ஆர்டினோவுடன் ஒரு ப்ளாட்டரை எவ்வாறு கட்டமைப்பது

தானியங்கியாக வரைபடத்தை வரையஉதவுவதுதான் ப்ளாட்டராகும் கட்டற்ற வன்பொருளையும் கட்டற்ற மென்பொருளையும் கொண்டு ஒரு சிறந்த DIY plotterஐ எவ்வாறு வடிவமைத்து கட்டமைத்து செயல்படுத்துவது என இப்போது காண்போம் இதற்காக FabScan shield,SilentStepSticks,SilentStepStick protectors,Stepper motors,Linear guide rails ,Wooden base plate, Wood screws ,GT2 belt ,GT2 timing pulley ஆகிய கட்டற்ற வன்பொருட்கள் போதுமானவையாகும்

படத்தில் காண்பித்தவாறு மிக கவணமாக இவைகளை இணைத்திடவேண்டும் பின்னர் GitHub தயாராக உள்ள X-Y plotter இற்கான மென்பொருளைபதிவிறக்கம் செய்துகொள்க StepStickஎன்பதுடன் stepper motorஐ இயக்கி செயல்படுத்திடுவதற்காக முதலில் உயர்ந்த பின்னர் தாழ்ந்த சைகைகளை ஆர்டினோவின்படி அனுப்பிடவேண்டும் அதற்கான குறிமுறைவரிகள் பின்வருமாறு
digitalWrite(stepPin, HIGH);
delayMicroseconds(30);
digitalWrite(stepPin, LOW);
இங்கு stepPin என்பது stepper என்பதற்கான பின் எண் ஆகும் பொதுவாக பின்எண் 3 ஆனது மோட்டார் எண்1 இற்கானது மிகுதியான பின் எண் 1 முதல் 6 வரையில் மோட்டார் எண்2 இற்கு ஒதுக்கப்பட்டுள்ளது முதலில் கண்டிப்பாக stepper ஐ இயலுமை செய்திடவேண்டும் அதற்கானகுறிமுறைவரி பின்வருமாறு
digitalWrite(enPin, LOW);
இங்கு LOW என்பது மோட்டாரை இயலுமை செய்கின்றது HIGHஎன்பது மோட்டாரை முடக்கிவிடுகின்றது Pin not connectedஎன்பது மோட்டாரை இயலுமை செய்கின்றது ஆனால் இயங்காமல் வைத்திருக்கின்றது அதன்பின்னர் ப்ளாட்டரின் இயங்குவழியை முடிவுசெய்திடவேண்டும் இதற்கான குறிமுறைவரி பின்வருமாறு
digitalWrite(dirPin, direction);
இதனை தொடர்ந்து மோட்டார்களை இயங்கச்செய்தல் ப்ளாட்டரை சரியான வழியில் இயங்கசெய்தல்
ஆகியவற்றின் செயலிகளும் பின்களுக்குமான அட்டவணை பின்வருமாறு
Function
Motor1
Motor2
Enable
2
5
Direction
4
7
Step
3
6
இதற்கடுத்ததாக வெளியீட்டினை setup()எனும் பகுதியில அமைத்திடவேண்டும் இதற்கான குறிமுறைவரிகள் பின்வருமாறு
pinMode(enPin1, OUTPUT);
pinMode(stepPin1, OUTPUT);
pinMode(dirPin1, OUTPUT);
digitalWrite(enPin1, LOW);
இந்த அடிப்படையைவைத்து நாம் stepperநகர்த்தமுடியும் ஆயினும் முழுவதுமாக நகர்ந்து சென்று திரும்ப வருவதற்காக
totalRounds = …
for (int rounds =0 ; rounds < 2*totalRounds; rounds++) {
if (dir==0){ // set direction
digitalWrite(dirPin2, LOW);
} else {
digitalWrite(dirPin2, HIGH);
}
delay(1); // give motors some breathing time
dir = 1-dir; // reverse direction
for (int i=0; i < 6400; i++) {
int t = abs(3200-i) / 200;
digitalWrite(stepPin2, HIGH);
delayMicroseconds(70 + t);
digitalWrite(stepPin2, LOW);
delayMicroseconds(70 + t);
}
}
எனும் குறிமுறைவரிகள் பயன்படுகின்றன இதில் ஒரு stepperமட்டும் இடதுபுறமும்வலதுபுறமும் ஸ்லைடர் நகர்ந்து செல்லமுடியும் ஆனால் ப்ளாட்டரில் வரைவதற்காக X-Y ஆகிய இருஅச்சுகளின் அடிப்படையில் இயங்கவேண்டும் இதற்காக
"X30|Y30|X-30 Y-30|X-20|Y-20|X20|Y20|X-40|Y-25|X40 Y25
என்றவாறான கட்டளைவரி பயனுள்ளதாக அமையும் இவ்வாறு கட்டமைத்திடுதற்கான கானொளி காட்சி https://twitter.com/pilhuhn/status/949737734654124032/ என்ற முகவரியில் உள்ளது இந்தகானொளி காட்சிகளை கண்டு அவ்வாறே செயற்படுத்தி பயன்றிடுக

கோ எனும் கணினிமொழியில் கோப்புகளை நகலெடுத்திடும் வழிமுறை

கோ எனும் கணினிமொழியில் கோப்புகளை நகலெடுத்து கொண்டுவந்து சேர்த்திடுவதற்காக பல்வேறு வழிமுறைகள் உள்ளன அவற்றுள் இந்த கோஎனும் கணினிமொழியின் துவக்கப்பதிப்புகளின் நூலகத்தில் உள்ள செயலியான io.Copy()என்பதை கொண்டு செயல்படுத்திடலாம் இது முதலில்உள்ளீடு செய்திடும் கோப்பினை உடனடியாக படித்தறிந்து கொண்டு அதனடிப்படையில் வேறொருகோப்பினை எழுதுகின்றது இவ்வாறு கோப்பினை நகலெடுத்து பிரிதொரு கோப்பாக எழுதி உருவாக்குவதற்கான cp1.goஎனும் குறிமுறைவரிகள் பின்வருமாறு
func copy(src, dst string) (int64, error) {
sourceFileStat, err := os.Stat(src)
if err != nil {
return 0, err
}
if !sourceFileStat.Mode().IsRegular() {
return 0, fmt.Errorf(“%s is not a regular file”, src)
}
source, err := os.Open(src)
if err != nil {
return 0, err
}
defer source.Close()
destination, err := os.Create(dst)
if err != nil {
return 0, err
}
defer destination.Close()
nBytes, err := io.Copy(destination, source)
return nBytes, err
}
இதனைபரிசோதித்து பார்த்திடும்போதுos.Stat(src) எனும் நடப்பு கோப்பானது நகலெடுக்கப்பட்டு sourceFileStat.Mode().IsRegular() எனும் வழக்கமான கோப்பாக செய்யப்படுகின்றது தேவையெனில் இதனை திறந்து படித்து சரிபார்த்து கொள்ளமுடியும் இதில் நகலெடுத்து கொண்டுவந்து சேர்த்திடும்அனைத்து செயல்களும் io.Copy(destination, source)எனும் கட்டளைவரியில் செயல்படுத்தப்படுகின்றது இந்த பணி-முடிவடையும் போது இதுவரை எத்தனை பைட்கள் நகலெடுக்கப்பட்டன அவ்வாறான செயலின்போது ஏற்பட்ட பிழைகள்யாவை எனும்பிழைச்செய்தி பொதுவாக திரையில் காண்பிக்கும்ஆனால் கோஎனும் மொழியில் இவ்வாறான பிழைமதிப்பானது nilஎன்றே காண்பிக்கும்இந்த குறிமுறைவரிகளை செயல்படுத்தினால் அதனுடைய வெளியீடு பின்வருமாறு இருக்கும்
$ go run cp1.go தொடர்ந்து பின்வருமாறான இருகட்டளைவரிகளை செயல்படுத்திடுக
$ go run cp1.go fileCP.txt /tmp/fileCPCOPY , $ diff fileCP.txt /tmp/fileCPCOPY
அதனைதொடர்ந்து அதன் வெளியீடு பின்வருமாறு இருக்கும்
Copied 3826 bytes!
இந்த io.Copy எனும் செயலி பற்றி மேலும் விவரங்களுக்கு https://golang.org/pkg/io/என்ற இணையபக்கத்திற்கு சென்றறிந்து கொள்க

உபுண்டு எனும் லினக்ஸ் இயக்கமுறைமை முதலில் செயல்படுமாறு துவங்க செய்வதற்காக

நம்மில் ஒருசிலர் உபுண்டு ,விண்டோ ஆகிய இரு இயக்கமுறைமைகளையும் ஒரே கணினியில் நிறுவுகை செய்து இயக்கி பயன்பெறுவோம் இவ்வாறான கணினியில் துவக்கத்தின்போது உபுண்டு அல்லது விண்டோ ஆகிய இரண்டில் எதனை நாம் பயன்படுத்தவிழைகின்றோம் என்பதற்கான பட்டியல் தோன்றி அதில் நாம் தெரிவுசெய்திடும் இயக்கமுறைமை துவங்கி செயல்படுமாறு அமைத்திருப்போம் ஒருசில நேரங்களில் இவ்வாறான வாய்ப்பிற்கான திரை தோன்றாமலேயே நேரடியாக விண்டோ இயக்கமுறைமை செயல்படத்துவங்கிவிடும் அதற்கு பதிலாக கணினியின் துவக்கத்தின்போது உபுண்டு அல்லது விண்டோ ஆகிய இரண்டில் எதனை நாம் பயன்படுத்த விழைகின்றோம் என்ற பட்டியில் தோன்றினால் நல்லது என விரும்புவோம் அதற்காக பின்வரும் படிமுறைகளை பின்பற்றிடுக
படிமுறை1 உபுண்டு இயக்கமுறைமை நேரடியாக செயல்படும் யூஎஸ்பி(Live USB) ட்ரைவை அதற்கான வாயிலில் செருகுக
படிமுறை2 தொடர்ந்து கட்டளைவரி சளரத்தினை திறந்து அதில்
$Sudo apt-get-install efibootmgr
என்றவாறு கட்டளைவரியை உள்ளீடுசெய்து உள்ளீட்டு விசையை அழுத்துக பின்னர் வரியம் திரையில் நம்முடைய கடவுச்சொற்களை உள்ளீடு செய்துகொண்டு Yஎன்ற பொத்தானை அழுத்துக உடன் பின்வருமாறான விவரங்களுடன் திரை தோன்றிடும்
BootCurrent: 0001
Timeout: 0
Bootorder: 0001,0002,0003
Boot 0001 Window
Boot 00002 Ubuntu
Boot 0003 EFI USB Drive
தற்போது கணினியானது எந்த வரிசைகிரமத்தில் துவங்குகின்றது என காண்பிக்கின்றது இதன்பின்னர் பின்வரும் கட்டளைவரியை உள்ளீடுசெய்திடுக
$Sudo efibootmgr -o 0002,0001,0003
தொடர்ந்து கட்டளைவரி சளரத்திலிருந்து வெளியேறுக மேலும் யூஎஸ்பி ட்ரைவையும் வெளியிலெடுத்திட்டபின்னர் கணினியை மறுதுவக்கம் செய்திடுக உடன் கணினியின் இயக்கம் துவங்கி நாம் விரும்பியவாறான பட்டி திரையில் தோன்றி நாம் எந்த இயக்கமுறைமையை துவங்க விரும்புகின்றோம் எனக்கோரிடுவதை காணலாம்

ஒருPDFகோப்பினை அதன்தரம் குறையாமல் சிறியஅளவாக எவ்வாறுகுறைப்பது

கணினியின் அனைத்துவகையான தகவல்களையும் எந்தவிடத்திற்கும் கொண்டுசென்று கையாளுவதற்காகவும் பகிர்ந்து கொள்வதற்காகவும் கையடக்க PDF வடிவமைப்பு கோப்பு மிகச்சிறந்ததாக விளங்குகின்றது மின்னஞ்சல் வாயிலாக PDF வடிவமைப்பு கோப்பினை பகிர்ந்து கொள்ளும்போது இதனுடைய அளவுகுறைவாக இருந்தால் எளிதாக இருக்கும் என்ற நிலையில் அதன் தரம்குறையாமல் இந்த PDF வடிவமைப்பு கோப்பின் அளவை எவ்வாறு குறைப்பது என இப்போது காண்போம்
1முதல்வழிமுறை கோப்புகளைPDF வடிவமைப்பிற்குமாற்றிடும் பயன்பாட்டு கருவிகளை பயன்படுத்திகொள்வதுதான் மிகசிறந்தவழியாகும் இதற்கான மென்பொருளை நம்முடைய கணினியில் நிறுவுகை செய்தால் போதுமானதாகும் அவ்வாறானவைகளில்PrimoPDF என்பன போன்ற இணையவழியாக செயல்படும் கருவிகள் PDF வடிவமைப்பு கோப்புகளை போதுமானஅளவாக குறைப்பதற்காக பெருமளவு பயன்படுகின்றன

முதலில்இந்த பயன்பாட்டு கருவியை http://primopdf .com/எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவுகைசெய்து கொள்க பின்னர் அளவுகுறைக்கவிரும்பும் PDF கோப்பினை இந்த கருவியின் வாயிலாக திறந்து கொண்டு அதில் Print எனும் கட்டளையை செயல்படுத்திடுக உடன்விரியும் உரையாடல்பெட்டியில் printer இன் பெயராக PrimoPDF என்பதை தெரிவுசெய்து கொள்க அதன்பின்னர் இதனுடையProperties என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் கோப்பின் அளவை முடிந்தவரையில் சிறியதாகவும் தரம் குறையாமலும் இருப்பதற்காக போதுமான அளவை மட்டும் தெரிவுசெய்து கொள்க தொடர்ந்து முதலில் apply என்ற பொத்தானையும் அதனை தொடர்ந்து Print என்ற இரண்டாவது பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குகஉடன் நாம் தெரிவுசெய்த அளவிற்குPDF கோப்பின் அளவு குறைக்கப்பட்டவிடும்
2.இரண்டாவது வழிமுறை இணையத்தில் நேரடியாக PDF கோப்பின் அளவினை குறைப்பதற்காக ஏராளமானகருவிகள்உள்ளனஅவைகளுள் SmallPDF என்பது மிகச்சிறந்த கருவியாகும் இதனுடைய சேவையை http://smallpdf.com எனும் இணையதள முகவரியில் பெறலாம்எந்தவொரு PDF கேப்பினையும் எவ்வளவு அளவாக இருந்தாலும் நாம் கோருகின்ற அளவிற்குஅளவு குறைத்திடமுடியும் எத்தனை கோப்புகளையும் இவ்வாறு செயற்படுத்தி அவைகளின்அளவை குறைத்திடமுடியும்.

இதில்முதலில் http://smallpdf.com எனும் இந்த தளத்திற்கு செல்கபின்னர் நாம்அளவை குறைக்க விரும்பும்கோப்பினை இந்ததளத்திற்குபதிவேற்றம்செய்திடுக அதன் பின்னர் எந்தஅளவு குறைத்திடவேண்டும்எனதெரிவுசெய்து கொள்க உடன் நம்முடைய கோப்பு நாம் விரும்பியஅளவு குறைக்கப்பட்டுவிடும் பிறகு அந்த கோப்பினை தெரிவு செய்து கொண்டு Download எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
3.மூன்றாவது வழிமுறை Adobe Acrobat என்ற பயன்பாட்டின வாயிலாக கோப்பின் அளவைகுறைத்திடலாம்

இந்த பயன்பாட்டின் வாயிலாக நம்முைடைய கோப்பினை திறந்து கொள்க பின்னர் திரையின் மேலே கட்டளைப்பட்டையில் File எனும் கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் பட்டியலில் Save as other எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்விரியும் இதனுடைய துனைப்பட்டியில் Reduced Size PDF எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக இதன்பின்னர் விரியும் திரையில் தேவையானஅளவு தெரிவுசெய்து கொண்டு newer versions என்பதையும்தெரிவுசெய்து கொண்டு முதலில் apply என்ற பொத்தானையும் அதனை தொடர்ந்துokஎன்ற இரண்டாவது பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குகஉடன் நாம் தெரிவுசெய்த அளவிற்குPDF கோப்பின் அளவு குறைக்கப்பட்டவிடும்மேலும் Apply to Multiple என்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் ஒன்றிற்குமேற்பட்டPDF கோப்புகளி்ன் அளவு குறைக்கப்-பட்டிருப்பதை காணலாம்
4 நான்காவது வழிமுறை இறுதியாக 7zip ,winrar ஆகிய பயன்பாடுகளை பயன்படுத்தி PDF கோப்புகளி்ன் அளவுகுறைத்து சுருக்கிமற்றவர்களுடன் பகிர்ந்து கொள்க

நீண்டகானொளி படத்தினை எவ்வாறு சிறுசிறு கானொளி படக்காட்சி துனுக்குகளாக செய்வது

இதற்காக Adobe Premiere எனும் பயன்பாடு உதவிகரமாக உள்ளது இந்நிலையில் நீண்டகானொளி படக்காட்சியை ஏன் இவ்வாறு சிறுதுனுக்குகளாக ஆக்கவேண்டும்என்ற கேள்வி நம்மனைவரின் மனதிலும் எழும் நிற்க.ஏனெனில் ட்விட்டர் போன்ற சமுதாய இணையதளத்தில் சிறுதுனுக்கு கானொளி படத்தினை மட்டுமே மிககுறைவான நேரத்தில் பதிவேற்றம்செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியும் நீண்டநெடிய கானொளி படங்களை மிககுறைந்த நேரத்தில் பதிவேற்றம் செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் அதிகசிரமம் ஏற்படும் இவ்வாறு மிகநீண்ட கானொளி படங்களை வெட்டிசிறுதுனுக்கு கானொளி காட்சிகளாக மாற்றுவதற்காக பின்வரும் படிமுறைகளை பின்பற்றிடுக
படிமுறை1 முதலில்நம்முடைய கணினியில்Adobe Media Encoder CC 2018iஎன்ற பயன்பாடு நிறுவுகை செய்யப்பட்டுள்ளதாவென உறுதிபடுத்தி கொள்க தொடர்ந்து Adobe Premiere என்ற பயன்பாட்டினை செயல்படச்செய்க உடன்தோன்றிடும் திரையில் new project என்றும் அதற்கு ஒரு பெயரையும் தெரிவுசெய்து கொள்க பின்னர் Window > Workspaces > Editingஎன்றவாறு கட்டளைகளைசெயல்படுத்துக அல்லது Alt + Shift + 5என்றவாறு சுருக்குவழிவிசைகளை அழுத்துக .அதன்பின்னர் File > Importஎன்றவாறு கட்டளைகளைசெயல்படுத்தியபின்விரியும் திரையில் தேவையானகானொளி காட்சிபடக்கோப்பினை தேடிபிடித்து தெரிவுசெய்து கொள்க அல்லது Project Clips பலகத்திற்குள் தேவையானகானொளி காட்சிபடக்கோப்பினை கொண்டு வந்து சேர்த்திடுக பின்னர் Project Clips எனும் பலகத்திலிருந்து இந்த கானொளி படகாட்சி கோப்பினை பிடித்து இழுத்துவந்து Timelineஎன்ற பகுதியில்விட்டிடுக
படிமுறை2 அதனை தொடர்ந்து நம்முடைய சுட்டியின் உதவியால் இடதுபுற அல்லது வலதுபுற அம்புக்குறியை பிடித்து நகர்த்துவதன்வாயிலாக நகர்த்தி சென்று மிகச்சரியாக கானொளி படகாட்சியின் நாம் வெட்டவிரும்பும் இடமானPlayhead Positionசெல்க பின்னர் Sequence > Add Editorஎன்றவாறு கட்டளைகளைசெயல்படுத்துக அல்லது Cmd/Ctrl + Kஎன்றவாறு சுருக்குவழிவிசைகளை அழுத்துக பிறகு தேவையற்ற கானொளி படக்காட்சியின் மீது இடம்சுட்டியைவைத்து தெரிவுசெய்து கொண்டு விசைப்பலகையில்Deleteஎன்ற விசையை அழுத்தி வெட்டிவிடுக இவ்வாறு பலமுறை தேவையற்ற பகுதியை வெட்டிகொண்டே வந்தால் நம்முடைய கானொளி படகாட்சியானது சிறுசிறுதுனுக்குகளாக ஆகிஇருப்பதை காணலாம்
படிமுறை3 கானொளிபடகாட்சியின் துவக்கபகுதிக்கு இடம்சுட்டியை நகர்த்திசென்று ஒவ்வொரு துனுக்கின் துவக்கத்திலும் இடம்சுட்டியை வைத்துகொண்டு Markers > Mark In என்றவாறு கட்டளைகளைசெயல்படுத்துக அல்லது Iஎன்றவாறு சுருக்குவழிவிசையை அழுத்துக அவ்வாறே ஒவ்வொரு துனுக்கின் முடிவுப்பகுதியிலும் இடம்சுட்டியை வைத்துகொண்டு Markers > Mark Outஎன்றவாறு கட்டளைகளைசெயல்படுத்துக அல்லது Oஎன்றவாறு சுருக்குவழிவிசையை அழுத்துக இதன்பின்னர் இதனை வரிசைகிரமமாக பதிவிறக்கம் செய்வதற்கு தயார்செய்வதற்காக File > Export > Mediaஎன்றவாறு கட்டளைகளை செயல்படுத்துக அல்லது Cmd/Ctrl + Mஎன்றவாறு சுருக்குவழிவிசைகளை அழுத்துக உடன் விரியும் உரையாடல்பெட்டியில்Output Name என்பதன்கீழ் நம்முடைய கானொளிகாட்சியின் பெயர் இருப்பதைகாணலாம் அதனை தெரிவுசெய்து சொடுக்குகபின்னர் இந்த கோப்பிற்கு வேறுபெயரினை உள்ளீடுசெய்திடுக அல்லது Export and save என்ற பொத்தானை சொடுக்குதல்செய்து துனுக்குகோப்பு கள் ஒவ்வொன்றாக சேமித்துகொண்டே வருக அல்லது Queueஎன்பதை சொடுக்குதல் செய்து குழுவாக வரிசைகிரமமாக சேமித்துகொள்க
இந்நிலையில் Adobe Media Encoder என்றபயன்பாடு தானாகவேசெயல்படத்துவங்கிடும் இந்நிலையில்Match Source – High bitrate. என்பதைமட்டும் சரியாக H.264என்ற இயல்பு-நிலையில் அமைத்திடுகஅல்லது தேவையான அளவை தெரிவுசெய்து கொள்க இறுதியாக பச்சை வண்ணPlay எனும் பொத்தானை சொடுக்குக அல்லதுEnter என்றவிசையை அழுத்தி கானொளி காட்சி துனுக்குகளைபதிவிறக்கும் செய்து கொள்க

ஒரே கணினியில் ஒன்றிற்குமேற்பட்ட கணினித்திரையை இணைத்திடலாம்

வரைகலை பயன்பாட்டாளர் , தரவுஆய்வாளர், நிரல்தொடலாளர் போன்ற எந்தவொரு பயன்பாட்டாளர்களுடைய அடிப்படைதேவையே ஒரே கணினியில் ஒன்றிற்கு மேற்பட்ட கணினித்திரையை இணைத்து தோன்றசெய்திட்டால் தங்களுடைய பணியை எளிதாக முடித்திடலாம் என்பதாகத்தான் இருக்கும் அவ்வாறானவர்கள் மிகஎளிதாக ஒரே கணினியில் ஒன்றிற்கு மேற்பட்டகணினியின் திரையை பின்வரும் படிமுறைகளை பின்பற்றி இணைத்து செயல்படச்செய்திடமுடியும்

படிமுறை1.முதலில் நம்முடைய கணினியின் வரைகலை அட்டை(graphicscards) ஆனது ஒன்றுக்குமேற்பட்ட கணினிதிரையை ஆதரிக்கின்றதாவென சரிபார்த்து உறுதிசெய்துகொள்க அடுத்து கணினிக்கும் கணினியின் திரைக்குமான இணைப்புகம்பிகள் DVI , VGA ஆகிய பழையவகை HDMI , DisplayPortஆகிய புதியவகை ஆகியவற்றுள் பொருத்தமானவகையை தெரிவுசெய்து கொள்க பொதுவாக இவ்வாறான இணைப்பானது கணினியின் நேரடியாக வரைகலை அட்டையிலிருந்து அல்லது GPUவிலிருந்து இணைப்பு ஏற்படுத்தவதாக இருக்கும் மேலும் இவ்விணைப்பிற்கான வாயில்கள் மேலிருந்து கீழாக அல்லது இடமிருந்து வலமாக 2 DisplayPort, 1 HDMI, 1 DisplayPort ,1 DVIஆகிய ஐந்துவகை கணினிதிரைகளின் இணப்பு வழங்குவதற்கான வாயில்களை ஆதரிக்குமாறு இந்த வரைகலைஅட்டை வடிவமைக்கப்-பட்டுள்ளது அல்லது ஒரு வாயிலின் வழியாக இருவேறு கணினிதிரைகளை இணைப்பதற்காக splitterஎன்பதை பயன்படுத்திகொள்க

படிமுறை2 இரண்டாவது கணினியின் திரையை மேலேகூறியவாறு பொருத்தமான வகையிலான கம்பியின் வாயிலாக இணைப்பினைஏற்படுத்தியபின்னர் கணினியையும் கணினியின் திரைகளையும்செயலிற்கு கொண்டுவருக தொடர்ந்து தோன்றிடும் திரையில் சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து சூழ்நிலைபட்டியை தோன்றிடசெய்து அதில்Display settings. என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இருகணினிதிரையின் அமைவுகளும் அருகருகேதோன்றிடும் இரண்டாவது கணினி-திரையானது வலதுபுறமாகவா அல்லது இடதுபுறமாகவா என்பதில் தேவையானவாறு சரிசெய்து அமைத்துகொள்க Identifyஎனும் பொத்தானை சொடுக்குதல் செய்து இரண்டாவது கணினிதிரை எந்தவிடத்தில் உள்ளது என அமைத்து கொள்வது நமக்கு குழப்ப-மில்லாமல்இருப்பதற்கு உதவும்.பிறகு Resolution.என்பதை தேடிபிடித்திடுக அதில்Recommendedsetting (அல்லது higher)என்பதை தெரிவுசெய்து கொள்வது நல்லது என பரிந்துரைக்கப்படுகின்றது ஆயினும் நம்முடைய கணினித்திரையானது பழையவகை ஆனால் வரைகலை அட்டை மட்டும் சமீபத்தியது என்றநிலையில் இயல்புநிலையைவிட அதிகஒளிர்வுதிறனை உயர்த்தி கொள்க மேலும் Orientation,Multiple displays,Make this my main displayபோன்றவைகளையும் சரிசெய்து அமைத்துகொள்க
அடுத்து Taskbarஎனும் செயல்பட்டையை இரண்டாவது திரையில் தோன்றிட செய்திட-வேண்டும் அதற்காக start எனும் பட்டியலை தோன்றிடசெய்திடுக அதில் background என தட்டச்சு செய்துஉள்ளீட்டு விசையை அழுத்துக உடன் விரியும் வாய்ப்புகளில் Background settingsஎன்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையை விரிவாக்கம்செய்து Taskbar.என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் Multiple displaysஎன்ற பகுதியை தேடிபிடித்திடுக அதில் Show taskbar on all displays என்பதில்Off எனதெரிவுசெய்திடுக தொடர்ந்து நாம் பயன்படுத்திடும் குறிப்பிட்ட பயன்பாட்டிற்குமட்டும் தேவையெனில் திரையில் தோன்றிடுமாறு செய்திடShow taskbar buttons onஎன்பதை தெரிவுசெய்து கொள்க இதுமட்டு-மல்லாது குறிப்பிட்ட பயன்பாட்டின் பெயரை தோன்றசெய்வதற்காக அல்லது மறையசெய்வதற்காக Combine buttons on other taskbarsஎன்ற வாய்ப்பினையும் தெரிவுசெய்து கொள்க. ஒரே-சமயத்தில் இரண்டு இயக்கமுறைமைகளை செயல்படுமாறு செய்திட$39.99 என்ற விலையில் Synergyஎன்ற பயன்பாட்டினை நிறுவுகை செய்து never use a separate mouse and keyboard comboஎன்பதன் அடிப்படையில் ஒரே விசைப்பலகையையும் சுட்டியையும் இருவேறு இயக்கமுறைகளிலும் பயன்படுத்திகொள்ளமுடியும்

படிமுறை3நாம்விரும்பியவாறு ஒன்றிற்கு மேற்பட்ட கணினியின் திரையை பிரதிபலிக்குமாறுசெய்திடுவதற்காக மீண்டும் Background settingsஎன்ற திரைக்கு செல்க அதில்Choose your picture என்ற வகையின் கீழுள்ள Browseஎனும் பொத்தானை சொடுக்குக பின்னர் விரியும் திரையில் சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை சொடுக்குதல்செய்து சூழ்நிலைபட்டியை தோன்றிடசெய்திடுக அதில் Set for all monitors
அல்லது Set for monitor Xஆகிய இரு பெயர்களுடனான வாய்ப்பில் நாம் விரும்புவதை மட்டும் தெரிவுசெய்துகொள்கமேலும் Google Imagesஎன்பதில்wide backgroundஎன்பதையும் Settings என்பதோடு Toolsஎன்பதையும் தெரிவுசெய்து சொடுக்குக அதனோடுAny size என்பதன் கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து அதில்Larger than and10 MP (3648×2786)என்பதை தெரிவுசெய்து கொள்க இறுதியாக மீண்டும்Browseஎன்பதில் Choose a fitஎன்பதன் கீழுள்ளSpanஎன்ற வாய்ப்பினை தெரிவுசெய்து கொள்க
பிறகு taskbar என்பதன்மீதுசுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை சொடுக்குதல் செய்து சூழ்நிலைபட்டியை தோன்றிடசெய்திடுக அதில் Change Wallpaperஎன்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குகஉடன் விரியும் திரையில் Change Wallpaper அல்லது Remove Wallpaperஆகியஇரண்டில் தேவையான வாய்ப்பினை மட்டும் Layoutஎன்ற வாய்ப்பின் வாயிலாக தெரிவுசெய்து கொள்க
தொடர்ந்து Rainmeterஎன்பதை பதிவிறக்கம் செய்து நிறுவுகைசெய்து கொள்க இதன்பின்னர் நம்முடைய ஒரேகணினியில் ஒன்றிற்கு மேற்பட்ட கணினியின் திரையை நாம் விரும்பியவாறு தானாகவே மாற்றியமைத்து கட்டமைத்து கொள்கின்றது என்றசெய்தியை மனதில் கொள்க

பைத்தான் எனும் கணினிமொழியில் உருவாக்கப்படும் குறிமுறைவரிகளில் எழும் பிரச்சினைகளுக்கு நேர்த்தியான தீர்வைகாணலாம்

ஒருசில வழிமுறைகளை கொண்டு பைத்தான் எனும் கணினிமொழியில் உருவாக்கப்படும் குறிமுறைவரிகளில் எழும் பிரச்சினைகளுக்கு நேர்த்தியான தீர்வைகண்டு மேலும் மேம்படுத்தி கொள்ளமுடியும்
பைத்தான் எனும் கணினிமொழியில் குறிமுறைவரிகளை உருவாக்கிடும்போது இந்த வழிமுறைகளை கொண்டு அக்குறிமுறைவரிகளை மிகமேம்பட்டதாக உயர்த்திகொள்ளமுடியும் எடுத்துகாட்டு குறிமுறைவரிகள் பின்வருமாறு
classMoney:
currency_rates={
‘$’:1,
‘€’:0.88,
}
def__init__(self,symbol,amount):
self.symbol=symbol
self.amount=amount
def__repr__(self):
return’%s%.2f’%(self.symbol,self.amount)
defconvert(self,other):
“”” Convert other amount to our currency “””
new_amount=(
other.amount/self.currency_rates[other.symbol]
*self.currency_rates[self.symbol])
returnMoney(self.symbol,new_amount)
இந்த குறிமுறை வரிகளில் _init__()எனும் வழிமுறையின் வாயிலாக பணத்தினை அதற்கான குறியீட்டின் வாயிலாகவும் பரிமாற்றவிகிதத்தின் வாயிலாகவும் வரையறுத்திடுகின்றோம் தொடர்ந்து _repr__எனும்வழிமுறையின் வாயிலாக அதனை செயல்படுத்திடுகின்றோம். அதனை தொடர்ந்து இதனை அச்சிடமுயலும்போதுMoney எனும் இனத்துடன் Money(‘$’, 2.00) என்றவாறு பணத்திற்கான குறியீட்டுடன் தொகையும் அச்சிடுகின்றது இந்தவழிமுறையானது வெவ்வேறு பணத்திற்கானகுறியீடுகளையும் வெவ்வேறு பணபரிமாற்ற விகிதங்களையும் எளிதாக கையாளுகின்றது என்ற தகவலை மனதில்கொள்க அவ்வாறே வெவ்வேறு உணவுப்-பொருட்களுக்கான பணத்தின் குறியீடுகளையும் அதற்கன பணபரிமாற்ற விகிதங்களையும் இந்த வழிமுறையானது எளிதாக கையாளுகின்றது
>>>soda_cost=Money(‘$’,5.25)
>>>soda_cost
$5.25
>>>pizza_cost=Money(‘€’,7.99)
>>>pizza_cost
€7.99
மேலும்__add__எனும் வழிமுறை நம்முடையMoney எனும் இனத்துடன் இடைமுகம் செய்கின்றது
classMoney:
# … previously defined methods …
def__add__(self,other):
“”” Add 2 Money instances using ‘+’ “””
new_amount=self.amount+self.convert(other).amount
returnMoney(self.symbol,new_amount)
அதுமட்டுமல்லாது இருதொகைகளின்கூடுதலை பின்வருமாறு காணமுடியும்
>>>soda_cost=Money(‘$’,5.25)
>>>pizza_cost=Money(‘€’,7.99)
>>>soda_cost + pizza_cost
$14.33
>>>pizza_cost + soda_cost
€12.61
என்றவாறு புதியதாக தொகைக்கான கூடுதல் அந்தந்த குறியீடுகளின் அடிப்படையில் காணமுடியும் இங்கு __add__எனும் வழிமுறைக்கு பதிலாக +எனும்கூடுதல் குறியீடு அதே பணியை சிறப்பாக செய்கின்றது
இரு தொகைகளை கழித்துவிடை காண __sub__ எனும் வழிமுறையும் பெருக்கிவிடை காண __mul__எனும் வழிமுறையும் உதவுகின்றன
பட்டியலில் குறிப்பிட்டதை காண __getitem__எனும் வழிமுறை பயன்படுகின்றது உதாரணமாக
>>>d={‘one’:1,’two’:2}
>>>d[‘two’]
2
>>>d.__getitem__(‘two’)
2
அதேபோன்று__len__()எனும் வழிமுறையானது
classAlphabet:
letters=’ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ’
def__len__(self):
returnlen(self.letters)
>>>my_alphabet=Alphabet()
>>>len(my_alphabet)
26
என்றவாறு காண உதவுகின்றதுஇவ்வாறு பைத்தான் எனும் கணினிமொழியில் முன்கூட்டியே கட்டமைக்கப்பட்டுள்ள ஒரு சில வழிமுறைகளை கொண்டு நம்முடைய குறிமுறைவரிகளில் எழும் பிரச்சினைகளுக்கு நேர்த்தியான தீர்வைகண்டுமேம்படுத்தி கொள்க

Previous Older Entries