வருங்காலத்தில் AI எனும் செயற்கை நுண்ணறிவின் பயன்கள்

AI என சுருக்கமாக அழைக்கப்படும் செயற்கைநுண்ணறிவை(Artificial Inteligent) பற்றிய வரையறையும் அதன் புகழையும் கடந்தகாலங்களில் நாம் விவாதித்தோம் அதனைதொடர்ந்து அதனுடைய தாக்கம் என்னவாகவிருக்கும் எனஅறிந்து கொள்ளும் நிலைக்கு தற்போது வந்திருக்கின்றோம் இந்த செயற்கை நுண்ணறிவானது குப்பை மின்னஞ்சல்களை வடிகட்டுவது நல்ல புத்தகங்களை பரிந்துரைப்பதுஎன்பன போன்ற மிகச்சாதாரண பணிகள் மட்டுமல்லாது நம்முடைய மனிதவாழ்க்கையின் அனைத்து செயல்களிலும் வியாபார நடவடிக்கைகளிலும் நீக்கமறநிறைந்து இரண்டற கலந்துபயன்படவிருக்கின்றது என்ற செய்தியை மனதில் கொள்க இந்த செயற்கைநுண்ணறிவின்அவ்வாறான பயன்களைபற்றிய ஒரு பறவைபார்வை பின்வருமாறு
செயற்கைநுண்ணறிவால் உருவாக்கப்படவிருக்கும் மேய்நிகர்உதவியாளர் (Virtual assistants) ஆனது தனிமனிதஉதவியாளராக மட்டுமல்லாமல் வணிக நடவடிக்கைகளிலும் நிறுவனசெயல்பாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு நிறுவனங்களின் உற்பத்தியை பெருக்கி இலாபத்தை உயர்த்துவதற்கான உற்றநண்பனாக விளங்கவிருக்கின்றது அதிலும் நம்முடைய குரலொலி வாயிலாகவே இந்த உதவியாளரை நமக்கு தேவையான அனைத்து உதவிகளையும்செய்திடுமாறு கட்டுப்படுத்திடும் திறன்கொண்டது
நாம் செல்லுமிடங்களுக்கு நம்முடைய கடனட்டையை அல்லது வங்கிஅட்டையை கொண்டு செல்லத் தேவையில்லைஅதற்குபதிலாக செயற்கைநுண்ணறிவால் உருவாக்கப்படவிருக்கும் நம்முடைய உருவஅங்கீகாரத்தை (Facial recognition) கொண்டு ATM வாயிலாக நம்முடைய செலவிற்கு தேவையான பணத்தை எடுப்பது , நமக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்வது, நாம் எங்கிருக்கின்றோம் என்னென்ன செய்கின்றோம் என அனைத்தையும் அறிந்து கொள்வது ஆகிய அனைத்தையும் இதன் மூலம் செயற்படுத்தி கொள்ளமுடியும்
நிறுவனங்களின் தலைமைபொறுப்பிலுள்ளவர்கள் இந்த செயற்கை நுண்ணறிவை கொண்டு சமீபத்திய நிகழ்வுகளின் போக்குகளை அறிந்து அதனடிப்படையில் தம்முடைய நிறுவனத்தை புத்தாக்கம் செய்வது விரிவுபடுத்துவது மேம்படுத்துவது ஆகிய பணிகளை மிகவிரைவாக எளிதாக செய்து கொள்ளமுடியும்
அதுமட்டுமல்லாது பல்லூடகங்களை கையாளுதல் வாடிக்கையாளர் ஒவ்வொருவரின் விருப்பு வெறுப்புகளை அறிந்து கொண்டு அவரவர்விரும்பும் வகையிலான விளம்பரங்களை இசைகளை கானொளி காட்சிகளை உருவப்படங்களை அசைவூட்டு படக்காட்சிகளை பயனாளர்கள் பயன்படுத்திடும் சமூகபல்லூடகங்களிலேயே வெளியிடச்செய்திடமுடியும் அதிலும் வியாபாரநிறுவனங்களின் விளம்பரங்களை மிகச்சரியாக வெளியிடமுடியும்
நிறுவனங்களின் வெற்றிக்கும் வளர்சிக்கும் தேவையான சந்தைகளின் ஆய்வறிக்கை, ஒப்பீட்டு அறிக்கை போன்ற பல்வேறு அறிக்கைகளை மிகஎளிதாக இந்த செயற்கை நுண்ணறிவை கொண்டுஉருவாக்கி வெளியிடமுடியும் அதிலும் நாம் விரும்பும் பல்லூடகவெளியீடாககூட கிடைக்குமாறு செய்திடமுடியும்
நமக்கு ஏற்படும் எந்தவொரு சந்தேகத்தையும் ,சிக்கலுக்கான தீர்வையும் இந்த செயற்கை நுண்ணறிவிடம் கேள்வியாக கேட்டவுடன் அதற்கான தீர்வை உடனடி ஆலோசனையாக வழங்கவிருக்கின்றது
இந்த செயற்கை நுண்ணறிவானது மருத்துவத்துறையில் நோயாளிகளின் உடலில் காணும் நோய்களுக்கானஅனைத்து அறிகுறிகளையும் முழுவதுமாகஅலசி ஆராய்ந்து நோய்க்கான மிகச்சரியான மருந்துகளை மிகச்சரியானஅளவிற்கு பரிந்துரை செய்யவிருக்கின்றது அதுமட்டுமல்லாமல் மிகச்சிக்கலான அறுவை சிகிச்சையின்போது மருத்துவர்கள் அவ்வாறான அறுவைசிகிச்சைகளை மிகச்சரியாக செய்வதற்கான மிகச்சிறந்த உதவியாளராக இந்த செயற்கை நுண்ணறிவு விளங்கவிருக்கின்றது
மேலும் மனித படைப்பாற்றலை ஆராய்ந்து விரிவுபடுத்தி மேம்படுத்திடும் மனித வாழ்வின் சிறந்ததொரு வாய்பாக இந்த செயற்கை நுண்ணறிவானது விளங்கவிருக்கின்றது . இருப்பினும், பெரும்பாலானபணிகளில் அதிகரித்த தானியங்கி செயல்களினால் மக்களுக்கு பாதிப்பு ஏதேனும் ஏற்படுமோ என பெரும்பாலானோர் அதிக அக்கறை கொண்டுள்ளனர். இ ந்த செயற்கை நுண்ணறிவின்மூலம் பலர் வேலையில்லாமல் இருப்பதாக அநேகர் நம்புகின்றனர், எதுஎவ்வாறு இருப்பினும் எந்தவொருபுதிய கண்டுபிடிப்புகளையும் நம்முடைய மனிதவாழ்வினை மேம்படுத்திடுவதற்கேற்ப நல்வாய்ப்பாக வரவேற்று அதனை மிகச்சரியாக பொருத்தமாக பயன்படுத்தி முன்னேறுவதற்கான வெற்றிபடிகளாக மாற்றிடுவதே சரியான வழிமுறையாகும் என பரிந்துரைக்கப்படுகின்றது.

குழுவிவாதஇயந்திரமனிதன் (chatbot)ஒரு அறிமுகம்

குழுவிவாதஇயந்திரமனிதன் (chatbot) என்பதுஉரை அல்லது குரலொலியை பயன்படுத்தி குழுவிவாதங்களை நடத்தமுடிந்த ஒரு கணினி நிரல்தொடர் அல்லது உட்பொதிந்த செயற்கை நினைவகம் ஆகும் இது ஒரு திறன்மிகுந்த இயந்திரமனிதன் இடைமுக முகவராக அல்லது செயற்கைநினைவகத்துடன் விவாதிப்பவராக செயல்படுகின்றது அதைவிட குரலொலி அல்லது உரை வாயிலாக குழு விவாதங்களை அனுமதிக்க உதவிடும் ஒரு குழுவிவாத இயந்திரமனிதனாகும் இதனை இணையஉலாவியில் அல்லது திறன்பேசியில் பிரபலமான முகநூல் செய்தியாளராக நாம் விரும்பியவாறு பயன்படுத்தி கொள்ளமுடியும் பயனாளர் ஒருவர் இதனிடம் கேள்விகளை கேட்கலாம் அல்லது கட்டளைகளையிடலாம் உடன் அதற்கான பதில் செயல் அவ்வாறு கோரிய நபருக்கு இதனிடம் கிடைக்கும் வாடிக்கையாளரை திருப்தி படுத்திடுவதற்கான அல்லது தேவையான தகவல்களை பெறுவதற்கான குழுவிவாத களமாக இது அமைந்துள்ளது இயற்கையான மொழி செயல்பாடுகளின் அடிப்படையில் பொருத்தமான திறவுச்சொற்கள் அல்லது அதைபோன்ற செயல்களை தரவுதளத்திலிருந்து இது பெற்று செயற்படுத்திடு கின்றது இந்த குழுவிவாதஇயந்திரமனிதன் (chatbot) ஆனது விதிகளின் அடிப்படையிலான குழுவிவாதஇயந்திரமனிதன் (chatbot) என்றும் செயற்கை நினைவக அடிப்படையிலான குழுவிவாதஇயந்திரமனிதன் (chatbot) என்றும் இருவகையாக வகைபடுத்தப்பட்டுள்ளது இந்த குழுவிவாத இயந்திரமனிதனை (chatbot) உருவாக்குவதிலும் வழக்கமான பயன்பாடுகள் அல்லது இணைய பக்கங்களை உருவாக்குவதைபோன்றே பலபடிமுறைகளில் உருவாக்கிடலாம்
படிமுறை1முதலில் வாடிக்கையாளர் கோரும் கேள்விக்கான பதிலா அல்லது தேவையான தகவல்களா எவ்வாறு வழங்குவது என திட்டமிடவேண்டும்
படிமுறை2 அடுத்து நாம் பேசும் இயற்கைமொழியை செயற்படுத்திடுவது பதிலை தயார்செய்வது பலமாதிரிகளை நிருவகிப்பது வரைகலை இடைமுகப்பை கையாளுவது ஆகியவற்றினை கட்டமைவு செய்திடவேண்டும்
படிமுறை3 தொடர்ந்து படிமுறை2 இல் கூறியவாறு கட்டமைவுசெய்ததை emulator இல் அல்லதுஇணையத்தில் செயற்படுத்தி சரியாக செயல்படுத்தப் படுகின்றதா வென சரிபார்த்து பரிசோதிப்பது மூன்றாவது படிமுறையாகும்
படிமுறை4 சரியாக செயல்படுகின்றது எனில் இணையத்தின் வாயிலாக அல்லது தரவுமையத்தின் வாயிலாக வெளியிடசெய்வது நான்காவது படிமுறையாகும்
படிமுறை5 அடுத்து Skype, Facebook, WeChat,என்பன போன்ற சமுதாய வலைபின்னலுடன் மிகச்சரியாக இணைத்து செயல்படசெய்வதாகும்
படிமுறை6 இறுதியாக நாம் அவ்வாறு சமுதாய வலைபின்னலுடன் இணைத்து வெளியிட்டபின்னர் அதில் ஏற்படும் குறைநிரைகளை சரிசெய்திடுவதற்கான ஆய்வறிக்கையாகும்
இயற்கைமொழியை புரிந்து கொள்ளுதல் இயற்கைமொழியை செயல்படுத்துதல் ஆகிய இருவழிகளில் இதனை பயன்படுத்திகொள்ளப்படுகின்றது இவ்வாறான குழுவிவாதஇயந்திரமனிதன் (chatbot) பயன்படுத்தி கொள்வதால் பின்வரும் பயன்கள் கிடைக்கின்றன இது செயற்கை நினைவகத்துடன் செயல்படுவதால் இடையிடையே நிறுத்தம் செய்திடாமல் தொடர்ந்து 24 மணிநேரமும் இதனை தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளும் திறன்மிகுந்ததாக விளங்குகின்றது வியாபாரநிலையங்களில் வாடிக்கையாளரின் சிறந்த நண்பனாக விளங்குகின்றது இது கணினிமுதல் கைபேசிவரை அனைத்து தளங்களிலும் செயல்படும் திறன்மிக்கது
தற்போது நடைமுறையில் IBM Watson conversation service, Microsoft LUIS, API.AI, Recast.AI , wit.AI. ஆகியவற்றில் Botkit எனும் கட்டற்றகுழுவிவாதஇயந்திரமனிதன் (chatbot) பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது இதனுடைய இணையமுகவரி https://botkit.ai/ ஆகும்
Slack, Telegram, Microsoft Bot Framework, Nexmo, HipChat, Facebook Messenger, WeChat,போன்றவைகள் BotMan எனும்கட்டற்றகுழுவிவாதஇயந்திரமனிதன் (chatbot) பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது இதனுடைய இணையமுகவரிhttps://botman.io/ ஆகும்

நம்முடைய வியாபாரத்தில் chatbots இன் பயன்பாடுகள்

மனிதர்களுடனான உரையாடல்களை குறிப்பாக இணையத்தில். வாயிலாக நடைபெறும் உரையாடல்களை விவாதங்களை சித்தரிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கணினி நிரல், தொடர்பயன்பாட்டினையே chatbots என அழைப்பார்கள்
அதாவது இணையத்தின் வாயிலாக முகநூல் போன்ற குழுவிவாதங்களை குறிப்பிட்ட வியாபார நிறுவனத்தை பற்றிய குழுவிவாதமாக கொண்டுசெல்வதை chatbots என க்கூறலாம் இது செயற்கை நினைவகத்தின் வாயிலாக மேம்படுத்தபட்டு வெளியிடபட்டுள்ளது வருகின்ற 2025, ஆண்டிற்குள் 1.25 அமெரிக்க டாலர் மதிப்பிற்கு இதனுடைய வியாபார பயன்பாடு உயரும் என எதிர்பார்க்கப் படுகின்றது. 1.அதிகரித்து வரும் வலைத்தளங்கள் மற்றும் கைபேசி பயன்பாடுகள் உயர் நுண்ணறிவு நுகர்வோர் ஈடுபாடுக்கான துரித வேகக் கோரிக்கை. நுகர்வோர் நடத்தை ஆகியவற்றை எளிதாக கொள்கின்றது. 2.இதில் இயந்திர கற்றல், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களில் உள்ள கண்டுபிடிப்புகள். வாடிக்கையாளர்களுக்கான சேவை நடவடிக்கைகளாக உருவாக்கப்படுகின்றது. ஆகியவை இந்த chatbots ஐ நடைமுறைபடுத்திடுவதற்கான முக்கிய காரணிகள்
இந்த chatbots இன் வியாபாரத்திற்கான பயன்கள் பின்வருமாறு
1.வழக்கமான மின்னஞ்சல்கள் செய்திகடிதங்கள் அல்லது சமுதாயவலைபக்கங்களின் வாயிலாக முழுமையான விவரங்கள் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு சென்று சேராது ஆயினும் இது செயற்கை நினைவகத்தின் வாயிலாாக செயல்படுவதால் வாடிக்கையாளர்களுக்கு எழும் அனைத்து சந்தேகங்களை தீர்வு செய்யக்கூடிய வகையில் முழுமையான விவரகையேடாக கையடக்க விலையில் இது வியாபார நிறுவனங்களுக்கு பயன்தருகின்றது
2. குறிப்பிட்ட வியாபார நிறுவனம் தொடர்புடைய வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்து வகையான உதவிகளையும் எந்தநேரத்திலும் எந்தஇடத்திலும் இதன் வாயிலாக கிடைக்கின்றது
3. வாடிக்கையாளர்களுடன் இடைமுகம் செய்வதற்காகவென தனியாக முகவர்கள் உதவியாளர்கள் போன்ற பல்வேறு பணியாளர்களை நியமனம் செய்து பயன்படுத்தி கொள்ளாமல் வியாபார நிறுவனங்கள் தங்களுடைய பொருட்களின் உற்பத்தியில் மட்டும் கவணம் செலுத்தினால் போதும் அதனை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திடும்போதான செயல்களைநிருவகிப்பதற்காக தனியாக மனித தலையீடு இல்லாமலேயே வாடிக்கையாளர் திருப்தியுறும் சேவைகளை இதன் வாயிலாக நிருவகத்திடமுடியும்
4. வாடிக்கையாளர் ஒவ்வொருவரும் அவர்கள் ஏற்கனவே ஏதாவதொரு தேவைக்காக நிறுவனத்துடன் தொடர்புகொஂண்டபோது கிடைக்கப்பெற்ற தகவல்களை கொண்டு அவரவர்களின் விருப்பத்திற்கேற்ற பொருத்தமான சேவையை அவர்கள் விரும்பியவாறு வழங்கபடுகின்றது
5. வாடிக்கையாளரின் ஆழ்ந்த ஈடுபாட்டினால் நிறுவனத்தின் விற்பணை பலமடங்கு உயரஉதவுகின்றது
இப்போதெல்லாம், நிறுவனங்களின் வியாபார நடவடிக்கைகள் மற்றும் பணிச்சுமையின் செலவைக் குறைக்க, சிறந்த ஆதரவை வழங்க இந்த செயற்கை நினைவகத்தால் (AI )செயல்படும் முகவர்களை வியாபாரத்தின் வெற்றிக்கு பயன்படுத்தி கொள்ளலாம்

சிறந்த குரலொலி உதவியாளர் (Voice Assistant)

தற்போதைய பயன்பாட்டில் Google Assistant, Siri, Alexa ஆகியவைகளும் மைக்ரோசாப்டின் Cortana சாம்சங்கின் Bixby சீனாவின் Baidu’s Duer ஆகிய குரலொலி உதவியாளர்கள் நமக்கு உதவதயாராகஇருக்கின்றனர் இவை செயற்கை நினைவகத்தின் வாயிலாக செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன இவை பொருட்களுக்கான இணையத்தில் செயல்படும் சாதனங்களில் குரலொலி வாயிலாக அவைகளின் செயல்களை கட்டுபடுத்திடுவதற்காக உதவத்தயாராக இருக்கின்றன இவற்றுள் Google Assistant எனும் உதவியாளரானது ஏறத்தாழ நம்முடைய 80% கேள்விகளை 100% மிகச்சரியாக புரிந்து கொண்டு செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது Cortana எனும் உதவியாளரானதுஏறத்தாழ நம்முடைய 60% கேள்விகளை 85 – 90%வரை புரிந்து கொண்டு செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது Alexaஎனும் உதவியாளரானது ஏறத்தாழ நம்முடைய 50% கேள்விகளை 80%வரை புரிந்து கொண்டு செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது
Siri எனும் உதவியாளரானதுஏறத்தாழ நம்முடைய 40% கேள்விகளை 80%வரை புரிந்து கொண்டு செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது
இவை களின் சேவைகளும் ஒருங்கிணைப்பும் சிறந்ததாக உள்ளன திறனுடைய வீடுகள் அல்லது பொருட்களுக்கான இணையத்தில் இவை சிறந்து விளங்குகின்றன இவைகள் தற்போது உலகிலுள்ள நாடுகளில் பேசும் மொழிகளுள் ஏறத்தாழ 20மொழிகளை. ஆதரிக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன

மனித மூளையும் கணினியும் இடைமுகம்(brain-computer interface (BCI))என்ற செயல்முறை ஒருஅறிமுகம்

தற்போதுமடிக்கணினியும் கைபேசியும் நம்முடைய அன்றாட பயன்பாட்டின் தவிர்க்கமுடியாத ஒருகருவியாக மாறிவிட்டன ஆயினும் கைகால்களை அசைக்கமுடியாதவர்களால் இவைகளை பயன்படுத்தி கொள்ளமுடியாது அதனை வெற்றி கொள்ள BrainGate எனும் ஆய்வு அமைப்பானது மனித மூளை, கணினி ஆகிய இரண்டிற்குமிடையேயான இடைமுகத்தை (brain-computer interface (BCI))என்ற செயல்முறையை பயன்படுத்தி கைகால்கள் செயல்படமுடியாமல் இருப்பவர்களால்கூட மடிக்கணினி சாதனத்தின் இடம்சுட்டியை நகர்த்துவது சொடுக்குதல் செய்வது ஆகிய செயல்களை மனித மூளையில்அவ்வாறான கட்டளைகளை சிந்திப்பதன் வாயிலாகவே செயற்படுத்திடமுடியும் என கண்டறிந்துள்ளனர்
மேலும் கைகால்கள் செயல்படமுடியாமல் இருப்பவர்களை மடிக்கணினி சாதனத்தின் வாயிலாக மனித மூளை, கணினி ஆகிய இரண்டிற்கும் இடையேயான இடைமுகத்தை இயலுமை செய்திடலாம் எனபிரவுன் பல்கலைகழக ஆய்வறிக்கைஒன்று கூறுகின்றதுஇந்த ஆய்வில் investigational BrainGate BCI என்ற செயல்முறையை பயன்படுத்தி கார்ட்டெக்ஸில் வைக்கப்பட்டுள்ள மோட்டாருடன் சிறிய சென்சார் மூலம் நேரடியாகச் செயல்படும் நரம்பியல் செயல்பாடு, பொதுவாக பயன்படுத்தப்படும் டேப்லெட் நிரல்களால் கைகளால் சுட்டியை சொடுக்குவதை போன்றேநம்முடையமனித மூளையின் சிந்தனையில் எழும் கட்டளைகளின் துனையுடன் செயல்படச்செய்து குடும்ப உறுப்பினர்களுடனும் நண்பர்களுடனும் இணையத்தின் வாயிலாக நேரடியாக குழுவிவாதம் செய்திடவும் மின்னஞ்சல்களை கையாளுதல் இசைகச்சேரிகளை கேட்டல் கானொளி காட்சிகளை காணுதல் இணையத்தின் வாயிலாக பொருட்களை கொள்முதல்செய்தல் ஆகியபல்வேறு பணிகளை மடிக்கணினியின் பயன்பாடுகளின் மூன்று மாதிரி செயல்திட்டங்களின் வாயிலாக செயல்படுத்தி
பரிசோதித்து ள்ளனர் மேலும் Bluetooth வாயிலாக கம்பியில்லாத சுட்டியை கையாளவும் முடியும் என கண்டறிந்துள்ளனர்
இதனை கடந்த 21 நவம்பர் 2018இல் PLOS ONE எனும் ஆய்விதழில் வெளியிட்டுள்ளன .மேலும் விவரங்களை கானொளி காட்சியாக காண https://www.youtube.com/watch?time_continue=47&v=O6Qw3EDBPhg எனும் இணையமுகவரிக்கு செல்க

Apache Mahout எனும் கட்டற்ற இயந்திரகற்றலிற்கானவரைச்சட்டம் அறிமுகம்

தற்போது ஏராளமான இயந்திரகற்றலிற்கான நூலகங்கள் நாம் பயன்படுத்த தயாராக உள்ளன அவைகளுள் அப்பாச்சி மஹூட்ஆனது மிகப்பிரபலமானதாகும் ஏனெனில் மற்ற அனைத்தும் ஆய்வு சார்பாகமட்டுமே உள்ளன இந்தApache Mahout ஆனது ஆய்விற்கு மட்டுமல்லாது பயன்பாட்டிற்கும் ஏற்றதாகவிளங்குகின்றது மற்றவைகளில்ஆவணங்களும் எடுத்துகாட்டுகளும் அரிதாக கிடைக்கின்றன ஆனால் Apache Mahout இல் ஆவணங்களும் எடுத்துகாட்டுகளும் ஏராளமாக கிடைக்கின்றன. மற்றவைகளை-விட அதிக விரிவாக்கத்-தன்மை கொண்டது.முன்கூட்டியே வகைபடுத்தப்பட்டது நாம் கோரியாவாறு வகைபடுத்தி வடிகட்டுகின்றது k-meansபோன்ற ஒரேதன்மை கொண்ட தொகுதியாக செய்திடுகின்றது
இது ஹடூப்புடன் மிகவலுவாக கட்டப்பட்டு செயல்படுகின்றது பயனாளர்கள் அதிக அளவிலான தகவல்களைகொண்டு இதனை பயன்படுத்திகொள்ள இது எப்போதும் தயாராக இருக்கின்றது வெக்டார் மேட்ரிக்ஸ் நூலகங்களுடன் உள்ளிணைந்தே கிடைக்கின்றது ஏராளமான தன்னார்வாளர்கள் இதனை செயல்படுத்திடும்போது ஏற்படும் சந்தேகங்களை தீர்வுசெய்து சுமுகமாக செயல்படுவதற்காக உதவதயாராக இருக்கின்றனர் ஃபேஸ்புக், ட்விட்டர் லிங்காடின் போன்ற மிகப்பெரியஜாம்பவான்களான சமூதாய வலைபின்னல்-களி்ன் பின்புல சேவையாக இதனை பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது மேலும் விவரங்களுக்கு https://mahout.apache.org/என்ற இணைய பக்கத்திற்கு சென்றறி்ந்து கொள்க

கட்டற்ற செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligent(AI))கருவிகள்

வருங்காலத்தில் நாம் ஏதேனும் மிகப்பெரிய உணவகங்களுக்கு காலைச் சிற்றுண்டிக்காக சென்றால் நமக்கு எந்தமாதிரியான இலை போடுவது எவ்வாறான தண்ணீர் எவ்வாறான பாத்திரத்தில் வைப்பது என்னென்ன சிற்றுண்டிகள் நமக்கு பரிமாாறுவது ஆகிய அனைத்தும் நாம் கேட்காமலேயே நாம் விரும்புவதை தானாகவே பரிமாறும் காலம் வரவிருகி்ன்றது அவ்வாறான தானியங்கியான செயல் அனைத்தும் செயற்கை நுண்ணறிவான இயந்திர கற்றலின் வாயிலாக செயல்பட-விருக்கின்றன தற்போதே நம்முடைய மகிழ்வுந்தில்நாம் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் தானியங்கியாக மகிழ்வுந்தின் கதவினை திறத்தல் மூடுதல் போன்ற பணிகள் இந்த இயந்திர கற்றலின் அடிப்படையிலேயே செயல்படுகின்றன கூகுளின் ஓகேகூகுள் , ஆப்பிலின் ஸிரி, அமோஸானின எகோ ஆகியவை இவ்வாறான செயற்கை நுண்ணறிவான இயந்திர கற்றலின் வாயிலான நடைபெறும் செயலிற்கான எடுத்துகாட்டுகளாகும் இவ்வாறான செயற்கை நுண்ணறிவின் இயந்திர கற்றலின் அடிப்படையிலான கட்டற்ற கருவிகளும் தற்போது பயன்பாட்டில் உள்ளன அவைகளை பற்றிய ஒரு பறவைபார்வை பின்வருமாறு
1.ApacheMahoutஎன்பது பொதுவான கணிதம், இயல்கணிதம் ,புள்ளியியல் ஆகியவற்றின் கணிக்குகளை எளிதாக தீர்வுசெய்வதற்கான ஒரு கட்டற்ற இயந்திர கற்றல் கருவியாகும் இயந்திர கற்றலின்அடிப்படையில் பெரியளஅளவு தரவில் எழும் சிக்கலான பிரச்சினைகளை விரைவாக எளிதாக தீர்வுசெய்வதற்காக அப்பாச்சி அனுமதியின் அடிப்படையல் அப்பாச்சி மென்பொருள் நிறுவனத்தால் வெளியிடப்-பட்டதாகும் இது அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது மேலும் விவரங்களை அறிந்து பயன்படுத்தி கொள்வதற்காக https://mahout.apache.org/ எனும் இணைய தளத்திற்கு செல்க
2.H2O என்பது H2o.aiஎன்ற நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்கொண்ட மேககணினி சூழலில் தரவுதொகுதிகளை ஆய்வுசெய்யப்பயன்படும் மற்றொருஒரு கட்டற்ற இயந்திர கற்றல் கருவியாகும் இயந்திர கற்றல் கருவியாகும் இது தரவுகளில் ஆழ்ந்த கற்றலிற்கும் முன்மாதிரி ஆய்விற்கும் உடல்நல பாதுகாப்பிற்கும் மோசடிகளை ஆய்வுசெய்து உண்மை கண்டறியவும் பெரும்பாலாக பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது இது ஆர், பைத்தான், ஜாவா ஆகிய கணினிமொழிகளின் வாயிலாக உருவாக்கப்பட்ட ஒரு கட்டற்ற இயந்திர கற்றல் கருவியாகும் மேலும் விவரங்களை அறிந்து பயன்படுத்தி கொள்வதற்காக https://www.h2o.ai/ எனும் இணைய தளத்திற்கு செல்க
3.TensorFlow இது கூகுள் நிறுவனத்தின்கூகுள்ப்ரெயினால் உருவாக்கப்பட்ட துவக்கத்தில் ஜிமெயில், கூகுளின் போட்டோ கூகுளின் தேடுபொறி ஆகிய பணிகளை சிறப்பாக செயல்படுவதற்கு உதவிடுவதற்கான ஒரு கட்டற்ற இயந்திர கற்றல் கருவிபயன்படுத்தி கொள்ளப்பட்டது இது நிரலாளர்களுக்கு எண்களின் கணித செயலிற்காக பயன்படுத்திகொள்ளப்படுகின்றது பல்வேறு தளங்களிலும் கணினி மடிக்கணினி கைபேசி ஆகிய அனைத்திலும் செயல்படுத்தி பயன்பெறமுடியும் ஆய்வாளர்களின் ஆய்விற்கான எண்களின் கணக்கீட்டு செயல்களுக்கு பேருதவியாய் இது இருக்கின்றது Tpu,CPU, GPUஆகிய எதிலும் இதனை பயன்படுத்தி கொள்ளமுடியும் அப்பாச்சி2 அனுமதியின் அடிப்படையில் வெளியிடபட்டுள்ளது மேலும் விவரங்களை அறிந்து பயன்படுத்தி கொள்வதற்காக https://www.tensorflow.org/ எனும் இணைய தளத்திற்கு செல்க
4.Caffe பெர்க்ளி மையத்தால் வெளியிடபட்டதொரு செயற்கை நுண்ணறிவான இயந்திர கற்றலின் கட்டற்ற கருவியாகும் இது BSD2 அனுமதியின் அடிப்படையில் வெளியிபட்டுள்ளது இதனை பல்லூடகம்(Multi media) ,காட்சிஊடகம் (vision domains) ஆகியவற்றின் பேரளவு பயன்பாடுகளுக்கு பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது CPU, GPUஆகிய எதிலும் இதனை பயன்படுத்தி கொள்ளமுடியும் இது ஆழ்ந்த கற்றலிற்கு அடிப்படையாகவும் மில்லியன் கணக்கான உருவப்படங்களை ஆய்ந்தறியவும் பயன்படுகின்றது மேலும் விவரங்களை அறிந்து பயன்படுத்தி கொள்வதற்காக https://caffe.berkeleyvision..org/ எனும் இணைய தளத்திற்கு செல்க
5.Oryx2இதனை ஸ்பார்க அப்பாச்சி காஃப்கா வெளியிட்டுள்ளதொருசெயற்கை நுண்ணறிவான இயந்திர கற்றலின் கட்டற்ற கருவியாகும் இதுபேரளவு நிலையில் இயந்திரகற்றலைநேரடியாக கற்க அனுமதிக்கின்றது இது செயற்கை நுண்ணறிவு ஆய்வாளர்களுக்கு புதிய பயன்பாடுகளை உருவாக்கிடவும் அதனை வகைபடுத்திடவும் ஒன்றாகசேர்த்திடவும் பயன்படுகின்றது மேலும் விவரங்களை அறிந்து பயன்படுத்தி கொள்வதற்காக https://oryx.io/ எனும் இணைய தளத்திற்கு செல்க