நாம் நம்முடைய வருமான வரிசெலுத்தவதை குறைப்பதற்கான வழிகாட்டிடும் எக்செல்

நாம் வாங்கிய வீட்டுகடனிற்கானவட்டியை கழித்து கொண்டு நிகரத்தொகைக்குவருமானவரி கணக்கிட்டு செலுத்திட்டால் போதும் அவ்வாறானவட்டித்தொகை எவ்வளவு என வீட்டுகடன்வழங்கிடும் நிறுவனங்களோ வங்கிகளோ விவரங்களை வழங்காது இந்நிலையில்எக்செல் எனும் பயன்பாடு இருக்கும்போது நாம் கவலைப்படத்தேவையில்லை இதற்காக எக்செல்லில்=ISPMT([rate], [period], [nper], [value])எனும் வாய்ப்பாடு கைகொடுக்கின்றது இதில் rate என்பது வங்கியின் வட்டிவிகிதமாகும் period என்பது எந்த காலததிற்கு வட்டி கணக்கிடவேண்டும் nper என்பது எத்தனைமாதத்திற்கு கடன்திருப்பவேண்டும value என்பது கடன் தொகையாகும் உதாரணமாக ரூபாய் 250000 ,5சதவிகிதம் வட்டி,20 வருடங்கள் எனில் =ISPMT(.05, 1, 10, 250000) உடன்ரூபாய்11875.00 என்ற தொகை வட்டியாகும் என நமக்குஅறிவிக்கின்றது
அவ்வாறே நாம் அவசரத்தேவைக்கு கடன் வாஙகிடுவோம் கடன்வழங்குவோர் ஒவ்வொரு மாதமும் கடனையும் வட்டியைசமதவணையாக செலுத்திடவேண்டுமென்றும் தவறினால் மூன்று மாதத்திற்கு கொருமுறை செலுத்தப்படாத வட்டி அசலாக மாற்றி அந்த அசலிற்கும் சேர்த்து கூட்டுவட்டியாக கணக்கிடப்படும் என்ற நிபந்தனை விதித்தால் வருடாந்தர வட்டிவிகிதம் என்னவாகஇருக்கும் என கணக்கிடுவதற்காக எக்செல்லில் =EFFECT([nominal_rate], [nper]) எனும் வாய்ப்பாடு கைகொடுக்கின்றது இதில் nominal_rate என்பது அனுமதிக்கப்பட்ட வட்டிவிகிதமாகும் nper என்பது வருடத்தில் எத்தனைமுறை கூட்டுவட்டியாக கணக்கிடும் என்பதாகும் உதாரணமாக வட்டிவிகிதம் 7.5 சதவிகிதம் ஒவ்வொருமமூன்றுமாதத்திற்கு ஒருமுறை கூட்டுவட்டி கணக்கிடபடும் எனில் =EFFECT(.075, 4) உடன்7.71 சதவிகிதம் என நமக்குஅறிவிக்கின்றது
அவ்வாறே நம்முடைய வீட்டிற்கான அல்லது சொத்துகளுக்கான தேய்மானம் எவ்வளவு என கணக்கிடவும் எக்செல்லின் =DB([cost], [salvage], [life], [period]) எனும் வாய்ப்பாடுஉதவுகின்றது இங்கு cost என்பது சொத்தின்மதிப்பு salvage என்பது அந்தசொத்தின் இறுதியானமதிப்பு life என்பது அந்த சொத்து எவ்வளவுநாள் பயன்படும் period என்பது எந்தஆண்டிற்கான தேய்மானம் கணக்கிடவேண்டும் என்பதாகும் உதாரணமாக சொத்தின் மதிப்பு ருபாய் 45000.00 இறுதி மதிப்பு ரூபாய்12000.00 சொத்தின் வாழ்நால் 12 ஆண்டுகள் முதல் வருடத்திற்கு தேய்மானம் கணக்கிடவேண்டுமெனல் =DB(45000, 12000, 8, 1)உடன் ரூபாய்6,840 என நமக்கு அறிவிக்கின்றது

எக்செல் எனும் பயன்பாட்டினை பயன்படுத்திடுவதற்கான எளிய ஆலோசனைகள்

1 நாம் எக்செல்எனும் பயன்பாட்டினை பயன்படுத்தி அட்டவணையொன்றினை தயார்செய்திடவிழைவோம் அதில் நெடுவரிசை யில்மாதவாரியாகவும் கிடைவரிசையில் பணியாளர்வாரியாகவும் விற்பணை அல்லது உற்பத்தி திறனை பட்டியலிடுவோம் இவ்வாறான நெடுவரிசை கிடைவரிசை தலைப்பிற்குஒட்டுமொத்த தலைப்பினை எவ்வாறு அமைத்திடுவது என தெரியாததால் அப்படியே அமைத்திடாமல் விட்டிடுவோம் அதனை தவிர்த்திட Home  Fonts  Format Cells என்றவாறு கட்டளைகளைசெயற்படுத்திடுக உடன்விரியும் Format Cells எனும் உரையாடல் பெட்டியில் Border எனும் தாவியின் திரையை தோன்றிடசெய்க அதில் கீழே வலதுபுற மூலையில்உள்ளdiagonal split எனும் வாய்ப்பான உருவப்பொத்தானாை தெரிவுசெய்து கொள்க பிறகு நம்முடைய அட்டவணையின் நெடுவரிசை கிடைவரிசை சந்திக்கும்முதல் கலணிற்கு சென்று monthஎன தட்டச்சு செய்துகொண்டு Alt + Enter ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக பின்னர் Sales Rep என தட்டச்சு செய்து கொண்டு வெளியேறுக தற்போது இந்த அட்டவணையானது பின்வருமாறு தலைப்பு இருப்பதைகாணலாம்

1
2 ஒருசில நேரங்களில் எக்செல் எனும் பயன்பாட்டின் அட்டவணையின் நெடுவரிசைகளின் தலைப்புகள் ஒவ்வொன்றும் மிகநீண்டதாக இருக்கும் அதனால் இந்த அட்டவணையை ஒரேபக்கத்தில் வைத்திடமுடியாமல் திண்டாடுவோம் இந்நிலையில் இவ்வாறான நீண்டதலைப்புகளுள்ள நெடுவரிசைகளை தெரிவுசெய்துகொண்டுHome  Alignment  Orientation  Angle Counterclockwise என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் உரையாடல் பெட்டியில் நகரும்கடிகார முள்ளினை45o என்றவாறு கோண அளவினை வைத்து கொண்டு மீண்டும் Home  Font  Borders  All Borders. என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து அமைத்து கொள்க இதன்பின்னர் நெடுவரிசையின் அளவை மாற்றியமைத்து சரிசெய்து கொள்க தற்போது பின்வருமாறு அட்டவணையானது அமைந்திருபபதை காணலாம்
2

பிறந்த நாளினை நினைவூட்டுமாறு எக்செல்லில் செய்திடலாம்

நம்முடைய நண்பர்கள் உறவினர்கள் அவர்களுடைய பிறந்த நாளில் பிறந்தநாள் வாழ்த்து மின்னஞ்சல் அனுப்புவது நம்முடைய மிகமுதன்மையான செயலாகும் அவ்வாறெனில் அவர்களின் பிறந்தநாட்களை எவ்வாறு நினைவில் கொள்வது என்பதுதான் மிகச்சிரமமான செயலாகும் இவ்வாறான நிலையில் நம்முடைய நண்பர்களின் பிறந்த நாட்களை நமக்கு நினைவூ்டடுமாறு எக்செல் பயன்பாட்டில் செயற்படுத்திடமுடியும்அதற்காக முதலில் பிறந்தநாள் நினைவூட்டுதல் என்ற பெயரில் ஒரு எக்செல் கோப்பினை துவங்கிடுக பின்னர் அதனுடைய பணித்தாளில் ஏதேனும் ஒரு date format வடிவமைப்பை தெரிவுசெய்து கொள்க அதன்பின்னர் =IF(MONTH(C3)MONTH(TODAY()),” “,IF(DAY(C3)DAY(TODAY()),” “,”இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்”))எனும் வாய்ப்பாட்டினை ஒருகலனில் உள்ளீடு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக
இங்கு C3 எனும் கலணானது நாம் பிறந்த நாள் வாழ்த்து கூறவிரும்புவோரின் பிறந்த நாளாகும். C3 எனும் கலணிற்கு பதிலாக வேறு கலண்களை நாம் பிறந்த நாள் வாழ்த்து கூறவிரும்புவோர்களுக்கு அவரவர்களின் பிறந்த நாளினை உள்ளீடு செய்து கொள்க இதன்பின்னர் குறிப்பிட்ட நாளில் எக்செல் தாளினை திறந்தவுடன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என குறிப்பிட்ட நண்பரின் பிறந்த நாளினை நமக்கு நினைவூட்டுதல் செய்திடும் உடன் நாமும் இது யாருக்கானது என அறிந்து தொடர்புடைய நபருக்கு பிறந்தநாள் மின்னஞ்சலைஅனுப்பி வைத்திடமுடியும்

Abotஎனும் கட்டற்ற கருவியை கொண்டு நம்முடைய சொந்த மெய்நிகர் உதவியாளரை உருவாக்கி பயன்படுத்தி கொள்க

இந்த மெய்நிகர்உதவியாளர் என்பது நம்முடைய உதவியாளர் போன்று நாம் பேசும் மொழிகளால் இடப்படும் கட்டளைகளை புரிந்துகொண்டு அதற்கேற்ப . உரைகளை படித்தல், அல்லது மின்னஞ்சலை நாம் காதால் கேட்குமாறு சத்தமாக படித்தல், நமக்கு வருகின்ற அழைப்புகள் யாரிடமிருந்து வருகின்றது என அவர்களுடைய தொலைபேசிஎண்ணை அறிந்துகூறுதல், மற்றவர்களின் தொலைபேசிஎண்வாயிலாக அவர்களை அழைத்து தொடர்புகொள்ளுதல், முக்கிய நபர்களுடன் நேரடியாக சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கிடுமாறு கோரியதன் அடிப்படையில் கிடைத்த அனுமதியை நமக்கு நினைவூட்டுதல் நாம் படிக்கும் உரையை தட்டச்சு செய்தல் என பல்வேறு பணிகளையும் செய்திடும் மின்னனு கருவிகளை செயல்படுத்திடும் ஒரு பயன்பாடாகும் தற்போது நடைமுறையில் ஆப்பில் ஸிரி ,கூகுள்நவ், கார்ட்னா ஆகிய மெய்நிகர் உதவியாளர்கள் செயற்கை நினைவகத்துடன் பேசும் ஒலியை அங்கீகரிக்கும் திறனுடனும்,இயந்திரமொழிகற்றல் தொழில்நுட்பத்துடனும் உள்ளீடு செய்திடும் தரவுகளுக்கு ஏற்ப பயனாளர் விரும்பிடுவதை முன்கூட்டியே கணித்திடும் திறனுடனும் பயன்படுத்தி கொள்ளப்பட்டுகொண்டிருக்கின்றன. இனி வருங்காலத்தின் இந்த மெய்நிகர் உதவியாளரானது மேலும் கூடுதலான நாம் எதிர்பார்க்கும் பல்வேறு வகையான அனைத்து வசதி வாய்ப்புகளையும் கொண்டிருக்கும் இவ்வாறான நிலையில் மேலே கூறிய மெய்நிகர் உதவியாளர்கள் உடைமை பயன்பாட்டுமென்பொருளாகும் இவை கட்டணத்துடன் குறிப்பிட்ட நிறுவனம் கட்டமைத்துள்ள வசதிகளைமட்டுமே கொண்டு இயங்குபவையாகும் அதேபோன்ற அனைத்து செயல்திறன்களையும் கொண்டAbotஎன்பது Go எனும் கட்டற்ற மொழியில் உருவாக்கபட்ட மெய்நிகர் உதவியாளரின் வரைச்சட்ட கருவியாகும் இதனைகொண்டு நம்முடைய சொந்த மெய்நிகர் உதவியாளரை நாம் விரும்பும் வகையில் உருவாக்கி பயன்படுத்தி கொள்ளமுடியும் இந்த Abotஎனும் வரைச்சட்டமானது மனித மொழியின் குரலை புரிந்துகொள்ளும் ஒரு பயன்பாட்டு நிரல்தொடர் இடைமுகம்(Application Program Interface)செய்தல் , உரைகளின் அடிப்படையில் உள்ளீடு செய்திடும் கட்டளைகளை புரிந்துகொள்ளுதல், கட்டளைகளை செயற்படுத்திடுவதற்கான பதில் செயல்புரிதல் ஆகிய மூன்று அடிப்படையில் செயல்படுகின்றன. உதாரணமாக ஒரு நகரத்தில் நமக்கு பசி எடுத்திடும்போது சாப்பிடுவதற்காக அருகில் சைவ உணவகம் எங்குள்ளது என்ற கட்டளையை இந்த மெய்நிகர் உதவியாளருக்கு இடுவதாக கொள்வோம் இந்த உள்ளீட்டினை எங்குள்ளது என்பது கட்டளை(Commands) அருகில் சைவை உணவகம் என்பது நாம் விரும்பும் பொருள்(Objects) என பிரித்துகொள்கின்றது இதன் பின்னர் வழிகாட்டியானது சைவ (Route) , உணவகம்(Plugin) என பிரித்து அறிந்து கொள்கின்றது அதன்பின்னர் இந்த Plugin இல் உருவான பதில் செய்தியை இறுதியாக பயனாளருக்கு அருகில் நூறுமீட்டரில் இருக்கின்றது என இடத்தை பதிலாக காண்பிக்கின்றது இதில் நாம் குரல் ஒலிமூலம் கட்டளையிட்டால் குரலொலிமூலம் நமக்கு பதில் கூறுகின்றது உரைவாயிலாக கட்டளைஇட்டால் உரைவாயிலாக நமக்கு பதில் அளிக்கின்றது பொதுவாக இந்த வரைச்சட்ட கருவியில் User=>Abot=>Plugin=>Abot=>User=> என்றவாறு இதனுடைய கட்டளைகளின் அமைவு இருக்கும் என்ற செய்தியை மனதில் கொள்க

நம்முடைய அன்றாட வாழ்வில் பயன்படும் எக்செல்லின்செயலிகள்

1திருப்பூரில் ஒரு பணியன் உற்பத்தி செய்யும் நிறுவனம் உலகம் முழுவதும் தன்னுடைய விற்பணை மையங்களை திறந்து செயல்படுவதாக கொள்வோம் அ எனும் நாட்டில் ஆ எனும் பணியன் வகையானது இ எனும் இன மக்கள் மார்ச்சு2014 இல் எவ்வளவு எண்ணிக்கையில் எவ்வளவு தொகைக்கு விற்பனை ஆனதுஎன காண தனியான மென்பொருள் எதவும் தேவையில்லை நாம் வழக்கமாக பயன்படுத்திடும் எம் எஸ் எக்செல் அல்லது லிபர் ஆஃபிஸ் கால்க் இருந்தால் அதில் அனைத்து விற்பனைகிளைகளும் தத்தமது விற்பனை தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்தால் போதும் தலைமை அலுவலகத்தில் = SUMIFS(sales, regions, “A”, products, “B”, customer types, “C”, month, “M”) என்றவாறு ஃபர்முலாவை உள்ளீடுசெய்து மிகஎளிதாக ஒருசில நொடிகளில் நாம் விரும்பும் விவரத்தை பெறமுடியும்
2.இதே விற்பணை விவரங்களிலிருந்து குறிப்பிட்ட வாடிக்கையாளர் குறிப்பிட்ட வகை பணியன்களை எவ்வளவு எண்ணிக்கை எவ்வளவு தொகைக்குகொள்முதல் செய்தார் என காண VLOOKUP எனும் செயலி VLOOKUP(“C00023″, customers, 2, false) என்றவாறு ஃபார்முலாவை உள்ளீடு செய்து செயல்படுத்தி அறிந்துகொள்ள பயன்படுகின்றது இங்கு என்பது C00023பணியன் வகை என்பது வாடிக்கையாளரின் குறியீட்டு எண் customers, 2,ஆகும்
3. எம்எஸ் எக்செல் அல்லது லிபர் ஆஃபிஸ் கால்க் பயன்படுத்திடும் பத்து நபரில் ஒருவர் கண்டிப்பாக VLOOKUP எனும் செயலியை பயன்படுத்தி கொள்வதாக ஆய்வு ஒன்றுகூறுகின்றது ஆயினும் இந்த VLOOKUP எனும் ஃபார்முலாவானது இடதுபுறம் ஓரம் உள்ள தரவை மட்டுமே ஒப்பீடு செய்து பார்த்து விவரங்களை கொடுக்கின்றது இதற்கென தனிப்ப்ட்டவகையில் அட்டவணையை உருவாக்கி கையாளவேண்டியுள்ளது இதை தவிர்த்து இதே செயலை அட்டவணைஎவ்வாறு இருந்தாலும் செயல்படுத்திட பயன்படுவதுதான் INDEX+MATCH ஆகிய செயலிகள் ஆகும் =INDEX(customer IDs, MATCH(“Tamil Computer”, Customer names, 0) ) என்றவாறு ஃபார்முலாவை உள்ளீடு செய்து செயல்படுத்தி எந்த நெடுவரிசையிலுள்ள தரவுகளையும் எந்த நெடுவரிசைகளுடனும் ஒப்பிட்டு அதன் முடிவை அட்டவணையில் காண்பிக்கின்றது
4. அரசாங்கம் தம்முடைய மக்களின் கணினி அறிவை தமிழில் அறிந்து கொள்ள ஊக்கபடுத்துவதற்காக ஒருஅரசாணை வெளியிடும்போது அதில் நிபந்தனைகளுடன் வெளியிடுவதை =IF(Public reads Tamil Computer, “ exemption of income2%”, “exemption of income 0% ”) என்றவாறு ஃபார்முலாவுடன் ஒப்பிடலாம். இங்கு இந்த பந்தனையானது பூர்த்தி ஆனால் exemption of income2% என்றும் இல்லையஎனில் exemption of income0% என்றும் =IF (condition to test, output for TRUE, output for FALSE) என்றவாறு ஃபார்முலா அமைகின்றது

எம் எஸ் எக்செல் அல்லது லிபர் ஆஃபிஸ் கால்க்கின் ஃபார்முலாவை நம்முடைய வியாபாரத்திற்கு பயன்படுத்தி கொள்ளலாம்

1திருப்பூரில் ஒரு பணியன் உற்பத்தி செய்யும் நிறுவனம் உலகம் முழுவதும் தன்னுடைய விற்பணை மையங்களை திறந்து செயல்படுவதாக கொள்வோம் அ எனும் நாட்டில் ஆ எனும் பணியன் வகையானது இ எனும் இன மக்களிடம் மார்ச்சு2014 இல் எவ்வளவு எண்ணிக்கையில் எவ்வளவு தொகைக்கு விற்பனை ஆனதுஎன காண தனியான மென்பொருள் எதுவும் தேவையில்லை நாம் வழக்கமாக பயன்படுத்திடும் எம் எஸ் எக்செல் அல்லது லிபர் ஆஃபிஸ் கால்க் இருந்தால் அதில் அனைத்து விற்பனைகிளைகளும் தத்தமது விற்பனை தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்தால் போதும் தலைமை அலுவலகத்தில் = SUMIFS(sales, regions, “A”, products, “B”, customer types, “C”, month, “M”)என்றவாறு ஃபர்முலாவை உள்ளீடுசெய்து மிகஎளிதாக ஒருசில நொடிகளில் நாம் விரும்பும் விவரத்தை பெறமுடியும்

2.இதே விற்பணை விவரங்களிலிருந்து குறிப்பிட்ட வாடிக்கையாளர் குறிப்பிட்ட வகை பணியன்களை எவ்வளவு எண்ணிக்கை எவ்வளவு தொகைக்குகொள்முதல் செய்தார் என காண VLOOKUP எனும் செயலி VLOOKUP(“C00023″, customers, 2, false)என்றவாறு ஃபார்முலாவை உள்ளீடு செய்து செயல்படுத்தி அறிந்துகொள்ள பயன்படுகின்றது இங்கு என்பது C00023பணியன் வகை என்பது வாடிக்கையாளரின் குறியீட்டு எண் customers, 2,ஆகும்

3. எம்எஸ் எக்செல் அல்லது லிபர் ஆஃபிஸ் கால்க் பயன்படுத்திடும் பத்து நபரில் ஒருவர் கண்டிப்பாக VLOOKUP எனும் செயலியை பயன்படுத்தி கொள்வதாக ஆய்வு ஒன்றுகூறுகின்றது ஆயினும் இந்த VLOOKUP எனும் ஃபார்முலாவானது இடதுபுறம் ஓரம் உள்ள தரவை மட்டுமே ஒப்பீடு செய்து பார்த்து விவரங்களை கொடுக்கின்றது இதற்கென தனிப்ப்ட்டவகையில் அட்டவணையை உருவாக்கி கையாளவேண்டியுள்ளது இதை தவிர்த்து இதே செயலை அட்டவணைஎவ்வாறு இருந்தாலும் செயல்படுத்திட பயன்படுவதுதான் INDEX+MATCH ஆகிய செயலிகள் ஆகும் =INDEX(customer IDs, MATCH(“Tamil Computer”, Customer names, 0) )என்றவாறு ஃபார்முலாவை உள்ளீடு செய்து செயல்படுத்தி எந்த நெடுவரிசையிலுள்ள தரவுகளையும் எந்த நெடுவரிசைகளுடனும் ஒப்பிட்டு அதன் முடிவை அட்டவணையில் காண்பிக்கின்றது

4. அரசாங்கம் தம்முடைய மக்களின் கணினி அறிவை தமிழில் அறிந்து கொள்ள ஊக்கபடுத்துவதற்காக ஒருஅரசாணை வெளியிடும்போது அதில் நிபந்தனைகளுடன் வெளியிடுவதை =IF(Public reads Tamil Computer, “ exemption of income2%”, “exemption of income 0% ”) என்றவாறு ஃபார்முலாவுடன் ஒப்பிடலாம். இங்கு இந்த பந்தனையானது பூர்த்தி ஆனால் exemption of income2% என்றும் இல்லையஎனில் exemption of income0% என்றும் =IF (condition to test, output for TRUE, output for FALSE) என்றவாறு ஃபார்முலா அமைகின்றது

ஓப்பன் ஆஃபிஸ் கால்க்-48- வாடிக்கையாளர் விரும்பியவாறு மாறுதல் செய்து கொள்ளலாம்

   மற்ற ஓப்பன் ஆஃபிஸ் பயன்பாடுகளை போன்றே ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கிலும் கட்டளை பட்டி,கருவிபட்டி ,சுருக்குவழிவிசை போன்றவைகளை ஏற்கனவே இருப்பதை  நாம்விரும்பியவாறு இதிலுள்ள Tools => Customize => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவது அல்லது OpenOffice.org என்ற இணையதளம் ஆகியவற்றின் மூலம் மாறுதல் செய்யவும் நாம் விரும்பியவாறு இவைகளை புதியதாக சேர்க்கவும் முடியும்
  அதற்காகTools => Options=>  என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் விரியும் உரையாடல் பெட்டியின் இடப்புறபலகத்தில் பொதுவாக தோன்றும் Load/Save – General என்ற வாய்ப்பின் + என்ற குறியை சொடுக்குவதன் மூலம் விரிவடையும் வாய்ப்புகளுடன் தொடர்புடைய துனைவாய்ப்புகள்  வலப்புற பலகத்தில் விரிவடையும் அதனுடன் தொடர்புடைய பல்வேறு வசதிகளும் வய்ப்புகளும  அங்கு பிரதிபலிக்கும் அவற்றுள் நமக்கு தேவையான வற்றை மட்டும் தெரிவு செய்து செயற்படுத்தி கொள்ளலாம்
                            படம்-48.1
    மிகமுக்கியமாக Load/Save – Microsoft Office என்றவாய்ப்பை தெரிவுசெய்தவுடன் தோன்றிடும் ( படம்-48.1)திரையின் வலப்புறபலகத்தின் பட்டியலில் எந்தெந்த  மைக்ரோசாப்ட் அலுவலக பயன்பாடுகளுக்கு L என்பதை தெரிவுசெய்துள்ளோமோ அவைகளைமிக எளிதாக  ஒப்பன்  ஆஃபிஸில் திறந்து பணிபுரிய முடியும்.அவ்வாறே எந்தெந்த  மைக்ரோசாப்ட் அலுவலக பயன்பாடுகளுக்கு S என்பதை தெரிவு செய்துள்ளோமோ அவைகளாக  ஒப்பன்  ஆஃபிஸின் அமைவிலிருந்து சேமிக்கமுடியும்
                       படம்-48.2
  Tools => Customize=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் Customizeஎன்ற ( படம்-48.2)உரையாடல் பெட்டியில் menu,keyboard,toolbar,events என்பன போன்ற வாய்ப்புகளின் திரையில் new என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் தோன்றிடும் newmenu / toolbar என்ற ( படம்-48.2)உரையாடல் பெட்டியில் தேவையான புதியதை உள்ளீடு செய்து எந்தஇடத்தில் வேண்டுமென அமைவுசெய்து ok என்ற பொத்தானை சொடுக்கி சேர்த்துகொள்க
   தேவையானால்Customizeஎன்ற உரையாடல் பெட்டியில் modify என்ற பொத்தானை சொடுக்குவதன் மூலம் இவைகளை சரிசெய்யவும் Customizeஎன்ற உரையாடல் பெட்டியில்Delete என்ற பொத்தானை அழுத்துவதன்மூலம் தேவையற்றதை நீக்கம் செய்யவும் முடியும்
                             படம்-48.3
 ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கின் விரிதாளில் ஏதேனும் விவரங்களை  தட்டச்சு செய்திடும்போது முதல்எழுத்தினை உள்ளிட ஆரம்பித்தவுடனேயே தொடர்புடைய சொற்கள் தானாகவே நிரப்பி கொள்வதாக திரையில் தோன்றும் தேவையெனில் ஏற்கலாம் இல்லையெனில் தொடர்ந்து தட்டச்சு செய்துவரலாம் இவ்வாறான தானாகவே சொற்களை  நிரப்பிகொள்ளும் வசதியை கட்டுபடுத்துவதற்காக  Auto Correct என்ற வாய்ப்பு உதவுகின்றது 
  
   இதற்காக Tools => AutoCorrect=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் AutoCorrectஎன்ற உரையாடல் பெட்டியில் ( படம்-48.3)தேவையான வாய்ப்பை சரிசெய்து கொள்க
 ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கில் இருக்கும் வசதி போதுமானதாகஇல்லை எனும்போது http://extensions.services.openoffice.org/. என்ற தளத்திற்கு சென்று தேவையான விரிவாக்க வசதியை பதிவிறக்கம் செய்து நிறுவி பயன்படுத்தி கொள்ளமுடியும்   
  
   இதற்காக மேலேகூறிய தளத்திற்கு சென்று தேவையானதை பதிவிறக்கம் செய்து கணினியில் சேமித்துகொள்க
   
   பின்னர்Tools => Extension Manager =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தியவுடன் தோன்றிடும் Extension Manager என்ற உரையாடல் பெட்டியில் add என்ற பொத்தானை சொடுக்குக
    அதன் பின்னர் விரியும் சாளரத்தில் பதிவிறக்கம் செய்து சேமித்துள்ள கோப்பினை தேடிபிடித்து தெரிவுசெய்து open என்ற பொத்தானை சொடுக்குக உடன் தேவையான விரிவாக்க வசதி கணினி்யில் நிறுவப்பட்டுவிடும்
   இதன் பிறகு Extension Manager என்ற உரையாடல் பெட்டியில் நம்முடைய கணினியில் நிறுவப்பட்ட விரிவாக்க வசதிகளை பட்டியலாக (படம்-48.4)காண்பிக்கும்
 
                          படம்-48.4
  இவ்வாறு ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கில் இல்லாத வசதிகளை இதனுடைய விரிவாக்கதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்தும் நமக்குத்தேவையான நாம் விரும்பியவாறான வசதிகளை Customize ,வசதி மூலம் நிறுவியும் பயன்படுத்தி கொள்ளமுடியும் 

 நன்றி தமிழ் கம்யூட்டர் மாதமிருமுறை இதழ்

Previous Older Entries