ஓப்பன் ஆஃபிஸ் ட்ரா-76 மின்சுற்று வரைபடத்தை(Logic Circuit Diagram) வரைதல்

ஓப்பன் ஆஃபிஸ் ட்ராவானது கணினி உதவியால் வரையப்படும் வரைபட வடிவமைப்பு CAD (computer-aided design),pro-e போன்றதன்று ஆனாலும் வரைகலை பயன்பாட்டினை போன்று இதில் ஒரு scale ஐ வரையமுடியும்  மேலும் இதன் உதவியால் ஒரு மின்சுற்று வரைபடத்தை(Logic Circuit Diagram)  வரையமுடியும் ஆயினும் அதன் உண்மையான அமைப்பை பற்றிய விளக்கம் இங்கு கூறப்போவதில்லை இருந்த போதிலும் ஓப்பன் ஆஃபிஸ் ட்ராவினுடைய வரைகலை தொழில்நுட்பத்தை பயன் படுத்தி எவ்வாறு ஒரு மின்சுற்று வரைபடத்தை(Logic Circuit Diagram)  வரைவது என இப்போது காண்போம்

முதலில் இந்த வரைபடத்தின் வரைவு அளவை மில்லிமீட்டர் ஆக வைத்து கொள்க.முதல் படிமுறையாக ஒரு மின்சுற்று வரைபடத்தின்(Logic Circuit Diagram) அடிப்படை உறுப்பான ஒரு அன்டு கேட் உருவ வரைபடத்தை வரைய விருக்கின்றோம்.

 படம்-76-1

 இதற்காக திரையின் மேலே இடதுபுற மூலையில்  இதன் Xஅச்சு 10மிமீ என்றும் Yஅச்சு 5மிமீ என்றும்  அதனுடைய இடஅமைவு இருந்திடுமாறு(படம்-76-1) ஒரு சதுரஉருவை வரைந்து கொள்க பின் அதன் இடதுபுறம் மேல்பகுதியில் ஒரு lead ஐ வரைந்து அதனைPosition and Sizeஎன்ற உரையாடல் பெட்டியின் துனையுடன்  சரிசெய்து அமைத்துகொள்க   அவ்வாறே அதன் இடதுபுறம் கீழே   மற்றொரு lead ஐயும் வலதுபுறம் மேலே மூன்றாவாதாக  ஒரு lead ஐயும் வரைந்து அவைகளை  Position and Sizeஎன்ற உரையாடல் பெட்டியின் துனையுடன்  கீழேஅட்டவணையில் குறிப்பிட்டுள்ளவாறு சரிசெய்து அமைத்துகொள்க

 

left (X/Y) [mm] right (X/Y) [mm] Input 1 (X/Y)[mm] Output (X/Y)[mm]
10/05/12 18 / 5 10 / 6.5 (right EP.) 18 / 6.5 (left EP.)

 

தற்போது இந்த அண்டு கேட் வரையும் பணி ஏறத்தாழ முடிவுற்றது இந்த  அண்டு   கேட்டை அடிப்படையாக கொண்டுதான் மற்ற கேட்டுகளை  இனி வரைய இருக்கின்றோம்

படம்-76-2

 அதனால் இந்த பயன்பாட்டுத்திரையின் மேலே கட்டளைபட்டையில் Edit => Duplicate => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும்Duplicate என்ற(படம்-76-2) உரையாடல் பெட்டியில்  முதலில் இதன் Xஅச்சு 0மிமீ என்றும் Yஅச்சு 15மிமீ என்றும்  அதனுடைய இடஅமைவு இருந்திடுமாறு  இரண்டாவது உருவபடத்தையும் பிறகு  Xஅச்சு 30மிமீ என்றும் Yஅச்சு 0மிமீ என்றும்  அதனுடைய இடஅமைவு இருந்திடுமாறு மூன்றாவது உருவபடத்தையும்  அவ்வாறே மற்றொரு வரிசை உருவபடத்தையும் படம்-76-3-ல் உள்ளவாறு நகலெடுத்துகொள்க

படம்-76-3

  இவைகளை நாட் கேட்டாக மாற்றியமைத்திடுவதற்காக இதனுடைய  lead ஐ தேவையானவாறு நகர்த்தி சரிசெய்து அமைத்து கொள்க மேலும்  இந்த lead -ல் சிறுவட்டத்தை 2மிமீ அளவில் வரைந்து கொள்க அதன்பின் இதனை தேவைப்படும் இடத்தில் ஒட்டிகொள்வதற்காக இந்த  2மிமீ அளவுள்ள  சிறுவட்டத்தை ஒட்டும் பலகையில்(Clipboard) நகலெடுத்து வைத்து கொள்க

இதன்பின் இந்த அண்டு கேட், ஆர் கேட் ஆகிய கேட்டுகளில் (&,≤ )என்பனபோன்ற தேவையான குறியீட்டை சேர்ப்பதற்கு  மேலே கட்டளை பட்டையில் Insert => Special Characters =>  என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் உரையாடல் பெட்டியில்  தேவையான குறியீட்டை தெரிவுசெய்து சொடுக்கி சேர்த்துகொள்க

இந்த கேட்டுகளில் உள்ள    leadகளை   கணக்கீடுகளின் மூலம் இணைப்பது மிகச்சரியாக பொருந்தியமையாது என்பதால் glue points-ன் உதவியுடன் கைகளால் இணைத்துகொள்க இதற்காக Snap to Gridஎன்ற கட்டளையை செயலிழக்க செய்து கொண்டு Snap to Object Points. என்பதை செயல்படச்செய்தால் glue points- ஐதிறந்து செயல்படுத்திடமுடியும்   மேலும் இந்த பணியை செய்வதற்காக கருவிபட்டையை பயன்படுத்தி  வரைபடத்தின் உருவை பெரியதாக மாற்றியமைத்துகொள்வது நல்லது

இந்த அண்டு கேட் ,ஆர் கேட் ,நண்டு கேட் ,நாட் கேட் என்பன போன்றவைகளை தனித்தனி வகைவாரியான குழுவாக உருவாக்கி கொண்டால் அதன்பின் அவைகளை கம்பி இணைப்புடன்  இணைத்துகொள்வதற்கு வசதியாக இருக்கும்  என பரிந்துரைக்கப் படுகின்றது   அல்லது இவைகளை உருவாக்கி ஒரு புரிந்துகொள்ளும் பெயருடன் Gallery-ல்   சேகரித்து சேமித்து வைத்துகொண்டபின் தேவையானபோது ஒரு வரைபடத்தில் நகலெடுத்து ஒட்டிகொள்ளமுடியும்

ஒரு Half adderஎன்பதை எவ்வாறு வரைவது என இப்போது காண்போம்  முதலில் இந்த வரைபடத்தின் வரைவு அளவை சென்டிமீட்டர் ஆகவும் துனைஅளவு 4புள்ளி எனவும் அமைத்துகொள்க பின் grid, guiding lines,  associated snap functions ஆகியவைகளை செயலில் இருக்குமாறு வைத்து கொள்க

பிறகு முதல் பணியாக பின்வரும் அட்டவணையிலுள்ளவாறு a , b,என்ற இரு signal leads  களை வரைந்து கொள்க

  Start point Length
Signal wire a X = 2 cm / Y = 3.0 cm 5.5 cm
Signal wire b X = 3 cm / Y = 3.0 cm 5.5 cm

 

பின் A,Bஎன்ற படுக்கைவச கோடுகளுக்கிடையில் input leads  Y=4.0 cm என்றும் output leads Y=6.0 cm என்றும்  அதனுடைய நிலையை சரிசெய்து அமைத்துகொள்க

அதன்பின்இரு INVERTER  கேட்டுகளின் நிலையை input   Y=4.1 cm என்றும் output Y=6.1 cm என்றும் சூழ்நிலை பட்டியின்Edit guidinglineஎன்ற கட்டளையின் வாயிலாக சரிசெய்து அமைத்துகொள்க இவை மிகச்சரியாக அமையX=5.0 cm (INVERTER gate) and X=8.0 cm(AND gate). என அமைத்துகொள்க  இதன்பின்  Gallery-யில்   சேகரித்து வைத்துள்ள  INVERTER  கேட்டினைஇழுத்துவந்து விடுவதன் வாயிலாக இரு INVERTER  கேட்டுகளை  படம் 76-4-ல் உள்ளவாறு பொருத்தி அமைத்துகொள்க

  படம் 76-4

  இந்த இன்வெர்ட்டர் கேட்டுகளின் Input leads  Y=4.5 cm என்றும் output leads Y=6.5 cm என்றும்  இருக்கும் பின் இடம்சுட்டியை இதன்மீது மேலூர்தல் செய்தவுடன் கூட்டல்க குறிபோன்று அதன்உருவம் மாறியமையும்   உடன்input leads மற்றும் outputs leads ஆகியவை guiding line-ல் சரியாக பொருந்தி அமையுமாறு இழுத்து சரிசெய்து அமைத்துகொள்க

அதன்பின் Gallery-யில்   சேகரித்து வைத்துள்ள  அண்டு கேட்டினை இழுத்துவந்து விடுவதன் வாயிலாக இரு அண்டு கேட்டுகளை  படம் 76-5-ல் உள்ளவாறு பொருத்துக

படம் 76-5

இந்த அண்டு கேட்டுகளின் Input leads  Y=4.5 cm என்றும் output leads Y=6.5 cm என்றும்  இருக்கும் பின் இடம்சுட்டியை இதன்மீது மேலூர்தல் செய்தவுடன் கூட்டல்குறிபோன்று அதன்உருவம் மாறியமையும்  உடன் input leads மற்றும் outputs leads ஆகியவை guiding line-ல் சரியாக பொருந்திஅமையுமாறு இழுத்து சரிசெய்து அமைத்துகொள்க

பின் ஒரு நெடுக்கைவசகோடு X=11 cmஎன்ற அளவிலும்  C,Dஎன்ற படுக்கைவச கோடுகள் Y=5.5 cm and Y=7.5 cmஎன்ற அளவுகளிலும் வரைந்து கொள்க  அதன்பின் இந்த  C,Dஎன்ற படுக்கைவச கோடுகளை Y=5.35 cm, Y=7.35 cmஎன்ற அளவுகளுக்கு மாற்றியமைத்துகொள்க

பிறகு Gallery-யில்   சேகரித்து வைத்துள்ள   ஆர் மற்றும் மற்றொரு அண்டு கேட்டுகளை மூன்றாவது நெடுவரிசையாக இழுத்துவந்து படம் 76-6-ல் உள்ளவாறு பொருத்துக

படம் 76-6

பின் மேலிருக்கும் அண்டு கேட்டிற்கு ஏற்றவாறு  C,Dஎன்ற படுக்கைவச கோடுகள் Y=7.0 cm and Y=7.5 cmஎன்ற அளவுகளில் வரைந்து கொள்க அவ்வாறே கீழிருக்கும்  அண்டு கேட்டிற்கு ஏற்றவாறு  ,E,Fஎன்ற படுக்கைவச கோடுகள் Y=5.0 cm and Y=5.5 cmஎன்ற அளவுகளில் படம் 76-7 ல் உள்ளவாறு வரைந்து கொள்க இந்த கோடுகளுக்கு ஏற்ப அண்டு கேட்டுகளை சரிசெய்து அமைத்தபின் இந்த கோடுகள் அனைத்தையும் நீக்கம்செய்துவிடுக.

படம் 76-7

இவ்வாறான படிமுறையை பின்பற்றி படம் 76-8-ல்உள்ளவாறு Half Adder logic diagram ,Full-adder logic diagram ஆகிய வரைபடங்களை CAD ,pro-e போன்ற பயன்பாடுகளைபோன்று ஒப்பன் ஆஃபிஸ் ட்ராவிலும்  வரையமுடியும்


படம் 76-8

 ஓப்பன் ஆஃபிஸ் ட்ராவில் உரையை அசைந்தாட செய்தல்

கருவிபட்டையிலுள்ள Tஎனும் ட்ராவில் உரையை எழுதுவதற்கான கருவியை தெரிவுசெய்து சொடுக்கியபின்படம்-76-9ல்உள்ளவாறு ஏதேனுமொரு உரையை தட்டச்சு செய்து கொண்டு சுட்டியின் வலதுபுறபொத்தானை சொடுக்கியபின் தோன்றிடும் சூழ்நிலை பட்டியில் Edit styles என்றவாறு கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோனறிடும் Graphic styles என்றஉரையாடல் பெட்டியில் text animation தாவியின் திரையை தோன்றசெய்து அதில் effect தேவையான செயலை தெரிவசெய்து கொண்டு   ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் தட்டச்சு செய்த உரையானது நாம் தெரிவுசெய்த விருப்பத்திற்கேற்ப நகர்ந்து செல்வதை காணலாம்

 படம் 76-9

ஓப்பன் ஆஃபிஸ் ட்ரா- 75- ஒருசில தொழில்நுட்ப ஆலோசனைகள்

இந்த ஓப்பன் ஆஃபிஸ் ட்ராவில் உள்ள ஒரு படத்துடன் அதை விளக்குவதற்காக வரையப்படும் உரைப்பெட்டி போதுமானதாக இருக்காது அந்நிலையில்  மேலே கட்டளைபட்டையில்  உள்ள  Insert ==> Object ==> OLE Object==>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக  உடன் Insert OLE Object என்ற உரையாடல் (படம்-75-1) பெட்டி திரையில் தோன்றிடும்

படம்-75-1

 அதில் Object type என்பதன்கீழுள்ள வகைகளில் Open Office.org3.3 Textஎன்றவாறு தெரிவுசெய்து கொண்டு Create new  என்ற வானொலி பொத்தானை தெரிவுசெய்தால் அந்த வரைபடத்துடன்  உரைபெட்டி உள்பொதியப்பட்டுவிடும்  create from file  என்ற வானொலி பொத்தானை தெரிவுசெய்தால் ஏற்கனவே இருக்கும் கோப்பினை இணைப்பு அல்லது உள்பொதிதல் ஆகிய இரண்டில் ஒன்று நாம் தெரிவுசெய்வதற்கேற்ப உருவாகும் முதல் வானொலி பொத்தானை மட்டும் தெரிவுசெய்து கொண்டபின் Ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்  ஓப்பன் ஆஃபிஸின் உரை பதிப்பான் திரையில் தோன்றிடும்

படம்-75-2

 அதில் தேவையான உரையை  உள்ளீடு செய்து கொண்டு இந்த OLE Object  இற்கு வெளியே(படம்-75-2) இடம்சுட்டியை வைத்து சொடுக்குக அதன்பின் மேலே கட்டளைபட்டையில்  உள்ள  Edit => Object => Edit என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக  அல்லது OLE Object இற்குள் இடம்சுட்டியை வைத்து சொடுக்குக உடன் ஓப்பன் ஆஃபிஸின் உரை பதிப்புத்திரை தோன்றிடும்  அதில் தேவையானவாறு நாம் உள்ளீடு செய்த உரையை மாறுதல்கள் செய்து கொள்ளமுடியும்

 படம்-75-3

ஓப்பன் ஆஃபிஸ் ட்ராவில் வரையப்படும் படத்தை zoom  என்ற கருவிபட்டையில் உள்ள தேவையான கருவிகளை தெரிவுசெய்து சொடுக்குதல் அல்லது கீழே நிலைபட்டியின் வலதுபுற பகுதியில் உள்ள நகர்வியை நகர்த்துதல் அல்லது அதிலுள்ள +, – ஆகிய குறியீடுகளை தெரிவுசெய்து சொடுக்குதல் அல்லது காட்சிக்கான அளவை குறிப்பிடும் சதவிகிதத்தின் மீது இடம் சுட்டியை வைத்து வலதுபுறம் சொடுக்கியவுடன் தோன்றிடும் சூழ்நிலைபட்டியில் தேவையான அளவா மாற்றி யமைத்தல் அல்லது    சதவிகித அளவின் மீது இடம் சுட்டியை வைத்து  இருமுறை சொடுக்கியவுடன் தோன்றிடும் zoom & view layout என்ற (படம்-75-3)உரையாடல் பெட்டியை தேவையான சதவிகித அளவு அமைத்தல்  ஆகிய வழிகளில் ஒரு படத்தை நாம் விரும்பும் அளவிற்கு பெரியதாக அல்லது சிறியதாக திரையில் காட்சியாக காணமுடியும்

ஓப்பன் ஆஃபிஸில் வரையப்படும் படத்தை grid points, special snap points and lines, object frames, individual points on objects, or page edges  ஆகியவற்றை கொண்டு மிகச்சரியாக நாம் விரும்பும் இடத்தில் விரும்பும் அளவிற்கு அமைக்கமுடியும்  இந்த செயலையே Snapஎன அழைப்பார்கள்  இந்த Snap செயலியை திரையில்   கொண்டு வருவதற்கு மேலே கட்டளைபட்டையிலுள்ள View ==> Grid ==> Snap to Grid==>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக

அதன்பின்Grid ஐ திரையில் பிரதிபலிக்குமாறு செய்வதற்காக மேலே கட்டளைபட்டையிலுள்ள View ==> Grid ==> Display Grid==>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக  அல்லது இதற்கான உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குவதன்வாயிலாக திரையில் பிரதிபலிக்குமாறு செய்யமுடியும்

மேலும் இந்த Grid ஐ வடிவமைப்பு செய்வதற்காக   மேலே கட்டளைபட்டையிலுள்ள Tools ==> Options ==> OpenOfce.org Draw ==> Grid==>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்து உடன் தோன்றிடும் Options-OpenOfce.org Draw- Grid என்ற (படம்-75-4)உரையாடல் பெட்டியில் தேவையானவாறு சரிசெய்து அமைத்து கொள்க 

படம்-75-4

 Snap objectsஇற்கு Snap ஐ அமைத்தல்

ஒரு Snap lines அல்லது,Snap pointsஆகியவற்றை பயனாளரே வரையமுடியும்  Snap lines என்பது படுக்கை வசமாகவோ அல்லது நெடுக்கை வசமாக விட்டுவிட்டு வரையப்படும் ஒரு கோடாகும்   அவ்வாறே Snap pointsஎன்பது மேலேகூறியவாறு விட்டு விட்டு வரையப்படும் கோட்டின்மீது உள்ள ஏதேனுமொரு புள்ளியின் ஒரு கூட்டல் போன்றகுறியாகும்

சுட்டியால் Snap lines ஒன்றை வரைதல்

படுக்கைவசமான அல்லது நெடுக்கைவசமான Grid -ன்மீது இடம்சுட்டியைவைத்து  சுட்டியின் பொத்தானை அழுத்தி பிடித்துகொண்டு அப்படியே சுட்டியை  கோடு வரையவிரும்பும் பகுதியில் வைத்து ஒரு Snap lines  ஐ வரைந்து கொள்க இவ்வாறாக வரையப்படும் ஒன்றிற்கு மேற்பட்ட   Snap lines களை ஒருங்கினைப்பதற்காகமேலே கட்டளைபட்டையிலுள்ள Insert => Snap point / line=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்து உடன் தோன்றிடும் new snap object என்ற (படம்-75-5) உரையாடல் பெட்டியில் திரையில் position x y ஆகிய இரு அச்சுகளின் அளவை அமைத்து கொண்டு type என்பதன் கீழுள்ள  point, vertical line, horizontal lineஆகியவற்றில்  தேவையானதை தெரிவுசெய்து அமைத்து கொண்டு  ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக 

படம்-75-5

இவ்வாறு  வரையப்பட்ட  snap object ஐ மேலும் திருத்தம் செய்திடுவதற்காக snap object -ன்மீது சூழ்நிலை பட்டியை தோன்றசெய்து அதில் edit , delete,என்றவாறு நாம் விரும்புவதற்கேற்ப தேவையான கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குவதன்வாயிலாக சரிசெய்து அமைத்துகொள்க

இதிலுள்ள page edge என்ற செயலியானது  snap object ஐ ஒரு பக்கத்தின் மூலையில் நகர்த்தி சரிசெய்து அமைத்திட உதவுகின்றது

படம்-75-6

சுற்றெல்லையை object border -ல் இணைத்தல்  முதலில்  Snap to gridஎன்பதை செயலிழக்க செய்தபின்   இந்த செயலியானது செயல்படுவதற்கு ஏதுவான சூழல்ஏற்படும் மேலும் கோடுஒன்று மற்றொன்றோடு இணைப்பதற்கு இந்த செயலி பயன்படுகின்றது இவ்வாறான இணைப்பு புள்ளியானது(படம்-75-6) சுற்றெல்லையில் எங்கு வேண்டுமானாலும் அமையும்

புள்ளியில்object pointsஐஇணைத்தல் இதுவும் முந்தை செயலியை போன்றதுதான்  இவ்வாறான இணைப்பானது நான்குமூலையிலுள்ள புள்ளிகளில் மட்டுமே (படம்-75-6 வலதுபுறம் )இணைப்பு புள்ளி அமையும்

இவ்வாறான செயலியின்போது வழிகாட்டிடும் கோடானது செயலுடனோ அல்லது செயலற்றதாகவோ இருக்கவேண்டும் அதற்காக  மேலே கருவிபட்டையிலுள்ள இதற்கான கருவிபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது மேலே கட்டளைபட்டையிலுள்ள Tools => Options => OpenOfce.org Draw => View => Guides when moving=> ன்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக

பொதுவாக ஒரு வரைபடமானது கடிதத்தாள் அளவுள்ள A4 தாளில் மட்டுமே வரைந்திடுமாறு இயல்புநிலையில் அமைந்திருக்கும் மேலும் இந்த வரைபடமானது ஒன்றிற்கு மேற்பட்ட அடுக்குகளாக அவ்வடுக்குகளை நாம் காண்பதற்கேற்ப ஒளிபுகுவண்ணம் அல்லது ஒளிபுகாமல் அமைக்கமுடியும் ஒரு வரைபடத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட பல அடுக்குகளாக எவ்வாறு அமைக்கமுடியும் என்ற சந்தேகம் அனைவருக்கும் வரும் உதாரணமாக ஒரு வீட்டின் வரைபடம் (படம்-75-7) எனில் இதில் தரைப்பகுதியை மட்டும் குறிப்பது ஒரு அடுக்கு எனப்படும் அவ்வீட்டிற்கான மின்சாரம் வழங்கும் கம்பிசெல்லும்பாதையை குறிப்பிடுவது மற்றொரு அடுக்காகும் இவ்வாறே மற்றவைகளை அவ்வரைபடத்தின் அடுக்குகள் எனப்படும் பொதுவாக ஒப்பன் ஆஃபிஸின் ட்ராவில்ஒரு புதிய படம் உருவாக்குவதற்கான திரையை தோன்றசெய்தால் Layout,controls, Dimension Lines ஆகிய மூன்றடுக்குகள் இயல்புநிலையில் திரையில் தோன்றிஇருக்கும்

படம்-75-7

 இதற்குமேலும் அடுக்குகள் தேவையெனில் மேலே கட்டளைபட்டையிலுள்ள Insert=> Layer=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக. உடன் insert layerஎன்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அதில் visible ,printable,lockedஆகிய பண்பியல்புகளை நாம் விரும்பியவாறு அமைத்திடுக. பின்னர் Layerஎன்ற தாவியின்மீது இடம்சுட்டியைவைத்து சூழ்நிலைபட்டியை தோன்றிடச்செய்க.அதில் delete,rename,modifyஎன்பன போன்ற  கட்டளைகளை நாம்விரும்பியவாறு செயற்படுத்தி கொள்க

ஒப்பன் ஆஃபிஸ் ட்ராவிலும் இம்ப்பிரஸின் படவில்லைகளான Slide 1, Slide 2போன்று ஒன்றிற்கு மேற்பட்ட பக்கங்களை உருவாக்கி அவைகளுக்கு தனித்தனியான பெயர்வழங்கமுடியும்  இந்த வரைபடங்களின் பக்கங்களை ட்ரா திரையின் இடதுபுற பலகத்தில் (படம்-75-8)இம்ப்பிரஸின் படவில்லைகள் போன்றே சிறுசிறு அளவுடையதாக காண்பிக்கும்

படம்-75-8

புதிய பக்கங்களை உருவாக்குவது இருக்கும் வரைபடத்தின் பக்கத்திற்கு பெயரினை மாற்றியமைப்பது நீக்கம் செய்வது போன்ற செயல்களை இதில் சூழ்நிலை பட்டியை தோன்றசெய்தபின் அதிலுள்ள கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குவதன்வாயிலாக செயல்படுத்திகொள்ளமுடியும்

அவ்வாறே ஒரு வரைபடத்தின் இந்த பக்கங்களின் பின்புல தோற்றத்தை view=> master=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தியபின் தோன்றிடும் திரையின் மூலம் அமைத்திடமுடியும்

மேலும் format => page =>background=>  என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தியபின் தோன்றிடும் திரையின் மூலம் வரைபடத்தின் இந்த பக்கங்களின் பின்புல தோற்றத்தை மாற்றிஅமைத்திடமுடியும்

படம்-75-9

 அவ்வாறே இந்த வரைபடத்தின்மீது இடம்சுட்டியைவைத்து ஒரு சூழ்நிலை பட்டியை தோன்றச் செய்து அதில் Page=> slide design=>என்றவாறு செயற்படுத்தியவுடன் தோன்றிடும் slide design என்ற(படம்-75-9) உரையாடல் பெட்டியின்வாயிலாக  ஒருவரைபடத்தின் பின்புலகாட்சியை ஒதுக்கீடுசெய்தல் நிருவகித்தல் போன்ற செயல்களை செய்திடமுடியும்  மேலும் இந்தslide design என்ற உரையாடல் பெட்டியில் உள்ள Load என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் தோன்றிடிடும் Load slide design என்ற உரையாடல் பெட்டியின் திரையில் தயார்நிலையிலுள்ள வடிவமைப்பை  தெரிவுசெய்து உள்ளிணைத்துகொள்ளமுடியும்

ஒரு படத்திலுள்ள குறிப்பிட்ட உறுப்பு படத்தினை ஒன்றிற்கு மேற்பட்டதாக அடுக்குபோன்று உருவாகுவதற்காக குறிப்பிட்ட உருவபடத்தினை தெரிவுசெய்து கொண்டு  மேலே கட்டளை பட்டையிலுள்ள Edit =>duplicate=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றிடும் Duplicate என்ற உரையாடல்(படம்-75-10) பெட்டியில்  number of copies என்பதில் எத்தனை எண்ணிக்கை வேண்டுமென எண்ணிக்கையை அமைத்தபின்  மற்ற விவரங்களை தேவையானவாறு அமைத்துகொண்டுok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-75-10

 அவ்வாறே ஒருவரைபடத்தின் இரு உருவங்களை ஒன்றின்மீது மற்றொன்றை அடுக்கியவாறு காண்பிக்கவும் அவ்வாறு அடுக்கியவாறு காண்பிக்கும்போது எதுமுன்புறம் எதுபின்புறம் என அமைத்திடவும் cross fading என்ற வசதி பயன்படுகின்றது இதனை செயற்படுத்திடுவதற்காக இவ்வாறு அடுக்கிடவிரும்பும்இரு படத்தினை தெரிவுசெய்துகொண்டு மேலே கட்டளை பட்டையிலுள்ள Edit =>cross-fading=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றிடும் cross fading என்ற (படம்-75-11)உரையாடல் பெட்டியில்  increments என்பதில் எத்தனை வேண்டுமென எண்ணிக்கையை அமைத்துகொண்டு  மற்ற விவரங்களை தேவையானவாறு அமைத்துகொண்டுok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-75-11

ஓப்பன்ஆஃபிஸ்ட்ரா-74-நிறுவனகட்டமைப்பின்படம்மற்றும்தொடர்நிலைவரைபடம்வரைதல்

1 நிறுவனகட்டமைப்பின்படம்வரைதல்(Drawing an organization chart)

ஓப்பன் ஆஃபிஸ் ட்ராவில்  நிறுவனகட்டமைப்பின் படம் வரைவதற்காகவென  தனியாக கட்டளை பட்டை இல்லை யென்றாலும்  இதிலுள்ள கனச்செவ்வகம் இணைப்பான்கள்(connectors) ஆகிவற்றை கொண்டு மிக எளிதாக நம்மால்  ஒரு நிறுவனகட்டமைப்பின் படத்தை வரையமுடியும் பின்னர் வண்ணத்தின் பிரதிபலிப்பு அளவைகொண்டு இந்நிறுவனகட்டமைப்பின் படிநிலையை மேலிருந்து கீழாக காண்பிக்கமுடியும் (படம்-74-5)  இந்த வண்ணபிரதிபலிப்பானது உரைக்கான வண்ணமும் பின்புலவண்ணமும்  எதிர்வினையாக  ஒன்றுக்கொன்று பிரதிபலிப்பின் தன்மையை பாதிக்காதவாறும் இதிலுள்ள எழுத்துகளை நம்மால் எளிதாக படித்தறியக் கூடியவாறும்  தெரிவுசெய்து கொள்வது நல்லது என பரிந்துரைக்க படுகின்றது

இந்த நிறுவனகட்டமைப்பின் படம் வரைவதற்கு முன்பு முதலில் ஒருபடம் வரைவதற்கான அமைவு பக்கம் (setup page)அல்லது வரைவு பக்கத்தை  பலஅடுக்கு நிறுவனகட்டமைப்பு ,பொறுப்பு வழிகள் ,அதனதன்  பெட்டிகள் ஆகியவற்றை படம் வரைவதற்காக பயன்படுத்தி கொள்வதற்கான வரியை ஒடித்தலை(line snap) (படம்-74-1) கொண்டு தயார்செய்துகொள்ள வேண்டும்

படம்-74-1

ஒட்டுமொத்த படத்தின் அளவானது அதன் உள்ளே வரையப்படும் பெட்டிகளின் எண்ணிக்கை, அவைகளின் அளவு ஆகியவற்றிற்கு ஏற்ப அமைத்து கொள்க. உள்ளமையும் பெட்டிகளின் மிகச்சரியான அளவு அவைகளின் அமைவிடம் ஆகியவற்றை நாம் பின்னர் தீர்மாணித்து கொள்வோம். இந்நிறுவனகட்டமைப்பு படத்தின் படிநிலையின் ஒருநிலையில் ஒரு பெட்டியை மட்டும் வரைவது எளிதான செயலாகும் பின்னர் அதேநிலையில் ஒன்றிற்கு மேற்பட்ட பெட்டியை நகலெடுத்து ஒட்டுதல்    தேவையான இடத்தில் நகர்த்தி அமைத்தல் போன்ற செயல்களை கொண்டு நம்மால் மேலும் கூடுதலான பெட்டிகளை எளிதாக வரைந்து கொள்ளமுடியும்

 படம்-74-2

 அவ்வாறு கூடுதலான பெட்டிகளை வரைவதற்காக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பெட்டிகளை தெரிவுசெய்துகொண்டு மேலே கட்டளைபட்டையிலுள்ள Edit=>Duplicate=>என்றவாறு கட்டளைகளை செயல்படுத்துக உடன் தோன்றிடும் Duplicate என்ற (படம்-74-2) உரையாடல் பெட்டியிலுள்ள Number of copies என்பதன் எண்ணிக்கையை கொண்டு எத்தனை பெட்டிகள் அமைக்கவேண்டும் என்றும், X ,y அச்சுகளின் அளவுகள் அதன் இடஅமைவுகளையும்  நீளஅகல அளவு அப்பெட்டிகளின் அளவையும் தீர்மாணிக்கின்றன அவைகளை நாம்விரும்பியவாறு அமைத்து ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கினால் படம்-74-3-ல் உள்ளவாறு அமையும்

படம்-74-3

பிறகு மேலே கட்டளை பட்டையிலுள்ளoptionsஎன்ற  உரைபெட்டி வரைவதற்கான கருவியை தெரிவுசெய்து இருமுறை சொடுக்குவதன் வாயிலாக அல்லது விசைப்பலகையின் செயலி விசைகளில் உள்ள F2  என்ற செயலி விசையை அழுத்துவதன்மூலம் இந்த பெட்டிகளில் உரைபெட்டியை உருவாகுமாறுசெய்து அந்நிலைப்பெட்டிகளின் பெயர்களை தட்டச்சு செய்துகொள்க   பின்னர் நாம் தட்டச்சு செய்த உரையின் அளவிற்கேற்ப பெட்டியின் அளவை சரிசெய்துகொள்க அல்லது பெட்டியின் அளவிற்கேற்ப சுட்டியின் துனையுடன் அவ்வுரையை சரிசெய்து கொண்டு இவ்வெழுத்துகளுக்கான சரியான வண்ணத்தையும் சரிசெய்து அமைத்து கொள்க இந்த உரைபெட்டிக்கு பதிலாக இயக்கநேரஉரைச்சட்டங்கள்(dynamic text frames) (படம்-74-4)தானாகவே வரியானதுமடங்கி அமைதல் ,சுற்றெல்லை, பின்புலவண்ணம் ஆகியவற்றை கொண்டு உரையை தட்டச்சு செய்து அமைத்துகொள்வதற்காக பயன்படுத்தி கொள்க.

 படம்-74-4

பின்  மேலே கருவிபட்டையிலுள்ள இணைப்பான்கள்(connectors)என்ற கருவியை கொண்டு இந்த பெட்டிகளை இணைத்து ஒருமுழுமையான நிறுவனகட்டமைப்பின் படத்தினை(படம்-74-5) அமைத்துகொள்க

 படம்-74-5

தொடர்நிலைவரைபடம்வரைதல்(Drawing a flow diagram)

இந்த தொடர்நிலைவரைபடம் வரைவதற்காக மேலே  முக்கிய கருவிபட்டையிலுள்ள இதற்கான flowchart என்ற உருவகருவியை தெரிவசெய்து  சொடுக்கியவுடன்  இந்த பணிக்காக மட்டுமென தனியான கருவிபட்டை யொன்று திரையில் தோன்றிவிடும்  பின் இதிலுள்ள தேவையான குறியீடுள்ள கருவிகளை தெரிவுசெய்து சொடுக்கி ஒரு நிறுவனகட்டமைப்பின் படம் வரைவதை போன்றே  இதனை நம்மால் சுலபமாக  வரைந்து கொள்ளமுடியும்

 படம்-74-6

 பின் மாறுதல் செய்யவிரும்பும் குறிப்பிட்ட பெட்டியில் இடம்சுட்டியை வைத்துகொண்டு மேலே கட்டளைபட்டையிலுள்ள  modify=>alignment=> centered=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குவதன்வாயிலாக சரிசெய்து அமைத்து கொள்க

அதன்பின் அவைகளில் உரை ,அவைகளுக்கான  வண்ணம் ஆகியவற்றை உள்ளீடு செய்து கொள்க அவ்வாறே இணைப்பான்களுக்கு கூட உரை ,அவைகளுக்கான  வண்ணம் ஆகியவற்றை உள்ளீடு செய்து கொள்ளமுடியும்

இந்த தொடர்நிலைவரைபடத்தில் பெட்டிகளை இணைப்பதற்காக இணைப்பு புள்ளி(Glue points) மற்றும் இணைப்பான்கள் (connectors) ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளமுடியும்

இதில்  இணைப்பான்கள்(connectors)என்பது  கோடு அல்லது அம்புக்குறி கொண்டு இருபெட்டிகளை இணைப்பதாகும்   கருவிபட்டையிலுள்ள இதற்கான உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் connectors என்ற கருவிபட்டை திரையில் தோன்றிடும் அதிலுள்ள தேவையான உருவகருவியை தெரிவுசெய்து சொடுக்கி இருபெட்டிகளுக்கிடையே தேவையான இணைப்புகளை உருவாக்கிகொள்க

அவ்வாறே இணைப்பு புள்ளி(Glue points)க்கான உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன்  இணைப்பு புள்ளி (Glue points)என்ற கருவிபட்டை திரையில் தோன்றிடும் அதிலுள்ள தேவையான உருவகருவியை  தெரிவுசெய்து சொடுக்கி இருபெட்டிகளுக்கிடையே தேவையான  இணைப்புகளை உருவாக்கிகொள்க தேவையெனில் மேலே கட்டளை பட்டையிலுள்ள  Edit => Glue Points=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குவதன்வாயிலாக அவ்விணைப்பை  சரிசெய்து அமைத்து கொள்க

இணைப்பான்களில்(connectors) எழுத்துகளை உள்ளீடுசெய்வதற்காக அவ்விணைப்பான்களை  இடம்சுட்டியால் தெரிவுசெய்து கொண்டு சுட்டியின் பொத்தானை இருமுறை சொடுக்குக உடன் அவ்விணைப்பானிற்குள் இடம்சுட்டி சென்றுபிரதிபலிக்கும் அதனுடன் கூடவே உரைவடிவமைப்பு கருவிபட்டையானது(text formatting tool bar)  திரையில் பிரதிபலிக்கும்

தேவையான உரையை உள்ளீடுசெய்துபின் அவ்வுரையை தெரிவுசெய்துகொண்டு சுட்டியின் பொத்தானை இருமுறை சொடுக்குக  அல்லது இணைப்பானை தெரிவுசெய்து சொடுக்கியபின் மேலே கட்டளைபட்டையிலுள்ள Format => Text=>என்றவாறுகட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Text என்ற உரையாடல் பெட்டியொன்று(படம்-74-7) திரையில் தோன்றிடும்

 படம்-74-7

அதில் உரையை தேவையானவாறு மாறுதல்  செய்து ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

இந்த இணைப்புக்கோடானது வளைவாகவோ அல்லது சாய்வாகவோ இருந்தால்  அதற்குள் உரையை எவ்வாறு மிகச்சரியாக அமரச்செய்வது என இப்போது காண்போம்

 படம்-74-8

இதற்காக முதலில் மேலே கட்டளைபட்டையிலுள்ள Tools => Customize=>என்றவாறுகட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Customize என்ற உரையாடல் பெட்டியொன்று(படம்-74-8) திரையில் தோன்றிடும் அதன் Tool bar என்ற தாவியின் திரையில்   Tool bar என்பதற்கருகில் இருக்கும்  கீழிறங்கு பட்டியில் இருந்து Drawing என்பதை தெரிவுசெய்துகொண்டு Addஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும்   Add commands என்ற (படம்-74-8)உரையாடல் பெட்டியின் இடதுபுற பட்டியலிலிருந்து  Format  என்பதையும் பின்னர் வலதுபுற பட்டியலில் Font work என்பதையும் தெரிவுசெய்து கொண்டு   Addஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக   அதன்பின்னர்closeஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இந்த உரையாடல் பெட்டியை மூடிவிடுக

இந்தCustomize என்ற உரையாடல் பெட்டியில்  Toolbar உள்ளடக்கத்தின் கீழ் உள்ள பட்டியலிலிருந்து Fontwork என்ற உருவபொத்தானை பிடித்து இழுத்துசென்று தேவையான இடத்தில் விட்டிடுக அதன்பின் okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

பிறகு  இணைப்பானில் உள்ளீடுசெய்த உரையை தெரிவுசெய்துகொண்டுFontwork என்ற உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும்  Font work என்ற (படம்-74-9)உரையாடல் பெட்டியிலுள்ள  Rotateஎன்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இணைப்பு கோட்டின் சாய்விற்கு ஏற்ப எழுத்துகளை சுழற்றி சரிசெய்து அமைத்து கொள்க

 படம்-74-9

ஓப்பன் ஆஃபிஸ் ட்ரா -73-முப்பரிமான படங்களை கையாளுதல்-தொடர்ச்சி

   3D Efects – Textures ஒரு இழைமம்( Textures) என்பது பரவு வரைவியல்(raster graph) ஆகும் இது ஒரு வரைபொருளிற்காக அவ்வரைபொருளின் பண்பியல்பாக பயன்படுத்தி கொள்ளபடுகின்றது ஒவ்வொரு வரைபொருளின் முப்பரிமான காட்சியும் தன்னுடைய சொந்த இழைமத்தை( Textures)  கொண்டதாகும் ஒரு இருபரிமான வரைபொருளை பயன்படுத்துவதை போன்றே Format => Area => Bitmaps =>அல்லது வரைபொருளின் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் தோன்றிடும் சூழ்நிலை பட்டியில் Area => Bitmaps =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி ஒரு முப்பரிமான வரைபொருளிற்காக பரவு வரைவியலை ஒரு இழைமமாக  அமைத்து பயன்படுத்தமுடியும்

உடன் தோன்றிடும்  3D Efects என்ற உரையாடல் பெட்டியின்  Textures என்ற தாவியின் பொத்தானை (நான்காவதாக உள்ளது) தெரிவுசெய்து சொடுக்கி  Textures திரையை தோன்றசெய்க அதில் Typeஎன்பதற்கருகிலுள்ள கருப்பு வெள்ளை அல்லது வண்ண பொத்தான்கள் ஆகிய இரண்டில் ஒன்றை தெரிவுசெய்து சொடுக்குக உடன் அதற்கேற்ப செந்தர வண்ணம் (படத்தின் இடதுபுறம்a),Textures  color(படத்தின் இடதுபுறம்b), Textures கருப்பு வெள்ளை (படத்தின் இடதுபுறம்c) படம்-73-1 -ல் உள்ளவாறு அமையும்  அதில் light and shadows இல்லாமல் (படத்தின் வலதுபுறம்a) , light and shadows சேர்ந்தது (படத்தின் வலதுபுறம்b) நாம் தெரிவுசெய்வதற்கேற்ப அமைகின்றது

படம்-73-1

அதே 3D Efects – Textures  என்ற உரையாடல் பெட்டியின் Projection X அல்லது Y ஆகிய இரண்டிலும் உள்ள மும்மூன்று பொத்தான்களை பயன்படுத்தி  Textures  என்ற உருவின் இடஅமைவை சரிசெய்து அமைத்து கொள்க இவைகளின் கலவைகளாக செயற்படுத்தி ஒரு Z அச்சில் சுழலும் உருளையின் தோற்றம் எவ்வாறு அமையும் என படம்73-2-ல் காட்டபட்டுள்ளன

 

படம்-73-2

இதில் ஏற்படும் தவறுகளை சரிசெய்து வடிகட்டி அமைப்பதற்கு இதே3D Efects – Textures  என்ற உரையாடல் பெட்டியில் உள்ள filterஎன்ற பொத்தான் பயன்படுகின்றது

3D Efects – Material

3D Efects என்ற உரையாடல் பெட்டியின்  Material என்ற தாவியின் பொத்தானை (ஐந்தாவதாக உள்ளது) தெரிவுசெய்து சொடுக்கி  Material என்ற திரையைபடம்-73-3 தோன்றசெய்க இது ஒரு பொருளிற்கான முப்பரிமான தோற்றத்தை அமைக்க பயன்படுகின்றது படம்-73-3-ன் கீழ்பகுதியில் Metal, Gold, Chrome, Plastic and Woodஆகிய பொருட்களின் முப்பரிமானம் தோற்றமாகும்

 படம்-73-3

3D Efects  Material என்ற தாவியின் திரையில்  Material  என்பதன் கீழுள்ள மூன்றுவகை வாய்ப்புகளையும் ,Specularஎன்பதன் கீழுள்ள இருவகை வாய்ப்புகளையும் பயன்படுத்தி ஒரு பொருளிற்கான முப்பரிமான தோற்றத்தினை நாம்விரும்பியவாறு மாற்றியமைத்துகொள்ளமுடியும்.

ஒரு 3D உருவிற்கான 3D அமைவு வரைபொருளை கையாளுவதற்கு மாறாக வேறுவகையில் அதே 3D உருவை முப்பரிமான காட்சிக்காக கையாளவேண்டியுள்ளது இந்த 3D உருவின் முப்பரிமான காட்சியை கையாள3D Efects என்ற உரையாடல் பெட்டி பயன்படாது அதற்கு பதிலாக 3D-Settingsஎன்ற(படம்-73-4) கருவிபட்டை பயன்படுகின்றது

படம்-73-4

இந்த கருவி பட்டையை பயன்படுத்தி ஒரு முப்பரிமான உருவிற்கான extrusion depth andperspective, lighting and material properties ஆகியவற்றை அமைத்திடமுடியும்

எடுத்துகாட்டு முதலில் ஓப்பன் ஆஃபிஸ் ட்ராவின் கருவிபட்டையிலுள்ள T என்ற கருவியை பயன்படுத்திஏதேனும் எழுத்துகளை தட்டச்சு செய்து கொள்க பின்னர் மேலே கட்டளை பட்டையிலுள்ள modify=> convert=>To Bitmap =>  modify=> என்றும் convert=>To 3D Rotation object => என்றும் கட்டளைகளை செயற்படுத்துக அதன்பின் இந்த வரைபொருளின்மீது இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலைபட்டியில் 3D Effects என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தோன்றிடும்   3D Effects என்ற உரையாடல் பெட்டியின் ஐந்தாவதாக உள்ளMaterial என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி   3D Effects என்ற உரையாடல் பெட்டியின்Material  என்ற திரையை தோன்றசெய்து  தேவையானவாறு அதிலுள்ள பொத்தான்களை சொடுக்கி அமைத்துகொண்டு இறுதியாக இதே உரையாடல் பெட்டியின் மேலே வலதுபுறமூலையில் உள்ளassign என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் உருவாக்கிய முப்பரிமான எழுத்துருவானது படம் -73-5-ல் உள்ளவாறு அமையும் .இவ்வாறே மற்ற முப்பரிமான தோற்றங்களை அமைத்துகொள்க.

படம்-73-5

ஓப்பன் ஆஃபிஸ் ட்ரா -72-முப்பரிமான படங்களை கையாளுதல்-தொடர்ச்சி

முப்பரிமான உருவங்களை(3D bodies) சுழற்றியமைத்தல்

ஒரு இருபரிமான படத்தை சுழற்றியமைப்பதை போன்றே அதே கட்டளைகள், வழிமுறைகளை பின்பற்றி ஒரு முப்பரிமான உருவத்தில் எங்கு வேண்டுமானாலும் இடம் சுட்டியை வைத்து சுட்டியின்பொத்தானை அழுத்திபிடித்து கொண்டு இந்த முப்பரிமான படத்தின் X,Y ஆகிய அச்சுகளை சுழற்றி அமைக்கமுடியும் .கூடுதலாக மூன்றாவது பரிமான சுழற்றுதலுக்கானZ என்ற அச்சினை சுழற்றுவதற்காக படம்-72-1-உள்ளவாறு தோன்றிடும் விளிம்பில் உள்ள புள்ளிகளில் இடம் சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை அழுத்திபிடித்து கொண்டுசுழற்றி அமைக்கமுடியும் அதன் மையத்தில் ஒருங்கிணையும்  புள்ளியை (intersection point)வைத்தே இம்மூன்று அச்சுகளின் இருப்பை நம்மால்அறிந்து கொள்ளமுடியும்

படம்-72-1

முப்பரிமானவடிவங்களை(3D Shapes)சுழற்றியமைத்தல்

முப்பரிமான வடிவங்களையும் முன்பு கூறியவாறே  சுழற்றிஅமைக்கமுடியும் மேலும் மேலே கட்டளை பட்டையிலுள்ள Format => Position and Size => Rotation =>என்றவாறு கட்டளைகளை செயல்படுத்துதல் அல்லது F4என்ற செயலி விசையை அழுத்துதல் ஆகியவற்றின் மூலம் இதனை சுழற்றி அமைக்கமுடியும் அதுமட்டுமல்லாமல் இந்த முப்பரிமான வடிவங்களுக்கென தனியான கருவிபட்டியை (படம்-72-2) பயன்படுத்தியும் சுழற்றிஅமைக்கமுடியும்

படம்-72-2

முப்பரிமான உருவங்களுக்கான(3D bodiesமுப்பரிமான அமைப்பு(3D Settings)

இதனை அமைப்பதற்கென  3D Efects என்ற (படம்-72-3) உரையாடல் பெட்டிஉள்ளது  மேலே கட்டளை பட்டையிலுள்ள Customize Toolbar => Add => Category Options => 3D Efects =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவதன் வாயிலாக இதனை திரையில் பிரதிபலி்க்கசெய்யலாம்  மற்ற உரையாடல் பெட்டிபோன்று திரையில் இதனை நிலையாக இருக்குமாறு வைத்து தேவையான செயலை அதற்கான தாவிபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குவதன்மூலம் செயல்படுத்திகொள்ளமுடியும் மேலும் அதன்மேல்பகுதியிலிருக்கும்

  என்ற பொத்தானை செயல்படுத்துவதன்மூலம் இதனை முப்பரிமானசெயலில் இருக்குமாறும் அதே பொத்தானை பணிமுடிந்தபின் கண்டிப்பாக சொடுக்கி செயலற்றதாக(Deactive) செய்தபின் வெளியேறுமாறு பரிந்துரைக்கபடுகின்றது அதன் கீழ்பகுதியில்    உள்ள

          ஆகிய மூன்று பொத்தான்கள்  மிகமுக்கிய பங்குவகிக்கின்றன

இதனுடைய முதல் பொத்தான் ஒரு இருபரிமான படத்தை extrusion bodyஆகஉருமாற்றிடவும் இரண்டாவது பொத்தான்  சுழலும் உருவங்களாக (rotation body)உருமாற்றிடவும் மூன்றாவது பொத்தான்central projection , perspective projection   ஆகியவைகளுக்கிடையே மாறுவதற்கும் பயன் படுகின்றன முதலிரண்டு பொத்தான்களை தெரிவுசெய்து சொடுக்குவதற்குபதிலாக மேலே கட்டளைபட்டையிலுள்ள Modify =>Convert  => To 3D / To 3D Rotation Object.=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி அதே செயலை செய்யமுடியும்

3D Effects – Geometry

படம்-72-3

3D Effects உரையாடல் பெட்டியின் முதல்  தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் படம்-72-3-ல் உள்ளவாறு இந்த  உரையாடல் பெட்டியின் தோற்றம் அமைந்திடும்

படம்-72-4

ஒரு சாதாரண இருபரிமான வட்டம் முப்பரிமான உருவமாக முந்தைய தொடரான ஓப்பன் ஆஃபிஸ் ட்ரா -71 என்ற பகுதியில் பார்த்தவாறு உருவாக்கியபின் இந்த  3D Effects உரையாடல் பெட்டியின் Scaled depthஐ     பயன்படுத்தி 10% ,30% ,50% (truncated cone), 0%ஆகியஉருளை உருவமாக உருமாற்றியபின் (படம்-72-4) இதே கட்டளை பெட்டியின் மேலே வலதுபுறமூலையில் உள்ள Assign

என்ற       உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்தி நாம் செய்த மாறுதலை சேமித்துகொள்க

மேலும் இந்த  3D Effects உரையாடல் பெட்டியின் rotation angles ஐ பயன்படுத்தி சுழலும்  கோணம் 360° க்கு குறைவாக  அமைத்துகொள்க  அதுமட்டுமின்றி இதிலுள்ள Horizontal , Verticalஆகியவற்றின் அளவுகள் படத்தின் துல்லியமாக அமைத்திட பயன்படுகின்றன இதன் அளவை அதிகமாக வைத்து அமைத்தால் முப்பரிமான படத்தை உருவாக்குவதற்காக கணினி அதிக நேரம் எடுத்துகொள்ளும்

இந்த  உரையாடல் பெட்டியின் Normalஎன்பதின் கீழேமூன்றாவதாக உள்ள  Double-Sided     என்ற      உருவபொத்தானை பயன்படுத்தி படம்-72-5-ல்உள்ளவாறு ஒரு அரைஉருளையை முழுஉருளையாக அமைத்திடமுடியும்

 படம்-72-5

இதே Normalஎன்பதின் கீழ்உள்ள உருவபொத்தான்களை பயன்படுத்தி ஒரு முப்பரிமான படத்திற்கு தேவையான  colors, textures , lighting ஆகியவற்றை நாம் விரும்பிவாறு மாற்றியமைக்கமுடியும்

3D Effects – Shading

ஒருமுப்பரிமான உருவத்திற்கு இந்த 3D Effects உரையாடல் பெட்டியின் lighting  ஐ பயன்படுத்தி Flat, Phong ,Gouraud ஆகிய மூன்று வழிமுறைகளில் மாற்றியமைத்து தேவையான நிழலுருவருமாறு உருவாக்குமுடியும் அதற்காக இந்த 3D Effects உரையாடல் பெட்டியின் மேலே இடதுபுறம் இரண்டாவதாக உள்ளShading என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் படம்-72-6 -ல் உள்ளவாறு இந்த உரையாடல் பெட்டி தோன்றிடும்

படம்-72-6

பிறகு இதிலுள்ள shadow என்றஉருவபொத்தானை  தெரிவுசெய்து சொடுக்கியபின் surface angles  என்பதில் நாம் விரும்பும் கோணஅளவை அமைப்பதற்கேற்ப ஒரு கோளத்தின் நிழலுரு படம்72-7-ன் மேல்பகுதியில் உள்ளவாறு அமைகின்றது

 படம்-72-7

அவ்வாறே camera என்பதன் கீழுள்ள Distance ,Focal length ஆகியவற்றை வெவ்வேறுவகையில் camera settings அட்டவணை -72-1-ல் உள்ளவாறு அமைப்பதற்கேற்ப ஒரு கனசதுரத்தின் நிழலுருவானது    படம் 72-7-ன் கீழ்பகுதியிலுள்ளவாறு அமைகின்றது

camera settings அட்டவணை-72-1

a b c d
Distance 0.81 cm 3.81 cm 0.81 cm 0.81 cm
Focal length 10 cm 10 cm 5 cm 15 cm

3D Effects – Illumination 

இந்த 3D Effects உரையாடல் பெட்டியின் மேலே மூன்றாவதாகஉள்ள Illumination என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் படம்-72-8 -ல் உள்ளவாறு இந்த உரையாடல் பெட்டி தோன்றிடும்  அதிலுள்ள light source , Ambient light ஆகியவற்றை நாம் விரும்பியவாறு மாற்றியமைப்பதன் மூலம் ஒரு முப்பரிமான உருவின் தோற்றத்தை  மாற்றியமைக்கமுடியும்   அவ்வாறு மாற்றியமைக்கபட்ட ஒருவளையத்தின்  தோற்றம் படம் 72-8-ன் வலதுபுறம் உள்ளவாறு அமைகின்றது

படம்-72-8

ஓப்பன் ஆஃபிஸ் ட்ரா தொடர் -பகுதி-71-முப்பரிமான உருவங்களை கையாளுதல்

பொதுவாக நாம் திரையில் காணும் பெரும்பாலான படங்கள்   இருபரிமான படங்களாகத்தான் இருக்கின்றன அவ்வாறானதொரு இருபரிமான படத்தை முப்பரிமான படமாக உருமாற்றம் செய்வதற்கு ஓப்பன் ஆஃபிஸ் ட்ரா பயன்படுகின்றது இந்த ஓப்பன் ஆஃபிஸ் ட்ரா ஆனது எம்எஸ் பெயின்ட் போன்று படம் வரையும் மென்பொருட்களின் செயலிகளை அல்லது படங்களை பதிப்பித்தல் செய்யும் செயல்களுக்கு ஏற்றவாறு அமையவில்லை என்றாலும்  நல்ல அழகான முப்பரிமான படங்களை, வரைபடங்களை உருவாக்குவதிலும் கையாளுவதிலும்  மிகுந்த திறன்கொண்டதாக உள்ளது அவ்வாறான முப்பரிமான படங்களை இதிலுள்ள முப்பரிமான உருவம்(3D bodies), முப்பரிமானவடிவங்கள்(3D Shapes))  ஆகிய இருவகையான வாய்ப்புகளில் ஒன்றின் மூலம் நாம் முப்பரிமான படங்களை வரைவதற்கு உதவுகின்றது அதுமட்டுமின்றி இவ்விரண்டில் நாம் தெரிவுசெய்யும் வாய்ப்பிற்கேற்ப மேலும் 1.சுழற்சி(rotation), 2.வெளிச்சம்(illumination), 3.முன்னோக்கு(Perspective) என்பன போன்ற ஏராளமான வழிகளில் ஒரு முப்பரிமான படத்தை பதிப்பித்தல் செய்ய அனுமதிக்கின்றது

1.  முப்பரிமான உருவங்களின்(3D bodies) வாயிலாக ஒருமுப்பரிமான படத்தை உருவாக்குதல்

ஓப்பன் ஆபிஸ் ட்ராவில் உள்ள 1.பிதிர்வு(Extrusion), 2.உருவசுழற்சி(body rotation), 3.தயார்நிலையிலுள்ளபொருட்களை பயன்படுத்துதல்(using ready made objects) ஆகிய மூன்று வழிமுறைகளில் ஒன்றை பயன்படுத்தி ஒருமுப்பரிமான படத்தை உருவாக்கமுடியும்  பொதுவாக இந்த மூன்று வழிமுறைகளை மாறுபாடு1(Variation 1) ,மாறுபாடு2(Variation 2), மாறுபாடு3(Variation 3) என அழைப்பார்கள்

 மாறுபாடு1(Variation 1). பிதிர்வு(Extrusion)என்ற வழிமுறையில் ஒரு முப்பரிமான படத்தை உருவாக்குதல்

இந்த வழிமுறையின்மூலம் முதலில் திரையின் மேலே வரைபட கருவிபட்டியிலுள்ள சதுரம் /செவ்வகம் ,வட்டம் /நீள்வட்டம் அல்லது உரைபெட்டி ஆகிய பொதுவான வரைபடங்களின் வரைபொருளை வரைவதற்காக பயன்படும் உருவபொத்தான்களில் ஒன்றை  தெரிவுசெய்து  ஏதேனுமொரு இருபரிமான படம்ஒன்றினை வரைந்துகொள்க

பிறகு மேலே கட்டளை பட்டையிலுள்ள Modify => Convert => To 3D => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக அல்லது நாம் வரைந்த படத்தின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் தோன்றிடும் சூழ்நிலைபட்டியில்  Convert= > To 3D=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக, அல்லது திரையின் மேலே கருவிபட்டியிலுள்ள இருபரிமான படத்தி(2D)லிருந்து முப்பரிமான படமாக(3D) உருமாற்ற பயன்படும்     என்றவாறு  உள்ள உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இந்த உருவபொத்தான்  திரையில்  தோன்றவில்லையெனில் வரைபடகருவிபட்டியின் வலதுபுறம் ஓரமாக உள்ள Visible  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் சம்பந்தபட்ட உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

உடன் இந்த இருபரிமான படமானது முப்பரிமான (படம்-71-1) படமாக  இயல்புநிலை அளவிற்கு உருமாற்றமாகும் இந்த செயலையே பிதிர்வு(Extrusion) என்பர்

படம்-71-1

மாறுபாடு2(Variation 2)-உருவசுழற்சி(body rotation) என்ற வழிமுறையில் ஒருமுப்பரிமான படத்தை உருவாக்குதல்

இந்த வழிமுறையில் பொதுவான வரைபெருளை மேலும் சுழற்சி வழிமுறை1 (rotation1),சுழற்சி வழிமுறை2(rotation2) ஆகிய இரண்டு உள்வழிமுறைகளில்  ஒரு முப்பரிமான படத்தை உருவாக்கமுடியும்

 சுழற்சி வழிமுறை1(rotation1) இந்த வழிமுறையில் மேலே வரைபட கருவி பட்டையிலுள்ள இதற்கான    என்றவாறு உள்ள உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இந்தஉருவபொத்தான் கருவிபட்டியில் இல்லையெனில்  Modify => Convert= > To 3D Rotation object => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக உடன் இந்த சுழற்சி வழிமுறையில்  அச்சானது பச்சைவண்ண கைப்பிடியின் வழியாக இணைந்துள்ள தெரிவுசெய்யபட்ட செவ்வகமும் சுழன்று(படம்-71-2) அமையும்

படம்-71-2

சுழற்சி வழிமுறை2(rotation2) திரையின் மேலே வரைபடகருவிபட்டையில்

என்றவாறு உள்ள உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி கீழிறங்கு பட்டியலை  தோன்றசெய்க. அல்லது இதே பட்டியலை மேலே கட்டளை பட்டையிலுள்ள View => Tool bars= > Mode=>என்றவாறு கட்டளைகளை தெரிசெய்து சொடுக்குவதன் வாயிலாகவும் அனுகமுடியும்  இந்த பட்டியலில் உள்ள  இரண்டு வெள்ளையான முடிவுபுள்ளிகள் வாயிலாக இம்முடிவு புள்ளிகளில் ஒன்றினை தெரிவுசெய்து சொடுக்குதல் அல்லது முடிவு புள்ளிகள் இரண்டையும் (படம்-71-3)தெரிவுசெய்து சொடுக்குதல் ஆகியவற்றின் மூலம் படத்தின் அச்சினை சுழற்றிஅமைக்கமுடியும்

படம்-71-3

 மாறுபாடு3(Variation 3)– தயார்நிலையில் உள்ளபொருட்களை பயன்படுத்துதல்(using ready made objects)என்ற வழிமுறையில் ஒருமுப்பரிமான படத்தை உருவாக்குதல்

தயார்நிலையில் இருக்கும் முப்பரிமான வரைபொருட்களுள்ள கருவிபட்டி / கீழிறங்கு பட்டியலை(படம்-71-4) பயன்படுத்தி  ஏற்கனவே தயார்நிலையில் உள்ள முப்பரிமான உருவங்களை வரைந்து கொள்ளமுடியும் இந்த கருவிபட்டி / கீழிறங்கு பட்டியலை திரையில் தோன்றிடசெய்வதற்கு மேலே கட்டளைபட்டையிலுள்ள View= > Tool bars => 3D Objects=>  என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-71-4

  உடன் கருவிபட்டையில் கீழிறங்கு பட்டியலாக அல்லது     ஒரு மிதக்கும் கருவிபட்டையாக திரையில்(படம்-71-4) தோன்றிடும்  இதில் ஒரு உருவத்தை தெரிவுசெய்து சொடுக்கியபின் முப்பரிமான படத்தினை வரையும் திரையில் இடம்சுட்டியைவைத்து shift விசையை அழுத்தி பிடித்துகொண்டு சுட்டியை திரும்பவும் ஆரம்ப புள்ளிவரும்வரை பிடித்து இழுத்துசென்று விடுக உடன் நாம் விரும்பிய தெரிவுசெய்த முப்பரிமான படம் திரையில் தோன்றிடும்

இந்த மாறுபாடு1(Variation 1)முதல் 3 வரை உருவாக்கிய படமானது ஒரு முப்பரிமான காட்சியாக திரையில் தோன்றிடும் உண்மையில் குழுவான பொருட்கள் சேர்ந்ததே இந்த முப்பரிமான காட்சியாகும் இந்த முப்பரிமான படத்தை தெரிவு செய்து சொடுக்கியவுடன்  திரையின் கீழே நிலைபட்டையில் முப்பரிமான காட்சி தெரிவுசெய்யபட்டுள்ளது(3D scene selected) என காண்பிக்கும்  மேலே கூறிய மூன்று வழிமுறைகளில் உருவாக்கபட்ட முப்பரிமான உருவ படமானது ஒற்றையான உறுப்பிலிருந்து முப்பரிமான உருவமாக கட்டமைக்கபட்டதாகும்

மேலே கருவிபட்டையிலுள்ள Modify => Enter group=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குவது அல்லது சூழ்நிலை பட்டியலை உருவாக்குவதன் வாயிலாக தெரிவுசெய்யபட்ட கோளம்(Sphere selected)அல்லது தெரிவு செய்ய பட்ட பிதிர்வுபொருட்கள்(Extrusion object selected)என்றவாறு உள்ள இந்த குழுவின் தனிப்பட்ட உறுப்புகளை அனுகமுடியும்

2. முப்பரிமானவடிவங்கள்(3D Shapes)வாயிலாக ஒருமுப்பரிமான படத்தை உருவாக்குதல்

ஓப்பன்ஆஃபிஸ் பதிப்பு 2.0 வெளியிடும்வரை இந்த முப்பரிமான வடிவங்களின்(3D Shapes) வாயிலாக மட்டுமே ஒருமுப்பரிமான படத்தை உருவாக்க முடியும் என்ற நிலை இருந்தது ஆனால் நடப்பிலுள்ள பிதிர்வு(Extrusion) –இன் சிறப்பு வழிமுறையே இந்த வடிவங்கள்(Shapes) ஆகும்

 மாறுபாடு4(Variation 4): வடிவங்களின் பிதிர்வு(Extrusion of shapes) வாயிலாக ஒருமுப்பரிமான படத்தை உருவாக்குதல்

உருளை ,கனசதுரம் போன்ற அடிப்படை இருபரிமான வரைபடத்தை அடிப்படை வடிவங்களின்(basic shapes) கருவிபட்டையை (படம்-71-5)பயன்படுத்தி வரையமுடியும்  ஆனால் இது அவ்வளவு பயனுள்ளதாக அமையாது  அவ்வாறு ஒரு இருபரிமான உருவை வரைந்த பின் மேலே கருவி பட்டையின் கடைசியாகவுள்ள  உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன்  இது ஒரு முப்பரிமான  உருவமாக உருமாறிவிடும்

படம்-71-5

  இந்த பிதிர்வு(Extrusion) வாயிலாக உருமாற்றபடும் உருவபடமானது புதிய முப்பரிமான படமன்று ஏனெனில் இது ஏற்கனவே இருக்கும் ஒரு இருபரிமான படமே முப்பரிமான படமாக உருமாறுகின்றது  அதனால் அந்த இருபரிமான படத்தின் அடிப்படை பண்பியல்பு, கட்டமைப்பு, ஆகியவற்றை அப்படியே இது தக்கவைத்துகொண்டு காட்சியை மட்டும் முப்பரிமானமாக மாற்றியமைக்கின்றது அதாவது இந்த உருவ பொத்தானை பயன்படுத்தி ஒருபடத்தின் இருபரிமான காட்சியை முப்பரிமான காட்சியாகவும் ஒரு படத்தின் முப்பரிமான காட்சியை இருபரிமான காட்சியாகவும் மாற்றியமைத்து கொள்ளமுடியும்

ஒரு முப்பரிமான படத்தை தெரிவுசெய்தவுடன் திரையில் 3D-அமைவு (Settings)என்ற (படம்-71-6)கருவிபட்டை திரையில் தோன்றிடும் அவ்வாறு இது திரையில் இல்லையெனில் இதனை திரையில் தோன்றிட செய்வதற்கு  மேலே கட்டளை பட்டையில் View => Toolbars => 3D-Settings=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-71-6

 மாறுபாடு5(Variationப 5): எழுத்துசெயல்(Fontwork) வாயிலாக ஒருமுப்பரிமான படத்தை உருவாக்குதல்

ஒரு உரையை அடிப்படையாக கொண்ட முப்பரிமான படத்தை வரைவதற்கு இந்த வழிமுறை பயன்படுகின்றது

படம்-71-7

பின்னர் வரைபடகருவிபட்டையிலுள்ள என்ற உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் தோன்றிடும்  எழுத்துசெயல்தொகுப்புகள்(Font work Gallery) என்ற (படம்-71-7) உரையாடல் பெட்டியில் தேவையான கட்டமைப்பை தெரிவுசெய்து இதனை உருவாக்கி கொள்ளமுடியும்

ஓப்பன் ஆஃபிஸ் ட்ரா-70-பிட்மேப்பை கையாளுதல் –தொடர்ச்சி

நாம் திரையில் காணும்  படத்தை மட்டும் திருத்திமாறுதல் செய்வதற்கு ஓப்பன்ஆஃபிஸ்ட்ரா வின் சாளரத்தின் மேலே கட்டளைபட்டையில் Filter எனும் கருவி பட்டையில் உள்ள Filter என்ற உருவபொத்தானை தெரிவு செய்து சொடுக்குக  உடன் பதினொரு வகையான வாய்ப்புகளுடன் இந்த Filterஎனும் துனை பட்டிதிரையில் விரியும் அதில் தேவையான வாய்ப்பைமட்டும் தெரிவுசெய்து செயல்படுத்திகொள்க.

எச்சரிக்கை இந்த திரைக்காட்சியில் உள்ள படமானது இணைப்பு படமாக இருந்தால் நாம் செய்த திருத்தத்தை மேலே கட்டளைபட்டையிலுள்ள  File => Export=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி சேமித்து கொள்க. உள்பொதிந்த படமெனில் நம்மால் செய்யபட்டமாறுதல் உடனுக்குடன் சேமிக்கபட்டுவிடும் அதனால் செய்த திருத்தம் சரியில்லை எனத்தோன்றினால் Edit => Undo=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி முந்தையநிலையை பராமரித்துகொள்க

நாம் வரையும் படத்தில் வண்ணத்தை மாற்றுவதற்கும் அந்தபடத்தை ஊடுருவி(transparency) பார்ப்பதற்கேற்ப மாறுதல் செய்வதற்கும் eyedropperஎன்ற கருவி பயன்படுகின்றது இந்த கருவி படம்முழுக்கமட்டுமே செயல்படும் ஒருபடத்தில் குறிப்பிட்ட பகுதியைமட்டும் மாறுதல் செய்யமுடியாது  உட்பொதிந்த படத்தில் இந்தகருவியானது மிகச்சுலபமாக செயல்படும் இணைப்பு படம்எனில் This graphic is linked to a  document. Do you want to unlink the graphic is order to edit it? எனும் செய்தியை திரையில் பிரதிபலிக்கச்செய்யும்  அதன்பின் நாம் செய்யும் செயலிற்கேற்ப இந்தவரைபடம் அமையும்  இந்த கருவி Metafle என்ற ஒருசில வடிவமைப்பு படக்கோப்பில் மட்டும் செயல்படாது

இந்த கருவியை செயலுக்கு கொண்டுவருவதற்கு மேலே கட்டளைபட்டையிலுள்ள Tools => Eyedropper=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக

படம்-70-1

உடன் படம்-70-1-ல் உள்ளவாறு Eyedropper என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதில் பென்சில் போன்ற Eyedropper என்ற உருவ பொத்தானை தெரிவுசெய்தவுடன் அதற்கருகிருலிருக்கும் பெட்டியின் வண்ணம் நம்முடைய வரைபடத்தில் மாறியமையும்  இடம்சுட்டியின் தோற்றம் கைப்பிடிபோன்று மாறிவிடும்

பின்னர் இதே உரையாடல் பெட்டியில் உள்ள Source Color என்பதன்கீழுள்ள வாய்ப்புகளில் தேவையான வண்ணத்தை தெரிவுசெய்துகொண்டு எந்தஅளவிற்கு ஊடுருவி(transparency) பார்க்கமுடியும் என்பதற்காக Tolerance  என்பதன்கீழுள்ள வாய்ப்பகளில் தேவையான வாய்ப்பையும் அதன் சதவிகிகதத்த்தையும் தெரிவுசெய்து கொண்டு Replace with என்பதன்கீழ் தேவையான வாய்ப்பையும் தெரிவுசெய்துகண்டு Replace என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

குறிப்பிட்ட பணிமுடிந்தவுடன் மற்ற உரையாடல் பெட்டிகளானது திரை காட்சியிலிருந்து மறைந்துபோவதைபோன்று இந்த உரையாடல் பெட்டியானது மறைந்து போகாது அதனால் Ctrl+F4 என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்துக அல்லது இதேஉரையாடல் பெட்டியின் மேலே வலதுபுறம் மூலையில் இருக்கும் Close என்ற பொருக்கல்குறிபோன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

வண்ணங்களின் அளவை color depth என்ற கருவியின்மூலம் நிர்ணயம் செய்யலாம் ஆயினும் இந்த கருவி வழக்கமான திரையில் இருக்காது இதனை முதலில் திரையில் பிரதிபலிக்கசெய்வதற்கு மேலே கட்டளைபட்டையில் Tools => Customize=>Toolbars =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக பின்னர் தோன்றும் Customize Toolbars என்ற உரையாடல் பெட்டியில் Add என்ற கட்டளையை செயற்படுத்தியவுடன் இந்த கருவியானது ஒரு துனைபட்டியாக மேலே கருவிபட்டியில் தோன்றிடும் அதனை செயற்படுத்தி தேவையானவாறு வண்ணங்களின் அளவை  அமைத்துகொள்க

வண்ணத்தின் அளவை அமைத்தபின் மற்றும் தேவையான அனைத்து மாறுதல்களும் ஒரு படத்தில் செய்தபின்  அந்த படத்தின்மீது இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் தோன்றிடும் சூழ்நிலை பட்டியில் அல்லது Modify என்ற பட்டியில் Convert => to Contour=>  என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக

உடன் இந்த வரைபடமானது ஒரு பலகோண (polygon) அல்லது குழுவான பலகோண(polygon)  படமாக மாறியமையும்  இந்த பலகோணம் (polygon)  ஆனது ஒரு வெக்டார் வரைபடமாகும் ஆனால் பலகோணத் (polygon)திற்குள் உள்ளபடம் பிட்மேப் உருவபடமாகும் இந்த பலகோணத்தை(polygon) பயன்படுத்தி தேவையானவாறு உருவ அமைப்பையும் ஊடுருவும்(transparency) தன்மையையும் மாற்றியமைத்து கொள்ளமுடியும்

மேற்கண்ட ஒருவரைபடத்தை பலகோணமாக (polygon)  இதற்கென தனியானதொரு  உரையாடல் பெட்டிமூலம் உருமாற்றம் செய்வதற்காக படத்தின்மீது இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் தோன்றிடும் சூழ்நிலை பட்டியில் அல்லது Modify என்ற பட்டியில் Convert => to Polygon=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக  உடன் திரையில் Convert to Polygon என்ற (படம்-70-2 )உரையாடல் பெட்டியொன்று தோன்றிடும்  அதில் தேவையான வாய்ப்புகளை அமைத்துகொண்டு okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-70-2-

இந்த ஓப்பனஅஆஃபிஸ் ட்ராவினுடைய Convert to Polygon என்ற உரையாடல் பெட்டியில் எட்டுமுதல் முப்பத்திரண்டு வண்ணங்கள் கையாளபடுகின்றன அவ்வளவு வகை தேவையில்லை குறைந்த அளவே போதும் என எண்ணினால் color depth என்ற வாய்ப்பின் வாயிலாக அல்லது  Graphic Filterஎன்ற கருவிபட்டையிலுள்ள Posterize filter என்ற கருவியின் வாயிலாக தேவையான வண்ணங்களின் எண்ணிக்கையை குறைத்துகொள்க

ஒருவரைபடத்தின் துல்லியத்தை pixels எனப்படும் புள்ளிகளே (holes) தீர்மாணிக்கின்றன அதனால் Fill holes என்றவாய்ப்பின் மூலம் அதன்அளவையும் Tile size என்ற வாய்ப்பின்மூலம் அதன் அகலத்தையும் அமைத்துகொள்க

R என்ற எழுத்துருவானது  கண்ணுக்கு தோன்றுவதொன்றாகவும் கண்ணிற்கு புலப்படாத மற்றொன்றாகவும் ஆகிய இரண்டு எழுத்துருவாக (படம்-70-3 இடதுபுறம் உள்ளவை) மாறியமைகின்றது கண்ணிற்கு புலப்படாத உருவிற்கு அதன் பலகோணத்திற்குpolygon  வேறுவண்ணங்களை அமைத்திட்டபின் (வலதுபுறம் உள்ளவை ) படம்-70-3 -இல் உள்ளவாறு கண்ணிற்கு புலப்படும் எழுத்துருவாக அது அமைகின்றது

படம்-70-3

இந்த ஓப்பன்ஆஃபிஸ்ட்ராவில் உருவாக்கும் படங்கள் அனைத்தும் வெக்டார் வரைபடங்களாகும் இதனை பிட்மேப்படங்களாக உருமாற்றம் செய்திடுவதற்கு மேலே கட்டளைபட்டையில் Convert => To Bitmap => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக  பொதுவாக இவ்வாறு உருமாற்றியபின் இவை இயல்புநிலையில் PNG என்ற பின்னொட்டின் வடிவமைப்பில்  சேமிக்கபடும் படம் ஆனது ஊடுருவும் (transparency) தன்மையற்றதாக அமையும் ஆனால் eyedropper என்ற கருவிமூலம் மாறுதல் செய்தபடங்கள்  ஊடுருவும் (transparency) தன்மையை தம்மிடம் தக்கவைத்துகொள்கின்றன

மேலேகட்டளைபட்டியில் Tools =>Options => OpenOfce.org Draw => Print=>  என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக  உடன் தோன்றிடும் Options – OpenOfce.org Draw- Print என்ற (படம்-70-4) உரையாடல் பெட்டியில்  Quality என்பதன்கீழுள்ள வாய்ப்புகளில்  Grayscale என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்கியபின் okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-70-4

Previous Older Entries