ஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா-தொடர்-பகுதி-78

   ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் சாளரத்தில் கணித சமன்பாடுகளை பதிப்பித்தல் செய்வதற்காக  ஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா சாளரத்தை  திறந்து பயன்படுத்திடும்போது இந்த மேத்ஸ் சாளரமானது திரைமுழுவதும் நிறைந்து இருக்கும் அதனால்  ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் சாளரத்தில்  நம்மால் சுலபமாக பணிபுரியஇயலாத சூழல் ஏற்படும் அதனை தவிர்ப் பதற்காக   இந்த ஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா சாளரத்தை ஒருசிறிய மிதக்கும் சாளரமாக மாற்றியமைத்திட்டால்  ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் சாளரத்தின் முழுத்திரையில் நம்மால் எளிதாக பணிபுரியமுடியும் அதற்காக மேத்ஸ் சாளரத்தின் ஓரமாக இடம்சுட்டியை நகர்த்தி சென்று Ctrl விசையை அழுத்தி பிடித்துகொண்டு சுட்டியின் பொத்தானை இருமுறை சொடுக்குக  உடன் படம்-1-ல் உள்ளவாறு சிறிய மிதக்கும் சாளரமாக மேத்ஸ் சாளரம் மாறியமையும் பின்னர் தேவையானால் முன்புபோலவே இந்த மிதக்கும் சாளரத்தின் ஓரமாக இடம்சுட்டியை நகர்த்தி சென்று Ctrl விசையை அழுத்தி பிடித்துகொண்டு சுட்டியின் பொத்தானை இருமுறை சொடுக்குக  உடன் மேத்ஸ் சாளரம் முழுத்திரைக்கும் மாறியமையும்

78.1

 ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரில் எழுத்தின் அளவை மாற்றியமைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன அவ்வாறே இந்த ஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா சாளரத்தில் உருவாக்கி பதிப்பிக்கபடும் கணித சூத்திரங்களின் எழுத்தின் அளவையும் நாம்விரும்பியவாறு மாற்றியமைக்க முடியும்    அதற்காக மேத்ஸ் சாளரத்திரையின் மேலே கட்டளை பட்டையிலுள்ள கட்டளைகளில் Format => Font size=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும்Font sizeஎன்றஉரையாடல் பெட்டியில்  base size என்பதில் தேவையான அளவை மாற்றியமைத்துகொண்டுok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்  கணித சூத்திரங்களின் எழுத்தின் அளவு நாம் குறிப்பிட்டபடி படம்-2-ல் உள்ளவாறு மாறியமையும்

78.2இந்த மேத்ஸ் சாளரத்தில் மிக சிக்கலான கணிதசூத்திரத்தினை எழுதுவதுதான் மிககடினமானமான பணியாக இருக்கின்றது அதனை தவிர்த்து இந்தபணியை எளிதானதாக இருப்பதற்காக பின்வரும் வழிமுறைகளை பின்பற்றிடுக

1 மேத்ஸ் சாளரத்தில் ஒருகணக்கீட்டில் எதனை முதலில் கணக்கீடுசெய்வது எதனை அதற்கடுத்து செய்வது என வரிசைகிரமம் எதுவும் குறிப்பிடபடவில்லை ஆயினும் அவ்வாறாக செயல்படுத்துவதற்கு  பிறையடைப்பு அல்லது இருதலை  அடைப்பை பயன்படுத்தினால் போதும் அடைப்பிற்குள்  இருப்பதை முதலிலும் பின்னர் வெளியில் இருப்பதையும் கணக்கீட்டிற்காக எடுத்துகொள்ளும் உதராணமாக(1)

 2 over X+! என்பதை            என்றும்          2 over (X+1)   என்பதை           என்றும்  கணக்கீட்டிற்கு எடுத்துகொள்ளும்

 இந்த மேத்ஸ் சாளரத்தில் சூத்திரங்களை தொடர்ச்சியாக உள்ளீடு செய்யும் போது  ஒரேவரியிலேயே அமையும் அடுத்தவரிக்கு மாறவேண்டுமெனில் new lineஎன்ற கட்டளையை பயன்படுத்தவேண்டும்

 உதராணமாக(2)       என்பது          என்றும்      ,         என்பது       என்றும் அமையும்

3 வகைகெழு தொகைகழு சமன்பாடுகளை  உருவாக்கிடும்போது கீழ்வரையைறை(lower limits)  மற்றும் மேல்வரையரையை(upper limits) குறிப்பிடுவதற்காகfrom, to  ஆகிய இரு எடுகோள்களை கொண்டு அதனை குறிப்பிடவேண்டும் அதன்மூலம் நாம் குறிப்பிடும் மதிப்பானது கீழ்பகுதியிலும் (subscripts) ,மேல்பகுதியிலும்(superscripts)  அதன்வரையறையாக  படம்-3-ல் உள்ளவாறுஅமையும்

78.34 கணிதத்தில் மிகச்சரியாக அணிகளை குறிப்பிடுவதற்கு  படம்-4-ல் மூன்றாவது வரியில் உள்ளவாறு குறிப்பிடவேண்டும்

78.45.வகைகெழுவில் பின்ன வகைகெழுவான derivatives களை உருவாக்குவதற்கு over மற்றும் d அல்லது partial ஆகிய கட்டளைகளுடன் சேர்த்து படம்–5-ல் உள்ளவாறு குறிப்பிடவேண்டும்

78.5

6 குறிப்பிட்ட எழுத்தினை வைத்து சமக்குறியை சரிசெய்து அமைப்பதற்கான கட்டளை வரிகள் எதுவும் ஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸில் இல்லை  ஆயினும் அணிகளை குறிப்பிடு வதற்கான கட்டளையுடன் alignr ,alignl ஆகிய கட்டளைகளையும் பயன்படுத்தி  குறிப்பிட்ட எழுத்துகளை வைத்து சமக்குறியை சரிசெய்து படம்-6ல் உள்ளவாறு அமைத்திடமுடியும்

78.67ஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸில் அணிகளை எழுதி வரையறுக்கும்போது அணி உறுப்பகளுக்கு இடையே எவ்வளவு இடைவெளி இருக்கவேண்டும் என குறிப்பிடுவதற்கு   இந்த சாளரத்தின் மேலே கட்டளைபட்டையில் உள்ள கட்டளைகளில் Format => Spacing =>   என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும்   Spacing என்ற உரையாடல் பெட்டியில் category என்ற பொத்தானின் கீழிறங்கு பட்டியலில்matrices என்பதை தெரிவு செய்துகொண்டுok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்  படம்-7-ல் உள்ளவாறு அணி உறுப்புகளுக்கிடையே இடைவெளி அமையும்

78.7

8  ஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸில் ஒவ்வொரு கணித சமன்பாட்டிற்கும் ஒரு எண்ணிடுவது மிகத்திறன்மிகுந்த கலையாகும்  இதனை பின்வருமாறு செயல்படு்ததிடமுடியும்   fnஎன தட்டச்சுசெய்து F3 என்ற செயலிவிசையை அழுத்துக உடன்  இது E=mc2  என்ற கணித சமன்பாடாக உருமாறிவிடும்  இந்த கணித சமன்பாட்டிற்கு ஒருஎண்ணை குறிப்பிடு வதற்காக  இந்த சாளரத்திரையின் மேலே கட்டளைபட்டையிலுள்ள Insert => Cross-reference=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக  உடன் தோன்றிடும் fields என்ற உரையாடல் பெட்டியின்cross reference என்ற தாவியினுடைய திரையில் type என்பதன் கீழ் text என்பதை யும் selection என்பதன்கீழ் 1 என்பதையும் insert reference to என்பதன்கீழ் reference என்பதையும் தெரிவுசெய்து கொண்டு insert என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இந்த கணித சமன்பாட்டிற்கு ஒரு மேற்பார்வை எண்(reference number) உருவாகிவிடும்

78.8

மேலும் கணித சமன்பாடு தொடர்பாக  கட்டளைகள், செயலிகள் ,கணிதக்குறியீடுகள், இயக்கிகள் அதன் விளைவுகள்  போன்றவைகளை www.openoffice.org என்ற தளத்தில் உள்ள இதற்கான maths guide என்ற பிடிஃப் கோப்பினை பதிவிறக்கம் செய்து படித்து அறிந்துகொள்க

ஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா-தொடர்-பகுதி-77-

ஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ்  என்பது ஓப்பன் ஆஃபிஸில் கணித சமன்பாடுகளை எழுதி,பதிப்பித்திட உதவும் ஒரு துனை பயன்பாடாகும் அதாவது இது பெரும்பாலும் ஒரு உரை ஆவணத்தில் மட்டுமல்லாது மற்றவகையான ஆவணங்களிலும் அல்லது கணிதத்திற்கென்றே உள்ள தனிப்பட்ட ஆவணங்களிலும் கணிதசமன்பாடுகளின் பதிப்பானாக செயல்படுகின்றது  இதனை ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரின் உட்பகுதியில் பயன்படுத்தினால் அது ஒரு தனிப்பட்ட பொருளாக உருவாகிவிடுகின்றது

இதனை  செயல்படுத்திட வழக்கமான நம்முடைய உரை ஆவணமான ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரின் திரையின் மேலே கட்டளை பட்டையில் Insert => Object => Formula =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக  உடன் கணிதசமன்பாடுகளின் பதிப்பு திரையானது கீழ்பகுதியில் உருவாகி அதனோடுகூடவே  Elements என்ற மிதக்கும் சிறுசாளரத்திரையும் (படம்-1) தோன்றிடும்

77-1

தனியாக வேண்டுமெனில் ஓப்பன் ஆஃபிஸின் ஆரம்பத்திரையில் Formula என்ற வாய்ப்பை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக   உடன் untitiled1-open office.org maths  என்ற கணிதசமன்பாடுகளின் பதிப்பு திரையானது  உருவாகி அதனோடுகூடவே  Elements என்ற மிதக்கும்  சிறுசாளரத்திரையும் (படம்-2)தோன்றிடும்

77-2

அதுமட்டுமல்லாது அவ்வாவணத்தில்  கணித வாய்ப்பாட்டினை உருவாக்குவதற்கான ஒருசிறிய பெட்டி ஒன்றும் தோன்றிடும்   அதில் இந்த கணிதபதிப்பு திரையானது கணிதசமன்பாடுகளை பிரதிபலிக்ககூடியஒரு மார்க்அப் மொழியை பயன்படுத்தி கொள்கின்றது

உதாரணமாக %beta என்பது கிரேக்க எழுத்தான  beta ( B ).என்பதை உருவாக்குகின்றது  அதாவது இந்த மார்க் அப் மொழியானது ஆங்கிலத்தில்   a over b   என்பது   a/b  என்பதை குறிப்பதாக கொண்டு அதற்கேற்ப திரையில் கணிதசமன்பாட்டினை (மதிப்பை) பிரதிபலிக்கசெய்யும்

இந்த  கணித சமன்பாட்டின் பதிப்புத்திரையில்  பின்வரும் மூன்று வழிகளில் ஒரு கணித சமன்பாட்டினை உருவாக்கிட முடியும்

1 Elements என்ற மிதக்கும் சிறுசாளரத்திரையில் உள்ள நாம் உருவாக்கிட விரும்பும் கணிதசமன்பாட்டிற்கேற்ற குறியீட்டினை தெரிவுசெய்து சொடுக்குதல்

2   திரையின் கீழ்பகுதியிலுள்ள கணிதசமன்பாடு பதிப்புத்திரையில்  இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை  சொடுக்கியவுடன் விரியும் சூழ்நிலை பட்டியிள் உள்ளீடு செய்யவிரும்பும் கணித சமன்பாட்டிற்கு தேவையான குறியீட்டின் வகையை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் விரியும் துனை பட்டியில் தேவையான  குறியீட்டினை தெரிவுசெய்து சொடுக்குதல்

3  மார்க்அப் மொழியின் சிறு பெட்டியில் கணித வாய்ப்பாட்டினை நேரடியாக  உள்ளீடு செய்தல்

1 Elements என்ற மிதக்கும் சிறுசாளரத்திரையின் வாயிலாக  5×4 என்றவொரு கணித சமன்பாட்டினை உருவாக்குதல்

77-3

.பொதுவாக இந்த Elements என்ற மிதக்கும் சிறுசாளரத்திரையானது  குறியீட்டுகளின் வகை(categories) என்ற மேல்பகுதியும் நாம் தெரிவுசெய்வதற்கேற்ற தொடர்புடைய குறியீடுகள்  (Symbols)உள்ள கீழ்பகுதியும்(படம்-3) சேர்ந்ததாகும்   இந்த Elements என்ற மிதக்கும் சிறுசாளரத் திரையை மேலே கட்டளை பட்டையிலுள்ள View =>Elements=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குவதன் வாயிலாக மறையவும் தோன்றிடவும் செய்யமுடியும்

77-4

இந்த  Elements என்ற மிதக்கும் சிறுசாளரத்திரையின் மேல்பகுதியான குறியீட்டுகளின் வகை(categories)களில் இயல்புநிலையில் unary/binary operators என்பது தெரிவு செய்யப் பட்டிருக்கும் தேவையெனில் நாம் விரும்பும் வேறு வகையை தெரிவுசெய்தவுடன்  தொடர்புடைய குறியீடுகளானது    குறியீடுகள்  (Symbols)உள்ள கீழ்பகுதியில் தோன்றிடும் பின் கீழ்பகுதியில்  multiplication என்றவாறு(படம்-3) அல்லது நாம் விரும்பும் கணித குறியீட்டினை தெரிவுசெய்து சொடுக்குக

உடன்   திரையின் கீழ் பகுதியிலுள்ள கணிதபதிப்புத்திரையில்  <?> times <?>  என்றவாறு மார்க் மொழியும்  மேலே உரைஆவணத்திரையில்   × என்றவாறு  சிறு பெட்டியும் (படம்-4)தோன்றிடும்  கணிதபதிப்புத்திரையில்  <?>  என்பவைகளில் தேவையான எண்களை உள்ளீடு செய்க உடன்அந்த மதிப்புகள் மேலே உரையாவணத்தில் பெட்டிக்கு பதிலாக(படம்-4) பிரதிபலிப்பதை காணலாம்

கணித வாய்ப்பாட்டில்பயன்படுத்தப்படுகின்ற  ( α ,β ,µ )என்பன போன்ற  கிரேக்க எழுத்துகள்   Elements என்ற மிதக்கும் சிறுசாளரத்திரையிலோ அல்லது வலதுபுறம் சொடுக்குவதன்மூலம் விரியும் குறுக்குவழிபட்டியிலோ  இருக்காது  ஆயினும் இந்த மார்க் அப்  மொழிப் பெட்டியில் %என்ற குறியீட்டினை உள்ளீடுசெய்தபின் தொடர்ந்து ஆங்கிலத்தின் சிறிய எழுத்தில் அல்லது ஆங்கிலத்தின்பெரிய எழுத்துகளில்  %alpha என உள்ளீடு செய்தால் α என்றும் %ALPHAஎனஉள்ளீடுசெய்தால்  A என்றும் தொடர்புடைய கிரேக்ககுறியீடுகள் தோன்றிடும்

இவ்வாறு தட்டச்சு செய்வதற்கு கடினமாக இருந்தால் மேலே கட்டளைபட்டையில் Tools => Catalog=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் தோன்றிடும்  Symbols என்ற உரையாடல் பெட்டியில் symbol set என்பதன் கீழுள்ள கீழிறங்கு பெட்டியில் Greek என்பதை தெரிவுசெய்தவுடன் விரியும் (படம்-5)பட்டியலில் தேவையான கிரேக்க குறியீட்டினை தெரிவுசெய்து insert என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

77-5

கிரேக்க எழுத்தான பை(pi.)யின் மதிப்பை உள்ளீடுசெய்தல்

படிமுறை-1  %என்ற குறியீட்டினையும் தொடர்ந்து  piஎன உள்ளீடுசெய்க உடன்  என்ற கிரேக்ககுறியீடு திரையில் பிரதிபலிக்கும்

படிமுறை-2 மேலே கட்டளை பட்டையிலுள்ள View =>Elements=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி  Elements என்ற மிதக்கும் சிறுசாளரத்திரையை தோன்றசெய்க

படிமுறை-3 = என்பது  உறவுக்குறியீடாகும் அதனால்   Elements என்ற மிதக்கும் சிறுசாளரத்திரையின் மேல்பகுதியிலுள்ள  Relationsஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படிமுறை-4 பிறகு   Elements என்ற மிதக்கும் சிறுசாளரத்திரையின் கீழ்பகுதியிலுள்ள  a=b என்பதை தெரிவுசெய்து சொடுக்குக

படிமுறை-5  உடன் கணித வாய்ப்பாட்டின் பதிப்புத்திரையானது %pi<?> simeq <?>. என்றவாறு பிரதிபலிக்கும்

படிமுறை-6 அதிலுள்ள  <?>என்ற மார்க்அப்மொழி குறியீடுகளை நீக்கம் செய்திடுக

படிமுறை-7 பின் இந்த வாய்ப்பாட்டின் இறுதியில் 3.14159   என்றவாறு மதிப்பை உள்ளீடு செய்க உடன்   உரைபதிப்புத்திரையில்  ≃3.14159 என்றவாறு (படம்–6 )பிரதிபலிப்பதை காணலாம்

77-6