ஆழ்கற்றலில் TensorFlow எனும் கட்டற்ற பயன்பாட்டினை பயன்படுத்தி கொள்க

தற்போது ஆழ்கற்றலானது (Deep Learning)பேரளவு தரவுகளை அலசி ஆராய்வதற்கான சிறந்த கருவியாகவும் புத்திதசாலிதனமான அமைவாகவும் பரவலாக பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது அவ்வாறான ஆழ்கற்றலை பயன்படுத்தி கணினியின் அடிப்படையில் நாம் மனிதர்கள் பேசும் இயற்கையான மொழிகளை செயல்படுத்திடு-வதற்காக வும்(NLP) ,பேசுவதை அங்கீகரிப்பதற்கும் fault diagnosis, predictive maintenance, mineral exploration, computer vision என்பனபோன்ற எண்ணற்ற செயல்களை செயல்படுத்து-வதில் TensorFlow எனும் கட்டற்ற மென்பொருளானது முதன்மையான பங்காற்றுகின்றது இது வரைபடத்தின் அடிப்படையிலான கணினி செயல்படுமாறு புதிய கட்டமைவினை செய்திடும் திறன்மிக்கது இந்த TensorFlow என்பது பைதானின் நிரல்தொடர் வடிவமைப்பின் அடிப்படையில் உருவாக்கி வெளியிடப் படுகின்றது அவ்வாறான பைதானின் அடிப்படையிலானஒரு எளிய TensorFlow வின் கணித செயல்பாட்டினை இப்போது காண்போம்
a = tf.Variable([4])
b = tf.Variable([7])
with tf.Session() as session:
session.run(tf.global_variables_initializer())
b = a + b
result = session.run(a)
print(a)
result = session.run(b)
print(b)
print(session.run(a))
print(session.run(b))
இதில்tf.global_variables_initializer() எனும் கட்டளைவரியானது உலகாளாவிய மாறிகளின் மதிப்பை துவக்கநிலைக்கு கொண்டுசெல்கின்றது இந்த TensorFlow இல் tf.Variable எனும் மாறிகள் மாறிகளின்(variables)தரவுகளை கையாளுவதறகாக பயன்படுத்தி கொள்ளப்-படுகின்றன. TensorFlow ஆனது ஒரு தரவோட்ட வரைபடத்தினை (dataflow graph) அனைத்து கணக்கீடுகளை சார்ந்திருக்கும் தனிப்பட்ட செயல்களை குறிப்பதற்காக பயன்படுத்தி கொள்கின்றது அதன்பின்னர் TensorFlow session என்பது உருவாக்கப்பட்டு உள்ளக அல்லது தொலைவிலுள்ள சாதனங்கள் அனைத்திலும் இந்த வரைபடங்கள் இயக்கப்படுகின்றன இறுதி பயனாளிகளிடமிருந்து சாதனங்களில் tf.estimator, Estimator , Keras ஆகிய மேல்நிலை APIs கள் வரைபடங்களின் sessionsகளின் விவரங்கள் மறைக்கப்படுகின்றன இந்த தரவுோட்ட வரைபடத்தில் முனைமங்கள் கணக்கீட்டு unitsகளையும் edges களானவை தரவுகள் பயன்படுத்தப்பட்டவைகளையும் அல்லது கணக்கீட்டில் உருவாக்கப்பட்டவைகளையும் பிரிதிநிதிபடுத்திகின்றன TensorFlow ஆனது ஒரு தரவோட்ட வரைபடத்தினுடன்கூடிய கணக்கீட்டு நூலகமாக மிகமேம்பட்ட பயன்பாடுகளை பயன்படுத்தி கொள்ள உதவுகின்றது ஒரு TensorFlowஐ செயல்படுத்திட துவங்கிடும்போது API ஆனது இயல்புநிலை வரைபடச்செயலிற்கான node , edge ஆகியவை உருவாகின்றன tf.Variable()எனும் மாறியானது எழுதகூடிய TensorFlow மதிப்பினை சேமித்து வைப்பதற்காக ஒரு செயலை சேர்க்கின்றது தொடர்ந்து இருsession.run() களுக்குஇடையே இ்ந்த மாறியானது செயலில் இருக்கின்றது அதனை தொடர்ந்து வரைபடத்திற்கு தேவையான மதிப்புகளை சேர்த்து வரைபடத்தினை உருவாக்குகின்றது

NumPyஒரு அறிமுகம்

எண்களை கையாளுவதற்காகவென்றே அதிலும் அணி, பல்லடுக்கு அணி போன்ற கணக்குகளை கையாளுவதற்காகஉதவவருவதுதான் இந்த Numerical Python சுருக்கமாக NumPy ஆகும்இது Sin(), Cos(), Tan() போன்ற இயற்பியல் கணக்குகளையும் integration, interpolation புள்ளியியல் கணக்குகளையும்,நேரியில் இயற்கணிதம், புள்ளியியல் சமிக்சை செயலியல் போன்றவைகளை கையாள இந்த NumPy மிகமுக்கிய பங்காற்றுகின்றது இந்த NumPyஇக்கு அடிப்படையாக விளங்குவது ndarrayஎன்பதாகும் typeஎனும் செயலியை NumPyarryஎன்பதில் செயல்படுத்தினால் எந்தவகை தரவுகளை சேமித்து வைத்திருந்தாலும் nupy.ndarrayஎன்பதாக திருப்புகின்றது
>>>import numpy as n
>>>a=n.array([1,2,3])
>>>type(a)

>>>b=n.array([‘a’,’b’,’c’])
>>>type(b)

பின்வரும் கட்டளை வரி களின் வாயிலாக ndarray வை இந்த NumPy இல் உருவாக்கிடமுடியும்
>>>e=n.array([[1,2,3],[3,4,5]],dtype=’s2’)
>>>e
array([[‘1’,’2’,’3’],
[‘3’,’4’,’5’]],
dtype=’ls2’)
>>>e.dtype
dtype(‘s2’)
இந்த NumPy யில்பின்வருமாறு 2 63 -1 அளவு வரை முழு எண்களை பயன்படுத்தி கொள்ளமுடியும்
>>>a=n.array([2**63-1,4],dtype=int)
>>>a
array([9223372036854775807, 4])
>>>a+1
array([-9223372036854775808, 5])
பொதுவாக இந்த NumPy ஆனது கணக்கிடுதலை எளிதாக்குவதுமட்டுமல்லாமல் சிக்கலான கணக்கினையும் மிகவிரைவாக கண்க்கிடுகின்றது என்ற தகவலையும் தெரிந்து கொள்க

கணிதத்தில்ஆர்வுமுள்ளவர்களுக்கு உதவதயாராக இருக்கும் Math Drills எனும் இணையதளம்

நமக்கு மிகமுக்கியமான கணிதத்திற்கான விடைகாண விழைகின்றோம் அதனை எங்கிருந்து பெறுவது என தவித்திடும் நபர்களுக்காகவே இந்த தளம் உதவதயாராக இருக்கின்றது நம்முடைய பிள்ளைகள் நம்மிடம் கோரும் கணிதம் தொடர்பான சந்தேகங்களை எளிதாக தீர்வு செய்வதற்கு இந்த தளம் எப்போதும் உதவதயாராக இருக்கின்றது கணிதம் கற்பிக்கும் கணித ஆசிரியர் தன்னுடைய மாணவர்கள் தன்னிடம் கேட்கும் பல்வேறு கணித தொடர்பான சந்தேகங்களையும் தீர்வுசெய்வதற்காகவே எப்போதும் அவ்வாறான ஆசிரியர்களுக்கு உதவதயாராக இந்த தளம் இரு்ககின்றது மாணவர்கள் நன்கு கணிதத்தில் பயிற்சி பெறுவதற்கான பல்வேறு கணித பயிற்சிகள் இந்த தளத்தில் உள்ளன இதற்காக இந்த தளத்திற்குள் உள்நுழைவுசெய்தவுடன் இதிலுள்ள பயிற்சிதாட்கள் Arithmetic, Other Math Topics, Holiday Math Worksheets, Interactive Math.ஆகிய பல்வேறு வகையாக உள்ளன அவைகளுள் நாம்மவிரும்பிடும் வகையை மட்டும் தெரிவுசெய்து பயன்படுத்திகொள்க அதுமட்டுமா நாம் இடைமுகம் செய்திடும் flashcards, a unit converter, a math units game, sudoku ஆகிய வகைகளும் இதில் உள்ளன மேலும் நமக்கு கணிதம் தொடர்பாக ஏற்படும் பல்வேறு வகையான சந்தேககங்களை தீர்வுசெய்வதற்காக Where do I find the answers?எனும் இணைப்பு நமக்கு கைகொடுக்கின்றது
இந்த பயிற்சிதாளில் Home, பட்டியலுடனான Topics , பகிர்ந்து கொள்வதற்காகShare , தொடர்ந்து கணித தகவல்களை தெரிந்து கொள்ள Subscribe , இந்த இணைய பக்கத்தின் மேலே செல்வதற்காக Up Arrow, இந்த இணைய பக்கத்தின் கீழே செல்வதற்காகDown Arrow, இதில் தேடுவதற்காக Search bar ஆகிய திரையின் மேலே உள்ள தாவிப்பொத்தானை பயன்படுத்திகொள்க அதற்கடுத்ததாக முதன்மை பட்டியல் கொண்ட தலைப்பு பக்கம் அதற்கடுத்ததாக பயிற்சிதாளின் இணைப்பும் உள்ளன இதனை கையடக்க PDF ஆக உருமாற்றம் செய்து பயன்படுத்தி கொள்க மேலும் விவரங்களுக்கு https://www.math-drills.com/எனும் இணைதள பக்கத்திற்கு செல்க

கணிதத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக உதவும் algebrarules.comஎனும் தளம்

Arithmetic, Exponents, Radicals ஆகிய அனைத்து வகையான அடிப்படையான இயல்கணித விதிகளையும் வழிமுறைகளையும் கற்று நம்முடைய கணித அறிவை மேம்படுத்தி கொள்வதற்காக உதவவருவதுதான் algebrarules.comஎனும் இணைய தளமாகும் இதனுடைய இணைய முகவரி .http://algebrarules.com/ஆகும் இந்த தளமானது கட்டணமில்லாமல் அனைவரும் பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கின்றது இந்ததளத்திற்குள் உள்நுழைவுசெய்தவுடன் இதில் உள்ள Arithmetic, Exponents, Radicals ஆகிய வகைகளில் நாம் பயின்றிட விரும்பும் வகையை முதலில் தெரிவுசெய்து கொள்க உடன் தொடர்புடைய இயல்கணிதம் தோன்றிடும் அதில் தேவையானதை தெரிவுசெய்து கொண்டபின்னர் Show Details எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரிவான எடுத்து காட்டுடன் நாம் தெரிவுசெய்த விதிகளை பற்றிய விளக்கம் திரையில் தோன்றிடும் அதனை நன்கு கற்றறிந்து கொண்டபின்னர் Hide Details எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து மறையச்செய்திடுக மீண்டும் அடுத்தடுத்த ஒவ்வொரு இயல்கணிதத்தையும் இவ்வாறே ஒவ்வொன்றாக அதனதன் வாய்ப்பினை தெரிவுசெய்து கொண்டுShow Details எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் விரியும் திரையின்விரிவான எடுத்து காட்டுடன் விதிகளை பற்றிய விளக்கம் திரையில் தோன்றிடும் அவைகளின் வாயிலாக நம்முடைய கணித அறிவை வளர்த்து கொள்க