முயன்றால் ஒரு சிறந்தஆண்ட்ராய்டு பயன்பாட்டினை நாமேஉருவாக்கமுடியும்-

ஆண்ட்ராய்டு மேம்பாட்டைக் கற்றுக்கொள்வதற்கான முதல் படிமுறையாக ஆண்ட்ராய்டு ஸ்டுடியோவைப் பயன்படுத்தி அடிப்படை வசதிவாய்ப்புகளுடன் கூடிய புதிய ஆண்ட்ராய்டு பயன்பாடு ஒன்றினைநாமே உருவாக்குவதற்கான வழிமுறைகள பின்வருமாறு
இதற்காக ஆண்ட்ராய்டு பயன்பாட்டில் எளிய பயனாளர் இடைமுகமும் ஜாவா குறிமுறை-வரிகளில் ஒருசில குறிமுறைவரிகளும் போதுமானவைகளாகும், இதன்மூலம் ஆண்ட்ராய்டு மேம்படுத்துதல் செயல்களை மிகஎளிதாக துவங்கலாம். இதனுடைய அடிப்படை ஒப்புதலைப் பெற்ற பிறகு நிச்சயமாக அவ்வாறான பயன்பாட்டினை பல்வேறு வசதிகள் நிறைந்ததாக பின்னர் மாற்றியமைத்துக் கொள்ளலாம்.
1. முதலில் ஆண்ட்ராய்டு ஸ்டுடியோவைத் செயல்படுத்திடுக.
2. உடன் விரியும் திரையில், “Start a new Android Studio Project”என்பதைதெரிவுசெய்து சொடுக்குக.
3. அடுத்து தோன்றிடும் திரையில் இந்த பயன்பாட்டிற்கு “MyFirstProject” என்றவாறு ஒருபெயரிட்டு next எனும் பொத்தானை தெரிவுசெயது சொடுக்குக.
4. அடுத்து விரியும் திரையில் ஒன்றும் செய்யதேவையில்லை next எனும் பொத்தானை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக..
5.பின்னர் விரியும் திரையின் விருப்பங்களிலிருந்து Empty Activity template என்பதை தேர்ந்தெடுத்து கொண்டு next எனும் பொத்தானை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக..
6. தொடர்ந்து Finish எனும் பொத்தானை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக…
ஆண்ட்ராய்டு பயன்பாட்டின் எக்ஸ்எம்எல் கோப்பை மேம்படுத்துதல்
இப்போது res எனும் கோப்பகத்தில், தளவமைப்பு கோப்புறையில் உள்ள activity_main.xml கோப்பிற்கு சென்று பின்வரும் குறிமுறைவரிகளை எழுதுக
குறிப்பு இங்கே நாம் நம்முடைய முதல் செயல்திட்டத்தை உருவாக்குகின்றோம் என்பதை நினைவில் கொள்க, இதனால்“Hello World” , “Click Me” ஆகிய பொத்தான்களைக் காண்பிக்கும் திரையை முதலில் உருவாக்கிடுவோம்.
உரையில், தாவலில் பின்வரும் குறிமுறைவரிகளை நகலெடுக்கவும்.
பின்வரும் .xml கோப்பு MainActivity க்கான தளவமைப்பு கோப்பு. பயனாளர் இடைமுகங்கள் ஆகியவற்றை உருவாக்கவிருக்கின்றோம்.
இந்த கோப்பில் ஒரு உரை காட்சியும் ஒரு பொத்தானும் உள்ளன, இது இடதுபுற பலகத்தில் இருந்து இழுத்து சென்று விடுதல் வழிமுறை மூலம் வடிவமைப்பினை திரையில் கொண்டு வரலாம்.

MainActivity.java கோப்பினை புதுப்பித்தல்
ஜாவா கோப்பகத்தில், நம்முடையை package ல் உள்ள MainActivity.java கோப்பிற்குச் சென்று பின்வரும் குறிமுறைவரிகளை எழுதுக.
இங்கே பொத்தானுக்கு ஒரு ‘id’’ எனும் சுட்டி கொடுக்கப்பட்டுள்ளது, பின்னர் Click Listener என்பது அமைக்கப்படுகின்றது. இந்த “Click Me” பொத்தானைக் சொடுக்குதல் செய்தால், குறுகிய செய்தி ஒன்று திரையில் காண்பிக்கும்
package com.example.soumyaagarwal.myfirstproject;
import android.support.v7.app.AppCompatActivity;
import android.os.Bundle;
import android.view.View;
import android.widget.Button;
import android.widget.Toast;

public class MainActivityextends AppCompatActivity {
Button clickme;
@Override
protected void onCreate(Bundle savedInstanceState) {
super.onCreate(savedInstanceState);
setContentView(R.layout.activity_main);

clickme= (Button)findViewById(R.id.button);
clickme.setOnClickListener(new View.OnClickListener() {
@Override
public void onClick(View v) {
Toast.makeText(MainActivity.this,
“The Button is clicked !”,
Toast.LENGTH_LONG).show();
}
});
}
}
இப்போது முதல் செயல்திட்டத்தை இயக்குக. ஏற்கனவே Genymotion emulator நிறுவியிருந்தாலும், உண்மையான சாதனங்களில் பயன்பாடுகளை இயக்குவது விரைவானசெயலாக அமையும். எனவே, நம்முடைய ஆண்ட்ராய்டு சாதனத்தை கணினியுடன் இணைத்து கருவிப்பட்டியில் உள்ள run எனும் விருப்பத்தை தெரிவுசெய்து சொடுக்குக.
உடன் உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் தொடர்ந்து இதனோடு இணைத்த சாதனத்தைத் தேர்ந்தெடுத்து OK எனும் பொத்தானைக் தெரிவுசெய்து சொடுக்குக . இப்போது, Gradle build பணி முடிவடையும் . அதன் பிறகு, ஆண்ட்ராய்டு சாதனத்தில் நம்முடைய முதல் பயன்பாடு செயல்படதுவங்குவதைக் காணலாம்.
“CLICK ME” எனும் பொத்தானைக் தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால், உடன் குறுகிய செய்தி ஒன்று திரையில்தோன்றுவதை காணலாம்.

ஆண்ட்ராய்டுகைபேசியைGuiscrcpy என்பதன்துனையுடன் கணினியிலிருந்து கையாளமுடியும்

வருங்காலங்களில் மடிக்கணினி, கைபேசி ,திறன்பேசி, குளிரூட்டி என்பனபோன்ற சாதனங்கள் அனைத்தையும் நாம் பயனிக்கின்ற வாகணத்தில் இருந்தவாறே கையாள-வேண்டிய சூழல் உருவாகவிருக்கின்றது அவ்வாறான பணியைஎளிதாக்க உதவ-காத்திருப்பதுதான் Guiscrcpy எனும் GNU GPLv3 எனும் பொதுஅனுமதியின் அடிப்படையில் வெளியிடப் பட்டுள்ள ஒருகட்டற்ற பயன்பாடாகும் இது லினக்ஸ், மேக், விண்டோ ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது நம்முடைய ஆண்ட்ராய்டு கைபேசியின் திரையை இதன் வாயிலாக நம்முடைய கணினியில் கொண்டுவந்து ஆண்ட்ராய்டு கைபேசியை கையாளமுடியும் இது சமீபத்திய எந்தவொரு நவீண சாதனங்களையும் கையாளும் திறன்மிக்கது கைபேசியுடன் இடைமுகம்செய்திடும் பணியை எளிதாக கையாளுகின்றது கைபேசியை USB வாயில் வழியாக அல்லது அருகலை வாயிலாக இணைத்து பயன்படுத்தி கொள்ளலாம் இந்த பயன்பாட்டினை நம்முடைய கணினியில் நிறுவுகை செய்து செயல்படுத்தியவுடன் தோன்றிடும் முதன்மைகட்டுபாட்டு திரையில் Start scrcpy எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்விரியும் பலகத்தில் Home, Back, Power, more. ஆகிய பொத்தான்களைசொடுக்குவதன்வாயிலாக தேவையான பணிகளை செய்து கொள்ளலாம் மேலும்விவரங்களுக்கும்பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://github.com/srevinsaju/guiscrcpy/ எனும் இணையதளபக்கத்திற்கு செல்க

அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய ஆண்ட்ராய்டின் சிறந்த பயன்பாடுகள்

பெரும்பாலான பொதுமக்களால் தற்போது பயன்படுத்திகொண்டுவரும் ஆண்ட்ராய்டு கைபேசிகளில் செயல்படுகின்ற நாம் தெரிந்து கொண்டிருக்கவேண்டிய மிகச்சிறந்த பயன்பாடுகள் பின்வருமாறு
1. WPS Office: என்பது எம்எஸ் ஆஃபிஸ் கூகுள் டாக் PDF,ஆகிய அனைத்து பணிகளையும் ஒருங்கிணைந்து வழங்ககூடியதாகும் இது பயன்படுத்த மிகஎளிதானதாகும் இதில் PDF ஆக உருமாற்றுதல் திருத்துதல் படித்தல் பகிர்ந்து கொள்ளுதல் தரவுகளை மறையாக்கம் செய்தல் ஒரேசமயத்தில் பலசாளரங்களை பயன்படுத்தி கொள்ளுதல் கோப்புகளை தானியங்கியாக மேககணினியில் சேமித்து கொள்ளுதல் ஆகிய பல்வேறு பணிகளை இதன் வாயிலாக செயல்படுத்தி பயன்பெறமுடியும்
2. Google News: செயற்கை நினைவகத்தின்அடிப்படையில் நமக்கு தேவையான செய்திகளை திரையில் கொண்டுவரலாம் FULL COVERAGE எனும் தாவியின் திரையின் வாயிலாக பல்வேறு நாளிதழ்கள் செய்திகளையும் கொண்டுவரச்செய்து பார்வையிடலாம்
3. ES File Explorer: என்பது நம்முடைய சாதனத்தில் மிகுதி காலிநினைவகம்எவ்வளவு உள்ளது என அறிந்து நம்முடைய கோப்புகளை சேமித்திடவும் தேவையான கோப்பு-களை தேடிபிடித்திடவும் போதுமான காலிஇடம் இல்லாதுபோது மேககணினியில் கொண்டுசென்று சேமித்திடவும் இதுபயன்படுகின்றது இது பயன்படுத்த எளிதானதாகும் கோப்புகளை மற்றவர்களுடன் மிகஎளிதாக பகிர்ந்து கொள்ளவும் உதவுகின்றது
4.GBWhatsApp: வாட்ஸப்பில்இல்லாத நமக்குதேவையான வசதிகளை பயன்படுத்தி கொள்ளமுடியும் உதாரணமாக நமக்கு வந்த செய்திகளை நாம் திறந்து பார்த்தவுடன் அனுப்பியவருக்கு இரண்டு நீலவண்ண டிக்மார்க் தோன்றிடாமல் மறைத்திடுமாறு செய்திடமுடியும் கோப்புகளை பகிர்ந்து கொள்ளும்போது அதன் தரம் குறையாமல் பராமரித்திடுகின்றது ஒரே நேரத்தில் நூற்றுக்கும் அதிகமான உருவப்படங்களை பகிர்ந்து கொள்ளமுடியும்
5. Google Drive: நம்முடைய சாதனத்தில் உருவாகிடும் பெறப்படும் ஏராளமானஅளவு கோப்புகளை சேமித்து வைத்திட இதுஅனுமதிக்கின்றது 15GB கொள்ளளவிற்கு Gmail களை கூட சேமித்து வைத்து கொள்ளமுடியும்

நம்முடையஆண்ட்ராய்டு கைபேசிதிரையை பூட்டிடுவதற்கான சிறந்த பயன்பாடுகள்

இந்த தலைப்பினை கண்டவுடன் திரையை பூட்டுவது என்றால்என்ன என்ற கேள்வி நம்மனைவருடைய மனதில்எழும் நிற்க
நாம் இல்லாதபோது நம்மைதவிர மற்றவர்கள் நம்முடைய ஆண்ட்ராய்டு கைபேசியில் என்ன உள்ளது எனஅறிந்து கொள்வதற்காக நம்முடைய கைபேசியை மற்றவர்கள் பயன்படுத்துவதை தடுப்பதற்கான செயல்பாடே ஆண்ட்ராய்டு திரையை பூட்டிடும்(Lockscreen) வழிமுறையாகும் இது மிகஎளிதாக கைகளால் உள்ளீடு செய்யப்படும் கடவுச்சொற்களால் திறந்திடுமாறு கட்டமைக்கப்பட்டாகும் இது நம்முடைய முகப்பு திரைக்குள் மற்றவர்கள் அத்துமீறி நுழைந்திடாமல் தடுப்பதற்கான மற்றொரு அறன்போன்ற பாதுகாப்பு அடுக்காகும். இதற்காக கூகுள்ஸ்டோரில் ஏராளமான பயன்பாடுகள் நாம் பயன்படுத்தி கொள்ளதயாராக இருக்கின்றன அவைகளுள் இந்த 2019 ஆண்டின் மிகச்சிறந்த பயன்பாடுகள் பின்வருமாறு
1. Locket Lockscreenஎன்பது மிகச்சிறந்த மிகத்திறனுடைய கட்டணமற்ற ஆண்ட்ராய்டு திரையை பூட்டிடுவதற்கான பயன்பாடாகும் இது சமீபத்திய அறிவிப்புகளையும் செய்திகளையும் அழைப்புகளையும்திரையில் பிரதிபலிக்கசெய்கின்றது மிகமுக்கியமாக அதிகஅளவு பயன்படுத்திய பயன்பாடுகளை திரையில் பட்டியலிடுகின்றது அதில் நமக்கு நினைவூட்டிடும் செயலையும் பதிவுசெய்கின்றது
2. L Lockerஎன்பது மற்றொரு மிகச்சிறந்த கட்டணமற்ற ஆண்ட்ராய்டு திரையை பூட்டிடுவதற்கான பயன்பாடாகும் இது நம்முடைய கைபேசியில் பயன்படும் ஆண்ட்ராய்டு இயக்கமுறைமையை Lollipop 5.0,இலிருந்து மேம்படுத்தி கொள்ளவில்லை யென்றாலும் இதனை பயன்படுத்தி கொள்ளமுடியும் இது KitKat எனும் திரையை பூட்டிடும் பாவணையை பின்பற்றிடுகின்றது இதில் PIN type , pattern type ஆகிய இரண்டுவகை பாவணைகளிலும் ஆண்ட்ராய்டு திரையை பூட்டிட பயன்படுத்தி கொள்ளலாம்
3.Go Lockerஎன்பது பிரிதொரு மிகச்சிறந்த மிகத்திறனுடைய கட்டணமற்ற ஆண்ட்ராய்டு திரையை பூட்டிடுவதற்கான பயன்பாடாகும் இதுமிகநிலையான ஒத்தியங்க கூடிய திறனுடனான பயன்பாடாகும் இதில் பயனாளர் விரும்பியவாறு குறுக்குவழி விசைகளை பயன்படுத்தி திரையை பூட்டிடுமாறு செய்து கொள்ளும் வாய்ப்பினையும் பல்வேறு மிகவிரைவான வழிகளையும் அவ்வாறான பூட்டினை திறப்பதற்கான வழிமுறைகளையும் இது வழங்குகின்றது
4.Slide Lockஎன்பது பயன்படுத்தவும் இயக்கவும் மிகவும் எளிதானது ஆண்ட்ராய்டு கைபேசி திரையை வலதுபுறம், இடதுபுறம் தேய்த்தலின் வாயிலாக சாதனத்தின் பூட்டினை திறந்திடவும் படப்பிடிப்பு கருவியை செயல்படுத்திடவும்செய்திடலாம்இது சமீபத்திய அறிவிப்புகளையும் செய்திகளையும் அழைப்புகளையும்திரையில் பிரதிபலிக்க செய்கின்றது இதில் PIN type , pattern type ஆகிய இரண்டுவகை பாவணைகளிலும் ஆண்ட்ராய்டு திரையை பூட்டிட பயன்படுத்தி கொள்ளலாம்
5.C Lockerஎன்பது கட்டணத்துடன் கட்டணமில்லாமல்ஆகிய இருவழிகளில் இதனை பயன்படுத்தி கொள்ளலாம் நாம் இங்கு கட்டணமில்லாத பயன்பாடுகளை மட்டுமே பார்த்து வருகின்றோம் அதனால் இதனுடைய கட்டணமற்ற வகையும் பல்வேறு வசதிவாய்ப்பகளை கொண்டுள்ளது இது சமீபத்திய அறிவிப்புகளையும் செய்திகளையும் அழைப்புகளையும் திரையில் பிரதிபலிக்க செய்கின்றது இதில் பயனாளர் விரும்பியவாறு குறுக்குவழி விசைகளை பயன்படுத்தி திரையை பூட்டிடுமாறு செய்து கொள்ளும் வாய்ப்பினை கொண்டுள்ளது
6.Echo Notification LockScreenஎன்பது மற்றொரு மிகச்சிறந்த கட்டணமற்ற ஆண்ட்ராய்டு திரையை பூட்டிடுவதற்கான பயன்பாடாகும் இது சமீபத்திய அறிவிப்புகளையும் முழுமையான செய்திகளையும் அழைப்புகளையும்திரையில் பிரதிபலிக்க செய்கின்றது நம்முடைய சாதனத்தில் பயன்படுத்திடும் மின்நுகர்வை முடிந்தவரை குறைவாக பயன்படுத்தி கொள்கின்றது இதில் பயனாளர் விரும்பியவாறு குறுக்குவழி விசைகளை பயன்படுத்தி திரையை பூட்டிடுமாறு செய்து கொள்ளும் வாய்ப்பினைகொண்டுள்ளது
7.CM Lockerஎன்பதுமேலும் ஒரு மிகச்சிறந்த கட்டணமற்ற ஆண்ட்ராய்டு திரையை பூட்டிடுவதற்கான பயன்பாடாகும் இது ஐஓஎஸ் சாதனத்தின் திரையைபூட்டிடுவதற்கான பயன்பாட்டினைபோன்று மிகச்சிறப்பாக செயலாற்றிடுகின்றது இதனுடைய Phone Boost என்பது மிகச்சிறந்த வாய்பாக மிளிருகின்றது அதன்வாயிலாக மின்கலணின் வாழ்நாளை 30% நீட்டிப்பு செய்கின்றது இதில் தவறான PIN அல்லது pattern ஐ பயன்படுத்தி திரையை திறக்கமுயற்சிசெய்திடும்போது படப்பிடிப்பு கருவியானது அவ்வாறு தவறாக முயற்சிக்கும் நபரை படப்பிடிப்பு செய்து கொண்டு நாம் பயன்படுத்திடும்போது யார்அவ்வாறு செய்தது என காண்பிக்கின்றது

ஆண்ட்ராய்டு கைபேசியின் தொடுதிரைசரியாக செயல்படவில்லையா

தற்போது நாம் பயன்படுத்திகொண்டுவரும் நம்முடைய ஆண்ட்ராய்டு கைபேசியின் தொடுதிரையை நாமனைவரும் நாளொன்றிற்குசற்றேறக்குறைய நூறுமுறைக்குமேல் நம்முடைய கைகளால் தொட்டு தடவி நம்முடைய கட்டளைகளை செயற்படுத்தி பயன்பெறுகின்றோம் அவ்வாறான நிலையில் இதனுடைய தொடுதிரையானது நாம்தொட்டுதடவி நம்முடைய விருப்பத்தை நிறைவேற்ற முயலும்போது செயல்படாது அசைவற்று சண்டித்தனம் செய்துகொண்டிந்தால் பின்வரும் படிமுறைகளை பின்பற்றி சரிசெய்துகொள்க
முதலில்பழையவழிமுறையான Power எனும்பொத்தானை அழுத்தி நிறுத்தம்செய்து பின்னர் மீண்டும் Power பொத்தானை அழுத்தி மறுதுவக்கம்செய்திடுக
இரண்டாவதாக நம்மில் பெரும்பாலானவர்கள் கைபேசியை பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக screen protector என்பதை திரையின் மேல் வைத்திருப்பார்கள் அதனை முதலில் கழற்றி எடுத்துவிட்டு தொடுதிரையை செயற்படுத்திடுக
மூன்றாவதாக கைபேசி தொடுதிரையின் screen latency உயர்த்திடுவதற்காக இதற்கான third-party app எனும் பயன்பாடுகளுள் ஒன்றினை கைபேசியில் நிறுவுகை செய்து செயற்படுத்தி சரிபார்த்து கொள்க
நான்காவதாக கூகுள் நிறுவனத்தின் Voice Access எனும் பயன்பாட்டினை நிறுவுகை செய்து நம்முடைய குரலொலி வாயிலாக கட்டளைையை செயல்படுத்திடுக அல்லதுEva Facial Mouse எனும் பயன்பாட்டினை நிறுவுகைசெய்துநம்முடைய முகஅசைவைகொண்டு செயற்படுத்தி முயற்சி செய்து சரிசெய்திடுக
ஐந்தாவதாக கைபேசியை வெளிப்புற விசைப்பலகை சுட்டியுடன் இணைத்து செயல்படுத்தி சரிசெய்திடுக
ஆறாவதாக ஒருவேளை நம்முடைய கைபேசி தண்ணீரில் நினைந்துவிட்டதால் செயல்படாமல் இருக்கலாம் அதனால் சாதனத்தை நிறுத்தம்செய்துதண்ணீரை முழுவதும்காயவைத்திடுக
இந்த எந்தவழிமுறையிலும் செயல்படவில்லையெனில் அருகிலுள்ள சேவைமையத்திற்கு கொண்டுசென்றிடுக

போட்டித்தேர்வுகளுக்கு தயார்செய்வதற்கான ஆண்ட்ராய்டு பயன்பாடுகள்

UPSC,TNPSC, SSC, GATE , LIC,BPSபோன்றவைகளின் வாயிலாக மத்திய மாநில அரசு அலுவலகங்கள், வங்கிகள் போன்றவை பணியாளர்களை தெரிவுசெய்வதற்கான போட்டிதேர்விற்கான அறிவி்ப்புகள் அவ்வப்போது தொடர்ந்து வெளியிட்டுகொண்டே உள்ளன அதனை தொடர்ந்து இந்த போட்டிகளுக்கு தயார்செய்வதற்காக அதற்கான பயிற்சி மையங்களும் தங்களுடைய அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டுகொண்டே உள்ளன அவ்வாறு நேரடியாக போட்டிதேர்விற்கு தயார்செய்யும் மையங்களில் கலந்து கொள்ளமுடியாதவர்கள் பயன்படுத்திகொள்வதற்கான புத்தங்களை பல்வேறு நிறுவனங்களும் வெளியிட்டுகொண்டே உள்ளன அவ்வாறான அறிவிப்புகளை தொடர்ந்து பொதுமக்களனைவரும் தங்களின் பிள்ளைகளை தங்களுடைய வசதி வாய்ப்புகள் குடும்ப சூழ்நிலை பொருளாதார நிலை ஆகியவற்றின் அடிப்படையில் இவைகளுள் ஏதாவதொன்றினை தெரிவுசெய்து பணியாளர்களை தெரிவுசெய்திடும் போட்டிதேர்வு களுக்கு தயார் செய்கின்றனர் தற்போது கைபேசி சாதனங்கள் நம்மனைவரின் கைகளிலும் கண்டிப்பாக இருக்கின்றன அதிலும் பெரும்பாலோனோர் ஆண்ட்ராய்டு கைபேசி சாதனங்களை வைத்துள்ளனர் இவர்களுக்காகவே ஆண்ட்ராய்டு கைபேசி சாதனங்களிலும் போட்டிதேர்விற்குதயார்செய்திடுவதற்கான வசதிகள் வந்துள்ளன இந்த போட்டிதேர்வுகளில் கலந்துகொள்வதற்கான பயிற்சி எடுத்துகொள்ள விரும்புவோர்களுக்கு உதவிடுகின்ற அவ்வாறானவை பற்றிய விவரங்கள் பின்வருமாறு
1.Grade upஎனும் ஆண்ட்ராய்டு பயன்பாடானது மிகமேம்பட்ட வகையில் UPSC,TNPSC, SSC, GATE , LIC,BPS,போன்றவைகளின் வாயிலாக பணியாளர்களை தெரிவுசெய்வதற்கான போட்டிதேர்வுகளுக்கு தயார்செய்வதில் முதன்மையான பயன்பாடாக விளங்குகின்றது இது கூகுள் ப்ளேஸ்டோரில் 4.5 என மதிப்பிடப் பட்டுள்ளது போட்டிதேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகள் எவ்வாறு அமையுமோ அவ்வாறே சேள்விகளும் அதற்கான விடைகளும் இந்த பயன்பாட்டில் நாம் பயிற்சி பெறுவதற்காக கட்டமைக்கப் பட்டுள்ளன இதில் ஏதேனும் நமக்கு சந்தேகம் எழுந்தால் அதனை இந்த பயன்பாட்டில் உள்ளீடு செய்தவுடன் பல்வேறு வல்லுனர்களும் உடனுக்குடன் தீர்வுசெய்திடும் வசதியைஇதில் பெறுமாறு கட்டமைக்கப்பட்டுள்ளது இதனை தோராயமாக 0.5 மில்லியன் பயனாளர்கள் பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி வருகின்றனர்
2.GRE Exam Prep என்பது பணியாளர்களின் போட்டிதேர்விற்கு தயார்செய்திடும் மற்றோரு சிறந்த ஆண்ட்ராய்டு பயன்பாடாகும் இது GRE போட்டிதேர்விற்காக மட்டுமே தயார்செய்வதற்காக வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது இது GRE இன் புதிய பாடத்திட்டங்களின்தேர்வு வடிவமைப்பிற்கு ஏற்ப மேம்படுத்தப்-பட்டுள்ளது இதில் 3500இற்கு அதிகமான flash cards நம்முடைய கற்றல்திறனை மேம்படுத்திடுவதற்காக உள்ளன இதனை தோராயமாக 0.5 மில்லியன் பயனாளர்கள் பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி வருகின்றனர்
3.Jagran Josh என்பது பல்வேறு பணியாளர்களின் தெரிவுசெய்திடும் போட்டித் தேர்வுகளுக்காகவே கட்டமைக்கப்பட்டுள்ளபிரிதொரு சிறந்த ஆண்ட்ராய்டு பயன்பாடாகும் இதில் மிகமுக்கியமாக வங்கி பணியாளர்களை தெரிவுசெய்திடும் போட்டிதேர்விற்காகவே பயன்படுமாறு வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது இதில் அவ்வப்போது வெளியிடப்பெறும் பல்வேறு போட்டிதேர்வுகளின் அறிவிப்புகள் அவற்றின் பாடத்திட்டங்கள்அதற்கான தயார்செய்திடும் புத்தகங்கள் ஆகியவிவரங்களை தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. இதுஒரு வரைகலை பயனாளர் இடைமுக வசதியுடனும் குறைந்த நினைவக கொள்ளளவே கொண்டதுமாக விளங்குகின்றது இதனை தோராயமாக 0.5 மில்லியன் பயனாளர்கள் பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி வருகின்றனர்
4.TYC Online Preparation என்பது ஆண்ட்ராய்டின் போட்டி தேர்விற்கு தயார் செய்திட உதவிடும் மற்றொரு பயன்பாடாகும் இது கூகுள் ப்ளேஸ்டோரில் 4 என மதிப்பிடப் பட்டுள்ளது இது, மிக முக்கியமாக Gate, CAT, RI, SSC, UPSC போன்ற அனைத்து அரசு அலுவலகங்களுக்கான பணியாளர்களை தெரிவுெசெய்திடும் போட்டித் தேர்வுகளுக்கு தயார்செய்திட உதவகின்றது இதில் நம்மை போட்டித்தேற்விற்குதயார் செய்வதற்கான கேள்விதாட்களை எளிதாக தெரிவுசெய்து தொடர்புடைய கற்பதற்கான மின்னனு புத்தகங்களை பதிவிறக்கம்செய்து கொள்ளும் வசதி கொண்டதாக அமைந்துள்ளது
5.SSC CGL Exam Preparation 2016என்பது 2016 ஆம் ஆண்டில் SSC CGL ஆகிய போட்டித் தேர்விற்கு தயார்செய்வதில் மிகவும் பிரபலமாக விளங்கியது இது SSC போட்டித் தேர்விற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது இதில் மாதிரி தேர்வின்கேள்வி தாட்கள் நாம் பயிற்சி பெறுவதற்காக தயார்நிலையில் உள்ளன அதில் நாம் பயிற்சி பெற்றால் போதுமானதாகும் இது கூகுள் ப்ளேஸ்டோரில் 4 என மதிப்பிட பட்டுள்ளது
6.RRB Railway Examஎன்பது இந்திய ரெயில்வேதுறையில்பணியாளர்களை தெரிவு செய்வதற்கான போட்டிதேர்வுகளுக்காகவே கட்டமைக்கப்பட்ட மிகச்சிறந்த ஆண்ட்ராய்டு பயன்பாடாகும் இதில்உலக நிகழ்வுகள் பொதுஅறிவு வரலாறு அரசியல் போன்றவை குறித்தமிகப்பெரிய கருவூலமாக விளங்குகின்றது இது ரெயில்வே துறையில் அவ்வப்போது பணியாளர்களை தெரிவுசெய்வதற்கான போட்டிதேர்விற்கான அறிவிப்புகள் கிடைக்குமாறு செய்யப்பட்டுள்ளது சிறந்த வரைகலை பயனாளர் இடைமுகப்பையும் குறைந்த நினைவகத்தையும் கொண்ட எளிதாக பயன்படுத்தி கொள்ளும் ஒரு சிறந்தஆண்ட்ராய்டு பயன்பாடாகும் இதனை தோராயமாக 0.1 மில்லியன் பயனாளர்கள் பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி வருகின்றனர்
7.SBI PO Exam Preparation என்பது SBIஎனும் பாரத மாநில வங்கியின் பணியாளர்களை தெரிவுசெய்திடும் போட்டிதேர்விற்காகவே கட்டமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது இது சிறந்த வரைகலைபயனாளர் இடைமுகப்பும் குறைந்த நினைவகத்தையும் கொண்டஎளிதாக பயன்படுத்தி கொள்ளும்ஒரு ஆண்ட்ராய்டு பயன்பாடாகும் இது ஆண்ட்ராய்டின் 2.3 அல்லதுஅதற்கு மேம்பட்ட பதிப்புகளில் மட்டுமே செயல்படும் திறன்கொண்டது இதுSBIவங்கியின் போட்டித் தேர்வுகளின் சமீபத்திய பாடதிட்டங்களுக்கு ஏற்ப மேம்படுத்தபட்டு வெளியிடப்பட்டுள்ளது
8.ABFM Exam Preparationஎன்பது போட்டிதேர்வுகளுக்கு தயார்செய்திடும் ஆண்ட்ராய்டின் மற்றொரு மிகப்பிரபலமான சிறந்த பயன்பாடாகும் இது மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்களுக்காகவே அதிலும் ABFM எனும் தேர்விற்கு தயார் செய்வதற்காகவே கட்டமைக்கப்ட்டு வெளியிடப்பட்டுள்ளது பொருத்தமான பாடத்திடங்களுடன் கானொளிகாட்சிகளின் வாயிலாக போட்டிதேர்விற்கு தயார் செய்திடுமாறு இது வடிவமைக்கப்பட்டுள்ளது இது முழுவதும் கட்டணமற்ற பயன்பாடாகும் இதனை தோராயமாக பத்தாயிரம் பயனாளர்கள் பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி வருகின்றனர்
9.SSBCrack Examஎன்பது மிகவும் புகழ்பெற்ற போட்டிதேர்வுகளுக்கு தயார் செய்வதற்கு உதவிடும் மற்றொருஆண்ட்ராய்டு பயன்பாடாகும் குறிப்பாக NDA, AFCAT, CDS போன்ற இந்திய அரசின் பாதுகாப்புதுறை போட்டிதேர்விற்காகவே இது கட்டமைக்கப்பட்டு வெளியிடபட்டுள்ளது இது சமீபத்திய பாதுகாப்புதுறை போட்டித் தேர்விற்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது இதில் நம்முடைய திறன் என்னவென அறிந்து கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது இதனை தோராயமாக ஐம்பதாயிரம் பயனாளர்கள் பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி வருகின்றனர்
10.Test Prep For AIPMTஎன்பது கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து கட்டணமில்லாமல் பதிவிறக்கம்செய்து கொள்ளும் மிகப்பிரபலமான மற்றொரு ஆண்ட்ராய்டு பயன்பாடாகும் இது AIPMT எனும் போட்டி தேர்விற்காகவே கட்டமைக்கப்ட்டுள்ளது இது சிறந்த வரைகலைபயனாளர் இடைமுகப்பையும் குறைந்த நினைவகத்தையும் கொண்ட எளிதாக பயன்படுத்தி கொள்ளும் ஒரு ஆண்ட்ராய்டு பயன்பாடாகும் இது ஆண்ட்ராய்டின் 3 அல்லது அதற்கு மேம்பட்ட பதிப்புகளில் மட்டுமே செயல்படும் திறன்கொண்டது இது இயற்பியல் வேதியியல் உயிரியல் ஆகிய பாடதிட்டங்களில் மிகவலுவாக கட்டமைக்கப்பட்டுள்ளது இதில் ஏறத்தாழ போட்டிதேர்விற்கான 2250கேள்விகள் உள்ளன

எழுத்தாளர்களுக்கு உதவிடும் ஆண்ட்ராய்டின் கட்டற்ற பயன்பாடுகள்

வலைபூக்களிலும் ,சமூதாய இணையதளங்களிலும் மின்புத்தகங்களிலும் தத்தமது கருத்துகளை எழுதி வெளியிடுவதற்கு எழுத்தாளர்கள் கணினிக்கு பதிலாக தங்களுடைய கைபேசி வாயிலாகவே எழுதவிரும்புகின்றனர் அவ்வாறு கைபேசி வாயிலாக எழுதுவதற்காக அதிலும் ஆண்ட்ராய்டு சாதனங்களின் வாயிலாக எழுதுவதற்கு உதவிடுவதற்காக பின்வரும் ஆண்ட்ராய்டின் கட்டற்ற பயன்பாடுகள் பேருதவியாய் இருக்கின்றன
1. Markor எனும் ஆண்ட்ராய்டின்கட்டற்ற பயன்பாடானது எளிய நெகிழ்வுதன்மையுடன் கூடிய உரைபதிப்பானாக விளங்குகின்றது இந்த பயன்பாட்டினை செயல்படுத்தியவுடன் தோன்றிடும் திரையில் new document எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின்விரியும் புதிய உரைபதிப்பான் திரையில் நம்முடைய கருத்துகளை உள்ளீடு செய்திட துவங்கிடலாம் அதன்பின்னர் நாமே முயன்றும் அல்லது கருவிகளின் பட்டியில் உள்ள கருவிகளை சொடுக்குதல் செய்தும் உரைஆவணத்தினை வடிவமைப்பு செய்திடலாம் மேலும் நம்முடைய உரைஆவணமானது நம்முடைய கைபேசியில் அல்லது திறன்பேசியில் இவைகளின் கோப்பு வடிவமைப்பில் தானாகவே சேமித்து கொள்கின்றது இவ்வாறு ஆவணத்தினை சேமித்திடும்போது கைபேசியில் அதற்கான நினைவக வசதி பத்தாது என்ற நிலையில் நாம் விரும்பினால் Nextcloud எனும் பகுதியில்கூட சேமித்து கொள்ளமுடியும் நம்முடைய உரையை எழுதிமுடித்தபின்னர் அதனை முன்காட்சியாக காணும் வசதியும் இதில் உள்ளது அதுமட்டுமல்லாது நாம் செய்யவேண்டிய செயல்களை Todo.txt எனும் வசதியின் வாயிலாக பட்டியலாக செய்து கொள்ளமுடியும். ஆய்வாளர்கள் தங்களுடைய செயல்திட்டத்திற்கான மேற்கோள்குறிகளை எளிதாக இதில் செய்து கொள்ளமுடியும். மிகமுக்கியமாக நாம் உருவாக்கிய உரைவடிவிலான ஆவணத்தினை மற்றநண்பர்கள் எளிதாக படித்தறியும் வண்ணம் HTML அல்லது PDF வடிவமைப்புகளில் மேலேற்றம் செய்து கொள்ளமுடியும் மேலும் விவரங்களுக்கு https://gsantner.net/project/markor.html எனும் இணைய பக்கத்திற்கு செல்க
2. Orgzly எனும் ஆண்ட்ராய்டின்கட்டற்ற பயன்பாடானது மடிக்கணினியில் பயன்படுத்தப்படும் Emacs , Org modeஆகிய வடிவமைப்பினை போன்று கைபேசியில் பயன்படுத்தி கொள்ள பேருவியாக உள்ளது அதாவது Emacs இன் வடிவமைப்பை அதனுடைய குருவினிடம்தான் கற்றுகொண்டு பயன்படுத்தமுடியும் என்ற கட்டாயம் எதுவும் இல்லாமல் யார்வேண்டுமானாலும் இதில் new notebook எனும் புதிய உரைஆவணத்தினை துவங்கி இந்த Orgzly எனும் ஆண்ட்ராய்டின் கட்டற்ற பயன்பாட்டினை கொண்டு எளிதாக அதே வடிவமைப்பினை தங்களுடைய கைபேசியிலேயே கொண்டுவரலாம் அதனோடுகூடவே நாம் செய்யவேண்டிய செயல்களை task lists எனும் வசதியின் வாயிலாக பட்டியலாக செய்து கொள்ளமுடியும்.மேலும் விவரங்களுக்கு எனும் இணைய பக்கத்திற்கு செல்க
3 Carnet குறிப்புகள் எடுக்க விரும்புவோர் இந்த ஆண்ட்ராய்டின்கட்டற்ற பயன்பாட்டினை பயன்படுத்தி கொள்ளலாம் அவ்வாறு குறிப்புகள் எடுத்து முடித்த பின்னர் எழுத்துருக்களின் வண்ணம், அளவு ,இடவமைவு ஆகியவற்றை நாம் விரும்பியவாறு வடிவமைத்துகொள்ளமுடியும் மிகமுக்கியமாக குறிப்புகளுக்கு இடையில் தேவையானவாறு உருவப்படங்களை உள்ளிணைத்து கொள்ளமுடியும் அதனோடு கைபேசியில் நம்முடைய உரை ஆவணத்தினை சேமித்திட முயன்றிடும்போது போதுமான நினைவக வசதி இல்லை என்ற நிலையில் நாம் விரும்பினால் Markor போன்றுNext cloud எனும் பகுதியில்கூட சேமித்து கொள்ளமுடியும் மேலும் விவரங்களுக்கு https://f-droid.org/en/packages/com.spisoft.quicknote/ எனும் இணைய பக்கத்திற்கு செல்க
4 . Anysoft Keyboard கைபேசிகளில் அல்லது திறன்பேசிகளில் உரைஆவணத்தினை உருவாக்க விழைபவர்கள் கணினிபோன்று விசைப்பலகையில் உரையை உள்ளீடுசெய்வதற்காக புளூடூத் வாயிலாக செயல்படும் விசைப்பலகையை பயன்படுத்திடுவார்கள் அதற்கு பதிலாக Anysoft Keyboard எனும் ஆண்ட்ராய்டின் கட்டற்ற பயன்பாட்டின் வாயிலாக Dvorak, Colemak, Workman, Halmak ஆகிய வடிவமைப்பு விசைப்பலகைகளில் ஒன்றினை தெரிவுசெய்து பயன்படுத்தி கொள்க என பரிந்துரைக்கப்படுகின்றது அதைவிட ஆங்கிலம் தவிர்த்த தமிழ் போன்ற மொழியில் விசைப்பலகையை உள்ளீடு செய்திடஇது ஆதரிக்கின்றது என்ற செய்தியை மனதில் கொள்கமேலும் விவரங்களுக்கு https://anysoftkeyboard.github.io/ எனும் இணைய பக்கத்திற்கு செல்க

Previous Older Entries