டார்ட்எனும் கட்டற்ற கணினி மொழி

இதுகூகுள் நிறுவனத்தால் பராமரிக்கபடும் கட்டற்ற விரிவாக்கத்தக்க ஒருகணினி மொழியாகும் . இது கற்பதற்கு எளிதான இணைய பக்கங்களை உருவாக்கிடவும் செல்லிடத்து பேசிகளின் பயன்பாடுகளை உருவாக்கிடவும் பயன்படும் ஒரு சிறந்த கணினி மொழியாகும் இது புதிய கணினி மொழிமட்டுமன்று நவீன இணைய பக்கங்களை கட்டமைத்து மேம்படுத்துவதற்கான சிறந்ததொரு திறன்மிக்க தளமாகவிளங்குகின்றது இந்த டார்ட் ஆனது ஜாவாமொழிபோன்று வாடிக்கையாளர்கள் கட்டமைக்கபட்ட வடிவமைப்பை கட்டாயப்படுத்தாத மொழியாகும் மேலும் இதில் ஜாவா மொழிபோன்று ஒழுங்கற்றநிலையை நோக்கி சார்ந்திருத்தல் கடினமாக குறிமுறையைபராமரித்தல் என்பனபோன்ற பிரச்சினைதரும் செயல்கள் எதுவும் இல்லை அதுமட்டு மல்லாது ஜாவாமொழிபோன்ற இனங்களின் படிநிலையும் தலைமுறைநிலையும் நிரல்தொடரில் பேரளவு கடினநிலையை அளிப்பது ஆகியனவும் இதில் இல்லை இந்த பிரச்சினைகள் அனைத்தையும் டார்ட் எனும் மொழியானது எளிதாக தீர்வுசெய்கின்றது மேலும் இந்த டார்ட் எனும் மொழியானது ஜாவாவைவிட இருமடங்கு விரைவாக சமீபத்திய இணைய உலாவிகளை செயல்படுத்துவதற்கு ஏதுவாக ஜாவாமொழியன் மொழிமாற்றியை பயன்படுத்தி செயல்படுகின்றது ஏராளமானவகையில் சேகரிக்கபட்ட நூலகத்தையும் கட்டுகளையும் தன்னகத்தே இது கொண்டுள்ளது அடிக்கடி மேம்படுத்திடும் முன்மாதிரியான கட்டளைத்தொடரை விரைவாக இந்த டார்ட் எனும் மொழியை பயன்படுத்தி உருவாக்கிடமுடியும் மேம்பட்ட கருவிகளையும் நம்பகமான நூலகங்களையும் நல்லதரமானமென்பொருளில் பெறியியல் தொழில்நுட்பத்தையும் பெறுவதற்கு இதனை அனுகமுடியும் இதனை http://www.dartlang.org/ எனும் இதனுடைய இணையபக்கத்திற்கு சென்று இந்த தளம் வழங்கும் இடைமுகக் குழுவின் வழிகாட்டுதல்களை அறிந்துகொண்டு இணையஉலாவியிலேயே டார்ட்மொழியின் குறிமுறைவரிகளை எழுதி செயல்படுத்தி சரிபார்த்திடமுடியும் இந்த தளமானது பதிவிறக்கம் செய்திடும் Dart Editor எனும் உரைபதிப்பானை வழங்க தயாராக இருக்கின்றது இந்த Dart Editor எனும் உரைபதிப்பானை கொண்டு நம்முடைய கணினியில் டார்ட்டின் பயன்பாடுகளை உருவாக்கி சரிசெய்து இயக்க அனுமதிக்கின்றது இதிலுள்ள பல்வேறு கட்டளைவரிகளைகொண்ட Dart SDKஎனும் கருவியும் மெய்நிகர் டார்ட்டும்(DartVM) இந்ததளத்திலிருந்து பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி கொள்ளமுடியும் இந்த உள்பொதிந்த மெய்நிகர் டார்ட்டை(DartVM) பயன்படுத்துவதற்கு நம்முடைய இணையஉலாவி அனுமதிக்கவில்லையெனில் கவலையேபடாதீர்கள் டார்ட் மொழியிலிருந்து ஜாவாமொழிக்கு மொழிமாற்றம் செய்திடும் மொழிமாற்றியான இதிலுள்ள Dart SDKஎனும் கருவி தயாராக உள்ளது அதனைகொண்டு ஜாவாமொழியாக மொழிமாற்றம் செய்து நிலைமையை சமாளித்து எதிர்கொள்ளமுடியும் இது ஜாவாஸ்கிரப்டின் பயனாளர்கள் ஜாவா கட்டமைவை மேம்படுத்துநர் ஆகிய இருதரப்பு பயனாளர்களும் பின்பற்றும் வடிவமைப்பை தன்னகத்தே கொண்டுள்ளது ஒரு எளிய சாதாரண டார்ட் நிரல்தொடரை எழுதுவது எவ்வாறு என இப்போது காண்போம் இதன் கட்டமைவானது நாம் பயன்படுத்திடும் வழக்கமான சி மொழிபோன்றே உள்ளது
//SimpleDart.dart
Voidmain(){
Print(“ வருக வருக வணக்கம்”);
}
இதுஒருஎளியநிரல்தொடர்குறிமுறைவரிகளாக இருந்தாலும் டார்ட் மொழியை பற்றிய சிலஅடிப்படை தகவல்களைஇதிலிருந்து அறிந்து கொள்ளலாம் இது சிமொழியின் இலக்கண நடைமுறையை பின்பற்றுகின்றது இந்த டார்ட் குறிமுறை கட்டளையானது mainஎனும் செயலியை நேரடியாக சார்ந்துள்ளது இந்த நெறிமுறையையே அனைத்து இடங்களிலும் இது பின்பற்றுகின்றது இந்த “ வருக வருக வணக்கம்” எனும் நிரல்தொடர்மொழியானது எளிமையானதாக தோன்றினாலும் பாதுகாப்பு, பிரச்சினைகளை தீர்வுசெய்வது ஆகிய செயல்களில் ஜாவாஸ்கிரிப்டை விடமேம்பட்ட தொழில்நுட்பத்தை வழங்குகின்றது
இது லினக்ஸ் ,விண்டோ ,மேக் ஆகிய அனைத்து இயக்கமுறைமை தளத்திலும் செயல்படும்திறன்மிக்கது இது சேவையாளராகவும், செல்லிடத்து பேசிகளின் பயன்பாடுகளை உருவாக்கி மேம்படுத்துதலிலும், இணைய பயன்பாடுகளை உருவாக்கி மேம்படுத்துவதிலும் மிகமுக்கிய பங்காற்றுகின்றது இந்த டார்ட் எனும் மொழியை ஆழ்ந்து அறிந்து தெரிந்து பயன்படுத்தி கொள்வதற்கு வாருங்கள் http://www.dartlang.org/docs/tutorials/ எனும் இதனுடைய இணைய பக்கத்திற்கு வந்து உங்களின் தேவைக்கு ஏற்ப இந்த டார்ட் மொழியை பயன்படுத்தி கொள்ளுங்கள்

கோ எனும் கணினி மொழியை ஐயம் திரிபறகற்றுகொள்வதற்கான ஆலோசனைகள்

கோ எனும் கணினி மொழியை ஐயம் திரிபற கற்றுகொள்ளவிரும்புவோர் பின்வரும் நான்கு கருத்துகளை/ஆலோசனைகளை பின்பற்றிடுக என பரிந்துரைக்கப்படுகின்றது.
1.முதலில் கோ எனும் கணினிமொழியின் parameter:type என்பன போன்ற அடிப்படைகளை தவறாமல் பின்பற்றிடுக இவ்வாறான அடிப்படைகளை நன்கு கற்றிட https://golang.org/doc/effective_go.html என்ற இணைய முகவரிக்கு செல்க
2.அடுத்தநிலையில் பல்வேறு பயன்களுக்கான குறிமுறைவரிகளின் கட்டமைவு எவ்வாறு உள்ளன எனஅறிந்து கொள்வதற்காக Docker/Moby, Kubernetes, Istio, containerd, CoreDNS ஆகிய மேககணினியிலான செயல்திட்டங்களுக்கு செல்க
3. மூன்றாவதாக gofmt. எனும் கருவியை கொண்டுIDE உடன் vim-go எனும் கூடுதல் இணைப்பு கருவியை கொண்டு இந்த கோ எனும் கணினிமொழியை நன்கு அறிந்து கொள்க
4.நான்காவதாக இவைகளின் அடிப்படையில் சுயமாக குறிமுறைவரிகளை எழுதி பிழைநீக்கி செயல்படுத்தி பயன்படுத்தி கொள்க

R எனும் கணினிமொழியின் செயலியை பைத்தானில் எவ்வாறு கொண்டுவருவது

தற்போதைய நவீனஉலகின் தரவுஅறிவியல், இயந்திரகற்றல் ஆகியவற்றில் பைத்தான் எனும் கணினிமொழி சிறந்ததா Rஎனும் கணினிமொழி சிறந்ததா எனும் போட்டிக்கான குத்துசண்டை மிகப்பிரபலமானதாகும் முன்னறிவிப்பு பகுப்பாய்வு ,இயந்தரகற்றல், தரவுஅறிவியல் ஆகிய செயல்களுக்கு இவ்விரண்டுமே ஏறத்தாழ பொருத்தமானவை-கள்தான் ஆயினும் அடிப்படையில் இவ்விரண்டும் குறிப்பிட்ட வகைகளில் வித்தியாச-மானவைகளாகும் அதாவது R எனும் கணினிமொழியானது விரைவான முன்மாதிரி தரவு பகுப்பாய்விற்கும் புள்ளியியல் பகுப்பாய்விற்கும் ஒரு சிறந்த கருவியாக விளங்குமாறு வடிவமைக்கப்பட்டதாகும் .அதற்குபதிலாக பைத்தான் எனும் கணினிமொழியானது சி++ அல்லது ஜாவா போன்ற விரைவான கற்றலிற்காவும் நெகிழ்வுதன்மையுடனான பொது-பயன்பாட்டிற்காகவும் நவீனகால பொருள்நோக்கு மொழியாகவும் பயன்படுமாறு உருவாக்கப் பட்டதாகும் மிகமுக்கியமாக புள்ளியியல் ,கணக்கீட்டுஉயிரியல், இயற்பியல் ,பொருளாதாரவியல் போன்ற துறைகளின் கணக்கீடுகளுக்கு Rஎனும் கணினிமொழி-யானது மிகச்சிறப்பாகபயன்படுகின்றது அதற்குபதிலாக இணைய மேம்படுத்துதலின் பின்புலமானதாகவும் ,அன்றாட பயன்பாட்டிற்கும், தானியங்கிதுறைக்கும் பகுப்பாய்விற்கும் பொது இயந்திரகற்றலின் வரைச்சட்டத்திற்கும் மிகமுக்கியமாக திறமூலகுழுவால் ஆதரிக்கபடுமாறும் பைத்தான் எனும் கணினிமொழியின் பயன்கள் நாளொரு வண்ணமும் பொழுதொருமேனியாகவும் நன்குவளர்ந்து வருகின்றது
அவ்வாறே mean/median/mode, normal distribution , Poisson distribution போன்ற அனைத்து புள்ளியியல் கணக்கீடுகளையும் எளிதாக கணக்கிட Rஎனும் கணினிமொழியானது மிகச்சிறந்த நன்பனாக விளங்குகின்றது
பைத்தான் எனும் கணினிமொழியானது தன்னுடைய குறிமுறைவரிகளின் திறனை கொண்டுஆய்வாளர்கள் பல்வேறு புள்ளியியல், நுண்ணறிவு, ஆக்கத்திறன் ஆகியவைகளை கொண்ட பகுப்பாய்வு வழிகளில் அந்த புள்ளிவிவரங்களைப் பயன்படுத்த அனுமதிக்கிறது. இவ்வாறான விவரங்களையும் விவாதங்களையும் தொடர்ந்து இவையிரண்டுமே ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் மிகச்சிறப்பாக விளங்குவதால் இவ்விரண்டையும் ஒன்றிணைத்தால் மிகச்சிறந்த இயந்திரகற்றல் திறனை நாம் பெறமுடியுமல்லவா? அதற்கான மிக எளிய ஒன்றிரண்டு எடுத்துகாட்டுகள் பின்வருமாறு
எடுத்துகாட்டு.1
vectors in R.
from R_functions import *
lst=[20,12,16,32,27,65,44,45,22,18]

என்றாவாறான Rஎனும் கணினிமொழியின் புள்ளியில் கணக்கீட்டினை fivenum எனும் செயலிவாயிலாக அடையமுடியும் அதனையே பைத்தானின் NumPy array கணக்கீட்டை எளிதாக செயல்படுத்திடமுடியும்
lst=[20,12,16,32,27,65,44,45,22,18]
fivenum(lst)
> array([12. , 18.5, 24.5, 41. , 65. ])
எடுத்துகாட்டு.2
ஒரு இயந்திரமானது சராசரியாக ஒருமணிநேரத்தில் 10 பொருட்களை உற்பத்தி செய்கின்றது அதனுடைய திட்டவிலக்கம் 2 இந்த இயந்திரத்தின் உற்பத்தியானது normal distribution. என்றால் ஒருமணிநேரத்திற்கு குறைந்தபட்சம் 7 உம் அதிகபட்சம் 12 எண்ணிக்கைக்கு மேலும் இல்லாமல் இருப்பதற்காகன நிகழ்தகவு யாது? எனும் புள்ளியியல் கணக்கீட்டினை எளிதாக pnorm எனும் செயலியை பைத்தானில் பயன்படுத்தி ஒருசில நொடிகளில் விடையை கணக்கிடலாம்
pnorm(12,10,2)-pnorm(7,10,2)
> 0.7745375447996848
அவ்வாறே lm எனும் சிறிய ஒற்றை கட்டளை வரியின் வாயிலாக புள்ளியியலின் மிகச்சிக்கலான கணக்கீடுகளை எளிதாக செயல்படுத்திஒரு சாதாரண வர்க்கமூலங்களின் பொருத்தப்பட்ட மாதிரியை எண்ணியல் தரவுத்தளத்திற்கு தேவையான அனைத்து புள்ளிவிவரங்களுடனும் பெறலாம் மேலும் இதுபோன்ற ஒருவரியிலான செயலியை பைத்தானில் பயன்படுத்திடும் விவரங்களை அறிந்து கொள்ள https://github.com/tirthajyoti/StatsUsingPython எனும் இணைய முகவரிக்கு செல்க

கணிதஆய்வுகளில் சிக்கலான கோட்டு சமன்பாடுகள் தீர்வுசெய்ய பயன்படும் Octave எனும் கட்டற்ற கணினிமொழி

தற்போது கணிதஆய்வுகள் மட்டுமல்லாது அறிவியல் ஆய்வுகளிலும் சிக்கலான கோட்டு சமன்பாடுகளையும் சாதாரண சமன்பாடுகளையும் தீர்வுசெய்யவேண்டிய நிலை உள்ளது அவ்வாறான சிக்கலான கணக்குகளை மிகஎளிதாக தீர்வுசெய்திட Octave எனும் கட்டற்ற கணினிமொழி உதவுகின்றது இந்த Octave எனும் மேம்பட்ட கட்டற்ற கணினிமொழியானது கட்டற்ற கணினி குழுவின்மூலம் கட்டளைவரிகளின் வாயிலாக சிக்கலான கோட்டு சமன்பாடுகளையும் சாதாரண சமன்பாடுகளையும் தீர்வுசெய்வதற்கான வழிமுறைகள் காணப்படுகின்றன Matlab ஐ பற்றி அறிந்தவர்கள் மிகசுலபமாக அதன் தொடர்ச்சியான இந்த Octave எனும் கட்டற்ற கணினிமொழியை தெரிந்துகொள்ளமுடியும் மிகஅனுபவம் வாய்ந்த கணிதஅறிஞர்கள்கூட தீர்வுகாண அவதிப்படும் சிக்கலான கோட்டு சமன்பாடுகளை மிகஎளிதாக தீர்வுசெய்வதற்கான பலஅரிய கருவிகளை இது தன்னகத்தே கொண்டுள்ளது அடுக்குக்கோவைகள் ,ஒருங்கமைவு சமன்பாடுகள் வேறுபாட்டு சமன்பாடுகள்,வெவ்வேறு இயற்கணித சமன்பாடுகள் போன்ற மிக சிக்கலான சமன்பாடுகளை இதிலுள்ள செயலிகளின் வாயிலாக மிகச்சுலபமாக தீர்வுகாணமுடியும் மேலும் இது சி ,சி++, போர்ட்ரான் போன்ற கணினிமொழிகளில் எழுதபட்ட தகவமைவுகளோடு ஒருங்கிணைந்து செயல்படும் திறன்வாய்ந்ததாகவுள்ளது. இது மிகமேம்பட்ட கணித தீர்வுகாணும் கட்டற்ற கணினிமொழிஎன்பதால் Matlab அல்லது Fortran போன்றவற்றை நன்கு அறிந்தவர்கள் இந்த Octave எனும் கட்டற்ற கணினிமொழியை பயன்படுத்திடுமாறு கேட்டுகொள்ளபடுகின்றது ஏனெனில் மிகச்சிக்கலான கணித சமன்பாடுகளை மணிகணக்கில் முயன்றாலும் தீர்வுசெய்திடமுடியாமல்திண்டாடி சோர்வும் வெறுப்பும் ஏற்படுகின்ற சூழலில் புதியவர்களும் இதன்மூலம்எளிதாக தீர்வுசெய்து கொள்ளமுடியும் என்ற செய்தியை மனதில் கொள்க
இதனுடைய வரைகலையை பயன்படுத்தி தரவுகளை வரைபடமாகவும் அதனைதொடர்ந்து இடைமதிப்புகள் குறிப்பிட்ட மதிப்பு எவ்வாறுஇருக்கும் என யூகித்து கண்டுபிடிக்கவும் முடியும் இது பொது அனுமதிபயன்பாடாக (GNU General Public License)கையடக்கநிலையில் கிடைக்கின்றது.

துவக்கநிலையாளர்கள் Mu எனும் பயன்பாட்டின் உதவியுடன் பைத்தான் எனும் கணினிமொழியை எளிதாக கற்கலாம்

பொதுவாக கணினிமொழிகளுக்கான கருவிகள் அனைத்தும் ஏற்கனவே கணினிமொழியை நன்கு அறிந்தவர்கள் தங்களுடைய திறனை மேலும் மேம்படுத்தி கொள்ளவும் பிழைகளை களையவும் பயன்படுத்தி கொள்ளுமாறு மட்டுமே வெளியிடப்பட்டுவருகின்றன ஆயினும் குறிப்பிட்ட கணினிமொழியை பற்றி அறியாத எந்தவயதுடைய புதியவர்களும் அல்லது துவக்கநிலையாளர்களும் பைத்தான் மொழியை எளிதாகவும் விரைவாகவும் கற்று சிறந்த பைத்தான் மொழி நிரலாளர்களாக வளர உதவவருவதுதான் Mu எனும் பயன்பாடாகும் இது GNU GPLv3என்ற அனுமதியின் அடிப்படையில் Nicholas Tollervey என்பவரால் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டதொரு கட்டற்ற பயன்பாடாகும் இது துவக்கத்தில் Micro:bitஎனும் சிறு கணினியுடன் உருவாக்கப்பட்டிருந்தாலும் இதனுடைய பயன் பரவலாக வளர்ந்து பைத்தான் கணினிமொழியை கற்கும்சிறந்த கருவியாக தற்போது உயர்ந்து-விட்டது இது விண்டோ லினக்ஸ் மேக் ராஸ்பெர்ரி பிஐ ஆகிய எந்தவொரு தளத்திலும் செயல்படும் திறன்மிக்கது இதனை https://codewith.mu/en/download எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்தபின் இதனை நிறுவுகை செய்வதற்காக இதில்கூறும் அறிவுரைகளை பின்பற்றி நிறுவுகை செய்து கொள்க அதன்பின்னர் இதனுடைய திரையில் Python 3 என்பதை போன்று தேவையானதை தெரிவுசெய்து கொண்டு நேரடியாக பைத்தான் குறிமுறைரிகளை எழுதத்துவங்கலாம் இதிலுள்ள பட்டிகள் நாம் பயன்படுத்தி கொள்வதற்கு மிகஎளிமையாக உள்ளன மேலும் விவரங்களுக்கு https://codewith.mu/en/tutorials/ என்ற இணையமுகவரிக்கு சென்று அறிந்து கொள்க மேலும் https://www.oreilly.com/programming/free/python-in-education.csp என்ற முகவரியில் கிடைக்கும் பைத்தான் மொழியை கற்பதற்கான கட்டணமற்ற புத்தகத்தை பதிவிறக்கம்செய்து பயன்பெறுக

Decoratorsஐ பயன்படுத்தி பைத்தான் குறிமுறைவரிகளை மேம்படுத்தி கொள்க

பைத்தான் நிரலாளர்கள் பலரும் இந்த Decorators ஐ பயன்படுத்திடுகின்றனர் ஆனால் அதனை பயன்படுத்திடுவதால் என்ன இறுதி விளைவு ஏற்படும் எனஒருசிலர் மட்டுமே புரிந்து கொண்டு அதற்குதக்கவாறு பயன்படுத்திடுகின்றனர் மற்றஅனைவரும் வழக்கம்-போன்று பயன்படுத்துவதுதானே என அதன் இறுதி விளைவுகளைபற்றி தெரிந்து கொள்ளாமலேயே பயன்படுத்தி கொள்கின்றனர் பெரும்பாலும் இந்த Decorators என்பதின் பொதுவான @decorator syntax. சேர்த்து பயன்படுத்தப்படுகின்றது வழக்கம்போன்ற நம்முடைய முதன்முதல் நிரல்தொடரை பைத்தானில் எவ்வாறு உருவாக்குகின்றனர் எனஇப்போது காண்போம்
def get_அனைவருக்கும்_வணக்கம்_function(punctuation):
“””Returns a அனைவருக்கும்,வணக்கம் function, with or without punctuation.”””
def அனைவருக்கும்_வணக்கம்():
print(“அனைவருக்கும்_வணக்கம்”)
def அனைவருக்கும்_வணக்கம்_punctuated():
print(“அனைவருக்கும் வணக்கம்!”)
if punctuation:
return அனைவருக்கும்_வணக்கம்_punctuated
else:
return அனைவருக்கும்_வணக்கம்
if __name__ == ‘__main__’:
ready_to_call = get_அனைவருக்கும்_வணக்கம்_function(punctuation=True)
ready_to_call()
# “அனைவருக்கும்வணக்கம்!” is printed
இந்த துனுக்கு குறிமுறைவரிகளில் get_அனைவருக்கும்_வணக்கம்_function எனும் செயலியானது ஒரு செயலியை திருப்புகின்றது.பின்னர் இந்த திருப்பபட்ட செயலியானது முதலில் அதற்கான செயல்ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன்பின்னர் அழைக்கப்-படுகின்றது இவ்வாறான நெகிழ்வுதன்மையின் வாயிலாக செயலிகளை பயன்படுத்திக் கொள்ளவும் உருமாற்றுதல் செய்திடவும் திறவுகோலாக இந்த Decoratorsஇன் செயல்கள் அமைகின்றன அடுத்து ஒரு எடுத்துகாட்டினை காண்போம்
import datetime
import time
from app_config import log
def log_performance(func):
def wrapper():
datetime_now = datetime.datetime.now()
log.debug(f”Function {func.__name__} being called at {datetime_now}”)
start_time = time.time()
func()
log.debug(f”Took {time.time() – start_time} seconds”)
return wrapper
@log_performance
def calculate_squares():
for i in range(10_000_000):
i_squared = i**2
if __name__ == ‘__main__’:
calculate_squares()
மேலே கானும் துனுக்கு குறிமுறைவரிகளில் log_performancedecorator என்பதை ஒரு செயலிக்குள் பயன்படுத்திடுகின்றோம் இது எண்களில் வர்க்கமூலங்களை 0 முதல் 10000000வரை கணக்கீடுசெய்கின்றது இதனுடைய வெளியீடு பின்வருமாறு இருக்கும்
$ python decorator_test.py
Function calculate_squares being called at 2018-08-23 12:39:02.112904
Took 2.5019338130950928 seconds
decorator என்பது நம்முடைய குறிமுறைவரிகளில் நெகிழ்வானதும் பராமரிக்க எளிதானதாகவும் செய்ய ஒரு சிறந்த வழியாகஅமைகின்றது. செயல்பாடுகளை இயக்கநேரத்தில் இது சரிபார்ப்பு செய்திடுகின்றது பிழைத்திருத்தவும் செய்வதற்கும் இது பயன்படுகின்றது தனிப்பயன்decoratorஐ நம்முடைய குறிமுறைவரிகளில் எழுதுவது மிகஎளிது, மூன்றாம் தரப்பு குறியீட்டைப் புரிந்துகொள்வதும், ஏற்கனவே எழுதப்பட்ட decoratorஐ புரிந்துகொண்டும் பயன்படுத்தி கொள்க
குறிப்பு இங்குஇந்த python decorator ஐ பற்றி முழுமையாக விளக்கமுற்பட்டால் அதிக பக்கங்களுக்கு நீளும் என்பதால் இரண்டு எடுத்துகாட்டுகளை மட்டும் வழங்கியுள்ளேன் மேலும் விவரங்களுக்கு https://www.learnpython.org/en/Decorators/ எனும் இணைய பக்கத்திற்கு சென்றறிந்து பயன்படுத்தி கொள்க.

பொருட்களுக்கான இணையத்(IOT)திற்கான சிறந்த கட்டற்ற கணினிமொழிகள்

இன்றைய நவீனஉலகில் தானியங்கியான பொருள் போக்குவரத்துகள், தானியங்கியான வண்டிகள், திறன்மிகுந்த வீடுகள் ,திறன்மிகுந்த நகரங்கள் என அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் இந்த பொருட்களுக்கான இணையத்(IOT)தினை நோக்கி மாறிகொண்டே வருகின்றன இவ்வாறான பொருட்களுக்கான இணையத்திற்கான மென்பொருளை உருவாக்குவதற்கு அடிப்படையாக ஒருசில கணினிமொழிகள் அத்தியாவசிய தேவையாகும் ஜாவா, சி, ஜாவாஸ்கிரிப்ட், பைத்தான், பிஹெச்பி ஆகியன அவ்வாறானவைகளில் கட்டற்ற கணினிமொழிகளாகும்
1.ஜாவா எங்கும் எடுத்துசென்று கையாளமுடிந்த கையடக்கமானதாகவும் எளிதாக கற்று பயன்படுத்தி கொள்ளமுடிந்ததாகவும் இருப்பதால் இதுபொருட்களுக்கான இணையத்(IOT)தில் பயன்பாட்டினை உருவாக்கி சாதனங்களுடன் அல்லது கருவிகளுடன் மிகஎளிதாக பயன்படுத்தமுடிந்தவொரு எளிய கணினிமொழியாக விளங்குகின்றது. கணினியிலிருந்து அல்லது கைபேசியிலிருந்து எந்தவொரு வன்பொருளையும் பொருட்களுக்கான இணையத்(IOT)துடன் இணைக்கும் திறன் மிக்கது .நம்பதகுந்ததாகவும் பாதுகாப்பானதாகவும் குறைந்த செலவாகக்-கூடியாதகவும் அதிகவளங்களை கொண்டதாகவும் பல்வேறு வகையான வன்பொருட்களையும் கையாளுவதை ஆதரிக்கும் தன்மைகொண்டதாகவும் சந்தையில் எளிதாக கிடைக்ககூடியதாகவும் நீண்டகால நோக்கில் பயன்பாடுகளை உருவாக்கிடும் தன்மை மிக்கதாகவும் இது விளங்குகின்றது
2.சி இது அனைத்துவன்பொருட்களோடும் மிகநெருக்கமான அடிப்படையான கணினி மொழியாகும்மேலும் உட்பொதிந்த பயன்பாடுகளை உருவாக்குவதில் திறன்மிக்கதாக விளங்குகின்றது அதனால் பொருட்களுக்கான இணைய(IOT)மென்பொருட்களை விரைவாகும் எளிதாகவும் உருவாக்கமுடியும் பல்வேறு கணினிமொழிகளுக்கும் அடிப்படையாக இந்த சி எனும் கணினிமொழியே இருந்துவருகின்றது இதுஎங்கும் எடுத்துசென்று கையாளமுடிந்த கையடக்கமானதாக இருந்துவருகின்றது முன்கூட்டியே கட்டமைக்கப்பட்ட நிரல்தொடர்கணினிமொழியாக தேவைக்கேற்ப விரிவாக்கதன்மை கொண்டது 32 விசைசொற்களை மட்டும்கொண்டுமுன்கூட்டியே கட்டமைக்கப்பட்ட செயலிகளை கொண்டது
3.பைத்தான் இது பெரும்பாலும் இணைய பயன்பாடுகளை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றது ஆயினும் பொருட்களுக்கான இணைய(IOT)மென் பொருட்களை உருவாக்குவதில் மிகமுக்கிய பபங்காற்றுகின்றது ஒருசில குறிமுறை-வரிகளை கொண்டு நாம் விரும்பிய பயன்பாடுகளை உருவாக்கி கொள்ள-முடியும் பொதுவாக தரவுகளின் அடிப்படையிலான அட்டவணை தரவுதளம் போன்றவை-களுக்கான பயன்பாடுஎனில் பைத்தான் முதல் வாய்ப்பாகதெரிவுசெய்து கொள்ளலாம் இதனை எளிதாகவும் விரைவாகவும் கற்கவும் அதன்பின்னர் நடைமுறைபடுத்தவும் முடியும் இது கையடக்கமானது எந்தவொரு அமைவையும் சாராதது சிறிய அட்டையிலும் செயல்படும் திறன்மிக்கது மிகச்சிறிய பொருட்களை கையாளுவதற்கான மென்பொருளிற்கு இது மிகவும் பொருத்தமானதாகும்
4.பிஹெச்பி தொழிலகங்கள் அனைத்தும் தானியங்கியாக மாறுகின்ற சூழலில் மையபடுத்தப்பட்ட பயன்பாடுகளை அதன் வழங்கல் பயன்பாடுகளுடன் இணைந்து மேககணினியுடன் ஒத்தியங்குவதற்கு அடிப்படையாக இது அமைகின்றது இதனை நாமேமுயன்று கற்று பயன்படுத்திட எளிதானது அதிக நெகிழ்வுதன்மையுடன் கூடியது ஒருங்கிணைந்துசெயல்படுவதிலும் ஒத்தியங்கவதிலும் எளிதானது மிகத்திறன்மிகுந்த முடிவை வழங்குகின்றது மிககுறைந்த செலவே ஆககூடியது மிக்சசிறு சென்ஸாரிலும் செயல்படும் சேவையாளர் கட்டுப்பாட்டு பயன்பாட்டினை இதன் வாயிலாகவே இதுவரையில் எளிதாக உருவாக்கி பயன்படுத்தபபட்டுவருகின்றது
5.ஜாவாஸ்கிரிப்ட் இணையத்தில் சிறுசிறு மேல்மீட்பு பட்டிகளை உருவாக்குவதில் இது முதன்மையாக இருக்கின்றது அனைத்து இணையஉலாவி பயன்பாடுகளையும் உருவாக்குவதற்காக இதனையே பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது மிகச்சிறிய ஹப்களையும் சென்ஸார்களையும் செயல்படுத்த உதவும் Node.Jsஎன்பதுஇந்த ஜாவாஸ்கிரிப்ட்டால் இயக்கப்படுகின்றது இது அனைத்து இணையஉலாவிகளையும் ஆதரிக்கின்றது இது பொருட்களுக்கான இணைத்திற்கு மிகபொருத்தமான கணினிமொழியாகும்

Previous Older Entries