இந்த 2018 ஆம் ஆண்டின் மிகச்சிறந்த கட்டற்ற இயக்கமுறைமைகள்

பொதுவாக கட்டணத்துடன் கூடிய விண்டோ இயக்கமுறைமையையே நம்மில் பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றோம் அதைவிட பெரும்பாலான அரசு அலுவலகங்களில் கூட விண்டோ இயக்கமுறைமைமட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன அதிலிருந்து விடுபட்டு நாம் விரும்பிய செயல்களை செயல்படுத்திடுவதற்கு-கட்டற்ற கட்டணமில்லாத பல்வேறு இயக்கமுறைமைகள் இணையத்தில் தயாராக உள்ளன அவைகளைபற்றிய அறிமுகம் பின்வருமாறு
1.Ubuntu கட்டற்ற இயக்கமுறைகளுக்குள் முதல்இடத்தில் இருப்பது உபுண்டு ஆகும் இது ஒரு லினக்ஸ் அடிப்படையிலான இயக்கமுறைமையாகும் இது அனைத்து வன்பொருட்களுடனும் இணக்கமாக செயல்படுகின்ற மேஜைக்கணினி,மடிகக்கணினி ஆகிய அனைத்து கணினிகளிலும் செயல்படும் திறன்கொண்ட இயக்கமுறைமையாகும் மேலும் மிகஅத்தியாவசிய பணிகளை எளிதாக செய்து முடிப்பதற்காக Thunderbird, F-Spot, Firefox, Transmission, LibreOffice,போன்ற பயனாளர்களின் இனிய நண்பர்களாக விளங்கும் பல்வேறு பயன்பாடுகளும் நாம் பயன்படுத்திகொள்வதற்கு இதில் தயாராக உள்ளன இதனை https://www.ubuntu.com/download என்ற முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து நம்முடைய கணினியில் நிறுவுகை செய்து பயன்படுத்தி கொள்ளலாம்
2.Linux Liteஎன்பது மற்றொரு கட்டற்ற கட்டணமற்ற லினக்ஸின் அடிப்படையிலான இயக்கமுறைமையாகும் லினக்ஸ் இயக்கமுறைமை பற்றி அதிகஅறிமுகம் இல்லாதவர்கள் கூட எளிதாக பயன்படுத்தகூடிய இயக்கமுறைமையாக இது விளங்குகின்றது இதனோடு நாம் பயன்படுத்தி கொள்வதற்கான அத்தியாவசிய பயன்பாடுகள் கருவிகள் செயலிகள் சேர்ந்து கிடைக்கின்றன இது மிகஎளிய இடைமுகமாக உள்ளது இது நிலையான பதிப்பாகவும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மேமபடுத்தப்படும் வசதியுடனும் இருக்கின்றது கணினியுடன் இணைக்கப்பட்ட வண்பொருட்களை செயல்படுத்துவதற்காக-வென தனியாக செயலிகளை இதில்நிறுவகை செய்யத்தேவையில்லை அவையனைத்தும் இந்த இயக்கமுறைமையுடன் சேர்ந்தே இருக்கின்றன என்பதுதான் இதனுடைய சிறப்பு தன்மையாகும் இதனை https://www.linuxliteos.com/download.php என்ற முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து நம்முடைய கணினியில் நிறுவுகை செய்து பயன்படுத்தி கொள்ளலாம்

3.Fedora என்பது உபுண்டுவிற்குஅடுத்த மிகப்பிரபலமானதொரு லினக்ஸின் பொதுப்-பயன்பாட்டு இயக்கமுறைமையாகும இது ஜினோம் அடிப்படையிலான வாடிக்கையாளர் விரும்பியவண்ணம் மாறுதல்கள் செய்து கொள்ளஅனுமதிக்கும் இயக்கமுறைமையாகும் இதுவும் குறிப்பிட்ட கால இடைவெளியில் மேம்படுத்தப்படும் அடிப்படையிலான மிகச்சிறந்த இயக்கமுறைமையாகும் இதனை https://getfedora.org/en/workstation/ என்ற முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து நம்முடைய கணினியில் நிறுவுகை செய்து பயன்படுத்தி கொள்ளலாம்

4. Linux Mint எனும் இயக்கமுறைமையானது பல்லூடக பயன்பாடுகளை கையாளு-பவர்களுக்காக வடிவமைக்கப்பட்டது இது பயனாளார்களின் இனிய நண்பனாக விளங்கும் கட்டற்ற கட்டனமற்ற பயன்பாடாகும் எவ்வாறான காட்சி பயன்பாடுகளை யும் மிகசிறப்பாக கையாளும் திறன் கொண்டது இதனை https://linuxmint.com/download.php/ என்ற முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து நம்முடைய கணினியில் நிறுவுகை செய்து பயன்படுத்தி கொள்ளலாம்

பொருட்களுக்கானஇணையபயன்பாடுகளின்எளியஇயக்கமுறைமைஉபுண்டுகோர்

தற்போது நாமெல்லோரும் விண்டோ,லினக்ஸ் போன்ற இயக்கமுறைமைகளை கணினிகளில் பயன்படுத்தி வருகின்றோம் அடுத்து கைபேசிகளில்அல்லது திறன்-பேசிகளில் ஆண்ட்ராய்டு ,ஐஓஎஸ் போன்ற இயக்கமுறைமைகளை பயன்படுத்த துவங்கியுள்ளோம் முதல்தலை முறையில் உபுண்டு லினக்ஸும் அடுத்த தலைமுறையில் லின்க்ஸ் அடிப்படையிலான ஆண்ட்ராய்டும் பயன்படுத்தப்பட்டுவருகின்றன இதனை தொடர்ந்து
தற்போதைய நவீணஉலகின் பொருட்களுக்கான இணைய பயன்பாடுகள் பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றன. ஆயினும் இவைகளுக்கு அடிப்படையான குறைந்த மின்சாரத்திலும் குறைந்த எடையுடனும் அதேநேரத்தில் மிகபாதுகாப்பானதாகவும் நம்பதகுந்ததாகவும் உள்ள இயக்கமுறைமையே மிகஅவசர அவசிய தேவையாகும் இவ்வாறான நிபந்தனைகளை நிறைவுசெய்யக்கூடிய வகையில் உபுண்டுகோர் எனும் இயக்கமுறைமையானது அமைகின்றது .இந்தஉபுண்டு கோர் என்பது IOT சாதனங்களுக்கும் பெரிய கொள்கலன் வரிசைப்படுத்துதலுக்கும் ஆன உபுண்டுவின் ஒரு சிறிய, பரிவர்த்தனை பதிப்பாகும் இதுதுனுக்குகள்(Snaps) எனும் அறியப்படுகின்ற அதிகபாதுகாப்பானதும், தொலைநிலையில் மேம்படுத்தப்படுவதுமான லினக்ஸ் பயன்பாட்டு கட்டுகளாகும் .சிப்செட் விற்பனையாளர்களிலிருந்து கணினி ஒருங்கிணைப்பாளர்களும்,சாதன தயாரிப்பாளர்களும் வரையிலான முன்னணி IOT வழங்குநர்களால் நம்பத்தகுந்ததாகஇது விளங்குகின்றது.
வழக்கம்போன்றமரபுஉபுண்டு இயக்கமுறைமை பயன்படுத்திடும் அதே கெர்னல், நூலகங்களையும் கணினி மென்பொருளையும் இந்த உபுண்டு கோரும் பயன்படுத்து-கின்றது. நம்முடைய உபுண்டுஇயக்கமுறைமை செயல்படும் கணினியில் வழக்கம்-போன்று நாம் உருவாக்கும் எந்தவொரு பயன்பாட்டையும் போன்று இந்த துனுக்குகளை(Snaps)யும் உருவாக்கலாம். ஆயினும் இது பொருட்களுக்கான இணையம் என்பது மட்டுமே வழக்கமான பயன்பாட்டிற்கும் இந்த துனுக்குகள்(Snaps)க்கும் இடையேயான முக்கியமான வேறுபாடாகும்
தனிப்பயன் கெர்னல், பிஎஸ்பி நம்முடைய சாதனத்திற்கு பொருந்தக்கூடிய பயன்பாடுகள் ஆகியவற்றிற்கு செலவேயில்லாமல் இந்த உபுண்டு கோரினை பயன்படுத்திகொள்ள முடியும் ஏனெனில் இது.கட்டணமற்றதாகும் ,இயல்புநிலை பாதுகாப்பு பயன்படும் இடத்தில் சிக்கலான பாதுகாப்பு பிரச்சினைகள் எழுந்தாலும் அந்த சாதனம் பாதுகாப்பிற்காக கவணிக்கப்படாமல் இருந்தாலும் இதிலுள்ளதானியங்கி புதுப்பித்தல்கள் அவ்வாறான பாதுகாப்பினை உறுதிசெய்கின்றன.
நம்பகத் தன்மை – கம்பியில்லா இணைப்பின்வாயிலான புதுப்பித்தல்களின் வழியான முழுமையான புதுப்பித்தல் வசதியுடன் – இந்த துறையில் உள்ள சாதனங்களை நிர்வகிக்கும் செலவுகளைக் இது குறைத்திடுகின்றது
தொந்தரவு இல்லாத பயன்பாட்டு தொகுப்புகள் எளிதாக நம்முடைய சொந்த பயன்-பாட்டு தொகுப்புகளை துவங்கி, அதில்ஒரு திறந்த சுற்றுச்சூழலில் இருந்து சான்றுபடுத்தப்-பட்ட பயன்பாடுகளின் தொகுப்பை சுலபமாகக் கையாளலாம்.
வழக்கமான மரபுஉபுண்டுவெளியீடுகளில் இருந்து வேறுபட்டது. ஏனெனில் இது இலகுரக பரிவர்த்தனைக்கான மேம்படுத்தப்பட்ட அமைப்பை கொண்டது, பாதுகாப்பே இதன் இதயமாகும். – இது ஒரு சுய உள்ளடக்கங்களை கொண்டது, தனியான பாதுகாக்கப்பட்ட இதனுடைய இரும குறியீடானது நன்கு வரையறுக்கப்பட்ட செயலிகளை செயல்படுத்தும் திறன்மிக்கது இதனுடைய அடிப்படை அலகானது துனுக்கு(“snap”) ஆகும் .
இந்த உபுண்டு கோர் ஆனது சிறிய “மைக்ரோ” கொள்கலன் வழங்கிகளை காட்டிலும் மிகச்சிறியதாகும். இது அடிப்படையில் ஒரு கோப்புஅமைவாக இருப்பதால் மிகச்சிறியதாக இருக்கின்றது இயக்கநேர தாங்கியை ஒரு இலவச தேர்வாகவும் ஒருங்கிணைப்பு அமைப்பாகவும் சேர்த்து பயன்பாடுகள் துனுக்கு(Snaps)களாக வழங்கப்படுகின்றன , தாக்குதலே செய்யமுடியாத மேற்பரப்பினை இது கொண்டுள்ளதால் மிகவும் பாதுகாப்பானதாக இது விளங்குகின்றது
தாக்குதலின்-எதிர்ப்பாற்றல் இந்த துனுக்கு(Snaps)களின் கோப்பு முறைமையில் உள்ள நிகழ்வுகளானது தற்காலிகமானவையாகவும் கிட்டத்தட்ட சாத்தியமில்லாதவை யாகவும் உள்ளன, அதைவிட இவை படிக்க மட்டுமேயானதும் இது இரும கையொப்பமும் கொண்டுள்ளதால் மிகவும் பாதுகாப்பானதாக உள்ளன. இவற்றின் திறனை எந்த நேரத்திலும் சரிபார்க்க முடியும் அதனோடு நம்முடைய கணினியின் பாதுகாப்பானது, பணி துவங்குவதிலிருந்து பணிநிறுத்தம்வரை செயல்பட்டுகொண்டே இருக்கும்.
தெரிவுசெய்திடும் சுதந்திரம் இந்த துனுக்கு(Snaps)களானவை அடிப்படை உபுண்டு கோர் முறைமையின் விருப்ப நீட்டிப்புகளாகும். எந்தவொரு விற்பனையாளரிடமும் அவை கிடைக்கின்றன மேலும் , இவை நன்கு வரையறுக்கப்பட்ட இடைமுகங்கள் மூலம் வேறு எந்த துனுக்கு(Snaps)களுடனும் மிகப்பாதுகாப்பாக இணைக்க முடியும். எனவே,உபுண்டு கோரானது நம்மை பாதுகாப்பில்லாமல் உள்ளே இணைக்க அனுமதிக்காது
ஒற்றை அட்டை கணினியான 32 பிட் ARM ,ராஸ்பெர்ரி பை (2 மற்றும் 3) , 64 பிட் ARM குவால்காம் டிராக்போர்டு முதல் முழுஅளவிலான இன்டெல்IoT SoCsவரை இந்தஉபுண்டு கோரானது ஆதரிக்கின்றது அதைவிட அமேசான், மைக்ரோசாப்ட் கூகுள் ஆகியமுன்னனி மேககணினிகளிலும் இது செயல்படும் திறன்கொண்டது

உபுண்டு எனும் லினக்ஸ் இயக்கமுறைமை முதலில் செயல்படுமாறு துவங்க செய்வதற்காக

நம்மில் ஒருசிலர் உபுண்டு ,விண்டோ ஆகிய இரு இயக்கமுறைமைகளையும் ஒரே கணினியில் நிறுவுகை செய்து இயக்கி பயன்பெறுவோம் இவ்வாறான கணினியில் துவக்கத்தின்போது உபுண்டு அல்லது விண்டோ ஆகிய இரண்டில் எதனை நாம் பயன்படுத்தவிழைகின்றோம் என்பதற்கான பட்டியல் தோன்றி அதில் நாம் தெரிவுசெய்திடும் இயக்கமுறைமை துவங்கி செயல்படுமாறு அமைத்திருப்போம் ஒருசில நேரங்களில் இவ்வாறான வாய்ப்பிற்கான திரை தோன்றாமலேயே நேரடியாக விண்டோ இயக்கமுறைமை செயல்படத்துவங்கிவிடும் அதற்கு பதிலாக கணினியின் துவக்கத்தின்போது உபுண்டு அல்லது விண்டோ ஆகிய இரண்டில் எதனை நாம் பயன்படுத்த விழைகின்றோம் என்ற பட்டியில் தோன்றினால் நல்லது என விரும்புவோம் அதற்காக பின்வரும் படிமுறைகளை பின்பற்றிடுக
படிமுறை1 உபுண்டு இயக்கமுறைமை நேரடியாக செயல்படும் யூஎஸ்பி(Live USB) ட்ரைவை அதற்கான வாயிலில் செருகுக
படிமுறை2 தொடர்ந்து கட்டளைவரி சளரத்தினை திறந்து அதில்
$Sudo apt-get-install efibootmgr
என்றவாறு கட்டளைவரியை உள்ளீடுசெய்து உள்ளீட்டு விசையை அழுத்துக பின்னர் வரியம் திரையில் நம்முடைய கடவுச்சொற்களை உள்ளீடு செய்துகொண்டு Yஎன்ற பொத்தானை அழுத்துக உடன் பின்வருமாறான விவரங்களுடன் திரை தோன்றிடும்
BootCurrent: 0001
Timeout: 0
Bootorder: 0001,0002,0003
Boot 0001 Window
Boot 00002 Ubuntu
Boot 0003 EFI USB Drive
தற்போது கணினியானது எந்த வரிசைகிரமத்தில் துவங்குகின்றது என காண்பிக்கின்றது இதன்பின்னர் பின்வரும் கட்டளைவரியை உள்ளீடுசெய்திடுக
$Sudo efibootmgr -o 0002,0001,0003
தொடர்ந்து கட்டளைவரி சளரத்திலிருந்து வெளியேறுக மேலும் யூஎஸ்பி ட்ரைவையும் வெளியிலெடுத்திட்டபின்னர் கணினியை மறுதுவக்கம் செய்திடுக உடன் கணினியின் இயக்கம் துவங்கி நாம் விரும்பியவாறான பட்டி திரையில் தோன்றி நாம் எந்த இயக்கமுறைமையை துவங்க விரும்புகின்றோம் எனக்கோரிடுவதை காணலாம்

லினக்ஸ் விண்டோ ஆகிய இரண்டு இயக்கமுறைமைகளை ஒரே கணினியில எவ்வாறு செயல்படுத்திடுவது

நாம் எவ்வளவுதான் கட்டணமற்ற லினக்ஸ் இயக்கமுறைமைபற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தாலும் பழகிய விண்டோவை விட்டு வெளியேற நம்மில்பலர் தயங்கி மயங்கி இருக்கின்றோம் அவ்வாறானவர்கள் இந்த இரட்டை இயக்கமுறைமையை செயல்படுத்தி திருப்தியுற்றால்அதன்பின்னர் முழுவதுமாக லினக்ஸ் இயக்கமுறைமைக்கு எளிதாக மாறி கொள்ளலாம் முதலில் டிவிடி எனும் முந்தைய குறுவட்டுகளில் அல்லது பென்ட்ரைவ்களில் இந்த இரன்டு இயக்கமுறைமைகள் தயாராக உள்ளனவா என சரிபார்த்து கொள்க பின்னர் Windows 10Media Creation Tool என்பதை பதிவிறக்கம்செய்து நிறுவுகை செய்து கொள்க இது விண்டோ 10 இயக்கமுறைமையை யூஎஸ்பி அல்லது டிவிடி வாயிலாக துவங்குவதற்கு உதவிடும் தொடர்ந்து உபுண்டு18.04ஐ பதிவிறக்கம் செய்து வைத்து கொள்க மேலும் Etcher என்பதையும் பதிவிறக்கம்செய்து நிறுவுகை செய்து கொள்க இது உபுண்டு 18.04 இயக்கமுறைமையை யூஎஸ்பி அல்லது டிவிடி வாயிலாக துவங்குவதற்கு உதவிடும் மிகமுக்கியமாக நம்முடைய கணினியின்மிகமுக்கியமான கோப்புகளைபிற்காப்பு செய்து கொள்க தொடர்ந்து விண்டோ, உபுண்டு ஆகிய இயக்கமுறைமைகளை யூஎஸ்பி அல்லது டிவிடி வாயிலாக துவங்குவதற்கு அவைகளில் தனித்தனியாக பதிவேற்றம் செய்து கொள்க நாம் ஏற்கனவே விண்டோ10நம்முடைய கணினியில் நிறுவுகைசெய்து பயன்படுத்தி கொண்டிருந்தால் அதனோடு சேர்த்து உபுண்டு 18.04 நினைவகத்தை பிரித்து நிறுவுகை செய்வது அல்லது தற்போதுதான் புதியதாக இரண்டு இயக்கமுறைமைகளையும் நினைவகபகுதிபிரிப்பு செய்து நிறுவுகை செய்வது ஆகிய இருவழிமுறைகளில் செய்திடலாம் இரண்டாவது வழிமுறையை இப்போது காண்போம்முதலில் விண்டோ10 ஐ நிறுவுகை செய்வதற்கானயூஎஸ்பி அல்லது டிவிடி யை அதற்கான வாயிலில் செலுத்தி F12எனும்செயலி விசையை அழுத்தி கணினியின் இயக்கத்தை துவங்க செய்திடுக முதலில் “press any key to boot from the installation mediaஎன்றசெய்தியுடன் தோன்றிடும் உடன் ஏதேனும் ஒரு விசைஅல்லது பெரும்பாலும் உள்ளீட்டு விசையைஅழுத்துக பின்னர் விரியும்திரையில் நாம் பயன்படுத்த விரும்பும் மொழி விசைப்பலகையில் எந்த நாட்டின் பாவணை ஆகியவற்றை தெரிவுசெய்து கொண்டுNext எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதனை தொடர்ந்து தோன்றிடும் திரையில் Install nowஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விண்டோ10இயக்கமுறைமையை நிறுவுகைசெய்திடும் பணி துவங்கிடும் அதன்பின்னர் விரியும் திரையில் product key விவரங்களை கோரும் கைவசம் இருந்தால் உள்ளீடுசெய்திடுக இல்லையெனில் I don’t have a product key என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து கொண்டுNext எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக தொடர்ந்து தோன்றிடும் திரையில் Windows 10 Home அல்லது Windows 10 Pro போன்றவற்றில் நம்முடைய பதிப்பினை தெரிவுசெய்து Next எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதனை தொடர்ந்து விரியும் திரையில் உரிமை அனுமதி யில் Iaccept the licence termsஎன்பதை தேர்வுசெய்து கொண்டு Next எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் இருவாய்ப்புகள் நம்முன் விரியும்அவற்றுள் Custom: Install Windows only (advanced)எனும் வாயப்பினை தெரிவுசெய்து கொள்க உடன் விரியும் un allocated எனும்திரையில் newஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இதன்பின்னர் விரியும் திரையில் இயக்ககத்தின் அளவை 40 ஜிபி அல்லது 64ஜிபி யாக தெரிவுசெய்து கொள்க மிகுதியை லினக்ஸ் பயன்படுத்தி கொள்ளும் நினைவக பகுதி பிரிப்பு போதுமானதாக இருந்தால் Next எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக தொடர்ந்து விண்டோ10இயக்கமுறைமை வெற்றிகரமாக நிறுவப்பட்டுவிடும் அடுத்து லினக்ஸ் நிறுவுகைசெய்திட தயாராகலாம் அதற்காக பின்னர் விண்டோ10திரையில் உபுண்டு 18.04 இயக்கமுறைமையுள்ள யூஎஸ்பி அல்லது டிவிடியை பொருத்துக உடன் தோன்றிடும் திரையில் Try UbuntuorInstall Ubuntuஆகிய இருபொத்தான்களில் Try Ubuntuorஎன்ற பொத்தானை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் உபுண்டு திரையில் Install Ubuntu 18.04 LTSஎனும் பொத்தானை தெரிவுசெய்து இருமுறை சொடுக்குக இதன் பின்னர் விரியும் திரயையில் விரும்பும் மொழியை தெரிவுசெய்து கொண்டு Continueஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக தொடர்ந்து விரியும் திரையில் விரும்பும் விசைப்பலகையை (keyboard layout) தெரிவுசெய்து கொண்டு Continueஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குகபின்னர் விரியும் திரையில் Normal அல்லது a Minimal installationஆகிய இரு வாய்ப்புகளில் Normal எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து கொண்டு Continueஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக தொடர்ந்து விரியும் திரையில்நாம் இரண்டு இயக்கமுறைமையை நிறுவுகைசெய்திடவிரும்புவதால் Install Ubuntu alongside Windows 10. எனும் வாய்ப்பினை தெரிவுசெய்துகொண்டுInstall Nowஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குகஅதனை தொடர்ந்து விரியும் திரையில் விண்டோவிற்கு ஒதுக்கீடுசெய்ததுபோக மிகுதிகாலி நினைவகத்தை லினக்ஸ் தெரிவுசெய்து கொண்டு இவையிரண்டும்அருகருகே தோன்றிடும் Install Nowஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் அனைத்தும் சரியாக இருக்கின்றது எனில் Continueஎனும் பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக அடுத்து தோன்றிடும்திரையில் நம்முடைய பெயர் கணினியின் பெயர் பயனாளரின் பெயர் கடவுச்சொற்கள் போன்ற விவரங்களை உள்ளீடுசெய்து கொண்டு Continueஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குகஉடன் நிறுவுகை பணிவெற்றிகரமாக முடிவடைந்துவிடும் அதனைதொடர்ந்து கணினியின் இயக்கம்மறுதுவக்கமாகும் அதில் Ubuntu or Windows 10 இரண்டு இயக்கமுறைமைகள் அருகருகே வீற்றிருக்கும்நாம் விரும்பும் இயக்கமுறைமையை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் போதும் உடன் நாம்தெரிவுசெய்த இயக்கமுறைமை செயல்படதுவங்குவதைகாணலாம்

மைக்ரோசாப்ட்டின் விண்டோசேவையாளர்ஒருஅறிமுகம்

இந்த மைக்ரோசாப்ட்சேவையாளர் இயக்கமுறைமைஎன்பது ஒரு சேவையாளர் வாய்ப்பாகும் இது YYMM வடிவமைப்பில்அரையாண்டு சேவையென்றும் (Semi-Annual Channel (SAC)),YYYY என்ற வடிவமைப்பில் நீண்டகால சேவையென்றும் (Long-Term Servicing Channel (LTSC))இரண்டுசேவைகளாக பிரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன இவற்றுள் அரையாண்டு சேவையானது நீண்டகால சேவையுடன் ஒத்தியங்காது மேலும் இது வரைகலை இடைமுகப்பு செய்யஇயலாது ஆனால் நீண்டகாலசேவையானது அனைத்து வடிவமைப்புடன் ஒத்தியங்கிடும் மேலும் இது வரைகலை இடைமுகப்பு செய்திடும் வசதிகொண்டது அதுமட்டுமல்லாது அவ்வப்போது புத்தாக்கம்செய்துகொள்ளும் தன்மைகொண்டது ஆயினும் இதனுடைய LTSC Server Core பதிப்பானது வரைகலை இடைமுகப்புடன் ஒத்தியங்காது இந்த நீண்டகாலசேவையானது Essential, Standard ,Datacenter ஆகிய மூன்றுவகை பதிப்புகளில்ஐந்தாண்டு பயன்பாடாக கிடைக்கின்றது தேவையெனில் மேலும் ஆறாண்டுகளுக்கு இதனை விரிவுபடுத்தி கொள்ளமுடியும்

விண்டோ இயக்கமுறைமை செயல்படும் கணினியை இயக்கதுவங்குவதற்கான கடவுச்சொற்கள் மறந்துவிட்டோம் என்னசெய்வது

இவ்வாறு தவித்திடும் நிலையில் நம்மிடம் கைவசம் யூஎஸ்பி வாயிலாக லின்க்ஸ் இயக்கமுறைமையுடன் செயல்படும் பென்ட்ரைவ் உள்ளதாக கொள்க அதனை அதற்கான வாயிலில் செருகி இந்த யூஎஸ்பி வாயிலாக செயல்படும் லினக்ஸ் இயக்குமுறைமையுடன் கூடிய பென்ட்ரைை செயல்படுத்தி நம்முடைய கணினியை இயக்கதுவங்கிடுக உடன் விரியும் திரையில் Try Fedora என்றவாறான வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தோன்றிடும் live-userஎனும் திரையிலிருந்து வெளியேறி root.என்பதற்குள் உள்நிழைவு செய்திடுக (இந்த படிமுறை தேவையில்லைஇருந்தாலும் நம்முடைய பணிதொடர்ந்து நன்றாக அமைவதற்கு இந்த படிமுறையைபின்பற்றிடுக) தொடர்ந்து sudo dnf install -y chntpw என்ற கட்டளைவரியின் வாயிலாகchntpw எனும் துனைச்-செயலியை இணையஇணைப்புடன் நம்முடைய கணினி உள்ளதாவென உறுதிபடுத்திக் கொண்டு நிறுவுகை செய்து கொள்க பிறகு sfdisk -l …என்பதன் துனையுடன் எந்தெந்த பிரிக்கப்பட்ட பகுதிகள் mounted செய்யப்பட்டுள்ளன எனசரிபார்த்து கொள்க தொடர்ந்து sudo mount /dev/sda2 /mnt/Microsoft/என்ற கட்டளைவரியை உள்ளீடுசெய்து (அதாவது/dev/sda2)எனும் பகுதி பிரிப்பானை செயல்படுத்திடுக பிறகு cd /mnt/Microsoft/Windows/System32/config/ என்ற கட்டளைவரியை உள்ளீடுசெய்து config எனும் கோப்பகத்திற்கு மாறிகொள்கSecurity Account Manager (SAM) எனும் தரவுதளத்தில் பயனாளரின் ஆவணங்களை சரிபார்த்து கொள்க பின்னர் அதில் sudo chntpw -i SAMஎனும் கட்டளைவரியை உள்ளீடுசெய்து இந்த SAMஎனும் பயனாளர்கணக்கு ஆவணங்களை திருத்தம் செய்திட தயாராகஆகுக தொடர்ந்து அதில் Edit user data and passwords:என்பதில் 1 எனஉள்ளீடுசெய்திடுக பின்னர் Archit-PC என்றவாறு நம்முடைய பயனாளர்பெயரை உள்ளீடு செய்திடுக பிறகு இந்த Archit-PC என்றவாறான பயனாளர் பெயருக்கான கடவுச்சொற்களை திருத்தம்செய்திட 1 என்பதை உள்ளீடுசெய்துபழைய கடவுச்சொற்களை நீக்கம்செய்திடுக அல்லது 2 என உள்ளீடுசெய்துபுதிய கடவுச்சொற்களை அமைத்திடுக இதனை சேமித்து வெளியேறுக இதன்பின்னர் நம்முடைய விண்டோ இயக்கமுறைமையுள்ள கணினியை யூஎஸ்பி இல்லாமல் செயல்படுத்திடுக தோன்றிடும் திரையில் 1 என உள்ளீடுசெய்தபின் தோன்றிடும் திரையில் Sign in என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து கடவுச்சொற்கள் இல்லாமல் கணினிக்குள் உள்நுழைவுசெய்திடுக அல்லது 2 எனகொடுத்து கடவுச்சொற்களை மாற்ரியமைத்திருந்தால் அந்த கடவுச்சொற்களின் வாயிலாக உள்நுழைவுசெய்திடுக

தரவுகளின் சேமிப்பிற்கு FreeNAS ஐ பயன்படுத்தி கொள்க

தரவுகளின் சேமிப்பு கட்டமைப்பானது பொருட்களின் அடிப்படையிலான சேமிப்பு(object based storage). தொகுப்பான சேமிப்பு(block storage), கோப்பமைவுசேமிப்பு(file system storage) ஆகிய மூன்று வகையாக வகைபடுத்தபடுகின்றது படங்கள் பாடல்கள் போன்றவைகளை தேக்கி-வைத்திடும் முகநூல் போன்றவை இந்த பொருட்களின் அடிப்படையிலான சேமிப்பு (object based storage) வகையை சார்ந்ததாகும் வரிசையாக தரவுகளை மின்காந்த நாடாக்கள், தற்காலிக நினைவகம் ஆகியவற்றில் சேமிப்பது இந்த தொகுப்பான சேமிப்பு (block storage)வகையை சார்ந்தவையாகும் வன்தட்டுகள் வட்டுகள் ஆகியவற்றில் தரவுகளை சேமிப்பது இந்த மூன்றாவதான கோப்பமைவு சேமிப்பு(file system storage) வகையை சார்ந்ததாகும்
கட்டணமற்ற வலைபின்னலுடன் இணைந்த சேமிப்பு(Free Network Attached Storage(FreeNAS))என்பது தரவுகளின் சேமிப்பிற்கான மிகவும் பிரபலமான இயக்க முறைமையாகும்.FreeNASஎன்பது ஒரு இயக்க முறைமையாகும், இது நெட்வொர்க்கில் தரவுகளை பகிர்ந்து கொள்வதற்கு ஏதேனும் வன்பொருள் மேடையில் நிறுவப்படவேண்டுமெனில். FreeNAS என்பது நம்முடைய தரவிற்கான ஒரு மையப்படுத்தப்பட்ட எளிதில் அணுகக்கூடிய இடத்தை உருவாக்குவதற்கானதொரு எளிமையான வழியாகும்.நம்முடைய தரவுகளனைத்தையும் பாதுகாக்க, சேமித்து, காப்புப்பிரதி எடுக்க ZFS உடன் இதனை சேர்த்து பயன்படுத்தவேண்டும். FreeNAS எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது, நம்முடைய வீட்டின் சொந்த தனிநபர் தரவுகள், சிறு வணிகநிறுவனத்தின்தரவுகள், பெரிய நிறுவனத்தின் தரவுகள் ஆகிய அனைத்தையும் தேக்கிசேமித்து வைத்திடுவதற்கு மிகப்பேருதவியாக இந்த FreeNAS விளங்குகின்றது .
இது இணையத்தின் இடைமுக நிருவாக பணிகளை எளிதாக்குகிறது. இதன்கட்டமைமைப்பின் ஒவ்வொரு அம்சமும் இணைய இடைமுகத்திலிருந்து நிர்வகிக்கலாம் எந்தவிடத்திலிருந்தும் நம்முடைய தரவுகளை 24மணிநேரமும் இதில் சேமித்திடவும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திகொள்ளவும் முடியும்

இதனைபின்வரும் படிமுறைகளை பின்பற்றி செயல்படுத்தி தரவுகளை சேமித்து பயன்பெறுக 1 யூஎஸ்பிஅல்லது சிடிரோம் வாயிலாக நம்முடைய கணினியின் கட்டமைவிற்கேற்ற பொருத்தமானதை http://www.freenas.org/என்ற இணைய பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்க 2 பின்னர் பயாஸ் அமைப்பின் அடிப்படையில் கணினியின் துவக்கத்தை யூஎஸ்பி வாயிலாக துவங்கிடுமாறு செய்திடுக 3.பின்னர் FreeNAS ஐ நிறுவுகை செய்து கொள்க 4.அதன்பின்னர் இணையவரைலை இடைமுகப்பு அல்லது கணினியின் வரைகலை இடைமுகப்பு வாயிலாக முதன்மைக கடவுச்சொல்லின்அடிப்படையில் உள்நுழைவுசெய்திடுமாறு அமைத்திடுக 5.பின்னர் நம்முடைய தரவுகளின் அளவு தேக்கிவைத்திடும் விருப்பம் செயல்படும் பயன்பாடு ஆகியவற்றின் வாயிலாக தரவுகளை இதில் சேமிப்பதற்கான வழியை அமைத்திடுக

Previous Older Entries