Raspberrypi இன்முதன்மையான ஒருங்கிணைந்த சூழல்( IDE)கள்

எந்தவொரு நிரல்தொடரலாளருக்கும் அல்லதுமேம்படுத்துநருக்கும் IDE என அழைக்கபடும் ஒருங்கிணைந்த மேம்படுத்தும்சூழல் மிகஅத்தியாவசிய தேவையாகும் நிரல்தொடர் எழுதுவது அதனைஇயந்திர மொழிக்குமொழிமாற்றம் செய்வது அதன்பின்னர் அதனை பரிசோதித்து பார்ப்பது ஆகியஅனைத்தும் சேர்ந்த ஒரு ஒருங்கிணைந்த மேம்படுத்தும் சூழலே அனைத்து நிரல் தொடர் எழுத்தாளர்ளுக்கும் தேவையாகும் அதாவது CodeEditor, Compiler,interpreter,debugger ஆகிய வை ஒன்றிணைந்த சூழலையே IDE என அழைப்பர் Raspberrypi யும் இவ்வாறான ஒருங்கிணைந்த சூழலை( IDE) ஏராளமான அளவில் கொண்டுள்ளது அவைகளின் பறவை பார்வை பின்வருமாறு
BlueJ IDEஆனது ஜாவா கணினிமொழிக்கானதாகும் இது கல்விற்பதற்கான நோக்கத்திற்காக பயன்படுகின்றது இது எளிய இடைமுகம்கொண்டது கையடக்கமானது மிகவலுவானதொழில்நுட்ப ஆதரவு கொண்டது இதனுடைய இணைய முகவரி ஆகும்
Geany IDE இதுமிகவும் சிறியஅளவானது வரைகலைஇடைமுகப்புடன் கூடிய உரைபதிப்பானாகும் தானியங்கியாக மொழிமாற்றம் தன்மைகொண்டது சி ஜாவா, பைத்தான், பியர்ல் போன்ற பல கணினிமொழிகளின் கோப்புகளை கையாளும் திறன்மிக்கது இதனுடைய இணைய முகவரி ஆகும்
AdafruitWebIDEஇதுஇணையத்தின் வாயிலான இடைமுகவசதி கொண்டது இது 8080 ,80 வாயில்களின் வழியாக இணைய தொடர்பினை அனுகஅனுமதிக்கின்றது இதனுடைய இணைய முகவரி ஆகும்
AlgoIDEஇது ஸ்கிரிப்டிங்கமொழியும் ஒருங்கிணைந்து சூழலும்ஒன்றிணைந்ததாகும் இது மூலக்குறிமுறைவரிகளில் தானியங்கியான உள்ளடக்கமும் மொழிமாற்றியும் கொண்டதாகும் இது வரைகலைஇடைமுகப்பு மட்டுமல்லாது முந்தைய லோகோ நிரல் தொடரையும் ஆதரிக்கும் தன்மைகொண்டதாகும் இதனுடைய இணைய முகவரி ஆகும்
GreenFootIDEஇது புதியவர்களுக்கும் துவக்கநிலையாளர்களுக்கும் எளிதாக பயன்படுத்திட உதவுகின்றது மற்ற ஐடியைவிட மிகஎளிதாக வரைகலை இடைமுகப்பு கொண்டதாகும் ஜாவா குறிமுறைவரிகளைமிகமேம்பட்ட திறனுடன் கையாளும் திறன்கொண்டது ஜினோம்,கேடிஇ எக்ஸ்11 போன்ற வரைகலை சூழலை ஆதரிக்ககூடியது இதனுடைய இணைய முகவரி ஆகும்
CodeblockIDE இது விசுவல்சி++, போர்லெண்டுசி++ போன்ற பல கணினிமொழிகளின் குறிமுறைவரிகளை கையாளும் திறன்மிக்கது இது வாடிக்கையாளர் விரும்பியவாறான கட்டமைவை உருவாக்கிட அனுமதிக்கின்றது இதனுடைய இணைய முகவரி ஆகும்

இயற்கையை பாதுகாப்போம்

நம்முடைய பேராசையினால் மரங்களுக்காக காடுகள் அனைத்தையும் அழித்து ஒழித்துவருகின்றோம் அதுமட்டுமல்லாத வயல்களையும் காங்க்ரீட் கட்டிடங்களாக மாற்றிவருகின்றோம் அதனால் உண்பதற்கான உணவும் உயிர்வாழ்வதற்கான தண்ணீரும் இல்லாத வறண்டுபோன நிலை தற்போது நிலவிவருவது நாமெல்லோரும் அறிந்த செய்தியே நம்முடைய பேராசையினால் இயற்கை வளங்களை அழித்து ஒழித்து வருகின்றோம் அதிலும் நம்முடைய வாழ்க்கையின் வசதிக்காக இயற்கையாக கிடைக்கும் நிலக்கரி பெட்ரோல் டீசல் போன்றவைகளை எரித்து காற்றினை மாசுபடுத்தி வருகின்றோம் ஆனால் இந்த காடுகளிலுள்ள மரங்களானவை நாம் எரித்து காற்றினை மாசுபடுத்திடும் இவ்வாறான கார்பன்டைஆக்சைடை எடுத்துஅதிலுள்ள கார்பனை மட்டும் பிரித்து நாம் பயன்படுத்திடும் கார்பன் பொருளாகவும் நாம்சுவாசிப்பதற்கான ஆக்சிஜனையும் நமக்கு இலவசமாக தருகின்றன மேலும் கடுமையான வெயிலில் பயனத்தின்போது நமக்கு ஏற்படும் சோர்வை போக்கும் நல்ல நிழல்களை நமக்கு தருகின்றன மருந்து பொருட்களையும் அனைத்து உயிர்களும் வாழ்கின்ற மிகச்சிறந்த சூழலை தருகின்றன சுற்றுசூழலை நாம் வாழ்வதற்கேற்றதாக மாற்றியமைக்கின்றன இவ்வாறான காடுகளை பற்றி நேரடியாக செல்லமுடியவில்லையென்றாலும் பரவாயில்லை இணையத்தின் வாயிலாகhttps://www.discovertheforest.org/ எனும் இணையதளபக்கத்திற்கு சென்று அறிந்து கொள்க இவ்வாறான காடுகளை பாதுகாப்போம் பயன்பெறுவோம்

திறந்தநிலை கல்விதிட்டத்திற்கான நூலகம் ஒருஅறிமுகம்

http://opencourselibrary.org/என்ற முகவரியில் உள்ள இந்த இணையதளபக்கமானது பாடதிட்டங்கள், பாடதிட்டங்களின் செயல்கள், நாம் படிப்பதற்கான பாடபுத்தகங்கள், பயிற்சிகள் போன்றவைகளை நாம்விரும்பும் துறை தொடர்பாக வடிவமைக்கப்பட்டு நாம் அனுகி பெறுவதற்கேற்பவும் பகிர்ந்துகொள்வதற்காகவும் தயார்நிலையில் நூலகமாக தொகுத்து வைக்கப்பட்டுள்ளன இவை கிரியேட்டிவ் காமன்ஸ் அனுமதியின் அடிப்படையில் திறந்தவெளிகல்வி வளங்களாக(open educational resources (OER)) நாம் பகிர்ந்து கொள்வதற்கு தயாராக மிககுறைந்த கட்டணத்தில் பயன்படுத்தி கொள்ளுமாறு தொகுத்து வைக்கப்பட்டுள்ளன இதனைonline, hybrid, ,f2f கல்விக்காக பயன்படுத்திகொள்ளலாம் இந்த பாடதிட்டத்தில் முழுவதையும் பயன்படுத்திடுவதற்கு பதிலாக நமக்கு தேவையான பகுதியைமட்டும் பயன்படுத்திகொள்ளலாம் இந்த Open Course Library ஆனது கட்டணமற்றும் இரும அடிப்படையிலும் பகிர்ந்துகொள்ளுமாறும் பாடங்களை நமக்குதேவையானவாறு நகலெடுத்து கொள்ளவும் நாம் விரும்பியவாறு மாற்றியமைத்து கொள்ளவும் மொழிமாற்றம் செய்து கொள்ளவும் முடியும் இந்த பாடதிட்டங்கள் கானொளிகாட்சி கோப்புகளாககூட கிடைக்கின்றது வாருங்கள் வந்து நம்முடைய கல்விநிலையத்திற்கு தேவையான பாடதிட்டங்களை தெரிவுசெய்து பயன்படுத்திகொள்க

வரைபடதரவுதளம் ஒருஅறிமுகம்

பொதுவாக தரவுதளம் என்பதை பற்றி நம்மெல்லோருக்கும் நன்கு அறிமுகம் உண்டு அதுவென்ன வரைபடதரவுதளம் என அனைவரும் புருவத்தையும் உயர்த்துவார்கள் நிற்க வரைபடதரவுதளம் அல்லது வரைபடநோக்கதரவுதளம் என்பது NoSQL எனும் தரவுதளத்தின் ஒருவகையாகும் இதில் வரைபடதேற்றத்தை தரவுகளை தேக்கிவைப்பதற்கும் ஒப்பீடுசெய்வதற்கும் வினாஎழுப்புவதற்கும் பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது அடிப்படையில் மையமுனைகளையும்(nodes) விளிம்புகளையும் (edges) தொகுதியாக கொண்டதேஇந்த வரைபடதரவுதளமாகும் இதில் ஒவ்வொருமையமுனையும் தனிநபர் ,வியாபாரநிறுவனம் போன்றவைகளைகுறிப்பிட பயன்படுகின்றன இவைகளின் இருமையமுனைகளுக்கு இடையேயான தொடர்புகளை குறிப்பதற்காக விளிம்புகள் பயன்படுகின்றன வரைபடதரவுதளத்தில் ஒவ்வொரு மையமுனையுமஒரேமாதிரியானசுட்டிஒன்றினால் வரையறுக்கப்படுகின்றது இவை அம்மையமுனையிலிருந்து வெளிநோக்கி செல்லும் அல்லது மற்றமையமுனையிலிருந்து உள்நோக்கிவருகின்ற தொகுதியான விளிம்புகளை கொண்டிருக்கும் இவ்வாறான ஒவ்வொரு விளிம்பும் எந்தமையமுனையத்திலிருந்து துவங்கி எந்த மையமுனையத்தில் சென்று முடிவடைகின்றது என்ற பண்பியல்புகளையும் ஒரேமாதிரியான சுட்டியையும் கொண்டதாகும் உன்னிடம் காலியானவெள்ளைபலகையிருந்தால் கண்டிப்பாக வரைபடமும் உன்னிடம் இருக்கும்என்பதேஇந்த வரைபடதரவுதளத்தின் அடிப்படைகொள்கையாகும் பொருட்களுக்கு இடையேயான இணையம் என்பதன் அடிப்படை செயலேஇந்த வரைபடதரவுதளத்தின் மிகமுக்கிய பயனாகும் அனைத்து சமுதாய தரவுதளங்களும் இந்த வரைபடதரவுதளத்தின் அடிப்படையிலேயே செயல்படுகின்றன அடிப்படையில் வியாபார ஒழுங்குமுறையையும் விநியோக தொடர்சங்கிலியையும் பராமரிப்பதில் இந்த வரைபடதரவதளம் மிகமுக்கிய பங்காற்றுகின்றது

எந்தவொரு கணினிமொழியையும் கற்றுக்கொள்வதற்கான சிறந்தவழிகள்

1கணினிமொழியைகற்றுக்கொள்ளவிழையும் நபர்ஒருவர்முதன்முதலில் அதன் குறிமுறைவரிகளை நன்கு கற்றறிந்து அவைகளின் செயல்பாடுயாவை அதனால் ஏற்படும் விளைவுகள் யாவை என அறி்ந்து தெளிவுபெறுக
2 அதன்பின்னர் அந்த கணினிமொழியை பற்றிய விளக்க ஆவணங்களை நன்கு படித்தறிந்து தெளிவுபெறுக
3 இணையத்தில் இந்த கணினிமொழிகுறித்த தேடுதல்களை மேற்கொள்க இதனுடைய குறிமுறைவரிகளில் ஏற்படும் பிழைகளையும் அவைகளைசரிசெய்திடும் வழிமுறைகளையும் அறி்ந்துகொள்க
4 இணையத்திலுள்ள இந்த கணினிமொழிக்கான தன்னார்வ குழுக்களுடன் இணைந்து அம்மொழியின் தற்போதை வளர்ச்சி சிக்கல்கள் அதற்கான தீர்வுகள் ஆகியவற்றை அறிந்துகொள்க நமக்கு ஏற்படும்அனைத்து சிக்கல்களுக்கம் தீர்வுசெய்வதற்கான வழிமுறைகளையும் இந்த தன்னார்வ குழுக்களிடமிருந்து அறிந்து கொள்க
5 பின்னர் சிறியஅளவு விளையாட்டு பயன்பாடுகளை வெற்றிகரமாக உருவாக்கி பழகுக
6 அதன் பின்னர் நடைமுறை வாழ்க்கைக்கு தேவையான சிறுசிறு பயன்பாடுகளை உருவாக்கிபயன்படுத்தி சரிபார்த்திடுக
7 பிறகு குறிப்பிட்ட கணினிமொழிபற்றி வெளியிடபட்டுள்ள பல்வேறு புத்தகங்களின் சமீபத்திய பதிப்புகளையும் மின்புத்தகங்களையும் படித்து தெளிவுபடுத்திகொள்க
8 பின்னர் இந்த கணினிமொழி தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கானொளிகள் இணைய தொலைக் காட்சிகள் ஆகியவற்றை கண்டு தெளிவடைந்திடுக
9அதன்பின்னர் குறிப்பிட்ட மொழியின் எடுத்துகாட்டுகுறிமுறைவரிகளை நன்கு படித்து செயல்படுத்தி சரிபார்த்து கொள்க
10 பின்னர் மாதிரி குறிமுறைவரிகளை பின்பற்றி புதியநிரல்தொடர்குறிமுறைவரிகளை உருவாக்கி செயல்படுத்தி பிழைகளைசரிசெய்து இறுதிபயனை சரிபார்த்திடுக
11 மேலும் இந்த கணினிமொழிகளை கையாளுவதற்கான சிறந்த கருவிகளை பயன்படுத்தி கொள்க
11 முடிவாக கணினிமொழியில் நிரல்தொடர் குறிமுறைவரிகளை எழுதிடும் பணியில் வெற்றிபெறும்வரை அயராது பாடுபட்டு இறுதிவிளைவை சரிபார்த்திடுக

பனிப்போர் காலஅரும்பொருட்காட்சிசாலை

இந்த பனிப்போர் காலஅரும்பொருட்காட்சிசாலை coldwarஎனும் இணையதளபக்கமானது அவ்வாறான 1940 ஆண்டுமுதல் 1990 ஆண்டுவரையிலான பனிப்போர் உலக நிகழ்வின்போதான வரலாற்றையும் அதைசார்ந்து அதற்காக பயன்படுத்திய பல்வேறு பொருட்களையும் அறிந்துகொள்ள விழையும் ஆர்வளர்களுக்கான மிகமுக்கிய சான்றாவணமாக விளங்குகின்றது இந்த தளத்திற்குள் உள்நுழைவுசெய்தவுடன் timeline எனும் காலக்கெடுபகுதியில் நாம்விரும்பும் 1940,1950,1960,1970,1980,1990என்றவாறு உள்ள ஆண்டினை தெரிவுசெய்து ஆண்டுவாரியாக அந்த குறிப்பிட்ட காலத்தில் நடந்த நிகழ்வினை அறிந்து கொள்ளலாம் இடதுபுறம் Exhibits எனும் பகுதியை தெரிவுசெய்த பின்னர் Exhibits என்பதை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து Ballistic , Cruise Missile Threat போன்றவைகள் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்க மேலும் இதனுடைய extensivemobile exhibitஎனும் பகுதியானது நம்முடைய செல்லிடத்து பேசியிலேயே இந்த காட்சிகளை கண்டுகளிக்க வழிகாட்டுகின்றது இதனுடைய வலதுபுறம் Trivia Game எனும்பனிப்போர் கால கேள்விபதிலான விளையாட்டுகளை பயன்படுத்தி கொள்க இவ்வாறான உலகத்தின் பனிப்போர்கால நிகழ்வினை அறிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் http://www.coldwar.org/எனும் இணைதளபக்கத்திற்கு இன்றேசெல்க

Piwikஎனும் கட்டற்ற திறமூல ஆய்வக தளம் ஒருஅறிமுகம்

எந்தவொருநிறுவனத்திலும் தரவுகளை ஆய்வுசெய்வதுஎன்பதே மிகமுக்கிய தேவையான பணியாக இருக்கின்றன இவ்வாறான ஆய்விற்கு ஒரு சில தளங்கள் கட்டணத்துடனும் வேறுசில கட்டணமில்லாமலும் நமக்கு உதவதயாராக உள்ளன அவைகளுள் Piwik என்பது மிகப்பிரபலமான விரிவாக்க வசதியுடன் கூடிய கட்டற்ற கட்டணமற்ற தரவுகளின் ஆய்விற்கு உதவிடும் மிகச்சிறந்ததொரு தளமாகும் இது செல்லிடத்து பேசி பயன்பாடுகளையும் பரிசோதிப்பதற்காக ஆதரிக்கின்றது இதனை மிகவிரைவாகவும் எளிதாகவும் நிறுவுகை செய்து பயன்படுத்தி கொள்ளமுடியும் இது நூறுசதவிகிதம்தரவுகளின் தனியுடைமையும்தனிப்பட்டதன்மையும் கொண்டது குறிப்பிட்ட தரவுவரைதான ஆய்வுசெய்திடமுடியும் என்ற வரையறை எதுவும் இதில் இல்லை எந்தவொரு நிறுவனமும் Web analytics, E-commerce analytics,Server log analytics,Internet analytics ஆகிய தரவுகளின் ஆய்வுசெய்திடவிழையும்போது இந்த Piwikஎனும் கட்டற்ற திறமூல ஆய்வக தளம் பேருதவியாக இருக்கின்றது இதனை பதிவிறக்கம் செய்துகொள்வதற்காக https://piwik.org/download/ என்ற இணையதளபக்கத்திற்குசென்றுபதிவிறக்கம் செய்து நம்முடைய கணினியில் நிறுவுகை செய்து பயன்படுத்தி கொள்க மேலும் விவரங்களை அறிந்து கொள்வதற்காக https://piwik.org/ என்ற இணையதளபக்கத்திற்குசெல்க

Previous Older Entries