ஃபயர்பேஸ்-11-தொடர்- ஃபயர்பேஸின்மிகமுக்கிய பயன்பாட்டுதன்மைகள்

இந்த தொடரை தொடர்ந்து படித்துவரும் அனைவரும் கண்டிப்பாக இந்த ஃபயர் பேஸை ஐயம் திரிபற கற்பதன் வாயிலாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் ,இன்ஸ்டாகிராம் ,லிங்காடின் போன்ற சமுதாய இணைய பயன்பாடுஒன்றினை முயற்சி செய்தால் கண்டிப்பாக தாமே உருவாக்கிடமுடியும் என்ற செய்தியை மனதில் கொள்க. .தொடர்ந்து
ஃபயர் பேஸ்என்பது கைபேசியின் பயன்பாடுகளையும்இணையப் பயன்பாடுகளையும் உருவாக்கிட உதவிடும் ஒரு தளமாகும் மிகமுக்கியமாக இந்த ஃபயர் பேஸ் என்பது சேவையாளர் பகுதியின் குறிமுறைவரிகளைபற்றியோ பின்புல தரவுகளின் சேமிப்பை-பற்றியோ API-யைபற்றியோ கவலைப்படாமல் சிறந்த கைபேசி பயன்பாடுகளை அல்லது இணையபக்கங்களை அல்லது விளையாட்டுகளை உருவாக்கிடஉதவிடும் ஒரு பின்புல சேவையாகும் என இதனைபற்றி தொழிஸ்நுட்ப அடிப்படையில் மிக விரிவாக கூறலாம் இதில் ஏராளமானவகையில் பல்வேறு பயனுள்ள வசதிவாய்ப்புகள் சிறந்த பயன்பாடுகளை இணையபக்கங்களை உருவாக்குவதற்காக நமக்கு உதவத்தயாராக இருக்கின்றன அவைகளுள் மிகமுக்கியமான பயன்பாட்டு தன்மைகளைமட்டும் இப்போது காணலாம்
1.ஃபயர்பேஸின் நிகழ்வுநேர தரவுதளம்
பொதுவாக தற்போது இணையத்தில் பெரும்பாலான சேவையாளர்களுக்கு மீநிலை உரைமாற்றி நெறிமுறையின் ( Hypertext Transfer Protocol (HTTP))கோரிக்கைகளே தரவுகளை படிப்பதற்கும் எழுதுவதற்கும் அடிப்படைதேவையாக உள்ளன அதனடிப்படையில் பெரும்பாலான தரவுதளங்கள் நாம்கோரிய தரவுகளை மட்டும் வழங்குகின்றன ஆனால் நாம் பயன்பாட்டினை ஃபயர்பேஸுடன் இணைத்திடும்போது நம்முடைய பயன்பாடு வழக்கமான HTTPஇன்படி இணைக்கப்படமாட்டாது அதற்கு பதிலாக HTTPயைவிட மிகவிரைவாக செயல்படும் இணையகுழிவுகள்(Web Sockets) வாயிலாக இணைக்கப்படும் மேலும் தரவுகள் JSONஎன்பதில் சேமிக்கப்பட்டு ஒவ்வொரு வாடிக்கையாளருடனும் நேரடியாக நிகழ்வுநேரத்தில் இணைக்கப்பட்டு ஒத்தியங்கிடுமாறு செயல்படுகின்றது . ஐஓஎஸ் , ஆண்ட்ராய்டு ,ஜாவாஸ்கிரிப்ட் எஸ்டிகே போன்ற அனைத்து தளத்திலும் செயல்படும் பயன்பாடுகளின் வாடிக்கையாளர்களும் ஒரேயொரு நிகழ்வுநேர தரவுதளத்துடன் பகிர்ந்து கொள்ளவும் அவ்வப்போது பெறப்படும் புதிய தரவுகளுக்கேற்ப தானியங்கியாக நிகழ்நிலைபடுத்தி கொள்ளவும் செய்கின்றது அதாவது எந்தவொரு வாடிக்கையாளரும் இந்த பயன்பாட்டில் இணையும்போது அதற்கானதரவுகளை நிகழ்வு நேரத்திலேயே தானாகவே நிகழ்நிலை படுத்தி கொண்டு தொடர்ந்து செயல்படுகின்றது இதனை ஒரு எடுத்துகாட்டின் வாயிலாக சரிபார்த்திடுவோம் உதாரணமாக நாம் உருவாக்கிடும் குழுவிவாத பயன்பாட்டில் புதிய பயனாளர்ஒருவர் தன்னுடைய நண்பர்களுடன் உள்நுழைவுநெறிமுறையை பின்பற்றி இந்த குழுவிவாதத்திற்குள் உள்நுழைவு செய்வதாக கொள்க இவ்வாறு உள்நுழைவு செய்திடும் செயலை ஃபயர்பேஸானது அறிந்தேற்பு செய்தல்எனும் தன்மையை கொண்டு மிகஎளிதாக கையாளுகின்றது ஆனால் செய்திகளை அனுப்புவதற்கும் பெறுவதற்கும் மட்டும் நமக்கென தனியாக ஒரு தரவுதளம் தேவையாகும் ஃபயர்பேஸ் தவிர ஆயிரகணக்கான தரவுதளங்கள் இவ்வாறான தரவுகளை வழங்குவதற்கும் பெறுவதற்கும் தயாராக இணையத்தில் இருக்கின்றன ஆயினும் அவையனைத்தும் நிகழ்வுநேர தரவுகளாக இல்லாமல் அவை ஏற்கனவே சேமித்த தரவுகளை மட்டும் கையாளுபவைகளாக இருக்கின்றன அதனால் நாமும் நிகழ்வுநேர தரவாக அவைகளை மாற்றிடுவதற்காக வேறு ஏதேனும் புதிய தரவுகள் அல்லது செய்திகள் விடுபட்டுவிட்டனவா என ஒவ்வொரு-முறையும் Refresh எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடவேண்டும் ஆனால் இந்த ஃபயர் பேஸின் பயன்பாடுகள் அல்லது இணையபயன்பாடுகள் தானாகவே தரவுதளத்தின்தரவுகளுள் ஏதேனும் மாறுகின்றதெனில் நம்முடைய தலையீடின்றி தானாகவே உடனடியாக அதற்கான செயலியை அழைத்து நிகழ்வுநேரத்திலேயே நிகழ்நிலை படுத்தி கொண்டு தொடர்ந்து செயல்படச்செய்கின்றது அதன்வாயிலாக புதிய செய்தி வந்துள்ளதை பற்றிய அறிவிப்பு ஒன்றையும் உருவாக்கி நமக்குதெரிவிக்கின்றது. தரவுதளத்தில் இவ்வாறு மாறுதல் ஆனதற்காக நம்முடைய பயன்பாட்டினை நிறுத்தம்-செய்து மறுபடியும் இயங்குமாறு செய்யத்தேவையில்லை அல்லது அதற்கான பொத்தானை சொடுக்குதல் செய்திடவும் தேவையில்லை இவ்வாறு செயல்படுவதாலேயே இதனை நிகழ்வுநேர தரவுதளம் என அழைப்பர் இதுநம்முடைய பயன்பாட்டிற்கு அதிக பயனுள்ளதாக அமைகின்றது நிகழ்வுநேர தரவுதளபயன்பாடு இயங்கும்போது இணைய இணைப்பில்லாவிட்டாலும் பரவாயில்லை நம்முடைய கணினியின் நினைவகத்தில் தரவுகளை நிகழ்நிலைபடுத்தி சேமித்து கொள்கி்ன்றது அதன்பின்னர் இணைய இணைப்பு கிடைத்தவுடன் தானாகவே நிகழ்நிலைபடுத்திகொள்கின்றது இந்த நிகழ்வுநேர தரவுதள-மானது ஐஓஎஸ்,ஆண்ட்ராய்டு, இணையம்,சி++,யுனிட்டி போன்றவைகளை ஆதரிக்கின்றது

2.ஃபயர்பேஸின் பிழைச்செய்தி அறிக்கை
நம்முடைய பயன்பாடு இயங்காமல் நின்றுவிடுகின்றபோது உடனடியாக இந்த பயன்படானது சரியாக செயல்படவில்லை சரியாக நிறுவுகை செய்யப்படவில்லைஎன அதனை பற்றிய தவறான கருத்து நம்முடைய மனதில் தோன்றிடும் ஆயினும் பல்வேறு வழிகளில் பயன்பாட்டினை பரிசோதித்து பார்த்தாலும் பல்வேறு சாதனங்களை சார்ந்து பல்வேறு காரணிகளும் அவ்வாறு நின்றுபோவதற்கு காரணமாக இருந்தாலும் அல்லது தொங்கலாக நின்று போனாலும் உடன் இந்த பயன்பாடுகளே இப்படித்தான் என திட்டிடுவோம் அவ்வாறான சூழ்நிலைகளை தவிர்ப்பதற்காக ஃபயர்பேஸின் பிழைச்செய்தி அறிக்கையை பயன்படுத்தி கொள்ளமுடியும் பயன்பாடுகள் அவ்வாறு தொங்கலாக நின்றுவிடுவதற்கு முன் நமக்கு ஒரு எச்சரிக்கை பிழைச்செய்தியை இந்த ஃபயர்பேஸின் முகப்புத்திரையில் காண்பிக்கச்செய்கின்றது பயனாளர்கள் எச்சரிக்கையாக அதனை தவிர்த்து வேறு மாற்று ஏற்பாடு செய்யமுடியும் இந்த ஃபயர்பேஸின் பிழைச்செய்தி அறிக்கை ஆண்ட்ராய்டையும் ஐஓஎஸ்ஸையும் மட்டுமே ஆதரிக்கின்றது

3. ஃபயர்பேஸின் மேககணினி சேமிப்பகம்
நம்முடைய இரும கோப்புகளை மிகமுக்கியமாக உருவப்படங்கள் கானொளிபடங்கள். பிடிஎஃப் போன்ற எதுவாக இருந்தாலும் ஃபயர்பேஸ் மேககணினி சேமிப்பகத்தின் வாயிலாக சேமித்து கொள்ளமுடியும் அதாவது கூகுள் மேககணினியில் ஃபயர்பேஸ் கோப்புகளை வாடிக்கையாளர் ஒருவர் நேரடியாக சேமித்து கொள்ளலாம் பொதுவாக குழுவிவாத பயன்பாடுகளானவை உரைமட்டுமல்லாது உருவப்படங்களும் கானொளி படங்களும் சேர்ந்தவையாகும் அதனால் உரையைமட்டுமே சேமிக்கமுடியும் என்ற வரையறையின்றி பயனாளர்கள் கையாளும்போது பெறுகின்ற அல்லது அனுப்புகின்ற உருவப்படங்கள் கானொளி படங்கள் உரைகளை கொண்ட ஆவணங்கள் போன்று எதுவாக இருந்தாலும் அவைகளை ஃபயர்பேஸின் மேககணினி சேமிப்பகம் அனுமதிக்கின்றது அவைகளை சேமித்திடவும் பயனாளர் உருவாக்கிய கோப்புகளை சேமித்து அவற்றை எந்த நேரத்திலும் எந்தவிடத்திலிருந்தும் தேவைப்படும்போது இதன்வாயிலாக மீளப்பெறவும் முடியும் இந்த ஃபயர்பேஸின் மேககணினி சேமிப்பகமானதுஐஓஎஸ், ஆண்ட்ராய்டு, இணையம் ,சி++,யுனிட்டி போன்றவைகளை ஆதரிக்கின்றது

4. ஃபயர்பேஸின் அறிந்தேற்பு
ஒரு சாதனத்தின் வாயிலாக குழுவிவாத பயன்பாடுகளில் பயனாளர் ஒருவர் இணையும்போது அவரை சுட்டுவதற்கான பயனாளரின் பெயர் ,கடவுச்சொற்கள் அல்லது வேறு வகைகளில் அவரை பற்றி அறிந்து நம்மோடு குழுவிவாதத்திற்கு அனுமதி செய்திடவும் இந்த தரவுகளை சேமித்து வைத்து கொண்டு பின்னர் குழுவிவாதத்தின் போது அனுமதிப்பதற்கும் இதே நடைமுறையை அனைத்து சாதனங்களிலும் பின்பற்றிடவும் செய்திடுவோம் இந்த நடைமுறையை ஃஃபயர் பேஸின் அறிந்தேற்பு வசதியானது ஒரு சிறந்த பின்புல சேவையாக வழங்குகின்றது SDK’s இன் கூகுள் ,ஃபேஸ்புக், ட்விட்டர், கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றின் பல்வேறு வாய்ப்புகளின் வாயிலாக ஒருங்கிணைந்த ஒட்டுமொத்த சுட்டியாக பயன்படுத்தி அறிந்தேற்புசெய்து கொள்ளமுடியும் இவைமட்டுமல்லாது மின்னஞ்சல் அல்லது கைபேசிவாயிலான ஒருமுறைமட்டுமான கடவுச்சொற்களைகொண்டு உள்நுழைவு செய்வதை போன்றும் கடவுச்சொற்களை மறுஅமைவு செய்வதுபோன்றும் எந்தவொரு செயலையும் கையாளவும் பின்புல சேவைகளில்எழும் பிரச்சினைகளை தீர்வுசெய்திலும் ஒவ்வொருவரும் ஏராளமான அனுபவத்தை கொண்டிருப்பார்கள் அவையனைத்தையும் ஃபயர் பேஸின் பயனாளர் இடைமுகப்பு வசதியானது மிகஎளிதாக கையாளுகின்றது திறமூல நூலகங்களால் வழங்கப்படும் பயனாளர் அனுபவங்களைஇதற்காக பயன்படுத்தி கொள்ளமுடியும் பிரபலமான கூகுளின் உள்நுழைவு , ஃபேஸ் புக்கின் உள்நுழைவு போன்ற சுட்டி அடையாளங்களான மின்னஞ்சல் முகவரி ,கடவுச்சொற்கள், கைபேசி எண்கள் ஆகியவற்றுடன் பயனாளர் இடைமுகப்பு தொடரோட்டத்தில்உள்நுழைவு செய்வதை கையாளுவதற்காக ஒரு கீழிறங்கு பட்டிமூலம் அறிந்தேற்பு தீர்வு செய்வதன் வாயிலாக ஃபயர்பேஸின் பயனாளர் இடைமுகப்பு வழங்குகின்றது ஃபயர்பேஸின் அறிந்தேற்பு வசதியானதுஐஓஎஸ், ஆண்ட்ராய்டு, இணையம் ,சி++,யுனிட்டி போன்றவைகளை ஆதரிக்கின்றது

5. ஃபயர்பேஸின் ஆய்வுகூடம்
ஆண்ட்ராய்டு ஆனது ஒரு திறமூல இயக்கமுறைமையாகும் அதனால் எந்தவொரு நபரும் இந்த இயக்கமுறைமையை பயன்படுத்தி கொள்ளவும் அல்லது மாறுதல் செய்து பயன்படுத்தி கொள்ளவும் முடியும் அதனால் கைபேசி உற்பத்தியாளர்கள் தங்களுடைய கைபேசியின் வன்பொருளை உருவாக்குவதில்மட்டும் கவணம் செலுத்தினால் போதும் ஏராளமான நிறுவனங்கள் பல்வேறு வகைகளில் பல்வேறு அளவுகளில்கைபேசி சாதனங்களை உருவாக்கினாலும் அவையனைத்தும் ஆண்ட்ராய்டு இயக்கமுறைமைகளில் மட்டும்செயல்படுமாறு உற்பத்தி செய்தால் போதுமானதாகும் இந்நிலையில் ஆண்ட்ராய்டில் செயல்படும் பயன்பாடுகளை உருவாக்கும் நிரலாளர்கள் தாம் உருவாக்கும்பயன்பாடானது எந்தவொரு ஆண்ட்ராய்டு இயக்கமுறைமை பதிப்புகளிலும் எந்தவொரு ஆண்ட்ராய்டு செயல்படும் சாதனங்களிலும் திரையின் நீளஅகலஅளவுகள் எவ்வளாக இருந்தாலும் செயல்படுமாறு கட்டமைத்திடவேண்டும் அதற்காக கைகொடுக்க வருவதுதான் ஃபயர்பேஸின் ஆய்வுக்கூடம் கூகுளின் தரவுகளின்மையத்தில் நேரடியாக எந்தவுொரு புதிய ஆண்ட்ராய்டு சாதனமாக இருந்தாலும் நம்முடைய ஆண்ட்ராய்டு பயன்பாட்டினை இந்த ஃபயர்பேஸின் ஆய்வுகூடத்தின் வாயிலாக பரிசோதித்து பார்க்கலாம் குறிப்பிட்ட கட்டமைப்புகளுடைய சாதனத்தின் நம்முடைய பயன்பாடு செயல்படும்போது எழும் பிரச்சினைகளை தெரிந்து அதற்கான தீர்வினை முன்கூட்டியே காண உதவுகின்றது இதன்வாயிலாக நம்முடைய பயன்பாடுகளில் Robo Test,Instrumentation Test அல்லது Game Loopஆகிய பல்வேறுபரிசோதனைகளைசெய்து சரிபார்த்திடலாம் இவையனைத்தும் நம்முடைய பயன்பாடு செயல்படும்போது ஏற்படும் இறுதிவிளைவுகள் என்னவாக இருக்குமென காணஉதவுகின்றன இவ்வாறான பரிசோதனையின் முடிவாக நம்முடைய பயன்பாடுகளை செயல்படுத்துவதால் உருவாகும் இறுதிவிளைவுகளை கானொளி காட்சிகள், செயல்வரைபடம், திரைக்காட்சி, திறன் அறிக்கை போன்றவைகளாக வழங்குகின்றது இவைகளின் வாயிலாக வெவ்வேறு ஆண்ட்ராய்டு சாதனங்களில் நம்முடைய பயன்பாடு எவ்வாறு செயல்படும் என அறிந்து கொள்ளலாம் ஃபயர்பேஸின் ஆய்வுகூடமானது ஆண்ட்ராய்டினை மட்டும் ஆதரிக்கின்றது

6. ஃபயர்பேஸை செயல்படுத்துதல்(host)
ஒரு எளிமையான HTML அடிப்படையிலானஉரைகள் அல்லது உருவப்படங்கள் உள்ளடங்கிய இணைய பக்கங்களின் மேல்மீட்பு பட்டிகள் அனைத்தும் மாறாதது அல்லது நிலையானது என்ற நிலைதற்போது இல்லை அவையனைத்தும் அவ்வப்போது மாறிகொண்டே யிருக்கும் என்ற புதிய சகாப்தத்தில் நாமெல்லோரும் வாழ்ந்து வருகின்றோம் அதனால் ஏராளமான அசைவூட்டு படங்கள் ,கானொளிபடங்கள் போன்றவைகளடங்கிய குறிப்பாக இணைய பயன்பாடுகளானது அதனுடைய புதிய உள்ளடக்கங்களுக்காக புத்தாக்கம் செய்யவேண்டிய தேவையில்லாத பதிலிறு இணைய சகாப்தத்தில் வாழ்ந்து வருகின்றோம் இவையனைத்திற்கும் ஃபயர் பேஸின்முகப்பானது மிகபொருத்தமான இணைய பயன்பாடாகஅமைகின்றது நாம் பதிலிறு(responseive) இணைய பயன்பாட்டினை செயல்படுத்தி SSDஇன்பின்புலத்தினை செயல்படுத்ததுல் SSL சான்றிதழை செயல்படுத்துதல் போன்றவைகளை மட்டும் வழங்கினால் போதும் இவையனைத்தையும் ஃபயர் பேஸ் செயல்படுத்துதலில் ஒன்றாக வழங்குகின்றது நம்முடைய பயனாளர்களின் நம்பிக்கைகுரிய கைபேசி பயன்பாடுகளாக அல்லது இணையபக்கங்களாக அல்லது இணைய பயன்பாடுகளாக இதனை செயல்படுத்திடமுடியும்

ஃபயர்பேஸ்-10-தொடர்-ஃபயர்பேஸின் பல்வேறு வசதிவாய்ப்புகள்-2

இயக்கநேர இணைப்புகள்
பயனாளர்கள் அனைவரையும் கைபேசி பயன்பாடுகளை மட்டும் சுற்றிசுற்றி வருமாறான ஒரு செயல்பாட்டு வழியாக ஃபயர்பேஸின்இயக்கநேர இணைப்புகளானவை அமைகின்றன. மேலும் குறிப்பிட்ட இடத்தில் தேவையான கைபேசி பயன்பாடுகள் நிறுவப்படவில்லை யென்றாலும் பரவாயில்லை அதற்காக பயனாளர்கள் தயங்கி நம்பிக்கை இழந்து நின்றிடாமல் தம்முடைய செயலாக்கத்தை தொடர்ந்து செயல்படுத்து-வதற்காக இந்தஇயக்கநேர இணைப்புகளை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் போதும்உடன் நிறுவுகை செய்வதற்கான இணைப்புகளை இந்த இயக்கநேர இணைப்பு-களானவை தானாகவே மீட்டெடுக்கின்றன,மேலும் இந்தஇயக்கநேர இணைப்புகளானவை எந்தவொரு சாதனங்களிலும் கைபேசியிலும் மேஜைகணினியிலும் செயல்படும் திறன்-மிக்கது. இந்தஇயக்கநேர இணைப்புகளானவை கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது அப் ஸ்டோர் இருக்குமிடத்திற்கு அழைத்து சென்று தானாகவே பதிவிறக்கம்செய்து நிறுவுகை செய்து கொள்ளும் வசதியை அளிக்கின்றன

1

பயன்பாடுகளை பணமாக்க உதவுவிடும் AdMob எனும் வசதி
AdMob என்பது கைபேசிபயன்பாட்டிற்குள் விளம்பரங்களை கொண்டுவரவேண்டும் என்ற இலக்குடன் கூடியஒரு கைபேசி விளம்பரதளமாகும் பொதுவாக கைபேசிபயன்பாடுகளை உருவாக்குநர்களின் முதன்மையான செயலே அதனை தொடர்ந்து நன்கு மேம்படுத்தி பணமாக்குவதுதான் மேலும் கூகுளானது பயனாளர்களுக்கு உதவிடுவதற்காக கணிசமான விளம்பரங்களை விளம்பரப்படுத்துகின்றன. அதைவிட இவ்வாறு வருவாய் ஈட்டக்கூடிய பல்வேறு கருவிகள் ஃபயர்பேஸில் முன்கூட்டியே கட்டமைக்கப்பட்டே கிடைக்கின்றன ஆயினும் நம்மில் பெரும்பாலானோர் இந்த கட்டணமில்லாத அற்புதமான செயலை பயன்படுத்தி கொள்வதே யில்லை இவ்வாறான பயன்பாட்டினை பயன்படுத்திடும் செயலையும் விளம்பர தரவுகளையும் வழங்குவதற்காக ஃபயர்பேஸ் பகுப்பாய்வுடன் இணைந்து இந்த AdMobஎன்பது செயல்படுகின்றது என்ற செய்தியை மனதில் கொள்க

2
சிறந்த ஆவணங்களை வழங்குதல்
ஆண்ட்ராய்டு ,ஐஓஎஸ் போன்ற எந்தவொரு தளத்தில் நாம் இருந்தாலும் ஃபயர் பேஸானது அவ்விடத்திலுள்ள ஆவணங்களை படித்திட உதவுகின்றது மேலும் நாம் எந்த ஆவணங்களை உருவாக்க விரும்புகின்றோமோ அதனை அனுமதிக்கின்றது இதிலுள்ள Spark என்பதை இலவசமகவும் Flame, Blazeஆகியவை கட்டணத்துடனும் நாம் பயன்படுத்தி கொள்ள தயாராக இருக்கின்றன இவை கட்டணத்துடன் கூடியதாக இருந்தாலும் கட்டணமில்லாத Dynamics Linksபோன்ற வசதிகளை ஒரே இடத்தில் பயன்படுத்தி கொள்ளவும் இது அனுமதிக்கின்றது

3
கைபேசி பயன்பாடுகளின் பின்புல சேவை
இந்த ஃபயர்பேஸானது ஏராளமான பயன்பாடுகளை கையாளுகின்றது அதாவது நிகழ்நேர தரவுதளசேவை, பயனாளர்களை அங்கீகரித்தல், தளங்களை / பயன்பாடுகளை நிறுவகை செய்தல் ஆகிய பல்வேறு செயல்களை எளிதாக செயல்படுத்துவதற்கான வலுவான பின்புல சேவையை இந்த ஃபயர் பேஸானது வழங்குகின்றது மேலும் அறிவிப்புகள், மேகக்கணி செய்தி, பகுப்பாய்வு, விளம்பரங்கள், கணினிஇயங்காமல் நின்றுபோன அறிக்கை என்பன போன்ற வசதிகளையும் பயனாளர்களுக்கு பின்புல சேவையாக இந்த ஃபயர் பேஸானது அளிக்கின்றது அதுமட்டுமல்லாது பயனாளர்களின் பின்புல சேவைக்காக கூகுளின் ப்ளே ஸ்டோரிலும் அப்ஸ்டோரிலும் நாளுக்கு நாள் புதிய பயன்பாடுகளையும் வசதி வாய்ப்புகளையும் சேர்ந்து கொண்டேயுள்ளன மேலும் இவ்வாறான கைபேசி பயன்பாடுகளை பின்தொடரும் பயனர்களின் எண்ணிக்கையில் ஒரு பெரிய எழுச்சியாக அதாவது கடந்த அக்டோபர் 2014இல் ஏறத்தாழ 100,000 பயனாளர்கள் இவைகளை பதிவிறக்கம் செய்து கொண்டார்கள் அதனை தொடர்ந்து தற்போது சுமார்450,000 பயனாளர்கள் கூகுள் ப்ளே ஸ்டோரிலும் அப்ஸ்டோரிலும் இருந்து தமக்கு தேவையான பயன்பாடுகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்கின்றனர்
மேகணினி விளையாட்டிற்கான எளிதான பயன்பாட்டு மேடை
தற்போது பலர் சுத்தமான இடைமுகத்திற்காக Azure என்பதையும், வேறுபலர் எளிய அமைப்புகளுக்காக Herokuஎன்பதையும், மேலும் பலர் பெரிய வரிசையான கருவிகளுக்காக AWS என்பதையும் மேககணி விளையாட்டுகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர் ஆயினும் இவை இன்னும் துவக்கநிலை வசதிகளையே பயனாளர்களுக்கு வழங்கி கொண்டிருக்கின்றன அதனால் எளிய விலை, ஏராளமான வசதிவாய்ப்புகள், கைபேசிமையம், ஒரேயொரு SDK, எளிதாக புரிந்துகொள்ளக்கூடிய ஆவணங்கள் ஆகிய நன்மைகளை வழங்க தயாராக இருக்கும் புதிய வகை விளையாட்டு வீரரான , சுத்தமான கட்டுகளையும் முகப்பையும் கொண்ட இந்த ஃபயர்பேஸின் மேககணினி தளத்திற்கு பலநிறுவனங்களும் தற்போது மாறத்தயாராகவுள்ளன

ஃபயர்பேஸ்-9-தொடர்-ஃபயர்பேஸின் பல்வேறு வசதிவாய்ப்புகள்

இந்த ஃபயர் பேஸிலுள்ளஒரு சில வசதி வாய்ப்புகளை ஒரு பறவை பார்த்திடுவோம்.

முன்கூட்டியே கட்டமைக்கப்பட்ட கட்டணமற்றபகுப்பாய்வு
அனைத்து ஃபயர்பேஸின் பயன்பாடுகளிலும் கூகுளிலிருந்து பெறப்பட்ட முன்கூட்டியே கட்டமைக்கப்பட்ட கட்டணமற்ற வலுவான பகுப்பாய்வு தொகுப்பு உள்ளது பயனாளர்கள் நம்முடைய பயன்பாடுகளில் என்ன செய்தாரகள் என காணவும் விளம்பர நடவடிக்கைகள் எவ்வாறு செயல்படுத்தப படுகின்றன எனவும் பல்வேறு வலைபின்னல்களின் தன்மை என்னவெனவும் வரையறுக்கப்பட்ட வரையறைக்குள் பயனாளிகளின் குழுக்கள் எவ்வாறு செயல்படுகின்றனர் என காணவும் இதன் வாயிலாக முடியும் கூகுளின் மேககணினி தளத்தின் பயன்பாடுகளின் அதே அமைவுகளை கொண்டு நம்முடைய ஃபயர்பேஸின் பயன்பாடுகளிலும் தரவுகளிலும் பயன்படுத்தி கொள்ளமுடியும் மேம்பட்ட வினா வேண்டுமெனில் பேரளவு வினாவிற்கு பதிவேற்றம் செய்து கொள்ளலாம்
நம்முடைய ஃபயர்பேஸின் முகப்பு பக்கத்தில் பின்வரும் குறிமுறை வரிகளை கொண்டு ஆண்ட்ராய்டு பயன்பாடுகளின் நிகழ்வுகளை கையாளமுடியும்
Bundle bundle = new Bundle();
bundle.putString(FirebaseAnalytics.Param.ITEM_ID, id);
bundle.putString(FirebaseAnalytics.Param.ITEM_NAME, name);
bundle.putString(FirebaseAnalytics.Param.CONTENT_TYPE, “image”);
mFirebaseAnalytics.logEvent(FirebaseAnalytics.Event.SELECT_CONTENT, bundle);
மேலும் இதுபோன்றஆண்ட்ராய்டு பயன்பாடுகளின் நிகழ்வுகளை கையாளுவதற்கான குறிமுறைவரிகள் வேண்டுமெனில் https://firebase.google.com/docs/analytics/ என்ற இணையதளபக்கத்திற்கு சென்று பதிவிறக்கம்செய்து கொள்க
ஃபயர்பேஸில் கோப்புகளை SDK வாயிலாக சேமித்து வைத்து கொள்ளுதல்
தற்போது ஃபயர்பேஸானது நம்முடைய அனைத்து கோப்புகளையும் SDK வாயிலாக தேக்கிவைத்து கொண்டு மேலேற்றம் செய்திடுகின்றது இதற்காகவென AWS ,S3 என்பன போன்று நாம் இதில் அல்லது வேறு எங்கும் நமக்கென தனியாக இணைய கணக்கு எதுவும் துவங்கத் தேவையில்லை ஆயினும் SDK வாயிலாக நம்முடைய கோப்புகளை அத்தாட்சி பெறுவது மேலேற்றம் செய்வது ஆகிய பணிகளை கையாளுவதற்கான ஒருசில குறிமுறைவரிகள் பின்வருமாறு இவ்வாறான கோப்புகளனைத்தையும் இதனுடைய ஒரேமுகப்பு பக்கத்தில் காணலாம்

// grab our references
var auth = firebase.auth();
var storageRef = firebase.storage().ref();
// function to handle file upload
function handleFileSelect(event) {
// grab the file
var file = event.target.files[0];
// create the metadata
var metadata = {
‘contentType’: file.type
};
// push the file
var uploadTask = storageRef.child(‘images’).put(file, metadata);
}
// sign the user in when the page loads
// storage can only be used if signed in (can be anonymous signin)
win dow.onload = function() {
// Sign the user in anonymously since accessing Storage requires the user to be authorized.
auth.signInAnonymously().then(function(user) {
console.log(‘Anonymous Sign In Success’, user);
}).catch(function(error) {
console.error(‘Anonymous Sign In Error’, error);
});
}
கோப்புகளை எளிதாக பாதுகாக்கலாம்
உண்மையான பயனாளர் நேரடியான தரவுதள கோப்புகளை கையாளுவதை போன்றே இந்த SDK விலும் தங்களுடைய கோப்புகளைமிகஎளிதாக பாதுகாப்பாக வைத்து பராமரித்திடலாம் நம்முடைய பயன்பாடுகளில் பல்வேறு புதிய வசதிகளுடனான புதிய பதிப்புகள் வெளியிடப்படும்வரை காத்திருக்காமல் தேவைப்படும்போதல்லாம் தேவையான பயன்களை இயலுமை செய்து அல்லது தேவையற்றதை நீக்கம்செய்து கொண்டு மாறிகளை நிகழ்நிலைபடுத்தி கொள்ளலாம் இதற்கானஅனைத்து கட்டமைவுகளும் இதன்முதன்மை பக்கத்திலேயே நாம் பயன்படுத்தி கொள்ள தயாராக இருக்கின்றன இவ்வாறான மாறிகளை config.getBoolean(‘holiday_promo_enabled’);எனும் கட்டளைவரிவாயிலாக அமைத்து கொள்க
பரிசோதனை சாலை
ஆண்ட்ராய்டு சாதனமுழுவதுமுள்ள பயன்பாடுகளனைத்தையும் பரிசோதனை பயன்பாட்டின் வாயிலாக ஆண்ட்ராய்டு devices, shapes, sizes, screens ஆகியவற்றின் logs , videos ,screenshotsஆகியவற்றை இந்த ஃபயர்பேஸ் முகப்பு திரையின்பரிசோதனை சாலைவாயிலாக பரிசோதித்து சரிபார்த்திடலாம்

மேககணினி செய்திகள்
முந்தைய கூகுளின் மேககணினி செய்திகளே தற்போதைய ஃபயர்பேஸின் மேககணினி செய்தி(Firebase Cloud Messaging சுருக்கமாக FCM ஆக) கட்டணமில்லாமல் கிடைக்கின்றது பயனாளர்கள் எந்தவொரு சாதனத்தினைகைவசம் வைத்திருந்தாலும் அவர்களுக்கு எளிதாக இந்த FCM கிடைக்கின்றது தற்போது நாளொன்றிற்கு 1.7பில்லியன் பயனாளர்களுக்கு பல்வேறு வகையான 2 பில்லியன் சாதனங்களுக்கு ஃபயர் பேஸின் பல்வேறு வகையான பயன்பாடுகளின் வாயிலாக இந்த FCM கிடைக்கின்றது சாதனம் அல்லது பயன்பாடு செயல்படவில்லையன்றாலும் அதனை சரிசெய்து பழையவாறு செய்வதற்கான Dashboard Error Reportsஎனும் அறிக்கைகளும் பயனாளர்களுக்கு கிடைக்கச் செய்யப்படுகின்றது அதிகபாதிப்புஏற்படுத்திடும் அல்லது பாதிப்புஏற்படுத்தாத பிழைகளின் தரவுகளை சேகரித்துபிரச்சினைகளை சரிசெய்தல் ஒருங்கிணைந்த பகுப்பாய்வுசெய்தல் அனைத்து பயனாளர்களுக்கும் தேவையான அறிவிப்பை அனுப்புதல் ஆகிய அனைத்துபணிகளும் ஃபயர் பேஸின் முகப்புதிரையின் இந்த மேககணினி செய்திகளின் வாயிலாக செயல்படுத்தபடுகின்றது

ஃபயர்பேஸ்-8-தொடர்- ஃபயர்பேஸின் பாதுகாப்பு

JSONபோன்ற பொருட்களை ஃபயர்பேஸ் பயன்பாட்டிற்குள்அமைவுசெய்து அவைகளின் பாதுகாப்பு விதிகளை கையாளுவதன்வாயிலாக ஃபயர்பேஸின் பாதுகாப்பானது உறுதி செய்யப்படுகின்றது இந்த பயன்பாட்டின் உள்பகுதியில் பக்கப்பட்டியை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின்னர் விரியும் திரையில் RULESஎனும் தாவிப்பக்கத்திற்குள் சென்றால் இந்த JSON எனும் பாதுகாப்பு விதிகள் வீற்றிருப்பதை காணலாம் நாம் இந்த பகுதியில் ஓரிரு எடுத்துக் காட்டுகளின் வாயிலாக ஃபயர்பேஸில் தரவுகளானது எவ்வளவு பாதுகாப்பாக உள்ளது என காண்போம்
எழுதுதலும் படித்தலும்
பின்வரும் குறிமுறைவரிகளின் துனுக்குகளின் வாயிலாக ஃபயர்பேஸிற்குள் பாதுகாப்பிற்கான விதிகளானது /users/’$uid’/என்பதை பயன்படுத்திடும் அனுமதி பெற்றவர்கள் மட்டும் எழுதுவதற்கு ம் படிப்பதற்கும் அனுமதிக்கின்றது ஆயினும் இதிலுள்ள uidஎனும் அதே அனுமதியானது எந்தவொரு பார்வையாளர்களும் படிப்பதற்கு மட்டும் அனுமதிக்கின்றது என்பதை காணமுடியும் இதற்கான எடுத்துகாட்டுக் குறிமுறைவரிகள் பின்வருமாறு
{
“rules”: {
“users”: {
“$uid”: {
“.write”: “$uid === auth.uid”,
“.read”: true
}
}
}
}
ஏற்புகை செய்தல்
பின்வரும் எடுத்துகாட்டில் உள்ள குறிமுறைவரிகளின் துனுக்குகளைகொண்டு நாம் சரத்திற்கான தரவுகளை செயல்படுத்திடலாம்
{
“rules”: {
“foo”: {
“.validate”: “newData.isString()”
}
}
}
மேலே நாம் கண்டுவந்த இரு எடுத்துகாட்டுகளிலும் ஃபயர்பேஸினுடைய மேலோட்டமான பாதுகாப்பு விதிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன . இந்த விதிகள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதன் வாயிலாக மட்டுமே, அதை நம்முடைய ஃபயர் பேஸின் பயன்பாட்டின் உட்பகுதியில் நாமே இணைத்து கொள்ளமுடியும் என்ற மிகமுக்கியமான செய்தியை மனதில் கொண்டு செயல்படுக
பயன்படுத்துவது(Deploying)
இந்த பகுதியில், நம்முடைய பயன்பாட்டை ஃபயர் பேஸின் சேவையகத்தில் எவ்வாறு செயல்படுத்திடவேண்டும் என்பதை நாம் காண்போம்
இதனை துவங்குவதற்குமுன் ஒருசிலஎழுத்துகளை கொண்ட வரியை index.html எனும் டேக்கிற்குள் பின்வருமாறு சேர்த்திடுக

WELCOME TO FIREBASE TUTORIALS APP

படிமுறை-1 ஃபயர்பேஸ் கருவிகளை நிறுவுகைசெய்தல்
முதல் படிமுறையில் பொதுவாக command promptஎனும் சாளரத்தில்தான் ஃபயர்பேஸ் கருவிகளை நிறுவுகை செய்திடுவார்கள் அதனுடைய கட்டளைவரி பின்வருமாறு
npm install -g firebase-tools
படிமுறை-2ஃபயர்பேஸ் பயன்பாட்டினை துவக்கநிலையில் வைத்தல்
இரண்டாவது படிமுறையாக command promptஎனும் சளரத்தில் ஃபயர்பேஸிற்குள் பின்வரும் கட்டளைவரியின் வாயிலாக உள்நுழைவுசெய்திடுக
firebase login
பின்னர் command promptஎனும் சாளரத்தில்நம்முடைய பயன்பாட்டின் முதன்மை கோப்பகத்தை திறந்து பின்வரும் கட்டளைவரியைசெயல்படுத்திடுக
firebase init
இந்த கட்டளையானது ஃபயர்பேஸ் பயன்பாட்டின் மதிப்பை துவக்கநிலைக்கு கொண்டு சேர்த்திடும்
குறிப்பு நாம் இயல்புநிலை கட்டமைப்பை பயன்படுத்திடுவதாக இருந்தால்public எனும் கோப்பகத்தை உருவாக்கி index.htmlஎன்பதை அதற்குள் இருக்குமாறு செய்திடுக அதுதான் நம்முடைய பயன்பட்டின் துவக்கப்புள்ளியாகும் என்ற செய்தியை மனதில் கொண்டு செயல்படுக தொடர்ந்து நம்முடைய பயன்பாட்டின் கோப்புகளை இதே கோப்பகத்திற்குள் நகலெடுத்து கொண்டுவந்து சேர்த்திட்டால் நம்முடைய பணிஎளிதாகிவிடும் என்ற செய்தியையும் மனதில் கொள்க
படிமுறை-3 ஃபயர்பேஸ்பயன்பாட்டினை பயன்படுத்திகொள்ளுதல்
இதுதான் நம்முடைய கடைசி படிமுறையாகும் அதனால் மிககவணமுடன் பின்வரும் கட்டளைவரியை command promptஎனும் சாளரத்தில் உள்ளீடுசெய்து செயல்படுத்திடுக
firebase deploy
இந்த கட்டளைவரியை செயல்படுத்தியவுடன் கணினியானது நம்முடைய ஃபயர்பேஸ் பயன்பாட்டின் இணைய முகவரிக்கு நம்மை அழைத்து செல்லும் அவ்வாறு அழைத்திடும் இணையமுகவரி https://tutorialsfirebase.firebaseapp.com என்பதாகும் இந்த இணைப்பை செயலபடுத்தினால் உடன் பின்வருமாறு திரைத்தோற்றம் அமையும்

ஃபயர்பேஸ்-7-தொடர்-புதியதானஎந்தவொன்றையும் அறிந்தேற்பு செய்தல்

இந்த பகுதி்யில் பெயரில்லாத எந்தவொரு பயனாளரையும் எவ்வாறு அறிந்தேற்பு செய்தல் என காணவிருக்கின்றோம் மிகமுக்கியமாக முந்தைய பகுதிகளில் நாம் பார்த்து வந்த மாதிரியான அதே செயல்முறைகள்தான் இதிலும் செயல்படுத்திடவிருக்கின்றோம் அதேபோன்று பின்வரும் படிமுறைகளை பின்பற்றிடுக
படிமுறை-1- anonymousAppஎனும் பயன் பாட்டினை உருவாக்குதல்: ஃபயர் பேஸில் AnonymousApp என்ற இணைப்பின் வாயிலாக பெயரில்லாத எந்தவொன்றையும் அறிந்தேற்பை இயலுமை செய்வதற்கும் கையாளுவதற்கும் ஆனஒரு AnonymousAppஐ நம்மால் உருவாக்கி கொள்ளமுடியும்.இதனை உருவாக்கியவுடன் அதிலுள்ளKeys and Access Tokens எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் திரையில்API Key , API Secret ஆகிய இரண்டு பொத்தான்களும் அதில் வீற்றிருப்பதை காணலாம்
படிமுறை2 பெயரில்லாத எந்தவொன்றினையும் அறிந்தேற்பை இயலுமை செய்தல் (Enable Anonymous Authentication): ஃபயர்பேஸின் முகப்புதிரையை தோன்றசெய்திடுக பின்னர் அதனுடைய பட்டியலின் இடதுபுறத்தின் Authஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் ஃபயர்பேஸில் நாம் பயன்படுத்தி கொள்வதற்கு தயாராக உள்ள வழிமுறை களின் பட்டியலை திரையில் பட்டியலிடுவதற்கு tabஎனும் பட்டியலில் உள்ள SIGN_IN_METHODS எனும் கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் பட்டியலில் Anonymous என்பதை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து திரையில் தோன்றிடுமாறு திறந்து கொள்க அதனைதொடர்ந்து API Key , API Secret ஆகிய இரு பொத்தான்களை படிமுறை-1இல் கூறியவாறு பின்பற்றி இதில் சேர்த்திட வேண்டும் பிறகுcallback URL என்பதலிருந்து இவ்விரண்டையும் நகலெடுத்துவந்து நம்முடைய Anonymousபயன்பாட்டில் ஒட்டி சேர்த்திடுக அதன்பின்னர் Settings எனும் தாவிப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் விரியும் Settings எனும் தாவிபொத்தானின் திரையில் நம்முடைய Anonymous எனும் பயன்பாட்டில் இந்த callback URL ஐ காணமுடியும்
படிமுறை3 பொத்தான்களை சேர்த்தல்:பிறகு index.html என்பதிலுள்ள bodyடேக் என்பதன் துவக்கத்தில் பின்வரும் குறிமுறைவரிகளை உள்ளீடு செய்து Anonymous Sign in , Anonymous Sign out ஆகிய இரு பொத்தான்களை சேர்த்திடுக.
Anonymous Signin
Anonymous Signout
படிமுறை4செயலிகளை அறிந்தேற்புசெய்தல்: தற்போது பெயரில்லாத எந்தவொன்றும் நம்முடைய ஃபயர்பேஸை அறிந்தேற்புசெய்வதற்காக signInAnonymously()என்ற வழிமுறையை பயன்படுத்தி கொள்ளமுடியும் இதனை செயல்படுத்திட பின்வரும் எடுத்துக் காட்டின் குறிமுறை வரிகளை கொண்டு index.js எனும் கோப்பிற்குள் அதற்கான செயலிகளை உருவாக்கிடுக
Firebase.auth().signInAnonymously()
.then(function() {
console.log(‘Logged in as Anonymous!’)
}).catch(function(error) {
var errorCode = error.code;
var errorMessage = error.message;
console.log(errorCode);
console.log(errorMessage);
});
இணையஇணைப்பில்லாத போதும் செயல்படும் ஃபயர்பேஸின் திறன்கள்
இந்த பகுதியில் ஃபயர்பேஸானது இணையஇணைப்பின் நிலையை எவ்வாறு கையாளு-கின்றது என காணவிருக்கின்றோம்
பின்வரும் குறிமுறைவரிகளை index.jsஎனும் கோப்பிற்குள் உள்ளீடுசெய்து இணை.ய இணைப்பின் தற்போதைய மதிப்பு எவ்வளவுஎன சரிபார்த்திடமுடியும்
var connectedRef = firebase.database().ref(“.info/connected”);
connectedRef.on(“value”, function(snap) {
if (snap.val() === true) {
alert(“connected”);
} else {
alert(“not connected”);
}
});
இந்த குறிமுறைவரிகளைகொண்ட பயன்பாட்டினை செயல்படுத்தியவுடன் மேல்மீட்பு பட்டியலாக இணைப்பின் நிலையை நமக்கு திரையில் காண்பிக்கும்
இவ்வாறான மேலேகூறிய செயலியை பயன்படுத்தி இணையஇணைப்பின் தற்போதைய நிலை எவ்வாறுஉள்ளதுஎன அவ்வப்போது அறிந்து கொள்ளமுடியும் அதுமட்டுமல்லாது நம்முடைய பயன்பாட்டையும் அதற்கேற்றவாறு மேம்படுத்தி கொள்ளமுடியும்

ஃபயர் பேஸ் தொடர்-6-ட்விட்டர் , GitHub ஆகியவற்றின் அறிந்தேற்பு

ட்விட்டர் எனும் சமுதாயஇணையபக்கமானது இந்த ஃபயர் பேஸை எவ்வாறு அறிந்தேற்பு செய்கின்றது என காணவிருக்கின்றோம் இதற்காக பின்வரும் படிமுறைகளை பின்பற்றிடுக
படிமுறை-1- ட்விட்டர்எனும் பயன் பாட்டினை உருவாக்குதல்(Create TwitterApp): ஃபயர் பேஸில் TwitterApp என்ற இணைப்பின் வாயிலாக ட்வி்ட்டர் எனும் சமுதாய இணைய பக்கமானது அறிந்தேற்பை இயலுமை செய்வதற்கும் கையாளுவதற்கும் ஆன ஒரு TwitterAppஐ நம்மால் உருவாக்கி கொள்ளமுடியும் இதனை உருவாக்கியவுடன் அதிலுள்ளKeys and Access Tokens எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் திரையில்API Key , API Secret ஆகிய இரண்டு பொத்தான்களும் அதில் வீற்றிருப்பதை காணலாம்
படிமுறை-2 ட்வி்ட்டர் எனும் சமுதாய இணைய பக்கமானது அறிந்தேற்பை இயலுமை செய்தல் (Enable Twitter Authentication):ஃபயர்பேஸின் முகப்புதிரையை தோன்றசெய்திடுக பின்னர் அதனுடைய பட்டியலின் இடதுபுறத்தின் Authஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் ஃபயர்பேஸில் நாம் பயன்படுத்தி கொள்வதற்கு தயாராக உள்ள வழிமுறை களின் பட்டியலை திரையில் பட்டியலிடுவதற்கு tabஎனும் பட்டியலில் உள்ள SIGN_IN_METHODSஎனும் கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் பட்டியலில்Twitter என்பதை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து திரையில் தோன்றிடுமாறு திறந்து கொள்க அதனைதொடர்ந்து API Key , API Secret ஆகிய இரு பொத்தான்களைபடிமுறை-1இல் கூறுகின்றவாறு பின்பற்றி இதில் சேர்த்திட வேண்டும் பிறகுcallback URL என்பதலிருந்து இவ்விரண்டையும் நகலெடுத்துவந்து நம்முடைய ட்விட்டர் பயன்பாட்டில் ஒட்டி சேர்த்திடுக அதன்பின்னர் Settings எனும் தாவிபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன்விரியும் Settings எனும் தாவிபொத்தானின் திரையில் நம்முடைய Twitter எனும் பயன்பாட்டில் இந்த callback URL ஐ காணமுடியும்
படிமுறை-3 பொத்தான்களை சேர்த்தல்:பிறகு index.html என்பதிலுள்ள bodyடேக் என்பதன் துவக்கத்தில் பின்வரும் குறிமுறைவரிகளை உள்ளீடு செய்து Twitter Sign in , Twitter Sign out ஆகிய இரு பொத்தான்களை சேர்த்திடுக
Twitter Signin
Twitter Signout
படிமுறை-4செயலிகளை அறிந்தேற்புசெய்தல்: தற்போதுட்விட்டர் எனும் சமுதாய இணைய பக்கமானது நம்முடைய ஃபயர்பேஸை அறிந்தேற்புசெய்வதற்காக பின்வரும் குறிமுறை வரிகளை கொண்டு index.js எனும் கோப்பிற்குள் அதற்கான செயலிகளை உருவாக்கிடுக
var provider = new firebase.auth.TwitterAuthProvider();
function twitterSignin() {
firebase.auth().signInWithPopup(provider)
.then(function(result) {
var token = result.credential.accessToken;
var user = result.user;
console.log(token)
console.log(user)
}).catch(function(error) {
console.log(error.code)
console.log(error.message)
});
}
function twitterSignout() {
firebase.auth().signOut()
.then(function() {
console.log(‘Signout successful!’)
}, function(error) {
console.log(‘Signout failed!’)
});
}
இதனை தொடர்ந்து தற்போது நம்முடையபயன்பாட்டினை துவக்கி sigin ,signoutஆகிய இரு பொத்தான்களை சொடுக்குதல் செய்து ட்வி்ட்டர் எனும் சமுதாய இணைய பக்கமானதுஅறிந்தேற்பை இயலுமை செய்வதை தூண்டிவிடமுடியும் உடன் கணினியின் பணியகமானது ட்வி்ட்டர் எனும் சமுதாய இணைய பக்கத்தின் அறிந்தேற்பு செயல் வெற்றிகரமாக முடிவடைந்ததாக திரையில் காண்பிக்கும்

1.1

GitHubஎனும்இணையபக்கம் அறிந்தேற்பு(GitHub Authentication)

அதனை தொடர்ந்து பின்வரும்பகுதியில் GitHubஆனது இந்த ஃபயர் பேஸை எவ்வாறு அறிந்தேற்பு செய்கின்றது என காணவிருக்கின்றோம் இதற்காக பின்வரும்படிமுறைகளை பின்பற்றிடுக
படிமுறை-1 GitHubஎனும்இணையபக்கம் அறிந்தேற்பைஇயலுமைசெய்தல்:
முதலில் ஃபயர்பேஸின் முகப்புதிரையை தோன்றசெய்திடுக பின்னர் அதனுடைய திரையிலுள்ள பட்டியலின் இடதுபுறத்தின் Authஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் ஃபயர்பேஸில் நாம் பயன்படுத்தி கொள்வதற்கு தயாராக உள்ள வழிமுறை களின் பட்டியலை திரையில் பட்டியலிடுவதற்கு tabஎனும் பட்டியலில் உள்ள SIGN_IN_METHODSஎனும் கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் பட்டியலில் Callback URL என்பதை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து திரையில் தோன்றிடுமாறு திறந்து கொள்க அதனைதொடர்ந்து Client ID ,Client Secret ஆகிய இரு பொத்தான்களைபடிமுறை-2இல் கூறுகின்றவாறு பின்பற்றி இதில் சேர்த்திட வேண்டும் படிமுறை-2 Github பயன்பாட்டினை உருவாக்குதல்(Create Github App):Github எனும் இணைய பக்கமானது அறிந்தேற்பை இயலுமை செய்வதற்குGithub Appஎனும் பயன்பாட்டினை உருவாக்கிடவேண்டும்இதற்காக முதலில் Github Appஎனும் இணைப்பினை பின்பற்றி Github Appஐ உருவாக்கிடுக ஃபயர்பேஸின்Authorization callback URLஎனும் புலத்திற்குள் Callback URL என்பதை நகலெடுத்து கொண்டுவந்து சேர்த்திடுக
உடன் Callback URL எனும் பயன்பாடு உருவாகிவிடும் அதனை தொடர்ந்து GitHub எனும் பயன்பாட்டிலிருந்து இந்த ஃபயர் பேஸிற்கு Client ID ,Client Secretஆகிய இரண்டு பொத்தான்களையும் நகலெடுத்துவந்து சேர்த்திடுக
படிமுறை-3 பொத்தான்களை சேர்த்தல்:பிறகு index.html என்பதிலுள்ள bodyடேக் என்பதன் துவக்கத்தில் பின்வரும் குறிமுறைவரிகளை உள்ளீடு செய்திடுக
Github Signin
Github Signout
படிமுறை-4 செயலிகளை அறிந்தேற்பு: தற்போதுGithub எனும் இணைய பக்கம் அறிந்தேற்புசெய்வதற்காக பின்வரும் குறிமுறை வரிகளை கொண்டு index.js எனும் கோப்பிற்குள் signin signoutஆகிய இரு செயலிகளை உருவாக்கிடுக
var provider = new firebase.auth.GithubAuthProvider();
function githubSignin() {
firebase.auth().signInWithPopup(provider)
.then(function(result) {
var token = result.credential.accessToken;
var user = result.user;
console.log(token)
console.log(user)
}).catch(function(error) {
var errorCode = error.code;
var errorMessage = error.message;
console.log(error.code)
console.log(error.message)
});
}
function githubSignout(){
firebase.auth().signOut()
.then(function() {
console.log(‘Signout successful!’)
}, function(error) {
console.log(‘Signout failed’)
});
}
தற்போது நம்முடையபயன்பாட்டினை துவக்கி sigin ,signoutஆகிய இரு பொத்தான்களை சொடுக்குதல் செய்து GitHub
எனும் இணைய பக்கமானது அறிந்தேற்பை இயலுமை செய்வதை தூண்டிவிடமுடியும் உடன் கணினியின் பணியகமானது GitHubஎனும் இணைய பக்கத்தின்அறிந்தேற்பு செயல் வெற்றிகரமாக முடிவடைந்ததாக திரையில் காண்பிக்கும்

1.2

ஃபயர் பேஸ் தொடர்-5-மின்னஞ்சலை அங்கீகரித்தல்

பயனாளரை உருவாக்குதல்(Create user): ஃபயர் பேஸில் மின்னஞ்சல்களை கையாளுவதற்கான ஒரு பயனாளரை உருவாக்கி அங்கீகரிப்பதற்கு create User With Email And Password(Email ,Password )எனும் வழிமுறையை பயன்படுத்தி கொள்ளமுடியும் இதற்காக பின்வரும் எடுத்துகாட்டில் வழங்கப்பட்டுள்ள குறிமுறை வரிகளின் வாயிலாக புதிய பயனாளர் ஒருவரை உருவாக்கிடும் செயலை செயல்படுத்திடுக
var email = “myemail@email.com”;
var password = “mypassword”;
firebase.auth().createUserWithEmailAndPassword(email, password).catch(function(error) {
console.log(error.code);
console.log(error.message);
});
இந்த கட்டளைவரிகளை செயற்படுத்தியவுடன் நம்முடையஃபயர்பேஸின் பணியகத்தின் திரையில் புதியதாக பயனாளர் ஒருவர் உருவாக்கப்பட்டிருப்பதை காணலாம்
1
உள்நுழைவு செய்தல்(Sign In) :இதனை தொடர்ந்து இந்த திரைக்குள் உள்நுழைவு செய்வதற்காக பெரும்பாலும் நாமனைவரும் வழக்கமாக உள்நுழைவு செய்வதை போன்று signIn With Email And Password( Email ,Password) எனும் வழிமுறையை பயன்படுத்தி கொள்க பின்வரும் எடுத்துகாட்டில் வழங்கப்பட்டுள்ள குறிமுறைவரிகளின் வாயிலாக இதனை செயல்படுத்திடுக
var email = “myemail@email.com”;
var password = “mypassword”;
firebase.auth().signInWithEmailAndPassword(email, password).catch(function(error) {
console.log(error.code);
console.log(error.message);
});
வெளியேறுதல்(Signout): இறுதியாக பயனாளரின் திரைக்குள் உள்நுழைவுசெய்து தத்தமது பணிகளை முடித்தபின்னர் Signout எனும் வழிமுறையில் வெளியேறமுடியும் பின்வரும் எடுத்துகாட்டில் வழங்கப்பட்டுள்ள குறிமுறைவரிகளின்வாயிலாக இதனை செயல்படுத்திடுக
firebase.auth().signOut().then(function() {
console.log(“Logged out!”)
}, function(error) {
console.log(error.code);
console.log(error.message);
});
கூகுள் எனும் இணைய உலாவியானதுஅங்கீகரித்தல்
தொடர்ந்து பின்வரும்பகுதியில் கூகுள் இணைய உலாவியானது இந்த ஃபயர் பேஸை எவ்வாறு அங்கீகரித்தல் செய்கின்றது என காணவிருக்கின்றோம் இதற்காக பின்வரும்படிமுறைகளை பின்பற்றிடுக
படிமுறை1- கூகுள்அங்கீகரித்தல்(Google Authentication):கூகுள் இணைய உலாவியானது ஃபயர் பேஸை அங்கீகரித்தலை இயலுமை செய்வதற்காக ஃபயர்பேஸின் முகப்புத்திரையை தோன்றச் செய்திடுக பின்னர் அந்த திரையிலுள்ள அதனுடைய பட்டியலின் இடதுபுறத்தின் Authஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் ஃபயர்பேஸில் நாம் பயன்படுத்தி கொள்வதற்கு தயாராக உள்ள வழிமுறை களின் பட்டியலை திரையில் பட்டியலிடுவதற்கு tabஎனும் பட்டியலில் உள்ள SIGN_IN_METHODSஎனும் கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் பட்டியலில் Googleஎன்பதை தெரிவுசெய்து கொண்டு இதனை இயலுமை செய்து சேமித்து கொள்க
படிமுறை2- பொத்தானை உருவாக்குதல்: அடுத்ததாக நம்முடைய index.html என்பதற்குள் Google Signin,Google Signoutஆகிய இருபொத்தான்களை உருவாக்கிட வேண்டும் இதற்காக பின்வரும் எடுத்துக் காட்டில் வழங்கப்பட்டுள்ள குறிமுறைவரிகளை செயல்படுத்தி இவைகளை உருவாக்கிடுக
Google Signin
Google Signout
படிமுறை3: அதனை தொடர்ந்து மேலேகூறிய கட்டளைவரிகளின் படி உருவாக்கப்பட்ட அவ்விரு பொத்தான்களுக்கான செயலிகளை உருவாக்கிடவேண்டும் இதற்காகsignInWithPopup() , signOut() ஆகிய இரு வழிமுறைகளை பயன்படுத்தி கொள்ளமுடியும் இதற்காக பின்வரும் எடுத்துக் காட்டில் வழங்கப்பட்டுள்ள குறிமுறைவரிகளின் வாயிலாக செயல்படுத்திடுக
var provider = new firebase.auth.GoogleAuthProvider();
function googleSignin() {
firebase.auth()
.signInWithPopup(provider).then(function(result) {
var token = result.credential.accessToken;
var user = result.user;
console.log(token)
console.log(user)
}).catch(function(error) {
var errorCode = error.code;
var errorMessage = error.message;
console.log(error.code)
console.log(error.message)
});
}
function googleSignout() {
firebase.auth().signOut()
.then(function() {
console.log(‘Signout Succesfull’)
}, function(error) {
console.log(‘Signout Failed’)
});
}
இதன்பின்னர் நம்முடைய ஃபயர் பேஸ்திரையை புத்தாக்கம் செய்து கொண்டுGoogle Signin எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் கூகுளின் மேல்மீட்பு பட்டி திரையில் தோன்றுவுதை காணலாம் நாம் இதற்குள் வெற்றிகரமாக உள்நுழைவு செய்திட்டால் இந்தஃபயர் பேஸினுடைய பணியகத்திற்குள் பயனாளர் ஒருவர் உள்நுழைவுசெய்திடமுடியும் தொடர்ந்துGoogle Signoutஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இந்த பயன்பாட்டிலிருந்து வெளியேறமுடியும் இதனைதொடர்ந்து ஃபயர் பேஸின் பணியகத்திரையும் குறிப்பிட்ட பயனாளர் வெற்றிகரமாக வெளியேறுதல் செய்துவிட்டார் எனஉறுதிபடுத்திடும்
2
முகநூல் எனும்சமுதாயஇணையபக்கம் அங்கீகரித்தல்(Facebook Authentication)
அதன்பிறகு பின்வரும்பகுதியில் முகநூல் எனும் சமுதாயஇணையபக்கமானது இந்த ஃபயர் பேஸை எவ்வாறு அங்கீகரித்தல் செய்கின்றது என காணவிருக்கின்றோம் இதற்காக பின்வரும்படிமுறைகளை பின்பற்றிடுக
படிமுறை1முகநூலின்அங்கீகரித்தல் இயலுமை செய்தல்(Enable Facebook Auth): முதலில் ஃபயர்பேஸின் முகப்புதிரையை தோன்றசெய்திடுக பின்னர் அதனுடைய திரையிலுள்ள பட்டியலின் இடதுபுறத்தின் Authஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் ஃபயர்பேஸில் நாம் பயன்படுத்தி கொள்வதற்கு தயாராக உள்ள வழிமுறை களின் பட்டியலை திரையில் பட்டியலிடுவதற்கு tabஎனும் பட்டியலில் உள்ள SIGN_IN_METHODSஎனும் கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் பட்டியலில் Facebook என்பதை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து திரையில் தோன்றிடுமாறு திறந்து கொள்க அதனைதொடர்ந்து App ID , App Secret ஆகிய இரு பொத்தான்களைபடிமுறை2இல் கூறுகின்றவாறு பின்பற்றி இதில் சேர்த்திட வேண்டும் படிமுறை2 முகநூல் பயன்பாட்டினை உருவாக்குதல்(Create Facebook App):முகநூல் எனும் சமுதாய இணைய பக்கமானது அங்கீகரித்தலை இயலுமை செய்வதற்கு Facebook appஎனும் பயன்பாட்டினை உருவாக்கிடவேண்டும்இதற்காக முதலில் startஎனும் இணைப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து இந்த பயன்பாட்டினை திரையில் தோன்றிடசெய்திடுக தொடர்ந்து இந்த திரையிலிருந்து App ID , App Secret ஆகிய இரு பொத்தான்களை நகலெடுத்துகொண்டுவந்து ஃபயர் பேஸ்பக்கத்தில் ஒட்டிசேர்த்திடுக மேலும் இந்த சாளரத்திலிருந்து OAuth Redirect URIஎன்பதை நகலெடுத்து கொண்டு வந்து Facebook appஎனும் பயன்பாட்டிற்குள் ஒட்டிசேர்த்திடுகஅதன்பின்னர் Facebook appஎனும் பயன்பாட்டுத்திரையின் உள்பகுதியில் + Add Product என்பதை காணமுடியும்
படிமுறை3 முகநூலின் SDKவை இணைத்தல்(Connect to Facebook SDK): பிறகு index.html என்பதிலுள்ள bodyடேக் என்பதன் துவக்கத்தில் பின்வரும் குறிமுறைவரிகளை உள்ளீடு செய்திடுக மேலும் Facebook appஎனும் பயன்பாட்டுத்-திரையிலிருந்து நம்முடைய பயன்பாட்டு சுட்டியாக APP_IDஎன்பதற்கு பதிலாக அமைத்திடுக

படிமுறை4 பொத்தான்களை உருவாக்குதல் (Create Buttons): அடுத்ததாக index.htmlஎன்பதில் இந்த முகநூல் பக்கத்திற்குள் உள்நுழைவுசெய்திடவும் வெளியேறிடவும் செய்வதற்கான login . logoutஆகிய இருபொத்தான்களை உருவாக்கிடவேண்டும் இதற்காக பின்வரும் எடுத்துக் காட்டில் வழங்கப்பட்டுள்ள குறிமுறைவரிகளை செயல்படுத்தி இவைகளை உருவாக்கிடுக
Facebook Signin
Facebook Signout
படிமுறை5 அங்கீகரித்தல் செயலிகளை உருவாக்குதல்(Create Auth Functions)
மேலும் அங்கீகரித்திடுவதற்கான செயலிகளை உருவாக்கிடும் இந்த கடைசி படிமுறையில் index.jsஎன்பதை திறந்து அதில் பின்வரும் குறிமுறைவரிகளை நகலெடுத்துவந்து ஒட்டிடுக
var provider = new firebase.auth.FacebookAuthProvider();
function facebookSignin() {
firebase.auth().signInWithPopup(provider)
.then(function(result) {
var token = result.credential.accessToken;
var user = result.user;
console.log(token)
console.log(user)
}).catch(function(error) {
console.log(error.code);
console.log(error.message);
});
}
function facebookSignout() {
firebase.auth().signOut()
.then(function() {
console.log(‘Signout successful!’)
}, function(error) {
console.log(‘Signout failed’)
});
}

Previous Older Entries