நம்முடைய உடலை கட்டுகோப்பாக வைத்திருக்கஉதவிடும் கட்டற்ற ஆண்டராய்டு பயன்பாடுகள்

நம்முடைய உடலை நோய்நொடிஇல்லாமல் கட்டுகோப்பாக வைத்திருப்பதையே நாம் அனைவரும் விரும்புவோம் இவ்வாறு கட்டுகோப்பாக உடலை பராமரிப்பதற்கு உதவ FitBitபோன்றவை பயன்படுகின்றன அதிலும் தனியுடைமை பயன்பாடுகள் ஏராளமான வகையில் ஒவ்வொரு சாதனத்திற்கும் என உள்ளன ஆயினும் கட்டற்ற பயன்பாடுகள் மிகமுக்கியமாக ஆண்ட்ராய்டில் செயல்படும் உடலை கட்டுகோப்பாக வைத்திருக்கஉதவிடும் பயன்பாடுகள் பலஉள்ளன இவை ஜிபிஎல்3 என்ற அனுமதியின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளன
1 HIIT Timer என்பது எவ்வளவு நேரம் பணி எவ்வளவு நேரம் ஓய்வு என அமைத்து பயிற்சி அளிக்கின்றது பொதுவாக நம்மில் பெரும்பாலோர் பணியில் மூழ்கி உடல்நலணை கவணத்தில் கொள்ளாமல் இருப்பார்கள் அவ்வாறானவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது
3 Open Training எனும் பயன்பாடு எவ்வாறு உடற்பயிற்சி சரியாக செய்வது என வழிகாட்டுகின்றது
4 RunnerUp என்பது எவ்வாறு ஒடுவது நடப்பது போன்ற பல்வேறு வகையில் வழிகாட்டுகின்றது
5 Seven எப்போதும் பயனத்திலேயே இருப்பவர்களுக்கு ஒரு ஏழுநிமிடத்தில் உடற்பயிற்சியை செய்திட இந்த பயன்பாடு உதவுகின்றது
6 Strykur,என்பது பயன்படுத்திடும் நபரின் உடலின் எடை, உடலில் சேர்ந்த கொழுப்புசத்தின் அளவு, மார்பளவு, தோள்பட்டையளவு ,கைகால்களின் அளவு ,இடுப்பளவு ஆகியவற்றை அளவிட்டு இவைகளை குறிப்பிட்ட அளவில் பராமரித்திட பயன்படுகின்றது

வாருங்கள் ஆண்ட்ராய்டில் பயன்படும் இந்த கட்டற்ற பயன்பாடுகளை பயன்படுத்தி உங்களுடைய உடலைகட்டுகோப்பாக பராமரித்து கொள்க

நாம் எனும் இணைய உணவு விரும்பிகளின் சமுதாயகுழுஇணையத்தை பயன்படுத்திகொள்க

நாம் எனும் இணைய தளமானது புதியஉணவுவகைகளை விரும்புவோர்கள் ஒன்றினைந்து தங்களுடைய அனுபவங்களை நேரலையாக பகிர்ந்துகொள்ளும் ஒருசமூக குழுவலைதளமாகும் இங்கு அவரவர்கள் விரும்பி உண்ணும் உணவினை எவ்வாறு தயார்செய்வது என்ற விவரங்களை கானொளிப்படங்களின் வாயிலாக குழுவான நபர்கள் தங்களுக்குள் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்துகொள்கின்றனர் மிகமுக்கியமாக இந்தஇணையதளத்தின் முகப்பு பக்கத்தில் நம்மால் என்னென்னவெல்லாம் செய்திடமுடியும் என்ற முழுவிவரங்களையும் அறிந்து தெரிந்துகொள்ளலாம் முதன்முதல் இதன் முகப்பு பக்கத்திற்கு வந்தவுடன் இன்றைய முக்கிய உள்ளடக்கங்கள் யாவை பார்வையாளர்கள் அதிகம் விரும்பியவை எவை அதிகபார்வையிட்டவைஎவை பெரும்பாலானவர்களால் விரும்பபட்டவைஎவை அதனுடைய தற்போதைய நிலை என்ன ஆகியவிவரங்களை அறிந்துகொள்ளலாம் இதில் நம்முடைய பெயர் மின்னஞ்சல்முகவரி கடவுச்சொற்களுடன் ஒரு பயனாளராக பதிவுசெய்துகொண்டால் நாமும் நாம் விரும்பும் நம்முடைய உணவு விவரங்களையும் அதனை தயார்செய்திடும் செய்முறைவிவரங்களையும் பதிவேற்றம் செய்திடலாம் வாருங்கள் இன்றே https://nom.comஎனும் இந்த தளத்திற்கு வந்து் நீங்களும் உங்களுடைய சமையல் அனுபவங்களையும் உணவு அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்

4.

நம்முடைய உடலின் சரியான வளர்ச்சிக்குத்தேவையான உணவை தெரிவுசெய்திட EatThisMuch.comஎனும்இணையதளம் உதவுகின்றது

நம்மில் பலர்  உடல் பருமன் அதிகமாகிவிட்டோமே இதனை எவ்வாறு குறைப்பது  என தவிக்கின்றோம்  அதனால் பெரும்பாலானோர் ஜிம் எனும் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று கடுமையான உடற்பயிற்சியை  மேற்கொண்டு நம்முடைய உடலை வறுத்தி கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்துவருகின்றோம்.  அதர்குபதிலாக நம்முடைய உடலிற்குத்தேவையான சத்தான சரிவிகித  உணவை மிகச்சரியாக  தெரிவுசெய்து உண்பதன் வாயிலாகவே நம்முடைய உடலை சரியாக கட்டுகோப்பாக வைத்திடலாம்   இதற்காக உதவவருகின்றது http://EatThisMuch.com/ என்ற இணையதளமாகும்  இதனை நம்முடை்ய ஸ்மார்ட் ஃபோன்களிலும் ஆண்ட்ராய்டு இயக்கமுறைமையிலும் பதிவிறக்கம் செய்து நிறுவுகைசெய்து பயன்படுத்திகொள்வதற்கான வசதி விரைவில் வரவிருக்கின்றது  இந்த தளமானது  என்னென்ன வகையான எவ்வளவு கலோரி அளவுள்ள உணவினை எவ்வெப்போது எவ்வளவு காலஇடைவெளியில் உண்பது என்ற நம்முடைய உணவுத்திட்டத்தினை  வகுத்து வழங்குகின்றது  நாளொன்றிற்கு நாம் செய்திடும் பணியை பொறுத்து நம்முடைய உடலிற்கு எவ்வளவு தேவையோ அதைவிட சிறிது குறைவாக உண்பது நல்லதுஎன பரிந்துரைக்கபடுகின்றது நம்முடைய உடலிற்கு நாம் செய்யும் பணிக்கு ஏற்ப எவ்வளவு கலோரி அளவுள்ள உணவுதேவையென்பதை இந்த தளம் கணக்கிட்டுவிடுகின்றது அதன்பின்னர் எவ்வளவு கால இடைவெளியில் இந்த உணவுகளை நாம் உண்ணவேண்டும்என அட்டவணையிடுகின்றது இந்த தளத்திற்கு வருக வந்த உங்களின் உடல் எடையை சரியாக  பராமரித்திடுக.

7

Greatist எனும் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவிடும் தளம்

Greatist எனும்இது நம்முடைய அரோக்கியவாழ்க்கைமுறையைகூறு ம்ஒரு இணையதளமாகும். இதில் நம்முடைய  ஆரோக்கியமான  வாழ்விற்கான பல்வேறு ஆலோசனைத்தகவல்களை அதிலும் உணவுபொருட்களிலிருந்து சிறந்த சமையல்செய்வதற்கானபயிற்சி குறிப்புகள் பற்றிய ஆலோசனைகளை நமக்கு வழங்குகின்றது. இதுஒரேஒருவழிமுறையைமட்டும் ஊக்குவிக்கவில்லை அதற்குபதிலாக நமக்குத்தேவையான நாம்விரும்பும் பல்வேறு வழிமுறைகளை கண்டறிந்து பின்பற்றிட ஊக்குவிக்கின்றது பொதுவாக இந்நிலையில் நமக்குத்தேவையானதை கண்டறிந்தாலே நமக்கு பாதிவெற்றிகிடைத்தாற்போன்றதாகும் அதனை அப்படியே பின்பற்றிவிடலாம். முதலில் இந்த தளத்திற்குள் உள்நுழைவு செய்தவுடன் பல்வேறு பிரிவுகள் இதில் இருப்பதை காணலாம் அவற்றில் ஒன்றினை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது மேலும் அறியவிரும்புவது என்ற பகுதியை தெரிவுசெய்துசொடுக்குக அதனை தொடர்ந்து நாம் தெரிவுசெய்தவாறான பகுதிக்கு நம்மை அழைத்து செல்லும்  அதில் மேலும் பலநல்ல செய்திகளையும் இந்த தளத்தின் நோக்கத்தை பற்றியும் அறிந்துகொள்ளலாம் மேலும் அதிலுள்ளவைகள் நம்மை மகிழ்ச்சிகடலில் ஆழ்த்திவிடும் அதுமட்டுமின்றி இந்த தளத்தில் சமையல்கலையில் புதியமுயற்சிகளை பற்றியும் விவாதிக்கலாம்  திரையின் மேலே உள்ள சாப்பிடும்  தட்டுஎனும் பகுதி அல்லது  சாப்பிடும் பகுதிக்கு நாம் சென்று அங்கு என்னென்ன உள்ளன என அறிந்துகொள்ளலாம்

பின்னர் Moveஎனும் பகுதிக்கு சென்று பாருங்கள்! அதில் நீங்கள் ஆரோக்கியமானவாழ்வை பெறுவதற்கான உடற்பயிற்சிகளையும்  குறிப்புகளையும் காணலாம்.  அதற்கடுத்ததாக  Live எனும் பகுதிக்கு செல்லுங்கள் அங்கு நாம் வாழும் சிறந்த  வாழ்க்கைமுறைக்கான ஆலோசனைகளையும்  கட்டுரைகளையும் காணலாம் இந்த பகுதி நம்முடைய வாழ்விற்கான உத்வேகத்தை அளிக்கின்றது

6

வாருங்கள் இன்றே இந்த   Greatist எனும் தளத்திற்கு சென்று நம்முடைய ஆரோக்கியமான வாழ்க்கைய தொடங்கிடுவோம் மேலும் விவரங்களுக்கு http://greatist.com/எனும் இணைய பக்கத்திற்கு செல்க