Raspberry Pi வாயிலாக பிரபலமான கணினி மொழிகளை கற்றுகொள்க

தற்போது தகவல்தொடர்புதுறையில் அதிக அளவு பணிவாய்ப்புகளை பெறுவதற்கு Raspberry Piஆனது மிகமுக்கிய பங்காற்றுகின்றது அதிலும் கணினிமொழிகளை மிகஎளிதாக கற்று தகவல்தொடர்புதுறையில் நம்முடைய திறனை மெருகேற்றி கொள்வதற்கு மிகவும் அத்தியாவசியமாக இதுஉதவுகின்றது அவற்றுள் மிகப்பிரலமான மூன்று கணினிமொழிகளை இதன் வாயிலாக நாம் கற்றுகொள்ளமுடியும்
1.பைதான் என்பது திறமூல உலகில் மிகவும் பிரபலமான கணினிமொழியாகும் இதனுடைய interpreter ஆனது அனைத்து லினக்ஸ் இயக்கமுறைமைகளுடன் சேர்த்து வழங்கப்படுகின்றது நம்முடைய Raspberry Piஇல் Raspbian இனை நிறுவுகை செய்தால் Thonny எனஅழைக்கப்படும் பயன்பாடானது துவக்கநிலையாளர்களுக்கு பைதான் எனும் கணினிமொழியை எளிதாக கற்பதற்கான IDE சூழலை வழங்குகின்றது இந்த IDE சூழலானது நாம் பைதான் மொழியில் குறிமுறைவரிகளைஎழுதும்போது எழுதும் கட்டளைவரிகளின் ஓரிரு எழுத்துகளை உள்ளீடு செய்தவுடனேயே மிகுதி எழுத்துகளை தானாகவே பூர்த்தி செய்து கொள்ளுதள், குறிமுறைவரிகளில் ஏற்படும் பிழைகளை தானாகவே திருத்தம் செய்து கொள்ளுதல், பயன்பாட்டினை உருவாக்கியபின்னர் மெய்நிகராக செயல்படச்செய்து இறுதிவிளைவை திரையில் காண்பது ஆகியபல்வேறு வசதி வாய்ப்புகளை துவக்கநிலையாளர்களுக்கு இது வழங்குகின்றது Raspberry Piஇல்Thonny எனும் பயன்பாட்டினை கொண்டு பைதான் மொழிகற்பதற்காகமேலும் விவரங்களை அறிந்து பயன்படுத்தி கொள்வதற்கு https://raspberrypihq.com/getting-started-with-python-programming-and-the-raspberry-pi/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

2.ஜாவா எனும் அடுத்த மிகப்பிரபலமான கணினிமொழியானது தொழில்துறை நிறுவனங்களுக்கும் கல்லூரிகளுக்கும் மிகவும் உதவியாக இருகின்றது இந்த கணினி மொழியை Raspberry Pi வாயிலாக BlueJ எனும் பயன்பாடு வழங்கிடும் ஜாவாவின்IDE சூழலின் உதவியுடன் துவக்கநிலையாளர்களும் மிகஎளிதாக கற்றுக்கொள்ளமுடியும் ஜாவா மொழிகற்பதற்காகமேலும் விவரங்களை அறிந்து பயன்படுத்தி கொள்வதற்கு https://BlueJ.org/ raspberrypi/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

3 ஜாவாஸ்கிரிப்ட் என்பது வாடிக்கையாளர்களுக்கு உதவிடும் இணையதள பயன்பாடுகளையும் பயனாளிகள் பயன்படுத்திடும் இணைய உலாவிகளுக்கு ஏற்ப தானாகவே தகவமைத்து கொள்ளும் வசதியுடன் உருவாக்கிடும் வசதியை வழங்குகின்றது அதுமட்டுமல்லாது சேவையாளர் பக்கத்தில் பல்வேறு பயன்பாடுகளின் பின்புலமாக இயங்கும் சேவைகளின் பயன்பாடுகளையும் இதன் வாயிலாக உருவாக்கிட முடியும் இவ்வாறான வசதிகொண்ட மிகப்பிரபலமான ஜாவாஸ்கிரிப்ட் எனும் கணினிமொழியை Node.js எனும் இயக்கசூழலை Raspberry Pi வாயிலாக இன் வாயிலாக எளிதாக கற்றுகொள்ளமுடியும் ஜாவாஸ்கிரிப்ட் மொழிகற்பதற்காகமேலும் விவரங்களை அறிந்து பயன்படுத்தி கொள்வதற்கு https://www.w3schools.com/nodejs/nodejs_raspberrypi.asp எனும் இணையதளமுகவரிக்கு செல்க
இவை மட்டுமல்லாது C, C++, PHP, and Ruby. போன்ற பல்வேறு கணினிமொழிகளைகூட துவக்கநிலையாளர்கள் எளிதாக Raspberry Pi வாயிலாக இன் வாயிலாக கற்றுக்கொள்ளமுடியும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: