உருவப்படங்களை இணையதளத்தில் எளிதாக பகிர்ந்து கொள்ள ShareX எனும் கட்டற்ற பயன்பாட்டினை பயன்படுத்தி கொள்க

முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் நாம் விரும்பும் படங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக மிகவும் சிரமமட்டு அவைகளை பதிவேற்றம் செய்திடுவோம் அவ்வாறான பணிகளை எளிதாக்குவதற்காக ShareX எனும் கட்டற்ற பயன்பாடு தயாராக இருக்கும்போது நாம் எதற்காக கவலைப்படவேண்டும் இந்த பயன்பாட்டினை நம்முடைய கணினியில் நிறுவுகை செய்து செயல் படுத்திடுக இந்த கட்டற்ற பயன்பாடானது திரையில் இருப்பதை நகலெடுப்பது கணினியின் திரையில் அல்லது ஏதேனும் ஒரு பயன்பாடு செயல்படுகின்றதுஎனி்ல் அதனுடைய சாளரத்தினைஅல்லது முழுவதுமானதிரையில் உள்ளஉருவப்படம் ஆகியவற்றை நாம் விரும்பியவாறு நகலெடுத்து நாம் விரும்பிய இடத்தில் பதிவேற்றம் செய்வதற்காக ஏராளமான கருவிகள் நமக்கு உதவுவதற்காக இந்த பயன்பாட்டின் திரையில் உள்ளன உருவப்படங்களை மட்டுமல்லாது கானொளி காட்சிகளை கூட இந்த பயன்பாட்டினை கொண்டு பதிவேற்றம்செய்திடுமாறு செயல்படுத்திடலாம் படப்பிடிப்பு செய்த உருவப்படங்களையும் கானொளிகாட்சிகளையும் நம்முடைய நாம்விரும்பும் logo அல்லது watermark ஐ பின்புலமாக இருக்குமாறு செய்திடலாம் இணைய தளகாட்சிகளையும் இணையதள முகவரியையும் நகலெடுத்து படப்பிடிப்பு செய்தபின் அதில் திருத்தம் செய்து நம்முடைய நன்பர்களுக்கு சமூதாய வலைதளத்தில் பதிவேற்றம்செய்து பகிர்ந்து கொள்ளலாம்

தற்போதைய சோனார் தொழில்நுட்பம் எவ்வாறு மக்களுக்கு உதவுகின்றது

வெளவால்கள் இந்த சோனார் எனும் காதில் கேளா ஒலிஅலைகளின் உதவியால் தமக்கு தேவையான இரையை தேடுவதும் டால்பின் வேல்ஸ் போன்ற மீனினங்கள் நீரில் மூழ்கி இந்த இந்த சோனார் எனும் காதில் கேளா ஒலிஅலைகளின் உதவியால் தமக்கு தேவையான இரையை தேடிஅடைவதும் அனைவரும்அறிந்த செய்தியே அவ்வாறான காதுகேளா ஒலிஅலைகளின் தற்போதைய வளரச்சியினால் SmartCane எனும் கருவியானது பார்வையற்றவர்கள் மற்றவர்களின் உதவியில்லாமல் தங்களுடைய பணியை ஆற்றிட உதவுகின்றது அவ்வாறே வாரஇறுதியின் ஓய்வுநாட்களில் கடலுக்குள்சென்று மீன்பிடிப்பவரகளுக்கு உதவுவதற்காக Lowrance HDS-9 Gen2 Touch Sonar/GPS Combo with HDI Transducer system எனும் கருவியானது மூன்றாம் தலைமுறை அலைகற்றை நான்காம் தலைமுறை அலைகற்றையின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செயல்படுத்தபடுகின்றது முன்பெல்லாம்பலபத்தாண்டுகளாக இந்த சோனார் தொழில்நுட்ப்பத்தை பயன்படுத்தி அதன்முடிவை 10 அல்லது 15 நிமிடத்தில்அறிந்து கொண்டனர் அவ்வாறான நிலையானது தற்போது Single Leg Bearing Range (SLBR) எனும் பயன்பாட்டினை கொண்டு சோனார் தொழில்நுட்ப்பத்தை பயன்படுத்தி அதன்முடிவை ஒருசிலநொடிகளில்அறிந்து கொள்ளமுடியும் என்றஅளவிற்கு மேம்பட்டுள்ளது

பலதளங்களிலும் செயல்படும்திறன்மிக்கபயன்பாடுகளை மேம்படுத்திட உதவிடும் Qt எனும் கருவி

இந்த கியூட் எனும் கருவியானது நிரல்தொடர்எழுதும் கணினிமொழியன்று ஆனால் இதுபலதளங்களிலும் மேஜைக்கணினி, உள்பொதிந்த அமைவு, செல்லிடத்து பேசி ஆகியவற்றில் செயல்படும்திறன்மிக்கபயன்பாடுகளையும் வரைகலைபயனாளர் இடைமுகப்பினை மேம்படுத்திட உதவிடும் ஒரு கட்டற்ற கருவியான வரைச்சட்டமாகும் இது முதன்முதலில் 1995 வெளியிடப்ட்டு தற்போது Qt 5.8எனும் புதியபதிப்பு வெளியிடப்பட்டுள்ளது இது சி++ எனும் கணினிமொழியில் உருவாக்கப்பட்டு விசுவல்ஸ்டுடியோ ஜாவாஸ்கிரிப்ட் எஸ்கியூஎல் ஆகியவற்றை ஆதரிக்கின்ற ஒரு வரைசட்டமாக அமைந்துள்ளது
இதனை இதுவரையில் ஏறத்தாழ ஒருமில்லியன் பயனாளர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். இது வழக்கமான மேஜைக்கணினி திரைமட்டுமல்லாது வரைகலை இடைமுகப்பையும் கொண்டதுபெயின்டிங்க் பிரின்டிங்க் ஆகிய பணிகளுக்கும் இந்த விட்ஜெட்ஸ் பயன்படுத்தி கொள்ளப்படுகின்றதுபயனாளர் தாமே முயன்று தாம்விரும்பியவாறான இணைய உலாவி இயந்திரத்தை உருவாக்கிட இதுஉதவுகின்றது இதனை பதிவிறக்கம் செய்து நிறுவுகை வழிகாட்டியின் உதவியால் அல்லது நேரடியாக இதனை நம்முடைய கணினியில்நிறுவுகை செய்து கொள்ளமுடியும் அதன்பின்னர் QtCreater என்பதை செயல்படுத்திடுக உடன் தோன்றிடம் திரையில் File>NewFile அல்லது NewProject என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் விரியும் திரையில் QtQUIApplication என்பதை தெரிவுசெய்து கொண்டு இதற்கொரு பெயரிடுக பிறகு Qtversion என்பதில் ஒன்று அல்லது அதற்குமேற்பட்ட பதிப்புகளை தெரிவுசெய்துகொள்க பின்னர்QWidget என்பதை அல்லது இயல்புநிலையில் இருப்பதை தெரிவுசெய்து கொள்க main.cpp, widget.h, widget.cpp, widget.uiஆகிய இந்த செயல்திட்டத்திற்கான கோப்புகள் உருவாகிவிடும் மேலும் விவரங்களுக்கு https://wiki.qt.io/ எனும் இணையபக்கத்திற்கு செல்க

பேரளவு கோப்புகளை கையாளுவதற்கு உதவிடும் திறமூல கருவிகள்

தினமும் கணினியை கையாளும் நிருவாகியானவர் கிகாபைட் கொள்ளளவு கொண்டு பதிவு கோப்புகளையும் நிரல்தொடரலாளர்கள் பேரளவு பயன்பாட்டுகோப்புகளின் மூலக்குறிமுறைவரைகளையும் பயன்பாட்டு பதவிகோப்பகளையும் இந்த பயன்பாடுகளை பரிசோதிப்பாளர்கள் இந்த பயன்பாடுகளின் பேரளவு வெளியீட்டு கோப்புகளையும் கையாளவேண்டியுள்ளது இதுமட்டுமல்லாது இதில் அடங்காத Comma Seperated Value(CSV), Log Data Files (LDF), Master Data Files(MDF)போன்ற கோப்புகளையும் கையாளவேண்டியுள்ளது நாம் இந்த பேுரளவு கோப்புகளை திறப்பதற்காக முயறிசி செய்திடும்போது கணினியானது அப்படியே தொங்கலாக நின்றுவிடுகின்றது அல்லது கணினியின் இயக்கமானது எருமைமாடு போன்று மிகவும் மெதுவாகிவிடுகின்றது அல்லது “The file is too large to open pl wait” என்ற செய்தியை திரையில் காண்பித்து நமக்கு எரிச்சலையும் நம்முடைய பொறுமையையும் பரிசோதிக்கின்றது இதனை தவிர்ப்பதற்காக பேரளவு கோப்பகளை கையாளுவதற்காக பின்வருமாறான திறமூல கருவிகள் பலஉள்ளன அவைகளை பயன்படுத்தி நம்முடைய சிரமத்தை குறைத்து கொள்ளலாம்
Notepad++ என்பது ஏராளமானமேம்பட்ட வசதிகளையும் வாய்ப்புகளையும் கொண்டது இதுவே பொதுவாக அனைவராலும் HTMLபதிப்பானாக அறியபடும் கருவியாகும் இது அனைத்து இயக்கமுறைமைகளிலும் செமயல்படும் திறன்மிக்கதுகண்ணால் என்ன பார்க்கின்றோமோ அதனை பெறமுடியும்(What You See Is What You Get(WYSIYG)) என்ற தன்மைகொண்டது. நம்முடையஅனைத்து மொழிச்சூழலிலும் இது மிகச்சிறப்பாக செயல்படும் திறன்மிக்கது
Gloggஎன்பதுபலதளங்களிலும் செயல்படும் திறன்கொண்டவரைகலை பயனாளர் இடைமுகப்பு பயன்பாட்டு கருவியாகவும் பேரளவு தரவுகோப்பகளை தேடுதல் கண்ணால் காணுதல் போன்ற செயல்களுடன் இவ்வாறான கோப்பகளை மேலேற்றம் செய்திடாமல் நேரடியாக நினைவகத்தில் இருந்தவாறு திரையில் தோன்றிடசெய்திடும் திறன்கொண்டதாகும்
ConTEXT என்பது விண்டோ இயக்கமுறைமையில் செயல்படும் ஒரேசமயத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட பேரளவு கோப்புகளை திறந்து பணியபுரியஉதவும் 20 இற்கும் மேற்பட்ட மொழிகளின் சூழலிலும் செயல்படும் திறன்மிக்கதாகும்
EmEditor என்பது அனைத்து மொழிகளின் சூழலிற்குமானஒருங்குகுறிகளை கையாளும் திறன்மிக்கது பலஇயக்கமுறைமைகளிலும் பல தளங்களிலும் செயல்படும் திறன்கொண்டது 248 ஜிபி கொள்ளளவு கொண்ட கோப்புகளையும் கையாளும் திறன்மிக்கது திரையின்சாளரத்தை நான்குபலகம்வரை பிரித்து கையாளும் திறன்மிக்கது தானாகவே கோப்புகளைஅவ்வப்போது சேமித்து கொள்ளும் தன்மைகொண்டது
EditPAdLite என்பது பொதுநோக்கு உரைகளை கையாளும் திறன்கொண்டது அனைத்து மொழிகளின் சூழலிற்குமானஒருங்குகுறிகளை கையாளும் திறன்மிக்கது தாவிபொத்தான்களின் வாயிலாக ஒன்றிற்கு மேற்பட்ட கோப்புகளுக்கு சென்று பணிபுரியும் வசதிமிக்கது
பொதுவான பேரளவு கோப்புகளை கையாளுவதற்கான ஆலோசனைகள் இவ்வாறான கோப்புகளைஅடிக்கடி திறக்கவும் மூடவும் செய்யாதீர்கள் தேவைப்படும்போது திறந்து பணிபுரிந்தபின்மீண்டும் தேவைப்படாது எனும்போதுமட்டும் கோப்பினை மூடிவெளியேறுக
ஒன்றிற்குமேற்பட்ட உரைகளை கையாளும் கோப்புகளை ஒரேசமயத்தில் திறந்து பணிபுரியவேண்டாம் மற்ற பெரிய உரைபதிப்பு கோப்புகளை மூடிவிட்டு கூடியவரை ஒன்றிரண்டு உரைகளை கையாளும் கோப்புகள் மட்டும் செயலில் இருக்குமாறு பார்த்து கொள்க
பேரளவுகோப்புகளை சிறுசிறு கோப்புகளாக பிரித்து கையாளவது நல்லது என பரிந்துரைக்கப்படுகின்றது

அறிமுகம் பீகிள்போன்ப்ளாக்

பீகிள்போன்ப்ளாக் என்பது மிககுறைந்த மின்னேற்றத்திலும் செயல்படும் திறமூல ஒரு ஒற்றையான அட்டையில் மட்டுமே செயல்படும்மிகச்சிறிய கணினியாகும் இதில் உட்பொதிந்த பல்லூடக கட்டுபாட்டாளராக(embedded Multimedia Controller(eMMC) செயல்படுகின்றது ஒரே சிலிகான் டையிற்குள் மின்வெட்டு நினைவகத்தையும் நினைவக கட்டுபாட்டாளரையும் கொண்டதாகும் இது1கிலோஹெர்ஸ் செயலியையும் 512 எம்பி ரேமையும் கொண்டதாகும் 32கேபிக்கு பதிலாக 4 கேபியாக குறைக்கப்பட்ட அளவையும் 4 ஜிபிநன்டு கேட் கொண்ட மிகமேம்பட்ட வரையறுக்கப்பட்ட பல்லூடக இடைமுகத்தையும் யூஎஸ்பி இடைமுகத்தையும் கொண்டது இது செயல்படுவதற்கு 4 ஜிபி நினைவகம் கொண்ட எஸ்டி அட்டை தேவையாகும் இந்த பீகிள்போன்ப்ளாக் என்பது இயந்திரமனிதன், மின்மோட்டார்இயக்கி, ட்விட்டர் அச்சுப்பொறி, தானியங்கியாக தரவுகளைபிற்காப்புசெய்தல்,போன்ற தானாகவே செயல்படும் செயல்களுக்கு பயன்படுத்தி கொள்ளப்படுகின்றதுஎந்தவொரு செயலையும் வாடிக்கையாளர் விரும்பியவாறு திருத்தியமைத்து மிகவிரைவாக செயல்படுமாறு செய்யலாம் MATLABஉடன் ஒத்தியங்கிடும் தன்மைகொண்டதாகும் இதில் நாமே கட்டளைவரிகளை உள்ளீடு செய்து நாம் விரும்பும் செயலை தானாகவே செயல்படுமாறு செயல்படுத்தி கொள்ளமுடியும் மேலும் விவரங்களுக்கும் பயன்படுத்தி கொள்ளவும் http://debian.beagleboard.org/ என்ற இணைய பக்கத்திற்கு செல்க

கிரேடில்(Gradle) எனும் திறமூல கருவியைகொண்டு மென்பொருள் உருவாக்கிடும் பணியை எளிதாக்கிகொள்க

கிரேடில் என்பது முன்கூட்டியே கட்டமைக்கப்பட்ட திறமூல அமைவாகும் இது நிரலாளர்களின்த மென்பொருள் உருவாக்கும் பணியை எளிதாக்குகின்றது இது தற்போது பெரும்பாலான ஆண்ட்ராய்டு மென்பொருள் உருவாக்குநர்களிடம் மிகப்பிரபலமாக விளங்குகின்றது இது குரூவி எனும் கணினிமொழியை அமைவு செய்வதற்காக உள்ளூர் குறிப்பிட்டமொழியை(Domain Specific Language) கட்டமைத்திட பயன்படுத்தி கொள்கின்றது இலக்கினை அடைவதற்காக நிர்ணயப்பதற்கு நேரடி சுழற்சியல்லாத வரைபடத்தினை(Direct Acyclic Graph) பயன்படுத்தி கொள்ளப்-படுகின்றது இந்த கருவியானது செல்லிடத்து பேசி பயன்பாடுகளிலிருந்து சிறியஅளவுசேவைநிறுவனங்கள் வரையிலும் அவ்வாறே சிறிய துவக்கநிறுவனத்திலிருந்து மிகப்பெரிய நிறுவனங்கள் வரையிலும் தங்களுடைய ஆண்ட்ராய்டு பயன்பாடுகளையும் செயல்திட்டங்களையும் உருவாக்கிடுவதற்கும் மேம்படுத்தி கொள்வதற்கும் பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது ஆண்ட்ராய்டு ஸ்டுடியோவில் வாடிக்கையாளர்விரும்பியவாறு கட்டமைவு செய்வதற்கான கருவியாக (apk)எனும் ஆண்ட்ராய்டு கட்டுகளின் கோப்புகளை உருவாக்கிடவும் நிருவகிக்கவும் இந்த கிரேடில் பேருதவியாக இருக்கின்றது தனித்தனிசெயல்களாலான பணியை ஒருங்கிணைத்த தனித்தனியான செயல்திட்டமாக ஒன்றும் அதற்குமேற்பட்ட செயல்திட்டங்களையும் கட்டமைவுசெய்வதற்கு இது உதவியாக இருக்கின்றது ஜாவா, சி++அல்லது நாம்விரும்பும் நம்முடைய மொழியில் ஆண்ட்ராய்டிற்கான பயன்பாடுகளை உருவாக்கிடஇந்த கிரேடில் மிகவும் பயன்படுகின்றது மேலும் விவரங்களுக்கு http://gradle.org/ எனும் இணைய பக்கத்திற்கு செல்க

Gatling எனும் நிரல்தொடரில் பணிச்சுமையை பரிசோதிக்கும்எளியகருவி

நிரல்தொடர்லாளர்கள் தங்களுடைய புதிய செயல்திட்டத்திற்கான கட்டளைவரிகளை உருவாக்கி அதனை செயல்படுத்திடும்போது அதனால் உருவாகும் பணிச்சுமையை பரிசோதிப்பதற்காக இந்தGatling எனும் எளியகருவியானது மிகபயனுள்ளதாக அமைகின்றது இந்தGatling எனும் எளியகருவியானதுScala,Akka,Nettyஆகியவற்றால் கட்டமைக்கபட்டது இது தொகுப்பாக இல்லாத HTTPகோரிக்கையின்படி ஒத்தியங்காமல் வரும் கோரிக்கைகளை மட்டும் பயன்பாட்டு நிரல்தொடரில் செயல்படுத்திடுமா என பரிசோதித்து பார்க்கஉதவும் எளிய கட்டற்ற கருவியாகும் இதனை http://gatling.io#/resources/downlaod/ என்ற இணையதள பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்க பின்னர் GATLING_HOME ,JAVA_HOME ஆகிய இரு சூழல் மாறிகளைஅமைத்து கொண்டபின்னர் இதனை பயன்படுத்தி எளிய மெய்நிகர் (Simulation)சூழலை அமைத்து கொள்க இதனை செயல்படுத்திடுவதற்காக நமக்கு சாதாரண அறிமுக தகவல்களே போதுமானது இதற்கென ஆழ்ந்த அறிவுஎதுவும் தேவையில்லை இது செயல்படும் சூழலில் 10நொடியில் 100பயனாளிகள் பயன்படுத்தினால் என்னவாகும் என பரிசோதிப்பதற்கான Simulationscriptஐ தயார்செய்து கொண்டுgatling.batஎனும் விண்டோவில் செயல்படும் கோப்பினை நிறுவுகை செய்து செயல்படுத்தி பரிசோதித்து பார்த்திடுக அடுத்ததாக https://github.com/2013techsmarts/Gatling_Maven_Demo/ எனும் இணையதளபக்கத்திலிருந்து Xmlஎனும் கோப்பினை பதிவிறக்கம் செய்து பரிசோதித்து பார்த்திடுக

Previous Older Entries