை ஒருங்கிணைக்-கின்றது. இது மாறும் வகையில் தட்டச்சு செய்யப்பட்டு, பதிவு அடிப்படையிலான மெய்நிகர் இயந்திரத்துடன் குறிமுறைவரிகளை விளக்குவதன் மூலம் இயங்குகின்றது, மேலும் அதிகரிக்கும் குப்பை சேகரிப்புடன் தானியங்கி நினைவக நிருவாகத்தைக் கொண்டுள்ளது, இது உள்ளமைவு, விரைவான முன்மாதிரிக்கு ஏற்றதாக அமைகின்றது. இது மிகவிரைவாக செயல்படும் திறன்கொண்டது.நன்றாக வடிவமைக்கப்பட்ட பெஞ்ச்மார்க் திட்டங்களில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் மிகவிரைவாக செயல்படும் திறன்கொண்டதாகும். இது விண்டோ லினக்ஸ் செயல்படும் கணினி மட்டுமல்லாது Android, iOS, BREW, Symbian, Windows Phone ஆகிய கைபேசிகளிலும் செயல்படும் கையடக்க கணினிமொழியாக திகழ்கின்றது இதனுடன் C , C++ மட்டுமல்லாது Java, C#, Smalltalk, Fortran, Ada, Erlang அதுமட்டுமல்லாது Perl , Ruby ஆகிய பிற கணினி மொழிகளிகளில் எழுதப்பட்ட எந்தவொரு நிரலாக்கத்துடனும் எளிதானதாக ஒருங்கிணைத்து பயன்படுத்தி கொள்ளமுடியும் இது கட்டணமற்றது கட்டற்றது மேலும்விவரங்களுக்கும் பயன்படுத்தி கொள்ளவும் http://www.lua.org/ எனும் இணையதளபக்கத்திற்கு செல்க

அனோன்ஆடி( AnonAddy)

.
anonymous email address என்பதன் சுருக்குபெயரே AnonAddy எனும் இதனுடைய பெயராகும் .இந்த அனோன்ஆடி( AnonAddy) என்பது ஒரு அநாமதேய திறமூல மின்னஞ்சல் பகிர்வு சேவையாகும், இது மின்னஞ்சல் களுக்கான மாற்றுப்பெயர்களை வரம்பற்ற அளவில் கட்டணமில்லாமல் உருவாக்க அனுமதிக்கின்றது.
இதன்உதவியுடன்கோரப்படாத மின்னஞ்சல்கள் பெறுகின்ற மாற்றுப்பெயர்களை செயலிழக்க செய்வதன்மூலம் அல்லது நீக்கம் செய்வதன் மூலம் நம்முடைய உண்மையான மின்னஞ்சல் முகவரியை ஸ்பேமில் இருந்து பாதுகாக்கமுடியும். மேலும் ஒவ்வொரு தளத்திற்கும் வெவ்வேறு மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்தி நம்முடைய தரவுகளை விற்பவர்கள் யார் என்பதை அடையாளம் காணமுடியும்
அதுமட்டுமின்றி அபகரிப்பவர்கள் நம்முடைய கணக்குகளை மேற்கோளாக காண்பித்து தரவுகளை நம்மைமீறி அபகரித்திடாமல் தடுப்பதன் மூலம் நம்முடைய அடையாளத்தைப் பாதுகாக்கமுடியும்
மிகமுக்கியமாக இதனுடைய GPG/OpenPGஎனும் குறியாக்கத்தைப் பயன்படுத்தி உள்வரும் அனைத்து மின்னஞ்சல்களையும் மறைகுறியாக்கம் செய்வதன் மூலம் snooping செய்வதை அறவே தடுக்கமுடியும்
அதைவிட நமக்கு மின்னஞ்சல்களை அனுப்பிவைத்திடும் ஒவ்வொரு தளத்திற்கும் நம்முடைய மாற்றப்பட்ட மின்னஞ்சல் முகவரியின் விவரங்களை தனித்தனியாக சென்று புதுப்பித்தல் பணிகளை செய்வதற்கு பதிலாக ஒட்டுமொத்தமாக புதியமுகவரியைஅனைத்திலும் நிகழ்நிலை படுத்தி கொள்ளமுடியும்
அதனோடு நம்முடைய உண்மையான மின்னஞ்சல் முகவரியை வெளிப்படுத்தாமல் பகிரப்பட்ட அனைத்து மின்னஞ்சல்களுக்கும் அநாமதேயமாக பதிலளிக்கமுடியும். இதனை பயன்படுத்தி கொள்வதற்காக
1. முதலில் பயனாளர்பெயரை பதிவு செய்து இந்ததளத்திற்குள்உள்நுழைவுசெய்க நம்முடைய பயனாளர் பெயர் Skஎனில். இப்போது *@Sk.anonaddy.com என்றவாறு நம்முடைய மின்னஞ்சல்முகவரியாகப் பயன்படுத்திகொள்க. இதில் ஒரு மின்னஞ்சல் முகவரிக்கான சரியான உள்ளூர் பகுதியை * எனும் குறியீடு குறிக்கின்றது. நாம் அநாமதேயமாக இருக்க விரும்பினால், நம்முடைய உண்மையான பெயருடன் இணைக்கப்படாத பயனாளர்பெயரைத் தேர்வு செய்து கொள்க.
2. தொடர்ந்து இதனை பயன்படுத்திடும்போது மாற்றுப்பெயர்களை உருவாக்கி கொள்க (அல்லது UUID என்றவாறு மாற்றுப்பெயர்களை உருவாக்கி கொள்க).அடுத்த முறை நாம் ஏதேனும் ஒரு வலைத்தளத்தில் அல்லது செய்திமடலில் உள்நுழைவு செய்வதற்காக பதிவுசெய்திடும்போது, ஒரு புதிய மாற்றுப்பெயரை உருவாக்கி, நம்முடைய உண்மையான மின்னஞ்சல் முகவரிக்கு பதிலாக அதை உள்ளிடுக.
எடுத்துக்காட்டாக, நாம் vkg.org இல் இருந்தால், அவர்களின் செய்திமடலில் உள்நுழைவு செய்வதற்காக பதிவுசெய்திட விரும்பினால், நாம் vkg @Sk.anonaddy.com என்றவாறு மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக. நம்முடைய முகப்புதிரையில் அதன் முதல் மின்னஞ்சலைப் பெற்றவுடன் மாற்றுப்பெயரை தானாகவே உருவாக்கி அநாமதேயமாக மின்னஞ்சல்களுக்கு பதிலளித்திடுக!
3. ஒரு ஸ்பேமர் நம்முடைய மாற்றுப்பெயர்களில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றி, கோரப்படாத மின்னஞ்சலை அனுப்பத் துவங்குவதாக கொள்வோம் அந்நிலையில். நம்முடைய முகப்புத்திரையில் ஒரு சுவிட்சின் நிலையைமாற்றியமைத்து, அந்த மாற்றுப்பெயரை செயலிழக்க செய்யலாம். அதனைதொடர்ந்து நம்முடைய கணினியானது பின்னர் எந்த மின்னஞ்சல்களையும் அறவே நிராகரித்துவிடும், மேலும் அந்த மாற்றுபெயரிலிருந்து நாம் வேறு எதையும் அனுப்பத்தேவையில்லை. அதன்பிறகு அந்த மாற்றுபெயரையும் நீக்கம் செய்துவிடலாம். நம்முடைய கணினியானது எந்தவொரு மின்னஞ்சல் களையும் நிராகரித்து பிழையுடனான பதிலைஅனுப்பிவைத்திடும்.
4. இதனுடைய திறமூல உலாவி விரிவாக்க வசதியைப் பயன்படுத்தி நம்முடைய இணைய உலாவியில் இருந்துகொண்டு நேராக இரண்டேயிரண்டு சொடுக்குகளில் UUID மாற்றுப்பெயர்களை உருவாக்கிகொள்க. இவ்வாறு விரிவாக்கசெயல் ஃபயர்பாக்ஸ் , குரோம் ஆகிய இணையஉலாவிகளில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்வதற்காக கிடைக்கின்றது. அவைமட்டுமல்லாமல் பிரேவ் , விவால்டி போன்ற பிற குரோமியம் அடிப்படையிலான இணைய உலாவிகளுக்கான விரிவாக்கங்களாகவும் கிடைக்கின்றது.
5.நம்முடைய சொந்த GPG / OpenPGP பொது திறவுகளை கொண்டு வந்து அவற்றை பெறுநருக்கு சேர்த்திடுக. நாம் எளிதாக குறியாக்கத்தை ஆன் அல்லது ஆஃப் ஆக மாற்றலாம். குறியாக்கத்துடன், அனுப்பப்பட்ட அனைத்து செய்திகளும் நம்முடைய பொது திறவுகோளுடன் குறியாக்கம் செய்யப்படும். தொடர்புடைய தனிப்பட்ட திறவுகோளுடன் நாம் மட்டுமே அவற்றை மறைகுறியாக்க முடியும். நாம் ஜிமெயில் அல்லது அவுட்லுக் மின்னஞ்சல் சேவைகளை பயன்படுத்துகின்றோம்எனில் அல்லது வேறு எந்தவொரு மின்னஞ்சல்களை பயன்படுத்திடுகின்றோம் எனில் அதன் உள்வருகை பெட்டியின் snoopingஐயும் தடுக்க விரும்பினால் இது மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது.
6. நம்முடைய சொந்த களப்பெயரானது நம்மிடம் இருந்தால், இதில் அதைச் சேர்த்து பயன்படுத்தி கொள்ளலாம். நம்முடைய பயனாளர்பெயர் துனைக்களப்பெயர் மாற்றுப்பெயர்களைப் போலவே நாம் இதைப் பயன்படுத்திகொள்ள முடியும் எ.கா. alias@example.com.என்றவாறு நம்முடைய மாற்றுப்பெயர்களை நாம் நிருவகிக்கலாம் மேலும் ஸ்பேமைப் பெறத் தொடங்கும் எதனையும் செயலிழக்கசெய்யலாம் / நீக்கம் செய்யலாம்!
7.தொடர்ந்து UUID மாற்றுப்பெயர்களை உருவாக்குக நம்முடைய மாற்றுப்பெயர்கள் அனைத்தும் நம்முடைய பயனாளர்பெயராகக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் விரும்பவில்லை எனில், நம்முடைய முதன்மைதிரையிலிருந்து தனித்துவமான மாற்றுப்பெயர்களை உருவாக்கலாம். உருவாக்கப்பட்ட மாற்றுப் பெயர்கள் 94960540-f914-42e0-9c50-6faa7a385384@anonaddy.me என்பதுபோன்று இருக்கும். மாற்றுப்பெயரின் உரிமையை நம்முடன் இணைப்பதை இது தடுக்கின்றது.
8.மாற்றுப்பெயரை ஒன்றுக்கு மேற்பட்ட பெறுநர்களுக்கு அனுப்பிட விரும்பினால், நம்முடைய முதன்மைத்திரையிலிருந்து பல்வேறு பெறுநர்களை எளிதாக சேர்க்கலாம். மாற்றுப்பெயரை +2.3.4@user.anonaddy.com என்றவாறு செய்வதன் மூலம் உருவாக்கப்படுவதால், நாம் மாற்றுப்பெயருடன் பல்வேறு பெறுநர்களையும் சேர்க்கலாம், இங்கு 2,3 4 ஆகியவை நம்முடைய கணக்கில் இருக்கும் பெறுநர்களுக்கான திறவுகோள்களாக இருக்கின்றன.
9.நம்முடைய கணக்கில் கூடுதல் பயனாளர்பெயர்களைச் சேர்க்கலாம் நாம் பதிவுசெய்ததைப் போலவே அவற்றைப் பயன்படுத்திகொள்ளலாம். எனவே நாம்skவாக பதிவுசெய்திருந்தால், vkgஐ கூடுதல் பயனாளர் பெயராகச் சேர்த்துகொள்ளலாம், பின்னர் anyalias@vkg.anonaddy.com ஐப் பயன்படுத்தலாம். நம்முடைய மாற்றுப்பெயர்களைப் பிரிக்க இதனை பயன்படுத்திகொள்ளலாம். தனிப்பட்ட மின்னஞ்சல்கள் போன்றவற்றுக்கு வேறுபட்ட மின்னஞ்சல்களுக்கான பயனாளர்பெயர்களை வைத்திடலாம்.
10 இந்த ஆனான்ஆடியில் API ஐப் பயன்படுத்தி நம்முடைய மாற்றுப்பெயர்கள், பெறுநர்கள், களங்கள் கூடுதல் பயனாளர்பெயர்கள் ஆகியவற்றை நிருவகிக்கமுடியும். அவ்வாறானAPI ஐப் பயன்படுத்த முதலில் நம்முடைய கணக்கு அமைப்புகளில் API அணுகல் டோக்கனை உருவாக்க வேண்டும். என்பனபோன்ற விவரங்களை மனதில் கொண்டு செயல்படுக மேலும் விவரங்களுக்கு https://anonaddy.com// எனும் இணைய முகவரிக்கு செல்க

Notepad++ ஒருஅறிமுகம்

விண்டோ இயக்கமுறைமையை பயன்படுத்திடும் அனுபவசாலிகள் பலர் நாங்கள் ஏற்கனவே நோட்பேடு எனும் பயன்பாட்டினை பயன்படுத்தி கொண்டுதானே இருக்கின்றோம் தற்போது மீண்டும் Notepad++ என்பது எதற்கு என வாதிடுவார்கள் நிற்க பல்வேறு கணினிமொழிகளின் நிரலாளர்கள் புதிய பயன்பாடுகளை உருவாக்குவதற்காக தாமறிந்த கணினிமொழிகளில் குறிமுறைவரிகளை எழுதிடும்போது புதிய Notepad++ஆனது அவர்களுடைய கணினிமொழிகளின் மூலக்குறிமுறைவரிகளை திருத்தம் செய்வதை ஆதரிக்கின்றது அதனால் குறிப்பிட்ட கணினிமொழியில் குறிமுறைவரிகளைஎழுதிடும்போது அதற்கான syntaxஐ மேம்படுத்தி காண்பித்தல் , அல்லது PHPsyntaxஐ மேம்படுத்தி காண்பித்தல் , markup கணினிமொழியை ஆதரித்தல் துல்லியமான இடைமுகம் என்பன போன்ற நிரலாளர்கள் அனைவரும் எதிர்பார்க்கின்ற பல்வேறு வசதி வாய்ப்பு களுடன் கூடிய.புத்திசாலிதனமான கருவியாக இந்தNotepad++ திகழ்கின்றது மேலும்இது ’.ini எனும் கோப்புகளில் வரைகலை திறனை மேம்படுத்துகின்றது , இவ்வாறான பல்வேறு வசதி வாய்ப்பு களுடன் கூடிய இந்த புதிய Notepad++ஐ பயன்படுத்திய பின்னர் நாம் பிறகு வழக்கமான நோட்பேடிற்குச் செல்வது சாத்தியமில்லை, ஏனென்றால் புதிய Notepad++ தானாகவே எல்லா தரவுகளையும் தெளிவான எண்ணிக்கையிலான வரிசைகளில் ஒழுங்கமைக்கின்றது., இது ஒரே நேரத்தில் பல கோப்புகளில் செயல்படுவதற்கு நம்மை அனுமதிக்கின்றது, மேலும் நாம் திறந்து பணிபுரிந்து கொண்டிருந்த அனைத்து தாவல்களை நினைவில் கொள்கிறது, எனவே நம்முடைய கணினியின் இயக்கத்தை இடைநிறுத்தம் செய்து மறுதொடக்கம் செய்த பிறகு நாம் ஏற்கனவே பணிபுரிந்து விட்டுச்சென்ற இடத்திலிருந்து மீண்டும் தொடர்ந்து பணிபுரியமுடியும் என்ற வசதியைஇது வழ ங்குகின்றது . இந்த புதிய Notepad++ ஆனது GPL எனும் பொதுஅனுமதியின் அடிப்படையில் கட்டணமில்லாமல் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்துவதற்காக தயாராக கிடைக்கின்றது ஆயினும் இது விண்டோ இயக்கமுறைமை சூழலிலும் செயல்படும் திறன்மிக்கது . சக்திவாய்ந்த பதிப்பு கூறுகளின் அடிப்படையில், இது சி ++ எனும் கணினிமொழியில் எழுதி உருவாக்கப்பட்டுள்ளது முழுமையான Win32 API , STL ஆகியவற்றைப் பயன்படுத்துவதன்வாயிலாக , இது சிறிய நிரல் அளவுடன்மட்டுமே அதிக செயல்பாட்டு வேகத்தை உறுதி செய்கிறது. பயனர் நட்பை இழக்காமல் முடிந்தவரை பல்வேறு நடைமுறைகளை மேம்படுத்துவதன் மூலம், நோட்பேட் ++ ஆனது உலக கார்பன் டை ஆக்சைடு உமிழ்வைக் குறைக்க முயற்சிக்கின்றது. அதாவது குறைந்த CPU சக்தியைப் பயன்படுத்துவதன்மூலம் கணினிக்கான மின் நுகர்வை மிகவும் குறைவாக பயன்படுத்தி கொள்ளுமாறு செய்கின்றது, இதன் விளைவாக உலகில் பசுமையான சூழல் விளைவை உறுதிபடுத்திடுகின்றது

GVM என்பதன் துனையுடன் Goஎனும் கணினிமொழியின் பல பதிப்புகளை நிருவகிக்கமுடியும்

GVM என சுருக்கமாக அழைக்கப்படும் கோ பதிப்பு மேலாளர் (Go Version Manager)என்பது கோஎனும் கணினிமொழி சூழல்களை நிருவகிப்பதற்கான ஒரு திற மூல கருவியாகும். இது கோஎனும் கணினிமொழியின் பல பதிப்புகளை நிறுவுகை செய்வதையும் ஜி.வி.எம் “pkgsets” ஐப் பயன்படுத்தி ஒரு செயல்திட்டத்திற்கு தொகுப்புகள் நிருவகிப்பதையும் ஆதரிக்கின்றது. ,இது Ruby யின் ஒத்தநிலையினரான, RVM போன்ற ஒவ்வொரு செயல்திட்டத்திற்கும் அல்லது செயல்திட்டக் குழுக்களுக்கும் ஒரு மேம்பாட்டுச் சூழலை உருவாக்க அனுமதிக்கின்றது, மேலும் நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கின்ற பதிப்பு சிக்கல்களைத் தடுக்கின்ற வெவ்வேறு கோ பதிப்புகளையும் தொகுப்பு சார்புகளையும் பிரிக்கின்றது. கோ தொகுப்புகளை நிருவகிக்க கோ 1.11 தொகுப்புகள் உட்பட பல விருப்பங்கள்இதில் உள்ளன. எளிமையானதாக-வும் உள்ளுணர்வுடனும் செயல்படும், இந்தஜி.வி.எம் மைநிறுவுகை செய்திடுவதற்காக.:
bash < <(curl -s -S -L https://raw.githubusercontent.com/moovweb/gvm/master/binscripts/gvm-installer)
என்ற கட்டளைவரியின் வாயிலாக பதிவிறக்கம்செய்திடுக. இந்த நிறுவுகை வழிமுறையை பலரும் பின்பற்றி வருகின்ற போதிலும், நாம் அதைச் செய்வதற்கு முன்பு இது என்ன செய்து கொண்டிருக்கிறது என சரிபார்ப்பது இன்னும் நல்ல நடைமுறையாகும். , இதனுடைய நிறுவுகை குறிமுறைவரிகளானது:
1. சில சார்புகளை சரிபார்க்கின்றது
2. மறுஅமைவை போலியாக செய்கின்றது
3. இதற்கு ஷெல் ஸ்கிரிப்ட்களைப் பயன்படுத்தி Go எனும் கணினிமொழியை நிறுவுகை செய்தலையும் GOPATH ஐ நிருவகிப்பதையும் நம்முடைய bashrc, zshrc, profile ஆகியவற்றில் கூடுதல் தகவல்களையும் சேர்த்து கொள்ளமுடியும்
ஜி.வி.எம் உடன் கோ பதிப்புகளை நிறுவுகைசெய்தலும் நிருவகித்தலும்
இந்த ஜி.வி.எம்மை நிறுவுகைசெய்யப்பட்டதும், கோவின் வெவ்வேறு பதிப்புகளை நிறுவுகைசெய்வதற்கும் நிருவகிக்கவும் இதைப் பயன்படுத்தத் தொடங்கலாம்.
[chris@marvin ]$ gvm listall
$ gvm listall
gvm gos (available)
go1
go1.0.1
go1.0.2
go1.0.3

ஒரு குறிப்பிட்ட கோ பதிப்பை நிறுவுகைசெய்வது gvm install , என்றகட்டளைவரியை போன்று எளிதானதாகும், மேற்கண்ட கட்டளைவரிகளில் gvm listall எனும் கட்டளையால் திருப்பியவற்றில் என்பதும் ஒன்றாகும். கோ பதிப்பு 1.12.8 ஐப் பயன்படுத்தும் செயல்திட்டத்தில் பணிபுரியும்போது அதை gvm install go1.12.8 உடன் நிறுவுகை செய்துகொள்ளலாம்:
[chris@marvin]$ gvm install go1.12.8
Installing go1.12.8…
Compiling…
go1.12.8 successfully installed!
இதில் gvm listஐ உள்ளீடு செய்திடுக,Go version 1.12.8 எனும் பதிப்பானது கணினியின் கோ பதிப்புடன் நிறுவப்பட்டிருப்பதைக் காணலாம்:
[chris@marvin]$ gvm list
gvm gos (installed)
go1.12.8
=> system
ஜி.வி.எம் இன்னும் கோவின் கணினி பதிப்பைப் பயன்படுத்திகொள்கின்றது, அதற்கு அடுத்துள்ள => குறியீட்டால் குறிக்கப்படுகின்றது. Gvm எனும் பயன்பாட்டின் கட்டளைவரிகளுடன் புதிதாக நிறுவப்பட்ட go1.12.8 ஐப் பயன்படுத்தி சூழலை மாற்றலாம்:
[chris@marvin]$ gvm use go1.12.8
Now using version go1.12.8
[chris@marvin]$ go version
go version go1.12.8 linux/amd64
கோ வின் நிறுவுகைசெய்யப்பட்ட பதிப்புகளை நிருவகிப்பது ஜி.வி.எம்ஆனது மிகவும் எளிதாக்குகிறது,
GVM pkgset ஐப் பயன்படுத்துதல்
பெட்டியின் வெளியே, கோ தொகுப்புகள் மற்றும் கட்டுகளை நிர்வகிக்கும் ஒரு அற்புதமான வழியைக் கொண்டுள்ளது. இயல்பாக, ஒரு தொகுப்பைப் பெறச் சென்றால், அது $ GOPATH இல் உள்ள src மற்றும் pkg கோப்பகங்களில் பதிவிறக்கம் செய்யப்படுகிறது; பதிவிறக்கத்தைப் பயன்படுத்துவதன் மூலம் அதை கோ நிரலில் சேர்க்கலாம். இது sudo அல்லது root சலுகைகளை தேவையில்லாமல்ஆக்குகின்றது, குறிப்பாக பயனற்ற பயனாளர்களுக்கு தொகுப்புகளைப் பெறுவதை எளிதாக்குகின்றது .இருப்பினும், பரிமாற்றம் என்பது வெவ்வேறு செயல்திட்டங்களில் ஒரே தொகுப்புகளின் வெவ்வேறு பதிப்புகளை நிருவகிப்பதில் சிரமமாகும். கோ கட்டுகள் , go dep ஆகியவை உள்ளிட்டபல்வேறு சிக்கல்களை சரிசெய்ய அல்லது குறைக்க பல்வேறு வழிகள் உள்ளன. இந்த ஜி.வி.எம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, அவற்றை பிரிப்பதை உறுதி செய்வதற்காக கோ செயல்திட்டங்களை அவற்றின் சொந்த Docker கலன்களில் உருவாக்கி சோதிப்பது வழக்கமாகும்.
செயல்திட்டங்களுக்கு ஒரு புதிய கோப்பகத்தை இயல்புநிலையாகச் சேர்ப்பதற்கு “pkgsets” ஐப் பயன்படுத்துவதன் மூலம் செயல்திட்டங்களுக்கிடையில் தொகுப்புகளை நிருவகித்தல் , பிரித்தல் ஆகியவற்றை ஜி.வி.எம் மிகவும் நேர்த்தியாக நிறைவேற்றுகிறது Go நிறுவுகைசெய்யப்பட்ட கோ பதிப்பிற்கான $GOPATH, யூனிக்ஸ் / லினக்ஸ் கணினிகளில் $ PATH பணியை செய்கிறது. இது எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் காண்பது எளிதானது. முதலில், Go, v1.12.9: இன் புதிய பதிப்பை நிறுவுகைசெய்திடுக:
[chris@marvin]$ echo $GOPATH
/home/chris/.gvm/pkgsets/go1.12.8/global
[chris@marvin]$ gvm install go1.12.9
Installing go1.12.9…
* Compiling…
go1.12.9 successfully installed
[chris@marvin]$ gvm use go1.12.9
இப்போது go1.12.9 பதிப்பைப் பயன்படுத்துகின்றது
ஜி.வி.எம் ஒரு புதிய பதிப்பைப் பயன்படுத்தும்படி கூறினால், அது புதிய $ GOPATH க்கு மாறுகிறது, இது அந்த பதிப்பிற்கான இயல்புநிலை gloabl pkgsetஉடன் ஒத்திருக்கிறது:
[chris@marvin]$ echo $GOPATH
/home/chris/.gvm/pkgsets/go1.12.9/global
[chris@marvin]$ gvm pkgset list
gvm go package sets (go1.12.9)
=> global
Go இன் இந்த குறிப்பிட்ட பதிப்பைப் பயன்படுத்தி எந்தவொரு செயல்திட்டத்திற்கும் உலகளாவிய pkgset இல் உள்ள தொகுப்புகள் கிடைக்கின்றன, இருப்பினும் இயல்பாகவே கூடுதல் தொகுப்புகள் நிறுவப்படவில்லை. இப்போது, ஒரு புதிய செயல்திட்டத்தைத் துவங்கினால் அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகுப்பு தேவையாகும். முதலில், ஜி.வி.எம் ஐப் பயன்படுத்தி introToGvm: என்ற புதிய pkgset ஐ உருவாக்குவதற்காக:
[chris@marvin]$ gvm pkgset create introToGvm
[chris@marvin]$ gvm pkgset use introToGvm
Now using version go1.12.9@introToGvm
[chris@marvin]$ gvm pkgset list
gvm go package sets (go1.12.9)
global
=> introToGvm
மேலே குறிப்பிட்டுள்ளபடி, pkgset க்கான புதிய அடைவு $ GOPATH க்கு தயார்படுத்தப்பட்டுள்ளது:
[chris@marvin]$ echo $GOPATH
/home/chris/.gvm/pkgsets/go1.12.9/introToGvm:/home/chris/.gvm/pkgsets/go1.12.9/global
முன்னரே தயாரிக்கப்பட்ட ஜி.வி.எம் பாதைக்கு அறிமுகமாக அடைவுகளை மாற்றுக மற்றும் அடைவு கட்டமைப்பை ஆய்வு செய்க –
[chris@marvin]$ cd $( awk -F’:’ ‘{print $1}’ <<< $GOPATH )
[chris@marvin]$ pwd
/home/chris/.gvm/pkgsets/go1.12.9/introToGvm
[chris@marvin]$ ls
overlay pkg src
புதிய அடைவு சாதாரண $ GOPATH போலவே இருப்பதைக் கவனித்திடுக. புதிய கோ தொகுப்புகளை நாம் வழக்கமாக கோவுடன் பயன்படுத்தும் அதே go get எனும் கட்டளையைப் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்யலாம், மேலும் அவை pkgset இல் சேர்க்கப்படுகின்றன.

PyTorch ஒரு அறிமுகம்

பைடார்ச் என்பது பைதானிற்கான ஒரு திறமூல இயந்திர கற்றல் நூலகமாக வரையறுக்கப் படுகின்றது. இது இயற்கை மொழி செயலாக்கம் போன்ற பயன்பாடுகளுக்காக பயன்படுத்திகொள்ளப்படுகின்றது. பேஸ்புக் எனும் நிறுவனத்தின் செயற்கை-நுண்ணறிவு ஆராய்ச்சி குழுவானது இதனை முதன்முதல் உருவாக்கியது அதாவது முதலில், Torchஎனும் வரைச்சட்டத்தின் அடிப்படையில் LusJITஇற்கான பைத்தான் மேலட்டையாக இந்த PyTorchஆனது உருவாக்கப்பட்டது.அதன்பின்னர் இதனுடைய நிகழ்தகவு நிரலாக்கமானது உபேர் எனும் நிறுவனத்தினுடைய Pyro எனும் மென்பொருளால் கட்டமைக்கப்பட்டு மேம்படுத்தப்-பட்டது.
இதில் பின்புல குறிமுறைவரிகளுக்கான சிஎனும் கணினிமொழியின் அதேமைய நூலகங்களைப் பகிர்ந்துகொண்டு பைத்தானில் Torchஐயும் செயல்படுத்தி இந்த PyTorchஆனது மறுவடிவமைப்பு செய்துவெளியிடப்ட்டுள்ளது. பைத்தான் எனும் கணினி மொழியானது மிகதிறனுடன் இயங்குவதற்காகPyTorch மேம்படுத்துநர்கள் இதனுடைய பின்புல குறிமுறைவரிகளை சரிசெய்து மேம்படுத்தியுள்ளனர். மேலும் GPU அடிப்படையிலான வன்பொருள் முடுக்கத்தையும் , Lua வைஅடிப்படையாகக் கொண்ட Torchஐ உருவாக்கி விரிவாக்க வசதிகளையும் இதில் கொண்டுவந்துள்ளனர்.
இதன் வசதி வாய்ப்புகள் பின்வருமாறு
பைடார்ச்சின் API ஐஆனது பயன்படுத்த எளிதானது; எனவே இதனை இயக்குவதும் செயல்படுத்துவதும் மிகவும் எளிமையானதாகக் இருக்கின்றது. அதைவிட இந்த கட்டமைப்பில் குறிமுறைவரிகளை செயல்படுத்துவது மிகவும் எளிதானது.
இந்த நூலகம் Pythonic எனக் கருதப்படுகிறது, இது பைதான் தரவு அறிவியல் அடுக்குடன் சுமூகமாக ஒருங்கிணைந்து செயல்படுகின்றது. எனவே, இது பைதான் சூழலால் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் செயல்பாடுகளையும் மேம்படுத்துகின்றது.
பைடார்ச் ஆனது இயக்கநேரக் கணக்கீட்டு வரைபடங்களை வழங்குகின்ற ஒரு சிறந்த தளத்தை நமக்கு வழங்குகின்றது. இதனால் ஒரு பயனாளர் இயக்க நேரத்தில் அவற்றை மாற்றியமைத்திடலாம். ஒரு நரம்பியல் வலைபின்னல் மாதிரியை உருவாக்குகின்றஒரு மேம்படுத்தநருக்கு அதற்காக எவ்வளவு நினைவகம் தேவை என்று தெரியாதபோதுகூட இது மிகச்சரியாக செயல்படுகின்ற மிகவும் சிறந்த கருவியாக இதனுடைய செயல்பாடு விளங்குகின்றது.
இந்த பைடார்ச் ஆனது கட்டாயமாக n- பரிமாண வரிசையின்படி GPUவில் இயங்குகின்ற Tensor என்றும் data , gradient ஆகிய இரண்டையும்சேமிக்கின்ற கணக்கீட்டு வரைபடத்தில் ஒருமுனைமமாக, Variable என்றும் நிலையான அல்லது கற்றுக் கொள்ளக்கூடிய நிலையை சேமிக்கும் நரம்பியல் பிணைய அடுக்காக. Module என்றும்
ஆகிய மூன்று நிலையிலானதொகுப்புகளைக் கொண்டுள்ளது
இதன் குறிமுறைவரிகளை எளிதாக புரிந்துகொள்ளமுடியும் அதனால் இதில் பிழைதிருத்தம் செய்வது மிக எளிய செயலாகும். இந்த PyTorch ஆனது Torch.இன் பல அடுக்குகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது, இதில் நிறைய இழப்பு செயலிகளும் உள்ளன, இதனை GPUகளுக்கான NumPy இன் நீட்டிப்பாக கூடகருதலாம்.இது கணக்கீடுகளைச் சார்ந்து இருக்கின்ற வலைபின்னல்களை உருவாக்க அனுமதிக்கின்றது. . மேலும்விவரங்களுக்கு https://pytorch.org/ எனும் இணையதளத்திற்கு செல்க

Previous Older Entries