லினக்ஸின் கோப்பமைவைபற்றி தெரிந்துகொள்வோம்

துவக்கத்தில் யுனிக்ஸ் எனும் இயக்க-முறைமையில் பயன்படுத்தப்பட்டுவந்த MINIX எனும் கோப்பமைவே அனைவராலும் பயன்படுத்தப்பட்டது ஆயினும் இது அப்போது இலவசமாகவோ திறமூலமென்பொருளாகவோ வழங்கப்படவில்லை அதற்குபதிலாக இது69 டாலர் விலையில் பயன்படுத்தஅனுமதிக்கப்பட்டுவந்தது இதில் கோப்பின் பெயர் அதிகபட்சம் 14எழுத்துகளும் தேக்கும்திறனாக 64எம்பிஅளவில் மட்டுமே இருந்துவந்தது
பின்னர் லினக்ஸ் இயக்கமுறைமை புழக்கத்திற்கு வந்தபோது இதன் கொடையாளர் டோர்வால்டு என்பவர் 255 எழுத்துகளை கையாளும் திறனுடனும் 2ஜிபி தேக்கும்திறனுடனும் ext எனும் கோப்பமைவை இந்த கோப்பினை உருவாக்குதல்,அனுகுதல், மாறுதல்செய்தல் போன்ற இன்றைய நடவடிக்கைகளுக்கு முன்னோடியாக உருவாக்கப்பட்டு பொதுமக்களின் புழக்கத்திற்கு விடபட்டது
இது பின்னர்ext 2 எனும் கோப்பமைவாக மேம்படுத்தப்பட்டு தற்போதும் நாம் பயன்படுத்திடும் யூஎஸ்பியில் பயன்படுத்திடும் வண்ணம் அறிமுகபடுத்தப்பட்டது இதனுடைய தேக்கும்திறன் டெர்ராபைட்டாக உயர்ந்தாலும்அவ்வப்போது அழிந்துபோதல், மின்சாரம் இல்லாது போனால் தரவுகள் இழந்துவிடுதல் ,தரவுகள் துண்டுதுண்டாக பிரிந்து சிதறிகிடத்தல் போன்ற சிரமங்கள் இந்த வகையில் இருந்துவருகின்றன
அதன்பிறகு FAT, FAT32, HFS போன்ற கோப்பமைவுகளுக்கு சமமான ext 3எனும் கோப்பமைவு லினக்ஸின் கெர்னல்2.4.5 இல் அறிமுகபட்டத்த பட்டது இது 32-bit ,அளவும்குறைந்தபட்சம் 2 TiB முதல் அதிகபட்சம் 16 TiB கோப்பளவை கையாளும் திறன் கொண்டதாக விளங்குகின்றது இது journal,ordered, writeback ஆகியமூன்று நிலைகளில் செயல்படுத்தபட்டுவருகின்றது
தற்போது நம்முடைய புழக்கத்தில் உள்ள ext 4எனும் கோப்பமைவுலினக்ஸின் கெர்னல்2.6.28 இல் அடுத்ததலைமுறை கோப்பமைவாக வெளியிடபட்டது மிகமேம்பட்டதிறனுடனும் தரவுகள் சிதறி கிடப்பதை தவிர்த்திடும் தன்மையும்கொண்டது தானாகவே ext 3எனும் கோப்பமைவ தன்மயமாக்குமதிறன்மிக்கது இது 48-bit அளவும்அதிகபட்சம் 50 TiB வரை ஒருசிலசமயங்களில் 100 TiB வரை தேக்கும்திறன்கொண்டதாக விளங்குகின்றது பொதுவாக ext 2 அல்லது ext 3 கோப்பமைவானது இணையத்தில் நேரடியாக சிதறிகிடந்திடும் தரவுகளை ஒருங்கிணைப்பு செய்திடாது ஆனால் ext 4சிதறி கிடந்திடும் தரவுகளை மிகஎளிதாக ஒருங்கிணைப்பு செய்திடும்
இந்த ext கோப்பமைவுபோன்றே XFSஎனும்கோப்பமைவும் 32பிட் அளவுகையாளும்திறனுடன் பயன்படுத்துபட்டுவந்தது ரெட்ஹெட் லினக்ஸ் இந்த XFS கோப்பமைவிலேயே இயல்பு-நிலையில் செயல்படுமாறு வெளியிடபட்டுவருகின்து இது 50 TiB தேக்கும் திறன்மிக்கதாக இருந்துவருகின்றது
அதற்கடுத்ததாக ZFS எனும் கோப்பமைவு 1 ட்ரில்லியன் கிகாபைட் தேக்கிடும்திறனுடன் அடுத்ததலைமுறை கோப்பமைவாக ext 4எனும் கோப்பமைவை போன்று வெளியிடப்-பட்டுள்ளது
Btrfsஎன சுருக்கமாக அழைக்கும் B-Tree எனும்கோப்பமைவில் வெளியிடபட்டுள்ளது ஒற்றையான வன்தட்டுகள் முதல் பல்லடுக்கு வன்தட்டுகள் வரை பயன்படுத்தி கொள்வதற்கேற்ப இது கட்டமைக்கப்பட்டுளளது

விண்டோ10 இயக்கமுறைமை செயல்படும் கணினியில்யாரும் அழித்து நீக்கமே செய்யமுடியாத கோப்பகத்தை எவ்வாறு உருவாக்குவது

தப்பித்தவறி கைதவறுதலாக ஏதாவதுகோப்பினை அல்லது கோப்பகத்தை அழித்திருப்போம் அல்லது நாம் பயன்படுத்திடும் கணினியானது இயங்கி கொண்டி-ருக்கும்போது வேறுஏதாவது உடனடியாக கவணிக்கவேண்டிய பணிஇருந்தால் அதனை முடித்து விட்டுவந்து நம்முடைய பணியை தொடரலாம் என சென்றிருப்போம் அந்த நேரத்தில் நம்முடைய குழந்தைகள் விளையாட்டாக நாம் பயன்படுத்தி கொண்டிருந்த கோப்பினை அல்லது கோப்பகத்தை அறியாமையால் அழித்து நீக்கம் செய்துவிட்டிருப்பார்கள்இவ்வாறான நிலையில் அவ்வாறு அழித்து நீக்கம் செய்யப்பட்ட கோப்பகத்தை அல்லது கோப்பினை மீண்டும் உருவாக்கி கொண்டுவருவதற்காக நாம் செய்த செயலையே திரும்பவும் செய்யவேண்டிய நிலை ஏற்படும் அதற்கு பதிலாக மிகமுக்கியமான கோப்புகளை அல்லது கோப்பகங்களைஎளிதாக அழித்து நீக்கம் செய்யமுடியாதவாறு பாதுகாப்பு செய்துவிட்டால் மிகநன்றாக இருக்குமல்லவா அதற்கான வழிமுறையைஇப்போது காண்போம் இவ்வாறான அழித்துநீக்கம்செய்ய முடியாத கோப்பகங்களை C:எனும் முதன்மை இயக்ககத்தில்உருவாக்கமுடியாது D, E, F, G போன்ற மற்ற இயக்ககங்களில் மட்டுமே உருவாக்கிட இயலும் அதனால் நாம் விரும்பும் கோப்பகத்தை D, E, F, G போன்ற மற்ற இயக்ககங்களில் ஏதேனுமொன்றில் இடம்சுட்டியை வைத்து கொண்டு md con\என்ற கட்டளைவரியை உள்ளீடு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக பின்னர்நாம் உருவாக்கிய கோப்பகத்தை வேறுயாரும் அனுகாமல் தடுப்பதற்காக நாம் உருவாக்கிய கோப்பகத்தின்மீது இடம்சுட்டியை வைத்து கொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Properties எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்விரியும் சாளரத்தில் Security எனும் தாவிப் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து Security எனும் தாவிபொத்தானின் திரையை தோன்ற செய்திடுக இதில்முதலில் Edit என்ற பொத்தானையும் பின்னர் Add எனும் பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் object name என்பதில் Group or username என்பதன்கீழ் Every oneஎன்பதை தெரிவுசெய்து கொண்டு Ok என்ற பொத்தானை சொடுக்குக பின்னர் Securityஎனும் தாவியின்திரையில் Permission for Everyone என்தன்கீழ் Full Controlஎன்பதற்கு Denyஎன்பதை தெரிவுசெய்து கொண்டு Ok என்ற பொத்தானை சொடுக்குக
எச்சரிக்கை Allow என்பதை தெரிவுசெய்தால் யார்யாரை அனுமதிக்கின்றோம் என தெரிவுசெய்யவேண்டியிருக்கும் என்ற செய்தியை மனதில்கொள் க
இறுதியாக நம்முடை ய செய்தியை உறுதிபடுத்திடுவதற்காக மீண்டும் Ok என்ற பொத்தானை சொடுக்குக இதன்பின்னர் இந்த கோப்பகத்திலுள்ள கோப்புகளை யாரும் அழித்து நீக்கம் செய்திடமுடியாதவாறு பாதுகாப்பாக ஆகி இருப்பதை காணலாம்

விண்டோ இயக்கமுறைமையில் நகல்கோப்புகளை பைத்தானை கொண்டு எளிதாக அடையாளம் காணமுடியும்

தவறுதலாக ஒரே உள்ளடக்க கோப்பினை வெவ்வேறு பெயர்களில் அல்லது அதே கோப்பினை வெவ்வேறு கோப்பகத்தில் நகல் கோப்புகளாக உருவாக்கிவிட்டிருப்போம் இதனால் நினைவகத்தில் மற்ற பயன்பாடுகள் செயல்படுவதற்கு தேவையான காலி இடவசதி இல்லாமல் பயன்பாடுகளை செயல்படுத்துவதில்அல்லல் படுவோம் இதனை தவிர்க்க இவ்வாறான நகல்கோப்புகளை அடையாளம் காண பைத்தானை பயன்படுத்தி கொள்ளலாம் இதற்காகMD5hash எனும் பைத்தான கோப்பு பயன்படுகின்றது இதில்create(), get_drive() , search(), search1(), md5() ஆகிய செயலிகள் பயன்படுகின்றன இவையனைத்தும் ஒன்றாக சேர்ந்த இதனுடைய dupl.py எனும் நிரல்தொடர்குறிமுறைவரிகளின் கோப்பினை விண்டோவில் செயல்படும் தயார்நிலையில் உள்ள exeகோப்பாக http://l4wisdom.com/dupl_go.php/ எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொண்டு இதனை செயற்படுத்திடுக உடன் C:\PytInstaller-2.1\dup\dist என்ற கோப்பகத்தில் இதனுடைய exeகோப்பு வீற்றிருப்பதை காணலாம் தேவையெனில் விண்டோ கோப்பகத்திற்குள் இதனை வைத்திடலாம் அதன்பின்னர் இதனை செயற்படுத்தி நம்முடைய கணியில் உள்ள நகல்கோப்புகளை அறிந்துகொண்டு அவைகளை நீக்கம் செய்து கொள்ளலாம்

விண்டோவின் முந்தைய இயக்கமுறைமையின் கோப்புகளை எவ்வாறு நீக்கம் செய்வது

விண்டோ 7 அல்லது விண்டோ 8.1 இயக்கமுறைமையிலிருந்து விண்டோ 10 இற்கு கணினியை மேம்படுத்தியபிறகு பழைய இயக்கமுறைமையில் உருவாக்கபட்ட கோப்புகளை தெரிவுசெய்து Del எனும் விசையை அழுத்தினால் பிழைசெய்தியைமட்டுமே காண்பிக்கும் கோப்புகளை நீக்கம் செய்திடாது இந்நிலையில் இதற்காக விண்டோ10 இயக்கமுறைமை திரையின் கீழே இடதுபுறமூலையில் உள்ள start என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் பட்டியில் உள்ள தேடிடும் பெட்டியில் Disk Cleanup என தட்டச்சு செய்துகொண்டு உள்ளீட்டு விசையைஅழுத்துக உடன் Disk Cleanup எனும் சாளரம் திரையில் தோன்றிடும் அதில் கீழ்பக்கம் நகர்த்தி சென்றுபட்டியலாக இருப்பவைகளில் Previous Windows installation(s) என்பதன் தேர்வுசெய் பெட்டியானது தெரிவுசெய்யபட்டுள்ளதாவென சரிபார்த்து தெரிவுசெய்துகொள்க பிறகு இதே உரையாடல் பெட்டியில் OK. என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் முந்தைய இயக்கமுறைமையில் உருவாக்கபட்டதேவையற்ற கோப்புகள் அனைத்தும் நீக்கம் செய்யபட்டுவிடும்

7

சாம்பா எனும் கட்டற்றவலைபின்னல் கோப்பமைவை பற்றிஅறிந்துகொள்க

நம்முடைய தேவைக்கேற்ப வலைபின்னல் சேவையினை smbd,nmbd,winbindd ஆகிய மூன்ற ஏவலாட்களை கொண்ட சாம்பா எனும் கட்டற்றவலைபின்னல் கோப்பமைவை பயன்படுத்தி கொள்க இதில் smbdஆனது வலைபின்னலின்வாயிலாக அச்சிடும்பணியை பகிர்ந்துகொள்ளபயன்படுகின்றது nmbdஆனது இணைய உலாவலை கட்டுபடுத்திட பயன்படுகின்றது winbinddஆனது விண்டோ என்ட்டி சேவையாளர் போன்றவைகளை கட்டுபடுத்திட பயன்படுகின்றது மேலும் smb.conf என்ற கோப்பின் வாயிலாக உரைபதிப்பானுடன் அடிப்படை கட்டமைவு செய்திடவும் smbpasswd என்ற கோப்பின் வாயிலாக பயனாளரின் பயன்பாட்டு நிலையை கட்டுப் படுத்திடவும் smbusers என்பதன்மூலம் எந்தெந்த பயனாளர்களை பயன்படுத்திடலாம் எனவும் கட்டு படுத்திடுகின்றது இந்த சம்பாவின் வாயிலாக யூனிக்ஸிற்குள் விண்டோ பயனாளர்களும் அனுகவும் அச்சுப் பொறிகளை கையாளவும், ஐபிமுகவரிக்கு பதிலாக பயனாளர் விரும்பும் பெயரில் அனுகி பணிகளை பகிர்ந்து கொள்ளவும், யூனிக்ஸிற்குள் விண்டோவின்பெயரிடும் சேவையையும் அனுமதிக்கின்றது. இது விண்டோ என்ட்டியை விட அதிக நிலைத்தன்மையும் அதிகதிறனும் கொண்டதாக உள்ளது. இது யூனிக்ஸ் விண்டோ ஆகிய இருபணிச்சூழலுக்கு இடையே இடமாற்றிட அனுமதிக்கின்றது. இது ஒரு விண்டோவின் துவக்கநிலை கட்டுபாட்டாளர் போன்று செயல்படுகின்றது. இது விண்டோ சேவையாளர் போன்று நிலைத்தன்மை கொண்டது நிலையான விண்டோ இணையஉலாவி சேவையை இது வழங்குகின்றது இதில் Admin users,valid users, invaliduseers, Read users, Write users ,Guest ஆகிய பல்வேறு வாய்ப்புகளையும்username map,usernamelevel ஆகிய பயனாளர் வாய்ப்புகளையும் Encrypt passwords,UNIXpassordsyncஆகிய பாதுகாப்பு வாய்ப்புகளையும் தன்னகத்தேகொண்டதாக உள்ளது இதனை பற்றிய மேலும் விவரம் அறிந்துகொள்ளவும் தரவிறக்கம் செய்து பயன்படுத்திகொள்ளவும்https://www.sampa.org/ என்ற இணைய தளத்திற்குசெல்க

ZFileSystem(ZFS)எனும் கோப்பு அமைவை பற்றி அறிந்துகொள்க

இது பொதுமேம்பாட்டுவழங்கும்அனுமதி (Public Developement Distributed Licence)என்பதன் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள ஒருகட்டற்ற கோப்பு அமைவு பயன்பாடாகும்

இது(ZFS) ஒருங்கிணைந்த தரவு அமைப்பை கொண்டது இதில்தரவுகளை Checksumஎன்பதுடன் சேர்த்து உருவாக்கிடும்போது Checksum ஆனது கணக்கிட்டு அதனையும் சேர்த்து எழுதிகொள்கின்றது பின்னர் இந்த தரவை படித்திடும்போது மீண்டும் இந்த Checksum ஆனது கணக்கிட்டு ஒப்பீடு செய்து சரிபார்க்கின்றது சரியாக இல்லையெனில் பிழைஎன காட்டி அதனைதானாகவே சரிசெய்து கொள்கின்றது

இதுகுவியலான தேக்கும்இடவசதிகொண்டது அதாவது கணினியில் அவ்வப்போது தேக்கிடும் சாதனங்களை கூடுதலாக இணைத்திடும்போது அதனையும் சேர்த்து தரவுகளை தேக்கிவைத்திடும் இடவசதியை பகிர்ந்துகொள்கின்றது

இதுவிரிவாக்கமும் திறன்மிக்கதுமாக விளங்குகின்றது இதுஒரு 128பிட் கோப்பமைவை கொண்டதாக இருப்பதால் ஜீட்டா பைட் அதாவது ஒருபில்லியன்டெராபைட்அளவு நினைவக கொள்ளளவை கையாளும் திறன்மிக்கதாகும் இது பல்லடுக்கு redundant array of independent disk(RAID)என்பதை ஆதரிக்கும் தன்மைகொண்டது

பொதுவாக தற்போது நாமானவரும் பயன்படுத்திடும் கோப்பமைவானது ஒரு வட்டில் ஒரு கோப்பமைவை மட்டுமே உருவாக்கி கையாளும் தன்மையுடையதாகும் இரண்டு வட்டுகள் எனில் இரண்டு தனித்தனி கோப்பமைவாக உருவாக்கி கையாளும் தன்மையில் உள்ளன அதற்கு பதிலாக இது ஒன்றுற்கு மேற்பட்டு வட்டுகளில் ஒரேசமயத்தில் தனித்தனி கோப்பமைவாக இல்லாமல் ஒரேமாதிரியான கோப்பமைவை உருவாக்கி கட்டமைத்து கையாளும் திறன்கொண்டது

மிகமுக்கியமாக தற்போதுள்ள கோப்பமைவானது கூடுதலான வட்டினை இணைத்தவுடன் அதனையும் ஒருங்கிணைந்து வளர்ந்து விரிவாக்கம் செய்து ஒரே தேக்கும் அமைவாக இந்த ZFS மேம்படுத்தி கொள்கின்றது மேலும் விவரங்களுக்கு https://www.freebsd.org/doc/handbook/zfs.html என்ற இணைய தளத்திற்கு செல்க