தற்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக JBoss Web Server 5 எனும் பயன்பாடு Tomcat 9 என்பதுடன் சேர்ந்து கிடைக்கின்றது

ரெட்ஹெட் எனும் நிறுவனம் பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்வதற்கு வசதியாக ZIP அல்லது RPM வடிவமைப்பில் கட்டற்ற தொழில்நுட்பத்துடன் நிறுவனங்களின் அனைத்து தேவைகளுக்கும் ஒரேதீர்வான புதிய JBoss Web Server 5 எனும் இணைய பயன்பாட்டினை மிகமேம்பட்டபொறியானTomcat 9 என்பதுடன் சேர்த்து தற்போது வெளியிட்டுள்ளது இது HTTP/2 ஐஆதரிக்கின்றது மேலும் Servlet 4.0 எனும் விவர வரையறை கொண்டது அதுமட்டுமல்லாது JSSE எனும் இணைபபானுடன் சேர்ந்த TLS என்பதற்காக OpenSSL ஐ கொண்டது மிகமுக்கியமாக இயல்புநிலையிலான HTTP/1.1 என்பதற்காக NIO எனும் இணைப்பானை கொண்டது.அதைவிட இதனுடைய TLS ஆனது மெய்நிகர் SNI ஐ ஆதரிக்கின்றது இது உள்பொதிந்த வழங்கல்களை ஆதரிக்கின்றது இதில் tomcat-vault எனும் நிறுவுகை செயல் மேம்படுத்தப்பட்டுள்ளது இதில் பல்லடுக்கு பண்புகளுடன் கூடிய கோப்புகளை கட்டமைக்கமுடியும் இந்த JBoss Web Serverஇல் log4jis என்பதுடன் சேர்த்துஉள்நுழைவு செய்திடமுடியும்

ஆர்டினோவுடன் ஒரு ப்ளாட்டரை எவ்வாறு கட்டமைப்பது

தானியங்கியாக வரைபடத்தை வரையஉதவுவதுதான் ப்ளாட்டராகும் கட்டற்ற வன்பொருளையும் கட்டற்ற மென்பொருளையும் கொண்டு ஒரு சிறந்த DIY plotterஐ எவ்வாறு வடிவமைத்து கட்டமைத்து செயல்படுத்துவது என இப்போது காண்போம் இதற்காக FabScan shield,SilentStepSticks,SilentStepStick protectors,Stepper motors,Linear guide rails ,Wooden base plate, Wood screws ,GT2 belt ,GT2 timing pulley ஆகிய கட்டற்ற வன்பொருட்கள் போதுமானவையாகும்

படத்தில் காண்பித்தவாறு மிக கவணமாக இவைகளை இணைத்திடவேண்டும் பின்னர் GitHub தயாராக உள்ள X-Y plotter இற்கான மென்பொருளைபதிவிறக்கம் செய்துகொள்க StepStickஎன்பதுடன் stepper motorஐ இயக்கி செயல்படுத்திடுவதற்காக முதலில் உயர்ந்த பின்னர் தாழ்ந்த சைகைகளை ஆர்டினோவின்படி அனுப்பிடவேண்டும் அதற்கான குறிமுறைவரிகள் பின்வருமாறு
digitalWrite(stepPin, HIGH);
delayMicroseconds(30);
digitalWrite(stepPin, LOW);
இங்கு stepPin என்பது stepper என்பதற்கான பின் எண் ஆகும் பொதுவாக பின்எண் 3 ஆனது மோட்டார் எண்1 இற்கானது மிகுதியான பின் எண் 1 முதல் 6 வரையில் மோட்டார் எண்2 இற்கு ஒதுக்கப்பட்டுள்ளது முதலில் கண்டிப்பாக stepper ஐ இயலுமை செய்திடவேண்டும் அதற்கானகுறிமுறைவரி பின்வருமாறு
digitalWrite(enPin, LOW);
இங்கு LOW என்பது மோட்டாரை இயலுமை செய்கின்றது HIGHஎன்பது மோட்டாரை முடக்கிவிடுகின்றது Pin not connectedஎன்பது மோட்டாரை இயலுமை செய்கின்றது ஆனால் இயங்காமல் வைத்திருக்கின்றது அதன்பின்னர் ப்ளாட்டரின் இயங்குவழியை முடிவுசெய்திடவேண்டும் இதற்கான குறிமுறைவரி பின்வருமாறு
digitalWrite(dirPin, direction);
இதனை தொடர்ந்து மோட்டார்களை இயங்கச்செய்தல் ப்ளாட்டரை சரியான வழியில் இயங்கசெய்தல்
ஆகியவற்றின் செயலிகளும் பின்களுக்குமான அட்டவணை பின்வருமாறு
Function
Motor1
Motor2
Enable
2
5
Direction
4
7
Step
3
6
இதற்கடுத்ததாக வெளியீட்டினை setup()எனும் பகுதியில அமைத்திடவேண்டும் இதற்கான குறிமுறைவரிகள் பின்வருமாறு
pinMode(enPin1, OUTPUT);
pinMode(stepPin1, OUTPUT);
pinMode(dirPin1, OUTPUT);
digitalWrite(enPin1, LOW);
இந்த அடிப்படையைவைத்து நாம் stepperநகர்த்தமுடியும் ஆயினும் முழுவதுமாக நகர்ந்து சென்று திரும்ப வருவதற்காக
totalRounds = …
for (int rounds =0 ; rounds < 2*totalRounds; rounds++) {
if (dir==0){ // set direction
digitalWrite(dirPin2, LOW);
} else {
digitalWrite(dirPin2, HIGH);
}
delay(1); // give motors some breathing time
dir = 1-dir; // reverse direction
for (int i=0; i < 6400; i++) {
int t = abs(3200-i) / 200;
digitalWrite(stepPin2, HIGH);
delayMicroseconds(70 + t);
digitalWrite(stepPin2, LOW);
delayMicroseconds(70 + t);
}
}
எனும் குறிமுறைவரிகள் பயன்படுகின்றன இதில் ஒரு stepperமட்டும் இடதுபுறமும்வலதுபுறமும் ஸ்லைடர் நகர்ந்து செல்லமுடியும் ஆனால் ப்ளாட்டரில் வரைவதற்காக X-Y ஆகிய இருஅச்சுகளின் அடிப்படையில் இயங்கவேண்டும் இதற்காக
"X30|Y30|X-30 Y-30|X-20|Y-20|X20|Y20|X-40|Y-25|X40 Y25
என்றவாறான கட்டளைவரி பயனுள்ளதாக அமையும் இவ்வாறு கட்டமைத்திடுதற்கான கானொளி காட்சி https://twitter.com/pilhuhn/status/949737734654124032/ என்ற முகவரியில் உள்ளது இந்தகானொளி காட்சிகளை கண்டு அவ்வாறே செயற்படுத்தி பயன்றிடுக

கணக்குபதிவியலிற்கான GNUKhata எனும் கட்டற்ற கட்டணமற்ற பயன்பாடு ஒரு அறிமுகம்


GNUKhata என்பது கட்டற்ற கட்டணமற்ற நெகிழ்வுதன்மையுடன்கூடிய டேலி பயன்பாட்டிற்கு மாற்றான ஒரு கணக்கு பதிவியல் பயன்பாடாகும் இது கணக்கு பதிவியலுடன் கையிருப்பு பொருட்களையும் பராமரித்திடும் ஒரு சிறந்த பயன்பாடாகும் இதனுடைய GNUKhata v5.10 எனும் பதிப்பை Digital Freedom Foundation.எனும் நிறுவனம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிட்டுள்ளது இதில் பேரேடு, இறுதி கையிருப்பு, இருப்புநிலை குறிப்பு, இலாபநட்ட கணக்கு ஆகிய அறிக்கைகளை மாதவாரியாக ,காலாண்டு வாரியாக, ஆண்டுவாரியாக பெறமுடியும் இதில் பொருட்களுக்கும் அளிக்கும் சேவைகளுக்கும் என தனித்தனியே விலைப்பட்டியலை தயார் செய்யமுடியும் ,குறிப்பிட்ட பட்டியல் எந்தநாளில் எந்தஎண்ணில் எந்த பொருளிற்கு அல்லது எந்தசேவைக்கானது என எளிதாக தேடிபிடித்திடமுடியும் கையிருப்பு பொருட்களை எளிதாக கையாளமுடியும் மிகமுக்கியமாக சரக்குசேவைவரிக்கு கேற்றவாறு கணக்குபதிவியலை மேம்படுத்தி கொள்ளமுடியும் இதனை பயன்படுத்திகொள்வதற்காக இயங்கிடுமாறதுவக்குவது எளிதானது தொடர்ந்து பயன்படுத்தவதும் எளிது இந்த GNUKhata எனும் கட்டற்ற பயன்பாட்டினை டேலி எனும் பயன்பாட்டிற்கு பதிலாக மேல்நிலை பள்ளிகளில் கணக்குபதிவியல் வகுப்புகளுக்கான ஒரு பாடமாக கூட இதனை பரிந்துரைக்கலாம் இதனைhttps://gnukhata.in/ என்ற முகவரிக்கு சென்று நேரடியாக இணையத்தின் வாயிலாக பதிவுசெய்து பயன்படுத்தி கொள்ளலாம அல்லது இந்த பயன்பாட்டு மென்பொருளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம் இதனை பயன்படுத்தி கொள்வதற்கான கையேடு தயாராக உள்ளது அதனை பதிவிறக்கம்செய்து படித்தறிந்து கொண்டு பயன்படுத்தி கொள்க என பரிந்துரைக்கப்படுகின்றது

ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை பரிசோதிக்கஉதவிடும் கட்டற்றகருவிகள்

பொதுவாக ஆண்ட்ராய்டு செயல்படும் கைபேசி பயன்பாடுகளை உருவாக்கியவுடன் செயல்பாட்டு சோதனை , பயன்பாட்டு சோதனை ,பணிச்சூழல்சேதனை , குறுக்கீட்டு சோதனை , பணிச்சுமைசோதனை , செயல்படும் இடசோதனை ,ஊடுருவல் சோதனை , ஆய்வகசோதனை ஆகிய பல்வேறு பரிசோதனைகளுக்கு பின்னரே இந்த பயன்பாடுகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வெளியிடவேண்டும் இவ்வாறான பரிசோதனை செய்யப்படாமல் வெளியிடபடும் பயன்பாடுகள் எளிதாக அபகரிப்போரால் முறியடிக்கபட்டு பொருள் இழப்பும் மனஉளைச்சலும் ஏற்படஏதுவாகிவிடும் ஆயினும இவ்வாறான அனைத்து பரிசோதனைகளையும் நாம் உருவாக்கிடும் ஒவ்வொரு ஆண்ட்ராய்டு பயன்பாடுகளிலும் செயல்படுத்தி சரிபார்த்திட பொறுமையும் காலஅவகாசமும் நம்மிடம் இல்லை ஆயினும் இவைகளுக்காகவே பல்வேறு கட்டற்ற கருவிகள் உள்ளன அவைகளை கொணடு பரிசோதனை செய்து சரிபார்த்து திருப்தியுற்றால் வெளியீடு செய்திடலாம்
1. APPium இதுஒரு திறன்மிகுந்த கட்டற்ற கட்டணமற்ற தானியங்கியாக அனைத்து பரிசோதனைகளையும் ஆண்ட்ராய்டு பயன்பாடுகளில் செயல்படுத்தி பார்த்திட உதவும் ஒரு கருவியாகும் ஆண்ட்ராய்டு மட்டுமல்லாமல் ஐஓஎஸ் , விண்டோ ஆகிய கைபேசி பயன்பாடுகளையும் இதில் பரிசோதித்து பார்த்திடலாம் இது கூகுளின் குரோம் ,சபாரி ஆகிய இணைய உலாவிகளையும் ஆதரிக்ககூடியது இதனுடைய இணைய முகவரி http://appium.io/ஆகும்
2.Selendroid இதுஆண்ட்ராய்டுதளத்தில் செயல்படும் பயன்பாடுகளை பரிசோதனை செய்திட பயன்படும் மற்றொரு கட்டற்ற கட்டணமற்ற கருவியாகும் முன்மாதிரி அல்லது உண்மையான கைபேசியில் நேரடியாக நாம் உருவாக்கிய ஆண்ட்ராய்டு கைபேசி பயன்பாடுகளை பரிசோதனைசெய்து சரிபார்த்திடலாம் இதனுடைய இணைய முகவரி http://selendroid.io ஆகும்
3. Calabash இந்த கருவியின் வாயிலாக கைபேசி திறன்பேசி ஆகியவற்றின் பயன்பாடுகளை பரிசோதித்து பார்த்திடலாம் இது ஒரு கட்டற்ற கட்டணமற்ற அனைத்து இயக்கமுறைமை-களிலும் செயல்படும் கருவியாகும் இது செயல்படுவதற்கு ரூபி எனும் கணினிமொழி நிறுவுகை செய்யப்பட்டிருக்கவேண்டும் இது மேககணினி சூழலையும் சரிபார்த்திடும் திறன்மிக்கது இதனுடைய இணைய முகவரி https://calabash.sh ஆகும்

நம்முடைய வீடுகளை கட்டற்ற தானியங்கி கருவிகள்அருமையானதாக ஆக்குகின்றன

நாம் வாழும் வீட்டினை அருமையானதாக செய்வதற்கு பல்வேறு கட்டற்ற கருவிகள் உள்ளன அவைகளைபற்றிய பறவைபார்வை பின்வருமாறு
HoeAssistant இது பைத்தான் மொழியால் உருவாக்கப்பட்ட திறமூலகருவியாகும் இதனை கொண்டுவீடுகளின் மின்விளக்குளை குறிப்பிட்ட நேரத்தில் தானாகவே எரியச்செய்திடவும் பின்தானாகவே அணைக்கவும் பயன்படுத்திகொள்ளலாம் அவ்வாறே சன்னல்களின் கதவுகள் வாயிற்கதவுகளை தானாகவே திறக்கவும்மூடவும் செய்திடமுடியும்
OpenHabஇது ஜாவா மெழியில் உருவாக்கப்பட்டது ஜாவாமெய்நிகர் இயந்திரத்தில் செயல்படக்கூடியது வீடுகளில்உள்ள அனைத்து தானியங்கி கருவிகளையும் ஒருங்கிணைத்து செயல்படஉதவும் கட்டற்றகருவியாகும்
MyController இது லினக்ஸ் ,விண்டோ, ராஷ்பெர்ரிபை ஆகிய இயக்கமுறைமைகளை ஆதரிக்ககூடியது இது MQTT,Ethernetஆகியநெறிமுறைகளை ஆதரிக்க-கூடியது இதுஎச்சரிக்கை செய்தி ,எச்சரிக்கை மணி, வரைபடங்கள் ஆகியவற்றை வழங்ககூடியது
Domotics இது அனைத்து இணையஉலாவிகளையம் ஆதரிக்ககூடியது HTML5 மொழியில் உருவாக்கப்பட்டது யூனிக்ஸ், ஆப்பிள்,விண்டோ ,ராஷ்பெர்ரிபை ஆகிய இயக்க-முறைமைகளை ஆதரிக்ககூடியது இது மின்விளக்குகள் , பொத்தான்கள் சென்சார்கள் போன்ற சாதனங்களை கட்டுபடுத்தகூடியது
Fhem இது ஜிபிஎல் அனுமதியின் அடிப்படையில் வெளியிடப்பட்ட கருவியாகும் இது சேவையாளராக இயங்ககூடியது
MajorDoMo இது விண்டோ லினக்ஸ் செயல்படக்கூடிய அனைத்து கணினிகளிலும் இயங்ககூடியுது MQTTஇன் நெறிமுறைகளைமட்டுமல்லாமல் Zwave,I-wave,I-wore,ModBus,SNMP,Ethernetஆகிய நெறிமுறைகளையும் ஆதரிக்ககூடியது இணைய இடைமுகம் செய்தல, ஜிபிஎஸ் தேடுதல் ஆகிய வசதிகளை கொண்டது இது தானியங்கி செயல்களுக்கான விதிமுறைகளை கட்டமைவுசெய்யக்கூடியது
Freedomotic இது பைத்தான் மொழியில் உருவாக்கப்பட்ட திறமூலகருவியாகும்
இது விண்டோ லினக்ஸ் மேக் ஆகிய இயக்கமுறைமைகளை ஆதரிக்கூடியது குரலொலி வாயிலாக செயல்படுத்திடும் திறன்மிக்கது கைபேசி வாயிலான இணையத்தையும் ஆண்ட்ராய்டு ஆதரிக்கூடியது புதிய வன்பொருட்களை எளிதாக இதில் இணைத்திடமுடியும்
Pi Dome இது MQTTஎனும் நெறிமுறையை ஆதரிக்கின்றது வெகுதூரத்திலிருந்தும் இதனை கட்டுபடுத்திடலாம் குறுஞ்செய்தியையும் தட்பவெப்பநிலையையும் அறிவிக்ககூடியது தரவு வரைபடத்தைதானியங்கியாக வரையக்கூடியது இது ராஷ்பெர்ரி பையில் உருவாக்கப்ட்டது

கைபேசி பயன்பாடுகளை உருவாக்குவதற்கான கட்டற்ற( திறமூல)இணையதளங்கள்

ஜீன்2018 முடிந்த காலாண்டில் ஏறத்தாழ 3.8 மில்லியன் கைபேசிபயன்பாடுகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்தும் 2மில்லியன் கைபேசிபயன்பாடுகள் ஆப்பிள் அப் ஸ்டோரிலிருந்தும் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து கைபேசி பயன்பாடுகளின் தாக்கம் எந்தளவிற்கு இருக்கின்றது என நாம் அறிந்து கொள்ளலாம் பெரும்பாலான நிறுவனங்கள் இவ்வாறான அதிக வருமானம் ஈட்டக்கூடிய கைபேசி பயன்பாடுகளை உருவாக்குவதற்கான இணையதளங்களை பராமரிப்பதில் அதிக கவணம் செலுத்துகின்றனர் வெவ்வேறான இயக்கமுறைமைகள் ,வெவ்வேறான வன்பொருட்களின் கட்டமைவுகள் ,மாறுபட்ட திரையின் அளவுகள் பயன்பாடுகளை உருவாக்குவதற்கான கணினிமொழிகள் வெவ்வேறானவை என்றவாறான பல்வேறு அளவுருக்களை இதற்காக பின்பற்றிடவேண்டும் அதுமட்டுமல்லாது ஐஓஎஸ் ,ஆண்ட்ராய்டு, விண்டோ போன்ற வெவ்வேறு இயக்கமுறைமையின் செயல்படும் வெவ்வேறு வகையான கைபேசி சாதனங்கள், மூன்றாவது நபரின் பயன்பாடுகளுடன் ஒத்தியங்கும் தன்மை, பாதுகாப்பு அச்சுறுத்தல்களை தாங்கி செயல்படும் தன்மை, வெவ்வேறு வடிவமைப்பிலான ஒலி அல்லது ஒளிஒலி கோப்புகளை கையாளும் திறன், பயனாளரின் உற்ற நண்பனாக விளங்குதல் என்பன போன்ற பல்வேறு கட்டுபாடுகளுக்கேற்ப தகவமைத்து கொள்ளவேண்டும் மேலும் ஒவ்வொரு ஆறுமாதத்திற்கு ஒருமுறை புதிய இயக்கமுறைமைகள் வந்துகொண்டே உள்ளன அல்லது மேம்படுத்தபட்டுகொண்டேஉள்ளன அதற்கேற்றவாறு தகவமைத்து மேம்படுத்தி கொள்ளவேண்டும் இவ்வாறான பல்வேறு கட்டுபாடுகள் அளவுருக்களையும் கடந்து கைபேசி பயன்பாடுகளை உருவாக்குவதற்காக பல்வேறு தனியுடைமை தளங்கள் உள்ளன அதேபோன்று கட்டற்ற தளங்களும் பலஉள்ளன அவ்வாறான கட்டற்ற தளங்கள் பின்வருமாறு
1.PhoneGapஎன்ற கட்டற்றதளமானது ஆண்ட்ராய்டு ,ஐஓஎஸ்,விண்டோ செயல்படும் கைபேசிகளின் பயன்பாடுகளை உருவாக்கஉதவும் தளமாக விளங்குகின்றது இதில் HTML,CSS,Javascriptபோன்ற கணினிமொழிகளை கொண்டு கைபேசிகளின் கேமரா ,ஜிபிஎஸ்இடஅமைவு,இசை போன்ற பல்வேறு பயன்களுக்கான பயன்பாடுகளைஎளிதாக உருவாக்கவதில் வலுவான தளமாக இருக்கின்றது இது மேலும வரைகலைஇடைமுகப்பு வசதியை ஆதரிக்கின்றது
2.Appcelaerator இதுவும் ஆண்ட்ராய்டு ,ஐஓஎஸ்,விண்டோ ஆகிய இயக்கமுறைமைகளுடன் ஒத்தியங்குகின்றது இதில் தேவையான குறிமுறைவரிகளை இழுத்துகொண்டு வந்துவிடும் வசதிகொண்டதாக இருப்பதால் மிகவிரைவாக பயன்பாடுகளை உருவாக்கிடமுடியும் இதில் HTML,CSS,Javascript, Python, Rubyபோன்ற கணினிமொழிகளை கொண்டுபல்வேறு பயன்பாடுகளைஎளிதாக உருவாக்கவதில் வலுவான தளமாக இருக்கின்றது இது ஒரு கட்டணமற்ற தளமாகும்
3.Appache Cordova இது ஒருமுறைமட்டும் பயன்பாட்டிற்கான குறிமுறைவரிகளை எழுதி எங்குவேண்டுமானாலும் செயல்படுத்தி பயன்பெறலாம்( write once Run Anywhere) என்ற அடிப்படையில் பயன்படுகின்றது இதில் உருவாக்கும் பயன்பாடுகளை மற்ற பயன்பாடுகளுடன் கூடுதல் இணைப்பாக இணைத்து பயன்படுத்திகொள்ளலாம் இதிலும் HTML, CSS, Javascriptபோன்ற கணினிமொழிகளை கொண்டு கைபேசிகளின் பல்வேறு பயன்பாடுகளை எளிதாக உருவாக்குவதில் மிகவலுவான தளமாக இருக்கின்றது
4.NativeScripts இது ஒரு திறமூல கைபேசி பயன்பாடுகளை உருவாக்கும் தளமாக விளங்குகின்றது ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு போன்ற இயக்கமுறைமைகளுடன் செயல்படும் கைபேசிகளுக்கான பயன்பாடுகளை ஒருமுறைமட்டும் பயன்பாட்டிற்கான குறிமுறைவரிகளை எழுதி எங்குவேண்டுமானாலும் செயல்படுத்தி பயன்பெறலாம் (write once Run Anywhere) என்ற அடிப்படையில் பயன்படுகின்றது இதுவும் ஒரு கட்டற்ற கட்டணமற்றதளமாகும்

ஆய்வாளர்களுக்கு உதவ காத்திருக்கும் Unpaywallஎனும் கட்டற்ற இணையதள பயன்பாடு

கல்லூரிகளிலும் பல்கலைகழகங்களிலும் பயிலும் இளநிலை(M phil), முதுநிலை(Phd) ஆய்வுமாணவர்கள் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் தங்களுடைய ஆய்வுகளுக்குத் தேவையான ஆவணங்களை தேடிகண்டுபிடித்து மேற்கோள் செய்வதே மிகப்பெரிய சிக்கலானதும் கடினமானதுமான பணியாகும் அதிலும் இவை பதிப்புரிமை எனும் கட்டுபாடுகளுடனானவை என்பதால் இந்த சிக்கல் மிகவும் கூடுதலாகி இந்த ஆவணங்களை ஆய்வாளர்கள் அனுகிடும் செயலை மிகக்கடினமாக ஆக்கிவிடுகின்றன அதனால் துவக்கநிலை ஆராய்ச்சியாளர்கள் இவ்வாறான ஆராய்ச்சி நமக்குத்தேவையா என பாதியிலேயே விட்டுவிட்டுசெல்லும் நிலைக்கு ஆளாகின்றனர் அவ்வாறான இடர்பாடுகளுக்கிடையே தங்களுடைய ஆராய்ச்சியை தொடர விரும்புவோர்களுக்கு உதவத் தயாராக இருப்பதுதான்Unpaywallஎனும் இணையதள பயன்பாடாகும் ஆராய்ச்சியாளர்களுக்கு அதிலும் அறிவியில் ஆராய்ச்சியாளர்-களுக்கு உதவிடும் பொருட்டு உலகமுழுவதும் வெளியிடப்படுகின்ற 50,000 இற்கும் மேற்பட்ட ஆய்விதழ்கள் எளிதாக அனுகும் பொருட்டு இங்கு தொகுக்கப்பட்டுள்ளன மேலும் உலக முழுவதும் உள்ள அரசுகள், பல்கலைகழக்கங்கள், ஆய்வுநிறுவனங்கள் ஆகியவற்றின் அனுமதிபெற்று இந்த இதழ்களை ஆய்வாளர்களுக்கு கிடைக்குமாறு செய்யப்பட்டுள்ளன மேலும் பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகளும் Green,Gold, Bronze, OA என்றவாறு வகைப்படுத்தபட்டு தொகுக்கப்பட்டுள்ளன நம்முடைய கணினி அல்லது மடிக்கணினியிலுள்ள ஃபயர் ஃபாக்ஸ் எனும் இணையஉலாவியின் நீட்சியாக இந்த Unpaywall எனும் பயன்பாட்டினை அமைத்து கொண்டு நமக்குத்தேவையான ஆராய்ச்சி கட்டுரைகளை தேடிபிடித்து பயன்பெறமுடியும் மிகமுக்கியமாக இந்த Unpaywallஆனது மிகவிரைவாக செயல்படக்கூடியது கட்டணமற்றது சட்டப்படியாக அனைவரும் அனுவதற்கானது கட்டற்றதாக விளங்குகின்றது இன்றே வருக! https://unpaywall.org/products/extension/எனும் இணைய முகவரிக்கு இதனை நம்முடைய ஃபயர் ஃபாக்ஸ் எனும் இணையஉலாவியின் நீட்சியாக இந்த Unpaywall எனும் பயன்பாட்டினை அமைத்து நம்முடைய ஆய்வினை சுணக்கமின்றி தொடருமாறு பயன்படுத்தி கொள்க.

Previous Older Entries