அக்சஸ் 2007-36 – ஒரு உரைபெட்டிக்கு விட்டுவிட்டு ஒளிறும் Labelஐ உருவாக்குதல்

  ஒரு படிவத்தில் உள்ள உரைபெட்டியின் Labelஇக்கு நாம் விரும்பும் வண்ணத்தை சேர்க்கலாம் அவ்வாறு புதிய வண்ணத்தை அந்த Labelஇற்கு சேர்த்திடும்போது அதனை விட்டுவிட்டு ஒளிறும்படி செய்யமுடியும் அதன்மூலம் பார்வையாளரின் கவணத்தை குறிப்பிட்ட உரைபெட்டியின் மீது திரும்பும்படி செய்யலாம். ஓரு படிவத்தில் தேவையான தரவுகளை உள்ளீடுசெய்யும்பொது குறிப்பிட்ட உரைபெட்டியில் உள்ளீடுசெய்யும். மிகசிக்கலான தரவுகளின்மீது உள்ளீடுசெய்பவரின் கவணத்தை ஈர்ப்பதற்கு இந்த வழிமுறை பேருதவியாக அமைகின்றது.. இதற்காக படிவத்தினுடைய Timer என்ற நிகழ்வு பயன்படுகின்றது.இதனை எவ்வாறு செயல்படுத்துவது என பின்வரும்வழிமுறைகள் கூறுகின்றன.

 1. முதலில் Start => All Programs => MsOffice=> Ms Access2007 என்றவாறு செயற்படுத்தி எம்எஸ்அக்சஸ்2007 ஐ இயக்கவும்.
 2. உடன் தோன்றிடும் ஆள Ms Access2007 என்ற சாளரத் திரையில் நாம் படிவம்உருவாக்கிட விரும்பும் கோப்பினை திறந்துகொள்க.
 3. பின்னர்அதில் ஒரு புதிய படிவத்தினை வடிவமைப்பு நிலையில் திறந்து வைத்திடுக.
 4. அதன்பின்னர்வடிவமைப்பு (Design)தாவிபட்டியின் திரையில் கட்டுப்பாட்டு (Control)குபுவில் உள்ள Text Box Control Control என்ற ஐகானை தெரிவுசெய்து இருமுறைசொடுக்குக.

5. பின்னர்சுட்டியை இந்த படிவத்தில் ஏதெனும் ஒருஇடத்தில் வைத்து சொடுக்கி ஒரு உரைபெட்டியை உருவாக்குக.

 1. அதன் பின்னர்இந்த உரைபெட்டியின் லெபிள் என்ற தலைப்பு பகுதியில் சுட்டியை வைத்து இருமுறை சொடுக்குக.உடன் விரியும் இந்த உரைபெட்டியினுடைய Labelஇன் பண்பியல்பு பெட்டியில் உள்ள Allஎன்ற தாவிபட்டியின்கீழ்இருக்கும் Name என்றபகுதியில் lblMyLabel என்றும் Caption என்றபகுதியில் இந்த Label இற்கு Blinker என்றவாறும் ஒருபெயரை தட்டச்சு செய்து இந்த பண்பியல்பு பெட்டியை மூடிவிடுக.
 2. பின்னர்இந்த படிவத்தினுடைய பண்பியல்பு பெட்டியை திறந்துகொள்க. அதில் Event என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
 3. அதன்பின்னர்இந்த Event எனும் தாவியின் திரையில் உள்ள Timer Interval என்ற பெட்டியில் 500 என தட்டச்சுசெய்க .இந்த மதிப்புதான் படிவத்தில் உள்ள Label இன் ஒளிறும் நேரத்தை கட்டுப்படுத்துகின்றது.

9 .பின்னர்இந்த Event தாவிபட்டியின்திரையில் உள்ள On Timer evenஎன்பதற்கருகில் இருக்கும்Ellipse என்ற முப்புள்ளியை சொடுக்குக.

 1. உடன் தோன்றும் குறுக்குவழிபட்டியலில் உள்ள Code builder என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.
 2. அதன் பின்னர்தோன்றிடும் விபிஎடிட்டர் எனும் சாளரத்தில் பின்வரும் குறிமுறைகளை தவறில்லாமல் உள்ளீடுசெய்து சேமித்து கொள்க.

நிரல் தொடர் 36-1

With lblMyLabel

.ForeColor = (llf(.ForeColor = 0, 255, 0))

End With

End Sub

2.பின்னர்இந்த படிவத்தை படிவக்காட்சிநிலையில் திறந்திடுக உடன் படம்-36-1 இல் உள்ளவாறு உரைபெட்டியின் Label ஆனது விட்டுவிட்டு திரையில் மின்னுவதை காணலாம்.

 36.1

படம்-36-1

அக்சஸ்-2007-தொடர் 35

35.1

படம் -35-1

   ஒரு படிவத்தில் உள்ள குழுவான வாய்ப்பில் ஏதெனும் ஒரு வாய்ப்பை தெரிவுசெய்யும்பொது அதனுடைய பெயரானது   மற்றொரு கட்டுப்பாட்டினுடைய Label இன் பெயராக மாறும்படி அக் சஸ்2007 இல் அமைக்கமுடியும் .அதற்கான படிமுறை பின்வருமாறு

 1. முதலில் அக்சஸ் 2007 ஐ இயக்கி அதில் ஒரு புதிய படிவத்தை வடிவமைப்பு காட்சிநிலையில்அதாவது Design எனும் தாவியின் பொத்தானின் திரையில் பிரிதிபலிக்கும்படி திறந்துகொள்க.
 2. பின்னர் Control என்ற குழுவில் OptionGroup என்ற கட்டுப்பாட்டை தெரிவுசெய்து சொடுக்குக. பிறகு காலியான படிவத்தில் இடம்சுட்டியை வைத்து சொடுக்கி ஒரு செவ்வக வடிவ கட்டத்தை வரைக
 3. உடன் படம் 35-1 இல் உள்ளவாறு OptionGroupwizard என்பது திரையில் தோன்றி திரைத்தோற்றம் அமையும்.இதில் உள்ள What label do you want for each option? என்ற கேள்வியின் கீழ்Label Names என்பதற்கடுத்தாக முதல்வரியில் Item Number என்றும் இரண்டாவது வரியில் Item Name என்றும் பெயரை தட்டச்சு செய்து கொண்டுNext என்ற பொத்தானை சொடுக்குக.
 4. அதன்பின்னர்தோன்றும் திரையில் Do you want one option to be default choice?என்ற கேள்விவிக்கு பதிலாக Yes, the default choice is Item Number என்று இருக்கும் வாய்ப்பை தெரிவுசெய்துகொண்டு (படம்-35-2) Next என்ற பொத்தானை சொடுக்குக.

  35.2

படம் -35-2

 1. பின்னர்விரியும் அடுத்ததிரையில் (படம்-35-3) What value do you want to assign to each option?ஏன்ற கேள்விவிக்கு பதிலாக Item Number என்பதற்கு 1 என்றும் Item Name என்பதற்கு 2 என்றும் இவைகளின் மதிப்புகள் இயல்புநிலையில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் அவற்றை அப்படியே ஏற்றுகொண்டு Next என்ற பொத்தானை சொடுக்குக.

35.3

படம் -35-3

 1. அதன் பின்னர்தோன்றும் திரையில்(படம்-35-4) What type of control do you want in the option group ? என்பதற்கு Option buttonஎன்ற வாய்ப்பை தெரிவுசெய்து கொண்டுNext என்ற பொத்தானை சொடுக்குக.

35.4

படம் -35-4

 1. பிறகு தோன்றும் திரையில் (படம்-35-5) இந்த கட்டுப்பாட்டிற்கு skMyFrameஎன்றவாறு ஒரு பெயரை தட்டச்சுசெய்து கொண்டு Finish என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கிஇந்த வித்தகர்திரையை மூடிவிடுக.

35.5

படம் -35-5

 1. பின்னர்நாம் உருவாக்கிய குழுவான Option Group Frame என்பதை இடம்சுட்டியால் தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுறபொத்தானை இருமுறை சொடுக்குக. உடன் இதனுடைய பண்பியல்பு உரையாடல் பெட்டி யொன்று திரையில் தோன்றும். .
 2. அதில் Event என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் Event தாவிபொத்தானின் திரையில் உள்ள After Update என்ற நிகழ்வின் அருகில் உள்ள ellipses என்ற முப்புள்ளியை இடம்சுட்டியால் தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுறபொத்தானை இருமுறை சொடுக்குக.
 3. அதன் பின்னர்விரியும் பட்டியலில் Code Builder என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.
 4. பிறகு தோன்றும் விபிஎடிட்டர் எனும் சாளரத்தில் நிரல்தொடர் 35-1 இல் உள்ளவாறு குறிமுறைகளை தவறில்லாமல் தட்டச்சு செய்து இந்த விபிஎடிட்டர் சாளரத்தை மூடிவிடுக.

நிரல்தொடர் 35-1

Private Sub skFrame_AfterUpdate()

If Me!skMyFrame = 1 Then

Me!lblMyLabel.Caption = “Enter the Item Number”

Else

Me!lblMyLabel.Caption = “Enter the Item Name”

End If

End Sub

 1. பின்னர் Control என்ற குழுவில் உள்ள Text Box என்ற கட்டுப்பாட்டை தெரிவுசெய்து சொடுக்கியபின்  படிவத்தில் நாம் ஏற்கனவெ உருவாக்கிய குழுவிற்கு கீழ்பகுதியில் இடம்சுட்டியை வைத்து சொடுக்கி மற்றொரு செவ்வக வடிவ கட்டத்தை வரைக .பின்னர்இதனுடைய Label பிடித்து மேல்பகுதிக்கு இழுத்துவந்து உரைபெட்டியும் Label உம் இணையாகவும் சரிசமமாகவும் இருக்குமாறு சரிசெய்து அமைத்திடுக.
 2. அதன்பின்னர்இந்த Labelஐ இடம்சுட்டியால் தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுற பொத்தானைஇருமுறை சொடுக்குக. உடன் தோன்றும் பண்பியல்பு எனும் உரையாடல் பெட்டியில் உள்ள All என்றதாவிபொத்தானை தெரிவு செய்து சொடுக்குக. பின்னர்விரியும் திரையில் உள்ள Name என்பதில் இந்த Label இக்கான பெயராக lbl Name என்றவாறு தட்டச்சுசெய்து இந்த பண்பியல்பு உரையாடல் பெட்டியை மூடிவிடுக
 3. அதன்பின்னர்இந்த படிவத்தை படிவக்காட்சிநிலையில் திறந்து கொண்டு அதில் உள்ள Item Number என்ற வாய்ப்பை தெரிவுசெய்க. உடன் கீழ்பகுதியில் உள்ள உரைபெட்டியின் lable எனும்பகுதியில் Enter the Item Number என்றவாறு (படம்-35-6) பிரிதிபலிக்கும்.

35.6

படம் -35-6

 1. பிறகு அதில் உள்ள Item Name என்ற வாய்ப்பை தெரிவுசெய்க. உடன் கீழ்பகுதியில் உள்ள உரைபெட்டியின் lable எனும்பகுதியில் Enter the Item Name என்றவாறு பிரிதிபலிக்கும்.

அக்சஸ் -2007 தொடர் -34 பிறந்த தேதியிலிருந்து வயதை கண்டுபிடித்தல்

 ஒருவருடைய பிறந்த தேதியை கொடுத்தால் அவருடைய த ற்போதைய மிகச்சரியான வயதை அக்சஸ்2007 இல் Age Function என்பதன் மூலம் காணலாம்.இந்த வயதை எழுத்தின் மூலம் விவர உரையுடன் கூட காணமுடியும். அதற்காக

 1. முதலில் Start => All Programs => MsOffice=> Ms Access2007 என்றவாறு செயற்படுத்தி எம்எஸ்அக்சஸ்2007 ஐ இயக்கவும்.
 2. உடன் தோன்றிடும் Ms Access2007என்ற சாளரத் திரையில் நாம் படிவம்உருவாக்கிட விரும்பும் கோப்பினை திறந்துகொள்க.
 3. பின்னர்அதில் ஒரு புதிய படிவத்தினை வடிவமைப்பு நிலையில் திறந்து வைத்திடுக.
 4. அதன்பின்னர்வடிவமைப்பு (Designe)) எனும் தாவிபட்டியின் கட்டுப்பாட்டு (Control)குழுவில் உள்ள Text Box Control என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து இருமுறைசொடுக்குக.

5. பின்னர்இடம்சுட்டியை இந்த படிவத்தில் ஏதெனும் ஒருஇடத்தில் வைத்து சொடுக்கி ஒரு உரைபெட்டியை உருவாக்குக.

 1. அதன் பின்னர்இந்த உரைபெட்டியின் Lable என்ற தலைப்பு பகுதியில் இடம்சுட்டியை வைத்து இருமுறை சொடுக்கி இந்த உரைபெட்டிக்கு date of birth என்றவாறு ஒருபெயரை இந்த Lable இன் பண்பியல்பு பெட்டியில் உள்ள Caption என்றபகுதியில் தட்டச்சு செய்க.
 2. பின்னர்இதே உரைபெட்டியை இருமுறை கொடுக்குக. உடன் தோன்றிடும் பண்பியல்பு எனும் உரையாடல் பெட்டியின் All என்ற தாவிபட்டியின் கீழ்உள்ள Name என்ற பகுதியில் இந்தஉரைப்பெட்டிக்கான பெயரை txtDOB என்றவாறு தட்டச்சு செய்க.
 3. அதன் பின்னர்இதே பண்பியல்பு பெட்டியில் Formatஎன்ற தாவி பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.உடன் விரியும் Format என்ற தாவிபட்டியின் திரையில் Input Mask என்பதில்உள்ள Ellipsesஎன்ற முப்புள்ளியை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் சிறு உரையாடல் பெட்டியின் பட்டியலில் உள்ள Short Date என்பதை தெரிவுசெய்து Finish என்ற பொத்தானை சொடுக்குக.
 4. பின்னர்இதே பண்பியல்பு பெட்டியில் Format என்ற தாவி பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.உடன் விரியும் Format என்ற தாவிபட்டியின் திரையில் text Align என்பதில் இடம்சுட்டியை வைத்து சொடுக்குக. உடன் விரியும் சிறு பட்டியலில் Left என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.
 5. அதன் பின்னர்வடிவமைப்பு (Designe) எனும் தாவிபட்டியின் கட்டுப்பாட்டு (Control)குழுவில் உள்ள Check Box Control என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து இருமுறை சொடுக்குக.
 6. பின்னர்இடம்சுட்டியை நாம் உருவாக்கிய படிவத்தில் Date of Birth என்ற பெயரின் கீழ்பகுதியில் வைத்து கொடுக்கி   தேர்வு செய்பெட்டிஒன்றை உருவாக்குக.
 7. பின்னர்இந்த தேர்வுசெய்பெட்டியின் Lable என்ற தலைப்பு பகுதியில் இடம்சுட்டியை வைத்து இருமுறை சொடுக்கி இந்த தேர்வுசெய்பெட்டிக்கு Include months? என்றவாறு ஒருபெயரை தட்டச்சு செய்க.
 8. அதன் பின்னர்இதே தேர்வுசெய்பெட்டியை இருமுறை கொடுக்குக. உடன் தோன்றிடும் பண்பியல்பு உரையாடல் பெட்டியில் All எனும் தாவிபட்டியின் கீழ்உள்ள Name என்ற பண்பியல்பில் இந்த தேர்வுசெய்பெட்டிக்கு CkMonths என்றவாறு பெயரிடுக.
 9. பின்னர்இதே பண்பியல்பு பெட்டியில் Data னும் தாவிபட்டியின்ன் கீழ்உள்ள Default Value என்ற பகுதியில் இந்த தேர்வுசெய்பெட்டியின் இயல்பு மதிப்பு 0 என இருந்திடுமாறு 0 வை உள்ளீடுசெய்க.
 10. அதன் பின்னர்வடிவமைப்பு (Designe) எனும் தாவிபட்டியின் கட்டுப்பாட்டு (Control)குழுவில் உள்ள Check Box Control என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து இருமுறை சொடுக்குக.
 11. பின்னர்இடம்சுட்டியை   include Months?என்ற பெயருடன் நாம் உருவாக்கிய தேர்வுசெய்பெட்டியில் அதற்கு கீழ்பகுதியில் வைத்து கொடுக்கி மற்றொரு தேர்வுசெய்பெட்டியை உருவாக்குக.
 12. பின்னர்இந்த தேர்வுசெய்பெட்டியின் Lable என்ற தலைப்பு பகுதியில் இடம்சுட்டியை வைத்து இருமுறை சொடுக்கி இந்த தேர்வுசெய்பெட்டிக்கு display Age with Text? என்றவாறு ஒருபெயரை தட்டச்சு செய்க.
 13. அதன் பின்னர்இதே தேர்வுசெய்பெட்டியை இருமுறை கொடுக்குக. உடன் தோன்றிடும் பண்பியல்பு உரையாடல் பெட்டியில் All எனும் தாவிபட்டியின் கீழ்உள்ள Name என்ற பண்பியல்பில் இந்த தேர்வுசெய்பெட்டிக்கு CkText என்றவாறு பெயரிடுக.
 14. பின்னர்இதே பண்பியல்பு பெட்டியில் Data எனும் தாவிபட்டியின் கீழ்உள்ள Default Value என்ற பகுதியில் இந்த தேர்வுசெய்பெட்டியின் இயல்பு மதிப்பு 0 என இருந்திடுமாறு 0 வை உள்ளீடுசெய்க.
 15. பின்னர்வடிவமைப்பு (Designe) எனும் தாவிபட்டியின் கட்டுப்பாட்டு (Control)குழுவில் உள்ள   Button Control என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
 16. அதன் பின்னர்இடம்சுட்டியை Include Months மற்றும் display Age With text? ஆகிய பெயருடன் நாம் உருவாக்கிய தேர்வுசெய்பெட்டிகளுக்கு கீழ்ப் பகுதியில் வைத்து கொடுக்கி கட்டளை பொத்தான் ஒன்றினை உருவாக்குக.
 17. உடன் இந்த கட்டளை பொத்தானை உருவாக்குவதற்கான பொத்தான் வழிகாட்டி என்ற வித்தகர்உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும்.அதில் Cancel என்ற பொத்தானை சொடுக்கி இதனை மூடிவிடுக.
 18. பின்னர்இந்த கட்டளை பொத்தானில் தலைப்பு பகுதியில் இடம்சுட்டியை வைத்து இருமுறை சொடுக்குக..உடன் தோன்றிடும் பண்பியல்பு உரையாடல் பெட்டியில் All எனும் தாவிபட்டியின் கீழ்உள்ள Caption என்ற பண்பியல்பில் இந்த கட்டளை பொத்தானிற்கு Get Your Age என்றவாறு பெயரிடுக.
 19. அதன்பின்னர்இதே பண்பியல்பு உரையாடல் பெட்டியில் All எனும் தாவிபட்டியின் கீழ்உள்ள Name என்ற பண்பியல்பில் இந்த கட்டளை பொத்தானிற்கு Get Your Age என்றவாறு பெயரிடுக.

25;பின்னர்Event என்ற தாவி பொத்தானை சொடுக்குக. அதன்பின்னர்இந்த Event எனும் தாவிபட்டியில் உள்ள On Click Event என்பதற்கருகில் உள்ளEllipse என்ற முப்புள்ளியை சொடுக்குக.

 1. உடன் தோன்றிடும் குறுக்குவழிபட்டியலில் உள்ள Code builder என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.
 2. அதன் பின்னர்தோன்றிடும் விபிஎடிட்டர் எனும் சாளரத்தில் பின்வரும் குறிமுறைகளை தவறில்லாமல் உள்ளீடுசெய்து சேமித்து கொள்க.

நிரல் தொடர் 34-1

Dim varAge As Variant

   Dim dtDOB As Date

   Dim dtCurrentDate As Date

   Dim bolMonths As Boolean

   Dim bolText As Boolean

   dtCurrentDate = FormatDateTime(Now(), vbShortDate)

   Me![txtDOB].SetFocus

   dtDOB = Me![txtDOB].Value

   Me![ckMonths].SetFocus

   If Me![ckMonths].Value Then

       bolMonths = True

   Else

       bolMonths = False

   End If

   Me![cktext].SetFocus

   If Me![cktext].Value Then

       bolText = True

   Else

       bolText = False

   End If

   varAge = Age(dtDOB, dtCurrentDate, bolMonths, bolText)

   Me![txtAge].SetFocus

   Me![txtAge].Value = varAge

   இவ்வாறு பொருத்தமான மாறிகளையும் நடப்பு தேதிக்கான சரியான வழிமுறை வடிவமைப்புகளையும் FormateDateTimeஎன்ற செயலியை பயன்படுத்தி Short Date என்பதற்கு அமைத்தபிறகுஒருவருடைய பிறந்ததேதி என்னவென்றும் அவ்வாறே பிறந்ததேதி உள்ளீடு செய்யப்பட்டால் எவ்வாறு ஒருவருடைய வயதை கணக்கிடுவது என்றும் படிமுறை காணவேண்டும் அதற்காக

 1. அதே விபிஎடிட்டர் எனும் சாளரத்திரையில் உள்ளInsert என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.உடன்விரியும் Insert என்ற பட்டியலில் Moduleஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக.
 2. உடன்தோன்றிடும் குறிமுறை சாளரத்தில் பின்வரும் குறிமுறையை தவறில்லாமல் உள்ளீடுசெய்து சேமித்துகொள்க.

நிரல் தொடர் 34-2

Public Function Age(DOB As Date, today As Date, Optional WithMonths As Boolean = False, _ Optional WithDays As Boolean = False, Optional DisplayWithWords As Boolean = False) As Variant

   On Error GoTo Age_ErrorHandler

   Dim iYears As Integer

   Dim iMonths As Integer

   Dim iDays As Integer

   Dim dTempDate As Date

   ‘ Check that the dates are valid

   If Not (IsDate(DOB)) Or Not (IsDate(today)) Then

     DoCmd.Beep

     MsgBox “Invalid date.”, vbOKOnly + vbInformation, “Invalid date”

     Exit Function

   End If

   ‘ Check that DOB < Today

   If DOB < today Then

     DoCmd.Beep

     MsgBox “Today must be greater than DOB.”, _

         vbOKOnly + vbInformation, “Invalid date position”

     GoTo Age_ErrorHandler

   End If

   iYears = lAge = Abs(DateDiff(“yyyy”, dteDate1, dteDate2) – _

     IIf(Format(dteDate1, “mmdd”) <= Format(dteDate2, “mmdd”), 0, 1))

   dTempDate = DateAdd(“yyyy”, iYears, DOB)

   If WithMonths Then

     iMonths = DateDiff(“m”, dTempDate, today) – _

         IIf(DateAdd(“m”, iMonths, DateAdd(“yyyy”, iYears, DOB)) > today, 1, 0)

     dTempDate = DateAdd(“m”, iMonths, dTempDate)

   End If

   If WithDays Then

     iDays = today – dTempDate

   End If

   ‘ Format the output

   If DisplayWithWords Then

     ‘ Display the output in words

     Age = IIf(iYears > 0, iYears & ” year” & IIf(iYears <> 1, “s”, “”), “”)

     Age = Age & IIf(WithMonths, iMonths & ” month” & IIf(iMonths <> 1, “s”, “”), “”)

     Age = Trim(Age & IIf(WithDays, iDays & ” day” & IIf(iDays <> 1, “s”, “”), “”))

   Else

     ‘ Display the output in the format yy.mm.dd

     Age = Trim(iYears & IIf(WithMonths, “.” & Format(iMonths, “00”), “”) _

     & IIf(WithDays, “.” & Format(iDays, “00”), “”))

   End If

Exit_Age:

     Exit Function

Age_ErrorHandler:

     Age = Null

End Function

34.1

படம்-34-1

 1. பின்னர்விபிஎடிட்டர் எனும் சாளரத்தை மூடிவிடுக.
 2. அதன்பின்னர்வடிவமைப்பு (Designe) எனும் தாவிபட்டியின் கட்டுப்பாட்டு (Control)குழுவில் உள்ள Text Box Control என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து இருமுறைசொடுக்குக.

5. பின்னர்இடம்சுட்டியை இந்த படிவத்தில் Get Your Age என்ற கட்டளை பொத்தானிற்கு கீழ்பகுதியில் வைத்து சொடுக்கி ஒரு உரைபெட்டியை உருவாக்குக.

 1. அதன் பின்னர்இந்த உரைபெட்டியின் Lable என்ற தலைப்பு பகுதியில் இடம்சுட்டியை வைத்து இருமுறை சொடுக்கி இந்த உரைபெட்டிக்கு Age என்றவாறு ஒருபெயரை இந்த Lable இன் பண்பியல்பு பெட்டியில் உள்ள Caption என்றபகுதியில் தட்டச்சு செய்க.
 2. பின்னர்இதே உரைபெட்டியை இடம் சுட்டியால் தெரிவுசெய்து இருமுறை கொடுக்குக. உடன் தோன்றிடும் பண்பியல்பு எனும் உரையாடல் பெட்டியின் All என்ற தாவிபட்டியின் கீழ்உள்ள Name என்ற பகுதியில் இதனுடைய பெயரை txtAge என்றவாறு இந்த உரைப்பெட்டிக்கு தட்டச்சு செய்க.
 3. பின்னர்இந்த படிவத்தை படிவக்காட்சியில் திறந்துகொள்க.அதில் Date of Birth என்ற பகுதியில் உங்களுடைய பிறந்த தேதியை தட்டச்சு செய்து Get Your Age என்ற பொத்தானை சொடுக்குக. உடன் Age என்ற பகுதியில் உங்களுடைய வயது எண்ணில் பிரிதிபலிக்கும்.
 4. அதன்பின்னர்Include Months? மற்றும் Display age with text? ஆகிய தெர்வுசெய்பெட்டிகளை தெரிவுசெய்து கொண்டுGet Your Age என்ற கட்டளை பொத்தானை சொடுக்குக. உடன் உங்களுடைய வயது Get Your Age என்றபகுதியில் உரைவிவரத்துடன் படம்-34-1 இல் உள்ளவாறு தோன்றிடும்.

அக்சஸ்-2007 – 33- காலண்டர்கட்டுப்பாட்டில் வீச்செல்லையின் தேதியியை பிரிதிபலிக்கச்செய்தல்

33.1

படம்-33-1

அக்சஸ்-2007 இல் வீச்செல்லையின் தேதியை ( அதாவது ஆரம்ப தேதியையும்   முடிவு தேதியையும் கண்டுபிடிப்பது) தேர்ந்தெடுப்பதை Calendar Active X control என்பது ஆதரிக்காது. ஆயினும் ஒருசில வரி விபியின் குறிமுறைகளைகொண்டு இதனை செயல்படுத்திடலாம்.நாம் உருவாக்கிடும் நம்முடைய சொந்த படிவத்தில் வீச்செல்லையின் தேதியை ( அதாவது ஆரம்ப தேதியையும் முடிவு தேதியையும் கண்டுபிடிப்பது) காலண்டர்கட்டுப்பாட்டிலிருந்து பிரிதிபலிக்கும்படி செய்யமுடியும். அதற்காக பின்வரும் வழிமுறைகளை மட்டும் பின்பற்றினால் போதும்.

 1. முதலில் Start => All Programs => MsOffice=> Ms Access2007=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி எம்எஸ்அக்சஸ்2007 ஐ இயக்கவும்.
 2. உடன் தோன்றிடும் Ms Access2007என்ற சாளர திரையில் நாம் படிவம்உருவாக்கிட விரும்பும் கோப்பினை திறந்துகொள்க.
 3. பின்னர்அதில் ஒரு புதிய படிவத்தினை வடிவமைப்பு நிலையில் திறந்து கொள்க.
 4. அதன்பின்னர்வடிவமைப்பு (Designe) எனும் தாவி பட்டியின் கட்டுப்பாட்டு (Control)குழுவில் உள்ள insert ActiveX Control என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
 5. உடன் insert ActiveX Control என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் படம்-33-1 இல் உள்ளவாறு தோன்றும்.அதில் Select an ActiveX Control என்பதன் கீழ்உள்ள Calendar Control-12.0 என்பதை தெரிவுசெய்துகொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
 6. உடன் Detail என்ற சூன் 2009 மாதத்திய காலண்டர்நம்முடைய படிவத்தில் இணைக்கப்பட்டுவிடும்.
 7. பின்னர்இதே வடிவமைப்பு (Designe) எனும் தாவி பட்டியின் கட்டுப்பாட்டு (Control)குழுவில் உள்ள Text Box Control என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
 8. அதன் பின்னர்இடம்சுட்டியை இந்த படிவத்தில் உள்ள சூன் 2009 மாதத்திய காலண்டருக்கு கீழ்பகுதியில் இடம்சுட்டியை வைத்து சொடுக்குதல்செய்து ஒரு உரைபெட்டியை உருவாக்குக.
 9. பின்னர்இந்த உரைபெட்டியின் தலைப்பு பகுதியில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை இருமுறை சொடுக்கி இந்த உரைபெட்டிக்கு Range என்றவாறு ஒருபெயரை தட்டச்சு செய்து கொள்க.
 10. அதன் பின்னர்இதே உரைபெட்டியில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை இருமுறை சொடுக்குக. உடன் தோன்றும் பண்பியல்பு எனும் உரையாடல் பெட்டியில் இந்த உரைப்பெட்டிக்கு txtRange என்றவாறு Name என்ற பகுதியில் இதனுடைய பெயரை தட்டச்சுசெய்க.
 11. பின்னர்இதே வடிவமைப்பு (Designe) எனும் தாவி பட்டியின் கட்டுப்பாட்டு (Control)குழுவில் உள்ள Text BoxControl என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
 12. அதன் பின்னர்இடம்சுட்டியை படிவத்தில் உள்ள சூன் 2009 மாதத்திய காலண்டருக்கு கீழ்பகுதியில் Range என்ற பெயருடன் நாம் உருவாக்கிய உரைபெட்டிக்கு கீழ்பகுதியில் வைத்து சொடுக்குதல்செய்து மேலும் மற்றொரு உரைபெட்டியை உருவாக்குக.
 13. பின்னர்இந்த உரைபெட்டியின் தலைப்பு பகுதியில் இடம்சுட்டியை வைத்து இருமுறை சொடுக்கி இந்த உரைபெட்டிக்கு start Date என்றவாறு ஒருபெயரை தட்டச்சு செய்க.
 14. அதன் பின்னர்இதே உரைபெட்டியில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை இருமுறை கொடுக்குக. உடன் தோன்றும் பண்பியல்பு எனும் உரையாடல் பெட்டியில் All எனும் தாவியின் கீழ்உள்ள Name என்ற பண்பியல்பில் இந்த உரைப் பெட்டிக்கு txtStartDate என்றவாறு பெயரிடுக.
 15. பின்னர்வடிவமைப்பு (Designe) எனும்தாவி பட்டியின் கட்டுப்பாட்டு (Control)குழுவில் உள்ள Text Box Control என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
 16. அதன் பின்னர்இடம்சுட்டியை படிவத்தில் உள்ள சூன் 2009 மாதத்திய காலண்டருக்கு கீழ்பகுதியில் start Date என்ற பெயருடன் நாம் உருவாக்கிய உரைபெட்டிக்கு கீழ்பகுதியில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி மேலும் மற்றொரு உரைபெட்டியை உருவாக்குக.
 17. பின்னர்இந்த உரைபெட்டியின் தலைப்பு பகுதியில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை தெரிவுசெய்து இருமுறை சொடுக்கி இந்த உரைபெட்டிக்கு   End Date என்றவாறு ஒருபெயரை தட்டச்சு செய்க.
 18. அதன் பின்னர்இதே உரைபெட்டியில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை தெரிவுசெய்து இருமுறை சொடுக்குக. உடன் தோன்றிடும் பண்பியல்பு உரையாடல் பெட்டியில் All எனும் தாவியின் கீழ்உள்ள Name என்ற பண்பியல்பில் இந்த உரைப் பெட்டிக்கு txtEndDate என்றவாறு பெயரிடுக.
 19. பின்னர்வடிவமைப்பு (Designe)எனும் தாவி பட்டியின் கட்டுப்பாட்டு (Control)குழுவில் உள்ள Button Control என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
 20. அதன் பின்னர்படிவத்தில் உள்ள சூன் 2009 மாதத்திய காலண்டருக்கு கீழ்பகுதியில் start Date ,End Date ஆகிய பெயருடன் நாம் உருவாக்கிய உரைபெட்டிகளுக்கு அருகில் வலதுபுறப் பகுதியில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி கட்டளை பொத்தான் ஒன்றினை உருவாக்குக.
 21. உடன் இந்த கட்டளை பொத்தானை உருவாக்குவதற்கான பட்டன் விஸார்டு என்ற வழிகாட்டிஉரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றும்.அதில் Cancel என்ற பொத்தானை சொடுக்கி இதனை மூடிவிடுக.
 22. பின்னர்இந்த கட்டளை பொத்தானில் தலைப்பு பகுதியில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை தெரிவுசெய்து இருமுறை சொடுக்கி இந்த கட்டைளை பொத்தானிற்கு   Get Range என்றவாறு ஒருபெயரை தட்டச்சு செய்க.
 23. அதன் பின்னர்இதே கட்டளை பொத்தானை தெரிவுசெய்து இருமுறை சொடுக்குக.
 24. உடன் தோன்றும் பண்பியல்பு உரையாடல் பெட்டியில் All எனும் தாவியின் கீழ்உள்ள Name என்ற பண்பியல்பில் இந்த கட்டளை பொத்தானிற்கு bttnRange என்றவாறு பெயரிடுக.

24.;பின்னர்இந்த பண்பியல்பு பெட்டியின் மேல்பகுதியில் உள்ள Event என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. அதன்பின்னர்இந்த Event தாவியில் உள்ள Ellipse என்ற முப்பள்ளியை தெரிவுசெய்து சொடுக்குக.

 1. உடன் தோன்றும் குறுக்குவழிபட்டியலில் உள்ள Code builder என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.
 2. அதன் பின்னர்தோன்றிடும் விபிஎடிட்டர் எனும் சாளரத்தில் பின்வரும் குறிமுறைகளை தவறில்லாமல் உள்ளீடுசெய்து சேமித்து கொள்க.

Program-33-1

Private Sub GetRange_Click()

Dim dt As Date

Dim intRange As Integer

dt = Me!Calendar0.Value

intRange = Me!txtRange.Value

Me!txtEndDate = DateAdd(“d”, intRange, dt)

End Sub

 1. பின்னர்இந்த காலண்டர் கட்டுப்பாட்டுடன் உள்ள படிவத்தை படிவகாட்சி நிலையில் படம் 33-2 இல் உள்ளவாறு திறந்து கொள்க.அதில் ஏதேனும் ஒருதேதியை தெரிவுசெய்து சொடுக்குக.
 2. அதன் பின்னர்Range என்ற பகுதியில் +2 அல்லது -2 என்றவாறு நேர்மறை எண் அல்லது எதிர்மறை எண்களை வீச்சிற்கு பிறகுஉள்ளதேதி தேவையா அல்லது முன்பு உள்ளதேதிதேவையா என்ற நம்முடைய தேவைக்கெற்ப உள்ளீடு செய்க.
 3. உடன் Start Date என்ற பகுதியில் நாம் தெரிவுசெய்த தேதியும் End Date என்றபகுதியில் வீச்செல்லையின் தேதி அதாவது கூட்டல்குறியுடன் எனில் கூடிமுடிவுதேதியும் கழித்தல் குறியெனில் தேதியை கழித்து முந்தியதேதியும் பிரிதிபலிக்கசெய்யும்(படம்-33-2).

33.2

படம்-33-2

அக்சஸ்-2007- 32 எஸ்கியூஎல் சேவையாளருடன் இணைப்பை ஏற்படுத்தி பயன்படுத்திகொள்ளுதல்

முந்தைய அக்சஸ் 2007-31 இல் எஸ்கியூஎல் சேவையாளரை பேரளவில் செயல்படுத்தி பயன்படுத்தி கொள்ளமுடியும் என அறிந்துகொண்டோம். இந்த எஸ்கியூஎல் சேவையாளர் அக்சஸ் 2007 ஐ தோழமையுடன் பாவிப்பதால் அக்சஸ் 2007 ஐ கூட இதனுடைய துணையடன் நம்மால் பேரளவில் பயன்படுத்திகொள்ளமுடியும்.. அதற்காக http://msdn.microsoft.com/vstudio/express/sql என்ற வலைதளத்திற்கு சென்று SQL Server 2005 Express Edition என்ற இலவச மென்பொருளை பதிவிறக்கம் செய்து உங்களுடைய கணினியில் நிறுவிகொள்க.

இது தரவுகளை இணைத்திடும் பொறியாக செயல்படுகின்றது. எஸ்கியூஎல் சேவையாளர் பொருட்கள் எதுவும் அக்சஸ்2007 இல் accdb என்ற பின்னொட்டுடன் கூடிய கோப்பு வடிவமைப்பில் இல்லை .ஆயினும் ODBC என்பதை பயன்படுத்தி அக்சஸ் 2007 இன் கோப்புகளை எஸ்கியூஎல் சேவையாளருடன் இணைப்பு ஏற்படுத்திட முடியும்.

அக்சஸ்2007 இல் ADP என்ற வடிவமைப்பை பயன்படுத்தி எஸ்கியூஎல் சேவையாளரை திறந்து கொண்டு அனைத்து பணிகளையும் செய்யமுடியும். அக்சஸ் 2007 இல் ADP என்ற கோப்பு வடிவமைப்பில் File=> New => Browse => ADP =>என்றவாறு தெரிவுசெய்து அக்சஸ் 2007 இன் வடிவமைப்பில் பணிபுரியமுடியும்.ஆனால் இந்த வடிவமைப்பில் பணிபுரியும்பொது அக்சஸ் 2007 இன் வசதிகள் மற்றும் வாய்ப்புகள் கிடைக்காது என்பதை மனதில் கொள்க.

பயனாளரின் பெயர்கடவுச்சொல் ஆகியவற்றை பயன்படுத்தி எஸ்கியூஎல் சேவையாளர் முன்புற கருவிகள் வழியாக மிக எளிதில் நேரடியாக எந்த ஒரு தரவுதளத்துடனும் இணைப்புஏற்படுத்திடமுடியும்.

பொதுவாக தரவுதளஇயந்திரமானது செய்திகளை பெறுவது பின்னர்தாம் பெற்ற செய்திகளை திரும்ப வழங்குவது ஆகிய செயல்களுக்காக செய்தி போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் (Traffic controller)என அறியப்படும் கவணிப்பாளரிடம்(istener) இந்த பணியினை ஒப்படைத்துவிடுகின்றது.

இந்த கவணிப்பாளர் ஒரு இணைய (ஐபி) முகவரியிலிருந்து வரும் செய்தியில் முதலில் தன்னிடமுள்ள இணைய (ஐபி) முகவரியுடன் ஒப்பிட்டு சரிபார்க்கின்றது. சரியாக இருந்தால் மட்டும் தரவுதளத்துடன் இணைப்பை எற்படுத்திட கோரும் செய்தியை சேவையாளரிடம் வழங்குகின்றது.உடன் சேவையாளர் தரவுதளத்து!டன் இணைப்பை ஏற்படுத்திட அனுமதிக்கும்போது   இதற்கான இணைப்பை தரவுதள சேவையாளருடன் ஏற்படுத்துகின்றது. பின்னர்சேவையாளருடன் இணைப்பு ஏற்படுத்திய செய்தியை தரவுதளத்திற்கு அனுப்புகின்றது.

உடன் கவணிப்பாளர்இந்த செய்தியை பெற்று தரவுதளத்திற்குற்கு அனுப்புவதுடன் இல்லாமல் தொடர்ந்து இணைப்பை பராமரிக்கும் செயலையும் செய்கின்றது.. இவ்வாறு கவணிப்பாளர்தரவுதளத்திற்கும் தரவுதளசேவையாளருக்கும் இடையில் இணைப்பை ஏற்படுத்துவது அதற்கு தேவையான செய்திகளை வழங்கி இடைமுகமாக செயல்படுகின்றது.

தரவுதளத்துடன் தொடர்புகொள்ள பயன்படும் இணைப்பு சரத்தினை (Connecting string)என அழைப்பார்கள் இந்த இணைப்புசரமானது பின்வரும் உறுப்புகளால் ஆனதாகும்

 1. Hostname – தரவுதளசேவையாளர் இருக்குமிடத்தை இவ்வாறு அiழைக்கப்படும்.
 2. Database name -குறிப்பிட்ட தரவுதளத்திற்குன் பெயராகும். ஏனெனில் எஸ்கியூஎல் சேவையாளர் பல்லடுக்கு தரவுதளமானதுஓரேகணினியில் ஒற்றையான பல்லடுக்குகளை நிறுவுகைசெய்வதற்கு இது அனுமதிக்கின்றது. ஒவ்வொரு தரவுதளசேவையாளரும் ஒற்றையான தரவுதளஎஸ்கியூஎல் சேவையாளரை பயன்படுத்திகொள்கின்றது.
 3. Authentication-பயனாளரின் பெயர் கடவுச்சொற்கள் ஆகியவற்றை தெரிந்துவைத்திருப்பவர்கள் மட்டுமே தரவுதளத்தினை அனுகி பயன்படுத்தி கொள்ளமுடியும் என்றவாறு இது பாதுகாப்பு வளையம் அமைந்த பகுதியாகும்.

தரவுதளத்தில் பின்வரும் கட்டளைகள் எஸ்கியூஎல் சேவையாளரை நிறுவுகை செய்யும்

sql cmd -s my computer

பின்வரும் கட்டளை வரி குறிப்பிட்ட தரவுதளத்தினை இணைப்பதற்கும் எஸ்கியூஎல் சேவையாளரை நிறுவுகை செய்வதற்கும் பயன்படுகின்றது

sql cmd -s my computer -d mydatabase

சாதாரண தரவுதளத்துடன் இணைப்பை ஏற்படுத்துவதைவிட சிறித கூடுதலான படிமுறைகளை இதில் பின்பற்றவேண்டும் இதற்காக ODBC என்ற இயக்குபவர் அக்சஸ்மட்டுமல்லாது எக்செல்லுடன் கூட எஸ்கியூஎல் சேவையாளரை இணைப்பதற்கு பயன்படுகின்றது.

1 .முதலில் Start => settings => control panel => என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து செயற்படுத்தி கொள்க..

2 பின்னர்தோன்றிடும் control panel என்ற சாளரத்தின் Administrative Tools என்ற வாய்ப்பை தெரிவுசெய்து இருமுறைசொடுக்குக. உடன் விரியும் பட்டியலில் ODBC என்ற தரவு மூலத்தை தெரிவுசெய்க. இதில் மூன்று வகையான வடிவமைப்பு வாய்ப்புகள் உள்ளன.

1) User DSN என்பது வாடிக்கையாளரின் கணினியில் மட்டும் உருவாக்குவதற்கு பயன்படுகின்றது

2) System DSN வாடிக்கையாளர்கணினியுடன் இணையத்தையும் இணைப்பு ஏற்படுத்துவதற்கு பயன்படுகின்றது

3) File DSNவாடிக்கையாளர்கணினியுடன் தரவுதளத்தின்கோப்புகளை இணைப்பதற்காக பயன்படுகின்றது

இவற்றுள் File DSNஎன்பதையே பெரும்பாலானவர்கள் பயன்படுத்தி கொள்கின்றனர் .இதனை தெரிவுசெய்து செயற்படுத்தி அமைத்தபின்னர் கட்டுப்பாட்டு பலகத்தை மூடிவிடுக. பின்னர்

 1. அக்சஸ்2007ஐ செயற்படுத்துக.அதன்பின்னர்தோன்றிடும் திரையில் External Data என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன்விரியும் External Data என்ற தாவிபட்டியில் Import என்ற குழுவில் ; Xml file என்பதற்கடுத்து கீழ்பகுதியில் உள்ள more என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் பட்டியலிலிருந்து ODBCData base என்பதை (படம்-32-1) தெரிவுசெய்க.

 

32.1

படம்-32-1

 

 1. பின்னர்விரியும் Get External Data – ODBC Data Base என்ற உரையாடல் பெட்டியிலிருந்து Link to the data source by connecting a linked table என்பதை தெரிவுசெய்து கொண்டு ok என்ற பொத்தானை(படம்-32-2) தெரிவுசெய்து சொடுக்குக.

32.2

படம்-32-2

 1. உடன் Select Data Source என்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் இதில் DSN name என்பதில்   Local SQL serverஎன உள்ளீடுசெய்து Newஎன்ற பொத்தானை (படம்-32-3) தெரிவுசெய்து சொடுக்குக.

32.3

படம்-32-3

 1. பின்னர்விரியும இயக்கிகளின் பெயர்பட்டியலிலிருந்த SQL Driver என்பதை தேடிப்பிடித்து தெரிவுசெய்து கொண்டு next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
 2. அடுத்து தோன்றிடும் திரையில் இந்த DSN கோப்புகளை எங்கு சேமித்து வைக்கவிரும்புகின்றோம்   என்பதற்கு Browser என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின்னர்விரியும் உரையாடல் பெட்டியில் உள்ள File name என்ற பகுதியில் Local SQL server என்று உள்ளீடுசெய்து save என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.பின்னர்next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

32.4

படம்-32-4

 1. உடன் create new data source என்ற திரை தோன்றிடும். அதில் finish என்ற(படம்-32-4) பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
 2. அடுத்துதோன்றிடும் திரையில் Description என்ற பகுதியில் Local test database என்றவாறும் server என்பதில் SQL SERVER NAME என்றும் உள்ளீடு செய்து கொண்டு next என்ற பொத்தானை(படம்-32-5) தெரிவுசெய்து சொடுக்குக.

32.5

படம்-32-5

 1. பின்னர்தோன்றிடும் திரையில்   இயல்புநிலையில் கணினியின் இயக்க முறைமையினுடைய பயனாளரின் பெயரும் கடவுச்சொற்களையும் எடுத்துகொள்ளும். தேவையானால் மாற்றி யமைத்து கொண்டு next என்ற (படம்-32-6) பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
 2. அதன் பின்னர்தோன்றிடும் திரையில் தரவுதளத்திற்குன் பெயராக test என இருக்கும் தேவையானால் மாற்றியமைத்து கொண்டு next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

32.6

படம்-32-6

 1. பின்னர்தோன்றிடும் திரையில் உள்ளடக்க செயலை பற்றி கவலைப் படத்தேவையில்லை இறுதியாக finish என்ற பொத்தானை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக.
 2. இயல்புநிலையில் தேவையானால் server என்ற பகுதியில் local என உள்ளீடுசெய்துகொள்க உடன் தோன்றிடும் இருதிரைகளில் முதல் திரையில் ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.பின்னர்இரண்டாவது திரையிலும் okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
 3. ஓரு User DSN ஒரு System DSN அல்லது இவையிரண்டையும் உருவாக்க விரும்பினால் அவ்வாறு பிணையத்தில் தெரிவுசெய்து கொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
 4. பின்னர்தோன்றிடும் Link table என்ற உரையாடல் பெட்டியில் தேவையான அட்டவணைகளை தெரிவுசெய்துகொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
 5. அதன் பின்னர்தோன்றிடும் திரையில் குறிப்பிட்ட அட்டவணையின் எந்தெந்த புலங்கள் கோப்பில் தெரிவுசெய்யவெண்டுமோ அவற்றை தெரிவுசெய்து கொண்டு okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

உடன் அக்சஸ்2007 ஆனது எஸ்கியூஎல் உடன் இணைப்பை ஏற்படுத்தி கொண்டுவிடும்.

பயனாளரின் பெயரையும் கடவுசொற்களையும் எஸ்கியூஎல் சேவையாளருடன் தொடர்புகொள்ளும்போது ஆரக்கிள் தரவுதளத்திற்குள் அனுமதிப்பதை போன்று இதிலும் அனுகுவதற்கு அனுமதிக்கின்றது. இதுமட்டுமில்லாது கூடுதலாக வளாக பிணையத்திலும் அனுகிடுவதற்கு அனுமதிக்கின்றது.

அக்சஸில் பயனாளர்அனுகிடும்போது குறைந்த அளவிற்கான வசதிகளை மட்டும் அனுமதிக்கின்றது.

எஸ்கியூஎல் இல் இருப்பதை போன்று அக்சஸ் 2007 ஐ தொடர்புகொள்வதற்கு அக்சஸில் டிடிஎல் கட்டளைகள் பயன்படுகின்றன. ஆனாலும் அக்சஸ்2007 இல் இதனை செயற்படுத்திட முடியாது.

CREATE USER <user> <password> […   .]

ADD USER <user> […   .]

ALTER DATABASE PASSWORD <new> <old>

CREATE GROUP <group> <pid> [… .]

INSERT, SELECT,DELETE,UPDATE

 

என்பன போன்ற SQLserver கட்டளைவரிகளைக்கொண்டு அக்சஸிலிருந்து பணிபுரியலாம்.

 1. Import table (with data) from SQL Server as a copy of the SQL Server table என்ற கட்டளை மூலம் எஸ்கியூஎல் அட்டவணையை பதிவிறக்கம் செய்து அக்சஸில் பணிபுரியலாம் ஆனால் SQL Server இல் செய்திடும் இதன் மாறுதல்கள்   அக்சஸில் உள்ள அட்டவணையில் பிரிதிபலிக்காது. அவ்வாறு .மாறுதல் செய்திருந்தால் அவ்வப்போது பதிவிறக்கம் செய்துகொண்டு புத்தாக்கம் செய்துகொள்ளவெண்டும்.
 2. Link to tables that remain within SQL server என்ற கட்டளை வரிமூலம் எஸ்கியூஎல் அட்டவணையை பதிவிறக்கம் செய்து கொண்டு அக்சஸில் பணிபுரியலாம் இந்த வழிமுறையில் அனைத்து மாறுதல்களும் உடனுக்குடன் அக்சஸில் பிரிதிபலிக்கும் இங்கு தரவுதளமானது ஒரு இனத்தின் மூலஅமைவை பராமரிக்கின்றது.

தேக்கப்பட்ட வழிமுறையை (Stored procedure)அக்சஸில் செயல்படுத்து வதற்கான படிமுறை பின்வருமாறு

 1. ஒரு .accdஎன்ற பின்னொட்டுடன் உள்ள தரவுதளகோப்பினை அக்சஸ்2007 இல் திறந்துகொள்க.
 2. பின்னர்create என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் create என்ற பட்டியின் other என்ற குழுவில் உள்ள Query Design என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
 3. உடன் show table என்ற உரையாடல் பெட்டி ஒன்று திரையில் தோன்றிடும் அதில் close என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இந்த உரையாடல் பெட்டியை மூடிவிடுக. ஏனெனில் நாம் இப்போது SQL இனுடைய கட்டளையை பயன்படுத்திட போகின்றோம்

32.7

படம்-32-7

 1. பின்னர்மேலே இடதுபுறம் உள்ள SQL View என்ற உருவ பொத்தானை(படம்-32-7) தெரிவுசெய்து சொடுக்குக. உடன் query text editor என்ற திரைதோன்றிடும் அதில் SELECT * FROM REGION; என்றகட்டளை வரியை செயற்படுத்துக.
 2. அதன் பின்னர்பட்டியின் Resultsஎன்ற குழுவில் உள்ள Runஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
 3. பின்னர்மேலே இடதுபுறத்தில் உள்ள view என்ற உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் வாய்ப்புகளின் பட்டியலில் sqlview என்ற வாய்ப்பை தெரிவுசெய்துகொள்க.
 4. பின்னர் தரவுதளத்தின் பதிதப்பித்தல் திரைக்கு திரும்பி வந்து பின்வரும் கட்டளைகளை தவறில்லாமல் உள்ளீடுசெய்து செயற்படுத்துக..

CREATE PROCEDURE Jumbled Country

SELECT r.region.c.country

FROM region r join country C

ON( c.region_id=r.region_id);

அக்சஸ்-2007-31 -வாடிக்கையாளர்சேவையாளர்உறவு

ஒன்றுக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கணினிகளை ஒரு சேவையாளர்கணினியுடன் பினைய இணைப்பின் மூலம் பயன்படுத்திட முடியும்(படம்-31-1). இதில் வாடிக்கையாளர்கணினிகளின் வாயிலாக உள்ளீடு செய்யப்படுகின்ற அனைத்து தரவுகளையும் சேவையாளர்கணினியில் சேமித்துவைத்துகொண்டு அவ்வப்போது தேவைப்பபடும்போது மட்டும் பயன்படுத்தி கொள்ள முடியும்.

31.1

படம்-31-1

பயனாளர்கள் ஒரு பயன்பாட்டுடன் இடைமுகம் செய்யும்போது மட்டும் வாடிக்கையாளர்கணினிகளின் வாயிலாக சேவையாளர்கணினியுடன் தொடர்பு கொள்வார்கள்.இதற்கு அடிப்படையாக தேவையான அனைத்து செயல்களும் சேவையாளர்கணினியே செயல்படுத்துகின்றது. இவ்வாறான வாடிக்கையாளர்சேவையாளர்தொடர்பு செயல் கட்டமைப்பிற்கு எடுத்துக்காட்டாக வளாகஇணைப்பு (LAN), இணைய இணைப்பு (WAN) ஆகியவற்றை கூறலாம்.

இணையம் என்பது உலகமுழுவதும் பரந்து விரிந்துள்ள பிணையத்தில் உள்ள கணினியை TCP/IP பிணைய நெறிமுறையை பயன்படுத்தி இணைப்பு ஏற்படுத்துவது ஆகும்.இதில் இயங்கும் ஒவ்வொரு கணினியும்; ஒரு வாடிக்கையாளர்ஆகும். இந்த வாடிக்கையாளர்கணினிகளில் ஒருசில சிறிய அளவு தரவுகளை மட்டுமே தேக்கி வைக்கமுடியும். ஆனால் சேவையாளர்கணினியில் பேரளவில் தரவுகளை குவித்து சேமித்து வைத்திடமுடியும்.

இணைய உலாவி எனும் பயன்பாடு வாடிக்கையாளர்கணினிகளில் மட்டுமே இயங்குகின்றது.அதில் நாம் விரும்பும் இணைய பக்ககத்தின் யூஆர்எல் முகவரியை மிகச்சரியாக உள்ளீடு செய்து உள்ளீட்டுவிசையை தட்டியவுடன் தேடுபொறியானது சேவையாளர்கணினியில் உள்ள தொடர்புடைய தரவுகளை தேடிப்பிடித்து நம்முன் திரையில் கொண்டுவந்து பிரிதி பலிக்க செய்கின்றது. அதன் பின்னர்அவற்றிலிருந்து நமக்குத் தேவையான செயலை செயல்படுத்திக்கொள்ள முடியும்.

வாடிக்கையாளர்கோரும்போதெல்லாம் தேவையான தரவுகளை வழங்கி வாடிக்கையாளரின் பணிமுடிந்தபின்னர்அதன்விளைவான தரவுகளை மீண்டும் திரும்ப பெற்று தேக்கிவைத்திடும் செயலை செயல்படுத்துகின்ற நம்முடைய கண்ணிற்கு புலப்படாத பின்புலமாக இயங்குகின்ற கணினியையே Back office computer என அழைப்பார்கள். இணையச்சேவையாளர், தரவுகளின்சேவையாளர் (படம்-31-2 )ஆகியவை இந்த வகையை சேர்ந்ததாகும்.

31.2

படம்-31-2

இவற்றுள் எந்தவொரு தனிநபரும் நேரடியாக தொடர்புகொள்ளமுடியாது .ஆயினும் ஒருவாடிக்கையாளர்கணினியில் யூஆர்எல் முகவரியை மிகச்சரியாக உள்ளீடு செய்து உள்ளீட்டு விசையை தட்டுவதன் மூலம் நமக்குத் தேவையான இடத்திலுள்ள தரவுகளை தேடிப்பெறமுடியும்.

பொதுவாக பல்வேறு வகையான தரவுகளை தொகுத்து தேக்கிவைத்து பயன்படுத்துவதையே தரவுதளம் என அழைப்பார்கள். ஆரக்கிள் எஸ்கியூஎல் எம்எஸ்அக்சஸ்ஆகியவை இவ்வாறானதாகும். எஸ்கியூஎல் எனப்படும் தரவுதளசேவையாளர் எம்எஸ்அக்சஸைவிடபேரளவில் பல்வேறு வழிகளில் பல்வேறுவகையான வசதிகளையும் வாய்ப்புகளையும் பயனாளர்களுக்கு வாரி வழங்குகின்றது.

31.3

படம்-31-3

அதனால் இந்நிலையில் எம் எஸ்அக்சஸ்ஒரு தரவுதளம்தானா என்ற சந்தேகம் அனைவருக்கும் எழும்.ஆம் எம்எஸ்அக்சஸும் ஒரு தரவுதளம்தான் ஆனால் எம்எஸ்அக்சஸில் இல்லாத சிறப்புவகை தரவுதளசெயலிகளான தேக்கப்பட்ட வழிமுறை(stored procedure).பயனாளர்வரையறுத்த செயலி (user defined function) தூண்டுபவர்(trigger) என்பன போன்றவை எஸ்கியூஎல் சேவையாளரில் உள்ளன என்பதே இதன் சிறப்பு அம்சமாகும்.

தேக்கப்பட்ட வழிமுறை(stored procedure)): என்பது தரவிற்கு எதிராக ஓரு தரவுதளத்தில் செயல்படக்கூடிய கட்டளைகளின் தொகுப்பாகும்.

பயனாளர்வரையறுத்த செயலி (user defined function):என்பது stored procedure பேன்றதே ஆனால் கூடுதலாக ஒற்றை மதிப்பை மட்டும் இது திருப்புகின்றது.

தூண்டுபவர் (trigger): என்பது ஒரு தரவுதளத்தில் தொடர்ந்து கட்டளைகளை செயல்படுத்தியவுடன் எழும்நிகழ்வுகளில் குறிப்பிட்ட நிகழ்வை மட்டும் மிகச்சரியாக கண்டுபிடிப்பதாகும்.

இந்த பொருட்கள் தரவுதளம்சேவையாளருக்கு செயலாக்கிடும் திறன் தருக்கமுறைமை ஆகியவற்றை ஒரு தரவுதளமாநது உடன் சேர்த்து தரவுகளை தேக்கிவைத்திடும் செயலை எவ்வாறு கையாளுவது என்ற திறனை வழங்குகின்றன.

அக்சஸானது இந்த மூன்று பொருட்களுக்கும் இணையான மேக்ரோ மாட்யூல் இனமாட்யூல் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டு அவ்வாறான பணிகளை சிறிய அளவில் மட்டும் செயல்படுத்துகின்றது.

அக்சஸானது ஒற்றை பயனாளர்அல்லது குழுவான பயனாளர்களுக்கு மட்டும் கோப்பு சேவையாளராக பின்புலத்திலிருந்து இயங்கி பயனாளரின் கணினிக்கு தேவையான தரவுகளை வழங்கிய பின்னர்இதன்விளைவாக எழும் தரவுகளை திரும்ப பெற்று தேக்கிவைத்துகொள்கின்றது.இந்த இடைமுகசெயலை நூறு, ஆயிரம் என அளவிற்கு அதிகமான பயனாளிகள் இணையத்தின் வாயிலாக அக்சஸினுடைய கோப்புகளின் சேவையாளருடன் தொடர்புகொள்ளமுடியாது.

இதற்கு மறுதலையாக ஆரக்கிள் எஸ்கியூஎல் சேவையாளர்போன்ற தரவுதளசேவையாளர்பொறிகள் தரவுகள்தொடர்பான அனைத்து செயல்களையும் சேவையாளர்கணினியில் செயல்படுத்தி இதன் இறுதி விளைவை மட்டும் வாடிக்கையாளருடைய பயன்பாட்டிற்கு கோரப்படுகின்ற தரவுகளை மட்டும் அவர்களுடைய கணினியில் வழங்குகின்றது.

வாடிக்கையாளருடைய பயன்பாடானது பயனாளருடைய இடைமுகம் உள்ளீடு ஆகியவற்றை மட்டும் ஆதரிக்கின்றது. அதாவது வாடிக்கையாளர்களின் கோரிக்கை இடைமுகம் ஆகியவை ஓரிடத்திலும் அதற்கான செயல் பிரிதோரிடத்திலும் என்றவாறு தனித்தனியாக செயற்படுத்தப்படுவது வாடிக்கையாளர்சேவையாளர்உறவின் எஸ்கியூஎல் தரவுதள சேவையாளராகும்(படம்-31-3) அக்சஸானது இந்த இரட்டைசெயலை தன்னுடைய சொந்த அக்சஸ்தரவுதளபொறிவாயிலாக செயல்படுத்துகின்றது.ஆனால் எஸ்கியூல் சேவையாளர்போன்ற பலபயனாளிகள் பலசெயல்களை ஆகியவற்றை அன்று.

View,cluster,clustered index,identity field,temporary table,partitioning and parallel processing போன்ற திறன்மிகுந்த செயல்களை ஆரக்கிள் எஸ்கியூஎல்போன்ற தரவுதள சேவையாளர்களால் மட்டுமே செயல்படுத்தப் படுகின்றது. மேலும் ஆயிரக்கணக்கான பயனாளர்களை இடைமுகம் செய்யவும் இலட்சக்கணக்கான ஆவணங்களை பயன்படுத்திட ஏதுவாக தயார்நிலையில் தேக்கிவைத்திடும் திறன்கொண்டதாகும். திறன்மிகு படிவங்கள்,அறிக்கைகள் போன்றவைகளை பயனாளர் ஒருவர் பயன் படுத்தி கொள்ள ஏதுவாக அக்சஸ்வைத்துள்ளது. மேலும் சர்பாயின்ட் சேவைமூலம் இணையத்தின்வாயிலாக அனைத்து பயனாளிகளும் இதனுடைய தரவுகளை பங்கிட்டு பயன்படுத்திகொள்ளும் வசதியை அக்சஸ்2007 வழங்குகின்றது

இணயச்சேவையாளர்பயன்பாட்டுசேவையாளர்இணைக்கும் கணினியின் பின்புல சேவையாளர்ஆகியவற்றுடன் தொடர்புகொள்ளுதல் செயற்படுத்துதல் ஒன்றாக சேர்த்தல் போன்றவைகள் ஒரேமாதிரியாகவே இருக்கும் . ஆயினும் ஒரு பயன்பாட்டை பேரளவில் வாடிககையாளர் சேவையாளர்முனைமத்தில் செயற்படுத்தவது பயன்பாட்டு சேவையாளர்ஆகும். அதிக பணிச்சுமையுடன் இருக்கும் கணினிக்கு வரும் கோரிக்கைகளை பணிச்சுமை இல்லாத அல்லது குறைந்த பணிச்சுமையுள்ள கணினிக்கு கோரிக்கைகளை திருப்பிவிடப்படும் செயல்களை செயற்படுத்திடும் நிகழ்வாகும்.

இணையச்சேவையாளர்என்பது வாடிக்கையாளர்கோரும் இணையதளமுகவரிகளின் கணினியுடன் அவைகளை இணைத்து பராமரிக்கின்றது. இதனடிப்படையில் செயலை இணையத்தின்மூலம் பல்வேறு வகையான பயன்பாடுபகளை பயன்படுத்துவதற்கு வெப்செர்வர்என்றும் குறிப்பிட்டவகை பயன்பாட்டைமட்டும் பயனபடுத்துவதற்காக செயல்படுவது அப்ளிகேசன் செர்வர் பயனுள்ளதாகும். ஓருகணினியின் அடிப்படைசெயல் உள்ளீடுசெய்யும் தரவுகளை தேக்கிவைப்பது ஆகும்.

அதற்கடுத்ததாக இவைகளை எவ்வாறு கையாளுவது என்ற புரொகிராமை இயக்குவது ஆகும்.இறுதியாக வாழக்கையாளருடன் அல்லது பயனாளருடன் எவ்வாறு இடைமுகம் செய்வது என்ற மூன்றாவது அடுக்காகும் .ஆக இவ்வாறு ஒன்றுக்குமேற்பட்ட அடுக்கடுக்கான பணிகளை சேர்த்து பல்லடுக்கு அமைவு என அழைக்கப்படுகின்றது.இதன் ஒவ்வொரு அடுக்கிலும் உள்ள தனித்தன்மைவாய்ந்த சிறப்பான செயலிகள் தனித்தனியே பிரிக்ககப்படுகின்றது.

தரவுதளத்தில் பொதுவாக இரண்டடுக்கு கட்டமைவு தானிருக்கும் .அதிலும் அக்சிஸில் ஓரடுக்கு கட்டமைவுதானிருக்கின்றது.இதில் பயனாளர்கள் தரவுகளை நேரடியாக படிவங்கள் அல்லது அறிக்கை, இதர ஆப்டிகூக்;ட்டுகளிலிருந்து பெற்று பயன்படுத்திகொள்ளப்படுகின்றது.

ஆக்சஸ் 2007இல் .accdb என்ற பின்னொட்டுடன் கூடிய தரவுகளின் கோப்புகளை பின்புலமாக தேக்கிவைக்கப்படு கின்றது. இதனை பயனாளர்கள் அட்டவணைவி னாவினுடைய படிவங்கள் வாயிலாக பெறமுடியும் .

அக்சஸ் 2007-30 அக்சஸில் XML HTML ஆகியவற்றின் ஆவணங்களை உள்ளிணைக்கலாம்

  அக்சஸ் 2007 தரவுதள  பயன்பாடானது தம்மிடம் உள்ள தரவுகளை தேக்கிவைக்கவும் கையாளவும் பகிர்ந்து கொள்ளவும் XML ,HTML என்பன போன்றவற்றை தேவைப்படும்போது பயன்படுத்திகொள்கின்றது. அதனால் இவைகளை பற்றி முதலில் அறிந்து(புரிந்து)கொள்வோம்.

 HTML என சுருக்கமாக அழைக்கப்படும் மீவுரை குறியீட்டு மொழி(Hyper Text Markup Laguage) என்பது வலைதளத்தினை வரையறுக்க பயன்படுகின்றது.இது குறிப்பிட்ட அளவு குறியொட்டுகளுடன்(tags) கட்டுப்படுத்தப்படுகின்றது.இந்த குறியொட்டு(tag) என்பது மீவுரைகுறியீட்டு  மொழியின் அடிப்படை உறுப்பாகும்.இதுதான் ஒருஇணைய பக்கத்தில் இருக்கும் தரவுகளின் தோற்றம். எப்படியிருந்திடவேண்டும் என வரையறுக்கின்றது.இதற்கு ஏற்றவாறு இனைய உலாவியானது மிகச்சரியாக இதனை புரிந்துகொண்டு அவ்வாறே தம்முடைய கணினியில் உள்ள திரையில் பிரிதிபலிக்க செய்கின்றது.  <  > ஆகிய இரு குறிகளே HTML இன் குறியொட்டு கள் என  குறிப்பிடப்படுகின்றன.இவ்விரு குறிகளும் இல்லையெனில் ஒரு இணைய உலாவியால் ஒரு இணைய பக்கத்தை பற்றியஅடையாளத்தை கண்டுகொள்ளமுடியாது. பின்வருபவை  (நிரல்தொடர்-30.1) ஒரு சாதாரண  HTML இன் குறிமுறையாகும். இதனை செயற்படுத்தினால் படம் 30.1 இன் மேல்பகுதியில் உள்ளவாறு ஒரு திரையின் தோற்றம் அமையும்.

நிரல்தொடர்- 30.1மாதிரி HTML நிரல்தொடர்

<HTML>

            <Head>

                       <Title> Example</Title>

             </Head>

                          <Body>

                                     <B> Public Sub generateXML1()

   Dim rst As DAO.Recordset

   Dim strsql As String

   Dim strOut As String

   strsql = “SELECT * FROM Books;”

   Set rst = CurrentDb.OpenRecordset(strsql)

   Do Until rst.EOF

      strOut = strOut & rst.Fields(“NAME”)

      rst.MoveNext

   Loop

   MsgBox strOut

End Sub </B>

                         </Body>

</HTML>

 30.1

படம்-30.1

  XML என சுருக்கமாக அழைக்கப்படும் விரிவுபடுத்தப்பட்ட  குறியீட்டு மொழி(eXtend  Markup Laguage)என்பது HTMLஇன் குறிப்பிட்ட முன்கூட்டியே வரையறுக்கப்பட்ட குழுவான குறியொட்டினை  தேவைப்படும்போது விரிவாக்கம் செய்து கொள்வதாகும். இது ஒரு நிரலர்கள் தங்களுடைய செயலிகளில் புதிய புதிய குறிமுறைகளை தேவைப்படும்போதெல்லாம் சேர்த்து உருவாக்கிட உதவிடும் உரைநகல் மொழியாகும்.(scripting language) .இதன்மூலம் வாடிக்கையாளர் விரும்பியவாறு மிக விரிவாக xml குறியொட்டுடன் உருவாக்கிடமுடியும் .இது தரவு ,உயர்மட்டதரவு (metadata) ஆகியவற்றிற்கு தேவையான ஆவணங்களுக்கு XML ஆனது நேரடியாக இயக்க நேர சூழலை வழங்குகின்றது. பின்னர் இதன் விளைவானது உலாவியின் அடிப்படை மொழியாகவும்  தரவு மற்றும் குறியொட்டின்(tag)  மாறிகளாகவும் பாவிக்கின்றது. இதன் பொதுவான தன்மைகள் பின்வருமாறு

1. ஒரு xml குறிமுறைகளின் வரிஒவ்வொன்றும் ஒரு ஆரம்ப குறியொட்டு மற்றும் ஒருமுடிவு குறியொட்டுடன் கண்டிப்பாக இருக்கவேண்டும்,.

2.ஒரு xml குறிமுறைகளில் ஏராளமான அளவில் குறியொட்டுகள்  இருந்தால் ஒவ்வொரு ஆரம்ப குறியொட்டும் தமக்கே உரிய முடிவு குறியொட்டுடன் மட்டுமே வரிசைக்கிரமமாக அமைந்திருக்கும்.

3. ஒவ்வொரு வேர்(மூல)முனைமத்துடன் அதற்கே யுரிய துனைமுனைமம் மட்டுமே அந்தகுழுவிற்குள் இருக்கமுடியும் ஒன்றின் கிளை மற்றொன்றின் வேர்(மூல)முனைமத்தடன் தொடர்பிருக்காது.

4.இந்த XMLஆனது பெரிய எழுத்து சிறிய எழுத்து என வேறுபாடு பார்த்து செயல்படக்கூடியது..

5. தரவுகள் உரைகள் ஆகியவற்றின் மதிப்புகள் இரண்டு குறியொட்டிற்கு இடையே மட்டும் அமைந்திடவேண்டும்.

6.XML குறிமுறையானது வரிசைக்கிரமான படிமுயையில் அதாவது  உயர்ந்த இடத்திலிருந்து தாழ்நிலைவரை இருப்பவைகளையே ஏற்ககூடியது.  உதாரணமாக மேல் நிலையில் நம்முடைய உலகத்தை கண்டங்கள் என்றும் அடுத்த படிமுறையாக நாடுகள் என்றும் அதற்கடுத்தாக மாநிலங்கள் என்றும் அதற்கடுத்த படிமுறையாக மாவட்டங்கள் என்றும் கடைசி படிமுறையாக நகரங்கள் அல்லது கிராமங்கள் என்றும் வரிசைகிரமமாக உயர்நிலையிலிருந்து தாழ்நிலைவரை குறிப்பிட வேண்டும்.

30.2

படம்-30.2

DOM என்பது ஆவணபொருள்மாதிரியின் (Document Object model) சுருக்குபெயராகும். இணைய உலாவி இயங்கிடும்போது உரைஅல்லது நிரல் மொழியை பயன்படுத்திடும் போதும்  HTML அல்லது  XML  ஆகியவற்றின் உள்ளடக்கங்களை பெறுவதற்கு இது அனுமதிக்கின்றது.இது இயக்கநேரத்தில் HTML அல்லது  XML ஆகியவற்றின் நிரல்தோடர்களை  இணைய உலாவியில் இயங்கிகொண்டிருக்கும்போதே மாற்றியமைத்திட அனுமதிக்கின்றது. .ஒருபொதுவான HTML DOM படிமுறையின் கட்டமைவு படம் 30.2 இல் கொடுக்கப்பட்டுள்ளது.அவ்வாறே ஒருபொதுவான XML DOM படிமுறையின் கட்டமைவு படம் 30.3 இல் கொடுக்கப்பட்டுள்ளது.

30.3

படம்-30.3

 XSLT (படம்-30.4)இந்த HTML மற்றும் XML ஆகியவற்றின் ஆவனத்தில் மட்டும் அதனுடைய தரவுகளை கட்டுபடுத்தி மறுஅமைவு செய்து இணையத்தில் பிரிதிபலிக்கசெய்யவும் வழங்குவதற்கும் இந்த XSL பயன்படுகின்றது.

30.4

படம்-30.4

   ஒரு XML ஆவணத்தின் கட்டமைப்பு எவ்வாறு இருக்கவேண்டும் என WWW(Wide world web) வின் கூட்டமைப்பு நிர்ணயம்செய்து வரன்முறைபடுத்தி செந்தரத்தை உறுதிசெய்து வெளியிடுகின்றது.இந்த செந்தரத்திற்கேற்ப நாம் அனைவரும் இந்த XML ஆவணத்தை கட்டமைவு செய்யவேண்டும்.  அதனடிப்படையில் உலகில் எங்கோ ஒருமூலையில் உள்ள கணிப்பொறியில் உருவாக்கிய XML ஆவணம் வேறு எங்ககோ உள்ள ஒரு கணிப்பொறியானது எளிதில் புரிந்துகொண்டு அவ்வாறே ஒருஇணைபக்கத்தினை திரையில் பிரிதிபலிக்கச் செய்கின்றது. இதனால் இணையத்தின்மூலம் தரவுகளை ஒருவருக்கொருவர் மிகஎளிதில் பரிமாறிக்கொள்வுளம் பகிர்ந்துகொள்ளவும் முடிகின்றது.  இதனை தொடர்ந்து அக்சஸ் 2007 ஆனது இந்த XML ஒரு தரவுதளமா பாவித்தகொண்டு அதனுடன் ஒத்திசைவு செய்து தம்முடைய தரவுகளை சேமித்திடவும் பகிர்ந்துகொள்ளவும் செய்கின்றது.

பின்வருபவை XML இன் மேம்மபட்ட உண்மையான பிற பயன்களாகும்.

1.            XPath இதன்மூலம் XMLஆவணத்தினை பிரித்தறியமுடிகின்றது

2.            XQuery:இதன்மூலம் ஒரு XML ஆவணத்தில் உள்ள விவரங்களை வினா எழுப்பி தேவையான தரவுகளை அறிந்துகொள்ளவும் பெறவும் முடிகின்றது.

3.            XLink மற்றும் XPointer.  இதன்மூலம் தரவுகளை இணைப்பதற்கும் சுட்டிகாட்டிடவும் முடிகின்றது.

4.            XForm  இதன் மூலம் XML ஆவணத்தின் இயக்கநேரத்தின் போதே இணையபக்கத்தினை படிவமாக பெற முடிகின்றது.

5.            XInclude ஒரு XML ஆவணத்துடன் மற்றொரு XML ஆவணத்தை உட்பொதிவதற்கும் உள்ளினைவதற்கும் பயன்படுகின்றது.

6.            XML-FO இது ஒரு XML ஆவணத்தினை செந்தரமான பகுதி XSL இன் வடிவமைப்பில் பிரிதிபலிக்கசெய்கின்றது.

 ஒரு XML ஆவணத்தில் தரவு(Data) ,உயர்மட்ட தரவு(metadata).தலைமுறை உள்உறவு (inter relationship inherent)ஆகியமூன்றும்   அடிப்படையாக அமைந்துள்ளன,  இதன்மூலமாக மட்டுமே அட்டவனைகள் ஆவனங்கள் போன்றவை ஒருங்கிணைடக்கபட்டு கட்டமைத்து கையாளப்படுகின்றன. இந்த XML இல் பின்வரும் மூன்று செந்தரங்கள் பராமரிக்கப்டுகின்றன வலியுறுத்தபடுகின்றன.அவை

1.Docunt Type Definition இது ஒரு XML  ஆவணத்தில் உள்ள தரவுகள் எவ்வாறு ஓருங்கிணைக்கப்படவேண்டும் என வரையறுப்பதற்கான கட்டளைவரிகள் கொண்ட தனியான ஆவணமாகும்.

2.XML shema Definition: இது மேலே கூறிய DTD யின் மேம்மபட்ட ஆவணமாகும்.தருக்க கட்டமைவின் மூலம் XML இன் தரவை கட்டமைக்க உதவுகின்றது.

3.XML data Type இது  தற்கால உறவு தரவுதளத்தின் அடிப்படையில் xML தரவு வகையாக கட்டுபடுத்துகின்றது.

XML ஆவனத்தின் தரவுகளானது Activex Data Object இனை பயன்படுத்தி  உருவாக்கி  செயல்படுத்தப்படுகின்றது இதனை ADO என கூறுவர். இதன் அடுத்த படிமுறையாக(தலைமுறையான)  DAO வின் செயலிகளை அக்சஸ்2007 இல் பயன்படுத்திகொள்ளப்படுகின்றது. இந்த DAO வானது ஒரு XML ஆவணத்தின் தரவுகளை கையாள பயன்படுகின்றது.இந்த DAO செயலியினை அடிப்படையாக கொண்டு XMLஆவணத்தின் வழியாக அக்சஸ் 2007  ஆனது தரவுகளை சேமித்திடவும் பகிர்ந்துகொள்ளவும் செய்கின்றது

Previous Older Entries