பிளாக்செயின் தொழில்நுட்ப வழிகாட்டி தொடர்-10-பிட்காயின் தொடர்ச்சி

பிட்காயினின் மதிப்பு
கடந்த இரண்டு மாதங்களில் பிட்காயினின் மதிப்பு வெகுவாக அதிகரித்து புதிய உச்சியைத் தொட்டுள்ளது. எனவே யாருடைய மனதிலும் எழக்கூடிய பொதுவான கேள்விகள் பின்வருமாறு, ‘பிட்காயினின் மதிப்பை (அல்லது பொருளாதார ரீதியாக அதிகம் பேசும் மாற்று விகிதத்தை) யார் தீர்மானிக்கிறார்கள். , அதைக் கட்டுப்படுத்த மத்திய வங்கி அல்லது இதற்காக வேறு நியமிக்கப்பட்ட நிறுவனம் ஏதேனும் உள்ளதா? இல்லை யெனில் அதனை கட்டுபடுத்திடுவது யார்?; அதனுடைய மதிப்பு எவ்வாறு தீர்மானிக்கப் படுகிறது?, அல்லது அதை யார் தீர்மானிக்கிறார்கள்? என்பனபோன்ற பல்வேறு கேள்விகள் நம்மனைவரின் மனதிலும் எழும் நிற்க. பொதுவாக சுதந்திரமான சமுதாயத்தில் பொருட்களுக்கான அல்லது சேவைகளுக்கான விலையானது தேவை , அளிப்பு ஆகிய பொருளாதாரத்தின் அடிப்படைவிதியின்படி மட்டுமே நிர்ணயிக்கப்படுகின்றது என்ற செய்தியை நாமனைவரும் அறிந்ததேயாகும் அவ்வாறே இந்த பிட்காயினின் மதிப்பும் தீர்மானிக்கப்படுகின்றது இதற்கான எளிய கணித மாதிரி பின்வருமாறு.

ஒரு வினாடிக்கு கிடைக்கும் பிட்காயின்களின் அளவு = S / D
ஒரு வினாடிக்கு தேவையான பிட்காயின்களின் எண்ணிக்கை= T / P

இவைகளில் உள்ள

Tஇன் மதிப்பானது : வினாடி ஒன்றுக்கு பரிமாற்றம் செய்யப்படும் மொத்த பிட்காயின்-களின் எண்ணிக்கைகளாகும்
Dஇன் மதிப்பானது: BTCஇன் ஒரு பரிமாற்றத்திற்கு தேவைப்படும் காலஅளவுஆகும்
Sஇன் மதிப்பானது: பிட்காயினின் அளிப்பு அளவு ஆகும்
P இன் மதிப்பானது: ஒரு பிட்காயினின் விலை யாகும்
பொருளாளாதாரத்தின் அடிப்படையான தேவை-அளிப்பு விதிப்படி, பிட்காயின் அளிப்பு அதிகரிக்கும் போது தேவை குறைகின்றது, இதன் விளைவாக அதனுடைய விலையானதும் குறையும். தேவை அதிகரிக்கும் போது பிட்காயின் விநியோகமும் குறையும், இதன் விளைவாக பிட்காயினின் விலையும் அதிகரிக்கும். ஒரு சமநிலை நிலையில், S க்கு மேல் அளிப்பு, P ஐ விட T க்கு சமமாக இருக்கும். P இன் விலையை நாம் பின்வருமாறு கணக்கிடமுடியும்

S/( D)=T/P

சமநிலையின் நிலை பின்வருமாறு: -P=TD / (S)

இதுவே சமநிலையின் பிட்காயின் மதிப்பின் நிலையாகும், இங்கு விலையானது S ஆல் வகுக்கப்பட்ட T மடங்கு Dக்கு சமமாக இருக்க வேண்டும்.

இதுவே பிட்காயின் பரிமாற்ற விகிதத்தைக் கணக்கிடுவதற்கான மிக அடிப்படையான சமன்பாடாகும். பிட்காயினின் மதிப்பானது தேவை , அளிப்பு அடிப்படையைப் பொறுத்து அமைகின்றது. இருப்பினும், உண்மையான பரிமாற்ற விகிதத்தைக் கணக்கிடுதற்காக இதில்பொது உணர்வுகள், சுரங்க சிரம நிலை, சுரங்க செயல் முறைக்கான எரிசக்தி நுகர்வு என்பன போன்ற பல்வேறு காரணிகள் கவனத்தில் கொள்ளப் படுகின்றன
. இதனால் வெவ்வேறு சந்தையின் பரிமாற்ற விகிதத்தில் ஒருசில சிறிய வேறுபாடுகள் இருக்ககூடும்.
இதன்வாயிலாக எந்தவொரு அதிகாரஅளிக்கப்பட்டவரும் இந்த பிட்காயினின் மதிப்பைக் கட்டுப்படுத்த முடியாது என்பது தெளிவாகின்றது, மாறாக இது கண்டிப்பாக பயனாளருடைய பரிமாற்றங்களின் அடிப்படையில் மட்டும் தீர்மானிக்கப்படுகிறது என்ற செய்தியை மட்டும் மனதில் கொள்க .

சமூகம், அரசியல் ஒழுங்குமுறைகள்
இது மகத்தான சாத்தியக்கூறுகளுடன் இரகசியம் எதுவும் இல்லாத அனைவரும் காணத்தக்க வகையில் திறந்த புத்தகம் போன்று உள்ளது, பிட்காயின் (அல்லது ஒட்டு மொத்த மறையாக்க நாணயங்களும்) சாத்தியமான அச்சுறுத்தல்களையும் முன்வைக்கிறது. மறையாக்க நாணயங்கள் குறித்த சமீபத்தியdiscourses சொற்பொழிவுகள் பெரும்பாலும் இந்த அம்சத்துடன் , குறிப்பாக அரசாங்க நிதி நிறுவனங்களிடமும் தொடர்புடையவைகளாகும்

மறையாக்க நாணயங்களானவை. தற்போதுள்ள பொருளாதார அமைப்புகளுக்கும் சமூயாத்திற்கும் நிறைய நன்மைகளை கொண்டு வர முடியும் . ஆனால் அதனோடு கூடவே தடையற்ற , அநாமதேய பொருளாதார ஆட்சி பாதுகாப்பு, சட்டவிரோத பயன்பாடு, கறுப்புப் பணம் போன்ற பல்வேறு கேள்விகளையும் எழுப்புகின்றது. இது குறித்து விவாதம் இன்னும் நடந்து கொண்டேயிருக்கின்றது, இரு தரப்பினரும் தத்தமது சொந்த பாதிப்பை நிலைநிறுத்துகின்றார்கள். எதுஎவ்வாறாகஇருந்தாலும் நாம் மறையாக்க நாணயங்களின் ஒரு சில நன்மைகளையும் தீமைகளையும் இப்போது காண்போம் . அவை பின்வருமாறு.

மறையாக்கநாணயங்களின் நன்மைகள்

பரிமாற்ற வேகம்:மறையாக்கநாணயங்கள் மிக விரைவாக பரிமாற்றங்களை வழங்குகின்றன, இது தற்போதைய வங்கி பரிமாற்ற வேகத்தை விட மிகவிரைவானதாகும். ஒரு பரிமாற்றத்தினை சரிபார்க்க பிட்காயினில் அதிகபட்சம் 10 நிமிடங்கள் ஆகும், அது எத்தேரியத்தில் சுமார் 10 வினாடிகள் மட்டுமேயாகும்.

அநாமதேயசெயல்:மறையாக்கநாணய பரிமாற்றங்கள் அனைத்தும் முழுமையாக அநாமதேயமானவைகளாகும், இந்த பரிமாற்றங்களை யார் செய்தார்கள் அல்லது இந்த பரிமாற்றங்களை யாருக்கு செய்யப்பட்டது என்பதை அடையாளம் காண முடியாது. வழக்கமாக பங்கேற்பாளர்கள் அனுப்புநர் பெறுநர் ஆகியஇருவர்களின் பிணைய முகவரிகளை மட்டுமே பயன்படுத்துவார்கள். அந்த பங்கேற்பாளர்களின் அடையாளம் எதுவும் பகிரப்பட்ட பேரேட்டில் வெளியிடப்படாது

வழங்குகின்ற நடவடிக்கைகளுக்கு எந்தவித தடையும் இல்லை: பரிமாற்றங்களுக்கு எந்த வித தடையும் இல்லையென்பதே மறையாக்க நாணயங்களின் மிகவும் குறிப்பிடத்தக்க பயனாகும். பயனாளர் எந்த நேரத்திலும் எங்கிருந்தும் எந்தவொரு இடத்திற்கும் தாம் விரும்பும் நாணயத்தை அனுப்ப முடியும். அதாவது வங்கி விடுமுறை போன்ற நேர வரம்புகள் எதுவும் இந்த பரிமாற்றத்திற்கு தடையில்லை

குறைந்த பரிமாற்றக் கட்டணம் அல்லது பரிமாற்றக் கட்டணமே இல்லாதது:பொதுவாக மறையாக்கநாணயங்களின் பரிமாற்றங்கள் கட்டணமற்றதாகும். அல்லது தற்போதைய நிதி பரிமாற்ற கட்டணங்களை விட மிகக் குறைவானதாகும். பிட்காயினில், எந்தவொரு பரிமாற்றக் கட்டணத்தையும் செலுத்தாமல் யார் வேண்டுமானாலும் பரிமாற்றம் செய்யலாம். பயனாளர்கள் தங்களுடைய பரிமாற்றங்களை விரைவு படுத்துவதற்காக பரிமாற்ற கட்டணங்களை வழங்குவதற்கான வாய்ப்பும்இதில் உள்ளது. ஒரு நபர் இவ்வாறான பரிமாற்ற கட்டணம் வழங்குகிறார் என்றால் அதனை தொடர்ந்து, அந்த பரிமாற்றத்தை சரிபார்க்க அதிக சுரங்கத் தொழிலாளர்கள் வருவார்கள்; எனவே பரிமாற்றங்கள் மிக விரிவாக சரிபார்க்கப்பட்டு பரிமாற்றிடும் பணி விரைவாக நடைபெறுகின்றது.

மாற்றமுடியாத பரிமாற்றங்கள்:மறையாக்கநாணயங்கள் இன்று கிடைக்கக்கூடிய மிகவும் பாதுகாப்பான நாணய அமைப்புகளில் ஒன்றாகும். அதற்கு ‘மாறாத’ சொத்து உள்ளது; அதாவது, ஒரு பரிமாற்றத்தினை பிளாக்செயின் அடிப்படையிலான மறையாக்க நாணயங்களில் நிகழ்ந்திருந்தால், அதை மாற்ற முடியாது. எனவே இதில் மோசடி பரிமாற்றங்களின் வாய்ப்புகள் கிட்டத்தட்டமிகவும் சாத்தியமற்றதாகின்றது.

அரசாங்கத்தால் பணபரிமாற்றத்தினை நிறுத்தம்செய்திட முடியாது:பெரும்பாலான மறையாக்க நாணயங்கள் ஒரு பரவலாக்கப்பட்ட அமைப்பாக செயல்படுகின்றன மேலும் அதன் பரிமாற்ற விகிதமானது தேவை-அளிப்பு காரணிகளின்படி மாறும் வகையில் நிர்ணயிக்கப்படுகிறது. எந்தவொரு அரசாங்க விதிமுறை அல்லது எதுவும் அத்தகைய சுதந்திர மறையாக்க நாணயங்களின் பரிமாற்றங்களை நிறுத்த முடியாது. ஒரு அரசாங்கத்தால் செய்யக்கூடிய ஒரேசெயல், அதை சாதாரணமாக நாணயமாக மாற்றுவதை கட்டுப்படுத்துவதாகும்.. இருப்பினும், மறையாக்க நாணயங்களில் பரிமாற்றங்களை அரசாங்கங்களால் தடுத்து நிறுத்த முடியாது

பாதுகாப்பான கட்டண தகவல்:மறையாக்கநாணய பரிமாற்றங்கள் பயனாளர்களின் எந்தவொரு அடையாளத்தையும் பயன்படுத்தாது. இந்த பரிமாற்றத்திற்காக அவர்கள் அனுப்புநரின் , பெறுநரின் பணப்பைகளை மட்டுமே பயன்படுத்துவார்கள், மற்ற எல்லா தகவல்களும் பாதுகாப்பாக மறையாக்கம் செய்யப்படுகின்றன, அதை யாரும் திரும்பப் பெற முடியாது. யாரோ ஒருவர் மறையாக்கநாணயத்தை மற்றயாரோஒரு நபருக்கு / நிறுவனத்திற்கு அனுப்பும்போது, தனிப்பட்ட தகவல்கள் எதுவும் இருக்காது.. குறிப்பிட்ட அளவு பிட்காயின் ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது என்ற தகவல் மட்டுமே அவர்களுடன் பகிரப்பட்டிருக்கும்

பணவீக்கம் இல்லை :பெரும்பாலான மறையாக்கநாணயங்கள் அவற்றின் கருவூலத்தில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நாணயங்களைக் கொண்டுள்ளன. பிட்காயின் விஷயத்தில், இது 21 மில்லியன் ஆகும். இந்த நாணயத்திற்கான சுரங்கம் முழுவது தோன்டி எடுத்தவுடன் புதிய பிட்காயின்கள் எதுவும் இருக்காது. எனவே பணவீக்கத்திற்கு வாய்ப்பே இல்லை.

மறையாக்கநாணயங்களின் தீமைகள்

குறைவான ஏற்புகை :இந்த ‘மறையாக்கநாணயத்தி’ன் தேவையானது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகின்ற போதிலும், உலகில் பல்வேறு அரசாங்கங்கள் இந்த ‘மறையாக்கநாணயத்தின் பரிமாற்றங்களுக்கு எந்தவொரு அலுவலபூர்வ ஒப்புதலும் இதுவரை வழங்கவில்லை என்பதுதான் மிகமுக்கியமான கரும்புள்ளியாகும். அதன் பயன்பாடு இப்போது சில குறிப்பிட்ட களங்களுக்கு மட்டுமே வரையறுக்கப் பட்டுள்ளது. மேலும், ‘மறையாக்கநாணயங்கள்’ இன்னும் பொதுமக்களின் பரிமாற்றங்களி-லிருந்து வெகு தொலைவில் உள்ளன.

சீரற்ற பரிமாற்றவிகிதம்:இது ஒரு நன்மையாகவும் கருதலாம் அல்லது தீமையாகவும் கருதலாம். மறையாக்கநாணயங்களின் பரிமாற்ற விகிதத்தை வரையறுக்க கடுமையான தேவை அளிப்பு விதி இருந்தாலும், தற்போதைய சந்தை போக்குகள் மறையாக்க நாணயங்களின் பரிமாற்ற விகிதத்தில், குறிப்பாக பிட்காயினின் மாற்று விகிதத்தில் அசாதாரண எழுச்சியைக் குறிக்கின்றன. ஆனால் அது சாதாரண வேகத்தை விரைவில் எட்டும் என்று நம்பப்படுகிறது.

அரசுகளின் தடை:மறையாக்கநாணயங்களை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாது , ஆனால் அரசாங்கங்கள் முடிவுசெய்தால் அதைத் தடைசெய்து அதன் பரிமாற்றத்தினை சட்டவிரோதமாக்கலாம். நிச்சயமாக, இது அத்தகைய இலட்சிய, தடையற்ற இயக்கங்களுக்கு ஒரு கருமையானநிழலாக அமையும்.

பணவாட்ட செயல் நடைபெறலாம்:மறையாக்கநாணயங்கள் பொதுவாக எண்ணிக்கையில் மட்டுப்படுத்தப்பட்டவை அதன் பரிமாற்ற விகிதமானது தேவை அளிப்பு அடிப்படையை பொறுத்ததாகும். பெரும்பாலான மறையாக்கநாணயங்களை பயன்படுத்துபவர்களின் வருவாய்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நாணயங்கள் மட்டுமே இருப்பதால், பணவாட்டத்தின் சாத்தியங்கள் வேறு எந்த பொருளாதார அமைப்பையும் விட இதில் அதிகமாக உள்ளன. இதில், யாராவது பிட்காயினை நீண்ட நேரம் வைத்திருந்தால், இதனுடைய அளிப்பு குறையும், தேவை இன்னும்அதிகரிக்கும், மேலும் அது பணவாட்டத்தை உருவாக்கும்.

முக்கிய மீட்பு சாத்தியமற்றது :பெரும்பாலான மறையாக்கநாணயங்களுக்கு மைய அதிகாரம் எதுவம்இல்லை என்பதால், ஒவ்வொரு நபரும் தங்களுடைய கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருப்பது அவரவர்களுடைய பொறுப்பாகும். யாராவது ஒருவர் தன்னுடைய பணப்பையை இழந்தால், அதை திரும்பப் பெறவேறுயாராலும் உதவ முடியாது.

பணமோசடி / கறுப்புச் சந்தையை ஆதரித்தல்:மறையாக்கநாணயத்தின் அநாமதேயமானது கறுப்புச் சந்தையும் , பண மோசடி செய்பவர்களையும் ஈர்க்கின்றது. இதில் பரிமாற்ற அடையாளம் எங்கும் வெளிப்படுத்தப்படாததால், முறைகேடுகள் நடைபெறுவதாக பல முறை புகாரளிக்கப்பட்டுள்ளன. அவ்வாறானவைகளில் பிரபலமான இரண்டுபுகார்கள் பின்வருமாறு “silk road” வலைத்தளமானது சட்டத்துக்கு புறம்பான மருந்துகள் அளிப்பதை ஆதரித்தது மற்றொன்று சமீபத்திய “Wannacry” எனும் வலைத்தளமானது சட்டவிரோத பொருட்கள் வழங்குவதை ஆதரித்தது

இவ்வாறான இதனுடைய நன்மைகளைபற்றியும் தீமைகளைபற்றியும் கலந்துரையாடல் இன்னும் தொடர்ந்ந்து நடந்து கொண்டேயிருக்கின்றன,ஆயினும் உலகில் பெரும்பாலான அரசாங்கங்கள் இது தொடர்பாக எந்தவொரு நேரடி சட்ட கட்டமைப்பையும் இதுவரை வகுக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை நிலவரமாகும் .மறையாக்கநாணயத்தின் நிச்சயமாக மிகவும் வெளிப்படையான பொருளாதார அமைப்பை உருவாக்க பயன்படுத்தப் படலாம் என்பதே இதனுடைய தற்போதைய சாத்தியக்கூறுகளாகும், ஆனால் அதன் தீமைகளையும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் இத்தகைய பெரிய பாய்ச்சல்களை எடுப்பதற்கு முன்பு கவனித்துக் கொள்ள வேண்டும். இது போன்ற ஒரு சாத்தியமான தொழில்நுட்பத்தை தற்போதைய நிலையில் தவிர்க்க முடியாது, எனவே நாம் வாழும் இந்த உலகில் முழு மையான சட்டப்பூர்வமாக்கப்பட்ட மறையாக்க நாணயத்தின் அடிப்படையிலான பொருளாதார அமைப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.

தொடரும்

பிளாக்செயின் தொழில்நுட்ப வழிகாட்டி-9- பிட்காயின்அறிமுகம்

இந்த தொடரில் பிட்காயின் என்பது பற்றி காண்பதற்குமுன் பிளாக்செயின் என்றால் அது ஒரு இயக்கமுறைமையா என்பது பற்றியவிவரத்தினை காண்போம்
பிளாக்செயின் என்பது நிகழ்வுகள் அல்லது பரிமாற்றங்களின்பேரேடு ஆகும், அவை சேதத்தை எதிர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆயினும் மையபடுத்தப்படாமல் பரவலாக்கம் (decentralization) செய்வதன் மூலம் இதனை அடைகின்றது, இங்கு பரவலாக்கம் என்பது ஒரு ஆடம்பரமான சொல்லாகும், அதாவதுஇதில் செய்கின்ற அனைத்து பதிவுகளின் ஒரேயொரு முதன்மை நகல்கூட இல்லாதா ஆவணமாகும் . உதாரணமாக, நாமும் நம்முடைய நான்கு நண்பர்களும் சேர்ந்து நம்முடைய வீட்டு பணிகளுக்கு முதன்மை அட்டவணை ஒன்றினை உருவாக்கி, ஒரேயொரு நபர்அதனை கவனித்துக் கொள்கின்றார்என கொள்க, இங்குஅட்டவணையை வைத்திருப்பவர் அதைக் கட்டுப்படுத்துபவர் ஆகியவை சேர்ந்து அது ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பாகும். . எனவே, கட்டுபடுத்துபவர் விரும்பினால் அதில் அவர்விரும்பியவாறு யாருடைய அனுமதியும் இல்லாமல் ஒருசில சிறிய மாற்றங்களைச் செய்ய முடியும், இதனால் அதனை மறுத்திடும்நபர் அதிலிருந்து எளிதாக வெளியேற முடியும். இருப்பினும், இதற்கு மறுதலையாக பரவலாக்குதல் என்பதன்கீழ் எல்லோரும் ஒரே பணி அட்டவணையை ஒப்புக் கொண்டால், அதனை தொடர்ந்து அவ்வனைவருக்கும் அப்பணி அட்டவணையின் ஒரே நகலை அச்சிட்டு வழங்கினால் என்ன செய்வது? அந்த வகையில், யாராவது ஒருவர் தங்களுக்கு சாதகமாக அந்த அட்டவணையைத் திருத்த முயற்சித்தால், நான்கு நண்பர்களும் ஒத்துகொண்டால் மட்டுமே அவ்வாறு சரிசெய்ய முடியும். அதேபோல், யாராவது ஒரு சில பணிகளைச் செய்ய விரும்பினால், எல்லோரும் மாற்றத்தை ஒப்புக் கொண்டால், மட்டுமே அனைவருடைய நகலிலும் இதைப் பிரதிபலிக்க தங்களுடைய அட்டவணையை புதுப்பிக்கலாம்.
இதே போன்ற ஒருபிளாக்செயினில் ஒரு பேரேட்டின் பதிவை வைத்திருக்க இது பிணையத்தில் வெவ்வேறு கணினிகளைப் முனைமங்களாக பயன்படுத்திகொள்கின்றது, ஒவ்வொரு கணினியும் அதன் சொந்த நகலைக் கொண்டுள்ளன. பிளாக்செயினில் யாராவது ஒரு உள்ளீட்டைச் சேர்க்க அல்லது திருத்த முயற்சிக்கும்போது, சம்பந்தப்பட்ட எல்லா கணினிகளும் அதைச் சரிபார்க்கும். இந்த சரிபார்ப்பினை கடந்துவிட்டால், அது பிளாக்செயினில் சேர்க்கப்படும், மேலும் பிணையத்தில் உள்ள அனைத்து முனைமங்களின் கணினிகளும் இதைப் பிரதிபலிக்க தங்கள் சொந்த நகலைப் புதுப்பிக்கின்றன. இந்த அனைத்து பிளாக்செயின்களின் முக்கிய பிரச்சனை என்னவென்றால், அவற்றில் பல்வேறு வகைகள் உள்ளன. அவை கடைகள், போக்குவரத்து, உற்பத்திநிறுவனங்கள் மறையாக்க நாணய பேரேடுகள் ஆகியவற்றிற்கு மிகச் சிறந்தவைகளாக உள்ளன, அதாவது எதிர்காலத்தில் நம்முடைய அனைத்து செயல்களும் இந்த பிளாக்செயின்களால் நிறைந்தவைகளாகவே இருக்ககூடும். கூடுதலாக, தற்போது நாம் பல்வேறு வகைகளிலான இயக்க முறைமைகளும் மென்பொருட்களும் நம்முடைய அன்றாட பயன்பாட்டில் உள்ளன. அதனோடு இவ்வாறன வெவ்வேறு அமைப்புகளுக்கு இடையில் ஏராளமானஅளவில் பொருந்தாத தன்மை களுடன் இவை உள்ளன
ஒரு பிளாக்செயின் இயக்க முறைமையானது இந்த இரண்டு சிக்கல்களையும் தீர்வுசெய்கின்ற நோக்கம் கொண்டதாகும் முதலாவதாக இன்றைய பிளாக்செயின் இயக்க முறைமைகள் மெய்நிகராக செயல்படுகின்றன. அதாவது அவை கணினியின் வன்பொருளில் இயங்காதவை, மாறாக மேகக்கணியில் இயங்குகின்றன. மேலும் கணினி, ஐஓஎஸ் அல்லது செல்லிடத்துபேசிகளில் கூட பிளாக்செயின்களை நிருவகிக்கலாம் இரண்டாவதாக, ஒரு பிளாக்செயின் இயக்க முறைமையின் நோக்கம் சாத்தியமான எந்தவொரு பிளாக்செயினையும் உள்ளடக்குவதாகும். உதாரணமாக நாம் விரும்பினால் ஏதேனும் ஒரு கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யலாம், இது ஒரு பணப்பைஇயக்கமுறைமையில் காண்பிக்கப்படும். பல கிரிப்டோகரன்சி பிளாக்செயின்களில் நம்முடைய நிதியைப் பரப்பலாம், மேலும் இயக்கமுறைமை ஒவ்வொரு இருப்புக்கும் தாவல்களை வைத்திருக்கும். நாம் OSஇன் சந்தைக்குச் சென்று, நாம் விரும்பும் ஒரு பணியகத்தை யாராவது விற்கிறார்களா என்று பார்க்கவேண்டும். ஆம்எனில் நாம் கிரிப்டோகரன்சியில் ஏற்றிஅதை வாங்கிகொள்ள வேண்டும், மேலும் இந்தOSஆனது நிதிநடவடிக்கைகளை கையாளுவதையும், சந்தையின் பிளாக்செயினில் பதிவைச் சேர்ப்பதையும் நிருவகிக்கின்றது. கணினி அல்லது செல்லிடத்து பேசியில் உள்ள இயக்க முறைமை போலவே இவை அனைத்தும் ஒரு GUI எனும் வரைகலை பயனாளர் இடைமுகப்புடன் செய்யப்படுகின்றன. அனைத்து தளங்களிலும் குறுக்காக பொருந்தக்கூடிய தன்மையைப் பற்றி கவலைப்படாமல் வெவ்வேறு பிளாக்செயின் இயக்கப்படும் பயன்பாடுகளை நிருவகிக்க இது எளிதாக்குகின்றது. இது அறிவியல் புனைகதைகளில் ஏதோவொன்றாகத் தோன்றலாம், ஆனால் இந்த இயக்க முறைமைகள் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து கொண்டிருக்கின்றன. என்ற தகவலை மனதில்கொள்க
உதாரணமாக, நிஞ்ஜா இயக்க முறைமை ஒரு பயன்பாட்டில் தகவல்தொடர்புகளையும் பிளாக்செயினையும் இணைத்துசெயல்படுகின்றது. ஒரு பிளாக்செயினில் உள்நுழைந்துள்ள அனைத்து விவரங்களுடனும் மென்பொருளைப் பயன்படுத்தி சுதந்திரமானவர்களை நாம் பணியமர்த்திடலாம்.
எதிர்காலத்தில் இவ்வாறு இணைக்கப்பட்ட பிளாக்செயின்களை வைத்திருப்பது என்பது பல்வேறு இடங்களில் ஒரு வீட்டைக் கண்டுபிடிக்கும் ஒரு பயனுள்ள கருவியாகவும் மாறவிருக்கின்றது – அதிர்ஷ்டவசமாக, பிளாக்செயின் இயக்க முறைமைகள் இந்தபேரேடுகளை நிருவகிக்கவும் பயன்படுத்தவும் எளிதாக்க உதவும்.
பிட்காயின்
பிட்காயின் என்பது முதன் முதல் கிரிப்டோகரன்சியாகவும் உலகின் முதன்முதலான பிளாக்செயின் செயல்படுத்துதலாகவும் விள ங்குகின்றது இது பயனாளர்களுக்கு இடையேயான பி 2 பி எனும் பகிரப்பட்ட வலைபின்னல், விநியோகிக்கப்பட்ட பேரேடுகள் மறையாக்கப்பட்டவரைகலை, பாதுகாக்கப்பட்ட தரவைக் கொண்ட ஒரு பொதுவான பிளாக்செயினின் சரியான கட்டமைப்பைப் பின்பற்றுகிறது.
பிட்காயினை செயல்படுத்துதல் : . பிட்காயினை செயல்படுத்துதல் என்பதுமிக எளிதான நடைமுறையாகும் மேலும் இந்த பிட்காயின் பயன்படுத்த எந்தவொரு தொழில்நுட்ப அறிவும் அல்லது நிரலாக்க திறன்களும் நமக்குத்தேவையில்லை. நாம் செய்ய வேண்டியதெல்லாம் முதலில் ஒரு பிட்காயினிற்காக பிளாக்செயினில் ஒரு கணக்கை உருவாக்குவதுதான். அதற்காக, டிஜிட்டல் பணப்பைஒன்றினை உருவாக்குவதே மிக எளிய வழியாகும். தற்போது இதற்காகவென coinbase , BitCore போன்ற பணப்பை சேவை வழங்குநர்கள் பலர்தயாராக உள்ளனர்
. இவ்வாறு ஒரு கணக்கை உருவாக்கும் போது பயனாளர் தமக்கென தனியாக ஒரு ‘திறவுகோளை’ பெற வேண்டும் (இணையதள பக்கங்களில்ஏதேனும் ஒரு கணக்கு துவங்குவதற்கான நம்முடைய கடவுச்சொல்லைப் போன்றது ). தொடர்ந்து இந்த ‘திறவுகோளைப் பயன்படுத்தி பணப்பையை செல்லுபடியாக்க கூடிய தனியார்திறவுகோள் பொதுத் திறவுகோள் ஆகி இருதிறவுகோள்கள் உருவாக்கப்படும். பொதுத் திறவுகோள்என்பது அனைவருக்கும் தெரிகின்ற, பயனாளரின் கண்ணுக்க புலப்படுகின்ற கணக்கு சுட்டியாகும். மறுபுறம், பயனாளர் தனிப்பட்ட திறவுகோளினை தனியாக வைத்திருக்கின்றார், அது அவரது கணக்கிற்கான அணுகல் திறவுகோளாகும். ஒரு நபர் இந்த தனியார் திறவுகோளை இழந்தால் அவர் தனது கணக்கினையும் பணத்திற்கான அணுகலையும் இழக்கின்றார் என்ற செய்தியை மனதில் கொள்க.
பிட்காயினை கொள்முதல்செய்தல்: பிட்காயின் பரிமாற்றத்திலிருந்து அவற்றை வாங்குவதே பிட்காயின் சொந்தமாக வைத்தருப்பதற்கான எளிதான வழியாகும்,. சாதாரண நாணயத்தை பிட்காயினுக்கு பரிமாறிக்கொள்வதற்காக இணையத்தில் நேரடி பிட்காயின் பரிமாற்றங்கள் பல உள்ளன. அவைகளுள் ஒன்றினை பின்பற்றி பொதுமக்கள் தங்களுடைய சாதாரண நாணயத்தை இந்த பிட்காயினுக்கு மாற்றிக்கொண்டு அதை தங்களுடைய பணப்பைக்கு நகர்த்தலாம். மற்றொரு முறையில் பிட்காயின் சுரங்கத்தில் பங்கேற்று பிட்காயின் சொந்தமாக்கி கொள்ள முடியும்.
பிட்காயின்பரிமாற்றங்கள் :ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு பிட்காயின் அனுப்புவது பெறுவது ஒரு பரிமாற்றம் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக இது பணப்பைகளின் மூலம் செயற்படுத்தப்படுகின்றது. பணப்பரிமாற்றம் ஒரு இடைமுகத்தை வழங்கும், அங்கு பெறுநரின் கணக்கு சுட்டியையும் நாம் மாற்ற விரும்பும் தொகையையும் உள்ளிடலாம்.
பரிமாற்றம் செய்தவுடன், சுரங்கத் தொழிலாளர்கள் பரிமாற்றத்தினைச் சரிபார்த்து, அது முறையானதாக இருந்தால், பிளாக்செயின் பேரேட்டில் சேர்ப்பார்கள். இந்த பிட்காயினானது, பரிமாற்ற செலவு இல்லாதவைகளாகும். வழக்கமாக, ஒரு பரிமாற்ற சரிபார்ப்பு நேரம் பிட்காயினில் சுமார் 10 நிமிடங்கள் ஆகும், ஆனால் நாம் ஒரு சிறிய பரிமாற்ற கட்டணத்தை வழங்கினால், அதை விட விரைவுபடுத்தலாம்
பிட்காயின் சுரங்கம்: என்பது பிட்காயினில் மிக முக்கியமான பங்காற்றுகின்றது புதிய பரிமாற்றங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு அவைகளை ‘பிளாக்செயினில் சேர்த்திடும் செயல்முறையையே பிட்காயின் சுரங்கமாகும். இது பிரத்யேக சுரங்க வன்பொருளைக் கோருகிறது, இதனால், அனைத்து முனைமங்களும் இந்த சுரங்கபணிகளில் ஈடுபடுவதில்லை. சுரங்க சார்பு செயல்முறையில் பங்கேற்கும் முனைமங்கள் ‘சுரங்கத் தொழிலாளர்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.
வலைபின்னல்களில் ஒளிபரப்பப்படும் பிணையத்தில் புதிய பிட்காயின் பரிமாற்றம் நிகழும்போது. சுரங்கத் தொழிலாளர்கள் இந்த ஒளிபரப்பைக் கேட்டு பரிமாற்றத்தின் சரிபார்ப்பில் ஈடுபடுகிறார்கள். பரிமாற்றங்கள் சரிபார்க்கப்பட்டவுடன் அவை ஒரு தொகுப்பில் சேர்க்கப்படும்.
இந்நிலையில் இந்த சுரங்கத் தொழிலாளர்கள் உண்மையில் என்ன செய்கிறார்கள்? என்ற கேள்வி நம்மனைவரின் மனதிலும் எழும் நிற்க
இங்கே,புதிய தொகுப்பிற்கு (block )ஒரு ஹாஷ் மதிப்பைக் கண்டுபிடிப்பதே சுரங்கத் தொழிலாளியின் நோக்கமாகும். ஹாஷ் மதிப்பை முதலில் கண்டுபிடிக்கும் சுரங்கத் தொழிலாளிக்கு தொகுப்பில் போதுமான பரிசாக ஒரு சில பிட்காயின்கள் வழங்கப் படுகின்றன. தற்போது அவ்வாறான பரிசுகள் 12.5BTC. ஆகும் இந்த பரிசானது ஒவ்வொரு 210,000 தொகுப்புகளிலும் அல்லது ஏறத்தாழ ஒவ்வொரு 4 வருடங்களுக்கு ஒருமுறை பாதியாக குறைக்கப்படுகின்றது.
ஹாஷ் மதிப்பைக் கண்டுபிடிப்பது பெரிய செய்தியன்று. ஒவ்வொரு முனைமத்திலும் அதை செய்ய முடியும். எனவே, முனைமங்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட ஒரு சிரமமான நிலை உருவாகின்றது அதனுடன் அந்த சிரமத்துடன் தொடர்புடையதாக அமைகின்றது. இந்த சிரம நிலை என்பது ஹாஷைக் கண்டுபிடிப்பது எவ்வளவு கடினம் என்பதற்கான ஒரு நடவடிக்கையாகும்.
ஒரு தொகுப்பினை வைத்திருக்கக்கூடிய ஹாஷ் மதிப்புகளின் தொகுப்பை சிரம நிலையானது சுருக்குகின்றது. சிரம நிலை இல்லாமல், ஹாஷ் 2 ^ 256 சாத்தியக்கூறுகளின் சூப்பர் பிரம்மாண்டமான தொகுப்பிற்குள் எந்த மதிப்பையும் கொண்டிருக்கலாம் (ஹாஷின் நீளம் = 256 பிட்கள் என்பதால்). கடினமான மட்டத்தை இணைப்பதன் மூலம், இலக்கு நிர்ணயிக்கப்படுவது கணிசமாகக் குறைக்கப்படுகிறது. சிரமநிலை விவரக்குறிப்பு-பல பூஜ்ஜியங்களின் அடிப்படையில் பொய்யானது, அதாவது சுரங்கத் தொழிலாளர் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பூஜ்ஜியங்களுடன் தொடங்கும் ஹாஷ் மதிப்பைக் கண்டுபிடிக்க வேண்டும். முனைமங்கள் வெவ்வேறு ஹாஷ் மதிப்புகளைக் கண்டுபிடித்து, தேவையான சிரம நிலையை பூர்த்திசெய்கிறதா என்று சரிபார்க்கிறது.
ஒரு தொகுப்பின் தரவு ஒரே மாதிரியாக இருப்பதால், ஹாஷ் மதிப்பு எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும். ஆகையால், வெவ்வேறு ஹாஷ் மதிப்புகளை முயற்சிப்பதற்கான ஒரே சாத்தியம், தொகுப்பின் உள்ளடக்கத்துடன் ஒரு nonceஐ இணைப்பதன் மூலம் மட்டுமே.யாகும் இங்கு Nonce என்பது 32-பிட் நீளத்தின் தன்னிச்சையான சரமாகும் அதாவதுH(block + nonce)
இங்கு ஒரு இலக்கு சிறிய தாக நிர்ணயிக்கப்பட்டதால், வெற்றியைக் கண்டுபிடிப்பதற்கான நிகழ்தகவு குறைகின்றது. சுரங்கத் தொழிலாளர்கள் ஒரு முரட்டுத்தனமான முறையில் மாற்றத்தை மாற்றிக்கொண்டே இருப்பார்கள், அதோடு தொடர்புடைய ஹாஷ் மதிப்பும் ஒவ்வொரு முறையும் கணக்கிடப்படுகின்றது. இது ஒரு உண்மையான , முனைமங்களின் முக்கியமான கணக்கீட்டு சக்தியாகும் , ஏனெனில் சுரங்கத் தொழிலாளர்கள் ‘nonce’ இன் பெரிய சேர்க்கைகளை முயற்சிக்க வேண்டும். அர்ப்பணிப்பு வன்பொருள் உயர் கணக்கீட்டு சக்தியுடன் கூடிய முனைமத்திற்கு இதனை வெல்வதற்கும் தொகுப்பின் பரிசைப் பெறுவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது. முதலில் ஹாஷைக் கண்டுபிடிப்பவர்கள், தொகுப்புடன் சேர்ந்து ஒளிபரப்பப்படுவார்கள்.
இதைப் பெறுவதன் மூலம், மற்றவர்கள் சுரங்கத்தை நிறுத்தி, பெறப்பட்ட ஹாஷ் மதிப்புகுறிப்பிட்ட சிரம நிலையை பூர்த்திசெய்கிறதா என்பதை சரிபார்க்கிறது. ஆம் எனில், முனைமங்கள் அதை ஏற்றுக்கொள்வதை ப்ளாக்செயினில் சேர்ப்பதன் மூலம் காட்டுகின்றன.
தொடரும்

பிளாக்செயின் தொழில்நுட்ப வழிகாட்டி-8-கிரிப்டோ நாணயம்

முந்தைய தொடர்களில், பிளாக்செயின் , அதன் அமைப்பு ஆகியவற்றை பற்றி விவாதிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து பிரபலமான பிளாக்செயின் நெறிமுறையிலான பிட்காயின் ஒன்றை பற்றி விளக்கமாக காண்பதற்கு முன்பு, கிரிப்டோ நாணயம் என்பதை பற்றி அறிந்துகொள்வது நல்லது.
கிரிப்டோ நாணயம் குறித்தஆலோசனையானது 1998 ஆம் ஆண்டிலிருந்து இருந்து வருகின்றது. இந்த கிரிப்டோ நாணயத்தை உருவாக்குவதற்குமுன் அதற்கு அடிப்படையாக பி-மனி , பிட் கோல்ட் ஆகியவை குறித்து முதலில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது, ஆனால் இவ்விரண்டுமே ஒருபோதும் நடப்பு பயன் பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை. கிரிப்டோ நாணயங்கள் என்பன கிரிப்டோகிராஃபிக் அடிப்படையில் செயல்படும் டிஜிட்டல் அல்லது மெய்நிகர் நாணயங்கள் ஆகும் . இந்த பெயரில் குறிப்பிடுவது போல, இது ஒருபோதும் தொட்டுணரக்கூடிய அச்சடிக்கப் பட்ட தாட்களால் ஆன நாணயமன்று . அவை வெறுமனே நிரலாக்கக் குறிமுறைவரிகளின் தொகுப்பாகவே இருக்கின்றன. ஆயினும் நடப்பில் இருக்கும் பல நாணயங்களை விட இது அதிக பாதுகாப்பினையும் பயன்பாட்டினையும் வழங்குகின்றது. இந்த கிரிப்டோ நாணயமானது பிளாக்செயின் தொழில்நுட்பத்தின்அடிப்படையில் இயங்குகின்றது இன்த கிரிப்டோ நாணயத்தைப் பொறுத்தவரை, அது உருவாக்கப்பட்டு வலைபின்னல் முழுவதும் பரிவர்த்தனை செய்யப்படும் ஒருநாணயமாகும் இந்த கிரிப்டோ நாணயத்தின் பரிமாற்றவிவரங்களை அதற்கான பேரேடு வைத்திருக்கின்றது. ஒரு குறிப்பிட்ட பிளாக்செயினில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் ஒரு தனிப்பட்ட கணக்கு முகவரி இருக்கும். இந்த நாணயகணக்கில் பற்றும் வரவும் வைக்கப்படுவதன் வாயிலாக கிரிப்டோ நாணயமானது எப்போதும் இந்த கணக்குகளுடன் தொடர்புடையபணப்பைகள் எனப்படும் பயன்பாட்டின் மூலம் பொதுமக்கள் தங்களுடைய கணக்கை நிருவகிக்கலாம். பணப்பைகள் மூலம், வலைபின்னலில் இதுகுறித்து ஒரு கணக்கு வைத்துள்ள எவருடனும் இந்த நாணயத்தை பரிமாறிகொள்ள முடியும் இவ்வாறான பரிமாற்றங்கள் வலைபின்னலில்இணைந்துள்ள முனைமங்களால் சரிபார்க்கப்பட்டு பிளாக்செயின் பேரேட்டில் சேர்க்கப்படுகின்றன. எனவே மாறாத , மறை குறியாக்கப்பட்ட பிளாக் செயினின் பேரேடு என்பது கிரிப்டோ நாணயத்தின் முதுகெலும்பாகும்.
இந்த கணக்கினை துவங்கிடும்போது ஆரம்பத்தில், இந்த பணப்பையானது 100 யூனிட் கிரிப்டோ நாணயத்துடன் வரவு வைத்துள்ளது என்று வைத்துக்கொள்க. அதனை தொடர்ந்து நாணயத்தின் ஒவ்வொரு அசைவும் பொது ப்பேரேட்டில் பதிவு செய்யப்படும், வலைபின்னலில் பங்கேற்கும் ஒவ்வொரு முனைமத்திலும் இந்த நாணயத்தின் கடந்த காலத்தையும், அந்நாணயத்தின் நிகழ்காலத்தையும் பார்க்கலாம். இதனால் இது மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய நாணய அமைப்பாக விளங்குகின்றது என்ற செய்தியை மனதில் கொள்க.
பிளாக்செயினின் குறிப்பிடத்தக்க வசதி வாய்ப்புகளான குறியாக்க வழிமுறை, பியர் டு பியர், ஒரேமையத்தில் கட்டுப்படுத்துதல் / மத்திய சேவையகம் இல்லாதது ஆகிய அனைத்தும் இந்த கிரிப்டோ நாணயத்திற்கும் பொருந்தும். .ஒவ்வொரு கிரிப்டோ நாணயமும் ஒரு பிளாக்செயினின் நெறிமுறையில் செயல்படுகின்றது. அதனடிப்படையில் செயல்படும் மிகவும் பிரபலமான கிரிப்டோ நாணயங்களில் ஒன்று பிட்காயின் ஆகும், இந்த பிட்காயினின் அனைத்து நடவடிக்கைகளும் பிளாக்செயினின் தொழில்நுட்பத்தை நம்பியுள்ளது . அவ்வாறே ஈதர் என்பது மிக வேகமாக வளர்ந்து வரும் மற்றொரு கிரிப்டோ நாணயம் ஆகும், இந்த ஈதரானது Ethereum எனும் நெறிமுறையில் இயங்குகிறது.
பாரம்பரிய நாணயங்களுடன் ஒப்பிடுகையில், கிரிப்டோ நாணயங்கள் பங்கேற்பாளர் களுக்கு மிகவும் அநாமதேய தன்மையை வழங்குகின்றன. பயனாளரின் ஒரே அடையாளம் அவரது கணக்கு முகவரி மட்டுமேயாகும், மீதமுள்ள அனைத்தும் மறையாக்கம் செய்யப்பட்டு விடுகின்றன.. பங்கேற்பாளருக்கு பயனாளரின் உண்மையான அடையாளம் குறித்து எந்த எண்ணமும் இருக்காது
சடோஷி நகமோட்டோ என்பவர் இவ்வான நாணய பரிமாற்றங்களின் வாயிலாக முதலில் நன்கு அறியப்படாத நபர் ஆயினும் கிட்டத்தட்ட 980,000 பிட்காயின்கள் அவருடை கையிருப்பில் இருந்தன, அவர் உலகின் பணக்காரர்களில் ஒருவராக கருதப்பட்டார். ஆரம்ப ஈடுபாடு ஆதரவுக்குப் பிறகு, இவர்வலைபின்னலையும் மூலக் குறியீட்டின் கட்டுப்பாட்டையும் இந்த சமூகத்தின் பிற உறுப்பினர்களிடம் ஒப்படைத்துவிட்டு காணாமல் போய்விட்டார்.
தொடரும்

பிளாக்செயின் தொழில்நுட்ப வழிகாட்டி-7-பிளாக்செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்திடுகின்ற பல்வேறு துறைகள்

ஆரம்பத்தில், பிளாக்செயின் என்பது பிட்காயின் எனும் நாணய வாய்ப்புகள் பற்றியதாக மட்டுமே இருந்து வந்தது. தொடர்ந்து காலஓட்டத்தில் பிளாக்செயின் அடிப்படையிலான பல்வேறு மறையாக்க நாணயங்களும் சந்தைக்கு வந்துசேர்ந்தன. அவைகளில் ஒருசில வெற்றி வாய்ப்பினை கண்டாலும், வேறு சில மறையாக்க நாணயங்கள் பின்தங்கியிருந்தன. இருப்பினும், வெகுவிரைவில் பிளாக்செயின் தொழில் நுட்பமானது தன்னுடைய உண்மையான திறனைக் கண்டறிந்ததால் .சுகாதாரத் துறை, நிறுவன மென்பொருள் மேம்பாடு, வங்கி, காப்பீடு என்பன போன்ற பல்வேறு கணிக்கமுடியாத துறைகளுக்கும் இந்த சேவையானது பரவி வருகின்றது கிடைத்துள்ள முக்கிய வலைதள புள்ளி விவரங்களின்படி,இந்த பிளாக்செயின் சந்தையானது வருகின்ற 2024 ஆண்டிற்குள் ஏறத்தாழ 20 பில்லியன் அளவிற்கு உயர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிளாக்செயினை பயன்படுத்தி கொள்ளும் பல்வேற் துறைகள் பின்வருமாறு
7.1.வங்கியும் நிதிபரிமாற்ற நடவடிக்கைகளும்: தற்போது அனைத்து வகையான வங்கி நடவடிக்கைகளும் குறிப்பாக பணபரிமாற்ற முறைகள் அனைத்தும் பிளாக் செயின் தொழில்நுட்பத்தைநோக்கியே நகர்ந்துவருகின்றன. பிட்காயின் போன்ற மறையாக்க நாணயங்களை கொண்டு எந்தவொரு புவிசார் அரசியல் கட்டுப்பாடுகளும் குறுக்கீடுகளும் இல்லாமல் நிதி பரிமாற்ற முறைகளை மிகச்சிறப்பாக கட்டுப்படுத்த முடியும். ABRA என்பது பிட்காயின் அடிப்படையிலான பணம் செலுத்துதல் நடவடிக்கைக்கு ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.
7.2.சைபர் பாதுகாப்பு: பிளாக்செயினில், குறியாக்கவியலைப் பயன்படுத்தி தரவுகள் சரிபார்க்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. இது கணினியில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்படாத மாற்றங்களையும் அபகரித்தல்களையும் கட்டுப்படுத்துகின்றது. இந்த அமைப்பிலிருந்து இடைத்தரகர்களை இது அறவே நீக்கம் செய்துவிடுகின்றது, எனவே இதில் யாரும் அங்கீகரிக்கப்படாத மாற்றங்களைச் செய்ய முடியாது.
7.3.விநியோக சங்கிலி: பிளாக்செயின்தொழில்நுட்பமானது விநியோகச் சங்கிலியுடன் இணைந்து சிறந்த வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் பின்னூட்ட பொறிமுறை ஆகியவற்றை வழங்குவதன் வாயிலாக விநியோகச் சங்கிலியில் புதிய புரட்சியை ஏற்படுத்திவருகின்றது. இந்த பிளாக்செயின் தொழில் நுட்பமான விநியோக சங்கிலியின் நிருவாகத்தைப் பயன்படுத்தி எந்தவொரு உற்பத்தி பொருளையும் முழுமையாகக் கண்காணிக்க முடியும். ,மிகமுக்கியமாக ஒரு பொருள் உற்பத்தியின் அல்லது வழங்குகின்ற ஒருசேவையின் ஒவ்வொரு நிலையையும் ஒவ்வொரு இயக்கத்தையும், ஐஓடி சென்சார்களின் வாயிலாக பிளாக்செயினில் பதிவு செய்யப்பட்டு விநியோக சங்கிலியின் இயக்கம் தொய்வுற்று தடைபெறாமல் இருக்குமாறுஇந்த பிளாக்செயின் அடிப்படையிலான விநியோக சங்கிலி மேலாண்மை அமைப்பின் மூலம் சரிபார்த்து செயல்படுமாறு கண்காணிக்க முடியும். .
7.4.இணையத்தின் வாயிலான நேரடியாக தரவுகளை சேமித்தல்:ஒன்ட்ரைவ், கூகிள் டிரைவ் போன்ற மையப்படுத்தப்பட்ட சேவையகத்தில் தரவுகளை சேமித்திடும் பணியானது குறிப்பிட்ட பகுதி செயல்படாமல் தோல்வியுற்றால் அந்த ஒற்றை புள்ளியில் சேமித்த தரவுகள்அனைத்தும் முழுமையாக பாதிக்கப் படக்கூடிய நிலை ஏற்படும் . ஆனால் இந்த பிளாக்செயின்தொழில்நுட்பத்தில் விநியோகிக்கப்பட்ட தரவுகளின் சேமிப்பு வழிமுறை பின்பற்றபடுவதால் தரவுகளானவை மிகவும் பாதுகாப்பாகபல்வேறு முனைமங்களிலும் சேமிக்கப்பட அனுமதிக்கபடுகின்றன. அதனால் சேமிக்கப்படுகின்ற தரவுகள் எப்போதும் இழப்பு ஏற்படாத சூழல் ஏற்படுகின்றது மேலும் தரவுகள் மறைகுறியாக்கப்பட்டு சேமிக்கபடுகின்றன
7.5.வலைபின்னலும் IoTஎனும்பொருட்களுக்கான இணையமும்: பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி IoT சாதனங்களுக்கான பரவலாக்கப்பட்ட வலை பின்னலை மிகஎளிதாக உருவாக்கிட லாம். அதன்வாயிலாக IoT சாதனங்களைக் கையாளும் பணியை செயல்படுத்தவதற்கான மைய இருப்பிடத்தின் தேவையை அறவே நீக்கிவிடமுடியும்.
7.6.காப்பீடு:உலகளாவிய காப்பீட்டு சந்தையானது நம்பிக்கை நிருவாகத்தின் அடிப்படையாகக் கொண்டதாகும். அவ்வாறான நம்பிக்கையை நிருவகிப்பதற்கான புதியதொரு வழியாக இந்த பிளாக்செயின் தொழில்நுட்பமானது திகழ்கின்றது. பங்கேற்பாளர்களிடையே பரஸ்பர நம்பிக்கையை இந்த பிளாக்செயின் தொழில் நுட்பமானது உறுதி செய்கின்றது. பிளாக்செயின் அடிப்படையிலான காப்பீட்டு மேலாண்மை அமைப்பிற்கு Aeternity ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
7.7.கூட்ட நிதி(crowdfunding) :என்பது புதியதாக துவங்கிடும் நிறுவனங்களும் செயல் திட்டங்களும் வெற்றிகரமாக செயல்படுவதற்கு அடிப்படை தேவையான நிதியை திரட்டிடுவதற்கான ஒரு பிரபலமான வழிமுறையாகும். இந்த பிளாக்செயின் அடிப்படையிலான crowdfunding தளங்களில் நம்பிக்கை, திறன்மிகு ஒப்பந்தங்கள் இணையத்தின் நற்பெயர் அமைப்புகள் ஆகியவற்றின் மூலம் கட்டமைக்கப்படுகின்றது, இந்த சேவைக்காக அதிக கட்டணம் வசூலிக்கும் ஒரு மையநிறுவனத்தின் தேவையை அறவே நீக்குகின்றது. இந்த தொழில் நுட்பத்தின் வாயிலக புதிய செயல்திட்டங்கள் தங்களுடைய டோக்கன்களை வெளியிடலாம் பின்னர் உற்பத்தி பொருட்கள், சேவைகள் அல்லது பணத்திற்காக அவற்றைபரிமாறிக்கொள்ளலாம்.
7.8.பல்லூடகமும் பொழுதுபோக்குநிகழ்ச்சிகளும்: இப்போது மூன்றாம் தரப்பு குறுக்கீடு அதிகமாக இருக்கும் பொழுதுபோக்கு துறையிலும் பிளாக்செயின் தொழில்நுட்பம் நுழைந்துள்ளது. இந்த துறையில் பிளாக்செயின் தொழில்நுட்பத்தினை செயல்படுத்தினா ல் இடைத்தரகர்களை இந்த துறையிலிருந்து அறவே அகற்றிவிடுகின்ற சூழல் உருவாகும். இந்த பிளாக்செயின் தொழில்நுட்பம் ஏற்கனவே செயல்படுத்தத் துவங்கிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் இணைய இசையும் ஒன்றாகும் எ.கா.; மைசிலியா & உஜோ இசை ஆகியவைகளாகும்
7.9.வீட்டுமனை கட்டுமானத்துறை :பிளாக்செயின் தொழில்நுட்பத்தினை செயல்படுத்தலினால் கடுமையான மாற்றத்தை ஏற்படுத்தும் மற்றொரு முக்கியமான துறையாகும். தற்போதைய ரியல் எஸ்டேட் அமைப்பானது ஏராளமான அளவில் நிலஉரிமை மற்றும் பரிமாற்ற சிக்கல்களை எதிர்கொள்கின்றது. இந்தத் துறையின் பிளாக்செயின் தொழில்நுட்பத்தை செயல்படுத்தினால் பகிர்வு பேரேடுகளுடன் முழு ரியல் எஸ்டேட் அமைப்பினையும் கட்டுப்படுத்திட முடியும். இதற்கு எடுத்துகாட்டாக இந்தியாவில் முதன்முதலில் ஆந்திர மாநில அரசின் பதிவு துறையானது பிளாக்செயின்தொழில்நுட்பத்தின் மூலம் முழுமையான நில பதிவு செயல்முறையை நடைமுறைபடுத்த துவங்கிவிட்டது.
7.10.அரசுத்துறைகள்:அரசாங்க அமைப்புகளில் பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதிகாரத்துவ தடைகள், சிவப்புநாடா தன்மைகள் ஆகியவற்றை வெகுவாக குறைத்திடமுடியம், மேலும் அரசாங்கத்தின்அனைத்து நடவடிக்கைகளின் செயல்திறனையும் வெளிப்படைத்தன்மையையும் மேம்படுத்தி கொள்ளமுடியும். துபாய் நாட்டு அரசானது ஏற்கனவே இந்த பிளாக்செயின் தொழில்நுட்பத்தை அனைத்து அரசின் நடவடிக்கைகளுக்கும் செயல்படுத்தத் துவங்கியுள்ளது.
முடிவாக மேலும் இந்த பிளாக்செயின் தொழில்நுட்பம் செயல்படுத்தவுள்ள பட்டியலில் தேர்தலில் வாக்களிப்பு, ஹெல்த்கேர், முன்கணிப்பு, போக்குவரத்து, எரிசக்தி மேலாண்மை என்பன போன்ற பல்வேறு துறைகளும் வந்து சேர்ந்து கொண்டேயுள்ளன இவையனைத்தும் பிளாக்செயின் மேம்பாட்டு கட்டமைப்புகள் மட்டுமின்றி, பிளாக்செயின் மேலாண்மை மென்பொருள், DApp , டிஜிட்டல் சொத்து மேலாண்மை மென்பொருள் போன்றவை களும் இந்த பிளாக்செயின் தொழில்நுட்பத்துடன் இணைந்து செயல்பட தயாராகி வந்து கொண்டுள்ளன. தொடர்ந்து இந்த பிளாக்செயின் தொழில்நுட்பமானது மேலும் வளர வளர இன்னும் பல்வேறு கருவிகளும் இந்தபிளாக்செயின் தொழில்நுட்ப பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப் படவுள்ளன. அதற்கான கருவிகள், கட்டமைப்புகள் ஆகிய அனைத்தும் பிளாக்செயின் தொழில்நுட்பப வளர்ச்சியை ஊக்குவிக்கவரிசையில் தயாராக இருக்கின்றன தற்போது இந்த பிளாக்செயின் தொழில்நுட்பத்தி னை மேலாண்மை செய்வது என்பது முன்பை விடமிகமிக எளிதானது. பிளாக்செயின் தொழில்நுட்ப த்தின் வாயிலான தீர்வுகளின் வளர்ச்சியும் வரிசைப்படுத்தலும் முன்பை விட தற்போது மிகவும் எளிதாகிவிட்டது. , ஒருசில முக்கிய பிளாக்செயின் மேம்பாட்டு கட்டமைப்புகள், பிளாக்செயின் மேம்பாட்டு திட்டங்கள், மேலாண்மை கருவிகள் போன்றவற்றை பின்வரும் தொடர்களில் விவாதிப்போம்

தொடரும்

பிளாக்செயின் தொழில்நுட்ப வழிகாட்டி-6-பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தபடும் விதிமுறைகளும் சொற்களும்-தொடர்ச்சி

பொதுவாக பயனாளர்களைப் பொருத்தவரையில் தரவுகளின் புலம் மிக முக்கியமானதாகும். பரிமாற்ற விவரங்கள், சொத்து விவரங்கள் போன்ற உண்மையான தரவுகள்அனைத்தும் இந்த புலங்களில்தான் சேமிக்கப்படுகின்றன. இந்த புலங்களில் ஹாஷ்ஆனது முந்தைய தொகுப்பின் ஹாஷ் மதிப்புகளை சேமிக்கின்றன (இது முந்தைய தொகுப்பிற்கான இணைப்பாக கருதுப்படும்), தொகுப்பு(block)கள் இந்த மதிப்புகளின் வாயிலாக இணைக்கப் படுகின்றன.

1
பிளாக்செயினில் தரவுகளின் விநியோகம்
பிளாக்செயினுக்குள் அதன் தனித்துவமான தரவுகளின் சேமிப்பக அமைப்பு இருக்கின்றது , பிளாக்செயினில் தரவுகளி்ன்விநியோகமானது வேறுபட்ட அணுகு-முறையைக் கொண்டுள்ளது என்ற செய்தியை மனதில் கொள்க. அவை பரவலாக ஏற்றுக்கொள்ளப் பட்ட வாடிக்கையாளர் சேவையாளர் மாதிரியைப் பின்பற்றுவதில்லை, மாறாக பியர் டு பியர்(P2P) மாதிரியைப் பின்பற்றுகின்றன.இதனுடைய P2P தரவுகளி்ன் விநியோக அணுகுமுறையே இந்த பிளாக்-செயினின் தடையற்ற தன்மைக்கு காரணமாகும் ; இதில் கட்டுப்படுத்துவதற்கான மைய அதிகார அமைப்பு எதுவும் இல்லை.

2
வாடிக்கையாளர் சேவையாளர் மாதிரியைப் போலன்றி, இந்த பி 2 பி வலைபின்னலில் தரவுகளின் வலைபின்னலில் உள்ள அனைத்து பங்கேற்பாளர்களின் முனைமங்களிலும் சேமிக்கப்-படுகின்றன. அனைத்து தனிப்பட்ட முனைமங்களிலும் முழு ‘தொகுப்புகளின்’ நகல்களும் சேமித்து வைக்கப்படுகின்றன, மேலும் ஒரு குறிப்பிட்ட தொகுப்பில் செய்யப்படும் எந்தவொரு மாற்றமும் அனைத்து முனைமங்களிலும் புதுப்பிக்கப்-படுகின்றன.
பொதுவாக , வாடிக்கையாளர் சேவையாளர் மாதிரியில் தரவுகளானவை ஒரு மைய கட்டுப்படுத்திடும் அமைப்பால் சரிபார்த்த பிறகுதான் அவை தரவுதளங்களில் சேமிக்கப்படு-வது வழக்கமான நடைமுறையாகும்; ஆனால் பி 2 பி வலைபின்னலில் அவ்வாறு தனியாக ஒரேமையத்தில் கட்டுபடுத்திடும் அமைப்பு எதுவும் இல்லை, அவ்வாறாயின் இந்த பி 2 பி வலை-பின்னலில் உள்ள தரவுகளின் நம்பகத்தன்மை எவ்வாறு உறுதி செய்யப்படுகிறது? என்ற கேள்வி நம்மனைவரின் முன் கண்டிப்பாக எழும் நிற்க இந்த பிளாக்செயின் வலைபின்னலின் ஒவ்வொரு முனைமமும் மற்ற முனைமங்களின் தரவுகளின் சரிபார்ப்பு மையமாக அனைத்து செயல்முறைகளும் ஒருமித்த வழிமுறைகளை பின்பற்றி செயல்படுகின்றன என்பதுதான் இந்த கேள்விக்கான பதிலாகும்
தொகுப்பு சரிபார்ப்பு (Block Validation)
நாம் மேலே விவரித்தபடி சொத்துகளும் அதன் பரிமாற்றங்களும் பிளாக்செயினில் இணைக்கப்பட்ட தொகுப்புகளாக சேமிக்கப்படுகின்றன. சரியான பரிமாற்றங்கள் மட்டுமே பிளாக்செயினில் சேர்க்கப்படுகின்றன. தொழில்நுட்ப ரீதியாககூறுவதெனில், பிளாக்செயின் சரிபார்ப்பு என்பது தொகுப்பின் ஹாஷைக் கண்டுபிடிக்கும் செயல் முறையாகும். ஒரு பிளாக்செயினில், அனைத்து தொகுப்புகளும் சரிபார்ப்பு செய்தபிறகு மட்டுமே அதுபிளாக்செயினில் சேர்க்கப்படுகின்றன. பிளாக்செயினில் ஒவ்வொரு பரிமாற்றமும் நடைபெறும் போதெல்லாம் அது ஒரு தொகுப்பில் சேர்க்கப்படுகின்றன; சில நேரங்களில் ஒரு தொகுப்பிற்கு ஒரு பரிமாற்றமும் வேறுசில நேரங்களில் பல தொகுப்பிற்குள் பரிமாற்றங்களும் சேமிக்கப்படுகின்றன. இது தொகுப்பின் அளவு பிணையத்தின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்ததாகும். ஒரு பரிமாற்றமானது தொகுப்பில் சேர்க்கப்படும்போது, அது சரியான தொகுப்பாக பிளாக்செயினில் சேர்க்கப்படுவதற்கு முன்பு அது ஒரு சரிபார்ப்பு செயல்முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும். தொகுப்பிற்கான ஹாஷ் மதிப்பை SHA256 போன்ற ஒருசில வழிமுறைகளைப் பயன்படுத்தி கணக்கிடலாம் .ஹாஷ் மதிப்பு ஒரு சில பண்புகளையும் கொண்டுள்ளது. இந்நிலையில் மிகமுக்கிய செய்தி என்னவென்றால், ஹாஷ் மதிப்பானது எதிரெதிராக இல்லாமல் இருக்க வேண்டும், அதாவது இரண்டு தொகுப்புகள் ஒரே ஹாஷ் மதிப்பைக் கொண்டிருக்கக்-கூடாது. ஒவ்வொரு தொகுப்பினையும் சுட்டிகாட்டுவதற்கு ஹாஷ் மதிப்பைப் குறிப்பிடப்படுவதால், அது ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இரண்டாவதாக, ஹாஷ் மதிப்புகள் மாற்ற முடியாததாக இருக்க வேண்டும்.அதாவது தொகுப்பு தரவுகளை ஹாஷ் மதிப்பிலிருந்து மீட்டெடுக்க முடியாது
தொகுப்பு சரிபார்ப்பவர்கள் (Block Validators)
தொகுப்பு சரிபார்ப்பு செயல்பாட்டில் பங்கேற்கும் முனைமங்களே தொகுப்பு சரிபார்ப்பவர்கள் ஆவார்கள். சரிபார்ப்பவர்களின் முயற்சிக்கு ஏற்ற வெகுமதி அவர்களுக்கு அளிக்கப் படுகின்றது, (உண்மையில் அவர்கள் செலவழித்தசக்தியை கணக்கிட்டு அவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படுகின்றது). கிடைக்கக்கூடிய முனைமங்களில் இருந்து சரிபார்ப்பவரைத் தேர்ந்தெடுப்பதற்கு வெவ்வேறு பிளாக்செயின் நெறிமுறைகள் வெவ்வேறு வழிமுறைகளைப் பின்பற்றுகின்றன. அவ்வாறான ஒரு சில நெறிமுறைகள் பின்வருமாறு
PoW என அழைக்கப்பெறும் பணிச்சான்று (Proof of Work)எனும் நெறிமுறை
இந்த PoW இல், சுரங்க சவால் ஒன்று இதில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் காத்திருக்கின்றது. இதில் சுரங்கத் தொழிலாளர்கள் (miners )அனைவரும் அடுத்த தொகுப்பினைச் சேர்க்க ஒருவருக்கொருவர் போட்டியிடுகின்றார்கள். முதலில் தீர்வைக் கண்டுபிடிக்கும் சுரங்கத் தொழிலாளிக்கு ஒரு நிலையான வெகுமதி வழங்கப்படுகின்றது. உண்மையில், அதிக கணக்கீட்டு சக்தியைக் கொண்ட முனைமங்கள் பொதுவாக இந்த பந்தயத்தில் வெற்றிபெறுகின்றன. பிட்காயின்களில் இந்த PoW எனும் வழிமுறையே பயன்படுத்தி கொள்ளப்படுகின்றன.
குறிப்பு நாம் வாழும் இந்த மண்ணிற்கு கீழேஉள்ள கனிமங்களை வெட்டியெடுத்திடுபவரை சுரங்க தொழிலாளி எனஅழைப்பதை போன்று இணையத்தில் பிளாக்செயினில் புதிய வளங்களை தேடிக் கொண்டுவருபவரை அவ்வாறே சுரங்க தொழிலாளி எனஅழைக்கப்படுகின்றது
PoS என அழைக்கபெறும் பங்கு ஆதாரம் (Proof of Stake)எனும் நெறிமுறை
இது PoW எனும் நெறிமுறைக்கு பொதுவான மாற்று நெறிமுறையாகும். இதில், எந்தவொரு கணினியிலும் அவர்கள் வைத்திருக்கும் நாணயங்களின் ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டு செல்லுபடியாக்கிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். குறைந்த எண்ணிக்கையிலான நாணயங்களைக் கொண்ட முனைமங்களை விட அதிக எண்ணிக்கையிலான நாணயங்களைக் கொண்ட முனைமங்கள் தேர்ந்தெடுக்கஇதில் அதிக வாய்ப்பு உள்ளன. இந்த PoS இல் வெகுமதியானது பரிமாற்ற கட்டணத்தின் வடிவத்தில் உள்ளது, இதில் சரிபார்ப்பவர்களுக்கு பணம் செலுத்துவதற்காக புதிய நாணயங்கள் உருவாக்கப்படுவதில்லை. தற்போது, பிளாக் காயின், NXT Peercoin ,Blackcoin ஆகியவை இந்த PoSநெறிமுறையைப் பயன்படுத்துகின்றன. Ethereumஆனது 2018 க்குள் இந்த நெறிமுறைக்கு மாறிகொள்வதற்காக திட்டமிட்டிருந்தது.
PoAஎன அழைக்கபெறும் செயல்பாட்டின் சான்று (Proof of Activity)எனும் நெறிமுறை
PoA என்பது PoS , PoW ஆகியவற்றில் உள்ள சில சிக்கல்களை சமாளிக்க அவ்விரண்டும் கலந்தவொரு கலவையான அணுகுமுறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நெறிமுறையில், புதிய சுரங்கமானது PoW உடன் தொடங்குகின்றது தொடர்ந்து ஒரு கட்டத்தில் இந்த செயல்முறையானது PoS ஆக மாறிவிடுகின்றது. தற்போது,இந்த செயல்பாட்டிற்கான ஆதாரத்தின் மாறுபாட்டைப் பயன்படுத்தும் ஒரே நாணயம் Decred ஆகும்.
PoETஎன அழைக்கபெறும் கழிந்தநேரத்தின்சான்று(Proof of Elapsed Time) எனும் நெறிமுறை
இந்த நெறிமுறையில், வலைபின்னலில் ஒருமித்த கருத்தை செயல்படுத்த லாட்டரி செயல்பாடுகளைப் பயன்படுத்துகின்றது. ஒரு தொகுப்பான முனைமங்களிலிருந்து தலைமையைக் கண்டுபிடிக்க லாட்டரி வழிமுறை பயன்படுத்தப்படுகின்றது. எனவே செல்லுபடியாக்கிகளின் குவியிலிலிருந்து தோராயமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றன. Hyperledger, Sawtooth , பிளாக்செயின் போன்றவை இந்த PoET நெறிமுறையைப் பயன்படுத்துகின்றன.
PoBஎன அழைக்கப்பெறும்(Proof of Burn) நெறிமுறை
இந்த நெறிமுறையில், ஆர்வமுள்ள ஏற்பாளர்கள் தங்களுடைய நாணயங்களை மீட்கமுடியாத இடத்திற்கு அனுப்புவதன் மூலம் தங்களுடைய பங்கை அதிகரிக்கின்றார்கள் இதனால். சரிபார்ப்பவர்கள் தோராயமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர், ஆனால் அதிக பங்கு உள்ளவர்கள் இதில் தேர்வு செய்ய அதிக நிகழ்தகவு உள்ளது. காலப்போக்கில் சம்பாதித்த பங்கு சிதைந்து, தொகுப்பிற்குள் தங்கள் பங்குகளை அதிகரிக்க அதிக நாணயத்தை எரிக்க (செலவழிக்க) வேண்டும். இந்த எரியும் (செலவழிக்கும்)பொறிமுறையின் ஆதாரத்தைப் பயன்படுத்தும் ஒரே நாணயம் slimcoin ஆகும்.
இந்நிலையில் மேலே கண்டுவந்தவைகளில் எந்த நெறிமுறை மிகவும் சிறந்தது என்று தெளிவாக கூற முடியாது. ஒவ்வொரு நெறிமுறைக்கும் அதன் சொந்த நன்மைகளும் தீமைகளும் உள்ளன. பொதுவாக ஒரு பிளாக்செயினில் அதிகபட்ச உற்பத்தித்திறனை அடைய பல்வேறு நெறிமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டு பின்பற்றப்படுகின்றன என்பதே உண்மையான கள நிலவரமாகும்… தொடரும்

Ethereum – ஒரு அறிமுகம்

Ethereum என்பது, சங்கிலிதொகுப்பின் அடிப்படையிலான விநியோகிக்கப்பட்ட ஒரு திற மூல பொது கணினி த் தளமாகும் மேலும் இது திறனுடைய ஒப்பந்தங்களை செயல்படுத்திடும் ஒரு இயக்க முறைமையாகவும் விளங்குகின்றது. ஈதர் என்பது ஒரு டோக்கனாகும், இந்த டோக்கனானது பிளாக்செயின் எத்தேரியம் இயங்குதளத்தால் உருவாக்கப்படுகிறது. இருவேறு நபர்களின் கணக்குகளுக்கு இடையில் ஈதரை மாற்றலாம் மேலும் நிகழ்த்தப்பட்ட கணக்கீடுகளுக்கு பங்கேற்பாளர் சுரங்க முனைமங்களை ஈடுசெய்ய பயன்படுத்தலாம்.
Ethereum ஆனது EVM எனும் ஒரு பரவலாக்கப்பட்ட மெய்நிகர் இயந்திரத்தை (Ethereum Virtual Machine )வழங்குகின்றது, இதில் பொது முனைமங்களின் சர்வதேச இணையதளஅமைப்பைப் பயன்படுத்தி ஸ்கிரிப்ட்களை இயக்க முடியும்.
இன்று, பிட்காயினுக்குப் பிறகு உலகின் இரண்டாவதுமிகப் பெரிய மறையாக்கநாணயமாக எத்தேரியம் உள்ளது. இந்த எத்தேரியம் என்பதன் சமீபத்திய புகழானது மறையாக்க நாணய சந்தையில் மிகவும் சாதகமானது என்று நிரூபிக்கப்-பட்டுள்ளது. இருப்பினும், ஆய்வாளர்கள் எதிர்காலத்தில் இந்த Ethereumஆனது 300 அமெரிக்க டாலர்கள்வரை அதனை மேல்நோக்கி செல்ல வாய்ப்புள்ளது என்று நம்புகின்றனர்.
Ethereum இல் உள்ள சவால்கள்
வழக்கமான நாணய தரகர்களால், மறையாக்கநாணய பரிமாற்றங்களையும் இணையத்தின் பல்வேறுநேரடி மறையாக்க நாணய பணப்பைகள் மூலம்இந்த Etherஇல் வர்த்தகம் செய்யலாம். Ethereum என்பது பரவலாக்கப்பட்ட பயன்பாடுகளுக்கான உலகளாவிய, திறமூல தளமாக விளங்குகின்றது. இந்த Ethereum இல், மின்னனு மதிப்புகளைக் கட்டுப்படுத்தும் குறிமுறைவரிகளை நாமே எழுதலாம், அவை சரியாக திட்டமிடப்பட்டவை , உலகில் எங்கிருந்தும் அணுகக்கூடியவை களாக விளங்குகின்றன.
சமீப காலம் வரை மறையாக்கவரைகலை, கணிதம் , குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் ஆகியவற்றை குறிமுறைவரிகளாக்குவதில் சிக்கலான பின்னணி தேவைப்படுகின்றது. ஆனால் அவ்வாறான காலங்கள் தற்போது மாறிவிட்டன. பரவலாக்கப்பட்ட பயன்பாடுகளை உருவாக்குவதற்கான கருவிகளை மேம்படுத்தநர்களுக்கு வழங்குவதன் மூலம், இந்த Ethereumஆனது செயல்களை எளிதாக்குகின்றது.
மின்நாணயம் போலவே, எத்தேரியமும் ஒரு விநியோகிக்கப்பட்ட பொது சங்கிலி தொகுப்பின் வலைபின்னல் ஆகும். எத்தேரியம் சங்கிலிதொகுப்பில், மின்நாணய சுரங்கத்திற்கு பதிலாக, சுரங்கத் தொழிலாளர்கள் வலைபின்னலை செலவுகளாகக் கொண்ட ஒரு வகை மறையாக்க டோக்கனை இந்த ஈதரில் சம்பாதிப்பதற்காக பணிபுரிகின்றார்கள்.
எத்தேரியம் சங்கிலிதொகுப்பானது ஒருசில அசாதாரண திறன்களைக் கொண்டுள்ளது. அவற்றில் ஒன்று நாம் திறனுடைய ஒப்பந்தங்களை உருவாக்குவதாகும். . இந்த ஒப்பந்தத்தை நடைமுறைபடுத்துவது, மேலாண்மைசெய்வது, செயல்திறனை கட்டுபடுத்துவது , கட்டணம்செலுத்துவது ஆகியவற்றைக் இதன் வாயிலாக கையாளமுடியும்.
மின்நாணய மற்றும் பிற மறையாக்கநாணயங்கள் பிரத்தியேகமாக பியர்-டு-பியர் டிஜிட்டல் நாணயங்களாக செயல்படுகின்றன. மின்நாணய வழங்கும் செயல்பாடுகளின் தொகுப்பை விரிவாக்குவது மிகவும் சிக்கலானது மற்றும் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும். மறுபுறம், Ethereum ஒரு வகையான சுவிஸ் இராணுவ கத்தி போன்றநெறிமுறையைப் பயன்படுத்துகின்றது. Ethereum இன் முக்கிய கண்டுபிடிப்பு, EVMஆகும், இது Ethereum வலைபின்னலில் இயங்கும் ஒரு முழுமையான மென்பொருளாகும். சங்கிலிதொகுப்பின் பயன்பாடுகளை உருவாக்கும் செயல்முறையை ஈ.வி.எம் முன்பை விட மிகவும் எளிதாகவும் திறமையாகவும் செய்கின்றது. இந்த Ethereumஆனது ஆயிரக்கணக்கான வெவ்வேறு பயன்பாடுகளின் மேம்படுத்துதல்களை ஒரே தளத்தில் செயல்படுத்துகிறது.
மையப்படுத்தப்பட்ட எந்த சேவைகளையும் இந்த Ethereum ஐப் பயன்படுத்தி பரவலாக்க முடியும். முதன்மை பதிவேடுகள், வாக்களிப்பு முறைகள், வழக்கமான இணக்கசெயல்கள் போன்ற நூற்றுக்கணக்கான இடைநிலை சேவைகளை. இந்த Ethereumஇன்துனையுடன் எளிதாகவும் வேகமாகவும் செய்ய முடியும்.
Ethereum இன் பயன்கள்
1.வழக்குரைஞர்கள், நீதிமன்றங்கள் அல்லது சட்ட நிறுவனங்கள் போன்ற மூன்றாம் தரப்பினரால் தொடர்புடைய தரவுகளில் எந்த மாற்றங்களும் செய்ய முடியாது.
2.பயன்பாடுகள் உருவாக்கப்பட்டவலைபின்னலை அடிப்படையாகக் கொண்டு மூன்றாவது தரப்பினரின் தலையீட்டினை சாத்தியமற்றதாக ஆக்குகின்றது.
3. Ethereum ஆனது ஒரு சுயமாக பூட்டப்பட்ட அமைப்பு அன்று. அதாவது மற்ற பொருட்களையும் சேவைகளையும் Ethereum சங்கிலிதொகுப்புடன் ஒன்றாக இணைத்து மேலும் மேம்படுத்தி கொள்ள முடியும்ம். Ethereum தொடர்ச்சியாக மேம்படுத்துதல்செய்கிறது, மேலும் அதிகமான மக்கள் அதில் முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம்.
4.இதுகுறியாக்கவியலைப் பயன்படுத்துவதால் Ethereumஎப்போதும் தோல்வியடையாதது பாதுகாப்பானது. இங்குள்ள பயன்பாடுகள் ஹேக்கிங் தாக்குதல்கள் மற்றும் மோசடி நடவடிக்கைகளுக்கு எதிராக பாதுகாக்கப்படுகின்றன.
5. இது ஒரு திறந்த அமைப்பு, எனவே வெளியில் இருந்து அனைவரும் இந்த திட்டத்தில் சேரலாம் மற்றும் இந்த அமைப்பை மேம்படுத்த லாம்.
6. Ethereum பயனர்கள் விரும்பும் எந்தவொரு சிக்கலான தன்மைக்கும் தங்கள் சொந்த செயல்பாடுகளை உருவாக்க அனுமதிக்கிறது.
7.இதனுடைய பயன்பாடுகள் இது ஒருபோதும் செயல்படாமல் நின்றுவிடாது , ஒருபோதும் இதனுடைய செயலை நிறுத்தம் செய்திட முடியாது. என்ற செய்தியை மனதில் கொள்க

பிளாக்செயின் தொழில்நுட்ப வழிகாட்டி-5-பிளாக்செயின்தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் விதிமுறைகளைசொற்களை பற்றியவிவரங்களும் அறிமுகமும்

கடந்த தொடர் 4 இல் பிளாக்செயின் மேம்படுத்துநர் தெரிந்து கொண்டிருக்க வேண்டிய முக்கிய கருவிகளை பற்றி தெரிந்துகொண்டோம் அதனை தொடர்ந்து இந்த தொடரில் இந்த பிளாக்செயின் தொழில்நுட்பம் செயல்படுகின்ற விவரங்களை அறிந்து கொள்வவதற்கு முன் இந்த தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் விதிமுறைகளை பற்றியும் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொற்களை பற்றியும் தெரிந்து கொள்வோம்
Baas: ப்ளாக்செயின் ஒரு சேவையாக பயன்படுத்தி கொள்வதாகும் (சென்ற தொடரில் இதற்கான விவரத்தினை கண்டோம்)
BFT: பைசண்டைனின் தவறு சகிப்புத்தன்மை(Byzantine fault tolerance)யின் கொள்கை என்பதன் சுருக்குபெயராகும்
BIP: பிட்காயினின்மேம்பாட்டு திட்டம் (Bitcoin improvement proposal) என்பதன் சுருக்குபெயராகும்
Bitcoin: என்பது மிகப்பிரபலமான மறையாக்க நாணயமாகும்
Block: என்பதுபரிமாற்றத்தினை அவற்றின் ஹாஷ் மதிப்புடனும் தரவுகளுடனும் சேமித்து வைத்துகொள்ள பயன்படுத்தப்படுகிறது
Composer: என்பது ஹைப்பர்லெட்ஜரை உருவாக்கிடுகின்ற ஒருபிளாக்செயின் மேம்பாட்டு கட்டமைப்பாகும்
Consensus: என்பது பிளாக்செயினில் பங்கேற்பாளர்களிடையே ஏற்படுத்துகின்றபொதுவான ஒப்பந்தமாகும்
Crypto currency: மறையாக்க நாணயமான இதுவும் மற்றொரு டிஜி்ட்டல்சொத்தாகும்
DApp: என்பவை பரவலாக்கப்பட்ட பயன்பாடுகளாகும்
ERC20: என்பது ஈதரத்தினுடைய டோக்கனின் செந்தரநிலையாகும்
Ethereum: இதுவும் ப்ளாக் செயின் செயல்படுவதற்கான மற்றொரு தளமாகும்
Genesis block: என்பது பிளாக்செயினில் முதல் (துவக்க)தொகுப்பாகும்
Hash: என்பது தொகுப்பான தரவுகளின் மறைகுறியாக்கப்பட்ட மதிப்பாகும்.
Hyperledger: என்பது ப்ளாக் செயின் செயல்படுவதற்கான தளமாகும்
ICO: என்பது துவக்கநாணய வாய்ப்பு (Initial coin offering) என்பதன் சுருக்கப்பெயராகும்
IoT: என்பது பொருட்களுக்கான இணையம்(Internet of Things) என்பதன் சுருக்கப்பெயராகும்
Ledger: என்பது ஒரு பிளாக்செயினில் பரிமாற்றங்களை பதிவு செய்ய பயன்படுத்தப் படுகின்றது
Miner: என்பவர்ஒரு பிளாக்செயினை ஏற்புகை செய்திடும் பணியை செயற்படுத்துபவர் ஆவார்
Mining: என்பது ஒரு பிளாக்செயினில் (பிட்காயினிலும் , எத்தேரியத்திலும்) சரிபார்த்து ஏற்புகை செய்திடும் செயல்முறையாகும்
Node: பிளாக்செயின் வலைபின்னலுடன் இணைக்கப்பட்ட ஒவ்வொரு கணினியும் ஒரு முனைமம் ஆகும்
Participants: என்பவர்கள் பிளாக்செயினில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏதேனும் பரிமாற்றங்களை செய்பவர்கள்ஆகியோர்களாவார்கள்
Peer2Peer(P2P): என்பது பரவலாக்கப்பட்ட பிணைய கட்டமைப்பாகும் .இந்த வழக்கில் தனிப்பட்ட சேவையகம் எதுவும் இல்லை
PoS: என்பது பணய ஆதாரம் (Proof of stake )என்பதன் சுருக்கப்பெயராகும்
PoW: என்பதுபணிக்கான சான்று(Proof of work ) என்பதன் சுருக்கப்பெயராகும்
SHA256: என்பது ஒருசுட்டுமுகவரியாக்க வழிமுறையாகும்
Smart contract: என்பதுகுறிமுறைவரிகளில் விதிமுறைகளுடனும் நிபந்தனைகளுடனும் எழுதப்பட்ட சுய செயல்பாட்டு ஒப்பந்தமே திறனுடைய ஒப்பந்தமாகும்
Solidity: என்பது ஈதரத்தில் திறனுடைய ஒப்பந்தங்களை எழுதுவதற்கான ஒரு நிரலாக்க மொழியாகும்(சென்ற தொடரில் இதற்கான விவரத்தினை கண்டோம்)
Testnet: என்பது மேம்படுத்துதல் பரிசோதித்தல் ஆகிய நோக்கங்களுக்காக பிளாக்செயின் வலைபின்னல்களின் பரிசோதனையாகும் (சென்ற தொடரில் இதற்கான விவரத்தினை கண்டோம்)
Token: என்பது அடையாளவில்லை அதாவது இது ஒரு டிஜி்ட்டல்சொத்தாகும்
Transaction: என்பது ஒரு பிளாக்செயினில் எந்தவொரு நிலையிலும் ஏற்பட்ட மாற்றத்தை குறிப்பிடுவதாகும்
Wallets: என்பது மறையாக்கநாணயங்களையும் பிற டிஜிட்டல் சொத்துக்களையும் சேமிக்கவும், மற்றவர்களுக்கு அனுப்பவும் மற்றவர்களிடமிருந்து பெறவும் பயன்படுத்தி கொள்ளப்படும் டிஜிட்டல் பணப்பையாகும்.
முதன்முதலில்2009ஆம்ஆண்டு பிட்காயின் எனும் பிளாக்செயின் நடைமுறை பயன்-பாட்டிற்கு வந்தது பின்னர் அடுத்தடுத்தஆண்டுகளில் இந்த பிட்காயினானது மிகவும் பிரபல-மடைந்தது அதன்பின்னர் இந்த பிளாக்செயின் தொழில்நுட்பமும் மிகபிரபலமாக ஆனது ஆயினும் இந்த புதிய கண்டுபிடிப்பானபிளாக்செயின் தொழில்நுட்பத்தின் பின்னால் உள்ள தொழில் நுட்ப விவரங்களும் அதனுடன் தொடர்புடைய சொற்கள்பற்றிய விவரங்களும் பொதுமக்களின் பார்வைக்கு சென்று சேருவதற்கு முன் இந்த பிளாக்-செயின் தொழில்நுட்பம் பற்றிய குழப்பமும் தெளிவின்மையும்உருவாகி மிகவிரைவாக பொதுமக்களிடைய மிகவிரைவாக பரவஆரம்பித்துவிட்டன மேலும் இந்த புதிய பிளாக்செயின் தொழில்-நுட்பமானது அதனுடைய உண்மையான திறனைக் காட்டியபோது, பொதுமக்கள் அதை பிட்காயின் சொற்களோடு தொடர்புபடுத்த முயன்றனர்; இதன் விளைவாக மொத்தமும் தவறான கருத்துகளும் குழப்பமும் உருவாகி தெளிவில்லாத நிலைக்கு கொண்டுசென்றது . ஆனால் பொதுவாக பிளாக்செயின் தொழில் நுட்பத்தை பற்றி அறிந்து கொள்ள துவங்கிய பின்னர் பிட்காயின் பற்றி புரிந்துகொள்ள முயற்சிப்பதே சரியான வழிமுறையாகும். இந்நிலையில பிளாக்செயின் தொழில் நுட்பத்தை ஏன் தெரிந்து கொள்வேண்டும்? என்ற கேள்வி நம்மனதில் எழும்இது பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் விவரங்களுக்குச் செல்வதற்கு முன் முதலில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமானதொரு கேள்வியாகும்.
பொதுவாக எந்தவொரு தொழில்நுட்பமும் புதியதாக கண்டுபிடித்து வெளியிடும்போது அந்த குறிப்பிட்ட புதியதொழில்நுட்பமானது மிகவும் புரட்சிகரமானது என்று சொல்வது; வழக்கமாக அனைவரும்கூறுகின்ற சொற்றொடராகும், நிற்க ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் தொழில்நுட்பங்களை விட இந்த புதிய தொழில்நுட்பமானது கூடுதலான அல்லது அவைகளில் இல்லாத புதிய வசதி வாய்ப்புகளை கொண்டிருக்க வேண்டும்என்பதே பொதுவான வரையைறையாகும் . அதனடிப்படையில் தற்போதைய தொழில் நுட்பத்தை-விட புதிய இந்த பிளாக்செயின் தொழில்நுட்பமானது பின்வரும் புதியஅல்லது கூடுதலான வசதிவாய்ப்புகளை கொண்டுள்ளது
1.இந்த பிளாக்செயின் தொழில்நுட்பமானது பரவலாக்கப்-பட்டது ,
2.விநியோகிக்கப்-பட்டது ,3.மிகவும் பாதுகாப்பானது,
4.மிகவிரைவாக செயல்படக்-கூடியது ,
5.அதனோடு இது மிக வெளிப்படையானது
6.ஆயினும் எளிதில்மாற்ற முடியாதது
இந்நிலையில் இந்த பிளாக்செயின் தொழில்நுட்பத்தினுடைய தரவுகளின் கட்டமைப்பு, தரவுகளின் விநியோகம், தரவுகளின் சரிபார்ப்பு (பிளாக்செயினில் ஒரு தரவின் அங்கீகாரம்) , பிளாக் செயின் தொடர்புடைய பிற தொழில்நுட்பங்களை அறிந்துகொண்டால் இந்த பிளாக் செயின்தொழில்நுட்பத்தினுடைய புதிய வசதி வாய்ப்புகளை பற்றி நன்கு புரிந்து கொள்ள முடியும்.
பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் கட்டமைப்பு
ஐபிஎம்நிறுவனத்தின்கூற்றுபடி, பிளாக்செயின் என்பது ஒரு பகிரப்பட்ட, விநியோகிக்கப்-பட்ட பேரேடு(Ledger) ஆகும், இந்த பேரேடானது ஒரு பிணையத்தில் பரிமாற்றங்களை பதிவு செய்வதற்கும் சொத்துக்களைக் கண்காணிப்பதற்கும் உதவுகின்றது. இதனுடைய சொத்து என்பது நாம் பயன்படுத்திடும் நிலபுலன், வீடு, வாகனம் போன்ற ஒரு உறுதியான தொட்டுணரக்கூடிய சொத்தாக இருக்கலாம் அல்லது டிஜிட்டல் நாணயம், அறிவுசார் சொத்துரிமை போன்ற ஒரு அருவமான சொத்தாககூட இருக்கலாம். பொதுவாக அடிப்படையில், மேலேகூறிய பல்வேறு வகையான சொத்துகளின் தரவுகளைச் சேமித்து, விநியோகிக்கப்பட்ட சூழலில் அதன் இயக்கங்களை இது பதிவு செய்கின்றது. அவ்வாறான விவரங்களை இப்போது காண்போம்.
இது ஒரு விநியோகிக்கப்பட்ட தரவுத்தளமாாக அல்லது பொதுப் பதிவேடாக உள்ளது, இதில் மேலேகூறிய பல்வேறு வகையான சொத்துக்களையும் அவைகளுடைய இயக்கங்களை / பரிமாற்றங்களை பற்றிய விவரங்களையும் P2P எனும் வகையிலான வலைபின்னலில் வைத்து பராமரிக்கின்றது. இதில் செயல்படுத்தபடும் ஒவ்வொரு பரிமாற்றமும் குறியாக்கவியல் மூலம் பாதுகாக்கப்படுகின்றது, பின்னர் இவ்வாறான பரிமாற்ற வரலாறுகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு தரவுகளின் தொகுப்புகளாக(blocks) சேமிக்கப்படுகின்றன. அதன்பின்னர் தொகுப்புகள் குறியாக்கவியலுடன் இணைக்கப்பட்டு வேறு மாற்றங்கள் எதுவும் செய்ய அனுமதிக்காமல் பாதுகாக்கப்படுகின்றன. ஏதாவதொரு சிறியமாற்றமும் வலைபின்னல் முழுவதிலும் நடந்த பரிமாற்றங்களின் முழு செயல்முறைகளிலும் மாற்றவேண்டிய நிலையிருப்பதால் இதில் திருத்தம் எதுவும் எளிதாக செய்ய முடியாத மாறாத நிலையான பதிவாக இதில் பராமரிக்கபபடுகின்றது. கூடுதலாக, இந்த பதிவுகளானவை தொகுப்புகளின் வலை-பின்னலில் பங்கேற்கும் முனைமங்களான ஒவ்வொரு கணினியிலும் நகலெடுக்கப்-படுகின்றன, எனவே அனைவரும் இதை அணுக முடியும்.ஆயினும் அனுமதி பெற்றவர் மட்டும் கடுமையான வழிமுறைகளை பின்பற்றி திருத்தம் எதுவும் செய்திடமுடியும்
டிஜிட்டல் நாணயமான பிட்காயின் அல்லது ஒரு சான்றிதழ், தனிப்பட்ட தகவல், ஒரு ஒப்பந்தம், ஐபியின் தலைப்பு உரிமை, தொட்டுணரக்கூடிய பொருட்கள் போன்ற வேறு எந்தவொரு டிஜிட்டல் சொத்துகளாக இருந்தாலும் அல்லது தொட்டுணரக்கூடிய பொருட்களாக இருந்தாலும் சரி. இந்த பிளாக்செயினில் அவ்வாறான எந்தவொரு சொத்தையும், அதன் உரிமையாளர் விவரங்களையும், அவ்வுரிமையின் வரலாற்றையும், பிணையத்தில் சொத்துக்களின் இருப்பிடத்தையும் சேமிக்க முடியும் என்பதே இந்த பிளாக்செயினின் மிகப்பெரிய பயனாகும். நம்பிக்கையற்ற நிறுவனங்களில் கூட பகிரப்பட்ட யதார்த்தமான மேலேகூறிய சொத்து களை உருவாக்க முடியும்.என்பதே இந்த பிளாக்செயினின் சக்திவாய்ந்த அம்சமாகும்
வலைபின்னலில் பங்கேற்கும் இந்த முனைமங்கள் அனைத்தும் ஒருவருக்கொருவர் தெரிந்து கொள்ளவோ அல்லது ஒருவருக்கொருவர் நம்பவோ தேவையில்லை, ஏனென்றால் ஒவ்வொன்றும் தமக்குரிய சங்கிலியைக் கண்காணித்து சரிபார்க்கும் திறன் கொண்டுள்ளது.
, பங்கேற்பாளர்களிடையே பரஸ்பர அவநம்பிக்கை என்பதே பிளாக்செயினை பாதுகாப்பாகவும் சரிபார்க்கவும் வைக்கின்ற மிகப்பெரியமுரண்பாடாகும் .

1
பிளாக்செயினின் தரவுகளின் கட்டமைப்பு
பிளாக்செயினில் உள்ள தரவுகள் தனிப்பட்ட தொகுப்புகளாக சேமிக்கப்படுகின்றன, அதனால்தான் இது பிளாக்செயின் என்று அழைக்கப்படுகின்றது. இணைக்கப்பட்ட பட்டியலைப் போலவே, பிளாக்செயினும் ஒன்றாக ஒன்றிணைக்கப்பட்ட தொகுப்பாகும். ஒரு பிளாக்-செயினில் உள்ள ஒவ்வொரு தொகுப்பும்(block ) பின்வரும் புலங்களைகொண்டிருக்கும்.

2

இதில்
1) Data: என்பது தரவுகளை சேமிக்கின்றது என்பதை குறிப்பதாகும்
2) Previous hash: என்பது முந்தைய தொகுப்பின் ஹாஷ் என்பதை குறிப்பதாகும்
3) Hash: என்பது இந்த தொகுப்பினைக் குறிக்கப் பயன்படுத்தக்கூடிய தற்போதைய தொகுப்பிற்கான ஹாஷ் மதிப்பாகும்
தொடரும்

Previous Older Entries