தற்போதைய சூழலில் வியாபார நிறுவனங்களுக்கு லினக்ஸ் சேவையாளர் கண்டிப்பாக தேவையா

.வருங்காலத்தில் நம்முடைய வியாபார நிறுவனத்தின் பயன்பாடு இயங்குவதற்கு நிலைத்த பாதுகாப்பான சூழல் தேவையெனில் கண்டிப்பாக லினக்ஸ் சேவையாளர் தேவையாகும் நம்முடைய நிறுவனத்தின் உற்பத்தி திறன் உயரவும் சேவையை விரைவாக வழங்கவும் பணியானது நெகிழ்வு தன்மையுடன் அமைந்திடவும் நவீணகால கணினி,மெய்நிகர் கணினி,தாங்கி கணினி,பொதுஅல்லதுதனிநபர் மேககணினி போன்றவைகளை மிகத்திறனுடன் பயன்படுத்தி கொள்வதற்கு அடிப்படையாக இந்த லினக்ஸ் சேவையாளர் அத்தியாவசிய தேவையாகும் இவையனைத்தும் பாதுகாப்பான தளத்தில் கிடைப்பதை லினக்ஸ் சேவையாளர் உறுதிபடுத்திடுகின்றது தற்போதைய வளர்ந்துவரும் உலகளாவிய தரவுகளின் மையமானது வாடிக்கையாளர் தெரிவுசெய்வதற்கேற்ற பல்வேறு வகையான கட்டமைப்புகள்,வானூர்திகள் கட்டுபாட்டுமையம் ,போன்றஅனைத்தும் பிரச்சினை எதுவுமில்லாமல் சிறப்பாக செயல்பட நம்பகமான லினக்ஸ் சேவையாளரே அடிப்படை தேவையாகும் தற்போது நாம் பயன்படுத்திவரும்பெரும்பாலான திறன்பேசிகள் ஆண்ட்ராய்டு கைபேசிகள் முதன்மையான 500 அதிவேக கணினிகள் தொலைத்தொடர்பு சாதனங்கள் பொருட்களுக்கான இணையம் ஆகியஅனைத்தும் இந்த லினக்ஸ் சேவையாளர் என்ற அடிப்படையின் மீதே செயல்படுகின்றன வியாபார பயன்பாடான இணைய வலைபின்னல் அமைவு நிருவாகம்,தரவுதளநிருவாகம்,இணையசேவை போன்றவை நிலைத்ததாக ,பாதுகாப்பாக நெகிழ்வுதன்மையுடன்செயல்பட CentOS,Debian,Ubuntu Server,Slackware, andGentooஆகிய லினக்ஸ் சேவையாளர் பெரும்பங்காற்றுகின்றது இவைAnsible,Chef,Salt,Puppet, PCI-DSS,DISA STIG,OpenSCAPபோன்ற கருவிகளை கொண்டு இணைய சேவையை தடங்களின்றி வழங்குகின்றன

கோ எனும்கணினிமொழியில் TCP சேவையாளரை எவ்வாறு உருவாக்குவது

தற்போது இணையவலைபின்னலில்TCP , UDP ஆகிய சேவையாளர்களே மிகமுக்கிய பங்காற்றுகின்றன அதனால் அவற்றுள்TCP சேவையாளரை கோ எனும்கணினிமொழியின் வாயிலாக எவ்வாறு கட்டமைவுசெய்வது என இப்போது காண்போம்
கோஎனும்கணினி மொழியில்handleConnection()எனும் செயலியே இதற்குஅடிப்படையாக தேவையாகும் இதனை செயல்படுத்திட பின்வருமாறு கட்டளைவரிகளை பயன்படுத்தி கொள்க
unchandleConnection(cnet.Conn){
fmt.Printf(“Serving %s\n”,c.RemoteAddr().String())
for{
netData,err:=bufio.NewReader(c).ReadString(‘\n’)
iferr!=nil{
fmt.Println(err)
return
}
temp:=strings.TrimSpace(string(netData))
iftemp==”STOP”{
break
}
result:=strconv.Itoa(random())+”\n”
c.Write([]byte(string(result)))
}
c.Close()
}

இந்த TCP இல் வாடிக்கையாளர் STOP எனும் கட்டளையை அனுப்பினால் உடன் அவருடைய சேவையை நிறுத்தம்செய்திடவேண்டும் அதுவரையில் அவருடைய சேவை தொடர்ந்து செயல்படவேண்டும் இதற்காக forஎனும் கன்னி பயன்படுகின்றது அடுத்து முதன்மையான திரும்பதிரும்ப செய்திடும்செயலிற்காக main()எனும் செயலி தேவையாகும் இதனை செயல்படுத்திட பின்வருமாறு கட்டளைவரிகளை பயன்படுத்தி கொள்க
funcmain(){
arguments:=os.Args
iflen(arguments)==1{
fmt.Println(“Please provide a port number!”)
return
}
PORT:=”:”+arguments[1]
l,err:=net.Listen(“tcp4”,PORT)
iferr!=nil{
fmt.Println(err)
return
}
deferl.Close()
rand.Seed(time.Now().Unix())
for{
c,err:=l.Accept()
iferr!=nil{
fmt.Println(err)
return
}
gohandleConnection(c)
}
}
இது TCP ஐ ஏற்கும் வாயில்எண்ணை வழங்காது பிழைசெய்தி காண்பிக்கும் அதனை
செய்திடnet.Listen()எனும் செயலி தேவையாகும் இதனை செயல்படுத்திட பின்வருமாறு கட்டளைவரிகளை பயன்படுத்தி கொள்க
$gorun concTCP.go12a
listen tcp4:lookup tcp4/12a:nodename nor servname provided,or not known
$gorun concTCP.go-10
listen tcp4:address-10:invalid port

ஒரேயொரு வாயில் தேவையெனில் பின்வரும் கட்டளைவரிகளை பயன்படுத்தி கொள்க
$gorun concTCP.go8001
Serving127.0.0.1:62554
Serving127.0.0.1:62556
ஒன்றுக்குமேற்பட்ட இணைப்புஎனில் பின்வரும் கட்டளைவரிகளை பயன்படுத்தி கொள்க
$ netstat-anp TCP|grep8001
tcp4 0 0127.0.0.1.8001 127.0.0.1.62556 ESTABLISHED
tcp4 0 0127.0.0.1.62556 127.0.0.1.8001 ESTABLISHED
tcp4 0 0127.0.0.1.8001 127.0.0.1.62554 ESTABLISHED
tcp4 0 0127.0.0.1.62554 127.0.0.1.8001 ESTABLISHED
tcp4 0 0*.8001 *.* LISTEN

மேலும் விவரங்களுக்கு https://github.com/mactsouk/opensource.comஎனும் இணையபக்கத்திற்குசென்றறிந்து பயன்படுத்தி கொள்க

மைக்ரோசாப்ட்டின் விண்டோசேவையாளர்ஒருஅறிமுகம்

இந்த மைக்ரோசாப்ட்சேவையாளர் இயக்கமுறைமைஎன்பது ஒரு சேவையாளர் வாய்ப்பாகும் இது YYMM வடிவமைப்பில்அரையாண்டு சேவையென்றும் (Semi-Annual Channel (SAC)),YYYY என்ற வடிவமைப்பில் நீண்டகால சேவையென்றும் (Long-Term Servicing Channel (LTSC))இரண்டுசேவைகளாக பிரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன இவற்றுள் அரையாண்டு சேவையானது நீண்டகால சேவையுடன் ஒத்தியங்காது மேலும் இது வரைகலை இடைமுகப்பு செய்யஇயலாது ஆனால் நீண்டகாலசேவையானது அனைத்து வடிவமைப்புடன் ஒத்தியங்கிடும் மேலும் இது வரைகலை இடைமுகப்பு செய்திடும் வசதிகொண்டது அதுமட்டுமல்லாது அவ்வப்போது புத்தாக்கம்செய்துகொள்ளும் தன்மைகொண்டது ஆயினும் இதனுடைய LTSC Server Core பதிப்பானது வரைகலை இடைமுகப்புடன் ஒத்தியங்காது இந்த நீண்டகாலசேவையானது Essential, Standard ,Datacenter ஆகிய மூன்றுவகை பதிப்புகளில்ஐந்தாண்டு பயன்பாடாக கிடைக்கின்றது தேவையெனில் மேலும் ஆறாண்டுகளுக்கு இதனை விரிவுபடுத்தி கொள்ளமுடியும்

Azure AppServicesஐ பயன்படுத்தி ஒரு இணையபயன்பாட்டினை நாமேஉருவாக்கிடலாம்

தற்போது இயங்குதளம் சேவையாளர் (Platform as a Service(PaaS))என்பது மிகபிரபலமானதாக உள்ளது இந்த PaaS எனும் சேவையாளரை உருவாக்குவதில் .நெட்,ஜாவா, ரூபி,பைத்தான் ,பிஹெச்பி ஆகியவை கணினிமொழிகள் முக்கியபங்காற்றுகின்றன.இவ்வாறான கணினிமொழிகளின் அடிப்படையிலானMicrosoft Azureஎன்பது மேககணினி சேவையாளரை உருவாக்குவதில் மிகமுதன்மையாக விளங்குகின்றது Azure AppServices ஆனது Free, Shared, Basic, Standard, Premiumஆகிய ஐந்துவகையில் கிடைக்கின்றதுமுதலில் https://azure.microsoft.com/en-us/try/app-service/ எனும் இணையபக்கத்திற்கு சென்று அதில்webAppஎன்பதை தெரிவு செய்து கொண்டு continueஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்தபின்னர் விரியும் திரைகளில் கூறும் வழிமுறைகளை பின்பற்றினால் போதும் இந்த சேவைஎவ்வாறு செயல்படுகின்றதுஎனதெரிந்து அறிந்து கொள்ளலாம் நாமேமுயன்று இணைய பயன்பாட்டினை உருவாக்கிடவிழைந்தால் https://portal/azure.com/ எனும் இணையபக்கத்திற்கு சென்று அதில்Free, Shared, Basic, Standard, Premiumஆகிய ஐந்துவகையில் நாம் விரும்பும் அனுமதிபெற்றதை தெரிவுசெய்து கொள்க பின்னர் இடதுபுறபலகத்தில் உள்ளApp Service Plan(ASP) என்பதையும் தொடர்ந்து +Addஎன்பதையும் தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் திரையில் இந்த ASPஇக்கு ஒரு பெயரையும் New Resource Groupஇற்கு ஒரு பெயரையும் இயங்கவேண்டிய இயக்கமுறைமையின் பெயரையும் இயங்கவேண்டிய இடத்தையும் Priceing tier ஐயும் குறிப்பிட்டபின்னர் Createஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இதன்பின்னர் இந்த ASP தயாராக இருக்கின்றது எனில்Azure Dashboardஇல் இதனைசரிபார்த்து கொள்க மேலும்இதனை படித்தறி்ந்து பயன்படுத்தி கொள்வதற்கு https://etutorialsworld.com/ எனும் இணையமுகவரிக்கு செல்க

Minioஎனும்சேவையாளர் அறிமுகம்

பொதுவாக நாமனைவரும் தரவுதளம் என்றவுடன் அது அட்டவணை, நெடுவரிசை கிடைவரிசை ஆகியவற்றை கொண்டு முன்கூட்டியே கட்டமைக்கப்பட்டது என்றே தவறாக எண்ணிவருகின்றோம் உண்மையில் தற்போதைய நவீணகால கணினி பயன்பாடுகளால் உருவப்படங்கள், கானொளிபடங்கள்,ஒலிக்கோப்புகள், உரைக்கோப்புகள், தாங்கிகள் என பல்வேறு வகையான தரவுகளையும் இந்த தரவுதளமானது கையாளுவதற்கான திறன்பெற்றிருக்க வேண்டியுள்ளது அவ்வாறான நிலையில் Minioஎனும் பொருள்நோக்கு சேவையாளர் தரவுதளமானது மிகுந்த பேருதவியாக இருந்துவருகின்றது இது உள்ளூர் வாடிக்கையாளர் சேவையாளராகவும், AmazonS3சேவையாளராகவும் வாடிக்கையாளர்களுக்கு பயன்படுகின்றது மேலும் இது அப்பாச்சி பொதுஅனுமதியின்படி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிடபட்டுள்ளது இதனைநம்முடைய தேவைக்கு ஏற்பபயன்படுத்தி கொள்வதற்காக இதனுடைய https://www.minio.io/downloads/minio-server/ எனும் இணைய தளபக்கத்திலிருந்து சேவையாளருக்கான minio.exe எனும் கோப்பினையும் , வாடிக்கையாளருக்கான mc.exeஎனும் கோப்பினையும் பதிவிறக்கம் செய்துகொள்க அதன்பின்னர் சேவை மையத்தில் சேவையாளர் கணினியில்minio.exe எனும் கோப்பினையும் வாடிக்கையாளர் கணினிகளில் mc.exeஎனும் கோப்பினையும் நிறுவுகைசெய்துகொள்க வாடிக்கையாளரும் சேவையாளரும் ஒரே கணினியில் செயல்படச்செய்யவேண்டுமெனில் http://localhost:9000/ எனும் முகவரிக்கு செல்க மேலும் விவரங்களுக்கு https://www.minio.io/எனும் இணைய பக்கத்திற்கு செல்க

Air Tableஎனும் தொடர்புதரவுதள மாக செயல்படும் விரிதாள் சேவையை பயன்படுத்தி கொள்க

இந்த Air Table ஆனது நெடுவரிசை கிடைவரிகளை கொண்டதொரு விரிதாள் போன்றிருந்தாலும் மிகத்திறனுடைய தொடர்புதரவுதளமாக கட்டணமில்லாமல் நாமனைவரும் எளிதாக பயன்படுத்திகொள்ளும் வண்ணம் மிகச்சிறந்ததாக விளங்குகின்றது இந்த சேவையை பயன்படுத்தி கொள்வதற்காக இந்த தளத்தின் முகப்பு பக்கத்திற்குவந்து சேர்ந்தவுடன் சிறுவர்கள்கூட மிக எளியதாக இந்த தளத்தின் சேவையை எவ்வாறு பயன்படுத்தி கொள்ளமுடியும் என்பதற்கான கானொளி இயங்குவதை காணலாம் அதனை தொடர்ந்து இந்த தளத்தின் கீழ்பகுதிக்கு சென்றபின் அங்குள்ள Take the Tour எனும் நீலவண்ண பொத்தானை சொடுக்குக உடன் இந்த தளத்தின் சேவையை பயன்படுத்தி கொள்வதற்கான planning a move, job searching , managing projects என்பனபோன்ற பல்வேறு வசதி வாய்ப்புகளை கூறும் மற்றொரு கானொளி காட்சியை காணலாம் மிகமுக்கியமாக இந்த அட்டவணையில் நெடுவரிசைகள் கிடைவரிசைகள் மட்டுமல்லாது புதிய புலங்களை இணைத்தல், தேர்வுசெய்பெட்டியை சேர்த்தல், கீழிறங்கு பட்டியை சேர்த்தல், கோப்புகளை இணைத்தல் ஆகிய அனைத்து பணிகளையும் எளிதாக ஒரு தொடர்புதரவுதளம்போன்று இந்த அட்டவணையான விரிதாளில் செய்திடமுடியும் இதில் மிகவும் குறைந்த காலஅவகாசமான ஒருசில நிமிடங்களில் இதனுடைய விரிதாளிலிருந்து நம்முடைய சொந்த தரவுதளத்தினை உருவாக்கி கொள்ளமுடியும் மிகமுக்கியமாக நம்முடைய ஸ்மார்ட்போன் எனும் திறன்பேசி வாயிலாக இந்த Air Table என்பதன் சேவையை பயன்படுத்தி கொள்ளமுடியும் வாருங்கள் மிகத்திறனுடைய தொடர்புதரவுதளமாக செயல்படும் http://www.airtable.com/ எனும் இணைய தளபக்கத்தின் சேவையை இன்றே பயன்படுத்தி கொள்க

Bluemix எனும் சேவையாளர் ஒரு அறிமுகம்

இது ஒரு திறமூல செந்தரமான மேககணினிஅடிப்படையில்செயல்படும் பயன்பாடுகளை உருவாக்கி பராமரித்திடஉதவும் Platform as a Service (PaaS) ஆக கருதப்படும் சேவையாளராகும் இது மேம்படுத்துநர்களுக்கு ஒரு முகப்பு பக்கத்தை வழங்கி அதன்வாயிலாக சேவைகளையும் பயன்பாடுகளைும் உருவாக்கி பராமரித்து கண்கானித்திட உதவுகின்றது இது ஜாவா, பைத்தான்,ரூபீஆன்ரெயில்,பிஹெச்பி, நோட்.ஜோஎஸ் ஆகிய கணினிமொழிகளை ஆதரிக்கின்றது இது ஐபிஎம் நிறுவனத்தின் மென்பொருள்தளத்தின்மீது Infrastructure as a Service(IaaS) என்றவாறு கட்டமைக்கப்-பட்டுள்ளது. இது Cloud Foundry ஐ திறமூல PaaS ஆக பயன்படுத்தி கொள்கின்றது அதனால் குறிமுறைவரிகளை Cloud Foundry வாயிலாக மிகப்பாதுகாப்பாக செயல்படச்செய்கின்றது இது பல்வேறுதளங்களையும் பல்வேறு கணினி-மொழிகளையும ஆதரிக்கின்றது இதில் குறைந்த பதிவு செயல்களைகொண்டே இதனைபயன்படுத்தி கொள்ளமுடியும் இதனை முதலில் 30 நாட்கள் மாதிரிசெயலாக பயன்படுத்தி கொள்ளலாம் அதன்பின்னர் ஒவ்வொரு சேவைக்கும் குறைந்த கட்டணைத்தையே கோருகின்றது இது செல்லிடத்து பேசிகளியே செயல்படும் திறன்மிக்கது மிகவிரைவாக கட்டமைவுசெய்வதையும் இயங்குவதையும் உறுதிபடுத்திடுகின்றது
இதனை பயன்படுத்தி கொள்ள https://console.ng.bluemix.net/registration/ எனும் தளத்திற்கு சென்று உங்களுக்கென தனியாக கணக்கு ஒன்றினை உருவாக்கிகொள்க பின்னர் இந்த தளத்திற்குள் உள்நுழைவுசெய்திடுக அதன்பின்னர் நம்முடைய பகுதியைEnvironment, dev,test,uat, pre-prod prod ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கிகொண்டு I am ready.Good to Go என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்நமக்கு ஒதுக்கப்பட்ட முகப்பு பக்கத்தில் Cloud Foundry 2GB,Virtual Server 0 ஆகிய அனைத்தும் சரியாக இருக்கின்றது எனில்Create app எனும் பொத்தானை சொடுக்குக . அதனை தொடர்ந்து நாம் இணையபக்கத்தினை உருவாக்கவிருப்பதால் ஜாவா என்பதை தெரிவுசெய்து கொண்டுContinue எனும் பொத்தானையும் பின்னர் மற்றவழிமுறைகளையும் பின்பற்றி இறுதியாக Finishஎனும் பொத்தானையும் சொடுக்குதல்செய்து இந்த பணியை முடிவிற்கு கொண்டுவருக . உடன் நாம்விரும்பிய நமக்கான இணைய பயன்பாடு ஒன்று உருவாகி நாம் பயன்படுத்தி கொள்வதற்காக தயாராகிவிடும்