வருங்காலத்தில் AI எனும் செயற்கை நுண்ணறிவின் பயன்கள்

AI என சுருக்கமாக அழைக்கப்படும் செயற்கைநுண்ணறிவை(Artificial Inteligent) பற்றிய வரையறையும் அதன் புகழையும் கடந்தகாலங்களில் நாம் விவாதித்தோம் அதனைதொடர்ந்து அதனுடைய தாக்கம் என்னவாகவிருக்கும் எனஅறிந்து கொள்ளும் நிலைக்கு தற்போது வந்திருக்கின்றோம் இந்த செயற்கை நுண்ணறிவானது குப்பை மின்னஞ்சல்களை வடிகட்டுவது நல்ல புத்தகங்களை பரிந்துரைப்பதுஎன்பன போன்ற மிகச்சாதாரண பணிகள் மட்டுமல்லாது நம்முடைய மனிதவாழ்க்கையின் அனைத்து செயல்களிலும் வியாபார நடவடிக்கைகளிலும் நீக்கமறநிறைந்து இரண்டற கலந்துபயன்படவிருக்கின்றது என்ற செய்தியை மனதில் கொள்க இந்த செயற்கைநுண்ணறிவின்அவ்வாறான பயன்களைபற்றிய ஒரு பறவைபார்வை பின்வருமாறு
செயற்கைநுண்ணறிவால் உருவாக்கப்படவிருக்கும் மேய்நிகர்உதவியாளர் (Virtual assistants) ஆனது தனிமனிதஉதவியாளராக மட்டுமல்லாமல் வணிக நடவடிக்கைகளிலும் நிறுவனசெயல்பாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு நிறுவனங்களின் உற்பத்தியை பெருக்கி இலாபத்தை உயர்த்துவதற்கான உற்றநண்பனாக விளங்கவிருக்கின்றது அதிலும் நம்முடைய குரலொலி வாயிலாகவே இந்த உதவியாளரை நமக்கு தேவையான அனைத்து உதவிகளையும்செய்திடுமாறு கட்டுப்படுத்திடும் திறன்கொண்டது
நாம் செல்லுமிடங்களுக்கு நம்முடைய கடனட்டையை அல்லது வங்கிஅட்டையை கொண்டு செல்லத் தேவையில்லைஅதற்குபதிலாக செயற்கைநுண்ணறிவால் உருவாக்கப்படவிருக்கும் நம்முடைய உருவஅங்கீகாரத்தை (Facial recognition) கொண்டு ATM வாயிலாக நம்முடைய செலவிற்கு தேவையான பணத்தை எடுப்பது , நமக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்வது, நாம் எங்கிருக்கின்றோம் என்னென்ன செய்கின்றோம் என அனைத்தையும் அறிந்து கொள்வது ஆகிய அனைத்தையும் இதன் மூலம் செயற்படுத்தி கொள்ளமுடியும்
நிறுவனங்களின் தலைமைபொறுப்பிலுள்ளவர்கள் இந்த செயற்கை நுண்ணறிவை கொண்டு சமீபத்திய நிகழ்வுகளின் போக்குகளை அறிந்து அதனடிப்படையில் தம்முடைய நிறுவனத்தை புத்தாக்கம் செய்வது விரிவுபடுத்துவது மேம்படுத்துவது ஆகிய பணிகளை மிகவிரைவாக எளிதாக செய்து கொள்ளமுடியும்
அதுமட்டுமல்லாது பல்லூடகங்களை கையாளுதல் வாடிக்கையாளர் ஒவ்வொருவரின் விருப்பு வெறுப்புகளை அறிந்து கொண்டு அவரவர்விரும்பும் வகையிலான விளம்பரங்களை இசைகளை கானொளி காட்சிகளை உருவப்படங்களை அசைவூட்டு படக்காட்சிகளை பயனாளர்கள் பயன்படுத்திடும் சமூகபல்லூடகங்களிலேயே வெளியிடச்செய்திடமுடியும் அதிலும் வியாபாரநிறுவனங்களின் விளம்பரங்களை மிகச்சரியாக வெளியிடமுடியும்
நிறுவனங்களின் வெற்றிக்கும் வளர்சிக்கும் தேவையான சந்தைகளின் ஆய்வறிக்கை, ஒப்பீட்டு அறிக்கை போன்ற பல்வேறு அறிக்கைகளை மிகஎளிதாக இந்த செயற்கை நுண்ணறிவை கொண்டுஉருவாக்கி வெளியிடமுடியும் அதிலும் நாம் விரும்பும் பல்லூடகவெளியீடாககூட கிடைக்குமாறு செய்திடமுடியும்
நமக்கு ஏற்படும் எந்தவொரு சந்தேகத்தையும் ,சிக்கலுக்கான தீர்வையும் இந்த செயற்கை நுண்ணறிவிடம் கேள்வியாக கேட்டவுடன் அதற்கான தீர்வை உடனடி ஆலோசனையாக வழங்கவிருக்கின்றது
இந்த செயற்கை நுண்ணறிவானது மருத்துவத்துறையில் நோயாளிகளின் உடலில் காணும் நோய்களுக்கானஅனைத்து அறிகுறிகளையும் முழுவதுமாகஅலசி ஆராய்ந்து நோய்க்கான மிகச்சரியான மருந்துகளை மிகச்சரியானஅளவிற்கு பரிந்துரை செய்யவிருக்கின்றது அதுமட்டுமல்லாமல் மிகச்சிக்கலான அறுவை சிகிச்சையின்போது மருத்துவர்கள் அவ்வாறான அறுவைசிகிச்சைகளை மிகச்சரியாக செய்வதற்கான மிகச்சிறந்த உதவியாளராக இந்த செயற்கை நுண்ணறிவு விளங்கவிருக்கின்றது
மேலும் மனித படைப்பாற்றலை ஆராய்ந்து விரிவுபடுத்தி மேம்படுத்திடும் மனித வாழ்வின் சிறந்ததொரு வாய்பாக இந்த செயற்கை நுண்ணறிவானது விளங்கவிருக்கின்றது . இருப்பினும், பெரும்பாலானபணிகளில் அதிகரித்த தானியங்கி செயல்களினால் மக்களுக்கு பாதிப்பு ஏதேனும் ஏற்படுமோ என பெரும்பாலானோர் அதிக அக்கறை கொண்டுள்ளனர். இ ந்த செயற்கை நுண்ணறிவின்மூலம் பலர் வேலையில்லாமல் இருப்பதாக அநேகர் நம்புகின்றனர், எதுஎவ்வாறு இருப்பினும் எந்தவொருபுதிய கண்டுபிடிப்புகளையும் நம்முடைய மனிதவாழ்வினை மேம்படுத்திடுவதற்கேற்ப நல்வாய்ப்பாக வரவேற்று அதனை மிகச்சரியாக பொருத்தமாக பயன்படுத்தி முன்னேறுவதற்கான வெற்றிபடிகளாக மாற்றிடுவதே சரியான வழிமுறையாகும் என பரிந்துரைக்கப்படுகின்றது.

லினக்ஸிற்கான விண்டோ துனைஅமைவு ஒரு அறிமுகம்

விண்டோ இயக்கமுறைமையில் கட்டணமற்ற லினக்ஸின் பயன்பாடுகளை இயங்கிடுமாறு செய்வதற்காக WSL என சுருக்கமாக அழைக்கப்படும் லினக்ஸிற்கான விண்டோ துனைஅமைவு (Window Subsytem for Linux) பேருதவியாக இருக்கின்றது இதனை செயல்படுத்த நமக்கு தேவையானவை பதிப்பு 1607உள்ள விண்டோ 10 இயக்கமுறைமை அல்லது அதற்குமேம்பட்ட பதிப்பு அதைவிட இந்தவிண்டோ 10 இயக்கமுறைமையானது 64-bit இல் செயல்படும் திறன்கொண்டதாவெனசரிபார்த்து கொள்க
முதலில் விண்டோ 10 இயக்கமுறைமை திரையில் Start Menuவை அல்லது Power User Tasks menu வை திறக்கசெய்து அதில் பற்சக்கரம் போன்றுள்ள உருவப்பொத்தானான Settings என்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் Settings எனும் சாளரத்தில் System. என்பதை தெரிவுசெய்திடுக பின்னர்விரியும் System. எனும் திரையின் இடதுபுறத்தில் About என்பதை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் விரியும் திரையின் வலதுபுற பகுதியில் விண்டோ 10 இயக்கமுறைமை பற்றிய விவரங்களை படித்தறிந்து கொள்க இதனுடைய பதிப்பு (Version)ஆனது குறைந்தபட்சம் 1607 ஆகவும் அமைவின் வகை (System type) யானது 64-bit ஆக இருக்கின்றதாவென உறுதிபடுத்தி கொள்க

விண்டோ 10 இயக்கமுறைமையின் பதிப்பு1607 இக்கு குறைவாக இருந்தால் இந்த WSL ஐ நிறுவுகை செய்வதற்குமுன் நம்முடைய விண்டோ 10 இயக்கமுறைமையை நிகழ்நிலைபடுத்தி மேம்படுத்திகொள்க
பின்னர்விண்டோ 10 இயக்கமுறைமை திரையில் Start Menuவை விரியச்செய்து அதில் Windows PowerShell எனும் கோப்பகத்தை தேடிபிடித்து விரியச்செய்திடுக உடன்விரியும் பட்டியலான கோப்புகளில் Windows PowerShell என்பதை தேடிபிடித்து அதன்மீது இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் More என்பதையும் பின்னர் Run as administrator என்பதை யும் தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில்
Enable-WindowsOptionalFeature -Online -FeatureName Microsoft-Windows-Subsystem-Linux
எனும் கட்டளைவரியை செயல்படுத்திடுக
உடன் ஒருசில பயன்பாடுகள் பதிவிறக்கம் ஆகத்துவங்கிடும் இந்த பணிமுடிவடையும்போது கணினியின் இயக்கத்தை மறுதுவக்கம் செய்யவா எனநம்மிடம் கோரும் வேறு கோப்புகள் எதுவும் திறந்த நிலையில் இல்லை என்பதை உறுதிபடுத்திகொண்டு Y என தட்டச்சு செய்திடுக இதன்பிறகு கணினியானது மறுதுவக்கம் செய்திடும் அதில் PowerShell திரையை தோன்றச்செய்திடுக அந்த திரையில்bash என்பதை இயங்கச்செய்திடுக உடன் இந்த bash ஆனது தற்போது லினக்ஸ் பயன்பாடுகள் எதுவும் கைவசம் இல்லை https://aka.ms/wslstoreஎனும் முகவரியிலிருந்து பயன்பாடுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளவா என அனுமதிகோரும் உடன் உள்ளீட்டு விசையை அழுத்திடுக அதனை தொடர்ந்து திரையில் Ubuntu, OpenSUSE, SUSE Enterprise Server, Debian, Kali. போன்றவைகளை பட்டியலிடும்

அவற்றுள் Ubuntu என்றவாறு ஒன்றினை தெரிவுசெய்து கொண்டுGet என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் Launchஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக சிறிதுநேரம் இவை நிறுவுகை செய்வதற்காக அமைதியாக காத்திருக்கவும் இந்நிலையில் Error: 0x8000000dஎன்றவாறு பிழைச்செய்தி ஏதாவது திரையில் தோன்றினால் மீண்டும் முந்தைய வழிமுறைகளை பின்பற்றிசெயல்படுக இதன்பின்னர் சரியாக நிறுவுகை பட்டவுடன் நமக்கென தனியாக கணக்கு ஒன்றினை கடவுச்சொற்களுடன் உருவாக்கி உள்நுழைவுசெய்திடுக

இதன்பிறகு லினக்ஸ் கட்டளைகளையும் பயன்பாடுகளையும் இந்த திரையில் எளிதாக செயல்படுத்தி பயன்பெறலாம் exit என உள்ளீடு செய்து இந்த திரையிலிருந்து வெளியேறி வழக்கமான விண்டோ திரைக்கு வந்து சேருக.

கைபேசி அல்லது திறன்பேசி பயன்பாடுகளில் ஏன் ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை பயன்படுத்தி கொள்ளவேண்டும்

தற்போது உலகமுழுவதுமுள்ள பயனாளர்கள் அனைவரும் இந்த ஆண்ட்ராய்டு செயல்படும் கைபேசிகளை அல்லது திறன்பேசிகளையே பயன்படுத்தி வருகின்றனர். கூகுள் நிறுவனமும் அவ்வப்போது புதிய புதிய செயலிகளையும் பல்வேறு புதிய வசதிவாய்ப்புகளையும் AR ,VR தொழில்நுட்பங்களையும் இதில்சேர்த்து கொண்டே உள்ளதால் கைபேசி அல்லது திறன்பேசி பயன்பாடுகளை நாமனைவரும் நம்முடைய அனைத்து தேவைகளையும் நிறைவு செய்துகொள்வதற்காக இதனை பயன்படுத்திவருகின்றோம்
இந்த ஆண்ட்ராய்டு பயன்பாடுகள் ஜாவா எனும் கணினிமொழியில் உருவாக்கப்படுவதால் எளிய நம்பகமான அனைத்து பயன்பாடுகளுடன் ஒத்தியங்கிடும் தன்மையுடன் இவை செயல்படுகின்றன
ஆண்ட்ராய்டு SDK தளமானது கட்டற்றதாக விளங்குவதால் குறைந்த முதலீட்டில் நமக்குதேவையான பயன்பாடுகளை நாம் உருவாக்கி வெளியீடுசெய்து நம்முடைய வாழ்விற்கு போதுமான அளவு இலாபத்தை நம்முடைய வியாபாரத்திலிருந்து ஈட்டுமாறு செய்து கொள்ளமுடியும்
இதில் வாடிக்கையாளர்கள் தாம் விரும்பியவாறான இடைமுகத்தை உருவாக்கி தேவையான பயன்பாடுகளையும் வசதிவாய்ப்புகளையும் கூடுதலாக சேர்த்து பயன்படுத்திகொள்ளலாம்
நிறுவனங்கள் தங்களுடைய நிருவாகத்தின் அனைத்து தேவைகளையும் நிறைவுசெய்வதற்கான ஒற்றையான இதனுடைய பயன்பாடுகளை கொண்டு திருப்தியுடன் நிறைவுசெய்து கொள்ளமுடியும்
கூகுள் ப்ளேஸ்டோர் அல்லது சொந்த வலையமைப்பு அல்லது APK வாயிலாக விநியோகித்தல் அல்லது மூன்றாவது நபர்களின் வாயிலாக சந்தைபடுத்துதல் ஆகிய பல்வேறு வகைகளில் பொருட்களை சேவைகளைபரந்துபட்ட அளவில் பயனாளர்களின் தேவைகளுக்கேற்ப விற்பணைசெய்வதற்காக இதன்மூலம் சந்தைபடுத்திடலாம்
வாடிக்கையாளர்கள் இந்த பயன்பாடுகளை பயன்படுத்தி கொள்ளும்போது ஏற்படும் குறைகளை ,சந்திக்கும் இடர்பாடுகளை தெரிவித்தால் அவ்வாறான குறைபாடுகளை அல்லது இடர்பாடுகளை வாடிக்கையாளர்கள் திருப்தியுறும் வண்ணம் உடனக்குடன்சரிசெய்யப்படுகின்றது
போட்டிமிகுந்த தற்போதைய சூழலிற்கேற்ப பயன்பாடுகளை மிகவிரைவாக வும் உடனடியாக வும் நிறுவுகை செய்து செயல்படுத்தி நம்முடைய தேவைகளை நிறைவுசெய்து கொள்ளமுடியும்
மேலும் காலத்திற்கேற்றவாறு பல்வேறு வசதி வாய்ப்புகளுடன் இதனை வெளியிடு செய்துகொண்டே உள்ளனர்
பரந்தளவிலான பயனார்களிடத்தில் நம்முடைய பயன்பாடானது வெற்றி பெறுவதற்காக ஆண்ட்ராய்டானது ஒரு சிறந்த தளமாக விளங்குகின்றது .அதனோடுகூடவே நம்முடைய இலக்குகளை அடைய உதவுவதற்கான விருப்பங்களையும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை யும் இது வழங்குகிறது.

கட்டளைவரி வாயிலாக கோப்புகளை பார்வையிடஉதவிடும் கருவிகள்

லினக்ஸ் இயக்கமுறைமையின் கட்டளைவரித்திரையில் கருவிகளின் கட்டளைவரிகளை செயல்படுத்தி கோப்புகளை பார்வையிடலாம் உதாராணமாக README எனும் கட்டளைவரியை கொண்டு ஒரு HTMLவகை கோப்பினை ஒரு LaTeX வகைகோப்பினை அல்லது ஏதேனுமொரு உரைக்கோப்பினை பார்வையிடுவதை போன்று lessஎனும் கட்டளைவரி கருவியை பயன்படுத்தி
less கோப்பின்_பெயர்.doc
என்றவாறு கட்டளைவரியை உள்ளீடுசெய்து உள்ளீட்டு விசையை அழுத்துவதன் வாயிலாக நாம் பார்வையிட விரும்பும் கோப்பினை திறந்து கொள்க அதனை தொடர்ந்து விசைப்பலகையிலுள்ள spacebar அல்லதுPgDn அல்லது PgUp ஆகிய விசைகளை அழுத்துவதன் வாயிலாக குறிப்பிட்ட கோப்பினை பார்வையிடலாம் Qஎனும் விசையை அழுத்தவதன் வாயிலாக நாம் திறந்து பார்வையிட்ட கோப்பிலிருந்து வெளியேறலாம்

Antiwordஎனும் கட்டளைவரி கருவியை பயன்படுத்தி வேர்டு ஆவணத்தை சாதாரண உரைஆவணமாக plaintext மட்டுமல்லாது PostScript அல்லது PDF ஆவணமாக கூட மாற்றிடலாம் .அதற்காக
Antiwordகோப்பின் _பெயர்.doc
என்றவாறு கட்டளைவரியை உள்ளீடுசெய்து உள்ளீட்டு விசையை அழுத்துவதன் வாயிலாக நாம் பார்வையிடவிரும்பும் கோப்பினை திறந்து கொள்க அதன்பின்னர் நம்முடைய விருப்பத்தை செயல்படுத்திடலாம்

odt2txt எனும் கட்டளைவரி கருவியை பயன்படுத்தி நம்மிடம் லிபர் ஆஃபிஸ் போன்ற பயன்பாடுகள் இல்லையென்றாலும் வேர்டு ஆவணத்தை திறந்து அதனை பார்வையிடமுடியும் அதற்காக
odt2txtகோப்பின்_ பெயர்.doc
என்றவாறு கட்டளைவரியை உள்ளீடுசெய்து உள்ளீட்டு விசையை அழுத்துவதன் வாயிலாக நாம் பார்வையிடவிரும்பும் கோப்பினை திறந்து பார்வையிடுக

நம்முடைய வருங்கால வைப்புநிதி கணக்கிலுள்ள தொகையை நேரடியாக இணையத்தின் வாயிலாக எளிதாக பெறமுடியும்

இதற்கு முன்பெல்லாம் நம்முடைய வருங்கால வைப்புநிதி கணக்கிலுள்ள தொகையை அவசரதேவைக்கு பெறவேண்டுமெனில் நாம் பணிபுரியும் நிறுவனத்தில் அதற்கான படிவத்தை சமர்ப்பித்து அதனை அந்நிறுவனம் பரிந்துரைசெய்தால் மட்டுமே பெறமுடியும் என்ற நிலைஇருந்துவந்தது தற்போது அவ்வாறான நிலைநீக்கம் செய்யப்பட்டு பணியாளர்கள் தங்களுடைய அவசரதேவைக்கு பின்வரும் படிமுறைகளை பின்பற்றி இந்த இணையதளத்தில் நேரடியாக விண்ணப்பித்து உடனடியாக பெற்றுகொள்ளமுடியும் இதற்கென அடிப்படையாக ஆதார் எண்ணுடன் நம்முடைய UAN எனும் நம்முடைய வருங்கால வைப்புநிதி கணக்கு இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது மட்டுமேயாகும் முதல் படிமுறையாக EPFO எனும் இணையதளபக்கத்திற்கு சென்று அங்கு நம்முடைய UAN எண்ணையும் கடவுச்சொற்களையும் கொண்டு உள்நுழைவுசெய்திடுக அடுத்து தோன்றிடும் திரையில் Manage எனும்தாவிபொத்தானின் திரையை தோன்றசெய்து அதில் KYC எனும் நம்மைபற்றிய விவரங்களை சரியாக இருக்கின்றதாவென சரிபார்த்து கொள்க பின்னர் திரையின் மேலே கட்டளைபட்டையில் Online Services எனும் தாவிபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் கட்டளைபட்டையின் கீழிறங்கு பட்டியலில் Claim (Form-31, 19 & 10C ) ஆகிய படிவங்களை விரியச்செய்து தேவையான படிவத்தை தெரிவுசெய்து கொள்க அதன்பின்னர் திரையில் பயனாளரின் விவரங்கள் பிரதிபலிக்கும் தொடர்ந்து நம்முடைய வங்கியின் கணக்கு எண்ணில் கடைசி நான்கு இலக்கத்தை மட்டும் உள்ளீடுசெய்து Verify எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் sign the certificate of undertaking and proceed further எனும் வாய்ப்பில் Yes எனும் தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்து கொள்க இவ்வாறு இணையத்தின் வாயிலாக வருங்கால வைப்புநிதியிலிருந்து தொகை பெறுவதற்கான படிவத்தை பூர்த்தி செய்வதற்காக மூன்று படிவங்களின் வாய்ப்புகள் நமக்காக தோன்றிடும் அவற்றுள் படிவம் எண் 19 என்பது பணிஒய்வு பெறும்போது முழுவதுமாக தீர்வுசெய்வதற்கானதாகும் படிவம் 10C என்பது பணிஓய்வு பெற்றபின்னர் ஒய்வூதியம் பெறுவதற்கானதாகும் படிவம் எண் 31 என்பது இடையில் பிள்ளைகளின் கல்வி, திருமணம், மருத்துவம் வீடுவாங்குவது என்பனபோன்ற நம்முடைய பல்வேறு தேவைகளுக்காக பகுதி தொகைமட்டும் பெறுவதற்காக பயன்படுத்தி கொள்ளலாம்

இதில் தேவையான படிவத்தினை தெரிவுசெய்து அதில் கோரும் விவரங்களை பூர்த்தி செய்து கொண்டு proceed for online claimஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இதனை தொடர்ந்து நம்முடைய இணையத்தின் வாயிலான கோரிக்கை யில் கோரிய விவரங்களை ஆதாருடன் சரிபார்த்து சரியாக இருக்கின்றது எனில் நம்முடைய வங்கிகணக்கிற்கு 10 நாட்களுக்குள் தொகைவ வந்து சேரும்

கணினி மென்பொருட்களின் வெளியீட்டிற்கான அனுமதிபற்றி(License) அறிந்து கொள்வோம்

தற்போது பெரும்பாலான கணினிமென்பொருட்கள் கட்டற்றதாக (Opensource)வெளியிடப்டபடுகின்றன ரெட்ஹெட் நிறுவனமும் ஆர்ஹெச்இஎல் நிறுவனமும் கட்டற்ற அனுமதிக்கான முன்னனி நிறுவனங்களாக விளங்குகின்றன இவ்வாறான கட்டற்ற அனுமதியை copyleft ,permissive ஆகிய இரண்டு தொகுப்புகளாக பிரித்திடலாம்
copyleft எனும்முதல் வகையில் GPL போன்றஅனுமதியடங்கும் இந்த வகையில்வெளியிடும் மென்பொருட்களின் மூலக்குறிமுறைவரிகளை யார்வேண்டுமானாலும் அனுகி தாம் விரும்பியவாறு திருத்தம்செய்து மற்றவர்களுக்கு திருத்தம்செய்வதற்கு முந்தைய நிலையிலோ அல்லது திருத்தம் செய்தபின்னரான நிலையிலோ விநியோகிக்கமுடியும் இந்த வகைஅனுமதியில் அவ்வாறான மென்பொருளை யார்வேண்டுமானாலும் இயக்கலாம் மூலக்குறிமுறைவரிகளைபடித்தறியலாம் மூலக்குறிமுறைவரிகளில்திருத்தம் செய்திடலாம் மூலக்குறிமுறைவரிகளைமறுவிநியோகம் செய்திடலாம் என்றவாறு அம்மென்பொருளிற்கு சுதந்திரமான அனுமதி வழங்கப்படுகின்றது இந்த அனுமதியில் இவ்வாறானஅனுமதியின்படி வெளியிடப்பட்ட மென்பொருளை இயக்கிபயன்பெறுதல் மூலக்குறிமுறைவரிகளைபடித்தறிதல் மூலக்குறிமுறைவரிகளில்திருத்தம் செய்திடுதல் மூலக்குறி முறைவரிகளைமறுவிநியோகம் செய்தல் ஆகியசெயல்களை செய்வதற்காக யாரும் கண்டிப்பாக தடுக்கமுடியாது
permissive எனும் இரண்டாவது வகை அனுமதியில்வெளியிடப்படும் மென்பொருட்களின் மூலக்குறிமுறைவரிகளை யார்வேண்டுமானாலும் அனுகி தாம் விரும்பியவாறு திருத்தம்செய்து திருத்தம்செய்வதற்கு முந்தைய நிலையிலோ அல்லது திருத்தம் செய்தநிலையிலோ பயன்படுத்தி கொள்ளமுடியும் ஆயினும் தனியுடைமை மென்பொருளை போன்று மூலக்குறிமுறைவரிகளை திருத்தம் செய்து மற்றவர்களுக்கு மறுவிநியோகம் மட்டும் செய்திடமுடியாது என்ற கட்டுப்பாடு இந்த வகை அனுமதியில் உள்ளது
மென்பொருட்களின் மூலக்குறிமுறைவரிகளுடன் வெளியிடுபவர்கள் பின்வரும் வழிகாட்டுதல்களை பின்பற்றிடுமாறு கோரப்படுகின்றது
1.எந்தவொரு கட்டற்ற மென்பொருளையும் வெளியிடும்போதும் 10 இற்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான கட்டற்ற அனுமதிதொகுப்பில் பொருத்தமானஒன்றினைமட்டும் தெரிவுசெய்து வெளியிடுக
2. தனியுடமை அனுமதிமற்றவகையில் வெளியிடுவதாக இருந்தாலும் கட்டற்ற அனுமதியில் வெளியிடுவதை கருத்தில் கொள்வது நல்லது
3.மென்பொருட்களின் மூலக்குறிமுறைவரிகளை ஏதாவதொரு கட்டற்ற அனுமதியுடன் மட்டுமே வெளியிடுக

வாடிக்கையாளர்கள் எங்கிருந்தாலும்அவர்களுக்கான பணியை நம்முடைய வீட்டிலிருந்தவாறே இணையத்தின் வாயிலாக செய்துமுடித்திடலாம்

தொழிலகங்களுக்கு அல்லது அலுவலகங்களுக்கு நேரடியாக செல்லாமல் நம்முடைய வீட்டிலிருந்தவாறே இணையத்தின் வாயிலாக வாடிக்கையாளர் கோரும் பணிகளை செய்துமுடித்திடமுடியும் இதனால் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அலுவலகத்தில் பணிபுரியவேண்டும் என்ற கட்டுப்பாடு எதுவுமில்லாமல் எந்தநேரத்திலும் பணியை செய்து முடித்திடலாம் மேலும் நம்முடைய குடும்ப உறுப்பினர்களுடன் எப்போதும்கூடவே இருந்து கொள்ளமுடியும் ஆயினும் நாம் வழக்கமாக அலுவலகத்திற்கு செல்வதற்கு தயார்செய்வதை போன்று நம்மை தயார்செய்து கொண்டு நம்முடைய பணியை செயற்படுத்திடுவது நன்று அடுத்ததாக ஒவ்வொரு நாளும் நாம் முடிக்கவேண்டிய பணிகளுக்கான பணிகளின் காலஅட்டவணை யொன்றினை தயார்செய்து குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட பணியை செய்துமுடித்திடுமாறு திட்டமிடுதல் நன்று மேலும் அலுவலகம் போன்ற நம்முடைய வீட்டிலிருந்து அலுவலக பணியை செய்திடும் பகுதியை தனியாக பிரித்து அமைத்து கொண்டு பணிபுரிவது நல்லது மிகமுக்கியமாக நம்முடைய வீட்டிலிருந்துதானே பணிபுரிகின்றோம் நம்மையார் கண்காணிக்கபோகின்றார்கள் என்ற அலட்சியமாக பணிபுரியாமல் நமக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை மிகச்சரியாக குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடித்திடவேண்டும் அதுமட்டுமன்றி இவ்வாறு வீட்டிலிருந்தவாறே குறிப்பிட்டபகுதியில் அலுவலகபணியை செய்திடும்போதுமுகநூல் கட்செவிபோன்ற சமூதாயபல்லூடகங்களில் மூழ்கிடாமல் அலுவலகபணியைமட்டும் செய்துமுடிப்பது மிகநன்று இவ்வாறான வீட்டிலிருந்தவாறு பணிபுரிந்தமைக்கான கட்டணத்தினை https://www.riamoneytransfer.com/ எனும் இணையதளமுகவரியை பயன்படுத்தி குறைந்த செலவில் பெற்றுகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்

Previous Older Entries