ஜூலியா எனும் ஒரு நவீன நிரலாக்க மொழி ஒரு அறிமுகம்

பொதுவாக கணினியின் மென்பொருட்களனைத்தும் நாம் உள்ளீடு செய்திடும் ஏராளமான அளவு தரவுகளை கொண்டு பயனாளர்கள் விரும்பிவாறு காட்சி வெளியீடாக கொண்டுவருவதே மிகமுக்கியமான பணியாகும் அதைவிட அவைகளை கொண்டு நிகழ்வுநேரத்திலேயே பயனாளிகளால் புரிந்து கொள்ளும் வண்ணம் காட்சியாக அதனுடைய வெளியீட்டினை கொண்டுவரச்செய்வதேஇதனுடைய அடிப்படை பணியாகும் அதற்காக இவை மிகப்பெரிய அளவு சக்திவாய்ந்த காட்சிப்படுத்தல் கருவிகளைக் கொண்டிருக்க வேண்டியது கட்டாயமாகும். அதாவது பயன்பாட்டு மென்பொருகளானவை உள்ளீடாக பெறும் ஏராளமான தரவுகளை நம்மால் அங்கீகரிக்கப்படக்கூடிய வடிவமைப்பில் வழங்கப்பட வேண்டும்.ஆயினும் தற்போது பயன்பாடுகளுக்குள்உள்ளீடுசெய்யப்படும் தரவுகளின் அளவு அதிவேகமாக உயர்ந்து வருவதால், மனிதனால் புரிந்துகொள்ளும் வடிவத்தில் தரவுகளை வழங்குவது எந்தவொரு வெற்றிகரமான பயன்பாட்டு மென்பொருளையும் உருவாக்குவதற்கான முக்கிய அம்சமாகிறது. எனவே, தரவுகளை காட்சிப்படுத்தல் என்பது பயன்பாட்டினை உருவாக்குநர்களுக்கு ஒரு சக்தி வாய்ந்த கருவியாக திகழ்கின்றது. சிக்கலான தரவுகளை எளிதாக்குவது பின்னர் அவற்றை வரைகலையாக திரையில் பிரதிபலிக்க செய்வது ஆகியபணிகளை எளிதாக்குவதற்காக பல நூலகங்கள்தற்போது ஏராளமானஅளவில் உள்ளன. கிட்டத்தட்ட அனைத்து நவீன நிரலாக்க மொழிகளும் இந்தப் பணிக்களுக்கு தேவையானஅளவு நூலகங்களை கைவசம் வைத்திருக்கின்றன.அவ்வாறான திறன் கொண்ட ஜூலியாவின் நூலகங்களின் துனையுடன் தரவுகளின்காட்சிப்படுத்தலை விரைவாக கையாளமுடியும்.இந்த ஜூலியா என்பது ஒரு நவீன நிரலாக்க மொழியாகும், இது பைதானின் எளிய செயலையும் C இன் மிகைவேகத்தையும் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கிறது. இது நிரலாளர்களுக்கு பணிச்சுமை அதிகமில்லாமல் பல பணிகளைஎளிதாக செய்வதற்கான திறன்களைக் கொண்டிருப்பதால் மிகப்பிரபலமாக இது விளங்குகின்றது. இந்த ஜூலியாவானது பயனாளர்களின் உற்ற நண்பனாக விளங்குவதால், இதனுடைய காட்சிப்படுத்தலின் செயல்முறையை மிகவும் எளிதாக புரிந்து கொள்ள முடியும்

Gadfly,Makie,Plots ,PyPlot போன்றவை ஜூலியாவின் மிகமுக்கிய காட்சிப்படுத்தல் நூலகங்களாலாகும் பொதுவாக பயன்பாடுகளில் பெறப்படும் தரவுகளை அட்டவணையாக செய்தல். அதன்பிறகு அவ்வட்டவணை யிலிருந்து நாம் விரும்பும் வரைபடத்தை தெரிவுசெயதல் இறுதியாக அதனடிப்படையில் அவ்வாறான வரைபடங்களை வரைவதற்கானசெயலிகளை அழைத்து நாம் விரும்பும் வரைபடத்தை திரையில் வரையச்செய்து பிரதிபலிக்கசெய்தல் ஆகியவரிசைகிரரமமாக பணிகளை இவை செயற்படுத்திடு கின்றன
இங்கு Makie எனும் நூலககருவியை மட்டும் இங்கு காணவிருக்கின்றோம் இது விரிவாக்கத்திறன் கொண்ட அனைத்து தளங்களையும் ஆதரிக்ககூடிய ஒரு திறன்மிக்க கருவியாக விளங்குகின்றது பொதுவாக ஜூலியாவில் எந்தவொரு நூலககட்டுகளையும் Pkg.add எனும் கட்டளைவரியின் வாயிலாகவே சேர்க்கமுடியும் அவ்வாறான கட்டளைவரி பின்வருமாறு
Pkg.add(“Makie”)
இந்தMakie எனும் நூலககருவியைகொண்டு எளிய புள்ளிகளின்சிதறல் காட்சியை பின்வரும் குறிமுறைவரிகளால் கொண்டுவரமுடியும்
using Makie
x = rand(10)
y = rand(10)
colors = rand(10)
scene = scatter(x, y, color = colors)
இதனுடைய வெளியீடு பின்வருமாறுஅமையும்

மேலும் இந்தMakie எனும் நூலககருவியை கொண்டு கோட்டுவரைபட காட்சிக்கான குறிமுறைவரிகள் பின்வருமாறு
using Makie
x = range(0, stop = 2pi, length = 80)
f1(x) = sin.(x)
f2(x) = exp.(-x) .* cos.(2pi*x)
y1 = f1(x) y2 = f2(x)
scene = lines(x, y1, color = :blue)
scatter!(scene, x, y1, color = :red, markersize = 0.1)
lines!(scene, x, y2, color = :black)
scatter!(scene, x, y2, color = :green, marker = :utriangle, markersize = 0.1)
இதனுடைய வெளியீடு பின்வருமாறுஅமையும்

அதைவிட இந்தMakie எனும் நூலககருவியைகொண்டு அடிப்படையான heat வரைபடத்தினை உருவாக்குவதற்கான குறிமுறைவரிகள் பின்வருமாறு
sing Makie
using AbstractPlotting: hbox, vbox
data = rand(50, 100)
p1 = heatmap(data, interpolate = true)
p2 = heatmap(data, interpolate = false)
t = Theme(align = (:left, :bottom), raw = true, camera = campixel!)
title1 = text(t, “Interpolate = true”)
title2 = text(t, “Interpolate = false”)
s = vbox(
hbox(p1, title1),
hbox(p2, title2),
)
இதனுடைய வெளியீடு பின்வருமாறுஅமையும்

மேலும் ஜூலியாவின் நூலகமானMakie எனும் நூலககருவியை பயன்படுத்திகொள்வதற்கான குறிமுறைவரிகளை நன்கு அறிந்து கொள்ள http://makie.juliaplots.org/stable/basic-tutorials.html#Tutorial-1. எனும் இணையதளத்திற்கு செல்க
ஜூலியாவில் இவ்வாறான பல்வேறு காட்சிப்படுத்தலுக்கான கருவிகளின் கட்டுகள்பல உள்ளன அவைகளுள் நமக்கு பொருத்தமானதைமட்டும்தெரிவுசெய்து பயன்படுத்தி கொள்க என பரிந்துரைக்கப்படுகின்றது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: