பைதான் எனும் கணினிமொழி நிரலாளர்களுக்கு உதவிடும் IDEs

தற்போது நாம் பயன்படுத்திவருகின்ற முதன்மையான இணையதளங்கள் கணினி பயன்பாடுகள் செயற்கை நினைவக பயன்பாடுகள் போன்ற அனைத்தும் பைதான் எனும் கணினிமொழியின் வாயிலாகவே கட்டமைத்து உருவாக்கப்பட்டுள்ளன. மிகமுக்கியமாக OpenShot, Blender, Calibre போன்றபிரபலமான செயல்திட்டங்கள் இதனுடைய வாடிக்கையாளர்-களாகும் என்ற செய்தியை மனதில் கொள்க அவ்வாறான பைதான் எனும் கணினி-மொழியில் நிரல்தொடர்எழுதவிரும்புவோர்களுக்கு பின்வரும் ஒருங்கிணைந்த மேம்படுத்திடும் சூழல் மிகமுதன்மை வாய்ந்தவைகளாகும்
PyCharmஎனும் ஒருங்கிணைந்தபயன்பாட்டினை மேம்படுத்திடம் சூழலானது பைதான் எனும் கணினிமொழியினை அறிந்து கொள்ள விழையும் துவக்கநிலையாளர்களும் பைதான் எனும் கணினிமொழியில் நல்ல அனுபவம் உள்ளவர்களும் பயன்படுத்தி கொள்ளுமாறு ஏராளமான வசதிவாய்ப்புகளை கொண்டமிகப்பிரபலமானதாகும் இது அப்பாச்சி2. அனுமதியின் அடிப்படையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது மேலும் விவரங்களுக்கும்பதிவிறக்கம் செய்து கொள்ளவும் https://www.jetbrains.com/pycharm/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க
Spyder எனும் ஒருங்கிணைந்தபயன்பாட்டினை மேம்படுத்திடம் சூழலானதுபைதான் எனும் கணினிமொழியினை அறிவியில் ஆய்விற்கு பயன்படுத்தி கொள்பவர்களுக்கு பேருதவியாய் விளங்குகின்றது மேலும் விவரங்களுக்குhttps://github.com/spyder-ide/spyder எனும் இணையதளமுகவரிக்கு செல்க
PyDevஎனும் ஒருங்கிணைந்தபயன்பாட்டினை மேம்படுத்திடம் சூழலானதுபைதான் எனும் கணினிமொழியினை கொண்டு பயன்பாடுகளை உருவாக்கிடும்போது பணியை எளிதாக்கிடும் பொருட்டு code completion, debugging, adds a token browser, refactoring tools போன்ற வசதிவாய்ப்புகளை வழங்குகின்றது மேலும் விவரங்களுக்கும்பதிவிறக்கம் செய்து கொள்ளவும் http://www.pydev.org/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க
Eclipseஎனும் ஒருங்கிணைந்தபயன்பாட்டினை மேம்படுத்திடம் சூழலானதுபைதான் எனும் கணினிமொழியினை கொண்டு பயன்பாடுகளை பயனாளர்களின் கற்பணைத்திறனிற்கு ஏற்றவாறு மாற்றியமைத்திட அனுமதிக்கின்றது மேலும் விவரங்களுக்கும்பதிவிறக்கம் செய்து கொள்ளவும் https://eclipse.org/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க
.மேலும் PyScripter,LeoEditor, Bluefish,Geany ஆகிய ஒருங்கிணைந்தபயன்பாட்டினை மேம்படுத்திடம் சூழல்களானதுபைதான் எனும் கணினிமொழியில் நிரலாளர்கள் பயன்படுத்தி கொள்ள தயாராக இருக்கின்றன

SageMath ஒரு அறிமுகம்

கணக்கில் உள்ள நுணுக்கங்களை மேலும் நன்றாக கற்று அறிந்து கொள்ளவேண்டும் எனும் அதிக ஆர்வம் உள்ளவர்களுக்காக MATLAB, Mathematica, Magma, Maple என்பன போன்ற பல்வேறு தனியுடைமை இணைய தளங்கள் பயன்படுத்தி கொள்வதற்காக ஏராளமாக உள்ளன ஆனால் இவைகளை கட்டணத்துடன் மட்டுமே பயன்படுத்தி கொள்ளமுடியும் என்ற நிலையில் கணக்கின் நுணுக்கங்களை அறிந்து கொள்ளவிழைகின்ற சாதாரணமானவனுக்கும் உதவ காத்திருப்பதுதான் SageMath எனும் கட்டற்ற தளமாகும் இது பைத்தானின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு GPLv3 எனும் அனுமதியின் அடிப்படையில் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்வதற்காக வெளியிடப்பட்டுள்ளது இயற்கணிதம், வடிவியல், எண் கோட்பாடு, குறியாக்கவியல், எண் கணக்கீடு ,நுண்கணிதம் ஆகிய அனைத்தை பற்றிய ஆய்வாளர்களுக்கும் கல்லூரிகளில் மேல்நிலைபள்ளிகளில் கணிதத்தை எளிதாக கற்பிக்கவும் இதனை பயன்படுத்தி கொள்ளலாம் முந்தைய வரைகலை உரை தொடர்பான உள்ளீடுகளையும் வெளியீடுகளையும் மறுபயன்பாட்டிற்கும் மறு ஆய்விற்கும் இணையஉலாவியின் அடிப்படையில் செயல்படும் குறிப்புதாளில் பயன்படுத்தி கொள்ளமுடியும் இது Firefox, Opera, Konqueror, Google Chrome ,Safari போன்ற அனைத்துஇணையஉலாவிகளிலும் செயல்படக்கூடியதாகும் இது ஐபைதானை பயன்படுத்தி உரைஅடிப்படையிலான கட்டளைவரி இடைமுகம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது இது பன்முகசெயலிகள், பல செயலிகள் , விநியோகிக்கப்பட்ட கணினி ஆகியவற்றை தன்னுடைய இணைசெயலாக்கத்திற்குபயன்படுத்தி கொள்கின்றது இது நுண்கணிதத்திற்கு Maxima , SymPy ஆகியவற்றையும் நேரியல் எண் இயற்கணிதத்திற்கு GSL, SciPy , NumPy ஆகியவற்றையும் பன்முக புள்ளிவிவரங்களுக்கு R , SciPy ஆகியவற்றையும் ஆதரிக்கின்றது மேலும்SQL, HTTP, HTTPS, NNTP, IMAP, SSH, IRC, FTP ஆகியவற்றுடன்இணக்கமாக செயல்படுமாறு இது கட்டமைக்கப்பட்டுள்ளது இது — Linux, macOS, Microsoft Windows, Solaris, Android , iOS.ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது
இதனை நிறுவுகை செய்தபின் முதன்முதல் செயற்படுத்திட முனையும் புதியவர்களுகான அடிப்படைகணிதத்திற்கான கட்டளைவரிகள் பின்வருமாறு
“four operations” a+b, a-b, a*b, a/b
power a^b or a**b
square root sqrt(a)
n-th root a^(1/n)
மேலும் கணக்கின் அடிப்படையான முழுஎண்ணிற்கான கட்டளைவரிகள் பின்வருமாறு
integer division a // b
remainder a % b

quotient and remainder divmod(a,b)
factorial n! factorial(n)
binomial coefficient n k binomial(n,k)
உண்மையான எண்கள் ,சிக்கலான எண்கள் ஆகியவற்றின் அடிப்படையான கட்டளைவரிகள் பின்வருமாறு
integer part floor(a)
absolute value, modulus abs(a)
elementary functions sin, cos
இதனை பயன்படுத்தி கொண்டிருக்கும்போது எந்தநிலையிலும் உதவிக்கு பின்வருமாறான கட்டளைகளை செயல்படுத்திடுக
sage: keyword?
Here I run
sage: cot?
மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் http://www.sagemath.org/ எனும் இணையதளபக்கத்திற்கு செல்க

கையடக்க பயன்பாடுகளின் இணையம்(PortableApps.com)ஒரு அறிமுகம்

இது உலகாளவிய மிகவும்பிரபலமான கையடக்க மென்பொருட்களின் தொகுப்பாக விளங்குகின்றது அதாவது நமக்குவிருப்பமான நம்முடைய பயன்பாடுகளை நாம் எங்கு சென்றாலும்கையோடு எடுத்து செல்லாமல் இதனை பயன்படுத்திகொள்ள இது அனுமதிக்கின்றது இதுDropbox, Google Drive, OneDrive என்பன போன்ற எந்தவொரு மேககணினியின் இயக்கககோப்பகத்திலும் செயல்படும் திறன்மிக்கது மேலும் USB flash drive, memory card, portable hard drive என்பனபோன்ற எந்தவொரு கையடக்க சாதனங்களிலும் இதனை சேமித்து வைத்து கொள்ளமுடியும் இது மில்லியன் கணக்கான கட்டற்ற கட்டணமற்ற பயன்பாடுகளை நாம் பயன்படுத்தி கொள்வதற்காக சேகரித்து தொகுத்து வைத்துள்ளது இதனை நம்முடையகையடக்கசாதனத்திலிருந்து அல்லது மேககணினி கோப்பகத்திலிருந்து அல்லது நம்முடைய கணினியிலிருந்து எங்குவேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் செயல்படுத்தி பயன்பெறலாம் ஒருசில சொடுக்குதலில் நாம் விரும்பும் எந்தவொரு பயன்பாட்டினையும் செயல்படுத்தி பயன்பெறலாம் இது தானியங்கியாக அவ்வப்போது குறிப்பிட்ட பயன்பாட்டினை மேம்படுத்தி நிகழ்நிலைபடுத்திக்கொள்கின்றது நமக்கு விருப்பமானவைகளை எளிதாக தேடி பெறுவதற்கு ஏதுவாக இது நன்கு கட்டமைக்கபட்டு இருக்கின்றது நாம் விரும்பும் வகையிலான தோற்றத்தில் இதனுடைய திரையை மாற்றியமைத்து பயன்படுத்தி கொள்ளலாம் இதன் வாயிலாக எந்தவொரு கணினியிலும் நம்முடைய சொந்த எழுத்துருக்களை பயன்படுத்தி கொள்ளமுடியும் இது மிகமேம்பட்ட பல்வேறு வசதி வாய்ப்புகளை கொண்டுள்ளது இதில் தயார் நிலையிலுள்ள ஆறு பயன்பாடுகளுடன் நாம் வரும்பும் பயன்பாடுகளையும் சேர்த்து ஒருசில நிமிடங்களில் நம்முடைய சாதனங்களில் நிறுவுகை செய்து பயன்படுத்தி கொள்ளமுடியும் இதிலுள்ள நாம் விரும்பும் பயன்பாடுகளை நம்முடைய USB அல்லது மேககணினி கோப்பகம் அல்லது நம்முடைய கணினியில் நேரடியாக நிறுவுகை செய்து பயன்படுத்தி கொள்ளலாம் அல்லது Firefox, Skype,போன்றவற்றின் வாயிலாக நூற்றுகணக்கான கையடக்க பயன்பாடுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அதாவது நம்முடைய இணையஉலாவியையும் நம்முடைய அலுவலக பயன்பாடுகளையும் நமக்கு விருப்பமான விளையாட்டுகளையும் கானொளி படங்களையும் கருவிகளையும் நாம் எங்கு வேண்டுமானாலும் கையோடு எடுத்து சென்று பயன்படுத்தி கொள்ளமுடியும் எவ்வாறு எனில் நம்முடைய கையடக்க சாசனத்தில் இவையனைத்தும் இருப்பதால் நாம் செல்லுமிடத்திலுள்ள கணினியை இவைகளைகொண்டுநம்முடைய கணினியை போன்று பயன்படுத்தி கொள்ளலாம் அல்லவா மேலும் விவரங்களுக்கும் பயன்படுத்தி கொள்ளவும் PortableApps.com எனும் இணையமுகவரிக்கு செல்க

Uvdesk எனும் கட்டற்றஉதவி அமைப்பு ஒருஅறிமுகம்

Uvdesk என்பது SaaS இன் அடிப்படையிலான வாடிக்கையாளருக்கு தேவையான சிறப்பான அனைத்து சேவைகளையும் வழங்கும் ஒரு கட்டற்றஉதவி தீர்வு-மையமாக விளங்குகின்றது இது Amazon, eBay, Etsy, Flipkart ஆகியவற்றுடனும் ஒருங்கிணைந்து செயல்படும் திறன்கொண்டுள்ளது Magento, Prestashop, Shopify, CS-Cart, Opencart என்பவைகளை போன்று வாடிக்கையாளர்களுக்கு மின் வணிகத்தில் மிகவிரைவாக பதில் செயல்செய்யக்கூடிய சிறந்த மின்வணிக கடையாககூட இது விளங்குகின்றது Contact Form, Feedback Form, Suggestion Form என்பவை போன்ற நம்முடைய வசதிகேற்றவாறு இணையபடிவங்களை வடிவமைத்து கொள்ள இது அனுமதிக்கின்றது Gmail, Yahoo mail, Hotmail என்பனபோன்ற அனைத்து மின்னஞ்சல் சேவையாளர்களுடன் இது ஒருங்கிணைந்து செயல்படக்கூடியது இது வாடிக்கையாளர்களின் விற்பணைக்கு பிந்தைய அனைத்து சேவைகளையும் வழங்கவல்லது எதிர்பாராத அனைத்து இணையதள தாக்குதல்களிலிருந்தும் நம்மை இது பாதுகாக்ககூடியது agents, tickets, teams, groups, customers ஆகிய பல்வேறு வழிகளிலிருந்தும் தரவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ள இது அனுமதிக்கின்றது நம்முடைய முகவர்களின் திறனை சரிபார்த்திடும் வசதியை வழங்குகின்றது நவீன இணைய திறன்களை மேம்படுத்தி கொள்ளும் வசதிகொண்டது அனைத்து வகையான சமுதாய பல்லூடகங்களுடன் ஒருங்கிணந்து செயல்டக்கூடியது பல்வேறு தரப்பினரிடமிருந்து வரும்பல்வேறு வகைகளிலான மின்னஞ்சல்களுக்கு தேவையான சரியான பதிலை தானாகவே அனுப்புது என்பன போன்ற வசதியை கொண்டது Time format, Timezone, Default Priorities, Default Status, Default Mailbox ஆகிய பணிகளை கையாளும் சிறந்த நிருவாகத்திறனை இது கொண்டுள்ளது

இணைய உலாவலின்போது சோர்வில்லாமல் செயல்படுவதற்கான அறிவுரைகள்

ஒரேதிரையில் ஏராளமான அளவில் இணையஉலாவியினுடைய தாவிப்-பொத்தான்களின் திரைகளை தோன்றிட செய்தும் ஏராளமான அளவில் பயன்பாடுகளின் சாளரங்களை திறந்தும் பணிபுரிவதால் எந்தவொரு பணியும் முழுவதுமாக முடித்திடாமல் அனைத்து பணிகளும் அரைகுறையாகவே தொங்கலாக நின்றுகொண்டிருக்கும் இதனை தவிர்த்திட பின்வரும் அறிவுரைகளை பின்பற்றிடுக
1 இணையஉலாவியில் ஒன்றிற்குமேற்பட்ட தாவிப்பொத்தான்களின்திரைகளை தோன்றிட செய்து அவைகளுக்கிடையே உடனுக்குடன் இடம்மாறிமுக்கியமான பணியை முதலில் முடித்திடமுனையும்போது குறுக்குவழிவிசைகளை பயன்படுத்திகொள்க உதாரணமாக புதிய தாவியின் திரையில் காலியான கூகுள் உரையாவனத்தினை திறந்து பணிபுரிவதற்காக “Ctrl + t” என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்துக பின்னர் விரியும் புதிய தாவியின் திரையில் doc.new என்றவாறு தட்டச்சுசெய்து பணியை துவங்கிடுக
2.இணையஉலாவியில் அடிக்கடி செய்திடும் பணிகளை Ctrl எனும் விசையை அழுத்தி பிடித்துகொண்டு இடம்சுட்டியை சொடுக்குக உடன் மேற்குறிப்பு செய்தவை பட்டியலாக விரியும் அவற்றுள் தேவையானதை தெரிவுசெய்து பணிபரிய துவங்கிடுக
3.இணையஉலாவியின் நம்முடைய உதவிக்கு ஆயிரகணக்கான விரிவாக்க வசதிகள் தயாராக உள்ளன அவற்றுள் நம்முடைய தேவைக்கு பொருத்தமானதை மட்டும் தெரிவுசெய்து பயன்படுத்தி கொள்க
4.இணைய உலாவலின்போது தொடர்ந்த திரையை பார்த்து கொண்டேஇருந்தால் நம்முடைய கண்ணின் பார்வைதெளிவுதிறன் குறைந்து சோர்வாக உணருவோம் இதனை தவிர்க்க 20/20/20 எனும் விதியை பயன்படுத்திடுக அதாவது தொடர்ந்து 20நிமிடம் பணிபுரிந்தவுடன் 20நொடிநேரம் 20மீட்டர்தூரத்திற்கு அப்பால்உள்ள பொருளை கண்களால் கண்டபின்னர் மீண்டும்இணையஉலாவிடும் பணியை தொடருக

நேரடி ஒளிபரப்பின்(Live Streaming) பயன்கள்

தற்போது இணையத்தின் துனையுடன் கல்வி,பணிமேம்பாடு, பொருட்களை கொள்முதல்செய்தல், பொழுதுபோக்கு, தகவல் தொடர்பு, உறவினர்களுடனும் நண்பர்களுடனும் தொடர்புகொள்ளுதல் என்பன போன்ற வரம்பற்ற வசதிவாய்ப்புகளை பெறுகின்றஅளவிற்கு நம்முடைய வாழ்க்கை மிக மேம்பட்டுவருகின்றது அதிலும் நாம் என்ன செய்யவேண்டுமென நினைக்கின்றோமோ அதனை எந்தநேரத்திலும் எந்தவிடத்திலிருந்தும் இணையத்தின் வாயிலாக செயற்படுத்தி பயன்பெறமுடியும் என்ற அளவிற்கு வளர்ந்துவிட்டோம். அவ்வாறன தற்போதைய தொழில்நுட்பவளர்ச்சியினால் உயர்ந்துள்ள இவ்வுலகில் இணையத்தின் வாயிலாக குறிப்பிட்டதொரு செயல்நடை பெறும்போதே அதாவது நிகழ்நிலையிலேயே அதனை நேரடிஒளிபரப்பு (Live Streaming)எனும் புரட்சிகரமான வசதியின் வாயிலாக காட்டியாக காணும் நிலைக்கு தற்போது நாம் முன்னேறி யுள்ளோம். இணையபடப்பிடிப்புகருவி ,திறன்பேசி, இதரசாதனங்கள் ஆகியவற்றின் உதவியுடன் இந்த வசதியானது வியாபார அல்லது தனிப்பட்ட நோக்கங்களுக்காக பொதுமக்களின் பார்வைக்கு கொண்டுசெல்லுமாறு செயல்படுத்தப்படுகின்றது இந்த நேரடி ஒளிபரப்பு எனும் வசதியானது மிகவும் ஆச்சரியமூட்டும் பிரபலநிகழ்வாக உலகில் தனிநபரொருவர் எந்த இடத்தில் இருந்தாலும் கிடைக்குமாறான சிறப்பு தன்மைகொண்ட ஒளிபரப்பாக இது விளங்குகின்றது ஒரு வியாபார நிறுவனம்அல்லது தனிநபர் பற்றிய செய்திகளை விவரங்களை குறிப்பிட்ட தொகுப்பான மக்களுக்கு அவர்கள் அருகில் இல்லை யென்றாலும் அவர்களை சென்றடையுமாறு இது வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிட்ட நிகழ்வில் குறிப்பிட்ட நபர் அல்லது குறிப்பிட்ட குழுவான நபர்கள் கலந்து கொள்ள முடியவில்லை யென்றாலும் அல்லது ஒருபகுதி நிகழ்வில் மட்டும் கலந்து கொள்வது மிகுதிநிகழ்வில் கலந்து கொள்ள இயலவில்லை என்றாலும் இந்த நேரடிஒளிபரப்பின் வாயிலாக அந்த நிகழ்வு முழுவதும் கலந்து கொண்டவாறு செயல்பட இந்த வசதி உதவுகின்றது இந்த நேரடிஒளிபரப்பு என்பது கானொளிகாட்சி மட்டுமே என தவறாக எண்ணவேண்டாம் இதன்வாயிலாக நேரடியாக பங்குகொண்டு குழுவிவாதம் செய்து முக்கியமான பிரச்சினைகளுக்கு தேவையான தெளிவா ன முடிவை எடுக்கமுடியும் இதனை செயல்படுத்தி பயன்பெறுவதற்காக தொழில்நுட்ப சாதனங்களும் அதற்கான செலவுகளும் அதிகமாக ஆகுமோ என பயப்படவேண்டாம் இதற்காக உள்ளமைந்த மைக்ரோ போனுடன் கூடியவெப்கேமிரா, என்கோடர், எளிதாகஅணுககூடிய இணையஇணப்பு, நம்பதகுந்த நேரடிஒளிபரப்பு தளம் ஆகியவை மட்டும்போதுமானவையாகும். இவை யனைத்தும் நம்முடைய திறன்பேசியில் இருந்தால் திறன்பேசியேபோதுமானதாகும்.மேலும் விவரங்களுக்கு https://livestream.com/ எனும் இணையபக்கத்திற்கு செல்க.

நம்முடைய சொந்த webfonts எனும் இணையஎழுத்துருவை செயல்படுத்தி பயன்பெறலாம்

பெரும்பாலும் கணினி பயனர்கள் பலருக்கு கணினியின் எழுத்துருக்களானவை ஒரு மர்மமாகவே விளங்குகின்றன . உதாரணமாக, நாம் ஒரு ஆவணத்தினை கணினியிலுள்ள ஏதேனுமொரு பயன்பாட்டினை கொண்டு வடிவமைத்தபின்னர் அதனை வேறு இடத்திற்கு கொண்டுசென்ற அச்சிடமுயலும்போது அந்த அச்சுபொறியால் அறிந்தேற்ப செய்த Arial போன்ற எழுத்துருக்களை கொண்டு அச்சிடுவதை காணலாம் ஏனெனில் அந்த குறிப்பிட்ட அச்சுப்பொறியில் நம்முடைய பயன்பாட்டில் வடிவமைத்திருக்கும் எழுத்துரு இல்லை அதனால் அந்த அச்சுப்பொறியானது தனக்குதெரிந்த எழுத்துருவைகொண்டு செயல்படுகின்றது ? இதனைத் தடுக்க பல்வேறு வழிகள் உள்ளன: அதாவது சிறப்பு எழுத்துருக்களை வேர்டு பயன்பாட்டிலிருந்து அச்சுப்பொறிக்கு கொண்டுசெல்லும்போதும் , PDF போன்ற கையடக்கஆவணமாக உருமாற்றம் செய்திடும்போதும் அதனோடுகூடவே நாம் பயன்படுத்திய நம்முடைய சொந்த எழுத்துருக்களை கொண்டுசெல்லுமாறு வடிவமைத்திடுவது அவற்றுள் ஒரு வழிமுறையாகும் இணையத்தில் கூட ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு எழுத்துருவை அறிந்தேற்பு செய்து பயன்படுமாறு செய்திருப்பார்கள் ஆயினும் இவ்வாறான பிரச்சினையை சரிசெய்திடுவதற்காக நமக்கு CSS பற்றிய ஒரு அடிப்படை புரிதல் இருந்தால்போதும், பொதுவாக பின்வருமாறான அறிவிப்பை காண நேரலாம்: .
h1 { font-family: “Times New Roman”, Times, serif; }
இது Times New Roman எனும் ஒரு குறிப்பிட்ட எழுத்துருவை வரையறுக்கும் வடிவமைப்பாளரின் முயற்சியாகும் , குறிப்பிட்ட கணினியில் இந்த டைம்ஸ் நியூ ரோமன் எனும் எழுத்துரு நிறுவப்பட்டிருந்தால் இவ்வாறான அறிவிப்பை செய்யத் தேவையில்லை . இது உரைக்கு பதிலாக ஒரு வரைகலை குறியீட்டைப் பயன்படுத்துவதை விட சிறப்பாக இருக்கிறது, ஆனால் இது இன்னும் மோசமான, எழுத்துரு அல்லாத நிருவாகத்தின் முறையற்ற செயல்முறையாகும், இருப்பினும், இணையதளத்தினை பயன்படுத்த ஆரம்பித்த முந்தைய நாட்களில் இவ்வாறாகத்தான் தீர்வுசெய்யப்பட்டுவந்தது.
அதன்பின்னர் பின்னர் இணைய எழுத்துரு( webfonts) எனும் நடைமுறை செயல்பாட்டிற்கு வந்தது மேலும் இன்த எழுத்துருக்களை மேலாண்மை செய்திடும் பணியானது வாடிக்கையாளர் கணினியிலிருந்து சேவையகணினிக்கு இடம்பெயர்ந்துவிட்டது. அதாவது வலைத்தளங்களில் உள்ள எழுத்துருக்கள் அனைத்தும் சேவையககணினியால் வாடிக்கையாளர் கணினிக்கு வழங்கப்பட்டு எழுத்துருக்களின் பிரச்சினை தீர்வு செய்யப்பட்டன, பயனாளரின் கணினியில் குறிப்பிட்ட ஒரு எழுத்துரு இருந்தால் மட்டுமே பயனாளரால் இணையஉலாவலை எளிதாக மேற்கொள்ளமுடியும் எனும் பிரச்சினைக்கு தீர்வாக குறிப்பிட்ட எழுத்துருவைக் இணைய உலாவியானது தன்னுடைய இணைய உலாவலுக்காகத்தேடிக்கண்டுபிடிக்கத் தேவையில்லை. கூகுள் போன்ற வழங்குநர்கள் கூட கட்டற்ற உரிமம் பெற்ற எழுத்துருக்களை இணைய உலாவலுக்காக வழங்குகின்றனர், இவ்வாறான எழுத்துருக்களை இணைய வடிவமைப்பாளர்கள் தாம் கட்டமைத்திடும் இணையதளத்தில் கொண்டுவருவதற்காக ஒரு எளிய CSS விதியைமட்டும் தாங்கள் வடிவமைத்திடும் இணைய தளங்களில் சேர்த்தால் போதும்.
இந்த வசதியை கொண்டுவருவதற்காக செலவேதும் செய்யத் தேவையில்லை இது கட்டணமற்றதாகும் கூகுள் போன்ற முக்கிய தளங்கள்கூடஇவ்வாறான கட்டணமில்லாத இணைய எழுத்துருக்களை கொண்டுவர உதவுகின்றன இல்லையென்றாலும் பரவாயில்லை நாமே நம்முடைய சொந்த இணையஎழுத்துருவை உருவாக்கி பதிவேற்றம் செய்து கொள்ளமுடியும் .இது ஒரு எளிமையான CSS விதிமுறையைப் பயன்படுத்துவது போலவும் எளிது அதைவிட நம்முடைய எழுத்துருவை கொண்டு இணையதளத்தின் ஒவ்வொரு பக்கத்தினையும் மேலேற்றம் செய்திடும்போது அதனோடு இதற்கான எழுத்துருவை ஒவ்வொருமுறையும் தேடிபிடித்திட அதிகநேரம் செலவழிக்காமல் நம்முடைய சொந்த எழுத்துருவாக இருப்பதால் மிகவிரைவாக இணையபக்கத்தின் மேலேற்றம் செய்து நம்முடைய இணையதளமானது மிகவேகமாக இயங்குவதை காணமுடியும்
இதற்காக முதலில் கட்டற்ற உரிமம் பெற்ற எழுத்துருவாக இருக்கின்றதாவென சரிபார்த்திடவேண்டும் பொதுவாக தற்போது பயன்பாட்டிலுள்ள எல்லா எழுத்துருக்களும் இலவசமாக இருப்பதால் மென்பொருளின் கட்டற்ற உரிமங்களைப் பற்றி சிந்திக்கவோ அல்லது கவனிப்பதற்கோ நமக்கு நேரமும் காலமும் போதுமானதாகஇல்லை இவைகளுள் எவை கட்டற்றவை என எவ்வாறு நாமறிந்துகொள்வது என்ற குழப்பம் வேறு நம்முடைய மனதில் எப்போதும் அலைகழித்துகொண்டே இருக்கலாம். நிற்க பொதுவாக மைக்ரோசாப்ட், ஆப்பிள், போன்ற நிறுவனங்களிடமிருந்து நாம் கணினியை வாங்கிடும்போது Arial, Verdana, Calibri, Georgia, Impact, Lucida and Lucida Grande, Times and Times New Roman, Trebuchet, Geneva, போன்ற பல்வேறு எழுத்துருக்களையும் உட்பொதிந்தே வழங்கிடுவார்கள் இவைகளை நாம் பயன்படுத்தி கொள்ளலாம் ஆனால்மறுவிநியோகம் மட்டும் செய்திடமுடியாது என்ற செய்தியைமனதில் கொள்க அதனால் இவ்வாறான எழுத்துருக்களை நம்முடைய இணையதள பக்கத்திற்கான எழுத்துருவாக இணைய சேவையகத்திற்கு பதிவேற்ற அனுமதிக்கப்படவில்லை. ஆயினும் கட்டற்ற எழுத்துருக்களான Font Library, Omnibus Type போன்றவை மட்டுமல்லாது கூகுள் ,அடோப் போன்றவைகள்கூட இந்த தடைகளை தகர்த்தெறிந்து விட்டன .இவ்வாறு கட்டற்ற எழுத்துருவிற்காக TTF, OTF, WOFF, EOT போன்ற பல பொதுவான எழுத்துருக்களின் கோப்பு வடிவங்களைப் பயன்படுத்தமுடியும் Sorts Mill Goudy எனும் இணையஎழுத்துருவானது WOFF என சுருக்கமாக அழைக்கப்படும் இணைய திறந்த எழுத்துருவடிவமைப்பு(Web Open Font Format) மொஸில்லா நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது) பதிப்பினை உள்ளடக்கியதை நம்முடைய சொந்த இணைய எழுத்துருவாக பதிவேற்றம் செய்தவதற்காக பயன்படுத்தி கொள்ளமுடியும் ஆயினும் மற்ற வடிவமைப்புகளுக்கும் இதே வழிமுறையை பின்பற்றி செயல்படுத்திடமுடியும் நாம் உருவாக்கி வடிவமைத்த நம்முடைய இணைய எழுத்துருவை
scp GoudyStM-webfont.woff seth@example.com:~/www/fonts/
எனும் கட்டளைவரிவாயிலாகநம்முடைய இணையச்சேவையாளர் பகுதிக்கு பதிவேற்றம் செய்திடுக இது cPanel எனும் வரைகலை மேலேற்றும் கருவி அல்லது இதேபோன்ற இணையகட்டுப்பாட்டு பலகத்தின் வாயிலாக மேலேற்றம் செய்கின்றது தொடர்ந்து
2. @font-face {
font-family: “skfont”;
src: url(“../fonts/GoudyStM-webfont.woff”);
} எனும் கட்டளைவரிகளின் வாயிலாக நம்முடையஇணையபக்கத்தின் CSSஇன் ஒரு @font-face விதியை சேர்த்திடுக தொடர்ந்துநம்மால் படித்து புரிந்துகொள்ளுமாறு இதற்கான பெயரை அமைத்துகொள்க அதன்பிறகு இதனை அழைத்து மேலேற்றுவதற்காக

h1 { font-family: “skfont”, serif; }
என்றவாறு வழங்கப்பட்ட CSS இனத்தில் குறிப்பிட்டு அழைத்திடுக இதன்பிறகு நம்முடைய எழுத்துருவானது நம்முடைய இணையதளத்தினை மேலேற்றம் செய்திடும்போது தானாக விரைவாக மேலேற்றம் ஆவதை காணலாம்

Previous Older Entries Next Newer Entries