கூகுளின் விரிதாளிற்கு மாற்றாக ஈதர்கால்க் பயன்படுத்தி கொள்க

நாம் நம்முடைய அலுவலக பயன்பாட்டிற்காக தனியுடமை பயன்பாடான எம்எஸ் ஆஃபிஸின் விரிதாளினை கட்டணம் செலுத்தி அனுமதிபெற்று பயன்படுத்தி வருகின்றோம் அதற்கு மாற்றாக கட்டணமில்லாமல் பயன்படுத்தி கொள்ளுமாறு லிபர் ஆஃபிஸின் கால்க் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைத்து வருகின்றது அதேபோன்று நாம்உலகில் எங்கிருந்தாலும் இதே விரிதாளின் வசதி வாய்ப்புகளை இணையத்தின் வாயிலாக நேரடியாக பயன்படுத்தி கொள்ளும் வசதியுடன் கூகுளின் விரிதாளினை பயன்படுத்தி வருகின்றோம் ஆயினும் இதுவும் தனியுடமை பயன்பாடாகத்தான் இருந்துவருகின்றது இந்நிலையில் இந்த கூகுளின் விரிதாளிற்கு மாற்றாக ஈதர்கால்க் எனும் கட்டற்ற பயன்பாடு நாம் பயன்படுத்தி கொள்வதற்காக தயாராக இருக்கின்றது ஆனால் இதனை பயன்படுத்த துவங்குவதற்கு முன்பாக https://ethercalc.org/9krfqj2en6cke என்றவாறு நமக்கென தனியாகஒரு இணைய முகவரியை இதில் randomஆக உருவாக்கி கொண்டுஅதனை குறித்து வைத்து( bookmark) கொள்க
அதன்பின்னர் இந்த விரிதாளை தெரிவுசெய்துகொண்டு Format எனும் பட்டியலிற்கு சென்று தேவையானவாறு வடிவமைத்துகொள்க மேலும் நமக்கு தேவையான கணித செயல்களை கொண்டுவருவதற்காக கருவிகளின் பட்டியிலில் Functionஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்துதேவையான செயலிகளை செயலிற்கு கொண்டுவருக உதாரணமாக கூடுதல் காணவிரும்பினால் =SUM(B1:B21) என்றவாறு செயலியை உள்ளீடு செய்து செயற்படுத்தி பயன்பெறுக வழக்கமாக விரிதாளில் செயற்படுத்திடுவதை போன்றே அனைத்து பணிகளையும் இதில் எளிதாக செய்து முடித்திடலாம் இதனை தனியான மின்னஞ்சல் வாயிலாக அனுப்புவது பெறுவது என்றில்லாமல் ஒரே விரிதாளில் வெவ்வேறு இடங்களில் அதாவது உலகில் எங்கிருந்தும் கூட்டாக ஒரே சமயத்தில் பணிபுரியலாம் என்பதே இதன் முக்கியமான வசதியாகும் அதாவது ஒரே விரிதாளில் வெவ்வேறு நபர்கள் ஒரே சமயத்தில் பணிபுரிய விரும்பிடும்போது இது கைகொடுக்கின்றது இது கணிதத்தின் செந்தரத்தினை OpenFormula வாயிலாக ஆதரிக்கின்றது மேலும் விவரங்களுக்கு https://ethercalc.org/எனும் இணைய முகவரிக்கு சென்று விவரங்களை அறிந்து கொண்டு இதனை பயன்படுத்தி கொள்க .

நம்முடைய திறன்பேசியில்கூட எக்செல்லை பயன்படுத்தி கொள்ளமுடியும்

ஏறத்தாழ பத்திற்குமேற்பட்ட முன்கூட்டியே கட்டமைக்கப்பட்ட எக்செல்லின் மாதிரி பலகங்கள் நாம் பயன்படு்த்தி கொள்வதற்காக தயாராக உள்ளன அவைகளுள்தேவையானதைமட்டும் OneDrive இலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்க அல்லது மற்ற நண்பர்களுக்கு மின்னஞ்சல்வாயிலாக அனுப்பிடுக இவ்வாறு பதிவிறக்கம் செய்த பின்னர் தரவுகளை உள்ளீடு செய்திடவிரும்பும் பகுதியில் தொடுதிரைவாயிலாக சொடுக்குதல் செய்தால் போதும் உடன் விசைப்பலகை யொன்று தரவுகளை உள்ளீடு செய்வதற்கு வசதியாக திரையில் தோன்றிடும் இந்த விசைப்பலகையின் வாயிலாக தரவுகளை தட்டச்சு செய்திடலாம் அல்லது “=” sig என்றவாறு தட்டச்சு செய்து தரவுகளை உள்ளீடு செய்திடலாம் இறுதியாக “OK” எனும் பொத்தானை தொட்டால் போதும் எக்செல்கோப்பில் தரவுஉள்ளீடு செய்திடும்பணி முடிவிற்கு வந்து சேரும் அதன் பின்னர் திரையின் மேலே இடதுபுறமுள்ள More Button எனும் பொத்தானை தொட்டவுடன் விரியும் வாய்ப்புகளின் திரையில் Send the Copy எனும் வாய்ப்பினை மட்டும் தெரிவுசெய்து கொள்க தொடர்ந்து தேவையான எக்செல் தாளானது அனுப்புவதற்கு தயாராகிவிடும் அதனை தொடர்ந்து அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்து சொடுக்குதல் செய்தால் போதும் நாம் உள்ளீடுசெய்தமுகவரிக்கு எக்செல் சென்று சேரும்

1
இவ்வாறான திறன்பேசியிலான எக்செல் தாளினை இணைய முகவரியுடன் hyperlinks எனும் மீயிணைப்பு செய்திடமுடியும் அதற்காக Insert Tab எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து கொள்க தொடர்ந்து விரியும்வாய்ப்புகளில் Link எனும் வாய்ப்பினை தெரிவுசெய்திடுக

2
அதன்பிறகு விரியும் திரையில் இணைப்பு ஏற்படுத்தவேண்டிய இணையமுகவரியை உள்ளீடுசெய்து Done எனும் பொத்தானை தெரிவுசெய்திடுக

3
திறன்பேசியில் நாம் பயன்படுத்திடும் எக்செல்கோப்பினை PDF வடிவமைப்பிற்கு உருமாற்றம் செய்திடலாம் இதற்காக திரையின் மேலே இடதுபுறமுள்ள மூன்று புள்ளிகளாக தோன்றிடும்More Button எனும் பொத்தானை தொட்டவுடன் விரியிம் வாய்ப்புகளின் திரையில் முதலில் Export என்ற வாய்ப்பினையும் பின்னர் கோப்பு என்னவகையென்பதற்காக“PDF” என்பதையும் தெரிவுசெய்து கொள்க. அதன்பின்னர் எக்செல் தாளின் எந்தபகுதியை PDF ஆக உருமாற்றம் செய்திடவேண்டும் என்று தெரிவுசெய்து கொண்டும் இந்த கோப்பிற்க ஒரு பெயரினையும் உள்ளீடுசெய்து முடித்தால் போதும் பொதுவாக எக்செல் தாளினை பயன்படு்த்திடும்போது அதிகஅளவிற்கு எண்களை பயன்படுத்த வேண்டியியிருக்கும் அதனால் switch எனும் பொத்தானை தெரிவுசெய்தால் போதும் எழுத்திலிருந்து எண்ணிற்கு விசைப்பலகை மாறி யமையும்

4

எக்செல் எனும் பயன்பாட்டில் நாம் உருவாக்கிடும் கணித சூத்திரங்களை மற்றவர்கள் யாரும்மாற்றிடாமல் பாதுகாத்திடலாம்

அதற்கான படிமுறை பின்வருமாறு
படிமுறை1.இதற்காக நாம் பாதுகாக்க விரும்பும் எக்செல் தாளினை திரையில் தோன்றசெய்திடுக பின்னர் Ctrl+A ஆகிய விசைகளை அழுத்தி தாள் முழுவதையும் தெரிவுசெய்து கொள்க பின்னர் சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் format cells எனும் வாய்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் எனும்உரையாடல் பெட்டியில் Protection எனும் தாவிபொத்தானின் திரையை தோன்ற செய்திடுக அதில் Locked எனும் தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்து கொண்டு ok எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
படிமுறை2. எக்செல்தாளின் கணித சூத்திரங்கள் இருக்கும் நுண்ணறையை தெரிவுசெய்து கொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் format cells எனும் வாய்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் எனும்உரையாடல் பெட்டியில் Protection எனும் தாவிபொத்தானின் திரையை தோன்ற செய்திடுக அதில் Locked எனும் தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்து கொண்டு ok எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
படிமுறை3.மூன்றாவது படிமுறையாக தி் ரையின் மேலே Review எனும் தாவிபொத்தானின் திரையை தோன்ற செய்திடுக அதில் Protect sheet எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக தேவையெனில் கடவுச்சொற்களைஉள்ளீடு செய்து கொண்டு ok எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

கணினியின் துவக்க நிலை பயனாளர்கள் செய்திடும் பொதுவான தவறுகள்

பின்வரும் தவறுகளை பெரும்பாலான கணினியின் துவக்க நிலை பயனாளர் செய்திடுவார்கள்
1.பணிபுரிந்து கொண்டிருக்கும் மிகமுக்கியமான கோப்புகளை அவ்வப்போது பிற்காப்பு செய்து சேமித்திடவேண்டும் என்ற எண்ணமே சிறிதுகூட இல்லாமல் ஆழ்ந்து பணிபுரிந்து கொண்டிருப்பார்கள்.பொதுவாக ஒரு சில பயன்பாடுகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தானாகவே பிற்காப்பு செய்து சேமித்து கொள்ளும் மற்றவை அவ்வாறான தானியக்க செயல்களை செயல்படுத்தாது அதனால் நாம் பணிபுரியும் எந்தவொரு கோப்பினையும் 10 அல்லது 15 நிமிடங்களுக்கு ஒருமுறை பிற்காப்பு செய்து சேமித்து கொள்க
2.ஏதேனும் பயன்பாடுகளை பயன்படுத்தி கொண்டிருக்கும்போது அதன் திரையில் கூறும் அறிவுரைகளை படித்தறிந்து கொள்ளாமலேயே தானியங்கி செயல்போன்று Next அல்லது Ok எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுவார்கள் அவ்வாறு அடுத்தடுத்து பொத்தான்களை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடாமல் திரையில் கூறப்படடுள்ள விவரங்கள் முழுவதையும் படித்து அடுத்து நிகழ்வு என்னவென தெரிந்து கொண்டு செயல்படுக
3.பயன்படுத்தி கொண்டிருக்கும் கணினியில் செயல்படும் அனைத்து பயன்பாடுகளின் செயல்களை முறைப்படி நிறுத்தம் செய்திடாமல் அப்படியே அரைகுறையாக செயல்கள் நடைபெற்றுகொண்டிருக்கும்போதே கணினியின் இயக்கத்தை நிறுத்தம் செய்திடுவார்கள் அதனை தவிர்த்து அனைத்து பயன்பாடுகளின் செயல்கள் முடிவு பெறும்வரை காத்திருந்து கணினியின் இயக்கத்தை நிறுத்தம் செய்க
4.நமக்கு வரும் மின்னஞ்சல்களுடன் இணைப்பாக வரும்கோப்புகளை எச்சரிக்கையாக பாதிப்பு ஏதேனும் வருமா என கவணிக்காமல் திறந்திடுவார்கள் இதனால் நச்சுநிரல்கள் நம்முடைய கணினியை தாக்கும் அபாயம் உருவாகின்றது முடிந்தவரை அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களில் உள்ள இணைப்புகளை எச்சரிக்கையாக அனுகுமாறு அறிவுறுத்தப்படுகின்றது
5.நமக்கு வரும் மின்னஞ்சல்களை நம்முடைய நன்பர்களுக்கு நண்பர்களின் நண்பர்களுக்கு என தொடர்ச்சியாக சங்கிலி போன்று பரிந்துரைசெய்து அனுப்பிடவேண்டாம் என பரிந்துரைக்கப்படுகின்றது
6. நாம் கண்ணால் காணும் எந்தவொரு பயன்பாட்டு மென்பொருளையும் உடனடியாக பதிவிறக்கம்செய்து நம்முடைய கணினியில் நிறுவுகை செய்திடவேண்டாம் அவை தீங்கிழைக்கும் நச்சுநிரலாககூட இருக்கலாம் அதனால் அதனைபற்றி நம்பிக்கையான செய்தி கிடைத்தால்மட்டும் பதிவிறக்கம் செய்து நிறுவுகைசெய்திடுக
7.பொதுவாக திரையில் காணும் Download Now, Start Download, அல்லதுContinue என்பன போன்ற பொத்தான்களை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்திடுவார்கள் ஆயினும் இவை நம்மை வேறொரு விளம்பர பக்கத்திற்கு அழைத்து செல்லும் அதனால் இவ்வாறு நம்முடைய கண்ணால் காணும் அனைத்துபொத்தான்களையும் தெரிவுசெய்து சொடுக்குதல்செய்திடவேண்டாம்
8.நாம் பயன்படுத்திடும் இயக்கமுறைமைகளையும் பயன்பாடுகளையும் அவ்வப்போது சமீபத்திய நிகழ்வுகளுக்கு ஏற்ப தகவமைத்து கொள்வதற்காக நிகழ்நிலை படுத்தல் செய்திடாமல் தொடர்ந்து பயன்படுத்தி கொண்டிருப்பார்கள். நடைமுறையில் நாம் பயன்படுத்தி கொண்டிருப்பவைகளை அவ்வப்போது நிகழ்நிலை படுத்தி மேம்படுத்தி கொள்க என பரிந்துரைக்கப்படுகின்றது
9. எப்போதும் surge protector அல்லது UPS இல்லாமல் கணினியை மின்னிணைப்பு செய்து பயன்படுத்திடவேண்டாம் அவ்வாறு பயன்படுத்தினால் நம்முடைய கணினியையே புதியதாக வாங்கவேண்டிய நிலை ஏற்படும் அல்லது அதனுடைய உள்ளுறுப்புகளை புதியதாக மாற்றியமைத்திடவேண்டியிருக்கும்

UEFIஇன் துனையுடன் ஒரே கணினியில் விண்டோ லினக்ஸ் ஆகிய இரண்டு இயக்கமுறைமைகளையும் எளிதாக செயல்படுத்திபயன்பெறுக

பொதுவாக விண்டோ இயக்கமுறைமை செயல்படும் கணினியில் லினக்ஸ் இயக்கமுறைமையை நிறுவுகை செய்து செயல்படுத்திட முனைந்தால் அவ்வாறான செயலானது விண்டோ இயக்கமுறைமைக்கான கோப்புகளை அழித்துவிடும் அவ்வாறே லினக்ஸ் இயக்கமுறைமை செயல்படும் கணினியில் விண்டோ இயக்கமுறைமையை நிறுவுகை செய்திடமுனைந்தால் அந்த செயலானது லினக்ஸ் இயக்க-முறைமைக்கான கோப்புகளை அழித்துவிடும் ஆயினும் அவ்வாறான பாதிப்பு எதுவும் நிகழாமல் இவ்விரண்டு இயக்கமுறைமை-களையும் ஒரே கணினியில் இயங்குமாறு செய்திட விரும்பினால் UEFI என சுருக்கமாக அழைக்கப்படும் ஒருங்கிணைந்த விரிவாக்க வன்பொருள் இடைமுகம் என்பதை பயன்படுத்தி ஒரே கணினியில் விண்டோ லினக்ஸ் ஆகிய இரு இயக்கமுறைமைகளையும் சிக்கல் எதுவுமில்லாமல் எளிதாக செயல்படுத்தி பயன்பெறமுடியும். அது எவ்வாறு முன்பெல்லாம்கணினிகள் BIOS என சுருக்கமாக அழைக்கப்படும் அடிப்படை உள்ளீட்டு வெளியீட்டு அமைவுடன் இணைந்து (Basic Input Output System ) கிடைத்து வந்தன தற்போது பெரும்பாலான கணினிகள் ஒருங்கிணைந்த விரிவாக்க வன்பொருள் இடைமுகத்துடன் (Unified Extensible Firmware Interface (UEFI))இணைத்தே வெளியிடப்படுகின்றன. அதனால் இதற்காகவென தனியாக நாம் எந்தவொரு பயன்பாட்டு மென்பொருளையும் கொள்முதல் செய்யத்தேவையில்லை அதற்கு பதிலாக புதியதாக கணினி வாங்கும்போதே நம்முடைய கணினியில் இந்த UEFI அமைவு உள்ளிணைந்துள்ளதாவெனசரி பார்த்து கொள்க
பழைய முதன்மை துவக்க ஆவணமான Master Boot Record (MBR).ஆனது15 நினைவக பாகப்பிரிவினைகளையும் 32 பிட் முகவரியுடன் 2 டெரா பைட் நினைவகத்தை மட்டுமே ஆதரிக்கின்றது அதற்குமறுதலையாக வழிகாட்டிடும் பாகப்பிரிவினை அட்டவணையானது GUID Partition Table (GPT)கைகளால் பாகப்பிரிவினை செய்வதை அனுமதிக்கின்றது இது128 நினைவக பாகப்பிரிவினைகளையும் 64 பிட் முகவரியுடன் 8மில்லியன் டெரா பைட் நினைவகத்தை ஆதரிக்கின்றது அதனால் GPTயையே பயன்படுத்தி கொள்க என பரிந்துரைக்கப்படுகின்றது

இணைய உலாவலின்போது சோர்வில்லாமல் செயல்படுவதற்கான அறிவுரைகள்

ஒரேதிரையில் ஏராளமான அளவில் இணையஉலாவியினுடைய தாவிப்-பொத்தான்களின் திரைகளை தோன்றிட செய்தும் ஏராளமான அளவில் பயன்பாடுகளின் சாளரங்களை திறந்தும் பணிபுரிவதால் எந்தவொரு பணியும் முழுவதுமாக முடித்திடாமல் அனைத்து பணிகளும் அரைகுறையாகவே தொங்கலாக நின்றுகொண்டிருக்கும் இதனை தவிர்த்திட பின்வரும் அறிவுரைகளை பின்பற்றிடுக
1 இணையஉலாவியில் ஒன்றிற்குமேற்பட்ட தாவிப்பொத்தான்களின்திரைகளை தோன்றிட செய்து அவைகளுக்கிடையே உடனுக்குடன் இடம்மாறிமுக்கியமான பணியை முதலில் முடித்திடமுனையும்போது குறுக்குவழிவிசைகளை பயன்படுத்திகொள்க உதாரணமாக புதிய தாவியின் திரையில் காலியான கூகுள் உரையாவனத்தினை திறந்து பணிபுரிவதற்காக “Ctrl + t” என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்துக பின்னர் விரியும் புதிய தாவியின் திரையில் doc.new என்றவாறு தட்டச்சுசெய்து பணியை துவங்கிடுக
2.இணையஉலாவியில் அடிக்கடி செய்திடும் பணிகளை Ctrl எனும் விசையை அழுத்தி பிடித்துகொண்டு இடம்சுட்டியை சொடுக்குக உடன் மேற்குறிப்பு செய்தவை பட்டியலாக விரியும் அவற்றுள் தேவையானதை தெரிவுசெய்து பணிபரிய துவங்கிடுக
3.இணையஉலாவியின் நம்முடைய உதவிக்கு ஆயிரகணக்கான விரிவாக்க வசதிகள் தயாராக உள்ளன அவற்றுள் நம்முடைய தேவைக்கு பொருத்தமானதை மட்டும் தெரிவுசெய்து பயன்படுத்தி கொள்க
4.இணைய உலாவலின்போது தொடர்ந்த திரையை பார்த்து கொண்டேஇருந்தால் நம்முடைய கண்ணின் பார்வைதெளிவுதிறன் குறைந்து சோர்வாக உணருவோம் இதனை தவிர்க்க 20/20/20 எனும் விதியை பயன்படுத்திடுக அதாவது தொடர்ந்து 20நிமிடம் பணிபுரிந்தவுடன் 20நொடிநேரம் 20மீட்டர்தூரத்திற்கு அப்பால்உள்ள பொருளை கண்களால் கண்டபின்னர் மீண்டும்இணையஉலாவிடும் பணியை தொடருக

எழுத்தாளர்கள் இணையத்தில் தம்முடையஎழுத்துகளை வெளியிடும் திறனை Git என்பதன்துனையுடன் மேம்படுத்தி கொள்க

சில எழுத்தாளர்கள் சாதாரண கதைகளையும் துப்பறியும் கதைகளையும் வேறுசிலர் கல்விதொடர்பான கவிதைகளையும் கட்டுரைகளையும் வேறுசிலர் திரைக்கதைகளையும் மற்றும்சிலர் தொழில்நுட்ப வழிகாட்டுதல்களையும் அல்லது கட்டற்ற பயன்பாடுகளை பற்றிய விளக்ககுறிப்புகளையம் அவரவர்களின் விருப்பங்களின்படி எழுதிவெளியிடுவார்கள் இவ்வாறான அனைத்து எழுத்தாளர்களும் தங்களுடைய கருத்துகளை மின்னதழ்களில் வலைபூக்களில் இணையதளத்தில் தனிச்சுற்று மின்னஞ்சல்களில் என வெவ்வேறு வழிகளில் வெளியிடுவார்கள் இவையனைத்தும் அடிப்படையில் தங்களுடைய கணினியில் la text.ஆக உருவாக்கி பார்வையாளர்கள் அச்சிட்டுபெறுவதற்கேதுவாக PDF வடி வமைப்பிலும் கைபேசியில் படிப்பதற்காக EPUB வடிவமைப்பிலும் இணையதளங்களில் இணைய உலாவிவாயிலாக படிப்பதற்காக HTML வடிவமைப்பிலும் word processor எனும் பயன்பாட்டின் வழியாக வெளியீடு செய்திடுவார்கள் ஒருசாதாரண வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட உரையிலான தம்முடைய கருத்துகளை பல்வேறு வகையில் வடிவமைப்பு செய்து வெளியிடுவதற்காக தனியாக செயல்படுவதற்கு பதிலாக Git இன் உதவியுடன் மிகஎளிதாக வெளியீடுசெய்திடமுடியும் அதாவது எழுத்தாளர்கள் தங்களுடைய கருத்துகளை எழுதுவதில் மட்டும் கவணம் செலுத்தினால் போதும் அதனை பத்திகளாகவும பக்கங்களாகவும் தக்கதலைப்புகளுடன் நன்கு அலங்கரித்து மேம்படுத்தி வெளியிடுவதை இது கவணித்து கொள்கின்றது . சாதாரண உரையில் எழுதுமபோது, ஒரு சொல் செயலிஎனும் வேர்டு ப்ராஸஸரே அதிகப்படியானதாக இருக்கிறது. ஆயினும்இதுஒரு சொல் செயலியில் வேலை செய்வதை விட சற்று வித்தியாசமாக உள்ளது.இந்தGit ஆனது விண்டோ லினக்ஸ் ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்கொண்டது. இந்தGitஎன்பதை https://git-scm.com/ எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம்செய்து நம்முடைய கணினியில் நிறுவுகை செய்து பயன்படுத்திகொள்க

Previous Older Entries