அறிந்து கொள்வோம் அக்சஸ்-2003-தொடர்-பகுதி-52- பயன்பாட்டை வழங்குதல்

தரவுதளங்களை மற்றவர்களுக்கு வழங்குவதற்காக தயார் செய்யும் பணியை அக்சஸின் பல்வேறு கட்டுபாடுகள் சுலபமாக்குகின்றன,(படம் 52-1)

படம் 52-1

அக்சஸின்பல்வேறுகட்டுபாடுகளும்அவற்றின்பயன்களும்பின்வருமாறு:

Application title: இது உங்கள் பயன்பாட்டின் தலைப்பாக விளங்குகிறது

Application icon: இதனை பார்த்தவுடன் உங்கள் பயன்பாட்டை

குறிப்பதாக அறிந்து கொள்ள உதவுகிறது

Menu bar:இயல்புநிலை பட்டியின் பட்டையே வாடிக்கையாளர் விரும்பும் பட்டியல் பட்டையாக பயன்படுத்தப்படுகிறது,

Allow full menu bar:தயாராக இருக்கும் அனைத்து பட்டியலின் வாய்ப்புகளையும் பயனாளர்களுக்கு வழங்குவதற்காக அல்லது முடக்கி வைப்பதற்காக அல்லது மாறுதல் செய்வதற்காக அனுமதியை அமைக்கின்றது

Allow default short cut menu:பயனாளர் ஒரு பொருளை(object) தெரிவுசெய்து சொடுக்கியவுடன் குறுக்குவழிபட்டியலை திரையில் பிரிதிபலிக்கச் செய்வதா இல்லையாவெனத் தீர்மாணிக்கின்றது,

Display form page: பயன்பாடு இயங்கும் படிவத்தில் தெரிவுசெய்யப்படும் புலங்களை பிரிதிபலிக்கச் செய்கின்றது, படிவத்தை ஏற்றி இதனுடைய குறிமுறைகளை இயக்கும்போது மின்னி பிரதிபலிக்கும் திரையின் ஆரம்பத்தில் பிரிதிபலிக்கச் செய்கின்றது,

Display database window: F11 விசையை அல்லது பொருளை(object) தெரிவு செய்தவுடன் தர வுதள சாளரத்தை பிரிதிபலிக்கச் செய்கின்றது,

Display status bar:இதனை பிரிதிபலிக்கச் செய்யவேண்டாம் என எண்ணினால் இதனை முடக்கிவைக்கமுடியும் ,ஆயினும் இதுதான் உங்கள் பயன்பாட்டின் நிலையை சுட்டிகாட்ட உதவும் கருவியாக செயல்படுகிறது

Shortcut menu bar:பயன்பாட்டின் இயக்கத்தின்போது பயனாளர் ஒருவர் சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் இந்த பட்டியலை தோன்றும்படி செய்ய பயன்படுகிறது

Allow built in tool bar: முன்கூட்டியே கட்டமைக்கப்பட்ட கருவிபட்டையை பயன்படுத்தி வாடிக்கையாளர் விரும்பியவாறு உருவாக்க அனுமதிக்கின்றது,

Allow tool bar menu cluster:சொந்தமான அல்லது ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட கருவிபட்டையை உருவாக்க இந்த வாய்ப்பு அனுமதிக்கின்றது,

அக்சஸின் சிறப்பு விசைகளை பயன்படுத்துதல்

பாதுகாப்பு காரணங்களுக்கான சிறப்புவாய்ப்பாக இதனை தெரிவுசெய்து பயன்படுத்தி கொள்ளலாம்

F11 மற்றும் Alt + F10: தரவுதளசாளரத்தின் மாறுதல் ஏதேனும் செய்திருந்தால் இந்த விசைகளை பயன்படுத்தி முன்பக்க திரையில் இதனை பிரிதிபலிக்க செய்யலாம்,

Ctrl + g: இதுஉடனடியான( immediate) சாளரத்தை திரையில் பிரிதிபலிக்க செய்கின்றது,

Ctrl +Break:இது சேவையாளர் ஒருவர் தரவுதளத்திலிருந்து தேவையான கோப்பினை மீளப்பெறும் செயலை நிறுத்துகின்றது,

Ctrl + F11:இது வாடிக்கையாளர் விரும்பிய பட்டியல் அல்லது முன்கூட்டியே கட்டமைக்கப்பட்ட பட்டியல் ஆகியவற்றில் ஒன்றை பிரிதிபலிக்க செய்கின்றது,

Alt + f11:விபிஏ வின் தொடக்கத்திரையை பிரிதிபலிக்க செய்கின்றது, இதன் வாய்ப்புகளை தெரிவுசெய்வது அல்லது தெரிவுசெய்யாமல் விடுவதுஆகிய இந்த செயலுக்காக உங்ககள் பயன்பாட்டில் நீண்ட பலவரிகளை கொண்ட குறிமுறைகளை எழுதும் பணியை மிச்சமாக்குகின்றது,

உங்ககள் பயன்பாடுகளில் அனைத்து வசதிகள் மற்றும் வாய்ப்புகளையும் உருவாக்கிய பின்னர் அது சரியாக இருக்குமா ,அப்பயன்பாடு சரியாக இயங்குமா என பயனாளர்களிடம் வழங்குமுன் பரிசோதித்து பார்த்துவிடுவது நல்லது

சந்தையில் விற்கப்படும் எந்தவொரு பயன்பாடும் 100% மிகச்சரியாக இயங்கும் என உத்திரவாதம் தரமுடியாது ஏனெனில் இதனை உருவாக்கும் நிறுவனங்கள் தங்களுடைய மென்பொருளின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கான துனைநிரல்கள( patch program) என வெளியிட்டு சரிசெய்கின்றனர்,எதுஎவ்வாறாயினும் பிழைகள் ஏதும் இல்லாமல் வழங்குவதே மிகவும் சிறந்ததாகும்,

இவ்வாறான பிழைகள் மூன்றுவகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன

1, மிகப்பெரிய(major ship sinking) (வகை1)பிழை: எதிர்பாராத விதமாக பயன்பாடு திடீரென நின்றுவிடுவது இந்தவகையாகும், உதாரணமாக கணக்குபதிவிற்கான பயன்படுகளின் இவ்வாறான நிலையில் இதுவரையிலான கூடுதல் கண்டுவந்த செயலை உடனடியாக நிறுத்திவிடுவது,

2,பணியிடைஏற்படும் மிகப்பெரியஅளவு(வகை2)பிழை: பயன்பட்டின் இயக்கத்தின்போது இடையிடையே ஏற்படும் இன்னின்ன பிரச்சினை வந்தால் இவ்வாறு சரிசெய்யவேண்டும் என்றவாறான ஆலோசனைகளை படிக்கமட்டும் என்ற கோப்பில் எழுத்து மூலம் பயன்பாட்டுடன் சேர்த்து வழங்குவார்கள்,அதுமட்டுமல்லாது பயன்பாட்டில் பின்பற்றவேண்டிய வழிமுறைகள் மற்றும் படிமுறைகளை படிக்கமட்டும் என்ற கோப்பாக வழங்குவார்கள்

3,சிறு(வகை3)பிழை: இது பயன்பாட்டின் செயலை பாதிக்காது ஆயினும் இவ்வாறான பிழைகளை பயன்பாட்டின் பீட்டா நிலையிலேயே கண்டுபிடித்து சரிசெய்துவிடுவார்கள்

பயன்பாட்டிந்கு மெருகூட்டுதல்:இதன்பிறகு பயன்பாட்டின் இயக்கம் தோற்றம் போன்றவற்றில் கூடுதலான வசதிகளை வாய்ப்புகளை மெருகேற்றுக, நல்லதோற்றமானது நாம் வழங்குகின்ற பயன்பாட்டின் ஆரம்பத்தில் தோன்றும் தொடக்கத்திரையில் நம்முடைய பயன்பாட்டின்மீது பார்வையாளர்களுக்கு ஈடுபாட்டை வழங்குகிறது,

இதில் பயன்பாட்டின் பெயர்,பதிப்புஎண்,இதனை உருவாக்கிய நிறுவனத்தை பற்றிய தகவல்கள் ,பதிப்புரிமை பற்றிய விவரம் ஆகியவை அடங்கியிருக்கும்,

இதன்பிறகு முக்கிய தொடக்க முகப்புதிரை தோன்றும் இதில் உங்கள் பயன்பாட்டிற்குள் செல்லும் அனைத்துவகை வழிகளுக்கும் குறிப்பிட்ட செயலுக்குகான கட்டளை பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கினால் குறப்பிட்ட பகுதிக்கு செல்லும்படி நுழைவுவாயிலாக அமைக்கப்பட்டிருக்கும், அல்லது இதுவே போதும் இதற்குமேல் செல்ல பிடிக்கவில்லை எனில் பயன்பாட்டைவிட்டு வெளியேறுவதற்கும் வழிஏற்படுத்தப்பட்டிருக்கும்,

பயன்பாட்டை எவ்வாறு செயலபடுத்துவது என அதன்வழிமுறைகளை மற்றும் படிமுறைகளை எழுத்துமூலமான ஆவணமாக தயாரித்து பயன்பாட்.டுடன் வழங்கவேண்டும்,

உதவி அமைப்புகள் எங்கு எப்போது அழைத்தாலும் உடன்தோன்றி உதவத்தயாராக இருக்கும்படி செய்யவேண்டும்,

இதன்பிறகு உங்கள் பயன்பாட்டை பயனானாளரின் கணினியில் தானாகவே நிறுவும் செயலை செய்யவேண்டும்,அப்போது குறுக்குவழி பட்டியலின் உள்ளடக்கங்களை நிறுவவேண்டுமா அல்லது வெளியேற செய்யவேண்டுமா என முடிவுசெய்து மேலும் தேவையான கட்டுப்பாடுகளையும் நிறுவி கணினி பதிவேட்டில் (system register) இதன் மதிப்பை பதிவுசெய்யவேண்டும் இவ்வாறான ஆரம்பபணிகளை செய்வதற்கான ஒருநிரல்தொடரை உங்கள் பயன்பாட்டுடன் வழங்கவேண்டும் இதற்காக அக்சஸ்2003 –ல் மேம்பாட்டு விரிவாக்க வழிகாட்டி (developer extension wizard) என்ற கருவி உங்களுடைய உதவிக்கு வருகின்றது

Start =>All program =>Microsoft Office =>microsoft Office Access 2003 Developer Extension என்றவாறு கட்டளைகளை விண்டோவின் திரையில் செயல்படுத்தியவுடன் தோன்றும் கட்டுகளின் வழிகாட்டி கூறும் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றிசெயல்படுக

1,உடன் வரவேற்கின்றோம் என்ற இந்த வழிகாட்டியின் முகப்புதிரை தோன்றும் இதில் next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் step 1 of 7 என்றதிரை தோன்றும்

2,உடன் புதிய மாதிரிபடிமத்தை உருவாக்கும் வாய்ப்புகளின் வானொலி பொத்தானை நினைவகத்தில் ஏற்றும் பின்னர் step 2 of 7க்குசெல்ல next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

3,நம்முடைய பயன்பாட்டிற்கான கோப்பினை தேடிப்பிடிக்க தேடு(browse) என்ற பொத்தானை சேர்த்துகொள்க, நிறுவுகை வாய்ப்பு பகுதியில் இயல்புநிலையில் மூல நிறுவுதலை ஏற்றுக்கொள்க,

இயக்கநேர கோப்பினை சேர்க்க விரும்பினால்அதற்கான தேர்வுசெய்பெட்டியையும் தெரிவுசெய்க, வெளியீட்டு வாய்ப்பு பகுதியில் என்னவகையான கோப்புகளை உருவாக்கவேண்டும் என குறிப்பிடுக

4,compress install files-into a cap file மற்றும் Embed the cab file in the setup msiஆகிய இரண்டு வாய்ப்புகளின் தேர்வுசெய்பெட்டிகளும் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாவென உறுதிசெய்துகொள்க,

5, step 4 of 7 –ல் வேறு கோப்புகளை கணினியில் நிறுவிடும் போது அதனை பதிவேட்டில் சேர்க்கவிரும்பினால் சேர்த்துகொண்டு next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,

6, step 5 of 7 –ல் General propertie என்ற பகுதியில் product name

Inatallation Language,Features information ,Features title, Description. என்பன போன்ற விவரங்களை உள்ளீடுசெய்து next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,

7, step 6 of 7 –ல் publisher’s name ,product version ,Title போன்றவற்றுடன் மேலும் விவரங்கள் தேவையெனில் உள்ளீடு செய்து next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,

8,இறுதி திரையான step 7 of 7 –ல் save template as … button என்பதை தெரிவுசெய்து சொடுக்கியின்னர் finish என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக, உடன் இந்த கோப்பினை சேமிக்கவாஎனும் செய்தியொன்றுடன் நம்முடைய கட்டளையை எதிர்பார்த்து காத்திருக்கும் சரியாக இருந்தால் yes என்றும் இல்லையெனில் noஎன்றும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக, உடன் அனைத்து இறுதிகட்ட செயல்களையும் செய்து முடித்தபின்னர் இந்த கோப்பினை குறுவட்டில் நகலெடுத்திடவா என கேட்டு நிற்கும் உடன் yes என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,

இவ்வாறாக ஒரு அமைவு நிரல்தொடரை (setup program) உருவாக்கியவுடன் பயனாளர்களுக்கு வழங்குமுன் சரியாக நிறுவப்பட்டு இயங்குகிறதாவென சரிபார்க்கவேண்டும்

அதற்காக இதனுடைய set up, exe என்ற கோப்பினை இயக்குக உடன் வரவேற்கின்றோம் என்ற திரை தோன்றும்அதில் next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,உடன் பயனாளரின் பெயர் நிறுவனத்தின் பெயர் போன்ற விவரங்களை கேட்கும் இவைகளை அளித்து next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக ,இதன்பின்னர் Typicalமற்றும் Custom ஆகிய இரண்டுவாய்ப்பில் ஒன்றை தெரிவுசெய்யும்படி கோரும் ஏதேனும் ஒன்றை தெரிவுசெய்வுடன் இந்த பயன்பாடு உங்கள் கணினியில் நிறுவப்பட்டுவிடும் வாடிக்கையாளர் விரும்பியவாறு (custom) எனில் custom setup என்ற திரைதோன்றும் இயல்புநிலை மடிப்பகத்தை ஏற்றுக்கொள்க, அல்லது நாம் விரும்பும் மடிப்பகத்தை தேடுதல் மூலம் உள்ளீடுசெய்து next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் install என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,உடன் ஒருசிலநொடிகளில் installation has been successfully completed என்ற செய்தி திரையில் பிரிதிபலிக்கும்

இவ்வாறாக உங்களுடைய பயன்பாட்டை மிக வெற்றிகரமாக உருவாக்கி முடித்து மற்றவர்களுக்கு இதனை வழங்க தயராகுங்கள் மற்றவர்களின் கணினியில் அக்சஸ் 2003 நிறுவப்பட்டிருக்வில்லையென்றாலும் உங்களின்பயன்பாடு வெற்றிகரமாக இயங்கும்

கடந்த 52 அக்சஸ்2003பற்றிய தொடரை பொறுமையாக படித்து உங்களின் கணினியில் செயல்படுத்தி பார்த்து பயனடைந்திருப்பிர்கள் என நம்புகின்றேன்

நன்றி வணக்கம்

சகுப்பன்

அறிந்து கொள்வோம் அக்சஸ்-2003-தொடர்-பகுதி–51 அக்சஸ் இயங்கும் வேகத்தை அதிகபடுத்த

அக்சஸை வேகபடுத்த அதனுடைய அமைவை சரிசெய்து அமைப்பதுடன் நில்லாமல் இதனுடைய பொருட்களையும்(object) சரிசெய்து அமைத்திடவேண்டும்,இதற்காக முதலில் வலுவான அட்டவணையை உருவாக்குக: இந்த அட்டவணைகள் தரவுதளத்திற்கு பேருதவியாக இருந்தாலும் ஒரு சிலநேரங்களில் சரியாகவும் வேகமாகவும் செயல்படாது போய்விடுகிறது, அதனால் தரவுதளத்தின் அடிப்படையை நன்கு தெரிந்துகொண்டு அதற்கேற்றவாறு செயல்பட்டுசரியான அட்டவணையை உருவாக்குக,

திறனுள்ள வரிசையை(index) உருவாக்குக:ஒற்றையான அல்லது பல புலங்களின்(fields) வரிசையை(index) உருவாக்குக,இதில் புலங்களுக்கிடையே (fields) எதுமுதலில் இருக்கவேண்டும் எது அதற்கடுத்தது என குழப்பமேதுமில்லாமல் வேறுபடுத்தி காட்டுக. இவ்வாறு சரியாக வரையறுத்தால் மட்டுமே விரும்பியவாறு தரவுகளை உடனடியாக தேடிப்பிடிக்க முடியும்,பின்னர் எந்த புலத்திற்கு(fields)  எந்த வரிசை(index) என முடிவு செய்து ஒதுக்கீடு செய்யமுடியும்,

பொதுவாக தரவுதளங்களில் இரண்டுவகையான தவறுகளை செய்வார்கள், 1,ஒரு சிலர் வரிசையையே(index)  பயன் படுத்தமாட்டார்கள் இதனால் தரவுதளத்தினை பயன் படுத்துவதன் மூலம் ஏற்படும்  பயன் எதுவும் கிடைக்காது,

2,வேறு சிலர் அதிகபட்ச வரிசையை(index)  பயன்படுத்தவார்கள்,இதனால் சேமிப்பதற்கு அதிக அளவு இடத்தையும்  மீட்டெடுப்பதற்கு அதிக நேரத்தையும் கணினி எடுத்துக்கொள்கின்றது,

அதனால் போதுமான அளவிற்கு பொருத்தமான வரிசையை(index)  உருவாக்கி பயன்படுத்துக

சுலபமான வினாவை(query) உருவாக்குக: மற்றெல்லாவற்றையும் விட மிகச்சரியான வினாவை(query)  வடிவமைக்காததே அக்சஸஸ் மெதுவாக இயங்குவதற்கு அடிப்படை காரணமாகும்,இந்த வினாதான்(query)  தரவுதளங்களை திரையில் பார்வையிட்டு சரிபார்க்க பேருதவி புரிகின்றது,

இதனை வேகப்படுத்த பின்வரும் ஆலோசனைகளை பின்பற்றுக

1,அனைத்து புலங்களுக்கும்(fields)  மிகச்சரியான வரிசையை(index) நன்கு வடிவமைத்து கொள்க,

2,தேவையான இடங்களில் வரிசைக்கு(index) பதிலாக அடிப்படை திறவுகோளை (primary key) உருவாக்குக,

3,அளவிற்கதிகமான நெடுவரிசையை(column)பயன்படுத்தி குறைந்த தகவல்களை திரும்ப பெறும்படி அழைக்கவும்,

4,count (*) என்ற SQL கூற்றை count என்ற புலத்தின் பெயருக்கு பதிலாக பயன்படுத்துக,

5, வினாவிற்குள் வினா உருவாக்கிடும்போது கணக்கீட்டு புலத்தை தவிர்க்கவும்,

6,குழுக்களான தகவல்களை Group by என்பதை பயன்படுத்தி பெறுக,

7,DLookup மற்றும் DCount ஆகிய செயலிகளுக்கு பதிலாக அட்டவணை வினாவை பயன்படுத்துக,

8,எப்போதும் விபிஏவையே பயன்படுத்துக,இது முதன்முறைமட்டும் திரட்டுதல்(compile) செய்வதற்காக சிறிதுநேரம் எடுத்துகொள்ளும் பின்னர் வழக்கமான வேகத்துடன் செயல்படும்,

9,எப்போதும் வெவ்வேறு வழிகளில் வினாவை எழுத பழகிகொள்க,

அழகான அறிக்கை மற்றும் படிவங்களை உருவாக்குக:

இவைகளின் சிக்கல் தன்மையும் அளவையும் முடிந்தவரை குறைத்து பயன்படுத்துக

இதனை வேகப்படுத்த பின்வரும் ஆலோசனைகளை பின்பற்றுக

1,கூடுமானவரை குறைந்த பொருட்களையே(object) பயன்படுத்துக

2,துனைபடிவங்களை உள்ளிணைப்பதை அறவே தவிர்த்திடுக,

3,எப்போதும் உரைபெட்டிக்கு பதிலாக பெயரொட்டியை(label) பயன்படுத்துக,

4,விபிஏ குறிமுறைகளை படிவ தகவமைவு(modules)களுக்கான செந்தர தகவமைவு(modules)களாக பயன்படுத்துக

5,கட்டுப்பாடுகளை ஒன்ருக்கொன்று மோதுவதுபோன்று இணைத்துவிடவேண்டாம்,

6,தொடர்புடைய குழுக்களின் கட்டுப்பாடுகளையே பயன்படுத்துக

அறிக்கை மற்றும் படிவங்களில் பிட்மேப் படங்களின் பயன்பாட்டை குறைத்தல்:

தரவுதளங்கலின் ஆவணங்களுக்கு இவை நல்ல தோற்றத்தை வழங்கினாலும் அக்சஸின் இயங்கும் வேகத்தை மெதுவாக்குகிறது,அதனால் பிட்மேப் படங்களை முடிந்தவரை குறைவாக பயன்படுத்துக,உருவப்படகட்டுப்பாடு  மற்றும் கட்டற்ற பொருட்களின்(object)சட்டம் ஆகிய இரண்டும் அக்சஸின் செயல்வேகத்தை அதிகப்படுத்துகின்றன,

பட்டியல்பெட்டி மற்றும் சேர்க்கைபெட்டி(combobox) ஆகியவற்றை பயன்படுத்துக:

இவைகளை அளவிற்கு அதிகமாகவும் இல்லாமல் மிகவும் குறைவாகவும் இல்லாமல் போதுமான அளவிற்குமட்டும் பயன்படுத்துக

1,பல பக்கங்களுடைய படிவத்தில் Row source ஐ அமைக்கவேண்டாம்,

2,எப்போதும் முதன் முதல் புலத்தைமட்டும்(field) வரிசைபடுத்துதல்(index) செய்திடுக,

3, சேர்க்கைபெட்டியில்(combobox) உள்ளAuto expand என்ற பண்பியல்பிற்குproperty  no என அமைத்திடுக,

4,உரைவகை தரவுகளுக்கு மறைத்து வைக்கபடாத நெடுவரிசையை அமைத்திடுக,

5,Record source மற்றும் Row source ஆகியவற்றிற்கு saved  என்ற வினாவை பயன்படுத்துக,

தகவமைவு(modules) களின் வேகத்தை அதிகபடுத்த:

இதற்காக படிவமாறிகளை பயன்படுத்துவதை விட  me என்ற திறவுச்சொல் மிகவேகமாக செயல்படுகிறது, அதனால் இவ்வாறான திறவுசொற்களை உங்களுடைய  தகவமைவு(modules)களில் அதிகஅளவு பயன்படுத்தி அக்சஸின் செயல்படு வேகத்தை அதிகபடுத்தி கொள்க,

பொருத்தமான தரவுகளின் வகைகளை பயன்படுத்துக:

அதற்கான அட்டவணை பின்வருமாறு

அட்டவணை-51-1

இன்டகர்/லாங்க் மிகவேகமாக செயல்படும்
சிங்கில் /டபுள் சிறிது குறைவான வேகத்தில் செயல்படும்
கரண்ஸி மெதுவாக செயல்படும்
வேரியன்ட் மிகமெதுவாக செயல்படும்

மிக விரைவான திரும்பதிரும்பசெயல்படுவதற்கான கட்டளைகளையே பயன்படுத்துக:

Select ஐ விட   For /Next என்ற கூற்று மிக வேகமாக செயல்படும்

IFF() என்ற செயலியை விட If /Then/Else என்ற கூற்று மிக வேகமாக செயல்படும்

If…then  ஐ விட not என்ற கூற்று மிக வேகமாக செயல்படும்

Trueஎன்பதை பயன்படுத்துவதை விட நேரடியான மாறிகளின் மதிப்பை பயன்படுத்துக,

கட்டுப்பாட்டு மாறிகளையே பயன்படுத்துக:

படிவத்தின் பெயரை பயன்படுத்துவதைவிட me என்ற கூற்றை பயன்படுத்துவது அக்சஸை மிகவேகமாக செயல்படவைக்கும் செயலாகும்

நிரல்தொடர்பட்டி – 51-1

Dim frm as Form

Set frm = Forms![frmsales]

Frm![dtmSaleDate] = something

Frm![dtmInvoiceDate] = something

Frm!frmSales]![IngzSalespersonId] = something

புலங்களின் மாறிகளையே பயன்படுத்துக:

மேலேகண்ட தொழில்நுட்பத்தை விபிஏகுறிமுறையின் Record set உடன் பணிபுரியும்போது புலங்களுடைய தரவுகளின் கணக்கீடுகளுக்கு பின்வருமாறு பயன்படுத்துக,

நிரல்தொடர்பட்டி – 51-2

Dim MyField as Field

….

Set MyField = tbl![order Total]

Do Until tbl.EDF

MyTotal + MyField

Loop

முடிவுகுறிமுறைகளையும் பயன்படுத்தாத மாறிகளையும் அறவே நீக்கிவிடுக:

முதலில் இவ்வாறான செயலானது நினைவக இடத்தை அதிகபடுத்த உதவுகிறது,

அதனால் அக்சஸின் செயல்வேகம் கூடுகிறது,

வலைபின்னலின் திறனை உயர்த்துக:

பகிர்வு வசதியை பயன்படுத்தும் வலைபின்னலின் தரவுதளத்தின் திறனை உயர்த்துவது நல்லது,

அக்சஸை தொகுத்தல் (decompile) செய்க:

இந்த செயல் விபிஏ மற்றும் தகவமைவு(modules)களை சேமிக்கவும் செயல்படுத்தவும் உதவுகிறது,

இதனை செயல்படுத்த விண்டோவின் startஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் startஎன்ற பட்டியில் Runஎன்பதை தெரிவுசெய்க பின்னர் விரியும்Run என்ற உரையாடல்பெட்டியில் msacces/docompile என தவறில்லாமல் தட்டச்சுசெய்து (படம்-50-1) shift என்ற விசையை பிடித்து அழுத்துவதன் மூலம் செயல்படுத்துக,

படம்-50-1

மிகப்பெரிய தரவுதளங்களையும் வெற்றிகரமாக வேகமாக செயல்படுத்த:

1,பயன்பாடுகள் தயாராக இருக்கின்றது எனத்தெரியும்போது மட்டும் கணிணியை மறுதொடக்கம் செய்து செயல்படச்செய்க,

2,new acces என்ற தரவுதளத்தையும் அதன் பொருட்களையும்(object)  உருவாக்கி அக்சஸை மூடிவிடுக,

3.Decompile என்ற வாய்ப்பின் மூலம் shift என்ற விசையை பிடித்து அழுத்துவதன்  மூலம் செயல் படுத்துக,தரவுதள சாளரம் தோன்றியவுடன் அக்சஸை மூடிவிடுக,

4பின்னர் shift என்ற விசையை பிடித்து அழுத்துவதன்மூலம் அக்சஸை இயக்க ஆரம்பிக்கவும்

5,தரவுகளை திரட்டுதல் (compile) செய்க,

6,தரவுதளத்துடன் வேறு ஏதேனுமிருந்தால் பழுதுபார்த்து சுருக்கிகட்டிவிடுக

இவ்வாறான மேலே கூறிய ஆறு படிமுறைகளை பின்பற்றி உங்கள் பயன்பாடுகளை திறனுள்ளதாகவும் மிகவிரைவாக இயங்ககூடியதாகவும் தயார் செய்துகொள்க,

அறிந்து கொள்வோம் அக்சஸ்-தொடர்-பகுதி- 50-செயல்பாட்டு வேகத்தை அதிகபடுத்துதல்

முதன்முதலில் மைக்ரோ சாப்ட்  நிறுவனம் 32 பிட் அளவுள்ள அக்சஸை அறிமுகபடுத்திய போது  புதிய திறன் வாய்ந்ததாகவும் பல்வேறு வசதிகளுடையதாகவும் இருந்தது,

ஆயினும் தற்போது இதில் மேலும்  பற்பல புதியவசதிகளையும் திறனையும்   வளர்த்துகொண்டே வருகிறது,

அதுமட்டுமல்லாது இதில் தானியங்கி செயல் மற்றும் இதர செயலிகளுக்கு விபிஏவை பயன்படுத்திகொள்கிறது,

இதன் வழிமுறைகளில் அல்லது செயலியை அழைக்கும்போது தொடர்புடைய முழு தொகுதிகளையும்(modules) தேக்கி வைக்கப்பட்ட செயலிகளை நினைவகத்தில் ஏற்றுகிறது,அதனால் அதிக அளவுநினைவக இடத்தை இது எடுத்து கொள்கிறது,அதனை ஈடுகட்டிடும் பொருட்டு இதற்கு பதிலாக தேவைப்பட்ட செயலியைமட்டும் அக்சஸ்ஆனது நினைவகத்தில் ஏற்ற அனுமதிக்கிறது,

இதன் பயன்பாடுகளின் குறிமுறைகள் எப்போதும் .mdf கோப்பாக மூலக்குறிமுறைகள் இல்லாமல் திரட்டுதல் (compile)  செய்யப்பட்டே  வழங்கப்படுகிறது, இதனால் நினைவகத்தில் இதற்கான இடம் குறைந்த அளவு  போதுமானதாகும்,

இவ்வாறு திரட்டுதல்(compile) செய்யப்பட்ட நிலையில் இதன் மென்பொருள் இருப்பதால் இதில் பின்வரும் கட்டுபாடுகள் இதில் உள்ளன,

தொகுதிகளின்(modules)  வடிவமைப்பு காட்சியில் மாறுதல் செய்தல், படிவங்களை, அறிக்கைகளை  உருவாக்குதல் போன்ற செயல்களை செய்யமுடியாது,

பொருள் சார்ந்த கோப்பிற்குள் மேற்கோளை சேர்த்தல் நீக்குதல் மாறுதல்செய்தல் ஆகியசெயல்களையும் செய்யமுடியாது,

விருப்ப உரையாடல் பெட்டியில் விபிஏ வின் செயல்திட்ட பெயரை மாற்றியமைக்க முடியாது,

படிவங்களை அறிக்கைகளை ஏற்றுமதி,இறக்குமதி செய்யமுடியாது,

இந்த.mdf கோப்புளை பின்வரும் படிமுறைகளை பின்பற்றி உருவாக்கமுடியும்

1     நடப்பில் திறந்திருக்கும் தரவுதள கோப்பினை மூடிவிடுக,இல்லையெனில் தரவுதளமானது தானாகவே அதனை மூடிவிடும்,பொதுவாக அக்சஸ்ஆனது  தனிப்பட்ட படிவத்தில் மட்டுமே பணிபுரிய அனுமதிக்கின்றது,

2     விபிஏ கட்டளை பட்டியில் உள்ள Toolsஎன்பதைதெரிவுசெய்து சொடுக்குக, உடன் விரியும் பட்டியில்  Data base utility என்பதையும் பின்னர் விரியும் சிறுபட்டியில்make MDE fileஎன்பதையும் தெரிவுசெய்து சொடுக்குக,

3     உடன் தோன்றிடும் to save as mde dialog box என்ற பெட்டியில் சேமிக்க விரும்பும் கோப்பின் பெயரை குறிப்பிட்டு make ,mde என்பதை தெரிவுசெய்து சொடுக்குக,

4     பிறகு இந்த கோப்பை சேமிக்க விரும்பும் கோப்பகத்தையும் மடிப்பகத்தையும் குறிப்பிடுக ஏற்கனவே உள்ள கோப்பினுடைய பெயரில் சேமிக்க முயற்சி செய்ய வேண்டாம்,

குறிமுறைகளின் வகைகள்

1     இவை நாம் எழுதுகின்ற உயர்நிலை குறிமுறை என்றும்

2     அக்சஸ் புரிந்துகொண்டு செயல்படுத்தம் இயந்திர மொழி குறிமுறை என இருவகைப்படும்,

ஒரு நல்ல தொகுப்பியானது(compiler) கணினியின் சிபியூ புரிந்து கொண்டு செயல் படுத்தும் வகையில் மொழிமாற்றம் செய்யும் திறனுள்ளதாக இருக்கவேண்டும்

அக்சஸ்ஆனது இந்த இரண்டுக்கும் இடைபட்ட நிலையில் தொகுக்கப்பட்ட குறியீடு அல்லது தொகுக்கப்பட்ட  நிலை என இருவகையில் வைத்து பராமரித்துவருகிறது,

இதனால் கோப்பகத்தில் அதிக அளவு நினைவக இடத்தை பிடித்துகொள்கிறது,

தொகுக்கப்பட்ட நிலையில் முழுபயன்பாடுகளையும் பராமரிக்க பின்வரும் வழிமுறை பயன்படுகிறது,

1,விபிஏ சாளரத்தின் கட்டளை பட்டையில் உள்ள debug என்ற கட்டளையை    தெரிவுசெய்து (படம் -1)சொடுக்குக,

2,உடன் விரியும் பட்டியில்compileஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக,

3,உடன் கோப்பானது திரட்டுதல் செய்யப்பட்டு mdfஎன்ற பெயரில் சேமிக்கப்படும்

படம் -1

1     அக்சஸின் இந்த தொகுக்கப்பட்ட நிலையில் உள்ள கோப்புகளில் படிவங்களையும் அறிக்கைகளையும் மாறுதல் செய்தல்

2     புதிய படிவங்களையும் அறிக்கைகளையும் சேர்த்தல்அல்லது நீக்குதல்

3     பெயர்மாற்றம் செய்தல் மேற்கோளை மாற்றுதல் போன்ற செயல்களினால் தொகுக்கபட்ட நிலையிலிருந்து பழையநிலைக்கு மாறிவிடும்,

4     இயக்கநேரத்தில் விபிஏ குறிமுறைமூலம் வழிகாட்டியின் துணையுடன் செயல்படுத்துதல்

திரட்டுதல் அல்லது திரட்டுதல் இல்லாத நிலையில் பயன்பாட்டை வழங்குதல்

புதிய பயன்பாட்டை மூலக்குறிமுறை இல்லாமல் வழங்கினால் உடன் வாடிக்கையாளர்களிடமிருந்து மென்பொருள் மிகவும் மெதுவாக இயங்குவதாக தகவல் வந்து கொண்டே இருக்கும்

இவ்வாறான திரட்டுதல் இல்லாத நிலையில் வழங்குவதாக இருந்தால் முதலில்

1     புதிய தரவுதளத்தை உருவாக்குக,

2     பயன்பாட்டின் பொருளை இதில் இறக்குமதி செய்க,

3     பின்னர அதனை சுருக்கி கட்டுக,

மாற்ற முடியாத நூலக மேற்கோள்களை உடன் இணைத்தல்

விபிஏ சாளரத்தில் கட்டளை பட்டையில் உள்ள tools என்பதை தெரிவுசெய்து சொடுக்குக, உடன் விரியும் பட்டியில் reference என்பதைதெரிவுசெய்து சொடுக்குக, உடன்  தோன்றும் (படம்2) reference project என்ற உரையாடல் பெட்டியில் microsoft office 11.0 office library என்பதை தெரிவுசெய்து ok என்ற பொத்தானை சொடுக்குக,

 படம் – 2

 வெளிப்புற தரவுதளத்தை அனுகி அதன் வழிமுறையை அழைப்பதற்கான மேற்கோள் படிமுறை பின்வருமாறு

1.நூலக தரவுதளம் மற்றும் அதனுடைய தொகுதிகளை(modules) உருவாக்குக,

2.நாம் பயன்படுத்த விரும்பும் வெளிப்புற தரவுதளத்தை திறந்கொள்க,

3.வடிவமைப்பு காட்சியில் ஏதேனுமொரு தொகுதியை(module) திறந்தகொள்க,

4.விபிஏ சாளரத்தில் கட்டளை பட்டையில் உள்ள tools என்பதை தெரிவுசெய்து சொடுக்குக,

5.உடன் விரியும் பட்டியில் reference என்பதைதெரிவுசெய்து சொடுக்குக

6.பதிவு செய்ய விரும்பும் OLE சேவையாளரை தெரிவுசெய்துகொள்க,

வழங்கப்படும் பயன்பாடுகளில்  நூலக மேற்கோளைஉருவாக்குதல்

அழைக்கப்படும் தரவுதளமும் ,நூலக தரவுதளமும் ஒரே பாதையில் இருந்தால் மட்டுமே இடைமுகம் செய்யமுடியும் இதனை கைகளால் உருவாக்கலாம் அல்லது விபிஏ குறிமுறையை பயன்படுத்தி உருவாக்கலாம்

இதற்கான விபிஏ குறிமுறை பின்வருமாறு

பட்டி – 50-1

public function CreateReference(szFileName As String) As

Boolean

On Error GoTo CreateRefernceerror

Dim ref As Refernce

Set ref = Refernces.AddFromFile(szFileName)

CreateReference = True

Exit Function

CreateRefernceerror:

MsgBox Err & ” : ” & Err.Description

CreateRefernce = False

Exit Function

End Function

இவ்வாறு உருவாக்கிய அக்சஸ் பயன்பாட்டின் மென்பொருளின் வேகத்தை அதிகபடுத்தலாம்

இதில் obsoluteமற்றும் perceivedஆகிய இருவகைகளில் மென்பொருளின் வேகம் உள்ளது

obsolute வேகம் என்பது பயன்பாட்டின் உண்மையான செயல் வேகம் ஆகும்

perceivedவேகம் என்பது இறுதி பயனாளரின் பயன்பாட்டு வேகமாகும், இது மிக மெதுவாகவே இருக்கும்,

பயன்பாட்டு மென்பொருள் மிக வேகமாக செயல்படவேண்டுமெனில் பின்வரும் ஆலோசனையை பின்பற்றுக,

1     மென்பொருளை எப்போதும் தொகுப்பு நிலையிலேயே பராமரிக்கவும் அதனால் குறைந்த நினைவகமே போதும்

2     எப்போதும் நல்ல தொகுதிகளையே(modules) உருவாக்குக,

3     இதனை தரவுதளத்திற்கு மட்டும் (open exclusive)என (படம் 3)பயன்படுத்துக,

  படம் -3

4     தரவுதளத்தினை சுருக்கி பயன்படுத்துக

5     மிக முக்கியமாக உங்கள் கணினியின் வேகத்தை அதிகப்படுத்துக,

கணினியின் வேகத்தை அதிகப்படுத்துவதற்காக

1     மிக அதிக திறனுள்ள ரேமை (RAM)பயன்படுத்துக,

2     கண்ணில் கண்ட வால்பேப்பர் மற்றும் சிக்கலான பிட்மேப்கள் போன்றவைகளை கணினி திரையில் பயன்படுத்தவேண்டாம்

3     உபயோக படுத்தாத பயன்பாடுகளை அவ்வப்போது மூடிவிடுக

4     விண்டாவின் ஸ்வாப் கோப்பிற்குத்தேவையான நினைவகம் போதுமான அளவிற்கு உள்ளதாவென சரிபார்க்கவும்

5     அவ்வப்போது வன்தட்டின் கோப்பகத்தினை அவ்வப்போது ஹார்டு சுத்தம்செய்து சுருக்கி கட்டுதல்செய்து காலிநினைவக இடத்தை அதிகபடுத்துக

அறிந்து கொள்வோம் அக்சஸ் 2003-தொடர்-பகுதி-49- வாடிக்கையாளர் /சேவையாளர் கருத்தமைவுகள்

இந்த வாடிக்கையாளர் /சேவையாளர் கருத்தமைவுகள் என்ற   சொற்றொடர் ஆனது முதலில் இரண்டடுக்கு உள்ளூர் கணினி அமைப்பிற்கு மட்டும்  வழங்கப்பட்டு வந்தது ஆனால் இந்த சேவையானது பொதுவாக வளாகப்பிணையம்(LAN) அல்லது பரந்த பிணையம்(WAN) ஆகிய இரண்டில் ஒன்றை பயன்படுத்தி ஒற்றையான சேவையாளர்(Server) கணினியில் ,பல வாடிக்கையாளர்(Clients) கணினிகள் இணைக்கபட்டு செயற்படுத்தபட்டது  இதில்  சேவையாளர் கணினியானது தகவல்களை வழங்குநராகவும் வாடிக்கையாளர் கணினிகளானது தகவல்களை பெறுபவர்களாகவும் இருவழி உறவு பராமரிக்கபட்டு வந்தது    அக்சஸில் தரவுகளை உள்ளீடு செய்தல்,அறிக்கை தயாரித்தல்,படிவங்களை தயாரித்தல்,  பிரதிபலிக்கசெய்தல் ,அச்சிடுதல் என்பன போன்ற பணிகளை வாடிக்கையாளர் கணினிகளும்  இந்த பணிகளை செய்வதற்கு உதவிடும் தரவுகளை தேக்கிவைப்பதற்கான பணிகளை சேவையாளர் கணினியும்  வளாகப்பிணையம்(LAN) அல்லது பரந்த பிணையம்(WAN) மூலம் செயற்படுத்தபடுகின்றன.

உலகளவில் பரந்து பட்ட இணையத்தில் நம்முடைய கணினி இணைந்திருப்பதாகவும். கூகிள் தேடுபொறி மூலம் நம்முடைய கணிணியில் ஜிமெயிலின்   பக்கம் ஒன்றினை திறந்து கடிதம் ஒன்றை தட்டச்சு செய்து நம்முடைய நண்பர் ஒருவருக்கு அனுப்பி வைப்பதாகவும்  உடன் நம்முடைய நண்பரும் அவருடைய கணினியின் மூலம் நாம் அனுப்பிய ஜிமெயிலின் மின்னஞ்சல் கடிதத்தை  பெற்று படிப்பதாகவும் கொள்வோம் இந்த செயலில் நம்முடைய கணினியும் நம்முடைய நண்பருடைய கணினியும் வாடிக்கையாளர்கள் கணினிகளாகும் ஜிமெயில் வசதி தரும் கணினியானது சேவையானர் கணினியாகும்

பின்புல அலுவலகம் (Back Office) தற்போது பெரும்பாலான பொதுமக்கள் இந்த சொற்களை அடிக்கடி பேசுவதை கேள்விபட்டிருப்பீர்கள் அதாவது வருமானவரித்துறை, இரயில்வேத்துறை, வங்கித்துறை  போன்ற நிறுவனங்களின் அனைத்துவகையான தரவுகளையுயம் ஒரு மைய கணினியில் மட்டும் சேகரித்து பதிந்து தேக்கி வைத்திருப்பார்கள் இதுவே பின்புல அலுவலக (Back Office)சேவையாளர் கணினியாகும்  பொரும்பாலானவர்களின் கண்களால் இதனை காணமுடியாது ஆனால் இந்த சேவையாளர் கணினியானது எஸ்கியூஎல் சேவையாளர் அல்லது ஆரக்கிள் சேவையாளர் போன்ற தரவுதளத்தின் அடிப்படையில் இயங்குபவையாகும் இந்த சேவையாளர் கணினியானது தரவுதள சேவையாளர், வாடிக்கையாளர்கள்  ஆகியவற்றிற்கு இடையில் தரவகளை பரிமாறிக்கொள்வதற்காக இணைய சேவையாளர் பயன்பாட்டு சேவையாளர் என்பன போன்று செயல்படுகின்றது  பொதுவாக வாடிக்கையாளர் பயன்பாட்டிற்கு தேவையான தரவுகளை வழங்குவதே இந்த பின்புல அலுவலக (Back Office)கணினியினுடைய பணியாகும்

      தரவுத்தளம் (Data Base)பொதுவாக வாடிக்கையாளர்களுக்குத்  தேவையான அடிப்படைத்தரவுகளை சேகரித்து பதிந்து தேக்கி வைத்திருப்பதையே தரவுத்தளம் என்பர் பொதுவாக எம்எஸ்  அக்சஸைவிட திறன்வாய்ந்த எஸ்கியூஎல் சேவையாளர் போன்ற தரவுதளம் பேரளவில் பயன்படுத்தபட்டு வருகின்றன    இவ்வாறு அவை பேரளவு திறன் வாய்ந்ததாக இருந்தாலும் இவைகள் அக்சஸுடன் சிறப்பின தரவுதள செயலில் அல்லது பண்பில் வேறுபடுகின்றன

 பொதுவாக தரவுதளங்களில் இயங்கிடும் கட்டளைகளின் குழுவை தேக்கிவைக்கபட்ட செயல்முறை(stored procedure) என அழைப்பார்கள்   இதில் பயனாளர் வரையறுக்கும் செயலியானது ஒற்றையான மதிப்பை திருப்புவதை தவிர  மற்ற அனைத்தும் முந்தையதை போன்றதேயாகும்

  தரவுதளத்தில் ஒருநிகழ்வை கண்டுபிடிப்பதையே ட்ரிக்கர்  எனக்கூறுவார்கள் இது குறிப்பிட்ட செயல் நடைபெற்றால் மட்டும் குறிப்பிட்ட நிகழ்வு ஏற்படும் என்ற நிபந்தனையுடன் செயல்படுகின்றது

  இந்த சிறப்பின பொருட்களானது சேவையாளரால் தேக்கிவைக்கபட்ட தரவுகளை எவ்வாறு கையாளுவது என்ற தருக்கநிலையிலும் அறிவுபூர்வமாகவும் இருக்குமாறு வரையறுப்பதாகும்

 அக்சஸானது  தேக்கிவைக்கபட்ட செயல்முறைக்கு இணையாக மேக்ரோவையும், செயலிக்கு சமமாக  மாடூல்ஸையும் ட்ரிக்கருக்கு இணையாக கிளாஸ் மாடூல்ஸையும் தன்னகத்தை கொண்டு சிறப்பாக  செயல்படுகின்றது பொதுவாக ஒரு மேக்ரோவானது திரும்ப திரும்ப செய்யப்படும் செயல்களை தானாகவே  செயல்படுத்துமாறு ஒரு தொடர்ச்சியான கட்டளைகளால் (commands) மாற்றி அவைகள் அளபுருக்களாக (parameters) தேக்கி வைக்கப்பட்டு செயல்படுத்தபடுகின்றது

மாடூல்ஸும் கிளாஸ் மாடூல்ஸும்

அக்சஸில் ஒரு குறிமுறையானது தொகுப்பாக சேர்த்து தரவுதளத்தில் உருவாக்கபட்டு தேக்கிவைக்கப்படுகின்றது ஆயினும்  இந்த அக்சஸ் தரவுதளமானது ஒற்றை பயனாளராக அல்லது சிறுசிறு குழுக்களின் பயனாளராக மட்டும் பயன்படுகின்றது  இணையசேவையாளர் போன்று இணையத்தில் இது பயன்படாது

பொதுவாக அக்சஸானது பின்புல தரவுதளம் என்றும்  பயன்படுத்தும் தரவுதளம் என்றும்  இரண்டாக பிரிக்கபட்டு கோப்பு சேவையாளர் பின்புல சேவையாளராகவும் பயனாளர் கணினியானது இதிலிருந்து தரவுகளை பெற்று செயற்படுத்திகொள்ளுமாறும் செய்யபட்டுள்ளது

இதற்கு மாறாக எஸ்கியூஎல் ஆரக்கிள் போன்ற தரவுத்தள சேவைகளில் சேவையாளர் கணினியில் மட்டும்  தரவுகளை கையாண்டு செயல்படுத்தபட்டு செயல்கள் நடைபெறும் .ஆனால் அதன்விளைவுகள் மட்டும் வாடிக்கையாளர் கணினியில் வழங்கிடுமாறு செயல்படுகின்றது. இதன் கோப்பு சார்ந்த கட்டமைப்பில் அக்சஸானது மற்ற தரவுத்தளங்களைவிட மாறுபட்டு அமைகின்றது

எது எவ்வாறாக இருந்தாலும் அக்சஸானது தரவுதளம் மற்றும் பயன்பாட்டு தளம் ஆகிய இரண்டு பணிகளையும் அதாவது இருநிலைகளையும்( Dual mode)    ஒருங்கே சேர்ந்து செயல்படுத்துகின்றது  மேலும் இதற்கென தனியாக தேடுபொறிகூட Acccess data base  Engine /jet data base engine என்ற பெயரில் உள்ளது ஆனால் இது  எஸ்கியூஎல் ஆரக்கிள் சேவையாளர் போன்று பல பயனாளிகள்/ பல செயல்பாடுகளின் செயல்திறனை வழங்காது

இருந்தாலும் இது பின்வரும் சிறப்பு தரவுதளப் பொருட்களை ஆதரிக்கின்றது

1/view   இது நம்மால் தேக்கிவைக்கபட்ட தரவுகளிலிருந்து நாம் எழுப்பும் வினாவிற்கு ஏற்ற தகவல்களை தேடிஎடுத்து திரையில் காண்பிக்கின்றது ஆனால் இவ்வாறு திரையில் காண்பிக்கப்படும் தரவுகளை அச்சிட்டு பெறும் நகல் தரவு போன்றது அன்று

2.cluster இது நம்மால் அதிகப்படியாக அனுகிடும் அட்டவனைகளின் முழு நெடுவரிசைகளின் பகுதிகளையும் தொட்டுணரக்கூடியதாக அல்லது பெறக்கூடியதாக இருந்தாலும் இது தானாகவே தரவுகளை புதுப்பித்து கொள்ளாது

3cluster index  இது அடிப்படை இனங்களுக்கு பொருத்தமான சிறப்பு வகை அட்டவணையின் வரிசையாகும் இது அட்டவணையின் தரவுகளை வரிசைப்படி அடுக்கி வைக்கின்றது

4.Identity field  ஒரு ஆவணத்தில் எத்தனை அடிப்படை புலங்கள் உள்ளன என எண்ணிடுவதற்கும் புதிய ஆவணங்களில் Surrogate என்ற அடிப்படை திறவுகோளை விளக்குவதற்கும் இது பயன்படுகின்றது

5.temporary file இது மிகப்பெரிய செயல்பாடுகளில் தற்காலிகமாக தரவுகளை தேக்கிவைக்கபயன்படுகின்றது

6.partitioning and parallel processing இது பொதுவாக அட்டவணைகளை தனித்தனியாக பிரிப்பது பிரிந்திருப்பதை இணையாக செயல்படுத்துவது ஆகும்

தரவுத்தளமானது ஆயிரக்கணக்கான பயனாளர்கள் ஒரே சமயத்தில் பயன்படுத்தி கொள்ளவும் பல இலட்சக்கணக்கான பயனாளிகளின் ஆவணங்களை தேக்கிவைத்தும் உள்ளது. அக்சஸில் நல்ல திறன்வாய்ந்த படிவங்கள் அறிக்கைகள் உள்ளன.ஆனால் எஸ்கியூஎல் சேவையாளர் ஆரக்கிள் தரவுதளம் போன்றவைகளில் இவை இல்லை.

மிகமுக்கியமாக  share point என்ற சேவைத்திறன் அக்சஸில் உள்ளது இது பற்றி தனியே அக்சஸின் முந்தைய தொடர்களில் பார்த்துவிட்டோம்  இணையசேவையாளர் பயன்பாட்டு சேவையாளர் போன்றவை பேரளவில் வாடிக்கையாளர் ஆகவும் சிறிய அளவில் சேவையாளராகவும்பயன்படுத்தி செயல்படுத்திடவும் பணிகளை  பகிர்ந்து அளித்திட பயன்பாட்டு சேவையாளரும் பயன்படுகின்றன

சேவையாளர் ஆனது இணையஇணைப்பின்  சூழலில் பயன்பாடுகளை செயல்படுத்திட பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு தேவையான தரவுகளை பகிர்ந்து அளிக்கின்றது

பல்லடுக்கு கட்டமைப்பு தரவுதள அமைப்பில் date,Business Logic, user Interface ஆகிய மூன்று மிக முக்கிய உறுப்புகள் உள்ளடங்கியுள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு அடுக்காக(tier)கருதப்படுகின்றது ஒரு சில தரவுதளமானது வாடிக்கையாளர்/சேவையாளர் ஆகிய இரண்டு அடுக்கில் கட்டமைக்கபட்டுள்ளன.

இதனையே விபிஏ குறிமுறைகளால் இயக்கி அதன் பயனை அக்கஸில் பெற்றால் அதனை இரண்டடுக்கு செயல்பாட்டு அமைவு (Two Tire  system) என அழைப்பார்கள்

இரண்டடுக்கு செயல்பாட்டு அமைவு (Two Tire  system):

பெரும்பாலான நிறுவனங்கள் வளாகபிணையத்தின்மூலம் ஒற்றையான அல்லது ஒன்றிற்கு மேற்பட்டவை சேர்ந்த குழுவாக செயல்படுத்திடுமாறு  வாடிக்கையாளர்/சேவையாளர்  என்ற கட்டமைப்பு பயன்படுகின்றன.இந்த வாடிக்கையாளர்/சேவையாளர் கட்டமைப்பானது அடிப்படையில் செயல்பாடுகள் விளைவுகள்  ஆகியவை இரண்டடுக்கில் செயல்படும் தன்மை கொண்டதாகும்

பயனாளர்களுடன் இணைப்பு செய்வது தரவுகளை உள்ளீடு செய்வது பயனாளர் உள்ளீடு செய்திடும் தரவுகளை வரிசையாக அடுக்கி ஏற்றுக்கொள்வது ஆகியவை Front end  செயல்பாடுகள் என அழைப்பர்

பயனாளர்களிடமிருந்து பெறப்படும் தரவுகளை தேக்கிவைத்து பயனாளர்கள் கோரிய தரவுகளை பகிரந்தளித்தல் செயல்படுத்துதல் போன்றவை Back end செயல்பாடுகளாகும்

அக்சஸானது இரண்டாக பிரிக்கபட்டு பின்புல சேவையாளர் (Back end) கணினியில் தரவுகளை தேக்கிவைக்கின்றது  இங்கு தரவுகளை கையாளுவதற்கென தனியானதொரு மென்பொருள் தேவையில்லை  அட்டவணை, வினா, படிவம், அறிக்கை ஆகியவற்றை உருவாக்குவது போன்ற செயல்களை Front end  கணினியில் செயல்படுத்தபடுகின்றது

மூன்றடுக்கு செயல்பாட்டு அமைவு (Three Tire system):

மூன்றாவதாக தரவுகளை நிருவகிக்கும் வியாபார தருக்க செயல்பாடான தரவுகளை ஏற்புடையதாக்குதல் பயனாளர்களுக்கு அறிவிப்பு செய்வது தரவுகளை மாற்றியமைப்பது போன்ற பணிகளை மூன்றாவது அடுக்கின் செயல்பாடாகும்

   இணையத்தின் நேரடி பரிமாற்ற செயல் (OnLineTransfer  Processor):
   அக்சஸானது பகிர்வுபுள்ளி (share point) வசதியுடன் உலகில் எங்கிருந்தாலும் தரவுகளை தேக்கிவைத்து பகிர்ந்து கொள்ள பயன்படுகின்றது இது பின்வரும் சிறப்பு செயல்பாடுகளை ஆதரிக்கின்றது
  படியாக்கம்(Replication) பகிர்வு தரவுதள மேலான்மை அமைப்பில் ஒரு தரவுத்தளம் முழுவதையும் அல்லது அதன் ஒரு பகுதியை மட்டும் இணையத்தின் மற்ற பகுதியில் உள்ள கணினியில் நகல்எடுத்து வைத்தல் செயலானது ஒத்திசைவோடு இயங்க இது உதவுகின்றது
   Stand by  faileover ஏதேனும் ஒரு சேவையாளர் கணினி இயங்காமல் நின்றுபோனாலும் தயாராக இருக்கும் மற்றொன்றை கைகொடுக்க செய்வதாகும்

Clusture and grid ஒன்றுக்குமேறபட்ட பல கணினிகளை ஒற்றை கணினிபோன்று செயல்படுத்துகின்றது அக்சஸ் பல்லடுக்கு தளமாக செயல்படுகின்றது அக்சஸானது பயன்பாட்டு நிலையில் மட்டுமல்லாது தரவுதள தேடுபொறியுடன் பகிர்வுபுள்ளி (share point) சேவையாளர் வசதியுடன் எஸிகியூஎல் சேவையாளர் போன்று  செயல்பட உதவுகின்றது

அறிந்து கொள்வோம் அக்சஸ்-2003-தொடர்-பகுதி- 48 உதவிகுறிப்புகள் உருவாக்குதல்-தொடர்ச்சி

திட்ட கோப்பிற்குள் தலைப்பை சேர்த்தல்

புதிய திட்ட கோப்பு ஒன்றினைஉருவாக்கினால் இது நடப்பு கோப்பில் தானாகவே ஏற்றப்படும்.  பிறகு கூடுதலான HTML கோப்பை உருவாக்கிவிடும் பின்னர் இதனை எப்போது வேண்டுமானாலும் உங்களுடைய திட்டபணியில் சேர்க்க முடியும்,

ஒரு உதவி கோப்பில் குறைந்த பட்சம் ஒரு தலைப்பு கோப்பாவது திட்ட கோப்பில் திரட்டுதல்(compile) செய்து இணைக்கவேண்டும்.  HTML உதவி திட்டபணியின்  முக்கிய திரையில் உள்ள Add அல்லது Remove என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி தலைப்புக்கோப்பை சேர்க்கவோ அல்லது நீக்கவோ முடியும்.

1.Topic filesஎன்ற உரையாடல் பெட்டியில் தலைப்பு பட்டியலின் கீழ் பிரதிபலிக்கும் கோப்புகளை தெரிவு செய்து Add என்ற பொத்தானை  சொடுக்குக. பின்னர் Ok என்ற பொத்தானை  சொடுக்குக.

2.அதன்பின்னர் தோன்றும் திரையில் open என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.  உடன் நாம் சேர்த்த  தலைப்பு கோப்பு திட்டகோப்பில் சேர்ந்திருப்பதை காணலாம்

இந்த Topic Files என்ர உரையாடல் பெட்டியில்(படம்-1) பிரதிபலிக்கும் தலைப்பு கோப்புகளில் நீக்கவேண்டிய கோப்பினை தெரிவு செய்து Remove என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி நீக்கம் செய்யலாம்.

படம்-1

திட்ட கோப்பினை சேமித்தல் மற்றும் திரட்டுதல்(compile)  செய்தல்

நாம் உருவாக்கிய உதவி அமைப்பானது பிழை மற்றும் இணைப்பு முறிவு ஏதுமில்லாமல் சரியாக இயங்குகிறதா என பரிசோதிக்க விரும்புவோம்

இதற்கு முதலில் இந்த திட்ட கோப்பை  (.chm) என்ற பின்னொட்டுடன் திரட்டுதல்(compile)  செய்யவேண்டும் இவ்வாறு திரட்டுதல்(compile)  செய்யும் போது தலைப்பு கோப்புகள்,படக்கோப்புகள்,உள்ளடக்க கோப்புகள்,உதவி கோப்பில். Cltm என்ற பின்னொட்டுடன்உள்ளிறுத்தப்படும்

இந்த திரட்டுதல்(compile)  கோப்பினை நாம் விரும்புகின்ற வன்தட்டில், குறுவட்டுகளில், நெகிழ்வட்டுகளில்,சேவையாளர் தொகுதியில், இணையத்தில் என எங்குவேண்டுமானாலும் சேமித்து கொள்ள முடியும்.

HTML உதவி பணிமனையானது (படம்-2)கோப்புகளை திரட்டுதல்(compile)  செய்யும்போது  துனைகோப்புகளை எவ்வாறு ஒற்றையாக உருவாக்குவது என முடிவுசெய்கிறது.  இந்த சமயத்தில் பிழை ஏதேனும் ஏற்பட்டால் உடனே வெளிப்படுத்திவிடுகிறது.

படம்-2

HTML உதவி பணிமனையில் பின்வரும் செயல்கள்செயல்படுத்தப்படுகிறது.

1,உள்ளடக்க மற்றும் பட்டியல் கோப்புகளில் உள்ள விடுபட்ட தலைப்புகளின்        பிழைகளை அறிக்கையாக சுட்டிகாட்டுகிறது.

2,அதே போன்று இவைகளுக்கு இடையேயுள்ள இணைப்பு விடுபட்டுவிட்டால் அதனையும் அறிக்கையாக காண்பிக்கிறது.

3,தேவையற்ற காலிஇடம் மற்றும் கருத்துகளை நீக்கி விடுகிறது.

திட்ட பணிபக்கத்தில் save all files and compile என்ற  பொத்தானை தெரிவுசெய்து தெரிவு செய்துசொடுக்குக உடன் என்ன நிகழ்ந்து முடிந்தது  என்ற செய்தியானது  வலதுபுற பலகத்தில் (pane) அறிக்கையாக காட்சியளிக்கும்.

                 உள்ளடக்க அட்டவணையை உருவாக்குதல்

அனைத்து தலைப்பு கோப்புகளையும் உருவாக்கிய பிறகு இந்த தலைப்பு பெயர்களை உள்ளடக்கிய ஒரு அட்டவனையை உருவாக்க விரும்புவோம்.  இந்த தலைப்புகள் சேர்ந்த உள்ளடக்க அட்டவணையானது மிகச்சுருக்கமாகவும்  குழப்பமேதுமில்லாது தெளிவாகவும் உடனடியாக பயனாளர்  அறிந்துகொள்ளும் படியாகவும் உருவாக்கவேண்டும்.

            புதிய உதவி உள்ளடக்க கோப்பை உருவாக்குதல்

உள்ளடக்க கோப்பானது ,hhc என்றபின்னொட்டுடன் உள்ள ஆஸ்கி கோப்புகளாகும்.  இதில் Heading,Topics,Commands, ஆகிய மூன்று உறுப்புகள் உள்ளன.

HTML உதவி பணிமனையை பயன்படுத்தி பின்வரும்  படிமுறைகளில் புதிய உள்ளடக்க கோப்பினை உருவாக்க முடியும்.

1. முதலில் இதில் உள்ள Change Project Option என்ற என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

2. உடன் திரையில் (படம்-3)தோன்றும் option என்ற உரையாடல் பெட்டியில் உள்ள files என்ற தாவியின் பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக.

படம்-3

3. பின்னர் தோன்றிடும் திரையில் புதிய உள்ளடக்க கோப்பிற்கு எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் ஒரு பெயரை உள்ளீடு செய்க.

Automatically create context file (.hhc) where compling என்ற தேர்வுசெய்பெட்டியை தெரிவு  செய்து விடுக. பின்னர் Maximum need level என்ற பகுதியில் நாம் விரும்பும் அளவு (3என்பது போன்று ) தெரிவு செய்க. இங்கு மூன்று என தெரிவு செய்தால் <H1>,<H2>,<H3>, என மூன்று இணைப்பு(tag)களுடன் தலைப்புகள் உருவாகும்.

பிறகுok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி திட்டப்பணியை திரட்டுதல்(compile)  செய்து சேமித்துவிடுக.  உடன் திரையில் இதன் உள்ளடக்கங்கள் பிரதிபலிக்கும்.

இது ஒரு புத்தகத்தின் உள்ளடக்கத்தை போன்று இருக்கும் குறிப்பிட்ட தலைப்பை பிடித்து சொடுக்கினால் அதனுள் இருக்கும் துனைத் தலைப்புகள் பிரதிபலிக்கும்.இந்த துனைத்தலைப்பை பிடித்து சொடுக்கினால் தொடர்புடைய பகுதிக்கு செல்லும்,

               உள்ளடக்க உறுப்புகளை மாறுதல் செய்தல்

புதிய தலைப்புகளை உள்ளிணைக்க அதற்கான இடத்தில் இடம்சுட்டியை நிறுத்தி கொள்க.

1,புதிய தலைப்பை சேர்ப்பதற்காக Insert a Heading என்ற என்ற பொத்தானை தெரிவு செய்க

2,உடன் Table of Contents Entry என்ற உரையாடல் பெட்டி திரையில்  (படம்-4) தோன்றும்.

படம்-4

3. Entry Title எனும் பகுதியில் புதிய தலைப்பை (New Heading) உள்ளீடு செய்க.

4. அதன்பின்னர் Add  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

5. உடன் path or URL என்ற உரையாடல் பெட்டிதிரையில் தோன்றும்.

6. இதன் file or URL பகுதியில் HTML கோப்பினை தெரிவு செய்து Ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் கோப்பின் பெயர் Table of Contents Entry என்ற உரையாடல் பெட்டியில் தோன்றும்.

7. பின்னர் ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் தலைப்பு உருவாகி உள்ளினைந்து விடும்.

உதவி பட்டியலை உருவாக்குதல்

பொதுவாக பயனாளர் ஒருவர் ஏதேனும் ஒரு திறவுசொல்லை  வைத்து கொண்டு ஒவ்வொரு தலைப்பையும் தேடிப்பார்க்க விரும்புவார்.  அந்நிலையில் தலைப்பு திறவுசொல்லை உதவி அமைப்பில் பட்டியலாக அடுக்கிவைத்திருந்தால் மட்டுமே உடனடியாக அது எங்கிருக்கிறது என  தேடிப்பிடிக்க முடியும். முழு உரையையும் வைத்து தேடுவதைவிட திறவுச்சொல்லை வைத்து மிகவேகமாக தேடிப்பிடிக்க முடியும்.  ஆனால் தலைப்பு பட்டியில் இந்த திறவுச்சொல்லானது இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

திறவுச்சொற்களை பயன்படுத்தும் போது பின்வரும் செய்திகளை கருத்தில் கொள்ளுங்கள்.

1,தொடக்க நிலைபயனாளர்கள் தொழில் நுட்பமல்லாத சொற்களை பயன்படுத்துங்கள்.

2,நன்கு அனுபவ முதிர்ச்சியுடையவர்கள் மட்டும் தொழில் நுட்பமுள்ள சொற்களை திறவுச்சொல்லாக பயன்படுத்துங்கள்.

3,தொழில் நுட்ப சொற்களுக்கு இணையான பொதுவான சொற்களையே  பெரும்பாலும் பயன்படுத்துங்கள்.

4,எப்போதும் பொதுநிலையில்  பயன்படுத்தும் ஜனரஞ்சகமான சொற்களையே பயன்படுத்துக.

5,தலைப்புக்குள் இருக்கும்படியான குறிப்பிட்ட சொற்களையே பயன்படுத்துக.

6,தலைகீழ் வடிவமான சொற்களை அல்லது சொற்றொடரை பயன்படுத்துக.

பின்வரும் படிமுறையை பட்டியில் ஒரு திறவுச்சொல்லை சேர்ப்பதற்காக  பின்பற்றுக.

1. HTML உதவி பணிமனையின் சாளரத்தில் indexஎன்ற தாவிப்பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக. உடன் தோன்றும் Index என்ற பக்கத்தில் insert a keyword என்ற பொத்தானை தெரிவுசெய்து தெரிவு செய்க.  உடன் Index Entry என்ற உரையாடல் பெட்டி(படம்-5)தோன்றும்.

படம்-5

2. இதில் Key word எனும் பகுதியில் திறவுச்சொல்லை உள்ளீடுசெய்க.  அதன்பிறகு Add எனும் என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.  உடன் path or URL எனும் உரையாடல் பெட்டி(படம்-6)தோன்றும்.

படம்-6

3. அதில் HTML கோப்பு அல்லது திறவுச்சொல்லை உள்ளடங்கிய கோப்பை தெரிவு செய்க.  பின்னர் ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் Index Entry உரையாடல் பெட்டியில்தெரிவு செய்யப்பட்ட கோப்பின் பெயர் பிரதிபலிக்கும்.

4. பிறகு Ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன்  புதிய திறவுச்சொல்லாக  சேமிக்கப்படும்.

5.பின் இந்த திட்டபணியை திரட்டுதல்(compile)  செய்து சேமிக்கவும், அதன் பின்னர் view Compiled file என்பதை தெரிவு செய்க.  உடன் தோன்றும் view compiled என்ற உரையாடல் பெட்டியில்view எனும் என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இந்த உரையாடல் பெட்டிதிரையில் காட்சியளிக்கும்.

              முழு உரை தேடுதலை செயல்படுத்துதல்

முன் வரையறுக்கப்பட்ட திறவுச்சொற்களை கொண்டு தேடிப்பிடிக்கவே இந்த பட்டியல் திறவுச்சொல்  அனுமதிக்கிறது.  ஆனால் பயனாளர் ஒருவர் முன் வரையறுக்கப்படாத பட்டியலில் இல்லாத தலைப்புகளையே தேடிபிடித்து அறிய விரும்புவார்  அதனால் நாம்ஒரு முழு உரையை கொடுத்தாலும் தேடிப்பிடித்து நாம் விரும்பிய உதவி குறிப்புகளை நமக்கு வழங்குவதே ஒரு நல்ல உதவி அமைப்பகும்.

Search என்ற தாவித்திரையானது பயனாளர் ஒருவர்  எந்த எழுத்துகள், சொற்கள் அல்லது சொற்றொடர் கொடுத்தாலும் அதனை உடனே தேடிக்கண்டுபிடித்து வழங்கும் திறனுடன் இருக்கவேண்டும்.

பொதுவாக பயனாளர் ஒருவர் உதவி அமைப்பை இயக்கிவுடன் முதல் முதலில் Search என்ற தாவிபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குவார் உடன் find search என்ற வழிகாட்டி (wizard) திரையில் தோன்றும்  இந்த வழிகாட்டியானது பயனாளருக்கு முழு உரையை அல்லது திறவுசொல்லை கணிப்பெறியில் எவ்வாறு அமைப்பது என உதவி புரியும்.

உதவி கோப்பில் முழு உரைகளின் வரிசைபடுத்தபட்ட பட்டியல் அனைத்தும் தனித்தன்மையுடையதாக இருக்கும்.

முழு உரைகளின் வரிசைபடுத்தபட்ட பட்டியலை உருவாக்கி பயனாளர் ஒருவர் பயன்படுத்தும் படி உருவாக்க முடியும்.  ஆனால் இது நினைவகத்தில் அதிகஅளவு இடத்தைபிடித்துக் கொள்ளும்.  அதனால் Help Project option என்ற உரையாடல் பெட்டியில் (படம்-7) compiles  என்ற தாவியின்கீழ் compile full text search information என்ற தேர்வுசெய்பெட்டி தெரிவு செய்யப்பட்டு முழு உரைக்கோப்பை உருவாக்க முடியும் உடன் இது திரட்டுதல்(compile)  செய்யப்பட்டு fts என்ற பின்னொட்டுடன் ஒரு கோப்பு உருவாகிவிடும்.

படம்–7

     திரட்டுதல்(compile)  செய்த உதவி கோப்பினை இயக்குதல்

HTML உதவி பணிமனையினுடைய சாளரத்தின் உள்ள கருவிபெட்டியில் கண்கண்ணாடி போன்று உள்ள view compiled file  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.  உடன் view compiled என்ற உரையாடல் பெட்டிபடம்-8-ல் உள்ளவாறு தோன்றும்.  நாம் திரட்டுதல்(compile)  செய்த கோப்பினை browse என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குவதன் மூலம் தேடிபிடித்து தெரிவு செய்து கொள்க பின்னர் view என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.  உடன் உதவி அமைப்பில் பிரதிபலிக்க செய்யும் உள்ளடக்கத்தின் ஒவ்வொரு தலைப்பையும் பரிசோதித்து பார்க்கிறது உதவி அமைப்பின் முக்கிய கோப்பு உள்ள index என்ற தாவியை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தேடிப்பிடிக்ககூடிய அனைத்து திறவுச்சொற்களும்  வரிசைபடுத்தபட்ட உள்ளீடுகளும் பட்டியலாக திரையில் தோன்றும்.

படம்-8

     பயன்பாட்டில் உதவி கோப்பினை ஒருங்கிணைத்தல்

இவ்வாறு உருவாக்கி திரட்டுதல்(compile)  செய்யப்பட்ட உதவி கோப்பினை அக்சஸ் பயன்பாடுகளில் ஒருங்கிணைக்க முடியும்

அக்சஸின் படிவ (form) நிலையில் உதவி பிரதிபலித்தல்

உதவி கோப்பில் தலைப்புகளுக்கு குறிப்பிட்ட கட்டுப்பாடு அல்லது படிவத்திற்கு இணைப்பு ஏற்படுத்தும் செயலிற்கு உதவுவதே பொதுவான வழி முறையாகும்.  இதனை இரு நிலைகளில் செயல்படுத்த முடியும். முதலில் பயன்படுத்துவதற்கு உதவி கோப்பினை குறிப்பிட வேண்டும்.  பின்னர் உதவியின் வரிசைபடுத்தபட்ட ID பண்பியல்பை படிவத்திலும் கட்டுபாட்டிலும் அமைக்க வேண்டும்.

                     கட்டுப்பாட்டு நிலையில் உதவி பிரதிபலித்தல்

படிவத்தினுடைய உதவி தொடர்பு ID ஐ அமைத்தபிறகு இதற்கான கட்டுப்பாட்டை அமைக்க வேண்டும்.  தனித்தன்மையுடன் கூடிய தலைப்பினுடைய கட்டுபாட்டை இணைக்க விரும்பவில்லையெனில் 0 என அமைத்து விடுக.  இவ்வாறு இதனை 0 வாக அமைக்கும் போது பயனாளர் ஒருவர் F1 என்ற விசையை அழுத்தும்போது மட்டும் கட்டுபாடு  செயலுக்கு வரும் இல்லையேனில் தலைப்பு ID பொருத்தமாக இருக்குபோது மட்டுமே கட்டுபாடு செயலுக்கு வரும்.  பின்னர் உதவி தொடர்பு ID யின் பெயரையும் கட்டுபாட்டையும் அமைத்ததை உறுதி செய்து கொள்க.  சிலபயனாளர்கள் உரைபெட்டியை உதவிக்கு சொடுக்கி அழைப்பார்கள் வேறுசிலர் பெயரை மட்டும் சொடுக்கி உதவியை கோருவார்கள்.  எது எவ்வாறாயினும் உடன் உதவி இணைப்பு பிரதிபலிக்க வேண்டியது அவசியமாகும்.

Maping உதவி தொடர் IDக்கு உதவி உரையாடல் பெட்டிஅமைத்தல்

இவ்வாறு அமைத்த பிறகு ஒவ்வொரு ID க்கும் தொடர்புடைய உதவி தலைப்புடன் இணைப்பு (map) செய்ய விரும்புவோம்.  HTML உதவி பணிமனையானது இதற்காக தனியான கருவி ஒன்றை வழங்கி உள்ளது.  ஒவ்வொரு தலைப்புகிற்கும் தன்னிகரற்ற எண் ஒன்றை ஒதுக்கீடு செய்கிறது இந்த HTML உதவி பணிமனையில் உள்ள HTML உதவி ஏபிஐ ஆனது உதவி கோப்பிற்கான தகவலை வழங்குகிறது.  இந்த தகவலை பயன்பாட்டு உதவி சாளரத்தில் பிரதிபலிக்க செய்கிறது.

இதற்கு முன்பு முதலில் header என்ற கோப்பினை உருவாக்க வேண்டும்.  இது உதவி தொடர்பு IDயுடனும்.  ஏபிஐயுடனும் இணைப்பை ஏற்படுத்துகிறது.

இந்த Header என்ற கோப்பினை உருவாக்க பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுக.

1. நோட்பேடு போன்ற உரைப்பதிப்பான்  ஏதாவது ஒன்றை  தெரிவுசெய்து திறந்து கொள்க.

2. அதன்பிறகு பின்வரும் வடிவமைப்பின்படி ஒவ்வொரு symbolic IDயையும் உருவாக்குக

#define IDH_Symbolic ID 1000.

3.இந்த Symbolic IDயின் பெயரை நாம் விரும்பியவாறு புரிந்து கொள்ளும் வகையில் அமைத்து கொள்க.

4. இந்த கோப்பினை .h எனும் பின்னொட்டுடன் சேமிக்கவும்

இவ்வாறு header கோப்பை உருவாக்கியபிறகு HTML உதவி ஏபிஐ உருவாக்க வெண்டும்.

இதற்காக பின்வரும் படிமுறையை பின்பற்றுக.

1. HTML உதவி பணிமனையின் சாளரத்தில் உள்ள HTML உதவி ஏபிஐ information என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.  உடன் HTML help API information எனும் உரையாடல் பெட்டி(படம்-9)தோன்றும்.

படம்-9

2. அதில் Map எனும் தாவிப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன்  விரியும் திரையில் Header file என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.உடன்  file என்ற உரையாடல் பெட்டிதோன்றும்

3. அதில் நாம் உருவாக்கிய Header fileன் பெயரை உள்ளீடு செய்க. அதன் பின்னர் ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன்  map page-ல் கோப்பின் பெயர் பிரதிபலிக்கும்.

4. HTML Help ApI Information என்ற உரையாடல் பெட்டியில்உள்ள Alias என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்த சொடுக்குக.  உடன் Alias page என்பது திரையில் தோன்றும்.

5. இதில் Add என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.  உடன் Aliasஎன்ற  உரையாடல் பெட்டி(படம்-10) திரையில் தோன்றிடும்.

படம்-10

6. அதில் முதல் Symbolic ID யை தலைப்பு கோப்பில் உள்ளீடு செய்க.

7. use it to refer to this HTML file என்பதில் உள்ள அம்புக்குறியை பிடித்து தெரிவுசெய்க. பின்னர் ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

8. இவ்வாறே ஒவ்வெரு symbolic ID பெயருக்கும் மேற்கண்ட படிமுறையை பின்பற்றுக.

9. அனைத்து Alias ஐயும் வரையறுத்து முடிவு பெற்ற பின்னா ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி HTML உதவி ஏபிஐ informationஎன்ற கோப்பினை முடிவிடுக.

10.  பின்னர் திரட்டுதல் செய்து (compile) இந்த திட்டப்பணியை பாதுகாத்திடுக.  இந்த ஏபிஐ ஆனது தலைப்பு கோப்பின் தகவலை திட்டப்பணியுடன் உள்ளிணைத்துகொள்ள அனுமதிக்கிறது.  Alias வரையறுத்தவுடன் symbolic ID யுடன் தனிப்பட்ட ID யை இணைக்கின்றது.

HTML Help API பரிசோதித்தல்

ஏபிஐ தகவலை வரையறுத்தபின் ஏபிஐ இணைப்பு சரியாக இருக்கின்றதா என பின்வரும் படிமுறையை பின்பற்றி பரிசோதிக்க வேண்டும்.

1. HTML உதவி பணிமனை சாளரத்தில் கட்டனை பட்டையில் உள்ள Test எனும் தாவிப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக, உடன் விரியும் பட்டியில் HTML Help API  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.  உடன் Test HTML Help API எனும்  உரையாடல் பெட்டிதிரையில் (படம்-11)தோன்றும்.

2. compiled file என்பதன் கீழ் உள்ள பெட்டியில் சரியான கோப்புதான் பிரிதிபலிக்கின்றதா என சரிபார்க்கவும் இல்லையெனில் Browse என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி சரியான கோப்பினை நடப்பு திட்டபணியில் கொண்டு வருக.  பின்னர் command என்பதனருகில் இருக்கும் பெட்டியில் HH_HELP_CONTEXT என்பதை தெரிவு செய்க. அதன்பின்னர் Window எனும் பகுதியில் main எனவும் map number எனும் பகுதியில் ID எண்ணையும் தெரிவு செய்க.

3. Test என்ற என்ற பொத்தானை தெரிவுசெய்து செடுக்குக.  உடன் உதவி viewer எனும் உரைக்கான உரையாடல் பெட்டிஉள்ளீடு செய்த தலைப்புடன் பிரதிபலிக்கும்.

படம்-11

இந்த சமயத்தில் பிரச்சினை ஏதேனும்  தோன்றினால் பின்வரும் சரிபார்ப்பு பட்டியலை பின்பற்றுக,

1,தலைப்பு கோப்பில் ID எண் சேர்ந்துள்ளதா.

2,HTML உதவி ஏபிஐஉரையாடல் பெட்டியில்சரியான தலைப்பு கோப்பு சேர்ந்துள்ளதா.

3,ஒவ்வொரு simbolic ID.யும் தலைப்பு கோப்பில் Alias உடன் பொருத்தமாக இருக்கிறதா.

4,Alias ஆனது பொருத்தமான HTML கோப்புடன் ஒத்திருக்கின்றதா

5,திட்ட கோப்பானது மீண்டும் திரட்டுதல்(compile)  செய்து சேமிக்கப்பட்டுள்ளதா.

அக்சஸில் உதவி கோப்பை பாரிசோதித்தல்

அக்சஸ் பயன்பாட்டுடன், உதவி அமைப்பின் இணைப்பு சரியாக உருவாக்கப்பட்டடவுடன். நேரடியாக உதவி அமைவை உங்களுடைய அக்சஸ் படிவத்தில் செயல்படுத்த முடியும்,  புதிய அக்சஸ் உதவி அமைவை அக்சஸ் படிவத்தில் கொண்டுவர  முதலில் படிவத்தை பிரதிபலிக்க செய்க பின்னர் F1 என்ற விசையை கட்டுக உடன் உதவித்தலைப்புகள் உதவிக் காட்சித் திரையில் காட்சியாக விரியும்.

உள்ளடக்க அட்டவணையை பிரதிபலிக்க செய்தல்

உள்ளடக்க அட்டவணை உருவாக்கியிருந்தாலும் அக்சஸ் படிவத்ததில் F1என்ற விசையை அழுத்தியவுடன் எம் எஸ் ஆஃபிஸின் உதவி சாளரம்தான் (படம்-12) உடனடியாக திரையில் பிரதிபலிக்கும்

படம்-12

குறிப்பிட்ட பெட்டியை திரையில் பிரதிபலிக்க செய்யாது மேலும் அதற்கான வழிகாட்டு சாளரமும் தோன்றாது, இதனை தவிர்ப்பதற்கு HTML உதவி ஏபிஐ அழைப்பதற்கான விபி குறிமுறையை பின்வருமாறு உருவாக்க வேண்டும்.  இது HTML உதவிக்கோப்பிற்கு ஏபிஐ க்கான அறிவிப்பை செய்கிறது.  பின்னர் உதவி உள்ளீட்டு செயலியின் HTML உதவி ஏபிஐ க்கு கட்டளையிடுகிறது.படிவ உதவி கோப்பின் மாறியில் திரட்டுதல்(compile)  உதவி தேக்கிவைக்கப் பட்டதை பயன்படுத்தி கொள்வதற்கு உதவி அமைப்பை வரையறுக்கவேண்டும்

HTML உதவி ஏபிஐ அழைக்க வேண்டும் அதற்கான குறிமுறை-48-1 பின்வருமாறு

Public Sub Show_Help (HelpFileName As String, MycontextID As Long)

Dim hwndHelp As Long

Select Case MycontextId

Case Is = 0

hwndHelp =  HtmlHelp(Application.hwndAccessApp, HelpFileName,_

HH_DISPLAY_Topic, MycontexId)

Case Else

hwndHelp = htmlHelp(Application.hwndAccessApp,HelpFileName,_

HH_HELP_CONTEXT,MycontextID)

End Select

EndSub

HELP என்ற பொத்தானை தெரிவுசெய்து அழுத்தினால் உதவி வர வேண்டும் அதற்காக HELP என்ற பொத்தானை தெரிவுசெய்து  இயக்குவதற்கான கட்டளைகள் படம்-13-ல் உள்ளவாறு

இவ்வாறு செய்த பிறகே உதவி என்ற பொத்தானை தெரிவுசெய்து அழுத்தினால் உடன் ஏபிஐ மூலம் உதவி அமைப்பு அதற்கான வழிகாட்டுதல்களுடன் உதவிகாட்சி திரையில் காண்பிக்கும்.

படம்-13

அறிந்து கொள்வோம் அக்சஸ்-2003-தொடர் -பகுதி-47 விண்டோவில் உதவியை உருவாக்குவது

எந்த ஒரு பயன்பாட்டிலும் அதனை எவ்வாறு இயக்குவது என்ற ஆலோசனைகளை கூறும் ஆவனங்களை உதவி குறிப்புக்கள் என அழைப்பார்கள்.  இது பயன்பாட்டில் எந்த நிலையிலும் அந்த இடத்தில் எவ்வாறு செயல்படுவது என்று தடுமாறும்போது F1 என்ற செயலி விசையை அழுத்தி அதற்கான சொற்களை தட்டச்சு செய்தவுடன் தோன்றும் உதவி குறிப்புகளை அறிந்து  கொண்டு  அவ்வாறே செயல்படுவதற்காக இது உதவுகிறது,.

இதன்மூலம் குறைந்த முயற்சியில் குறிபிட்ட செயலை எவ்வாறு செயல்படுத்துவது என அறிந்து கொள்ளமுடியும். இதற்காக  துனுக்குகள் (bits and pieces) என்பது உதவுகிறது. இவை ஒன்றாக சேர்ந்ததை தலைப்பு (topic) என அழைக்கிறோம். ஒவ்வொரு தலைப்பும்  அதனுடன் தொடர்புடைய தகவல்களின் மூலம் இணைக்கப்பட்டிருக்கும்,

இந்த உதவி அமைப்பு உரைத்தலைப்பு அல்லது வரை படத்துடன் பல்லூடகமும் சேர்த்து அமைக்கப்பட்டதாகும். Hots photographics பயன்படுத்துவதுதான் சிறந்த பயன்பாடகும்,

கருவிபட்டையின் பயன்பாடு மற்றும் உதவி மூலம் விளக்கும் ஹாட்ஸ்கிராபிக்ஸ்  அல்லது ஹைகிராபிக்ஸ்     ஆகியவை  வரை படங்களாகும் இவை பல்வேறு பகுதியை இணைப்பதற்கு ஒதுக்கப்படுகின்றன. இவைகண்ணுக்கு புலப்படாதவை பயனாளர் ஒருவர் குறிப்பிட்ட பகுதியில் இடம்சுட்டியை வைத்திருக்கும்போது அதைப்பற்றி தெரிந்துகொள்ள F1 என்ற செயலி விசையை அழுத்தினால் போதும் உடன் உதவி கோப்பில் சேகரித்துதேக்கி வைக்கப்பட்டுள்ள உதவி குறிப்புக்கள் திரையில் தனிச்சாளரத்தில் தோன்றும்.

படம்-1

படம்-1-ல் உள்ளவாறு திரையில் தோன்றும்.இந்த  உதவி குறிப்புக்கள் மூன்று பலகங்களை கொண்டது,

1. வலதுபுறம் பிரதிபலிபப்து தலைப்பு பலகமாகும.இதில் நாம் தேடவிரும்பும் தலைப்புகள தொடர்பான தகவல்கள் பிரதிபலிக்கும்.

2. இடதுபுறம் வழிகாட்டிடும் பலகமாகும். இது நாம் விரும்பிய உதவிக்குறிப்பின் பக்கம் திரையில் தோன்றுமாறு பிரதிபலிக்கும்.

3. மூன்றாவதாக வின்டோவின் மேல்புறம் இருப்பது கருவி பட்டையாகும். இது நாம் விரும்பியவாறு வழிகாட்டிடும் பலகத்தை பிரதிபலிக்கசெய்வது மறையச் செய்வது அடுத்த தலைப்பிற்கு  நகர்ந்து செல்வது அல்லது பிந்தைய தலைப்பிற்கு செல்வது போன்ற செயல்களை செய்ய உதவும் கருவிகளை கொண்டது

இதுமட்டுமல்லாது Stop, Refresh,Locate மற்றும் Home ஆகிய பொத்தான்கள் இதில் உள்ளன.  வழிகாட்டிடும் பலகத்தில் உள்ள Search என்ற தாவிபொத்தானை அல்லது Index ஐ உள்ளடக்குவது அல்லது விட்டுவிடுவது ஆகிய காட்சி தோற்றத்தை  நாம்விரும்பியவாறு  செய்யமுடியும் .  எது எவ்வாறாயினும் ஒவ்வொரு உதவி அமைப்பும் தனித்தனி உள்ளடக்க தாவி பொத்தான்களை கொண்டுள்ளது, இவற்றை பயனாளர்  ஒருவர் தெரிவுசெய்து சொடுக்கியுடன் தொடர்புடையை பயன்பாட்டின் உதவிபட்டியை திரையில் காணமுடியும்.

content tab என்ற இதுஉதவி அமைப்பின் உள்ளடக்கமாகும், இது ஒரு புத்தகத்தின் உள்ளடக்கங்களுக்கு சமமானதாகும்.  இந்த உள்ளடக்க தலைப்புகளுக்கு துணைத் தலைப்புகள் இருக்கும் அவற்றை பிரதிபலிக்க செய்ய இதன் முக்கிய தலைப்பை தெரிவுசெய்து இருமுறை சொடுக்கினால் போதும். உடன் இந்த பட்டியலில் உள்ள  ஒரு தலைப்பில் ஒன்றை  பற்றி மட்டும் தெரிந்து கொள்ள  குறிப்பிட்ட உதவித்தலைப்பை இடம்சுட்டியால் தெரிவுசெய்து இருமுறை சொடுக்குக பின்னர் இதற்கு துனைத்தலைப்பு இருந்தால் அதனை இருமுறை சொடுக்கினால் தொடர்புடைய உதவி குறிப்புகள் வலதுபுற பலகத்தில் பிரதிபலிக்கும் Display என்ற பொத்தானை சொடுக்கினால் தொடர்புடைய உதவித்தலைப்பை திரையில் காண்பிக்கும்.

Topic pane இது உதவித்தலைப்புகள் உதவிஅமைப்புடன்  ஒருங்கிணைந்ததாகும்.  இவைகளை இந்த  உதவிப்பலகத்தில் பிரதிபலிக்கச் செய்கிறது.  இந்த பலகத்தில் குறிப்பிட்ட தகவல் தொடர்பான தலைப்பும் அதனுடன் தொடர்புடைய இணைப்புகளுடன் Zoom text, graphics,animation,sound போன்றவை அமர்ந்திருக்கும்.

மைக்ரோசாப்ட் ஆபிஸ்ஆனது மைக்ரோசாப்ட் HTML உதவிப்பணிமனை சேர்ந்த உதவிக் குறிப்புகளை கொண்டுள்ளது,இந்த HTMLஉதவியானது நேரடியான மைக்ரோஷாப்ட்  winhelp 4,0 அடிப்படையில்  உள்ளது, இதனை பற்றி அறிந்துகொள்ளு முன்பு  HTML  உதவி மற்றும் HTML உதவிப்பணிமனை ஆகியவற்றை பற்றி நன்கு அறிந்திருக்கவேண்டும்,

இதுபோன்று தலைப்பு உள்ளடக்கங்கள், உருவப்படங்கள், மற்றும் இதர மூலகோப்புகளிலிருந்து  உருவாக்கப்பட்ட செயல்திட்ட கோப்புகள் பயனாளருக்கு பெரிதும் உதவுகிறது,

விபி குறிமுறைகளிலிருந்து HTML உதவி பயன்பாட்டில் ஏபிஐ அழைத்து  இதில் பணிபுரியலாம்

எல்லாம் சரிஇந்த விண்டோ உதவிஅமைப்பினை எவ்வாறு உருவாக்குவது என இப்போது காண்போம்,

முதலில் HTML க்குள்  உங்களுடைய உதவித்தலைப்புக் கோப்புகளை எழுதி உருவாக்கவேண்டும்,அதன்பின் வேர்டு அல்லது வேறு  பயன்பாட்டுகருவிகளை கொண்டு இந்த HTMLகோப்புகளையும்  இதனுடைய HTML 3,2 பதிப்பு மூலகுறிமுறைகளையும்  நம்மால் உருவாக்கமுடியும்,

பின்னர் உதவிசெயல்திட்ட கோப்பினை(.hhp) உதவிஅமைவுடன் இடைமுகம் செய்வதை நிருவகிப்பதற்காக உருவாக்க முடியும், அதன்பின் தலைப்பு , வரைகலை, உள்ளடக்கங்கள்(.hhc), பட்டியல்கள் (.hhk) மற்ற இதர மூலக் கோப்புகளை உருவாக்கலாம்,

விண்டோவையும் மற்றும் அதனுடைய பாவணைமையும் வரையறுத்து இதில் இந்த உதவி குறிப்புகள் எவ்வாறு அமையவேண்டும் என்று உருவாக்கமுடியும்,

இவ்வாறு உருவாக்கிய தலைப்புகளடங்கிய தொகுதிகளாக  அவற்றுள் ஒன்றை பிடித்தால் தொடர்புடைய தகவல்களை காண்பிப்பதற்கான வழிகாட்டும் அட்டவணையை தனியான கோப்பாக உருவாக்கலாம்,

இந்த தலைப்பு தொகுதிகளை வரிசையாக அடுக்கி பிரதிபலிக்க பட்டியல் கோப்புகளை தனியாக உருவாக்கலாம்,

HTML help Active X control ஐ பயன்படுத்தி  இந்த உதவி கோப்பை மொழிமாற்றம் கம்பைல் செய்யலாம்,

கடைசியாக உதவி அமைவை பரிசோதித்து பார்க்கவேண்டும்,

உதவி தலைப்பை  உருவாக்குதல்

உதவிக்கோப்பின் அடிப்படை உதவித்தலைப்பு மட்டுமே , இது HTML  மொழியின் .htm என்ற பின்னொட்டுடன் உருவாக்கப்படுகிறது,

ஒவ்வொரு உதவித்தலைப்பு அல்லது இணையபக்கம் ஆகியவை உரை , வரைகலை, அசைவூட்டம், உருவப்படம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டதாகும்,

ஆயினும்  இது HTML -இன் வடிவமைப்பின் சிறப்பு குறிமுறைகளால்ஆனது,

இந்த சிறப்பு குறிமுறைகளை tags என அழைப்பார்கள்,இது எவ்வாறு ஒவ்வொரு தலைப்பும் பிரிதிபலிக்கவேண்டும் என தேடுபொறியிடம் அறிவுறுத்துகிறது, இதில் உரை மட்டுமே பிரிதிபலிக்கும் மற்ற வரைகலை, அசைவூட்டம், உருவம் ஆகியவை தனியான HTML ஆக தோன்றும்,

இதன் தலைப்புகளை தட்டச்சு செய்வதற்கு முன்பு ஒரு பட்டியலில்  அனைத்து உதவித்தலைப்புகளையும் வரையறுத்துவிடவேண்¢டும்,, இது நிலை1 அவுட்லைனாகும்,

இதற்கு கீழே இதனுடைய துணைத்தலைப்புகளை  வரையறுத்து விடவேண்டும்,, இது நிலை2 அவுட்லைனாகும்,

அதன்பின்னர் இந்த தலைப்பு துணைத்தலைப்புஆகியவை தொடர்பான விவரங்களை தட்டச்சு செய்யவேண்டும், இவ்வாறான வழிமுறையில் சாதாரணமான முயற்சியில் உதவிக்குறிப்புகளை உருவாக்கலாம்,

உதவித்தலைப்புஒவ்வொன்றிற்கும் தனித்தனி HTML கோப்புகளை உருவாக்குவது சுலபமான செயலாகும், இவ்வாறு வெவ்வேறு கோப்புகளாக தனித்தனி தலைப்புகளுக்கும்¢ HTML உதவியை  வடிவமைத்து உருவாக்கப்படுகிறது,அதன்பிறகு இந்த தலைப்புகளை ஒன்றிணைந்த ஒரு தலைப்பு கோப்பாக உருவாக்கவேண்டும்,

பின்வரும் வழிமுறையில்இதனை செய்யமுடியும்,

1.   மைக்ரோ ஷாப்ட் வேர்டில் ஒரு புதிய ஆவணத்தை உருவாக்குக,

2.   அதில் தலைப்பு பெயராக பிரிதிபலிக்கவேண்டிய உரைகளை தட்டச்சுசெய்க,

3.   தலைப்பு பகுதி ஒவ்வொன்றும் தனித்தனியாக இருப்பதற்காக வேர்டில் உள்ள insert =>Break => page break என்றவாறு தெரிவுசெய்துஅமைத்திடுக,

4.   இந்த கோப்பினை ஒரு இணையபக்கமாக (படம்-2)சேமித்திடுக,

படம்-2

உதவிசெயல்திட்டகோப்பு ஒன்றினை உருவாக்குதல்

இவ்வாறு தலைப்பை உருவாக்கியபிறகு ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக ஒரு HTML உதவிசெயல்திட்ட கோப்பினை .hhp போன்ற பின்னொட்டுடன் அந்த கோப்பினை உருவாக்கவேண்டும்,  இதற்காக பின்வரும் படிமுறைகளை பின்பற்றவும்,

1)   HTML உதவி பணிமனையை திறந்து கொள்ளவும்,

2)   File=> New=> Project என்றவாறு தெரிவுசெய்து கொள்க ,உடன் புதிய செயல்திட்ட வழிகாட்டி திரையில் விரியும்,

3)   அந்த வழிகாட்டியின்  பக்கங்கள் கூறும் ஆலோசணைகளை பின்பற்றவும்,

4)   New project-Exixting Files  என்ற வழிகாட்டியில் படம்-3-ல் உள்ளவாறு HTML File(.htm) என்ற தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்க,

படம்-3

5)   உடன் New Project-HTML Files  என்பது திரையில் பிரிதிபலிக்கும் (படம்-4) , அதில் ADD என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக, அதில் HTML கோப்பை தெரிவு செய்த பிறகு Next என்ற பொத்தானை தெரிவுசெய்து  சொடுக்குக,

படம்-4

6)   இறுதியாக தோன்றும் பெட்டியில் finish என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.  உடன் படம்-5-ல் உள்ளவாறு New help project கோப்பு பிரதிபலிக்கும்.

படம்-5

 7,இதில் குறைந்த பட்ச அமைவுகள் தானாகவே சேர்க்கப்படிருக்க வேண்டும். இந்த செயல்திட்ட கோப்பு  பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும் files, option ஆகியவை போன்று இந்த பகுதிகளை தெரிவுசெய்து சொடுக்குவதன்மூலம் இதனை வடிவமைப்பு செய்யமுடியும்.

தலைப்புகளுக்கு வரைபடத்தை சேர்த்தல்

உதவித்தலைப்புகள்  மேஜைக்கணினியில் உருவாக்கப்பட்டதாயினும் வரைபடங்களும் உருவப்பட்டங்களும் சேர்த்து உருவாக்க பட்டிருக்கும் HTML கோப்பில் பின்வரும் படிமுறைகளை பின்பற்றி வரைபடத்தை உள்ளிணைக்க முடியும்.

1.வரைபடம் தோன்ற வேண்டிய இடத்தில் இடம்சுட்டியை நிறுத்தி சுட்டியின் வலதுபுற பொத்தானை இருமுறை சொடுக்குக,

2.உடன் தோன்றும் பட்டியலிலிருந்து Insert=>Picture என்றவாறுதெரிவுசெய்க, உடன் தோன்றும் படகோப்புகளிலிருந்து தேவையானதை  தெரிவுசெய்க

3.உடன் தோன்றும் Image கோப்பினை தெரிவு செய்து உள்ளிணைப்பு செய்க.

Help Project வாய்ப்பை அமைத்தல்

முதலில் செயல்திட்டத்திற்கான வாய்ப்பை வரையறுத்துவிடுக.  HTML உதவிப்பணிமனைத்த் திரையில் உள்ள Change Project Option என்ற என்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக. உடன் தோன்றும் Option என்ற உரையாடல் பெட்டியில்  General மற்றும் files ஆகிய இரு தாவிகள் உள்ளன.

General  தாவியின் பொத்தானை அமைத்தல்

இப்போது தோன்றும் திரையில் General  தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இதில் உள்ள title என்பதில் உதவி அமைவின் தலைப்புTopic பெயரை உள்ளீடு செய்க Default file என்பதில் நம்முடைய HTML கோப்பின் பெயராக மாறுதல் செய்க.

file  தாவியின் பொத்தானை அமைத்தல்

அதன்பின்னர்தலைப்பில் உள்ள file என்ற  தாவியின் பொத்தானை சொடுக்குக இதில்

(படம்-6)

Complied file:நாம் உருவாக்கப்போகும் கோப்புகள் கம்பைல் செய்யும் போது CHP எனும் பின்னொட்டுன் உருவாக்க வேண்டிய கோப்பின் பெயராக உள்ளீடு செய்யவேண்டும்

Log file: சிறிய கோப்பாக இருந்தால் இந்த பெட்டியை பூர்த்திசெய்யாது விட்டுவிடலாம் பெரிய கோப்பாக இருந்தால் கம்பைல் செய்யும் போது எழும் பிழைகளை சுட்டிகாட்ட உதவும் கோப்புகளின் பெயரை  இதில் குறிப்பிடவேண்டும்.

Contents files: இது உள்ளடக்கத்தின் பட்டியல் பெயராக அதன் வழியுடன் அடங்கியது

Index file:இது உதவி  கோப்பு தலைப்புகளை அடுக்கி வைத்திருப்பது.

படம்-6

வின்டோவை வரையறுத்தல்

உதவிகாட்சியானது முன்று பலகங்களால் கட்டப்பட்டது என முன்பே அறிந்து கொண்டோம்.  இதில் புதியதாக பலகம் ஏதும் உருவாக்க முடியாது ஆனால் இருப்பதை வாடிக்கையாளர் விரும்பத்தின் மூலம் மாறுதல் செய்ய முடியும் இவ்வாறு மாறுதல்செய்ய  வின்டோவின் நிலை,பின்புல வண்ணங்கள் மற்ற மதிப்புருக்களை(attribute) வரையறுக்கவேண்டும், பின்வரும் படிமுறை இதற்கு உதவுகிறது

படம்-7

1,செயல்திட்ட உருவபடத்தில் உள்ள Add / Modify window Diffinition என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் முதல் வின்டோவில் வரையறுத்தலை சோ¢க்கும்போது படம்-7-ல் உள்ளவாறு  Create a window type named என கேட்டு நிற்கும்.  அதில் main என தட்டச்சு செய்து OK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.  உடன் படம்-8-ல் உள்ளவாறு window type என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றும்.

படம்-8

2.அதில் உள்ள General  தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக படிமுறை 1 ல்குறிப்பிட்ட Main என்பதை window typing-ல்  காண்பிக்கும்.  Title bar text பெட்டியில் இந்த மெயின் வின்டோவிற்கு ஒரு பெயரிடுக.

3.பின்னர் Navigation  தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் பெட்டியில் windows with Navigation pane Topic pane and Button என்ற தேர்வுசெய்பெட்டியை  தெரிவுசெய்க.

4.Search Tab, Auto Sync ஆகிய வாய்ப்புகளும் (படம்-9) தெரிவுசெய்யப்பட்டுள்ளதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

5.இறுதியாக Ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

படம்-9

உடன் HTML உதவிபணிமனையானது இந்த செயல்திட்ட வாய்ப்புகளை நாம் தெரிவு செய்த புதிய வின்டோவின் வரையறுத்தலை சரிபார்க்கும்.  ஏதாவது தவறான  Definition இருந்தால்  Resolve window Definition wizard என்பது தோன்றும்.

அறிந்து கொள்வோம் அக்சஸ்-2003-தொடர்-பகுதி-46-அக்சஸில் விண்டோ ஏபிஐ யின் உபயோகம்

   பொதுவாக விண்டோ இடைமுகத்தின் விரிவாக்கமாக செயல்படும் குறிமுறை நூலக தொகுப்பினையே விண்டோ ஏபிஐ என அழைக்கின்றனர்.  அக்சஸானது தயார் நிலையில் உள்ள இந்த நூலக விண்டோ ஏபிஐ யை பயன்படுத்தி நமக்கு விண்டோ செயல்களை சுலபமாக்குகிறது.  செயலிகளுடன் உள்ள இந்த ஏபிஐ நூலகத்தின்மூலம் புதிய சாளரத்தை உருவாக்குவது, அமைவு வளங்களை சரிபார்ப்பது, தொடர்புகளுடன் பணிபுரிவது, பயன்பாடுகளுக்கு செய்தியை அனுப்புவது, .ini கோப்புகளை கட்டுப்படுத்துவது, பதிவேட்டை Registery அணுகுவது,  போன்ற மற்ற பணிகளை செய்வதற்கு பெரிதும் அக்சஸ் உதவுகிறது.

இந்த செயலிகள் விண்டோவின் அகப்பணிகளை நேரடியாக தொடர்பு கொண்டு செயல்படுத்துகிறது.அக்சஸும் விபஏவும் ஒளிமறைவற்ற தன்மையுடன் தொடர்பு கொள்ள உதவினாலும்.  விண்டோ ஏபிஐ ஆனது “C” மொழியில் குறிமுறைகளை எழுதாமல் செயல்படுத்த முடியாத நிலையில் உள்ளது.அதனை சரிகட்டுவதற்காக அக்சஸின் விபஏவில் நூற்றுக்கணக்காக செயலிகள்  பயன்படுத்த ஏதுவாக தயார்நிலையில் உள்ளன,  இவை எவ்வாறு எப்படி வேலை செய்கின்றது என்று மட்டும் தெரிந்து கொண்டால் போதும்.

இவைகள் இயக்க நேர இணைப்பு நூலக கோப்புகள் DLLS, அல்லது .dll ஆகும், ஆனால் இவைகள் .exe, .drv விரிவாக்க கோப்பாக அமைந்திருக்கின்றன.  இயக்க நேர இணைப்பு Dynamic links என்பது நம்முடைய பயன்பாட்டை செயல்படுத்துவதற்கான அதிக குறிமுறை இல்லாத செயலிகளை இயக்குவதற்கான ஒரு வழியாகும். இதில்  குறிமுறைகள் மொழிமாற்றம் செய்யப்பட்டு இறுதியாக செயல்படுத்துவதற்கு ஏதுவாக .exe பின்னொட்டுடன் இவைகள் உருவாக்கப்படுகின்றன.

நூலகத்துடன் கட்டுண்ட பயன்பாட்டை செயல்படுத்தும் கோப்புகளுக்கு நிலையான இணைப்பு Static links ஐ செயல்படுத்தும் முன்பே கட்டுண்டது early bindingஆகும், இந்த Static இணைப்பானது கடினமான குறிமுறைகளால் ஆனது நிருவகிப்பது மிக கடினமானதாக உள்ளது.  இந்த வகை செயலானது பல பயன்பாடுகளில் உள்ளினைந்தே இருக்கின்றது.  இவைகள் உங்களுடைய வன்தட்டில்(¢Hard disc)தமக்கு தேவையான அளவு முழு இடத்தையும் ஆக்கிரமித்துகொள்ளும். மேலும் கூடுதலாக பயன்பாட்டை  புத்தாக்கம் செய்ய விரும்பினால் இந்த exe கோப்புகளை முழுவதும் மேம்படுத்த வேண்டியுள்ளது.  ஆனால் இயக்க நேர இணைப்பானது குறிப்பிட்ட இடத்தின் நூலகத்தை தேக்கிவைக்க அனுமதிக்கிறது.  பின்னர் இயக்க நேரத்தில்  தேவைப்படும்போது மட்டும் செயலிகளை மேற்கோளாக எடுத்துகொள்கிறது. இதனை Late binding   என அழைக்கப்படுகிறது  இது செயல்படுத்தும்போது மட்டும் கட்டுண்டது ஆகும்

DLL-ன் சில பயன்பாடுகள்

1 நினைவகத்தில் குறிமுறையை தேவையற்றதாக ஆக்குகிறது.  இயக்க நேர நூலகத்தை அழைக்கும்போது பயன்படுத்தும் நேரத்தில் மட்டும் குறிமுறையானது நினைவகத்தில் வந்து அமர்ந்து பணியாற்றிவிட்டு செல்கிறது.  பின்னரி நினைவகம் ஆனது பழைய நிலையிலேயே இருக்கிறது.

2 பயன்பாட்டின் புரவலராக செயல்படுவதால் குறிப்பிட்ட குறிமுறைகளை பயன்பாடுகளில் பயன்படுத்த வேண்டியபோது DLL-லில் இதனை இணைத்துவிட்டு பின்னர் அந்தந்த பயன்பாடுகளில் இந்த குறிமுறையை அழைத்தால் மட்டும் வந்து நம்முடைய தேவையை  புரவலர் போன்று முழுவதும் நிறைவேற்றிவிட்டு செல்கிறது.

3 இந்த குறிப்பிட்ட குறிமுறையை DLL ல் மட்டும் புதுப்பிக்க செய்தல், புத்தாக்கம் செய்தல் போன்றபணிகளை ஒவ்வொரு பயன்பாட்டிலும் சென்று செய்ய தேவையில்லை..

ஏன் விண்டோ எபிஐ யை பயன்படுத்த வேண்டும்

1 விண்டோவில் உள்ள வேர்டு, எக்செல், பவர்பாயிண்ட்,  அக்சஸ் போன்ற பயன்பாடுகளை இயக்கும்போது இவைகளில்  பொதுவான ஒருசில செயல்களுக்காக கட்டளைதொடர்கள், விபிஏ குறிமுறைகள் போன்றவை ஏராளமாக தேவைப்படுகின்றன.  இவைகளை பொதுவான DLL ஆக விண்டோ ஏபிஐ-ல் பொது நூலக விதிமுறைகளாக ஆக்கப்பட்டு எப்போதும் பயன்படுத்துவதற்கு ஏதுவாக தயார்நிலையில் வைக்கபட்டுள்ளன.  குறிப்பிட்ட கட்டளையை செயல்படுத்துவதற்காக அதற்கான பட்டியை மட்டும் பிடித்தால் போதும் உடன் தொடர்புடைய கட்டளையின் குறிமுறைகள் DLL லிருந்து ஏபிஐ மூலம் செயல்படுத்தப்படுகிறது.

2 இவைகள் அவ்வப்போது பரிசோதிக்கப்பட்டு நிரூபிக்கப்படவேண்டுமா?.

விண்டோ ஏபிஐ  நூலகத்தில் உள்ள கட்டளைகள் அனைத்தும்  பரிசோதிக்கப்பட்டு நன்றாக செயல்படுகிறது என நிரூபிக்கப்பட்டதாகும்.  அதனால் இவைகள் நாம் புதியதாக உருவாக்கும் எந்த ஒரு செயல்திட்டத்திற்கும் பயன்படுத்தி கொள்ளலாம் இவ்வாறாக இணைக்கப்படும் விண்டோ ஏபிஐ  நூலக கட்டளை தொடர்களை மீண்டும்  ஒருமுறை பரிசோதிக்கத் தேவையில்லை.

3    தளங்களுக்கு இடையே ஒத்திசைவு

பெரும்பாலான தளத்தின் Win32 ஏபிஐ  அறிவிக்கைகள் அனைத்து தளங்களிலும் பயன்படுத்த ஏதுவாக தயார் நிலையில் உள்ளன.  இவைகள் பயனர் அடிப்படையில் நம்முடைய குறிமுறைகளில் பயன்படுத்த ஏதுவாக உள்ளன.

4 நாம் புதியதாக உருவாக்கும் குறிமுறைகள் இந்த இயக்க நேர நூலகத்தில் இருந்து செயலிகளை பயன்படுத்தி கொள்வதால் இந்த செயலிகளுக்கான குறிமுறைகள் தேவையற்றதாகிறது, ஆனால் நம்முடைய குறிமுறைகளுக்கு குறைந்த அளவே நினைவகத்தில் இடம் இருந்தால் போதும்.

DLL ஆவணங்கள்: பெரும்பாலான விண்டோ DLL செயலிகள் “C” மொழியின் செயலிகளுடன் உள்ளினைக்கப்பட்டுள்ளன.

இவைகளை எங்கேயும் காணமுடியும் இவைகள் Software development kits (SDK) ODBL, MAPI WIN32  ஆகியவற்றின் உள்ளடக்கங்களாக உள்ளன.

தரவு வகைகள் Data Types: விண்டோ ஏபிஐ யில் தரவு வகைகளை புரிந்து கொள்வது சிறிது கடினமான பணியாகும்.  பல புத்தகங்கள் மற்றும் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் செந்தர ஆவணங்களும், தரவு வகைளை விளக்குவதற்காக வெளியிடப்பட்டுள்ளன.

பின்வரும் அட்டவணையில் “C” மொழியின் தரவுவகைகள் அதற்குசமமான அக்சஸ் விபிஏ தரவுவகைகள் கொடுக்கப்பட்டுள்ன

அட்டவணை 46-1

 

C TYpe

VBA Type

Char

String

Short

Integer

Int

Long

Long

Long

Float

Single

Double

Double

UNIT

Long

ULONG

Long

USHORT

Integer

UCHAR

String

DWORD

Long

BOOL

Boolean

BYTE

Byte

WORD

Integer

HANDLE

Long

LPSTR

No equivalent

LPTCSTR

No equivalent

இவைகள் SDK மற்றும் ஏபிஐ ஆகியவற்றில் உள்ள விபஏவில் மேற்கொள்களாக எடுத்து காட்டுவதற்கு பயன்படுகின்றன.

பட்டி 46-1

DWORD GetPrivateProfileString (

LPCTSTR lpszSection,       // points to section name

LPCTSTR lpszKey,          // points to key name

LPCTSTR lpszdefault,       // points to default string

LPCTSTR lpszreturnBuffer,   // points to destination buffer

DWORD  cchReturnBuffer,   // size of destination buffer

LPCTSTR lpszFile            // initialization file name

);

பட்டி 46-1 இல் அறிவிக்கப்பட்ட  வகை உருமாற்றம் செய்யப்பட்டு விபிஏ வகையாக பட்டி-46-2 இல் கொடுக்கப்பட்டுள்ளன,

பட்டி 46-2

Declare Function GetPrivateProfileStringA lib “Kernel32”( _

ByVal lpszSection as string , _

ByVal lpszKey as string, _

ByVal lpszDefault as string, _

ByVal dwReturnBuffer as long, _

ByVal cchReturnBuffer as long, _

ByVal lpszFile as string) as long

 

இவை இரண்டுபட்டிகளின் மூலம் Get private profile string செயலிகள் “C” மொழியிலும் அதற்குசமமான விபஏவிலும் தரவு வகைகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளன என அறிற்துகொள்ளலாம்.

இந்த விண்டோ ஏபிஐ யில் உள்ள கட்டளைகளில் பொதுவான முனனொட்டுடன் Prefix அனைத்து ஆவணத்திலும் பயன்படுத்தப்படுகின்றன அவற்றிற்கான அட்டவணை பின்வருமாறு

அட்டவணை 46-2

 

Prefix C Data Type VBA Data Type
Lpsz LongPointer to a null

Terminated string

String
Dw DWORD Long
W WORD Integer
Hwnd HANDLE Long
B BOOL Long
l LONG Long

 

 

ஏபிஐயுடன் இதனை ஏன் செயல்படுத்த முடியாது?

இந்த சொற்களை பார்த்தவுடன் அனைவரும் தங்களின் சொந்த DLL ஐ பயன்படுத்தி அனைத்து கட்டளைவரியிலும் புகுந்து சரிசெய்து இவையனைத்தையும் செயல்படுத்த முடியும் என நிரூபித்து உள்ளனர். ஆனால்  விண்டோ ஏபிஐ யிலிருந்து விபரவிற்கு உருமாற்றம் செய்யபடும்போது Call back  போன்ற செயலிகளை செயல்படுத்த கடினமாகிறது.

விண்டோ ஏபிஐ யின் பயண்பாடுகள்

விண்டோ எபிஐ செயலிகளை பற்றி பொதுவில் அறிந்து கொணடபின் அக்சஸின் விபஏவில்   இவைகளை எடுத்துக் கையாளலாம்.

1.Declare என்ற கூற்று அறிவிப்பு செய்ய பயன்படுகிறது.

2.செயலி (Function) அல்லது துணைச்செயலி (Sub function or sub routine)ஆகியவை மற்றொரு செயலியை அழைக்கப்பயன்படுகிறது,

3.இந்த செயலியானது GetPrivateProjfileString என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

4.இதன் நூலக பெயரான Library Name Lib என்ற சொல்லும் DLL  என்ற விண்டோ API செயலி அல்லது துணைச்செயலியில் இரட்டை குறிக்குள் Kernal 32 குறிக்கப்படுகிறது.

5.ஆனால் இதனை  நம்முடைய விபர குறிமுறைக்குள் நேரடியாக அழைக்கமுடியாது,  அதற்காக அதற்கு சமமான பொருளை அழைப்பதற்கு Alias என்ற கூற்றுடன் பின்வரும் கூற்றில் அதே Get private profifle string என அழைக்கப்படுகிறது.

Declare  Function APIGetPrivateProfileString _

டib  “ Kernel32”  Alias “ GetPrivateProfileStringA”

மதிப்புரு பட்டியல் Aguement list: ஒருசெயலியை அறிவிப்பு செய்யும்போது ஆவணங்களில் குறிப்பிட்ட இதே செயலியை அறிவிப்பு செய்யப்பட வேண்டும். இல்லையெனில் இயக்கநேர பிழைச்செய்தி error 49: bad DLL Calling convention என்று கிடைக்கும்.  ஏபிஐ செயலியிலும் இதே பிழை தோன்றும்.  இதனால் உங்களின் விண்டோ  பயன்பாடான அக்சஸானது உடன் தொக்கி(crash) நின்றுவிட வாய்ப்பு உள்ளது.  அதனால் நம்முடைய பயன்பாடுகளின் மதிப்புரு பட்டியலின்சரியான தரவு வகையாக நூலக மதிப்புருவின் பெயரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை குறிப்பிட வேண்டும்.

By val or By Ref என்ற கூற்றுகள் மதிப்புரு பட்டியலை ஒரு கூற்றை அறிவிப்பு செய்ய ஒதுக்கீடு செய்யும்போது இதனை ஏபிஐ ஆனது எவ்வாறு பெற்றுக்கொள்கின்றது என முடிவு செய்ய  வேண்டும்.  இயல்பு நிலையில் அக்சஸானது By reference  உடன் ஒரு மதிப்புருவை கடத்துகிறது. செயலிக்கு மாறியின் நினைவக முகவரியை அழைக்கப்படும்போது அக்சஸ் கடத்துகிறது.  செயலியால் இந்த நிலை முகவரியை பெறும்போது முகவரியில் தேக்கிவைக்கப்படும் மதிப்பை விரும்பியவாறு அல்லது விரும்பாதவாறு.மாற்ற முடிகிறது.  அதற்கு பதிலாக By value என்பதற்¢கு முன் அக்சஸானது மதிப்பை கடத்தும்போது செயலிகளுக்கு தேவையான மதிப்பை மட்டும் பெற்று செயல்படுத்துகிறது.பொதுவாக By ref ஐ விட By value என கடத்துவதே சிறந்த செயலாகும்.  நாம் எதிர்பார்க்கும் இறுதி விடைகிடைப்பதற்கு இது உதவும்.

தரவு வகைகள் As Data Type :எதேனும் ஒரு ஏபிஐ ஒரு சார்பை/செயலியை அழைத்து மதிப்பை திருப்பும் ஆனால் துணைச்செயலி அவ்வாறு திருப்பாது.

அதனால் துணைச்செயலியில் திரும்பவரும் தரவின் வகையை குறிப்பிடத் தேவையில்லை.  நம்முடைய பயன்பாட்டில் உபயோகப்படுத்தும் மதிப்பையே செயலியிலும் திருப்பும் என எதிர்பார்க்கலாம்.  அல்லது பிழைச்செய்தியின் எண்களை வெளியிடும்.  இந்நிலையில் பிழைகளை கையாளும் துணைச் செயலியையே  அழைக்கலாம்.

ஏபிஐ செயலியின் ஆவனத்தில் குறிப்பிட்டுள்ள தரவு வகைகளுடன் நாம் குறிப்பிடும் வகை மதிப்பை திருப்புவது பொருத்தமாகஅமைய வேண்டும்.

Wrapper செயலியை பயன்படுத்துதல்:ஏபிஐ செயலியில் நேரடியாக நிரல்தொடர் இருப்பது அரிதான செயலாகும் ஏபிஐ நமது சிக்கலான தருமதிப்பிற்காக அடிக்கடி அழைக்கப்படுகிறது.   திருப்பப்படும் மதிப்பு பயன்படும் முன்பு அடிக்கடி பெரும்பாலான ஏபிஐ செயலியில் தேவையான பொருள் விளக்கம் தர வேண்டியுள்ளது.

இதனை தீர்வு செய்ய பெரும்பலான நிரலர்களால் Wrapper என்னும் செயலியை பயன்படுத்துகின்றனர்.  பொதுவான கூற்றுக்கு இந்த Wrapper செயலியானது வேறு சாதாரணமான விபிஏ செயலியாகும்.  இது  தேவைப்படும் அனைத்து அளபுருக்களுடன்(parameter) ஏபிஐ அழைப்பதை வழங்குகிறது.  அது மட்டும் இன்றி பயன்பாடு உபயோகிக்க தக்க வகையில் தகவல்களை ஏபிஐ செயலியில் மதிப்பை பெயர் மாற்றம் செய்து திருப்புகிறது.

நம்முடைய விபிஏ குறிமுறையானது முதலில் ஏபிஐ செயலியை அழைக்கின்றது. பின்னர் ஏபிஐ செயலி திருப்பும் மதிப்பின் அடிபடையில் Wrapper செயலியும் அதே மதிப்பை திருப்புகிறது.

Hwnd என்றால் என்ன?

பல விண்டோ ஏபிஐ செயலியில் Hwnd என்ற அளபுருக்களை(parameter) பயன்படுத்துகின்றனர்.  கணிப்பொறி திரையில் வரைபட பொருளை Hwnd ஆனது ஒரு முழு எண் மதிப்பை சாளரத்தில் பயன்படுத்தி பாதுகாக்க செய்கிறது.  ஒவ்வொரு சாளரம், பொத்தான், உரைப்பெட்டி, போன்ற பொருட்களும் hwnd மதிப்பை பெற்றுள்ளது. ஏபிஐ செயலியின் இயக்கத்திற்கு முன்பு இந்த hwnd மதிப்பை தேவைப்படும் அளவிற்கு அழைக்கிறது.  மைக்ரோ சாப்ட் நிறுவனம் கூட இந்த மிகச் சுலபமான hwnd மதிப்பை பெரும்பலான அக்சஸ் பொருட்களின் பயன்படுத்தி கொள்கிறது.  பல அக்சஸ் பொருட்கள் தங்களின் பயன்பாடுகளில் hwnd ஒன்றாக உள்ளினைத்து கொள்கிறது.  நம்மால் இதனை பண்பியல்பு சாளரத்தில் காணமுடியாது.  ஆனால் பண்பியல்பில் hwndஒன்றினைந்துள்ளது.

txt Last Name hwnd இதில் அழைக்க தேவைப்படும் மிக முக்கிய மதிப்பீடு hwnd ஒரு கட்டுபாட்டில் கடத்துகிறது.

அமைப்பு தகவல்களை மீளப்பெறுதல்

விண்டோ அமைவு கணிப்பொறியில் இயங்கும்  வன்பொருள் (Hrdware)மற்றும் மென்பொருள் (Software) பற்றிய தகவல்களை மீளப் பெறுவதற்காக இந்த ஏபிஐ ஆனது பல செயலிகளை நமக்கு வழங்குகிறது.  வன்தட்டில் இடம் இல்லை (no space in hard disc),  CD யிலும் நகல்எடுக்க முடியவில்லை என்பது போன்ற பிரச்சனைகளுடனான தகவல்களை அறிந்து கொண்டு இதனை தவிர்க்க முயற்சிக்கலாம்.

விண்டோ மற்றும் தற்காலிக இயக்ககங்களின் (directory)இடத்தை தெரிந்து கொள்வதற்காக இந்த செயலிகள் ஒருவாறு தக்க தகவல்களை வழங்குகிறது.

GetWindow Directory A

இந்த சரத்தை முடக்கும்போது தேக்கி வைத்து சாளரத்திற்கு பாதையை  Get Window Directory A மீளப் பெறுகிறது.

எடுத்துக்காட்டு

Declare Function apiGetWindowDirectory _

Lib “Kernel32” _

Alias “GetWindowsDirectoryA” (_

ByVal lpszReturnBuffer As String,_

ByVal lpszBufferSize As Long) as Long

முடக்கிருப்பில் (Buffer) நகலெடுக்கப்பட்ட சரத்தினுடைய நீளத்தின் மதிப்பை திருப்புகிறது. முடக்கிருப்பானது போதுமானதான நீளத்திற்கு மேல் இல்லையெனில் தேவையான நீளத்திற்கு மட்டும் மதிப்பை திருப்புகிறது.  செயலியானது செயலிழந்து போனால் மதிப்பு பூஜ்ஜியம் ஆக திருப்புகிறது.

பின்வருபவை GetWindowsDirectoryA யின் ஏபிஐ செயலியை பயன்படுத்தி கொள்ளும்  Wrapper என்ற செயலியாகும்

Function GetWindowsDirectory ( ) As String

Dim WinDir As String * 255

Dim WinDirSize As Long

Dim ErrNumber As Long

WinDirSize = Len(WinDir)

ErrNumber =  apiGetWindowsDirectory(WinDir, WinDirSize)

If ErrNumber > 0 Then

GetWindowsDirectory = Lefts $(WinDir ,ErrNumber)

Else

GetWindowsDirectory = vbNullString

End If

End Function

இதில் ஏபிஐ செயலியின் Err Number திருப்பும் மதிப்பு ஒரு மதிப்புருவாக Left செயலிக்கு Win Dir என்னும் சரத்திலிருந்து விண்டோ மதிப்பகத்தை  பிரித்தெடுக்க பயன்படுகிறது.

இங்கே Err Number மதிப்பு 0 எனில் காலி சரத்தை (VBNULL String) அதற்கு பதிலாக திருப்புகிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அறிந்து கொள்வோம் அக்சஸ்-2003- தொடர் -பகுதி-45-பகிர்வு புள்ளி(share point) தரவுமூலங்களாக (data source) செயல்படுதல்.

அக்சஸானது தரவுகளை ஏற்றுமதி செய்தல், இறக்குமதி செய்தல் மற்ற பயன்பாடுகளுடன் இணைப்பை கொடுத்தல் போன்ற செயல்களை ஆதாரிக்கின்றது.  மிக முக்கியமாக இது இந்த தரவுகளை  மற்ற பயன்பாடுகளுடன் பகிர்ந்து கொள்ளும்  ஈடு இணையற்ற தன்மைகொண்டதாகும்.

இது பகிர்வு புள்ளியில் தரவுகளை பட்டியல்களாக தேக்கிவைக்கிறது.  இந்த பட்டியல்களில் இருந்து அக்ஸஸிற்கு ஏற்றுமதி செய்யவும் அக்சஸிலிருந்து இறக்குமதி செய்வதற்கும் முடியும்.  உலகில் எங்கிருந்தாலும் இணைய தொடர்பின் மூலம் தரவுகளை இந்த பகிர்வு புள்ளிஇணையபக்கத்தின் மூலம் பங்கிட்டு கொள்ள முடியும்.

இந்த பகிர்வு புள்ளி(share point) தரவுமூலங்களானது(data source) இணைய பக்கத்தில் தேக்கிவைக்கப்பட்டு இருப்பதால் நேரடியாக எவரும் எப்போதும் எங்கிருந்தும் இதனை அனுகி பயன்படுத்திக் கொள்ள முடியும்.

அக்சஸ் மட்டுமல்லாது மற்ற பயன்பாட்டிற்காகவும் இவ்வாறான இணைய இணைப்பிற்கான தொடர்பை ஏற்படுத்தி உலகின் எந்த மூலையிலிருந்தும் இந்த பகிர்வு புள்ளி தரவு மூலங்களை பயன்படுத்திக் கொள்ளமுடியும்.

பின்வருமாறு செயல்பட்டால் அக்சஸின் மூலம் இதனை(பகிர்வுபுள்ளியை) பயன்படுத்தி கொள்ளமுடியும்,

I.   அக்சஸிலிருந்து பகிர்வு புள்ளிக்கு நகல் எடுத்தல்.

1.   ஏதேனும் ஒரு அக்சஸ்சின் அட்டவணையுடைய கோப்பினை திறந்து கொள்ளவும்.

படம்-1

2.   Table எனும் கருவிகளின் தாவியில(tab) உள்ள Move to Share Point என்ற வாய்ப்பை(படம்-1) தெரிவு செய்க.  உடன் Share Point வழிகாட்டி (wizard)காட்சியாக தோன்றுவார்.

படம்-2

3.   அதில் இந்த Share Point இணைய பக்கத்தின் URL முகவரியை

(படம்-2)தவறில்லாமல் உள்ளீடு செய்க.

4.   இதில் Save a copy of my data base என்ற தேர்வுசெய்பெட்டி(check box) தெரிவு செய்யப்பட்டிருந்தால் அதனை நீக்கிவிடுக. பின்னர் next என்ற பொத்தானை சொடுக்குக

5.   உடன் இணையபக்கம் Login ஆகி User Name, Password ஆகியவற்றை கேட்கும் பயனாளரின் பெயர் அனுமதி சொற்கள் ஆகியவற்றை தவறில்லாமல் உள்ளீடு செய்து Ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக, உடன் ஒரு சில நொடிகளில் அட்டவணையானது நகல் எடுக்கப்பட்டு உருமாற்றத்துடன் திரையில் தோன்றும்.

6.   இந்த சமயத்தில் ஏதேனும் பிழை செய்தி (எச்சரிக்கை) திரையில் பிரதிபலித்தால் அதனுடைய விளக்கத்தை அதற்கான பெட்டிகளில் பார்த்து படித்து சரிசெய்து கொள்ளவும்.

7.   அனைத்து செயல்களும் முடிந்து இறுதி திரையில் உள்ள Finish என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.  உடன் உங்களுடைய அட்டவணை நகலெடுக்கப்பட்டு Share Point இணையபக்கத்தில் ஒட்டப்பட்டு இணைக்கப்பட்டு இருக்கும்.  இதனை உங்கள் இடம் சுட்டியை(cursor) நகர்த்தி காணலாம்.  அட்டவணையின் Table பெயருக்கு அருகில் இருக்கும் உருவ பொத்தான்கள்(Icon)கூட Share Pointக்கு ஏற்றவாறு உருமாறி இருக்கும்.

II.Share Point தரவுகளை பயன்படுத்தி அக்சஸ்சை உருவாக்குதல்.

1.   Share Pointல் நகல் எடுக்கப்பட்ட கோப்பினை தெரிவு செய்யவும்.

2.   அக்சசின் ரிப்பனில் Creat எனும் tab ஐ தெரிவு செய்க. பிறகு அதில் உள்ள Form IConஐ தெரிவு செய்க

3.   உடன் தோன்றும் திரையில் உள்ள அக்சஸ் ரிப்பனின் மேல் இடதுபுறம் உள்ளவற்றில் View Icon ஐ தெரிவுசெய்க, உடன் விரியும் பட்டியலில் Form View என்ற வாய்பையும் தெரிவு செய்க.  உடன் மாற்றப்பட்ட படிவகாட்சி (படம்-3) திரையில் காட்சி அளிக்கும்.

பட‹-3

4.   படிவத்தை சேமித்துவிட்டு வெளியில் வந்துவிடுக.

III. Share Point தரவுகளை பயன்படுத்தி அக்சஸ்சில் அறிக்கை தயாரித்தல்

1.   Share Point இணைப்புடைய அட்டவணையை தெரிவுசெய்க

2.   அக்சஸ் ரிப்பனில் Create எனும் tab ஐ தெரிவுசெய்க, உடன் விரியும் பட்டியலில் Report Icon ஐ தெரிவு செய்து சொடுக்குக.  உடன் திரையில்  Report wizard தோன்றும் இதன் துனையுடன் அக்சஸ் இடைமுகத்தை கொண்டு Share Point இணைய பக்கத்தின் தரவுகளில் இருந்து படிவம் Form அறிக்கை Report போன்றவற்றை உருவாக்கி கொள்ளமுடியும்.  இந்த வழிகாட்டியின் வழிகாட்டுதலின்படி அறிக்கையை தயார் செய்து சேமித்துக் கொள்ளவும்.

Share Point பயன்பாட்டின் வகைகள்

இது ஒரு நேரடி இணைய தரவுமூலங்களாகும் இதிலிருந்து அக்சஸானது வாடிக்கையாளர் விரும்பியவாறு வரைகலை இடைமுகத்தின் மூலம், படிவம், அறிக்கை போன்றவற்றை மிகசிறப்பாக தயார் செய்து பகிர்ந்துக்கொள்ள உதவுகின்றது.  Share Point சேவையை பயன்படுத்தி பல பயனாளர்களால் தேக்கிவைக்கப்பட்டிருக்கும்  தரவுபட்டியல்களை பயன்படுத்தி பகிர்ந்து கொள்ளுதல், தேடுதல் ஆகிய செயல்களை ஒரே சமயத்தில்  செய்யமுடியும்.

தேடல்பயன்பாடு.(Tracking application)

இதுசாதரான பட்டியலிருந்து மிகத்திறன் வாய்ந்த தரவு அமைப்பாக சேர்க்க  பயன்படுகிறது.  பொதுவாக நிலையான தரவை இந்த தரவுடன் இணைத்து சிறந்த தரவு அமைப்பை உருவாக்குகிறது.  உதரணமாக வடிக்கையாளரின் விவரங்கள் நிலையான தரவுகளாகும்(static data).  இதனுடன் எவ்வளவு பொருட்கள் என்ன விலைக்கு நம்மிடம் இருந்து வாடிக்கையாளர் வாங்க விரும்புகிறார் என்ற இயக்க நேர தரவுகளை(dynamic data) இணைத்து விற்பனை அறிக்கை தயார் செய்வது இந்த Tracking  பயன்பாடுகளின் மூலம் முடியும்.  இதற்காக கட்டளைத்தொடர் எதுவும் எழுதும் திறன் எவருக்கும் தேவையில்லை சாதரணமாக இந்த Iconஐ  பயன்படுத்தும் அனுபவம் மட்டும் இருந்தாலே போதும்.இதற்காக

1.   ஒரு தரவு தளத்தை திறந்து கொள்ளவும் அக்சஸ் ரிப்பனில் Creatஎனும் tab ஐ தெரிவுசெய்க,உடன்விரியும் பட்டியில் உள்ள Table ஐ தெரிவுசெய்க, உடன் விரியும் பட்டியலில் Template Icon ஐ (படம்-4)பிடித்து சொடுக்குக.

படம்-4

2.   உடன் தோன்றும்  அட்டவணையின் கட்டமைவை (structure) சரிபார்த்துக்கொள்க.

3.   பின்னர்Table Template Iconகளின் பட்டியலில் Contact என்ற வாய்பை தெரிவு செய்க உடன் அவுட்லுக் அல்லது அவுட்லுக் எக்ஸ்பிரஸ் போன்றவற்றின் முகப்பு பக்க உள்பகுதியில் உள்ளவாறு Contact அட்டவணை பிரதிபலிக்கும்.  இது Data sheet view போன்று காட்சியளிக்கும்.

4.   இதன் அட்டவனையின் பெயரில் வைத்து இடம் சுட்டியை வலதுபுறம் சொடுக்குக.  பின்னர் தோன்றும் பட்டியலில் Design view என்ற வாய்பை தெரிவுசெய்க.

5.   இதற்கு ஒரு பெயரிட்டு Ok என்ற பொத்தானை  தெரிவுசெய்து சொடுக்குக

படம்-5

6.   அட்டவணையின் Design view திரையில் உள்ள கட்டளைபட்டியலில் View Icon என்பதை தெரிவு செய்க.  உடன் விரியும் பட்டியலில் Pivot table view  என்ற வாய்ப்பை தெரிவு செய்க.  உடன் Pivot table விவரங்களுடன்(படம்-5) காட்சியாக பரிதிபலிக்கும் இதனை சேமித்துக் கொள்ளவும்.

பலபயனாளர் பகிர்ந்து கொள்ளும் பயன்பாடு Collaboration Application

Tracking Application இதுதினமும் தேக்கப்பட்டிருக்கும் தரவுகளை நம்முடைய வியபாரத்திற்கு தேவையானவற்றை மட்டும் தேடியெடுக்க பயன்படுகிறது.

Shema File இதன் மூலம் முன்கூட்டியே கட்டமைக்கப்பட்டவாறு தரவுகளில் இருப்பதை தானாகவே அக்சஸில் மற்றும் அக்சஸ்சுக்கு ஏற்றவாறு படிவங்களை அறிக்கையாக உருமாற்றிபெறுவதற்கு உதவுகிறது.

Email update  இது தரவுகளனைத்தையும் Email  மூலமாக அவ்வப்போது பெறப்பட்டு தானாகவே நிகழ்நிலை (update)படுத்தப்பயன்படுகிறது.

New office Interface இது புதியதாக Office கருவிகள் அறிமுகபடுத்தபட்டாலும் அலுவலக பயன்பாடுகள் அறிமுகபடுத்தப்பட்டாலும் தரவுகளை சுலபமாக கையாளுவதற்கு ஏற்ற வகையில் உதவுகிறது.

Share Point Designer இது ஒரு கருவியாகும் இது இணையபக்க அடிப்படையில் HTML,CSS ஆகியவற்றை பயன்படுத்தி Share Point இணையபக்கத்தை வடிவமைக்க பயன்படுகிறது.மேலும் Browser மூலம் தகவல்களை தேடிபிடிப்பதற்கும் உதவுகிறது.

இதுமட்டுமல்லாது இதன் மூலம் இணைய பயன்படுகளின் Asp.net பக்கங்களை உருவாக்கமுடியும் இதற்காக அதிக அளவு குறிமுறைகள் ஏதும் எழுததேவையில்லை.

அறிந்து கொள்வோம் அக்சஸ்-2003-தொடர்-பகுதி-44 – அக்சஸ் -2003-ல் பிழை ஏதும் ஏற்படாமல் தற்காத்து இயங்கும் திறன்

தற்காத்துகொள்வதற்கான பாதுகாப்பு வசதி(Bullet proof)என்றால் என்ன?

அக்சஸ்2003 ஆனது சிறப்பு வாய்ந்த தரவுத்தளமாகும் இது மதிப்புமிக்க தரவுகளையும் தகவல்களையும் நேரடியாக பயனாளருக்கு கொண்டு சேர்க்கும் திறனுள்ளது, இதில் இதர தரவுகளை ஏற்புடையதாக்கல்,  பிழையைபிடித்து சரிசெய்தல் தீவிர பாதுகாப்பு போன்றவைகள் இல்லையெனில் நாம் பெறுகின்ற தரவுகளிலும், தகவல்களிலும் பின்னாட்களில் பிழைகள் ஏற்பட வாய்ப்புள்ளது, அதனை தவிர்க்க இவைகளை ஏற்கும் நேரத்திலேயே பிழைகள் ஏதும் இருந்தாலும் அதனை பிடித்து சரி செய்து மற்றவர்களால் ஆபத்து எதுவும் ஏற்படாமல் இருக்க தேவையான பாதுகாப்பான அரண்களை அமைத்தல் போன்ற செயல்களை செய்வதுதான் புல்லட் புரூப் என்பர்,

இவ்வாறான பாதுகாப்பிற்காக பின்வரும் ஒருசில அடிப்படைவிதிகளை தம்முடைய பயன்பாடுகளின் கடைபிடித்து நடைமுறைபடுத்தினால் போதும்,

 1, எப்போதும் வாடிக்கையாளர்விரும்பியவாறு பயன்பாட்டை சுலபமாக ஆரம்பிக்கும்படி செய்க

அ, Ctrl விசையை அழுத்தி பிடித்துக்கொண்டு Office2003 என்ற மென்பொருள் இருக்கும் மடிப்பகத்தி(Folder)லிருந்து Access2003  என்பதை பிடித்து இழுத்து வந்து புதிய நிலையில் விடுக,

ஆ, இந்த Access உருவபொத்தானை (Icon) தெரிவுசெய்து F2 விசையை அழுத்துக, பின்னர் இதற்கு வேறு ஒரு புதிய பெயரை தலைப்பாக உள்ளீடு செய்திடுக,

இ, Allt + Enter ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக அல்லது அதனுடைய உருவபொத்தானில் இடம் சுட்டியைவைத்து வலது புறம் சொடுக்குக உடன் தோன்றும் சூழ்நிலைபட்டியில் (Context Menu) பயன்பாடு(property ) என்பதை தெரிவு செய்க,

ஈ,  உடன் தோன்றும் பண்பியல்பு உரையாடல்பெட்டியில்(Property Dialog box) Shortcut tab என்பதை தெரிவு செய்க பின் target என்ற உரைப்பெட்டியில் இந்த பயன்பாடுகளுக்கு மிகச்சரியான முழுபாதை (Path) விவரத்தை உள்ளீடு செய்க,

உ, அதன்பின் Change Icon என்ற உருவபொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக உடன் தோன்றும் Change Icon என்ற உரையாடல் பெட்டியில்Browse என்ற பொத்தானை  தெரிவுசெய்து சொடுக்குக இந்த பயன்பாட்டிற்கு மிகச்சரியான ஒரு உருவபொத்தானை (Icon) அதற்கான மடிப்பகத்திலிருந்து தெரிவு செய்துசேர்த்து உள்ளிணைத்து கொள்க இவ்வாறு செய்யப்பட்ட பயன்பாடானது,    கணிப்பொறி இயங்க ஆரம்பித்தவுடன் தானகவே இயங்க ஆரம்பிக்காமல் பயனாளர் மாற்றம் செய்யப்பட்ட உருவபொத்தானை Icon ஐ தெரிவுசெய்து பிடித்து சொடுக்கிய பிறகே பயன்பாடு ஆரம்பிக்குமாறு செய்யபடுகின்றது,

இயல்பு நிலைபட்டியலும் பட்டியின் வழிகாட்டு விபரம் மறைக்கப்பட்டு பயனாளர் குறிப்பிடும் பட்டியாகவும் மாற்றி அமைக்கப்படுகின்றது,

நாம் மாற்றம் செய்தஅல்லது ஒதுக்கீடு செய்த உருவபொத்தான் Icon களானது அக்சஸின் தலைப்பாக பட்டியலிட்டு காண்பிக்காது, ஆயினும் இதற்கான பட்டியலிலும் தோன்றாது,

நாம் ஒதுக்கீடு செய்தஉருவ பொத்தானாக Icon மட்டுமே அக்சஸ் பயன்பாடு தோன்றும் நமக்குமட்டுமே இது அக்சஸ் எனத்தெரியும் மற்றவர்களால் இதனை கண்டுபிடிக்க முடியாது,

2, எப்போதும் உள்நுழைவு Login படிவத்தையே பயன்படுத்துக,

அக்சஸ் பயன்பாடு ஆரம்பிக்கும் போது Login படிவத்தை திரையில் காண்பிக்க செய்து பயனாளர் குறியீட்டு எண் User ID பயனாளரின் பெயர் Username அனுமதி சொற்கள் pass word ஆகியவற்றை பெற்று ஒப்பிட்டு சரிபார்த்து, சரியாக இருந்தால் மட்டுமே ஆரம்பிக்குமாறு செய்க,

3,படிவங்களை உருவாக்கும்போது புல்லட் புரூப்பாக செய்க,

1, கட்டுப்பாட்டு பெட்டி (Contorl Box), Min, Max, Close ஆகியவற்றின் பொத்தான்களை வடிவமைப்பு நேரத்திலேயே நீக்கி விடுக,

2, எப்போதும் படிவத்தில் Close அல்லது Return பொத்தானை அமைத்து முந்தைய படிவத்திற்கு செல்வதற்கான வழிகளை ஏற்படுத்துக,

3, ஒருபடிவத்தில் படிவ வடிவமைப்பு நேரத்தில் Views Allowed எனும் பன்பியல்பை படிவ வடிவமைப்பு நேரத்திலேயேஅமைத்திடுக,

4, தேவையான இடத்தில் மாதிரி படிவங்களையே பயன்படுத்துங்கள் பயனாளர் வரையறுக்கும் user define  படிவத்தை அறவே தவிர்த்துவிடுங்கள்,

5, நம்முடைய சொந்த வழிகாட்டும் பொத்தானை -navigating button ஐEOF (end of file) BOF (Beginning of file)  ஆகிய நிலைகளை சரிபார்க்கும்படிஅமைத்திக,

6, ஒவ்வொரு கட்டுபாடும் என்ன நிலையில் உள்ளது  என தெரிந்து கொள்ள Status bar  என்ற பன்பியல்பை  பயன்படுத்துக,

7, Del என்ற விசையை On Delete நிகழ்வில் எப்போதும் முடக்கிவிடுங்கள் (Disable),

4.நிர்வாகவியலின் சிக்கலுக்கு தீர்வுகானும் படிமுறைகளை அக்சஸ் பயன்பாட்டிலும் செயல்படுத்துக,

1,  சிக்கலை வரையறுத்திடுக(Define the problem):பிரச்சினை என்ன அதற்கு பயனாளர் எவ்வாறு தீர்வுகாண விரும்புகின்றார் என முதலில் வரையறுக்கவும்

2, தேவையெதுவென தீர்மானித்திடுக(Determine the requirements): இதன் அடிப்படையில்  என்னென்ன தேவையென தீர்மானிக்கவும்,

3,  பயன்பாட்டை வடிவமைப்பு செய்க(Design the Application): இவ்வாறு தெரிந்தபின் தேவைக்கு ஏற்ற பயன்பாட்டை வடிவமைப்பு செய்யவும்,

4, கூடுதல்வசதிகளை சேர்த்திடுக(Develop the Application): இந்த பயன்பாடுகளில் மேலும் என்னென்ன கூடுதல்வசதிகளை வாய்புகளை சேர்க்க முடியமோ அவைகளை சேர்த்து பயன்பாட்டை எளிமைபடுத்துங்கள்,

5, பயன்பாட்டை பரிசோதித்திடுக (Test the Application):இவ்வாறு உருவாக்கிய பயன்பாடு சரியாக இருக்கின்றதா என பரிசோதிக்கவும்,

6, பயனாளருக்கு விநியோகித்திடுக (Distribute the Application to user):அனைத்தும் சரியாக பாதுகாப்பு அரண்களுடன் மிகவும் பாதுகாப்பாக நன்றாக இயங்குகின்றது என திருப்தி அடைந்தால் மட்டும் பயனாளருக்கு விநியோகிக்கவும்,

5,ஒருவழிப்பாதையான தொடக்கத்தை  முடக்கிவிடுக   (Disble Start bypass)

முந்தைய அக்சஸ் பதிப்புகளில் வடிவமைப்புநேரத்திலேயே Auto exe macro வை பயன்படுத்தி தரவுதளத்தை மறைத்தல்,அதிலுள்ள படிவங்களை ஆரம்பித்தல், ஆரம்ப இயக்கத்திற்கு தேவையான குறிமுறைகளை எழுதுதல் ஆகியவற்றை   உருவாக்கி பயன்படுத்தி கொண்டிருந்தனர், இதனை அக்சஸை பற்றி நன்கு விவரம் அறிந்த ஒருவர் மிகச்சுலபமாக   Shift விசையை பிடித்து சொடுக்கி Auto Exe macro யை ஒரம் கட்டிவிட்டு  அக்சஸை மிகச்சுலபமாக ஆரம்பித்துவிடுவா˜ர்,

இவ்வாறு By pass செய்யா்மல் நாம் உருவாக்கும் புல்லட் புரூப் உடன் மட்டும் இந்த பயன்பாடு ஆரம்பிக்க Allow bypass key எனும் பன்பியல்பை True எனில் முடக்குவது அல்லது False எனில் இயலுமை செய்வது  என தேவையானவாறு அமைத்துகொள்க, இதனை செய்ய கீழ்காணும் குறிமுறை பயன்படுகின்றது,

பட்டி -44-1

Function SetBypass (Bypass Flag As Boolean) As Boolean

‘Returns True if value of Allow ByPassKey

‘is successfully set to Bypass Flag.

 

On Error GoTo Set Bypass Error

 

Dim db As DAO Database

Set db= Current Db

Db.Properties!AllowBypasskey= BypassFlag

SetBypass Exit:

Exit Function

SetBypass Error:

If Err= 3270 Then

‘AllowBypasskey property does not exit

MsgBox “ Appending AlowByPasskey property”

db.Properties.Append_

db.Createproperty (“AllowBypasskey”)._

dbBoolean, BypassFlag)

SetBypass=True

Resume Next

Else

‘Some other error

MsgBox “unexpected error:”&Errors_

& ” (”&Err & ”)”

SetBypass= False

Resume SetBypass_Exit

End If

End Function

இது முதலில் Bypass என்ற பன்பியல்பு எவ்வாறு இருந்தாலும் அனுமதித்து பின்னர் சரிபார்க்கிறது,  தவறாக இருந்தால் பிழைச்செய்தியை பிரதிபலிக்க செய்கிறது,  இதற்காக Allow bypass key என்ற பண்பியல்பு இருக்கின்றதா என சரிபார்க்கின்றது,  இல்லையெனில் உருவாக்கிய தரவுகளில் இந்த பன்பியல்பை சேர்த்துவிடுகிறது,

6,பன்பியல்புகளின் மதிப்பை அமைத்தல்(Setting Proprty Value)

இந்த பன்பியல்பின் மதிப்பு நடப்பில் இருக்கிறதா என முதலில் அமைக்கும்முன் உறுதி செய்துக்கொண்டு இதன் மதிப்பை அக்சஸின்¡  வய்ப்பு உரையாடல் பெட்டியில் Option dialog box அமைத்துவிட்டால் பயன்பாட்டு பொருட்களின் பன்பியல்பு சேகரிப்பில் சேர்க்கபடமாட்டாது, இவ்வாறு  ஆரம்ப பன்பியல்பு மதிப்பை அமைத்திட, உருவாக்கிட, சேர்த்திட கீழ்காணும் நிரல்தொடர் பயன்படுகிறது,

பட்டி-44-2

 Sub cmdAddProperty Click ()

Dim iRetVal As Integer

iRetVal=AddStartupProperty (“AppTitle”,dbText,

“Marketing Contact Management”)

iRetVal= AddStartupProperty (‘AppIcon”,dbText,

“C:\My Documents\workd.ico”ல்)

End Sub

7,பயன் பாட்டில் பூட்டை சேர்த்தல்(Adding logging to applications)

பயனாளர் ஒருவருக்கு தவறான குறிமுறைகளால் உருவாக்கப்பட்ட பயன்பாடுகளை இயக்கும்போது தவறான இறுதி விளைவை சந்திக்கநேரிடும், மேலும் முடிவற்ற மறு சுழற்சிக்குள் மாட்டிக் கொண்டு வெளியேற முடியாமலேயே அபாயக்குழிக்குள் சிக்கி தொக்கி நின்றுவிடநேரிடும், இதுபோன்ற நிலைகளை தவிர்க்க பயன்பாடுகளில Logger அல்லது Log error என்ற செயலியை பயன்படுத்துக,

பட்டி -44-3,

# If DEVELOPMENT Then

Logger (“Begin function Test user Input () “,Now ())

# End if

ஒரு பயன்பாட்டை உருவாக்கும் போது இதே போன்ற பிழைகளை சரி செய்ய Loger என்பது பயன்படுகிறது,  இதனை Consent Development =1 என்று அமைத்திடுங்கள் அதன்பின்னர் பயனாளர் பயன்படுத்தும்போது இதே போன்று தவறுகள், பிழைகளை தவிர்க்க Log Error என்ற செயலியை பயன்படுத்துங்கள்,

பட்டி- 44-4

Sub MySubroutine

On Error GoTo MyErrorHandler

<your code goes here>

Exit Sub

MyErrorHandler:

LogError(“MySubroutine”, Err.Number, Err.Description)

<Handle error here)

Resume

End Sub

இந்த பயன்பாட்டில் பிழையின்பெயர் ,நேரம், எண், விபரம் , இது எந்த இடத்தில் ஏற்பட்டது, எந்தகட்டுபாட்டில் ஏற்பட்டது ஆகிய விபரங்களை அறிவிப்புத்திரைJயில் பிரதிபலிக்க செய்கின்றது

இதுவரை மேலே கண்டவாறு உள்ள வழிமுறைகளை பின்பற்றி உங்களுடைய அக்சஸ் பயன்பாட்டை பிழை ஏதும் ஏற்படாத புல்லட் புரூப்பாக இயக்கி பயன்பெறுங்கள்,

அறிந்து கொள்வோம் அக்சஸ்-2003- தொடர் பகுதி-43-அக்சஸ்-2007ல் உள்ள கூடுதல் வசதி வாய்ப்புகள்

அக்சஸானது புதிய வசதிகளுடன் இருக்கிற நிலையிலேயே அடுத்த பதிப்பை வெளியிடுமா? அல்லது அக்சஸ் மாற்றப்பட்டு SQL serverன் புதிய பதிப்பாக வெளியிடப்படுமா என்ற பயனாளரின் எதிர்பார்ப்பிற்கு இடையே நீண்ட இடைவெளிக்கு பிறகு அக்சஸ் 2007 என்பதை மைக்ரோ சாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆனால் இதுவரை வந்த தொடரில் நாம் அக்சஸ் 2003 பற்றிய விவரங்களைத்தான் அறிந்து வந்தோம்.

அதனால் இந்த பகுதியில் அக்சஸ் 2007ல் கூடுதலாக என்னென்ன வசதிகள் உள்ளன என இப்போது காண்போம்.

படம் – 1

ஒரே சமயத்தில் பயனாளர் ஒருவர் டஜன் கணக்கில் மிதக்கும் சாளரத்தை சந்திக்க வேண்டியிருந்தது. இது வலைக்குள் வலை என்பது போன்று தெரிவு செய்யும் பட்டியலுக்குள் மற்றொரு பட்டியல் அதற்குள் மற்றொரு பட்டியல் என்று தினத்தந்தியின் கன்னித்தீவு போன்று நீண்டு கொண்டே செல்வதை தடுத்து அனைத்தும் ஒரே பார்வையில் படும்படியாக பட்டிகை (Ribbon) என்ற கருத்தமைவு (படம்1) அக்சஸ் 2007ல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு சுலபமாக்கப்பட்டிருந்தாலும் கோப்பு பட்டியல் (File menu) எங்கிருக்கிறது எனத் தேடுவதுதான் மிக கடினமான பணியாக உள்ளது. அதற்காக கவலைப்படாதீர்கள் சாளரத்தின் தலைப்பில் இடதுபுற ஓரத்தில் மைக்ரோ சாப்ட் நிறுவன முத்திரையுடன் உள்ள வட்ட வடிவ உருவத்திற்குள் அலுவலக பட்டியல் (office menu) என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டு பொதிந்து(படம்1) வைக்கப்பட்டுள்ளது.

இதில் கூடுதலாக காப்பு நகல், ஒப்பீடு, வசதி வாய்ப்புகள் போன்ற பல பொது தரவு தள பயன்களும் வாய்ப்புகளும் உள்ளன.

தேவைப்படும் பொழுதெல்லாம் தேவைப்படுவதை பெறுவதற்கேற்றவாறு இந்த பட்டிகை(Ribbon) அமைவு சூழ்நிலை பட்டியலாக உருவாகுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக எழுத்துரு (Font), ஆவணங்கள் (Document), அடுக்குதல் (Sort), வடிகட்டுதல் (Filter) ஆகியவைகள் தனித்தனி குழுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பட்டிகையின் கீழ்பகுதியில் வாடிக்கையாளர் வெளிச்சூழலான XMLல் குறிமுறை உருவாக்குமாறும், VBA வழிமுறையை பயன்படுத்தி தானாகவே மீள அழைப்பதற்கான (Call back) குறிமுறை வரிகளை உருவாகும்படியாக செய்யப்பட்டுள்ளது.

சிக்கலான வலைக்குள் வலையாக இருந்ததை பொருட்களின் பட்டியிலிருந்த அட்டவணையை உருவாக்குகினோம், பாதுகாத்தோம், மீண்டும் வினாவை உருவாக்கினோம் என்றவாறு செயலை எளிமையாக்குவதற்காக இந்த பட்டிகை(Ribbon)உருவாக்கப்பட்டுள்ளது.

படம் – 2

ஒவ்வொன்றிற்கும் தனித்தனி செயல்பட்டை (task bar), தனித்தனி பட்டியல் (menu)ஆகியவற்றை செயற்படுத்துவதற்காக பொருட்களின் பட்டியலுக்கு ஒவ்வொரு முறையும் சென்று தேவையானதை தெரிவு செய்து பணிபுரிவதற்கு பதிலாக இவைகள் அனைத்தும் மிதக்கும் சாளரத்தில் (Floating window) உள்ள தாவி அமைவிற்குள் (tab system) (படம்-2) தயார் நிலையில் உள்ளடங்கியிருக்குமாறு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் தேவையானதை மட்டும் பிடித்து சொடுக்கினால் போதும்.உடன் தொடர்புடைய செயல் நடைமுறைக்கு வரும்.

அதற்காக முந்தைய பதிப்புகளில் பணிபுரிந்தவர்களை நட்டாற்றில் கைவிடவில்லை நிழல் படிந்ததை போன்று புதைந்து மறைந்துள்ள அமைப்புகளை சொடுக்கினால் அட்டவணை (table), வினா (query) போன்ற பொருட்கள் (object) காட்சியாக திரையில் பிரதிபலிக்கும். அதைபோன்றே முந்தைய பதிப்புகளில் உருவாக்கப்பட்ட ஆவணங்களையும் கையாளும் தன்மையுடன் அக்சஸ் 2007 அமைக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமன்றி வழிகாட்டு பலகம் (Navigator pane) கூட மாறுதல் செய்யப்பட்டு பணிபுரிய விரும்புவதை தெரிவு செய்வதற்கேற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பொருட்கள் உருவாக்கப்பட்ட நாள், மாறுதல் செய்த நாள், வாடிக்கையாளரின் குழு ஆகிய விவரங்கள் உள்ளடங்கியுள்ளன. இந்த பலகம் சாளரத்தின் இடதுபுற ஓரத்தில் இணைக்கப்பட்டுள்ளதால் இடம் அடைத்து கொள்ளுமே என கவலைப்படத் தேவையில்லை.

அதன் வலப்புற மேல்பகுதியில் உள்ள இடது புறத்தை பார்த்திருக்கும் அம்புக்குறியை இடம்சுட்டியால் பிடித்து சொடுக்கினால் இந்த பலகம் மறைந்து நாம் பணிபுரிவதற்கேற்றவாறு போதுமான இடம் திரையில் கிடைக்கும்.

அட்டவனை (Table) இது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. இந்த அட்டவணையில் இப்போது செல்வந்தர் உரை வடிவமைவமைப்பு (rich text formatting) என்ற கருத்தமைவு் memo புலங்களை ஆதரிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. எக்செல்லிருந்து ஏதேனும் ஒரு அட்டவணையை அக்சஸிற்குள் கொண்டு வந்தவுடன் தானாகவே அதற்கேற்றவாறு பல மதிப்பு புலங்களாக (Multivalue field) வடிவமைக்கும் வசதி நிறைந்துள்ளது. உதாரணமாக எக்செல்லின் நாள் புலத்தை (date field) ஒரு புதிய அட்டவணைக்குள் கொண்டுவந்த உடன் அதனை ஏற்று அப்படியே நாள் புலமாக தானாகவே ஆதரித்து வடிவமைத்து கொள்கிறது.

இது சாதாரணமாக தெரிந்தாலும் (புதிய) வடிவமைப்பாளருக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆகும். இறுதி பயனாளர் மிகச்சுலபமாக படித்தறிவதற்கேற்றவாறு அடுத்தடுத்த நெடுவரிசைகளை அல்லது கிடைவரிசைகளை வெவ்வேறு நிறங்களில் பிரதிபலிக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வகை ஆவனங்களையும் வெளி கோப்புகளையும் தரவு தளம் இல்லாமலேயே உங்கள் பயன்பாடுகளில் இணைப்பு தரவு வகை (attachment data type) என்ற கருத்தமைவில் உள்ளிணைக்கும்படி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது படம், ஆவணங்கள் தொடர்புடைய பதிவேடுகளுடன் கோப்பு முழுவதையும் தரவு தளத்தில் உள் பொதிந்து உருவாக்குமாறு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரே புலத்தில் பல வகையான கோப்புகளை இவ்வாறான உள்ளிணைப்பு தரவு வகை கருத்தமைவில் கையாளும்படி செய்யப்பட்டுள்ளது.

தரவு தாள் காட்சி (Data sheet view)

படம் – 3

தரவுகளை ஆய்வு செய்தல், மாறுதல் செய்தல், சரிபார்த்தல் போன்ற செயல்களுக்கு மிகச்சிறந்த கருவியாக இந்த தரவுத்தாள் காட்சி (படம்-3) உள்ளது. இது சூழ்நிலை பட்டியலில் புதிய புள்ளி மற்றும் சொடுக்கி அடுக்குக (new point -and- click sort) போன்ற வாய்ப்புகளுடன் வடிகட்டுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இதே பட்டியலானது உரை,தரவுகள். எண்கள் ஆகியவற்றை வடிகட்ட பயன்படுகிறது.

இதில் குறிப்பிட்ட புலத்தை பிடித்து கொடுக்கியவுடன் அதற்கேற்றவாறு தோன்றும் கூடுதலான அடுக்குதல் sort , வடிகட்டும் filter ஆகிய புதிய வசதி வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இது மட்டுமல்லாமல் நெடுவரிசை மதிப்புகளின் மொத்தம் எவ்வளவு என்ற விவரத்தையும் கொடுக்கின்றது. மொத்த கிடைவரிசை எவ்வளவு என்ற விவரங்கள் கீழ்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய புலத்தை உள்ளிணைத்து புலபடிம பலகத்திலிருந்து (field template pane) தெரிவு செய்து பெயர், தரவு வகை முன் கூட்டியே கட்டப்பட்ட பண்பியல்புகளுடன் இணைத்து கொள்ள முடியும். இது மட்டுமா நம்முடைய எந்த வடிவமைப்பிலும் புதிய புலத்தை உருவாக்கி இணைத்து கொள்ளவும் முடியும்.

படிவங்கள் (Forms)

மற்ற அட்டவணைகளில் இல்லாதிருக்கும் விரிவுபடுத்தப்பட்ட புல பட்டியலில் செயல் பலகத்தின் உதவியால் Record setன் பகுதியாக புலங்களை இதன் மூலம் இணைக்க முடியும், இந்த படிவங்களுக்கு இடையே இவ்வாறு இணைக்கப்பட்ட புலங்களுக்கு இடையில் உள்ள உறவை தானாகவே உருவாக்கி கொள்கிறது. ஒரே படிவத்தில் படிவ காட்சி, தரவு காட்சி ஆகிய இரண்டாக பிரிப்பதற்கு ஏற்றவாறு இதில் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரிப்பு உத்தி படிவத்தின் கீழ், மேல் , இடது, வலதுபுறம் என எந்த பகுதியிலும் தரவு காட்சியை வைத்திட முடியும். இதில் layout என்ற புதிய கருத்தமைவு படிவங்களை உருவாக்கும் செயலை எளிமையாக்கி யுள்ளது. இதன் உதவியால் பொதுவான பதிப்பு(edit) செயல்களை தரவுகளை பார்வையிடும்போதே படிவத்தில் செய்ய முடியும்.

ஒரே மாதிரியான படிவத்தினை பயனாளர் பார்த்து பார்த்து சோர்வடைந்து விடாமல் இருப்பதற்கேற்ப வாடிக்கையாளர் விரும்பியவாறு எந்த நிறத்தையும் தெரிவு செய்யும்படியான வண்ணத்தட்டு (color palettes) ஒன்று இதில் உள்ளது.

மிக முக்கியமாக பெருமநிரல் (macro)-களை உங்கள் படிவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளிணைத்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு உள்ளிணைந்த பெருமநிரல் வசதி புதிய பாதுகாப்பு வசதியுடன் அக்சஸில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தைவிட ஏராளமான அளவு பெரும நிரலை உள்ளிணைப்பதற்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது.

இதில் காலண்டர்என்ற நாள்/நேரம் தெரிவு செயவதற்கான வடிவமைப்பு வசதி கூடுதலாக உள்ளது.

அறிவிக்கைகள் (Reports)

படிவத்தின் விரிவாக்கமே அறிவிக்கையாகும். ஆனால் கூடுதல் குழுவாக அடுக்குதல், துனைக்கூடுதல் காணுதல், மொத்தம் காணுதல் போன்ற வாய்ப்புகளுடன் இப்போது இருக்கின்றன. இதனால் அடுக்குதல், வடிகட்டுதல் ஆகிய செயலை தானாகவே அறிக்கை காட்சியில் நடைமுறைப்படுத்த முடியும். மேலும் துணை கூடுதல், மொத்த கூடுதல் போன்ற புதிய வசதிகள் உள்ளிணைக்கப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட புலத்தை அல்லது பகுதியை sum field வாய்ப்பை பயன்படுத்தி தெரிவு செய்ய முடியும் (படம்-4). அதற்காக கணக்கீடு கட்டுப்பாட்டை உருவாக்க தேவையில்லை.

படம் – 4

பெரும நிரல் (Macro)

படிவங்களையும், அறிவிக்கைகளையும் திறத்தல், மூடுதல் போன்ற செயல்களுக்கான பெரும நிரல்களின் பாதுகாப்பில் மாறுதல் ஏதும் இல்லாமலேயே செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பெரும நிரலை படிவங்கள், அறிவிக்கைகள், கட்டுப்பாடுகளில் உள்ளிணைக்க முடியும். இதுமட்டுமல்லாமல் பிழைகளை கையாள்வது, பிழை பிடித்தல், மாறிகளுக்கு ஏற்ற மதிப்பை ஒதுக்கீடு செய்தல் போன்ற செயல்களையும் இந்த பெரும நிரல் மிக சுலபமாக்கியுள்ளது.

அறிவிக்கைகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்தல், உருவாக்குதல் ஆகிய செயல்கள் outlook வழியாக தானாகவே நடைபெறுவதற்கான பெருமநிரல்களும் உள்ளிணைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு (Security)

அக்சஸின் முந்தைய பதிப்புகளில் விபி குறிமுறைகள் அல்லது பெரும நிரல் (Macro) இணைக்கும் போது பாதுகாப்பு வளையம் மிக இறுக்கமாக அமைக்கப்பட்டிருந்ததை எளிமைப்படுத்தி குறிப்பிட்ட பயனாளரின் அளவிற்கேற்ப பாதுகாப்பு வாய்ப்பு நீக்கப்பட்டு செயல் அளவில் பாதுகாப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது சாளரத்தின் மேல் பகுதியில் உள்ளது.

பகிர்வுபுள்ளி(Share point)

கோப்பு உருவாகிய வரலாற்றை மாற்றுதல், அமைப்பு அனுமதி, நீக்கப்பட்ட ஆவணத்தை மீளப்பெறுதல் போன்ற செயல்களுக்காக share point என்ற கருத்தமைவு புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது. தூரத்திலிருக்கும் தரவுகளையும் புதிய வசதி ஏதும் தேவையில்லாமல் வலைப்பின்னலின் இணைப்பில் மட்டும் பெறுவதற்கேற்ப இந்த பகிர்வு புள்ளி(share point) வசதிஉள்ளது.

தூரத்தில் (Distance) உள்ள தரவுகளை மிகச்சுலபமாக கையாளத்தக்க வசதிகூட இந்த அக்சஸ் 2007-ல் உள்ளது. பொதுவாக அக்சஸின் சவாலாக இருந்த பல செயல்கள் இப்போது சுலபமாக்கப்பட்டுள்ளது.

Previous Older Entries