ஃபயர்பேஸ்-தொடர்-19-ஆண்ட்ராய்டு ஃபயர் பேஸில் நிகழ்வுநேர தரவுதளம்

ஆண்ட்ராய்டு ஃபயர்பேஸ் தரவுதளமானது, ஃபயர்பேஸின் நிகழ்வுநேர தரவுதளம் என்றும் அழைக்கப்படுகிறது, இது மேககணினி அடிப்படையிலான NoSQL தரவுத்தளத்தைப் பயன்படுத்தி தரவுகளை ஒத்திசைவாக சேமித்துவைக்க பயன்படுகிறது. நம்முடைய ஆண்ட்ராய்ட் ஃபயர்பேஸ் தரவுதளத்தில் இருக்கும் தரவுகளானவை ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், இணையம் போன்ற பல தளங்களில் ஒருங்கிணைக்கப்பட்டு, பல நேரங்களில் நேரடியாக வாடிக்கையாளர்களிடையே ஒத்திசைவாக செயல்படுத்திடலாம்.
ஆண்ட்ராய்டு ஃபயர்பேஸ் தரவுதளமானது இணைய இணைப்பில்லா மலும் செயல்படும் திறன்மிக்கது, நம்முடைய சாதனமானது இணைய இணைப்பில்லாமல் இருக்கும்போதும் தரவுகளைத் தக்க வைத்துக் கொள்ளும். திறனை வழங்குகின்றது
ஆண்ட்ராய்ட் ஃபயர்பேஸ் தரவுதளத்தில் தரவுகள் JSON முனைமங்களாக சேமிக்கப்படுகிறது. ஃபயர்பேஸ் நிகழ்நேர தரவுதள பாதுகாப்பு விதிகள், நம்முடைய தரவின் கட்டமைப்பைத் தீர்மாணிக்கிறது, படிக்க மற்றும் எழுத அணுகிடும் அனுமதியை கட்டமைக்கின்றது.
ஆண்ட்ராய்ட் ஃபயர்பேஸ் தரவுதளத்தினை உருவாக்குதல்
இதற்காக பின்வரும்படிமுறைகளை பின்பற்றிடுக
1.முதலில் ஃபயர்பேஸின் https://firebase.google.com/ எனும் முகவரியிலுள்ள இதனுடைய இணையதளபக்கத்திற்கு செல்க அங்கு நமக்கென தனியாக கணக்கொன்றினை துவங்கிடுக தொடர்ந்து இதனுடைய முகப்பு திரைக்கு செல்க அங்கு Create New Project எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து புதிய செயல்திட்டத்தினை துவக்குக
2. பின்னர் இந்த செயல்திட்டத்திற்கான பெயர் தற்போது நாம் வாழும் நாட்டின் பெயர் ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து கொண்டு Create Projectஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

3. அடுத்து தோன்றிடும் திரையில் Add Firebase to your Android app எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அதனைதொடர்ந்து இந்த செயல்திட்ட தொகுப்பின் விளக்கங்களையும் உள்நுழைவு சான்றிதழிற்கானSHA-1எனும் திறவுகோளையும் சேர்த்திடுக இது இயக்கநேர இணைப்புகள் ,அழைப்புகள் ,கூகுளின் உள்நுழைவு ஆகியவற்றுகளுக்கானதாகும் தேவையென விரும்பினால் இந்தSHA-1 ஐ சேர்த்திடுக இது கூகுள் சேவைகளுக்கான google-services.jsonஎனும் கோப்பினை பதிவிறக்கம் செய்து கொள்கின்றது இதனை நாம் பின்னர் இணைத்து கொள்வோம்

4.தொடர்ந்து விரியும் செயல்திட்டமுகப்பு திரையில் Auth Menu எனும் பட்டியலை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் SIGN-IN METHOD என்பதிலுள்ள Email/Passwordஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து அதனை இயலுமை செய்து கொள்க இவ்வாறான அடிப்படைகளை செய்தபின்னர் தான் ஆண்ட்ராய்டு ஃபயர்பேஸ் தரவுதளத்தில் அனுமதிபெற்றவர்களைமட்டும் இந்த தரவுதளத்தில் படித்திடவும் எழுதிடவும் அனுமதிக்கும் அதனைதொடர்ந்து ஃபயர்பேஸின் பட்டியில் Database எனும்தாவிபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் JSON tree அமைப்பின் வேர்பகுதியை காண்பிக்கும் அதில் ஒரு listItems எனும்child node ஐ சேர்த்திடுக

அதன் கீழ்தான் நாம் ஒவ்வொன்றையும் சேர்த்திடமுடியும் JSON tree அமைப்பில் தரவினை சேர்த்தால் அது நடப்பிலிருக்கும் JSON tree அமைப்பில் புதிய முனைமமாகவும் அதற்கான திறவுகோளாகவும் மாறியமையும் விதிகள் சரியாக இருக்கின்றதாவென Rules எனும் தாவிப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து சரிபார்த்துகொள்ளலாம்அல்லது இந்த Android Firebase Database இல் பாதுகாப்பு விதிகளை நாம் எழுதுவதற்கும் படிப்பதற்கும் தேவையானவாறு திருத்தம் செய்து கொள்ளலாம் அதனோடு அனுமதியில்லாமலேயே Android Firebase Database ஐ சுதந்திரமாக அனுகிடுமாறு விதிகளை மாற்றியமைத்து கொண்டு நம்முடைய மளிகை பொருட்களுக்கானGrocery Application எனும் பயன்பாட்டினை உருவாக்கி இந்த ஆண்ட்ராய்டு ஃபயர்பஸ் தரவுதளத்துடன் இனணைத்திடுக தொடர்ந்து நாம் ஏற்கனவே உருவாக்கிய Firebase Authentication ஐ பயன்படுத்தி இதன் முகப்புதிரைக்கு செல்வதற்கு இயலுமை செய்து கொள்க


4
ஆண்ட்ராய்ட் ஃபயர்பேஸ் தரவுதளத்தினை உருவாக்குவதற்கு தேவையானவை கள்
1.1.Android Studio 1.5 அல்லது அதற்கு மேம்பட்ட பதிப்பு நிறுவுகை செய்யப்பட்ட கணினி ,
மேலும் ஆண்ட்ராய்டு SDK மேலாளர் வாயிலாக சமீபத்திய Google Play services SDK ஐ பதிவிறக்கம் செய்து கொள்க
2.நேரடியாக நிகழ்வுநேரஆண்ட்ராய்டு செயல்படும் சாதனமான ஆண்ட்ராய்டு ஸ்டுடியோ கட்டமைக்கப்பட்டுள்ள திறன்பேசி அல்லது மடிக்கணினி இந்த சாதனத்தில் ஆண்ட்ராய்டு 2.3 அல்லது அதற்குமேம்பட்டபதி்ப்பு செயல்படுவதாக இருக்குமாறு பார்த்து கொள்க மேலும் Google Play services 9.2.0 அல்லது அதற்குமேம்பட்ட பதிப்புசெயல்படுவதாக இருக்கவேண்டும் இவையனைத்தும் தயாராக இருப்பதை உறுதி செய்து கொண்டபின்னர்
ஒரு புதிய செயல்திட்டத்தினை உருவாக்கிடும் செயல்படுத்திடவேண்டும்
1. இதற்காக File → New → New Project என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக உடன் தோன்றிடும் திரையில் நம்முடைய பயன்பாட்டிற்கு ஒரு பெயரை உள்ளீடு செய்திடுக .அடுத்து நம்முடைய நிறுவனத்தின் உலகளாவிய ஒருங்கிணைந்த பெயரை உள்ளீடுசெய்திடுக (குறிப்பு.ஃபயர் பேஸிலும் இதே கட்டுகளின் பெயரைத்தான் வைக்கவிருக்கின்றோம் எனும் செய்தியை மனதில் கொள்க ) தொடர்ந்து இந்த செயல்திட்டத்தின் இடஅமைவையும் குறைந்தபட்ச SDKவையும் தெரிவுசெய்து கொள்க . அடுத்து தோன்றிடும் திரையில் நம்முடைய குறிமுறைவரிகளை இதில் சேர்ப்பதற்காக Empty Activity என்பதை தெரிவுசெய்து கொண்டு Nextஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் நம்முடைய செயலியின் பெயரை தெரிவுசெய்து கொண்டபின்னர்Generate Layout Fileஎனும் தேர்வுசெய்பெட்டி தெரிவு செய்திருப்பதை உறுதி செய்து கொண்டு Finishஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக செயலியின் பெயராக ListItemsActivity என்பதை வைத்துகொள்க இதை பயன்படுத்திதான் நாம் மளிகைபொருட்களை உள்ளீடு செய்யவிருக்கின்றோம்
அனுமதியையும் சார்ந்திருப்பவையையும் சேர்த்தல்
1.Gradle ஆனது இந்த செயல்திட்டத்திற்குள் ஒத்திசைவாக ஆனபிறகு நம்முடைய பயன்பாட்டு கோப்பகத்திற்கு google-services.json எனும் கோப்பினை சேர்த்திடுக
2. நமக்கு வலைபின்னலை இணைப்பதற்கான இணைய அனுமதியை AndroidManifest.xml எனும் கோப்பில் சேர்த்திடவேண்டும் அதற்கான குறிமுறைவரிபின்வருமாறு
classpath ‘com.google.gms:google-services:3.0.0’
3. தற்போது நம்முடைய build.gradleஎனும் செயல்திட்டத்தினை செயல்திட்டமுதன்மை கோப்பகத்திலிருந்து திறந்து அதில் build.gradle எனும் சார்பினை சேர்த்திடுக
4.பிறகு நம்முடைய build.gradle எனும் பயன்பாட்டினை திறந்து அதில் பின்வரும் குறிமுறைவரியை சேர்த்திடுக
apply plugin: ‘com.google.gms.google-services’
5.மேலும் சார்புகளின் பிரிவில் பின்வரும் சார்புகளை சேர்த்திடுக
compile ‘com.google.firebase:firebase-auth:9.0.2’
compile ‘com.google.firebase:firebase-core:9.0.2’
compile ‘com.google.firebase:firebase-database:9.0.2’
compile ‘com.android.support:recyclerview-v7:24.2.0’
ஆண்ட்ராய்டு ஃபயர்பேஸின் நிகழ்வுநேர தரவுதளத்தில் பணிபுரிதல்
இதற்காக ListItem.java எனும்ஒரு ஜாவா இனத்தை உருவாக்கிடுக மளிகைபொருட்கள் கடைக்கான மாதிரி இனமாக நம்முடைய தரவுதளத்திற்கு சேர்த்துகொள்வதற்காக செயல்படுத்திடலாம் அதில் பின்வரும் குறிமுறைவரிகளை சேர்த்திடுக
ListItem.java
package com.androidtutorialpoint.firebasegrocerylistapp;
import com.google.firebase.database.Exclude;
import com.google.firebase.database.IgnoreExtraProperties;
import java.text.SimpleDateFormat;
import java.util.Date;
import java.util.HashMap;
import java.util.Map;
@IgnoreExtraProperties
public class ListItem {
public String listItemText;
public String listItemCreationDate;
public String getListItemText() {
return listItemText;
}
public void setListItemText(String listItemText) {
this.listItemText = listItemText;
}
public void setListItemCreationDate(String listItemCreationDate) {
this.listItemCreationDate = listItemCreationDate;
}
@Override
public String toString() {
return this.listItemText +”\n” + this.listItemCreationDate;
}
public String getListItemCreationDate() {
return listItemCreationDate;
}
public ListItem() {
// DataSnapshot.getValue(ListItem.class) என்பதை அழைப்பதற்கு இயல்புநிலையிலுள்ள //constructorஎன்பது நமக்குத்தேவையாகும்
}
public ListItem(String listItemText) {
SimpleDateFormat sdf = new SimpleDateFormat(“dd-M-yyyy hh:mm:ss”);
this.listItemCreationDate = sdf.format(new Date());
this.listItemText = listItemText;
}
@Exclude
public Map toMap() {
HashMap result = new HashMap();
result.put(“listItemText”, listItemText);
result.put(“listItemCreationDate”, listItemCreationDate);
return result;
}
}

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: