துவக்கநிலையாளர்களும் இணையதளபக்கத்தை எளிதாக உருவாக்கமுடியும்

பொதுவாக புதிய இணையதளபக்கமொன்றினை நமக்கென தனியாக உருவாக்கிட விரும்பினால் அதற்கென தனியாக நீண்ட பயிற்சியையோ அல்லது HTML/CSS குறிமுறைவரிகளையோ நன்கு அறிந்திருந்தால்தான் முடியும் என்ற தவறான எண்ணம் நம்மனைவரின் மனதிலும் உள்ளது அதனை விட்டொழியுங்கள் புதியவர்களும் தமக்கென தனியாகவொரு இணையதளபக்கத்தை தாமே மிகஎளிதாக உருவாக்கி கொள்ளமுடியும் இதற்காக WordPress, Wix, Joomla, Drupalபோன்ற நூற்றுகணக்கான இணையதளங்கள் தயாராக உள்ளன இவைகளுள் வேர்டுபிரஸ்ஸை கொண்டு துவக்கநிலையாளர்களும் எளிதாக இணையபக்கத்தை பின்வரும் படிமுறைகளை பின்பற்றி உருவாக்கி கொள்ளமுடியும்
படிமுறை.1.Web Hosting எனும் சேவையைபெறுதலும் இணையபக்கத்தின்பெயரை பதிவுசெய்தலும் இணையபக்கத்தின்பெயரை பதிவுசெய்தால் மட்டும் போதாது அதனை இணையத்துடன் இணைப்பதற்கானWeb Hosting எனும் சேவையைபெற்றால் மட்டுமே சரியாக அமையும் அதனால் முதலில் இந்த சேவையை வழங்கிடும் http://www.Bluehost.com அல்லது இதுபோன்ற தளங்களுக்குள் உள்நுழைவுசெய்தபின்விரியும் திரையில் get started now எனும்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் BasicPlus,Choice Plusஆகியவாய்ப்புகளில் நமக்குத்தேவையானதை தெரிவுசெய்து கொள்க அடுத்து .com, .net .org போன்ற பின்னொட்டுகளில் நம்முடைய இணைய பக்கத்திற்கான பொருத்தமானதுடனான பெயரை தெரிவுசெய்து கொள்க தொடர்ந்து create your account எனும் பொத்தானை சொடுக்குதல் செய்து நம்முடைய பெயர் முகவரி போன்றவிவரங்களை உள்ளீடுசெய்து கொண்டு நம்முடைய கட்டணம் செலுத்தும் விவரங்களையும் உள்ளீடுசெய்து கொள்க மேலும் Basic,lus,Choice Plus ஆகிய திட்டங்களில் நமக்கு வசதியான ஒன்றினை இறுதியாக தெரிவு செய்து கொண்டு அதற்கான கட்டணத்தை செலுத்திடுக பின்னர் நமக்கென உள்நுழைவுசெய்வதற்கான தனியானதொரு கடவுச்சொற்களை உருவாக்கி கொள்க
படிமுறை.2.இணையதளபக்கத்தை கட்டமைவுசெய்வது பொதுவாக பெரும்பாலான இணையதளபக்கத்தை உருவாக்கஉதவிடும் நிறுவனங்கள் one-click-installation,OR MANUAL INSTALL ஆகிய இருவழிமுறைகளில் நமக்கான இணையதள பக்கத்தை கட்டமைவுசெய்துகொள்ளுமாறு அறிவுறுத்திடுவார்கள் முதலில் hosting account இற்குள் உள்நுழைவுசெய்திடுக தொடர்ந்து நம்முடைய கட்டுப்பாட்டு பலகத்திற்கு செல்க அங்குள்ள “WordPress” அல்லது “Website” உருவப்பொத்தான்களுள் ஒன்றினை தெரிவுசெய்து கொண்டு install Nowஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து one-click-installation வழிமுறையை பின்பற்றிடுக அவ்வாறான வாய்ப்பு இல்லையெனில் OR MANUAL INSTALL எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து படிப்படியாக ஒவ்வொன்றாக கட்டமைவு செய்து கொண்டு வருக
படிமுறை.3. இணையதளபக்கத்தை வடிவமைத்தல்முந்தைய படிமுறை 2 ஐ பின்பற்றி நிறுவுகைசெய்திடும் நம்முடைய இணையதள பக்கமானது பொதுவான அடிப்படையான இணையதளபக்கமாகும் அதனை பல்வேறு பார்வையாளர்களையும் கவரும்வண்ணம் வடிவமைப்பு செய்திடவேண்டும் அதற்காக WordPress dashboardஎனும் வேர்டுபிரஸின் முகப்பு பக்கத்திற்கு செல்க அதனுடைய பக்கபலகையின் Appearance என்பதில் Themes என்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன்நாம் பயன்படுத்த தயாராகஇருக்கும் 1500 இற்குமேற்பட்ட Themesகள் திரையில் விரியும் அவற்றுள்நாம் விரும்புவதை தெரிவுசெய்து கொண்டு Install எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
படிமுறை.4.இணையதள பக்கத்திற்கான உள்ளடக்கங்களை சேர்த்தல் நம்முடைய இணையதளபக்கங்களில் நம்மைபற்றிய விவரங்களை அளிப்பதற்கான About Me எனும் பக்கத்தையும் நாமளிக்கும் சேவைகளுக்காக Servicesஎனும் பக்கத்தையும் உள்ளடக்கங்களாக சேர்த்திடவேண்டும் இதற்காக வேர்டுபிரஸ்ஸின முகப்பு பக்கத்தில் Pages -> Add New->எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக உடன்விரியும் வழக்கமான எம்எஸ் வேர்டு போன்ற திரையில் தேவையான விவரங்களை உள்ளீடுசெய்து சேமித்து கொள்க இவ்வாறான தகவல்களை மாறுதல்கள் செய்திடும்போது Update எனும் பொத்தானை சொடுக்குதல் செய்து நிகழ்நிலைபடுத்திகொள்க மேலும் இவற்றை ஒரு பட்டியலாக வைத்து பார்வையாளர்கள் விரும்பினால் தெரிவுசெய்து காணுமாறு செய்திடவேண்டும் அதற்காக வேர்டுபிரஸ்ஸின முகப்பு பக்கத்தில்
Appearance-> Menus->எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக உடன் விரியும் திரையில் நாம் உள்ளடக்க பக்கங்களாக உருவாக்கியவைகளின தேர்வுசெய் பெட்டிகளை தெரிவுசெய்துகொண்டு Add to Menuஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக நம்முடைய இணையதளபக்கத்தில் ஏதேனும் வலைபூக்களை இணைத்திட விரும்பினால்Blogஎன தெரிவுசெய்து கொண்டு Posts -> Categories-> எனும் வாய்ப்பினை அல்லது Posts -> Add New-> எனும் வாய்ப்பினை வேர்டுபிரஸ்ஸின முகப்பு பக்கத்தில் தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக அடுத்து நம்முடைய இணையதளபக்கத்தின் பெயர் இணைஉலாவிகளில் குறிச்சொற்களாக எளிதில் தேடிபிடித்திடுவதற்கு வசதியாக அமையுமாறு தலைப்பும் விளக்கவரியும் (Title and Tagline )சுருக்கமாக அமைந்திருக்கவேண்டும் அதற்காக Settings -> General ->எனும் வாய்ப்பினை வேர்டுபிரஸ்ஸின முகப்பு பக்கத்தில் தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக உடன் விரியும் படிவத்தில் தேவையானவாறு சரியாக சுருக்கமாக உள்ளீடுசெய்து கொள்க
நம்முடைய இணையதளபக்கத்தை பற்றிய பார்வையாளர்களின் கருத்துகளை உள்ளீடுசெய்திடSettings -> Discussion->எனும் வாய்ப்பினை வேர்டுபிரஸ்ஸின முகப்பு பக்கத்தில் தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக உடன் விரியும் திரையில்Allow people to post comments on new articles எனும் வாய்ப்பினை தெரிவுசெய்திடுக தேவையில்லை யெனில்இந்த வாய்ப்பினை தெரிவுசெய்யாதுவிட்டிடுக நம்முடைய இணையதளபக்கத்தில் பக்கபலகையை திருத்தம் செய்து மாற்றியமைத்திடவிரும்பினால் Appearance -> Widgets->எனும் வாய்ப்பினை வேர்டுபிரஸ்ஸின முகப்பு பக்கத்தில் தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக உடன் விரியும் திரையில் தேவையானவாறு இழுத்துசென்று விடுவதன் வாயிலாக திருத்தியமைத்திடுக மேலும் நம்முடைய இணையதள பக்கத்தில் கூடுதல் இணைப்பாக ஒருசில வசதிவாய்ப்புகளை சேர்த்திட விரும்பிடுவோம் அதற்காக Plugins -> Add New->எனும் வாய்ப்பினை வேர்டுபிரஸ்ஸின முகப்பு பக்கத்தில் தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக உடன் விரியும் திரையில் ஆயிரகணக்கான கூடுதல் இணைப்புகள் நாம் பயன்படுத்தி கொள்ள தயாராக இருக்கின்றன அவைகளுள் நமக்கு தேவையான பொருத்தமானவைகளை மட்டும் தெரிவுசெய்து சேர்த்து கொள்க
அவ்வளவுதான் நமக்கென தனியாக நம்முடைய இணையபக்கத்தைஅரைமணிநேரத்தில் வெற்றிகரமாக உருவாக்கிவிட்டோம் வாழ்த்துகள்

மேலும் விவரங்களுக்கு https://websitesetup.org/எனும் இணைய பக்கத்திற்கு சென்றறிந்துகொள்க

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.