ஓப்பன் ஆஃபிஸிற்கும் லிபர் ஆஃபிஸிற்கும் உள்ள வேறுபாடுகள்

 தற்போது அப்பாச்சி ஓப்பன் ஆஃபிஸ் என்றும் லிபர் ஆஃபிஸ் என்றும் இரண்டு திறமூல மென்பொருட்கள் அலுவலகபயன்பாட்டிற்காகவே உள்ளன இவ்விரண்டுமே விண்டோ , லினக்ஸ், மேக் ஆகிய இயக்கமுறைமைகளில் செயல்படும் திறன் வாய்ந்ததாகவும் இரண்டிலும் வேர்டு ,கால்க், ட்ரா,மேத், போன்ற அதே பெயர்களுடன் அலுவலக பயன்பாட்டினை கொண்டுள்ளன மேலும் அவ்வப்போது இரண்டிலும் புதிய பதிப்புகள் வெளியிடப்பட்டுகொண்டேஇருக்கும்போது இரண்டிற்கு என்னதான் வேறுபாடு உள்ளன இவ்விரண்டில் எது சிறந்த அலுவலக பயன்பாடு என்ற ஐயம் பொதுவாக புதியவர்களுக்கு கண்டிப்பாக எழும். நிற்க.
1999 இல் சன்மைக்ரோசிஸ்டம் எனும் நிறுவனமானது ஸ்டார் ஆஃபிஸ் எனும் அலுவலக பயன்பாட்டு மென்பொருளை தன்னுடைய நிறுவனத்தின் பெயருக்குமாற்றியபின் 2000ஆம் ஆண்டிலிருந்து இதனை திறமூல அலுவலக பயன்பாடாக மாற்றியமைத்து வெளியிட்டதை தொடர்ந்து சன்நிறுவனத்தின் ஊழியர்கள் மட்டுமல்லாது சேவைமனப்பாண்மையுடன் கூடிய ஏராளமான தொழில்நுட்பவியலர்களும் இந்த திட்டத்தில் சேர்ந்து அவ்வப்போது புதிய பதிப்புகளை வெளியிட்டு வந்தனர் அதனால் பொதுமக்கள் அனைவரும் கட்டணமற்ற இந்த திறமூல அலுவலக பயன்பாட்டு மென்பொருளை விரும்பி வரவேற்று பயன்படுத்தியது மட்டுமல்லாது லினக்ஸ் இயக்கமுறைமை கட்டுடன் இந்த ஓப்பன்ஆஃபிஸ் அலுவலக பயன்பாட்டு மென்பொருளும்சேர்ந்தே கிடைக்குமாறு செய்யப்பட்டது. 2011 இல் ஆரக்கிள்நிறுவனம் சன்மைக்ரோ சிஸ்டம் எனும் நிறுவனத்தை விலைக்கு வாங்கியவுடன் இந்த ஓப்பன் ஆஃபிஸ் மென்பொருளை ஆரக்கிள் ஓப்பன் ஆஃபிஸ் என பெயரை மாற்றியது மட்டுமல்லாது இதனுடைய புதிய பதிப்புகள் வெளியிடுவதையும் நிறுத்தியது மேலும் இந்த பெயரானது மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியதனை தொடர்ந்து இந்த ஓப்பன் ஆஃபிஸ் மென்பொருள் உருவாக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் காரணமான சேவைமனப்பாண்மையுடன் கூடி இதுவரையில் உழைத்த தொழில்நுட்பவியலார்கள் அனைவரும் பிரிந்து சென்று லிபர் ஆஃபிஸ் என்ற புதிய பெயரில் அதே திறமூல அலுவலக பயன்பாட்டுமென்பொருளை உருவாக்கி அவ்வப்போது இதனுடைய புதிய பதிப்புகளையும் வெளியிட்டுவருகின்றனர். அதனை தொடர்ந்து பெரும்பாலான லினக்ஸ் வெளியீட்டாளர்களும் உபுண்டு வெளியீட்டாளர்களும் இந்த லிபர் ஆஃபிஸ் எனும் திறமூல அலுவலக பயன்பாட்டு மென்பொருளை தங்களுடைய இயக்கமுறைமை கட்டுகளுடன் வெளியிட்டு வருகின்றனர்.
இந்த ஓப்பன் ஆஃபிஸ் என்பது தற்போது அப்பாச்சி ஓப்பன் ஆஃபிஸ் என்றபெயருடன் அப்பாச்சி அனுமதியுடன் வெளியிடப்பட்டு வருகின்றது தற்போது மார்ச் 2014 அப்பாச்சி ஓப்பன்ஆஃபிஸ்4.1 எனும் சமீபத்திய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது
பொதுவாக ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரில் இயல்புநிலையில் பக்கபட்டை திரையில்தோன்றி நாம் பயன்படுத்திடும் காலி பணியிடத்தை குறைத்துவிடுகின்றது. ஆனால் லிபர் ஆஃபிஸில் அவ்வாறான பக்கபட்டை எதுவும் இல்லை ஆயினும் இந்த லிபர் ஆஃபிஸில் நாம் விரும்பினால் மட்டுமே திரையில் பிரதிபலிக்குமாறு செய்திடமுடியும்
லிபர் ஆஃபிஸ் நிலைபட்டையில் நாம் பயன்படுத்தி கொண்டிருக்கும் ஆவணத்தின் எத்தனை சொற்கள் உள்ளன என தானாகவே கணக்கிட்டு அவ்வப்போது நிகழ்நிலைபடுத்தி தற்போதைய நிலவரப்படி ஆவணத்திலுள்ள மொத்த சொற்களை கணக்கிட்டு பிரதிபலிக்கசெய்திடும்
ஓப்பன் ஆஃபிஸில் அவ்வாறான வசதி இல்லை தேவையானால் மட்டும் அதற்கான கட்டளைகளை செயற்படுத்தி கொண்டு வரமுடியும் மேலும் அவ்வப்போது நிகழ்நிலைபடுத்தி தற்போதைய நிலவரப்படி தானாகவே ஆவணத்தின் மொத்த சொற்களை கணக்கிடாது
ஓப்பன் ஆஃபிஸின் குறிமுறையை லிபர்ஆஃபிஸில் தன்மயமாக்கி கொள்ளமுடியும் ஆனால் லிபர் ஆஃபிஸின் குறிமுறையை ஓப்பன் ஆஃபிஸ் தன்மயமாக ஆக்கி கொள்ளமுடியாது அதனால் நீண்ட கால நோக்கில் ஓப்பன் ஆஃபிஸின் வசதிகள் லிபர் ஆஃபிஸிலும் கொண்டுவரமுடியும் ஆனால் லிபர் ஆஃபிஸின் வசதிகள் ஓப்பன் ஆஃபிஸில் கொண்டுவரமுடியாது ஓப்பன் ஆஃபிஸ் அப்பாச்சி எனும் அனுமதியின் அடிப்படையில் வெளியிடபடுகின்றது லிபர் ஆஃபிஸானது LGPLv3 அல்லது MPL எனும் அனுமதியின் அடிப்படையில் வெளியிடபடுகின்றது

ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்-106

  பொதுவாக ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்கின் அனைத்து தரவுகளும் XMLன் வடிவமைப்பில் தேக்கிவைக்கபடுகின்ற. XMLன் வெவ்வேறுவகைகளில் உள்ள libraries.dtd, module.dtd., dialog.dtdஎன்பனபோன்ற DTDஎன்றபின்னொட்டுடன்கூடிய கோப்புகளுக்குள் இவைகளை வைத்து பயன்படுத்தி கொள்ளபடுகின்றது கூடுதலாக கடவுச்சொற்களுடன் இவை பாதுகாப்பாக தேக்கிவைக்கபடுகின்ற. மேலும் script.xlc , dialog.xlc ஆகிய library container indexஆக இவைகள்தேக்கி வைக்கபடுகின்ற இவைகளின் xlc என்ற பின்னொட்டில் உள்ள lc எனும்இரு எழுத்துகளும்library container என்பதை குறிக்கின்ற. OpenOffice.org ஐ நிறுவுகை செய்திடும்போது கோப்புகளை தேக்கிவைக்கபடும் இடமும்autopilot libraries என்பவை தேக்கி வைக்கபடும் ஒரேநினைவகஇடமாகும் அதனால் இதனுடைய மூலக்குறிமுறைவரிகளை யார்வேண்டுமானாலும் படித்துவிடலாம் என பயந்துவிடாதீர்கள் இவைகள் கடவுச்சொற்களுடன் மட்டுமே தேக்கிவைக்க படுகின்ற என்ற செய்தியை மனதில் கொள்க.

autopilot .xlb libraries ஆனது user/basic/*.xlc என்ற கோப்பிற்குள் பதிவுசெய்யபடுகின்ற ஆனால் இவை share/basic என்ற இடத்தில் தேக்கிவைக்கபடுகின்ற அதனால் ஒரு network ஐ நிறுவுகையின்போதுகூட இதனை நீக்கம் செய்திடவோ தற்காலிகமாக இதன்செயலை நிறுத்தம் செய்திடவோமுடியும்

அதுமட்டுமின்றி குழப்பமில்லாமல் பாதுகாப்பாக இருப்பதற்காக xlb , xba ஆகிய வெவ்வேறு பின்னொட்டு பெயர்களுடனும் SmallDialog,BigDialog ஆகிய வேவ்வேறு தனித்தனி துனை கோப்பகத்திற்குள்ளும் இவை தேக்கிவைக்கபடுகின்றன. Basic libraries மட்டும் கடவுச்சொற்களுடன் தேக்கிவைக்கபடுகின்ற.நூலகபயன்பாடுகள் நேரடியாக கோப்பு அமைவிற்குள் தேக்கிவைக்கபட்டால் இந்தஆவணநூலகமானது ஆவணத்தின் கட்டுகோப்பிற்குள் தேக்கிவைக்கின்றது. இந்த ஆவணங்களில் Basic library container, dialog library container ஆகிய இரண்டும் தனித்தனியே துனைக்கோப்பகத்திற்குள் தேக்கிவைக்கபடுகின்ற இந்நிலையில் கடவுச்சொற்களுடன் உள்ளகோப்புகள் அதே பெயரில் ஓரேஇடத்தில் தேக்கிவைக்கபட்டாலும் கடவுச்சொற்களுடன் கூடிய கோப்பானது கூடுதலாக code.bin என்ற வகை கோப்புடன் சேர்த்து தேக்கிவைக்கபடுகின்றது பொதுவாக OpenOffice.org ஐ நிறுவுகை செய்திடும்போது Basic libraries இதனுடன் சேர்த்திட முதலில் *.oxt என்ற பின்னொட்டு கோப்பு கட்டுகளாக ஆக்கிடுக பின்னர் Tools => Extension Manager=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தியபின் தோன்றிடும் Extension Manager என்ற திரையில்Addஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பிறகு நாம் விரும்பும் extension packageஐ தெரிவுசெய்துகொண்டு Ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

இவ்வாறு நிறுவுகை செயததை நீக்கம் செய்வதற்காகTools => Extension Manager=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தியபின் தோன்றிடும் Extension Manager என்ற திரையில் நாம் விரும்பும் extension packageஐ தெரிவுசெய்துகொண்டு Removeஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.ஒரு விரிவாக்க கட்டுகளின் (extension package (*.oxt))கோப்பானது ஒரு சுருக்கி கட்டபட்ட Basic librariesஆகியவையடங்கிய சுருக்குகோப்பாகும்.இந்த கோப்புகட்டினுடைய கோப்பகமானது uno-packagesஎன இயல்புநிலையில் இருக்கும் இதனை சென்றடைவதற்கான வழியாக <OfficePath>/share, அல்லது <OfficePath>/userஅல்லது <OfficePath>/program.என இருக்கும் அவ்வாறே tool logsஎன்பதனுடைய செயல்களனைத்தும் <cache-dir>/log.txtஎன்பதற்குள் இருக்கம் கோப்புகளை பயன்படுத்திடும்போது பிழைஏதேனும் உருவானால் tool logsஆனது பின்புலத்தில் பார்த்து கொள்ளும்.தற்காலிக நினைவகத்தை கையாளும் போது ஏற்படும் சிரமத்தை unopkஐ மறுநிறுவுகை செய்து சரிசெய்துகொள்க

ஓப்பன் ஆஃ பிஸ் பேஸிக் -97

97.1

இந்த தொடரில் நாம் முதலில் ஓப்பன் ஆஃபிஸினுடைய தற்போதைய வளர்ச்சியை அறிந்துகொண்டபின் ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்கை தொடருவோம் இந்நிலையில் நாம் மிகமுக்கியமாக கவனிக்கவேண்டியது என்னவெனில் ஓப்பன் ஆஃபிஸானது தற்போது அப்பாச்சி ஓப்பன் ஆஃபிஸ் என பெயர்மாற்றம் செய்யபட்டுள்ளது என்பதேயாகும். அதுமட்டுமின்றி இதனுடைய OpenOffice 4.0 என்ற பதிப்பு தற்போது வெளியிடபட்டுள்ளது இந்த திறமூல அலுவலக பயன்பாட்டு மென்பொருளினை நம்முடைய கணினிக்கு பதிவிறக்கம் செய்தபின் நிறுவுத்தொடங்கியவுடன் நம்முடைய கணினியில் ஏற்கனவே உள்ள ஓப்பன் ஆஃபிஸின் முந்தைய பதிப்பை மேம்படுத்தவா அல்லது அதனோடு இணையாக புதியபதிப்பையும் நிறுவுகை செய்திடவா என கோரும் பின்னர் நாம் தெரிவுசெய்திடும் வாய்ப்பிற்கு ஏற்ப நாம் விரும்புவதைபோன்று நிறுவுகை செய்துவிடும் .
97.2

2

பழையபதிப்பினுடையதிரையின் மேலே உள்ள கருவிபட்டி போன்று பக்கபட்டி என்பது இந்த புதிய பதிப்பில் கூடுதலாக சேர்க்கபட்டுள்ளது இந்த பக்கபட்டியில் நம்மால் அடிக்கடி பயன்படுத்தபடும் உரைபதிப்பு செயல்களுக்கான properties, gallery என்பன போன்ற கருவிகள் உள்ளன அதில் குறிப்பிட்ட செயலுக்கான கருவியின் பெயருக்கு அருகில் உள்ள + அல்லது – பொத்தான்களை தேவையானவாறு தெரிவுசெய்து சொடுக்குவதன் வாயிலாக தேவையெனில் அதற்கான பலகத்தினை திரையில் தோன்ற செய்து கொள்ளலாம் இல்லையெனில்மறையச்செய்து விடலாம்

97.3

3

இப்போது ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்கை தொடருவோம் ஓப்பன் ஆஃபிஸின் பேஸிக்கினுடைய அடிப்படை வகைகளை அமைப்பதில் சரங்களும்(strings) எண்களும்(numbers) சேர்ந்து மிகமுக்கியபங்காற்றுகின்றன பொதுவாக ஓப்பன் ஆஃபிஸின் பேஸிக்கானது சாரங்களின் மாறியை ஒருங்கு குறியாக சேமித்து வைத்து கொள்கின்றது
ஒருவரியில் Dim Variable As String என்றும் அல்லது Dim Variable$ என்றும் சாரங்களின் மாறியை அறிவிப்பு செய்யலாம் அதற்கு பதிலாக சாரங்களின் மாறியை
Dim MyString As String
MyString = ” This is a test” என்றவாறு மேற்கோள்குறிக்குள்ளும் அறிவிப்பு செய்திடலாம்
ஓப்பன் ஆஃபிஸின் பேஸிக்கானது 1,Integer, 2. Long Integer,3. Single,4. Double, 5. Currency ஆகிய ஐந்துவகையான எண்களை ஆதரிக்கின்றது இதிலுள்ள கடைசி மூன்றுவகையான Single,Double,Currency ஆகியவற்றை ஒட்டுமொத்தமாக floats என அழைப்பார்கள்
ஓப்பன் ஆஃபிஸின் பேஸிக்கில் முழுஎண் (whole number) பின்னஎண்(Decimal number) என எண்கள் இருவகையில் பயன்படுத்தபடுகின்றன பின்ன எண்களை முற்றுபுள்ளிடன் குறிப்பது வழக்கமாகும் அவ்வாறே குறைவெண்கள், மிகை எண்களை குறிப்பிட – அல்லது +ஆகிய குறியீடுகள் பயன்படுகின்றன
பொதுவாக சாதாரண கோவைகள் வெற்றுகோவைகள் என கோவைகள் இருவகைபடும்
Dim MyArray(10, 13 to 28) As Integer
MsgBox(LBound(MyArray, 2)) ‘ displays : 13
MsgBox(UBound(MyArray, 2)) ‘ displays : 28 என்பது பல்லடுக்கு தரவுபுலங்களின் சாதாரண கோவையாகும்(simple array)
Dim s() As String ‘ declare an empty array
‘ — later in the program …
Redim s(13) As String என்பது வெற்று கோவையாகும் (empty array)
ஒரு செயலிக்குள்(function) அல்லது ஒரு செயல்முறைக்குள்(procedure) குறிக்கபடுவது உள்ளூர் மாறியாகும்(variable).
எல்லா இடங்களிலும் பயன்படுத்துமாறு இருப்பதும் Public A As Integer என்றவாறு இருப்பதும் பொதுமாறியாகும்(Public variable). எங்குவேண்டுமானாலும் செயல்படுத்திய பின்பும் அதனுடைய மதிப்பை அப்படியே தக்கவைத்திருப்பதும் Global A As Integer என்றவாறு இருப்பதும் உலாகளாவிய மாறியாகும் (Global variables). குறிப்பிட்ட செயலைமட்டும் குறிப்பிடுவதும் Private MyInteger As Integer என்றவாறு இருப்பதும் தனிமாறியாகும்(private variable).
அறிவிப்பு செய்திடும்போதே Const B As Double = 10என்றவாறு குறிப்பிடுவது மாறிலியாகும்( Const).
ஓப்பன் ஆஃபிஸின் பேஸிக்கில் True ,False ஆகிய மாறிலிகள் பூலியனில் ஒதுக்கீடு செய்வதற்கும் எண்களை இரட்டிப்பாக மாற்றிட PI என்ற மாறிலியும் பயன்படுத்தபடுகின்றன
தற்போது & – * / \ ^ MOD ஆகிய கணித இயக்கிகளும் AND OR XOR NOT EQV IMP ஆகிய தருக்க இயக்கிகளும் = > >= < <= ஆகிய ஒப்பீட்டு இயக்கிகளும் ஓப்பன் ஆஃபிஸின் பேஸிக்கில் பயன்படுத்தபடுகின்றன

ஓப்பன் ஆஃபிஸ்-95-பொது

   கடந்த ஓப்பன் ஆஃபிஸ்-94 தொடரில் கண்டவாறு கருவிபட்டியை நாம் விரும்பியவாறு மாற்றியமைக்கும்போது அதிலுள்ள தனித்தனி கருவிகளின் உருவபொத்தான்களின் உருவையும் (குறிப்பு. இவை கட்டளை பட்டி போன்று சொற்களாக இருக்காதவையாகும்) மாற்றியமைத்திடலாம் இங்கு தொலைநகல் அச்சுபொறி கட்டளைக்கான உருவபொத்தானை கருவிபட்டியில் சேர்ப்பதாக கொள்வோம்  அதற்காக முதலில் நம்முடைய கணினியில் fax driver என்பது நிறுவ பட்டுள்ளதாவென்றும் fax modemஇணைக்கபட்டுள்ளதா என்றும் உறுதி செய்துகொள்க  

பின்னர் மேலே கட்டளைபட்டையிலுள்ள Tools => Options => Open Office.org  Writer => Print => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் விரியும் Options – Open Office.org Writer – Print என்ற (படம்-1)உரையாடல் பெட்டியில் fax என்பதன் கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து அதில் fax என்பதை தெரிவுசெய்துகொண்டு OKஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

 95.1

படம்-1

 பின்னர் நடப்பில் இருக்கும் கருவிபட்டியின் கடைசியாக இருக்கும் அம்புக்குறியை தெரிவு செய்துசொடுக்கியவுடன் விரியும் கட்டளைபட்டியிலிருந்து Customize Toolbar என்றவாறு கட்டளையை தெரிவுசெய்துசொடுக்குக அல்லது மேலேகட்டளை பட்டையிலிருந்து View => Toolbar => Customize=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக அல்லது திரையின் மேலே கட்டளை பட்டையிலிருந்து Tools => Customize=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன்தோன்றிடும்Customize என்ற திரையில் Toolbars என்ற திரையை தோன்றிடசெய்க

இதில் Addஎன்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக உடன் விரியும் Add commands என்ற (படம்-2)உரையாடல் பெட்டியில் மேல்நோக்கு அல்லது கீழ்நோக்கு அம்புக்குறியை தேவையானவாறு பயன்படுத்தி நகர்த்தி Documents என்பதை category என்றபகுதியிலிருந்து தெரிவு செய்து கொண்டும் Send Default Fax என்ற கட்டளையை commands என்றபகுதியிலிருந்து தெரிவு செய்து கொண்டும் Addஎன்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக

 95.2

படம்-2

உடன் Customize என்ற திரையில் இந்த உருவபொத்தான் ஆனது கருவிபட்டியில் நாம் விரும்பும் இடத்தில் மிக்சசரியாக அமர்ந்திடுமாறு சரிசெய்து கொண்டுOKஎன்ற பொத்தானையும் பின்னர் Close என்ற பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்கி இந்த உரையாடல் பெட்டியை மூடிவிடுக இப்போது கருவிபெட்டியில் நாம் சேர்த்த Send Default Fax என்ற (படம்-3)உருவபொத்தான் வீற்றிருப்பதை காணலாம் 

 95.3

படம்-3

அவ்வாறே நாம் செயற்படுத்திட விரும்பும் கட்டளையானது நாம் விரும்பிய குறுக்கு வழி விசையின் வாயிலாக செயற்படுத்திடுவதற்காக கட்டமைத்திட மேலேகட்டளை பட்டையிலிருந்து View => Toolbar => Customize=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக அல்லது திரையின் மேலேகட்டளை பட்டையிலிருந்து Tools => Customize=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் Customize என்ற திரையில் Keyboard என்ற திரையை தோன்றிடசெய்க  பின்னர் நாம் செய்திடும் மாறுதல்கள் ஓப்பன் ஆஃபிஸின் ரைட்டரில் மட்டுமெனில் writerஎன்ற வானொலி பொத்தானையும் ஓப்பன் ஆஃபிஸின் அனைத்து ஆவணங்களிலும் எனில் OpenOffice.org என்ற வானொலி பொத்தானையும் தெரிவுசெய்துகொள்க அதன்பின்னர் தேவையான செயலியை Functionsஎன்பதன்கீழுள்ள Category , Functionஆகியவற்றின் பட்டியலின் வாயிலாக தெரிவுசெய்துகொள்க மேலும் இதனை செயற்படுத்துவதற்கான குறுக்குவழிவிசையை தெரிவு செய்வதற்காக Shortcut keys என்பதன்கீழுள்ள  Ctrl+3 என்றவாறு (படம்-4) ஏதேனுமொரு குறுக்குவழிவிசையை தெரிவு செய்து கொண்டு முதலில் Modify என்ற பொத்தானையும் பின்னர் OKஎன்ற பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக

 95.4

படம்-4

இதன்பின்னர் இந்த மாறுதல்கள் வேறு ஆவணங்களிலும் செயல்படசெய்வதற்காக இதே உரையாடல் பெட்டியில் saveஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் விரியும் Save Keyboard Configurationஎன்ற உரையால் பெட்டியில் கோப்பின்வகை ,பெயர் ஆகியவற்றை தெரிவுசெய்துகொண்டு saveஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி சேமித்துகொள்க

 

இந்த ஓப்பன் ஆஃபிஸில் மேலும் தேவையான புதிய வசதிகளை பெறவிரும்பினால் http://extensions.services.openoffice.org/.என்ற இணைய தளத்திற்கு சென்று கட்டணம் எதுவுமின்றி தேவையான புதிய விரிவாக்க வசதிகளை பதிவிறக்கம் செய்து நிறுவி பயன்படுத்திகொள்க 

இவ்வாறான பதிவிறக்கம் செய்யபட்ட விரிவாக்க வசதிகளை நிறுவி பயன்படுத்திட மேலேகட்டளை பட்டையிலிருந்து Tools  => Extension Manager => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன்தோன்றிடும் Extension Manager என்ற திரையில்  Addஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் விரியும் திரையில் நாம் பதிவிறக்கம் செய்த விரிவாக்க வசதிக்கான பயன்பாட்டு கோப்பினை தெரிவுசெய்துகொண்டுopen என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இந்த விரிவாக்க வசதி நம்முடைய ஓப்பன் ஆஃபிஸில்  நிறுவபட்டுவிடும்

ஓப்பன் ஆஃபிஸ்-94-பொது

    வாடிக்கையாளர் விரும்பியவாறு கட்டளைபட்டி கருவி பட்டிகுறுக்குவழிவிசை ஆகியவற்றை ஓப்பன் ஆஃபிஸில் புதியதாக உருவாக்கி அதற்கான சிறுசிறுநிகழ்வு செயல்களை ஒதுக்கீடு செய்து கொள்ளமுடியும் ஆயினும் சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குவதால் உருவாகும் குறுக்குவழிபட்டியை மட்டும் வாடிக்கையாளர் விரும்பியவாறு மாறுதல் செய்திடமுடியாது பொதுவாக ஓப்பன் ஆஃபிஸின் இணையதளத்திலிருந்து அல்லது மூன்றாவது விற்பணையாளர் மூலம் ஓப்பன் ஆஃபிஸில் புதியதாக விரிவாக்கங்களை மிகசுலபமாக செய்துகொள்ளலாம்

இதனுடைய கட்டளை பட்டியை நாம் விரும்பியவாறு மாறுதல் செய்திட திரையின் மேலே கட்டளைபட்டையிலுள்ளTools ==> Customize==>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன்தோன்றிடும்Customizeஎன்ற திரையில் Menusஎன்ற திரையை(படம்-1) தோன்றிடசெய்க அதில்save in என்ற பகுதியின் கீழிறங்கு பட்டிமூலம் ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் அல்லது நடப்பு ஆவணம் ஆகிய ஏதேனுமொன்றை தெரிவுசெய்துகொள்க

94.1

படம்-1

பிறகு இதற்கு மேலேயுள்ள கீழிறங்கு பட்டியிலிருந்து தேவையான கட்டளையை தெரிவு செய்து கொள்க .நடப்பிலிருக்கும் பட்டியில் மாறுதல்கள் செய்வதாக இருந்தால் தேவையான கட்டளை பட்டியை இதனுடைய கீழிறங்கு பட்டியிலிருந்து தெரிவு செய்து கொண்டு இதே உரையாடல் பெட்டியில் Menu அல்லது Modify என்றவாறு தேவையான பொத்தான்களை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தோன்றிடும் சிறு உரையாடல் பெட்டியில் Move, Rename,Delete. ஆகிய கட்டளையை செயற்படுத்துக ஆனால் ஒருசில கட்டளைபட்டிக்கு இந்த கட்டளை செயல்படாது என்பதை மட்டும் மனதில் கொள்க இறுதியாக OKஎன்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்கி நாம் செய்த மாறுதல்களை சேமித்துகொள்க

இதே உரையாடல் பெட்டியில்Newஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்New Menu என்ற (படம்-2)சிறு உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதில் Menu Name என்பதி்ல் Skmenu என்றவாறு ஒருபெயரினை தட்டச்சு செய்து Menu position என்ற பகுதியில் அது மிகச்சரியான இடத்தில் அமரச்செய்வதற்கு மேல்நோக்கு அல்லது கீழ்நோக்கு அம்புக்குறியை தேவையானவாறு பயன்படுத்தி கொள்க பின்னர் OKஎன்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்கி நாம் செய்த மாறுதல்களை சேமித்துகொள்க

94.2

படம்-2

கட்டளைபட்டையில் புதியதாக ஏதேனுமொரு கட்டளையை சேர்க்கவிரும்பினால் Addஎன்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக உடன் விரியும் Add commands என்ற (படம்-3)உரையாடல் பெட்டியில் மேல்நோக்கு அல்லது கீழ்நோக்கு அம்புக்குறியை தேவையானவாறு பயன்படுத்தி புதிய வகையை category என்றபகுதியிலிருந்து தெரிவு செய்து கொண்டு புதிய கட்டளையை commands என்றபகுதியிலிருந்து தெரிவு செய்து சொடுக்கி பட்டியில் சேர்த்து கொள்க இறுதியாக OKஎன்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்கி கட்டளை பட்டியில் நாம் செய்த மாறுதல்களை சேமித்துகொள்க

94.3

படம்-3

மேலே கூறியவாறு கருவிபட்டையிலும் வாடிக்கையாளர் விரும்பியவாறு மாறுதல்கள் செய்துகொள்ளலாம் அதாவது புதிய கருவிபட்டியை சேர்த்துகொள்ளுதல் நடப்பிலிருக்கும் கருவிபட்டியில் புதிய கருவிகளின் உருவபொத்தான்களை சேர்த்தல் அல்லது இடமாற்றியமைத்தல் போன்ற பணிகளை செய்யலாம்

94.4

படம்-4

இதற்காக நடப்பில் இருக்கும் கருவிபட்டியின் கடைசியாக இருக்கும் அம்புக்குறியை தெரிவுசெய்துசொடுக்கியவுடன் விரியும் கட்டளைபட்டியிலிருந்து Customize Toolbar என்றவாறு (படம்-4)கட்டளையை தெரிவுசெய்துசொடுக்குக அல்லது மேலேகட்டளை பட்டையிலிருந்து View => Toolbar => Customize=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக அல்லது திரையின் மேலேகட்டளை பட்டையிலிருந்து Tools => Customize=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன்தோன்றிடும்Customizeஎன்ற திரையில் Toolbars என்ற(படம்-5) திரையை தோன்றிடசெய்க

94.5

படம்-5

அதில்save in என்ற பகுதியின் கீழிறங்கு பட்டிமூலம் ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் அல்லது நடப்பு ஆவணம் ஆகிய ஏதேனுமொன்றை தெரிவுசெய்துகொள்க பிறகு இதற்கு மேலேயுள்ள கீழிறங்கு பட்டியலிருந்து தேவையான கருவி பட்டையை தெரிவு செய்து கொள்க நடப்பிலிருக்கும் கருவிபட்டியில் மாறுதல்கள் செய்வதாக இருந்தால் தேவையான கருவி பட்டியை கீழிறங்கு பட்டியலிருந்து தெரிவு செய்து கொண்டு இதே உரையாடல் பெட்டியில் Toolbar அல்லதுModifyஎன்றவாறு தேவையான பொத்தான்களை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தோன்றிடும் சிறு உரையாடல் பெட்டியில் Move, Rename,Delete. ஆகிய கட்டளையை செயற்படுத்துக இறுதியாக OKஎன்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்கி நாம் செய்த மாறுதல்களை சேமித்துகொள்க

ஓப்பன் ஆஃபிஸ் -93- வரைபடம்

கோட்டுபடம் (vector (line) drawing),புள்ளிகளாலான படம்(raster (bit)map) ஆகிய  எந்த வடிவமைப்பில் இருந்தாலும் அல்லது வரைபடம் ,உருவப்படம்,வருடப்பட்டபடம் போன்றவைகளில் GIF, JPG, PNG,  BMPஎன்பனபோன்ற பொதுவான எந்த வடிவமைப்பில் இருந்தாலும் ஓப்பன் ஆஃபிஸிற்குள் பதிவிறக்கம் செய்து இணைத்து கொள்ளமுடியும்

அவ்வாறான ஒரு கோப்பில் உள்ள படத்தை இணைப்பதற்காக ஓப்பன் ஆஃபிஸ் திரையின் மேலே கட்டளை பட்டையிலுள்ள Insert => Picture => From File=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக உடன்தோன்றிடும் Insert Picture என்ற உரையாடல் பெட்டியில் உள்ளிணைக்க விரும்பும்படம் இருக்கும் இடத்தினை தேடிபிடித்து அப்படகோப்பினைதெரிவுசெய்துகொண்டு Openஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

வேறுவகையில் இணைப்பதற்காக Insert => Picture => Scan => select sources => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக அல்லது request => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக உடன் வருடப்பட்ட படத்தினை உள்ளிணைத்து கொள்ளும் .

இதே Insert Picture என்ற (படம்93-1)உரையாடல் பெட்டியில்  Linkஎன்ற வாய்ப்பை தெரிவுசெய்துகொண்டுOpenஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால்  படத்தினை உள்ளிணைத்து விடும் ஆனால்  படத்தை உள்ளிணைத்த   கோப்பினை சேமிக்கும்போது அதன் அளவு மிககுறைவாகவே இருக்கும் மேலும் உள்ளிணைக்கப்படும் படத்தின் கோப்பிற்கு சென்று தனியாக அந்த படத்தினைமட்டும் மாறுதல்கள் செய்து கொள்ள முடியும் ஆனால் இந்த உள்ளிணைக்கப்பட்ட கோப்பினை மற்றஇடங்களுக்கு நகலெடுத்து செல்லும்போது   Linkசெய்தபடத்தின் கோப்பும் கூடவே நகலெடுத்து செல்லவேண்டும்

 93.1

படம்-93-1

மேலே கட்டளைபட்டையில் உள்ள Edit => Links =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக உடன்தோன்றிடும் Edit link  என்ற உரையாடல் பெட்டியில்Break Link என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் கோப்போடு இணைக்கபட்ட படத்தின்கோப்பினுடைய இணைப்பு நீக்கபட்டு படம் மட்டும் ஒப்பன் ஆஃபிஸின் கோப்பிற்குள் உள்பொதியபட்டுவிடும்

வேறுவகையில் படத்தினை அதற்கான பயன்பாட்டு மென்பொருளில் இருந்தும் நேரடியாக நகலடுத்து ஒட்டுவதன்மூலம் ஒட்டி இணைத்துகொள்ளமுடியும்

நாம் பயன்படுத்திடும் எழுத்துருவை வரைகலையை பயன்படுத்தி (line, area, position, size,  more)என்பன போன்ற பல்வேறு செயல்களின் மூலம் மெருகூட்டுவதையே Fontworkஎன ஓப்பன் ஆஃபிஸில் குறிப்பிடுவார்கள்

இதனை பயன்படுத்தி கொள்வதற்கு மேலே கட்டளைபட்டையில் உள்ள view => Tool bars => Fontwork=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக பின்னர் தேவையான எழுத்துருவை தெரிவுசெய்தவுடன் அதற்கேற்ப இந்த Fontwork கருவி பட்டை(படம்93-2) திரையில் மாறியமையும்

93.2

படம்93-2

திரையிலுள்ள Fontwork கருவி பட்டையில் முதலில் உள்ள Fontwork galleryஎன்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும்  Fontwork galleryஎன்ற உரையாடல்(படம்93-3) பெட்டியில் தேவையான  பாவணையை மட்டும் தெரிவுசெய்து okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்  Fontwork என்பது மஞ்சள் புள்ளிகளுடன் நீலவண்ண சதுரத்திற்குள் தோனறிடும்

93.3

 படம்93-3

Fontwork கருவி பட்டையில் உள்ள மற்ற வாய்ப்புகளை பயன்படுத்தி எழுத்துகளுக்கிடையேயான இடைவெளி வண்ணம் எழுத்துருவின் அளவு  நிழலுரு என்பன போன்ற நாம்விரும்புவதுபோன்று மாற்றியமைத்துகொள்க.

ஓப்பன் ஆஃபிஸ் தொடர் -பகுதி -92

    பொதுவாக ஓப்பன் ஆஃபிஸின் அனைத்து பயன்பாடுகளிலும் விரைவாக அச்சிடுவதற்கும் விரைவாக பிடிஎஃப் கோப்பாக உருமாற்றுவதற்கும் மேலே கருவிகளின் பட்டியலில் உள்ள இதற்கான Print File Directly , Export Directly as PDF என்ற உருவபொத்தான்களை (படம்-92.1) தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் விரும்பிய பணிக்கான செயல் நடைபெறும்.

92.1

படம்-92.1

அதுமட்டுமல்லாது அச்சிடும் பணியின் ஒவ்வொரு செயல்களையும் நாம் விரும்பிய வாறு மாற்றியமைப்பதற்காக மேலே கட்டளைபட்டையிலுள்ள File => Print=>  என்ற வாறு கட்டளைகளை  தெரிவுசெய்து சொடுக்குக  பின்னர் விரியும் Print என்ற உரையாடல்(படம்-92.2)  பெட்டியில் General ,என்ற அனைத்து பயன்பாடுகளிலும் உள்ள பொதுவான முதல் தாவியின் திரையும் அதற்கு அடுத்ததாக அந்தந்த பயன்பாட்டிற்கு ஏற்ப openoffice writer ,open office calc  ,என்ற தாவியின் திரையும், மூன்றாவதாக அந்தந்த பயன்பாட்டிற்கு ஏற்ப page layout  என்ற தாவியின்திரையும் நான்காவதாக options என்ற தாவியின்திரையும் அமைந்திருக்கும் அவற்றுள்  General என்ற தாவியின் திரையில் அச்சுபொறியின் பெயர் ,ஆவணத்தின் அனைத்து பகுதிகளுமா? அல்லது குறிப்பிட்ட பகுதியா? எத்தனை நகல் போன்றவிவரங்களை தெரிவுசெய்துகொண்டு  Print என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக .உடன் நாம் தெரிவுசெய்தவாறு ஆவணமானது அச்சிடபெறும்.

  92.2

படம்-92.2

 பிடிஎஃப் கோப்பாக உருமாற்றம் செய்திடும்போது அதன் உள்ளடக்கங்கள், தரம் ஆகியன எவ்வாறு இருக்கவேண்டும் என அமைப்பதற்காக ,  மேலே கட்டளை பட்டையிலுள்ள File => Export as PDF=>  என்றவாறு கட்டளைகளை  தெரிவுசெய்து சொடுக்குக  பின்னர் PDF Options என்ற உரையாடல்(படம்-92.3)  பெட்டி திரையில் தோன்றிடும்

92.3

 படம்-92.3

அதில் General ,என்ற தாவியின் திரையில் எந்த பகுதியை பிடிஎஃப் ஆக உருமாற்ற  விரும்புகின்றோம்? படங்கள் எவ்வாறு இருக்கவேண்டும்? படிவம் எவ்வாறு இருக்கவேண்டும்? என்பனபோன்ற விவரங்களை இயல்பு நிலையில் இருப்பதை ஆமோதித்திடுக அல்லது நம்விருப்பபடி மாற்றியமைத்திடுக.  initial view என்ற தாவியின் திரையில் பலகம், உருபெருக்க அமைவு ,பக்கவடிவமைப்பு ஆகியவை இயல்பு நிலையில் இருப்பதை ஆமோதித்திடுக அல்லது நம்விருப்பபடி மாற்றியமைத்திடுக .

92.4

 படம்-92.4

 இதே உரையாடல்பெட்டியில் user interface  என்ற தாவியின்(படம்-92.4) திரையில் பயன்பாட்டாளரின் இடைமுகம் எவ்வாறு அனுமதிப்பது என அமைத்திடுக

மிகமுக்கியமாக Security என்ற தாவியின் (படம்-92.4)திரையில் set open password ,set permission password ஆகிய இரண்டு பொத்தான்களையும் அழுத்துவதன்மூலம் நாம் உருவாக்க விருக்கும் பிடிஎஃப் கோப்பினை  கடவுச்சொற்களின் மூலமாக மட்டுமே திறக்கமுடியும் என அமைத்து  பிடிஎஃப் கோப்பின் பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ள முடியும் இவ்வாறு அனைத்தும் அமைவுசெய்தபின் இறுதியாக  Export என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் விரும்பியவாறு பிடிஎஃப் கோப்பாக உருமாற்றிடும்  செயல் நடைபெறும்.

ஓப்பன் ஆஃபிஸின் அனைத்து பயன்பாடுகளின் ஆவணத்தையும் நேரடியாக மின்னஞ்சலாக அனுப்பிடமுடியும் அதற்காக மேலே கட்டளைபட்டையிலுள்ள File => send=>  என்றவாறு கட்டளைகளை  தெரிவுசெய்து சொடுக்குக  பின்னர் விரியும் சிறு பட்டியில்(படம்-92.5) document as E-mail,E-mail as open document text ஆகிய இரண்டு வாய்ப்புகளில் ஒன்றை தெரிவுசெய்து சொடுக்குக (இவையிரண்டு வாய்ப்புகளும் ஒரே மாதிரியான பணியையே செய்கின்றன)உடன் தோன்றிடும் இயல்புநிலையின் மின்னஞ்சல் பயன்பாட்டில் ,இம்மின்னஞ்சலை பெறுபவரின் மின்னஞ்சல் முகவரி நாம் மின்னஞ்சலாக அனுப்பிடும் கோப்பின் சுருக்க விவரம் போன்ற விவரங்களை உள்ளீடு செய்தபின் அனுப்பிவைத்திடலாம்.

92.5

 படம்-92.5

 E-mail as Microsoft word என்ற வாய்ப்பு வாயிலாக மின்னஞ்சல் அனுப்பிட முனையும்போது ஆவணமானது முதலில் மைக்ரோசாப்ட் ஆவணமாக உருமாற்றம் செய்து அதன்பின் மின்னஞ்சலாக அனுப்பிவிடும்  அவ்வாறே E-mail as PDF என்ற வாய்ப்பானது அனுப்பிடும் ஆவணத்தை முதலில்  பிடிஎஃப் ஆவணமாக உருமாற்றம் செய்து அதன்பின் மின்னஞ்சலாக அனுப்பிவிடும்

மின்னஞ்சலை பெறுபவர்கள் ஒன்றிற்கு மேற்பட்டவர்கள் எனில்  ஓப்பன் ஆஃபிஸின் ரைட்டரில் உள்ள Mail Merge Wizardஎன்ற வாய்ப்பினை பயன்படுத்தி கொள்க .

இதற்காக மேலே கட்டளைபட்டையிலுள்ளTools => Mail Merge Wizard=>  என்றவாறு கட்டளைகளை  தெரிவுசெய்து சொடுக்குக  பின்னர் விரியும் Mail Merge Wizard என்ற உரையாடல் பெட்டியின் முதல் பக்கத்தில் Use the current document என்றவாய்ப்பை தெரிவுசெய்துகொண்டு next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

92.6

 படம்-92.6

  பின்னர் விரியும் இரண்டாவது திரையில்(படம்-92.6)  E-mail messageஎன்ற வாய்ப்பினை தெரிவுசெய்துகொண்டு next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  அதன்பின்னர் தோன்றிடும் மூன்றாவது திரையில் Select Address List என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குவதன் மூலம் மின்னஞ்சல் முகவரிகளின் பட்டியலில் தேவையான முகவரிகளை தெரிவுசெய்துகொண்டு okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் இவ்வாறே next ,nextஎன்றவாறு பொத்தானை ஏழுபடிமுறைகளை தெரிவுசெய்து சொடுக்கியபின் எட்டாவது படிமுறையாக இந்த உரையாடல் பெட்டியின் இடதுபுறபலகத்தில் உள்ள 8. Save, print or send என்ற வாய்ப்பின் படிமுறையை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் வலதுபுற பலகத்தில் Send merged document as E-Mail என்ற (படம்-92.7)வாய்ப்பை தெரிவு செய்து கொண்டு Send documents என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் பட்டியலில் உள்ள அத்துனை மின்னஞ்சல் முகவரிகளுக்கும் இந்த  ஆவணத்தை மின்னஞ்சலாக அனுப்பி வைத்துவிடும் .

 92.7

படம்-92.7

Previous Older Entries