நிதி நிறுவனங்களுக்கும் இயந்திரகற்றல், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் சேவை அவசியம் தேவையாகும்

அறிவியல் புரட்சியினால் தோன்றிய செயற்கை நுண்ணறிவானது (Artificial Intelligence (AI))அமோஸான் நிறுவனத்தின் முகப்புபக்கத்தில் பல்வேறு பயனாளர்களுக்கு பொருத்தமான சேவையை வழங்குவதற்கேற்ப விரிவடைந்து வருவதைபோன்று வங்கிகள் போன்ற நிதி நிறுவனங்களுக்கும் இயந்திரகற்றலும் செயற்கை நுண்ணறிவும் கண்டிப்பாக தேவையாகும் கணினியானது ஆங்கில மொழியால் செயல்படும் பயன்பாடுகளை கொண்டது ஆயினும் வங்கியில் வாடிக்கையாளர்கள் பல்வேறு மொழிகளில் தொடர்பு கொள்ளும்போது அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு voice responses எனும் வசதியை செயற்கை நுண்ணறிவின் மூலம் செயல்படுத்தி வங்கி பணிகளை எளிதாக கையாளலாம் மேலும் மொழிமாற்றியின் தடங்களினால் ஏற்படும் வாடிக்கையாளர்களின் விடுபட்ட கோரிக்கைகளை இதே செயற்கை நுண்ணறிவின் chatbots என்பதை இயலுமைசெய்து வங்கிகளில் advisor finbot ஐ நிறுவுகை செய்து சிறந்த சேவைகளை வழங்கச்செய்யலாம் அதுமட்டுமல்லாது இதே செயற்கை நுண்ணறிவின் bot என்பதை பயன்படுத்தி குறிப்பிட்ட குழுவான விவசாயிகள் சிறுவணிகர்கள், தொழில்முனைவோர்கள் ஆகியோர்களின் நடைமுறை பழக்கவழக்கங்களை தெரிந்து கொண்டு அவர்களுக்கு தக்க சேவையை செயற்படுத்திடலாம் பணியாளர்கள் வாடிக்கையாளர்கள் ஆகியோர்களின் குற்ற நடவடிக்கைகளினால் வங்கியானது பாதிப்படையாமல்இருப்பதற்காக இதே செயற்கை நுண்ணறிவின் Risk.net என்பதை பயன்படுத்தி அவ்வாறான வங்கிகளுக்கு இழப்பு ஏற்படுத்து-கின்ற குற்ற நடவடிக்கைகளை தவிர்த்திடலாம் எக்செல்எனும் பயன்பாட்டினை பயன்-படுத்தி வருங்காலத்தில் நிதிநிலை எவ்வாறு இருக்கும் என யூகித்தலை Azure எனும் இயந்திர கற்றலை பயன்படுத்தி துல்லியமாக கணித்து அதற்கேற்ப நிதிநிறுவனங்களின் எதிர்(வருங்)கால நடவடிக்கைகளை திட்டமிடலாம் இந்தAzure எனும் இயந்திர கற்றல் வசதி தற்போது HPE financeஎன்பதன் மேககணினி சேவையிலும் கிடைக்கின்றது

செயற்கை நினைவகத்திற்கான சிறந்த கட்டற்ற கருவிகள்

வருங்காலத்தில் நாம் காலை சிற்றுண்டி உண்பதற்காக உணவகத்திற்கு சென்றவுடன் நமக்கு எந்தெந்த சிற்றுண்டி தேவையென நாம் வாயால் கூறாமலேயே நமக்கான உணவு நமக்கு முன்புற இலையில் பரிமாறப்படும் அதற்கு அடிப்படையாக விளங்குவதுதான் இயந்திர கற்றலாகும் இது செயற்கைநினைவகத்தின் ஒரு கிளையாகும் இவ்வாறான இயந்திர கற்றலின் நினைவக செயல்திட்டத்திற்காக பல்வேறு கட்டற்ற கருவிகள் தற்போது பயன்பாட்டில்உள்ளன அவை பின்வருமாறு
1.Apache Mahout: என்பது விண்டோ மட்டுமல்லாது லினக்ஸ் மேக் ஆகிய இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது இது ஒரு கட்டற்ற இயந்திர கற்றல் கருவியாகும்இதுபேரளவு தரவுகளின் சிக்கலான முழுவதுமான ஆய்விற்கு பேருதவியாக விளங்குகின்றது இது புள்ளியியல் ,வரைபடம் ,இயல்கணிதம்ஆகியவற்றில் கணக்கீடுகளை எளிதாக கணக்கிடுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது பேரளவு தரவுகளைஅலசி ஆய்வுசெய்து அதிலிருந்து நமக்கான முக்கிய தகவல்களை மட்டும் இதன் வாயிலாக பெறமுடியும் இதற்கான இணையமுகவரி https://mahout.apache.org/ஆகும்
2. Distributed Machine Learning Toolkit (DMTK) என்பது ஒரு கட்டற்ற இயந்திர கற்றல் கருவியாகும் பேரளவு தரவகளை நம்முடைய பல்வேறு பணிகளுக்கும் மிகஎளிதாக பயன்படுத்தி கொள்ள இதஉ உதவுகின்றது இது கணினியின் நெறிமுறை மட்டுமல்லாமல் இயந்திரகற்றல் நெறிமுறைகளையும் கையாளும் திறன்மிக்கது நெறிமுறைகளை ஆய்வுசெய்துஅதில் மாறுதல் செய்வது செயல்களை தூண்டிவிடுதல் அதனால் ஏற்படும் விளவுகள் யாவைஎன ஆய்வுசெய்திடவும் பயன்படுகின்றது இதற்கான இணையமுகவரி http://www.dmtk.io/ஆகும்
3. Open Neural Networks (OpenNN) என்பது இயற்கை வலைபின்னலை செயற்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட சி++ எனும் கணினிமொழியால் உருவாக்கப்பட்டதொரு கட்டற்ற இயந்திர கற்றல் கருவியாகும் இதனுடைய நூலகங்கள் ஆழ்ந்த கற்றலிற்கு மிகஉதவியாக உள்ளன பொருட்களின் போக்குவரத்திற்கும் சந்தைபடுத்துவதற்கு மிகப்பேருதவியாய் இது அமைகின்றது இது மிகவிரைவான செயலியை கொண்டிருப்பதால் தரவுகளின் ஆய்வில் மிகஅதிக திறனை வெளிப்படுத்துகின்றது இதற்கான இணையமுகவரி http://www.opennn.net/ஆகும்
4.Apache SystemML: என்பதுசிக்கலான கணக்குகளையும் எளிதாக தீர்வுசெய்வதற்காக வும் பேரளவுதரவுகளை கையாளுவதற்காகவும் நெகிழ்வுதன்மையுடன்கூடிய கட்டற்ற கருவியாக வடிவமைக்கப்பட்டுள்ளது இது ஆர் பைத்தான் ஆகிய கணினி மொழிகளின் இலக்கனத்தை செயல்படுவதற்காக பயன்படுத்தி கொள்கின்றது இதனை Spark , Hadoopஆகியவற்றிற்கு வரையறுக்கமுடியும் இது ஆழ்கற்றலின் இயற்கைவலைபின்னல் கட்டமைவின் GPUsகளுடன் கொண்ட பயிற்சிக்கு இந்த அழ்ந்த கற்றல் தளம் பேருதவியாக இருக்கின்றது இதற்கான இணையமுகவரி https://systemml.apache.org/ஆகும்
5. H2O: என்பது விண்டோ மட்டுமல்லாது லினக்ஸ் மேக் ஆகிய இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது இது ஒரு கட்டற்ற இயந்திர கற்றல் கருவியாகும் இது R, Python , Java ஆகிய கணினிமொழிகளில் உருவாக்கப்பட்ட செயற்கை அறிவுஆய்வாளர்களுக்காக பயன்படும் சிறந்ததொரு கட்டற்ற கருவியாக வடிவமைக்கப்பட்டுள்ளது இது பேரளவு தரவுகளிலிருந்து முன்கணிப்பு செய்வதற்காக பெரிதும் பயன்படுகின்றது மிக முக்கியமாக திருடுதல்ஏமாற்றுதல் ஆகிய நிகழ்வுகளில் உண்மையை கண்டறிய மிகப்பயனுள்ளதாக விளங்குகின்றது அதுமட்டுமல்லாது மருத்துவமனைகளில் நோயாளிகளை ஆய்வுசெய்வது அவர்களுக்கு சிறந்த மருத்து சேவைஅளித்து நோய்களை தீர்வுசெய்திட மிகமுக்கியமாக பயன்படுகின்றது இதற்கான இணையமுகவரி https://www.h2o.ai/ ஆகும்