வியாபாரிகளுக்கான டேலி ஈஆர்பி 9 எனும் பயன்பாடு

இன்று, உலகெங்கிலும் மில்லியன் கணக்கான வியாார நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு பயன்படுத்தி கொள்ளபபடுகின்றன, அவ்வாறான வணிக நடவடிக்கைகளை எளிதாகக் கையாள பல்வேறு தொழில்நுட்பங்கள் தற்போது பின்பற்றப்பட்டுள்ளன. அவ்வியாபார நடவடிக்கைகளில், நிதி , அது தொடர்பான அம்சங்களை எளிதாக நிருவகிப்பதற்காக. டேலி ஈஆர்பி 9 எனும் பயன்பாடு உதவகின்றது இது சிறு, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான வியாபார நிறுவனங்களால் பயன்படுத்தக்கூடிய வளர்ந்து வரும் ஒரு பயன்பாட்டு மென்பொருளாகும். , இது வியாபாரநடவடிக்கைகளின் வணிகத் தேவைக்கேற்ப போதுமான நெகிழ்வுத்தன்மையுடன் விரிவான தீர்வுகளை வழங்குகிறது.
ஒரு வணிக நிறுவனம் அதன் நிதி அம்சங்களில் டேலி ஈஆர்பி 9 ஐ ஏற்றுக்கொள்வதன் மூலம் கிடைக்கக்கூடிய ஒருசில நன்மைகள்பின்வருமாறு:
டேலி ஈஆர்பி 9 சரக்குகளை மிகவும் திறமையாக எளிதாக நிருவகிக்க உதவுகின்றது. பங்கு வர்த்தக அனுமதியின் அடிப்படையில் பங்குவரத்தகத்தில் சிறந்த முடிவுகளை இதன்வாயிலாக எடுக்க முடியும். ஒரு சிறிய அளவிலான நிறுவனமாக இருந்தாலும்,அல்லது பெரிய அளவிலான நிறுவனமாக இருந்தாலும், இந்த பயன்பாடானது சரக்கு அளவை சிறப்பாக பராமரிக்க உதவுகிறது. , டேலி ஈஆர்பி 9 யின் வாயிலான நிதி புள்ளிவிவரங்களைப் பார்வையிடுவதன் மூலம் வியாபார நடவடிக்கைகளின் அனைத்து முக்கியமான முடிவுகளையும்விரைவாக எடுக்க முடியும். அன்றாட வணிக நடவடிக்கைகளின் நிதி வரவு செலவினங்களுடன் கூடிய, பணப்புழக்கத்தை கண்காணிப்பது மிகவும் கடினமாகும் ஆயினும் . இந்த மென்பொருள் வணிகத்தில் பணப்புழக்கத்தை எளிதாக கண்காணிக்க உதவுகிறது. டேலி ஈஆர்பி 9 என்பது வணிகத்தில் உள்ள அனைத்து நிதித் தேவைகளுக்கும் ஒரு விரிவான தீர்வாக அமைகின்றது . இது நிதி தரவுகளை அதிக தொந்தரவில்லாமல் கையாள உதவுகிறது. கணக்கியல் , ஜிஎஸ்டி ஆகிய இரண்டுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக பயனுள்ள சிறந்த கருவிகளில் ஒன்றாக இது அமைந்துள்ளது நம்முடைய டேலி தரவு , தரவின் உரிமை ஆகியவை நம்மிடம் மட்டுமே உள்ளன என்பதே இந்த பயன்பாட்டின் சிறந்த பாதுகாப்பு செயலாகும்,. டேலி ஈஆர்பி மேஜைக்கணினியில் இருந்து QR குறியீட்டை வருடுதல் செய்த பின்னரே கைபேசியில் உள்ள தரவை அணுக முடியும். மேலும், பயனாளரின் தரவு 256 பிட் குறியாக்கத்துடன் குறியாக்கம் செய்யப்படுகிறது. நம்முடைய டேலி தரவுகளின் மிக உயர்ந்த பாதுகாப்பை இந்த பயன்பாடு உறுதி செய்கிறது டாலிடெகோ என்பது டேலி ஈஆர்பி 9 க்கான காபேசி பயன்பாடாகும், இது வாடிக்கையாளருக்கு முழுமையான டேலி ஈஆர்பி 9 தரவை ஒரே சொடுக்குதலில் அணுக உதவுகிறது. ஒரு ஐபோன் பயனாளராகவோ அல்லது ஆண்ட்ராய்டு பயனாளாராகவோ இருந்தாலும், இந்த டாலிடெக்கோ பயன்பாடு என்பது அனைத்து வகையான வணிக நபர்களுக்காக வடிவமைக்கப்பட்டதாகும் டேலிடெக்கோ கைபேசி பயன்பாடு தரவைச் சேமிக்க பயனரின் Google இயக்ககத்தைப் பயன்படுத்துகிறது, மேலும் சேவையகமாக வேறு மூன்றாம் தரப்பும் இல்லை. நம்முடைய கைபேசியில் விற்பனை, கொள்முதல், செலவுகள், நிலுவைகள், கையிருப்பு பணம் வங்கி இருப்பு ஆகியவற்றை சரிபார்க்க முதன்மைதிரையுடன்ன் தொடர்ந்து இணைந்திருக்க இந்த பயன்பாடு உதவுகிறது. எனவே, அனைத்து நிதி அம்சங்களையும் இதன் வாயிலாக நிருவகிப்பது மிகவும் எளிதாக அமைகின்றது. இதனுடைய டாலிடெகோ பயன்பாட்டின் மூலம், : • விற்பனை • வங்கி இருப்பு கையிருப்பில் உள்ள பணம் • கொள்முதல் • செலவுகள் • செலுத்த வேண்டிய நிலுவை • நிலுவையில் பெறத்தக்கதுவரைபடங்கள் மூலம் வழக்கமான அறிக்கைகள் • நிலுவைத் தொகை மற்றும் வழக்கமான கட்டண நினைவூட்டல்களைப் பெறுதல் என்பன போன்ற பல்வேறு இணங்களை சரிபார்த்திடமுடியும்
அனைத்து பட்டய கணக்காளர்களுக்கும், டாலிடெக்கோபிரீமியம் கணக்குகளை எந்த கட்டணமும் இன்றி வழங்குகிறது. இந்த சலுகை பட்டய கணக்காளர்களுக்கு மட்டுமே. மேலே சென்று, உங்கள் வணிகத்தை வளர்த்து, எல்லா தரவையும் டாலிடெக்கோ மொபைல் பயன்பாட்டின் மூலம் பாக்கெட்டில் வைத்திருங்கள். இன்று ஒப்பந்தத்தை சிறந்த விலையில் பெறுங்கள். இன்று பயன்பாட்டைப் பதிவிறக்கி, உங்கள் நிதித் தரவுகளை விரல் நுனியில் வைத்திருங்கள்.

டேலி ஈஆர்பி9 இல் பொது சரக்குசேவைவரியைபயன்படுத்தி கொள்ளமுடியுமா

ஆம் டேலி ஈஆர்பி9 இன் வெளியீடு6.1 இல் GSTR-1 ஐ எளிதாக கையாளுமாறு கட்டமைக்கப்-பட்டு வெளியிடப்பட்டுள்ளது இந்திய அரசின் இந்த GSTR-1 இன் எக்செல் மாதிரிபலகத்தை பதிவிறக்கம் செய்து அதனை JSON ஆக மாற்றம்செய்து தேவையான விவரங்களை உள்ளீடுசெய்தபின்னர் GST தளத்தில் பதிவேற்றம் செய்திடமுடியும் அதைவிட பயனாளர்களின் பணியை மிகஎளிதாக ஆக்கும் பொருட்டு GST-ready எனும் டேலியின் மேம்படுத்தப்பட்டபதிப்பு வெளியிடபட்டுள்ளது
இதில்பின்வரும்பல்வேறு வசதிவாய்ப்புகள்உள்ளன
1 GST-இற்கு ஏற்ப சாதாரண விற்பணைபட்டியல் முதல் மிகமுன்னேறிய விற்பணைபட்டியல் வரை நாம் விரும்பும் வகையில் விற்பணைபட்டியலை தயார் செய்திடமுடியும் அதிலும் ஒன்றிற்குமேற்பட்ட விற்பணை பொருட்கள் ஒன்றிற்கு மேற்பட்ட வரிவிகிதங்களில் விற்பணைபட்டியலை தயார் செய்திடமுடியும்
2 அதைவிடமிகமேம்பட்ட நிறுவனத்திற்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்தலை கையாளுதல் , நிறுவனங்களின் கிளைகளுக்கு இடையே பரிமாற்றம் செய்தல்,வெளிநாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதிசெய்தல் வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதிசெய்தல் ஆகிய செயல்களை கையாளுதல் உள்வருகை வரியை மிகச்சரியாக கணக்கிட்டு சரிசெய்து கொண்டு நிகரமாக நாம் செலுத்தவேண்டிய வரியை கணக்கிடுதல் ஆகிய பணிகள் மிகவும்எளிமை-படுத்தப்-பட்டுள்ளன.
3 நம்முடைய கணக்குபதிவிற்கும் நாம் சமர்ப்பிக்கின்ற வரிபடிவங்களுக்கும் இடையே இசைவான மிகச்சரியாக ஒத்தியங்கும் தன்மையில் பராமரிக்கப்-படுகின்றது
4நம்மால் சமர்ப்பிக்கப்படும் சசேவ (GST)இற்கு ஏற்ப விற்பணைபட்டியல் வாரியான தகவல்களை பிரித்து தயார்செய்வது மிகசுலபமானதாக அமைகின்றது
5 நம்மால் சமர்ப்பிக்கப்படும் சசேவ (GST)இல் ஏதேனும் தவறுகள் பிழைகள் இருந்தால் அதனை உடனுக்குடன் நேரடியாக சரிசெய்து அதன்விளைவை சரிபார்த்து மிகச்சரியான சசேவ (GST)இன் படிவங்களை சமர்ப்பிக்கும வசதியை அளிக்கின்றது
6அதிலும்இந்த டேலியின் GST Ready எனும் பயன்பாட்டு மென்பொருளானது பிழைகள்தவறுகள் இல்லாத சசேவ (GST)இன் படிவங்களை GSTN இன் தளத்தில் எளிதாக பதிவேற்றம் செய்யஉதவுகின்றது
இவ்வாறான பல்வேறு வசதிகளையும் வாய்ப்புகளையும் கொண்ட GSTN இன் அனைத்து தேவைகளையும் நிறைவுசெய்திடும் டேலியின் GST Ready எனும் பயன்பாட்டு மென்பொருளை பயன்படுத்தி பயன்பெறுக என பரிந்துரைக்கப்படுகின்றது

டேலியின் புதிய Tally’s GST-Ready எனும் வெளியீட்டினை சரக்கு சேவைவரி யை செயல்படுத்திடுவதற்காக பயன்படுத்தி கொள்க

தற்போது நடைமுறைபடுத்தப்பட்டுள்ள சரக்கு சேவைவரி(GST) எனும் புதிய முறையை செம்மையாக பின்பற்றிடுவதற்காக Tally’s GST-Ready எனும் டேலிஈஆர்பி9 இன் 6 ஆம் வெளியீடபட்டுள்ளது
இதனை செயற்படுத்தியவுடன் தோன்றிடும்திரையில் GSTஎன்பதை இயலுமை படுத்தி கொள்க பின்னர் பதிவு தொடர்பான வரிவிகிதம் வரிக்கான பேரேடு போன்ற விவரங்களை உள்ளீடு செய்து கொண்டு Create and print sales invoicesஎன்பதை தெரிவுசெய்த சொடுக்குக
இந்த பயன்பாட்டின் பல்வேறு வசதிகள் பின்வருமாறு
1 நம்முடைய தேவையான சரக்குசேவைவரிக்கான எளிய பொருட்களின் பட்டியல் முதல் பல்வேறு வகையான பொருட்கள் பல்வேறு வரிவிகிதங்களை ஆகியவை கொண்ட மிகவும்சிக்கலான பொருட்களின் பட்டியல் வரை மிக எளிதாக இந்த Tally’s GST-Ready எனும் பயன்பாடு கையாளுகின்றது இதில் அரைகுறையான விவரங்கள் பிழைகள் அச்சிடும்பிழைபோன்ற அனைத்து பிரச்சினைகளையும் எளிதாக தீர்வுசெய்கின்றது
எந்தவகையான வியாபார நிகழ்வுகளிலும் எனும் வசதியை மிகஇயல்பாக கையாளுகின்றது
2.முன்கூட்டியே வருமான செலவுகளை கணக்கிடுகின்றது
3ஒருநிறுவனத்தில் ஒன்றிற்குமேற்பட்ட கிளை அலுவலகம் இருந்தாலும்அவைகளின் பொருட்களின் பட்டியலை எளிதாக தலைமையகத்திற்கு ஒன்றுசேர்த்து நாம் செலுத்தவேண்டிய வரியை சுலபமாக கணக்கிடுகின்றது
4.அவ்வாறு நாம் எத்தனை வியாபார நிறுவனங்களிடமிருந்து பொருட்களை பெற்றிருந்தாலும் அவைகளை ஒருங்கிணைத்து அவைகளின் வாயிலாக நிறுவனத்திற்கு கிடைக்கவேண்டிய உள்ளீட்டு வரிகழிவை மிகவிரைவாக கணக்கிடுகின்றது மேலும்ஒரு நிறுவனத்தின் அனைத்து மறைமுகவரிகளையும் கையாளுகின்றது
5.உள்வருகை கழிவின் ஒவ்வொரு மாதத்திலும் அதன் ஆரம்ப இருப்பு நடப்பு மாதத்தில் சரிசெய்துகொள்ளபட்டது மிகுதி சரிசெய்து கொள்ளப்படாமல் மாதமுடிவில் நிலுவை யாக உள்ள தொகா ஆகியவற்றின் முதற்குறிப்பேடு தானாகவே உருவாகிடும் வசதி கொண்டது
6 Composite Dealersஇற்கான பொருள்வழங்கும் பட்டியலை தயார்செய்து கையாளுகின்றதுஅதுமட்டுமின்றிஏற்றுமதிவியாபாரத்திற்கான பொருட்களின் பட்டியலை தயார்செய்து கையளுவது

டேலி சேவையாளர்-9 ஒரு அறிமுகம்

நடுத்தர ,பேரளவு வியாபார நிறுவனங்கள் தத்தமது வியாபார நடவடிக்கைகளை மேலும் விரைவாக வளர்த்து கொள்வதற்கு இந்த டேலி சேவையாளர்9 எனும் கணக்கு பதிவிற்கான பயன்பாட்டு மென்பொருள் பேருதவியாக விளங்குகின்றது தற்போது நடைமுறையில் டேலிஈஆர்பி9 ஐ பயன்படுத்துவர்களின் சமனுக்கு சமனான தரவுகளை சேவையாளர் அடிப்படையில் உருமாற்றம் செய்து தரவுகளை நிருவகிக்க இந்த டேலி சேவையாளர்9 ஆனது மிகத்திறனுடைய விரிவாக்கதன்மையை வழங்கி செயல்திறனை மேம்படுத்தி கட்டுபடுத்திடுகின்றது .இதனுடைய வசதிவாய்ப்புகள் பின்வருமாறு
1 மிகமேம்பட்ட ஒத்தியங்கும் வசதி இந்தடேலி சேவையாளர்9 ஐ பயன்படுத்திடும் ஏராளமான நபர்கள் பணிபுரியும் ஒருநிறுவனத்தில் பயனாளர் ஒருவர் தன்னுடைய கணினியில் தம்முடைய நிறுவன தரவுகளை மேலேற்றம் செய்தல் , மற்றொரு நபர் தாம் பணிபுரிந்த தரவுகளை சேமித்தல் மூன்றாவது நபர் தான் உருவாக்கிய அறிக்கைகளை பதிவேற்றம் செய்தல் நான்காவது நபர் தான் விரும்பும் அறிக்கையை அச்சிடுதல் ஐந்தாவது நபர் தன்னுடைய தரவுகளை பதவிவேற்றம் செய்தல் ஆறாவது நபர் தன்னுடைய தரவுகளை பிற்காப்பு செய்தல் ஆகிய பல்வேறு பணிகளை பல்வேறு முனைமங்களிலிருந்து ஒரேசமயத்தில் செயல்படும்போது இவ்வாறான அனைத்து செயல்களும் இந்த புதிய டேலி சேவையாளர்9 இல் ஒத்தியங்கும் வசதி இருப்பதால் பிரச்சினைஎதுவும் இல்லாமல் பயனுள்ளதாக அமைகின்றது அதாவது டேலி சேவையாளர்9 ஐ பயன்படுத்தும் பயனாளர் ஒருவர் கடந்த பிப்ரவரி2017 மாதத்தின் அறிக்கையை பெற விரும்புகின்றார் மற்றொருவர் அதேமாதத்தின் விடுபட்ட செலவுத்தொகையை நிகழ்நிலை படுத்தவிரும்புகிறார் என கொள்வோம் டேலிஈஆர்பி9 ஐ பயன்படுத்திடும்போது வழக்கமான நடைமுறையில் முதலில் செலவுத்தொகையை நிகழ்நிலை படுத்தியபிறகே பிப்ரவரி2017 மாதத்தின் அறிக்கையை தயார்செய்தால் சரியானதாக இருக்கும் ஆனால் இந்தடேலி சேவையாளர்9 ஐ பயன்படுத்திடும்போது இருவருடைய பணிகளும் ஒத்தியிங்கும் வசதி இந்த டேலி சேவையாளர்9 இல் இருப்பதால் இருவரும் ஒரேசமயத்தில் தத்தமது பணிகளை செய்திடமுடியும் அதேபோன்று தினமும் கணக்கு பிரிவில் பணிபுரியும் பணியாளர்கள் தத்தமது பணியை ஒரேசமயத்தில் துவங்கிடும்போது டேலிஈஆர்பி9 ஐ பயன்படுத்திகொண்டிருந்தால் அனைத்து பணியாளர்களின் கணினியிலும் டேலியின் தரவுகள் பதிவேற்றம் ஆன பிறகுமட்டுமே அவரவர்கள் தத்தமது பணிகளை துவங்கிடமுடியும் அதற்குபதிலாக இந்த டேலி சேவையாளர்9 பயன்படுத்தினால் பணியாளர்கள் தத்தமது பணியை ஒரேசமயத்தில் துவங்கிடும்போது மற்றவர்களின் கணினியில் டேலியின் தரவுகள் பதிவேற்றம் ஆவதற்காக காத்திருக்கத்தேவையில்லை அவரவருடைய கணினியில் டேலியின் தரவுகள் பதிவேற்றம் ஆனவுடன்இந்த மிகமேம்பட்ட ஒத்தியங்கும் வசதியிருப்பதால் தத்தமது பணியை உடனுக்குடன் துவங்கிடமுடியும்
2 மிகவும் மேம்பட்ட பாதுகாப்பு வசதி இந்தடேலி சேவையாளர்9 ஐ பயன்படுத்திடும் பயனாளர்கள் இந்த சேவையாளர் கணினி எங்குள்ளது எந்தவழியாக தாம் தம்முடைய தரவுகளை அனுகுகின்றோம் என்பனபோன்ற தகவல்கள் அவர்களுக்கு தேவையற்ற செய்தியாகும் இதனை அனுகி தன்னுடைய பணியை துவங்குவதற்காக சேவையாளரின் பெயர்மட்டும் தெரிந்து பயன்படுத்தி கொள்ளலாம் மேலும் தரவுகளை பிற்காப்பு செய்தல் முந்தைய தரவுகளை மீளப்பெறுதல் ஆகிய நடவடிக்கைகளை அனுமதிபெற்றவர்கள் மட்டுமே செயற்படுத்திடமுடியும்
3மேம்பட்ட நம்பகத்தன்மை வழக்கமாக கணக்குபதிவியலின் நடவடிக்கைகளை பிற்காப்புசெய்தல் பணியை செயற்படுத்திடும்போது மற்ற அனைத்து பணிகளையும் செயற்படுத்திடமுடியாமல் அவையனைத்தும் பாதிக்கப்படும் அதனால் டேலிஈஆர்பி9 ஐ பயன்படுத்திடும் நிறுவனங்களில் அன்றாட நடவடிக்கை அனைத்தும் முடிந்தபின்னர் நள்ளிரவு அல்லது அலுவலக பணிநேரத்திற்கு பிறகே இவ்வாறான பிற்காப்பு பணிகளை செய்திடமுடியும் ஆனால்இந்த டேலி சேவையாளர்9 ஐ பயன்படுத்திடும் பயனாளர்கள் அவ்வப்போது தாம் விரும்பிய நேரங்களில் தத்தமது தரவுகளை பிற்காப்பு செய்துகொள்ளலாம் இதனால் மற்றபணியாளர்களின் பணிஎதுவும் பாதிப்பில்லாமல் தத்தமது பணிகளை தொடர்ந்து செய்து கொண்டிருகக்கலாம்
4 போதுமான அளவு வியார நடவடிக்கைகள் பதிவுசெய்தல் டேலிஈஆர்பி9 ஐ பயன்படுத்திடும் நிறுவனங்களில் வங்கி சரிகட்டிடும் பணியை செய்து முடிப்பதற்காக ஏறத்தாழ 120 மணிநேரம் மாதம் ஒன்றிற்கு செலவாகின்றது எனில் அதே பணியை இந்த டேலி சேவையாளர்9 ஐ பயன்படுத்திடும் நிறுவனங்களில் மாதம் ஒன்றிற்கு வெறும் 60 மணிநேரத்திலேயே அதாவது பாதிக்கு பாதிநேரத்திற்குமுன் முடித்துவிடலாம்

டேலிஈஆர்பி9 இல் பொருள்பட்டி (Bill of Material (BoM) )தயாரித்தல்

வியாபார பொருட்களை விற்பணை செய்திடும் நிறுவனங்கள் இந்த BoM என சுருக்கமாக அழைக்கப்படும் பொருள்பட்டியை (Bill of Material ) தயார்செய்யத் தேவையில்லை ஆனால் பபொருட்களை உருவாக்கிடும் அல்லது உற்பத்தி செய்திடும் நிறுவனங்கள் மட்டுமே இந்த பொருள்பட்டியை (Bill of Material (BoM) ) டேலிஈஆர்பி9 இல் தயார்செய்திடவேண்டும் டேலிஈஆர்பி9 இல் பொருள் இருப்பை உருவாக்கிடும்போது் அல்லது பொருள் பட்டியலை மாற்றியமைத்திடும்போது இந்த BoM ஐ குறிப்பிடவேண்டும் இதற்காக டேலிஈஆர்பியின் திரைக்கு Tally F12 :ConfigureØAcctsØInventoryinfo என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி செல்க உடன் விரியும் Inventory Masters எனும் திரையில் Allow Component list details (Bill of Material ) என்பதற்கு yes என அமைத்துகொள்க
எடுத்துக்காட்டாக உதரிபாகங்களிலிருந்து கணினியை ஒருங்கிணைத்து உருவாக்கிடும் ஒரு நிறுவனமானது பத்து எண்கள் பி4 கணினிகளை உருவாக்கி அதன் இருப்பறையில் வைத்திடுவதாக கொள்வோம் இதற்காக தொழில்நுட்ப பணியாளரின் சம்பளம் ரூபாய் 10000/- என்றும் இதர செலவுகள் ரூபாய் 1000/- என்றும் கொள்க முதிலில் டேலி ஈஆர்பி9 இன் அமைவு திரையில் Use as Manufacturing Journal என்பதற்காக YES என அமைத்து கொள்க பின்னர் Direct Expenses என்பதன் கீழ் Create Ledgers =>Wages=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி பணியாளர் சம்பளத்திற்கும் Create Ledgers=>Overheads=> என்றவாறு கட்டளைகளை செய்ற்படுத்தி இதர செலவுகளுக்கும் பேரேடுகளை உருவாக்கி கொள்க அதன்பின்னர் Primery என்பதன் கீழ் Create Item =>Group=>Finished Goods=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி கணினியெனும் உற்பத்தி பொருளிற்காக உருவாக்கிகொள்க
பின்னர் create Stock Item=> Computer P4=> என்றவாறு கட்டளைகளை செய்ற்படுத்தியபின் தோன்றிடும் திரையில்
1,Name : Computer P4
2.Under: Finished Goods
3. Units: nos
4.Alt units not applicable
5 Maintain in Bactches: No
6 Set Components (BOM): Yes
என்றவாறு அமைவு செய்து கொள்க
அதன்பின்னர் Gateway of Tally=>Accounts Info=>Voucher Type=>Create=>Manufacturing Journal=> என்றவாறு கட்டளைகளை செய்ற்படுத்தியபின் தோன்றிடும் திரையில்
1 Name: Manufacturing Journal
2 .Type of Voucher: Stock Journal
3 Method of Voucher Numbering : Automatic
Use as Manufacturing Journal : YES
என்றவாறு அமைவு செய்து கொள்க
பின்னர் கணினி உதிரிபாகங்களை பற்றிய விவரங்களை உள்ளீடு செய்து கொள்க
அதன்பின்னர்
Debit :Wages Rs 10000/-

Debit other Expenses Rs 1000/- credit Sbi Rs 11000/-
என்றவாறு செலவுகளை எழுதிடுக உடன் டேலிஈஆர் பி9 திரையில் நாம் விரும்பிய கணினியின் பொருள்பட்டி (Bill of Material (BoM) ) உருவாகி திரையில் பிரிதிபலிக்கும்

டேலி ஈஆர்பி9 இல் வருமான மூலங்களிலேயே வரி பிடித்தம் செய்வது (Tax Deducted at Source)

வரியை வருமான மூலங்களிலேயே பிடித்தம் செய்வதை(Tax Deducted at Source) சுருக்கமாக TDS என அழைப்பர் இதனை வருமானவரிச்சட்டம் 1961 இன்படி செயல்படுத்தப்படுகின்றது இதன்படி அரசாங்கத்திற்கு வருமான வரியை எளிதாக வசூலிப்பதற்காக வருமானம் வருகின்ற மூலங்களியே பிடித்தம் செய்து செலுத்துகினற செயல் நடைமுறைபடுத்தபட்டு வருகின்றது இந்த செயல்முறையில் பொருள் விற்பணையாளர் அல்லது சேவை வழங்குபவர் வரிபிடித்தத்தை அனுமதிப்பவர் (Deductee) , பொருளை கொள்முதல் செய்பவர் அல்லது சேவையை பெறுபவர் வரி பிடித்தம் செய்பவர் (Deductor) ஆகிய இருநபர்கள் உள்ளனர் பொதுவாக பொருளை விற்பணை செய்திடும் போது அல்லது சேவையை பெறும்போது பொருளை விற்பணை செய்பவரே அல்லது சேவையை பெறுபவரே அதற்கான தொகையை வழங்கும்போது வருமான வரியை பிடித்தம் செய்து கொண்டு வழங்குவார் இவர் வரியை பிடித்தம் செய்பவர் (Deductor) என அழைக்கப்படுவார் அதன்பின்னர் இவர் அரசிற்கு அரசாங்க கஜானாவில் அல்லது அரசு வங்கியில் பிடித்தம் செய்த வரித்தொகையை செலுத்துவார் அதனைதொடர்ந்து இவர் படிவம் 16Aஎன்பதில் இந்த வருமான வரி பிடித்தம் செய்து செலுத்திய விவரங்களை குறிப்பிட்டு வரிபிடித்தத்தை அனுமதிப்பவருக்கு (Deductee)அளிப்பார் மேலும் இவர் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக வருமானவரி அலுவலகத்திற்கு வருமானமூலம் பிடித்தம் செய்தவரிவிவரங்களை சமர்ப்பிப்பார் அவ்வாறே வரிபிடித்தத்தை அனுமதிப்பவர் (Deductee)தான் பெற்ற படிவம் 16A இன் அடிப்படையில் தம்முடைய வருமான வரி வருடாந்திர அறிக்கையை வருமான வரிஅலுவலகத்தில் இணையத்தின் வாயிலாக சமர்ப்பிப்பார் இவைஇரண்டும் ஒன்றுக்கொன்று பொருத்தமாக அமைந்திருந்தால் மட்டும் இந்த நடவடிக்கை முற்றுபெறும் தொடர்ந்து இந்த நடவடிக்கைகளை டேலி ஈஆர்பி 9 இல் எவ்வாறு செயல்படுத்திடுவது என இப்போது காண்போம்
முதல்படிமுறையாக நம்முடைய டேலி ஈஆர்பி9 இல் நம்முடைய நிறுவனத்தின் திரைக்கு செல்க அங்கு F11என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்கியபின்தோன்றிடும் திரையில் Features (F3:Statutory) என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் Enable Tax Deducted at Source(TDS) என்பதற்கு Yesஎன்றும் Set/Alter TDS Detailsஎன்பதற்கு Yes என்றும் அமைத்துகொள்க அதன்பின்னர் தோன்றிடும் திரையில் 1.TaxAssessmentNumber (TAN) என்பதற்கு வருமானவரி அலுவலகத்தால் நமக்கு (Deductor) வழங்கப்பட்ட பத்து இலக்க எண்ணும் எழுத்தும் கலந்த சுட்டிஎண்ணை உள்ளீடு செய்துகொள்க I2.ncome Tax Circle/ Ward (TDS) என்பதற்கு நம்முடைய அலுவலகம் அமைந்துள்ள பகுதியின் வருமானவரி அலுவலக விவரங்களை உள்ளீடு செய்து கொள்க 3. Deductor Type என்பதற்கு நம்முடைய (Deductor)நிறுவனம் Government அல்லது Others ஆகிய இரண்டில் ஒன்றினை தெரிவுசெய்து கொள்க 4.Name of the person and Designation என்பதற்கு நம்முடைய நிறுவனத்தில் உள்ள வரியை வருமான மூலங்களிலேயே பிடித்தம் செய்வதற்கான பொறுப்பான நபரின் பெயர் அவருடைய பதவியின் பெயர் ஆகியவிவரங்களை உள்ளீடு செய்து கொள்க
அடுத்த படிமுறையாக Sundry Creditor என்ற தலைப்பில் பேரட்டில் வரிபிடித்தத்தை அனுமதிப்பவரின் (Deductee) பெயரை பதிவுசெய்து கொள்க மேலும் அதில் Is TDS Applicable என்பதற்கு Yes என்றும் அமைத்துகொள்க தொடர்ந்து தோன்றிடும் TDS Detail எனும் திரையில் Deductee Type என்பதற்கு தனிப்பட்டநபரா அல்லது நிறுவனமா என அமைத்து கொள்க இந்த செலவு உள்தணிக்கைக்காக எனகொள்க அதனால் TDS on Internal Auditor எனும் மற்றொரு பேரேட்டினை Duties & Taxesஎன்ற தலைப்பின்கீழ் உருவாக்கி கொள்க இதற்கான தொகையை Internal Auditor Expenses பற்று என்றும் அந்த உள்தணிக்கை செய்திடும் நிறுவனத்திற்கு வரவு என்றும் அதற்கான தொகை ரூ25000ய எனக்குறிப்பிட்டு முதற்குறிப்பேட்டை உருவாக்கி கொண்டவுடன் உருவாகும் திரையில் Yஎன்பதை அல்லது உள்ளீட்டு விசைய அழுத்துக பின்னர் Alt S ஆகிய விசைகளை அழுத்துக அல்லதுTds Deduction எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இந்த நடவடிக்கையில் வருமான வரி எவ்வளவு அதுபோக நிகரமாக எவ்வளவு தொகை தரவேண்டும் என கணக்கிட்டு திரையில் காண்பிக்கும் உடன் உள்தணிக்கை நிறுவனத்திற்கு நிகரம் வழங்கவேண்டிய தொகைக்கு பற்று வருமான வரி பிடித்ததொகைக்கு பற்று என்றும் நம்முடைய வங்கி கணக்கு வரவு என்றும் முதல் குறிப்பேட்டினை பதிவிசெய்திடுக
இதன் பின்னர் Gateway of Tally=>Display=>Statutory Report=>TDS Report=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின் அறிக்கையை திரையில் காணலாம் அல்லது நிகரம் செலுத்தவேண்டிய விவரத்தைGateway of Tally=>Display=>Statements ofAccounts=>TDS Outstanding=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின் திரையில் காணலாம்
12

டேலி ஈஆர்பி9 அறிமுகம்

டேலி ஈஆர்பி9 எனும் கணக்குபதிவியலிற்கான பயன்பாடானது மிகவிரைவாகசெயல்படும் கையடக்கமான மிகுந்த நம்பிக்கைக்குரிய எளிதாக நிறுவுகை செய்யக்கூடிய சிறிய நடுத்தர நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைத்து வியாபார தேவைகளையும் நிறைவு செய்யக்கூடியதொரு சிறந்த பயன்பாடாகும் இந்த பயன்பாடானது எளியதானதாகவும் நெகிழ்வுதன்மையுடன் கூடியதாகும் உள்ளது இதில் கணக்குபதிவியல் ,பொருட்களை நிருவகித்தல், விற்பணை, நிதிநிருவாகம், பொருட்களைகொள்முதல்செய்தல், பொருட்களின்உற்பத்தி ,உற்பத்தி வரிநிருவகித்தல், விற்பணைவரி நிருவகித்தல் சம்பளத்தையும் கூலியையு நிருவகித்தல் என வியாபாரத்தின் அனைத்து தேவைகளையும் தீர்வு செய்யகூடிய வசதிகொண்டதாகும் இது ஒருநிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து கொண்டுசெல்லும் திறன்மிக்கதாகும் இது மிகவிரைவாக செயல்பட்டு நாம் விரும்பும் அறிக்கைகளை உடனுக்குடன் தருவதற்கு தயாராக இருக்கின்றது இது இந்திய மொழிகள் அனைத்திலும் உலக மொழிகளில் அரபி, மலேயோ,இந்தோனேஸியா ஆகியவற்றிலும் ஆவணங்களை கையாளும் திறன்கொண்டதாகும் மேலும் நாம் தரவுகளை உள்ளீடு செய்திடும்போதே உடனுக்குடன் தரவுகளை நிகழ்நிலை படுத்தி அதுவரையிலான அறிக்கைகளை தயார் செய்திடும் திறன்மிக்கது பொதுவாக குழுவான நிறுவனங்கள் பல்வேறு இடங்களில் கிளைகளை கொண்ட நிறுவனங்கள் வேவ்வேறு கணக்காண்டுகளை கொண்ட நிறுவனங்களை மிகஎளிதாக இதில் கணக்குபதிவியலை மேற்கொள்ளலாம் இது Windows 98/ME/NT/2000/2003/2008/XP and Windows 7 ஆகிய அனைத்து இயக்கமுறைகளிலும் செயல்படும் திறன்மிக்கது இது எந்தவொரு பிரச்சினைக்குமான தீர்வினை உடனுக்குடன் இணையத்தின் வாயிலாக தீர்வுசெய்து கொள்ளும் வசதிமிக்கதாகும் இதில் நம்முடைய நிறுவனத்தின் கணக்குபதிவியலை நாம் எங்கிருந்தும் இணையத்தின் வாயிலாக கையாளும் வசதிகொண்டது மையபடுத்தபட்ட டேலி ஈஆர்பி9 அனுமதிபெற்ற பயன்பாட்டினை நிறுவுகை செய்துகொண்டு நம்முடைய நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலும் குழுவின் அனைத்து உறுப்பு நிறுவனங்களிலும் கணக்குபதிவியலை எளிதாக கையாள முடியும் மிகமுக்கியமாக நம்முடைய நிறுவனத்தின் ஆண்டு கணக்குகளை தணிக்கை செய்திடும் தணிக்கையாளர்கள் அவர்களின் ஆண்டு அறிக்கைகள் தணிக்கை விவரங்கள் ஆகியவற்றை தயார் செய்வதற்கு வசதியாக தணிக்கையாளர்களுக்கென தனியான தணிக்கையாளர் பதிப்புகூட பயன்படுத்திட தயாராக இருக்கின்றது
இதனை நிறுவுகை செய்வதற்கான வழிகாட்டியின் உதவியால் மிக எளிதாக மிகவிரைவாக நிறுவுகை செய்திடலாம் வளாகபிணையம் அல்லது இணையத்தின் வாயிலாக ஒன்றிற்கு மேற்பட்ட நபர்கள் ஒரேசமயத்தில் இதில் பணிபுரியும் வசதிகொண்டதாகும் ஒவ்வொரு பயனாளரும் எந்தநிலைவரை இதில் தரவுகளை கையாளமுடியும் என வரையறுப்பதற்கு ஏற்ப அனுமதிக்கும் பாதுகாப்பு வசதிகொண்டது இதல் உள்ள TallyVault எனும்வசதிமூலம் தரவுகளை மறையாக்கம் செய்து பாதுகாப்பாக வைத்து கொள்ளமுடியும் வெவ்வேறு கோப்பகத்தில் தரவுகளை சேமித்து வைத்து வெவ்வேறு பணிகளை செயல்படுத்திடமுடியும்
டேலிஈஆர்பி 9 இலிருந்து தரவுகளை MS EXCEL, JPEG, PDF, XML, HTML or ASCII ஆகிய வடிவமைப்புகோப்பகளாக பதிவேற்றம் செய்திடவும் அவ்வாறான வகை கோப்புகளை டேலிஈஆர்பி 9 இற்கு பதிவிறக்கம் செய்துகொள்ளவும் முடியும் இது தரவுகளை ஆய்வுசெய்து அதனைகொண்டு வரைகலையின் வரைபடமாக நாம் விரும்பியவாறு வழங்கிடும் வசதியும் கொண்டது
இணையத்தின் வாயிலாக வெவ்வேறு இடங்களில் வைத்துள்ள தரவுகளுடன் ஒத்தியங்குதல் செய்து நாம் விரும்பியவாறு கையாள இது அனுமதிக்கின்றது மேலும் இது ODBC அடிப்படையாக கொண்ட MS Excel, Oracle ஆகிய வற்றுடன் ஒத்தியங்கும் தன்மைகொண்டதாகும் அதுமட்டுமல்லாது HTTP, HTTPS, FTP, SMTP, ODBC ஆகியவற்றின் தொடர்புடைய XML, HTML with XML islands, SOAP ஆகியவடிவமைப்பு தரவுகளை ஆதரிக்கும் தன்மைகொண்டதாக இது விளங்குகின்றது டேலிஈஆர்பி9 இலிருந்து நேரடியாக மின்னஞ்சல் அனுப்பிடும் வசதிகொண்டது டேலிஈஆர்பி9 இன் முந்தைய பதிப்புகளின் தரவுகளை தற்போதைய எந்தவொரு பதிப்பிற்கும் கொண்டுசென்று கையாளுவசதிமிக்கது தரவுகளை பல்வேறு துனை நிறுவனங்களுக்கானதை தனித்தனியாக பிரித்து கையாளும் வசதிகொண்டது

Previous Older Entries