காட்சிப்படுத்தலுக்காக R எனும் கணினிமொழி

R எனும் கணினிமொழியானது காட்சிப்படுத்தலுக்காக ஒருமிகச்சிறந்த சூழலாக அமைகின்றது. அதாவது நன்கு வடிவமைக்கப்பட்ட ggplot2 எனும்தொகுப்பானது எந்தவொரு வரைகலைபயன்பாட்டிற்கும் திட்டமிடப்பட்ட அமைப்புடன் R எனும் கணினிமொழியில் கிடைக்கின்றது. இந்தGgplot2 தொகுப்பின் qplot () எனும் செயலியானது மிகவேகமான திறமையான அடுக்குகளை உற்பத்தி செய்வதில் மிகமுக்கிய பங்கு வகிக்கின்றது.
R எனும் கணினிமொழியானது தரவுகளை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான வியத்தகு காட்சிப்படுத்தல்களை உருவாக்க ஒரு விதிவிலக்கான நூலகங்களை வழங்குகிறது.இந்த R எனும் கணினிமொழியில் ggplot2, lattice, higher charter, leaflet, RGL and Ploty. ஆகியவை காட்சிப்படுத்தலின் மிகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மதிப்புமிக்க நூலகங்களாகும். இவற்றுள், ggplot2 ஆனது வரைகலைபடங்களில் நிகழ்ச்சி போக்கு தொகுப்பாக விளங்குகின்றது. வரைகலையின் அடிப்படை வரை-விலக்கணங்கள் மட்டுமில்லாது மிகமேம்பட்ட வரைவிலக்க உறுப்புகளையும் கொண்டு தரவுகளுக்கான வரைபடங்களை மிகதுல்லியமாக சிறப்பாக காட்சிபடுத்திடுகின்றது .இதனை
> install.packages(“ggplot2”)
எனும் கட்டளைவரிவாயிலாக நிறுவுகை செய்து கொள்ளமுடியும். அதனை தொடர்ந்து
> library(“ggplot2”)
எனும் கட்டளைவரிவாயிலாக இதன் நூலகங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வரமுடியும்.பின்னர்
x qplot(weight, data =df,geom = “density”)
எனும் கட்டளைவரிவாயிலாக கோட்டு வரைபடத்தினை திரையில் கொண்டுவரமுடியும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: