ஆண்ட்ராய்டுசாதனத்தின்பயன்படும் சிறந்த மின்னஞ்சல் பரிசோதனை பயன்பாடுகள்

நம்முடைய ஆண்ட்ராய்டு செயல்படும் கைபேசிகள் அல்லது திறன்பேசிகள் நேரடியாக பேசுவதற்குமட்டுமல்லாமல் நாம் எங்கிருந்தாலும் அவ்விடத்திலிருந்து மின்னஞ்சல்களை கையாளுவது வியாபார நடவடிக்கைகளை கையாளுவது போன்ற பல்வேறு பணிகளை செயல்படுத்தி பயன்பெறமுடியும் அவ்வாறானஆண்ட்ராய்டுபயன்பாடுகள் பின்வருமாறு
1.Gmail Android எனும் பயன்பாடானது ஜிமெயில் மட்டுமல்லாது மற்ற அனைத்து நிறுவனங்களின் மின்னஞ்சல்களையும் நாம் வழக்கமாக கணினியில் கையாளுவதைபோன்றே நம்முடைய ஆண்ட்ராய்டு செயல்படும்கைபேசிகளிலும் அல்லது திறன்பேசிகளிலும் மின்னஞ்சல்களை கையாளுவதற்காக உதவுகின்றது மேலும் இதில் மறைந்துள்ள பல்வேறு திறன்களை நாம் பயன்படுத்தி கொள்ளமுடியும் மேலும் விவரங்களுக்கு https://play.google.com/store/apps/details?id=com.google.android.gm என்ற மின்னஞ்சல்முகவரிக்கு செல்க
2. Outlook Android எனும்பயன்பாடானது நாம் கணினியில் பயன்படுத்திடும் மைக்ரோசாப்ட்டின் அவுட்லுக் போன்றே நம்முடைய ஆண்ட்ராய்டு செயல்படும்கைபேசிகளிலும் அல்லது திறன்பேசிகளிலும் மின்னஞ்சல்களை கையாளுவதற்காக உதவுகின்றதுமேலும் விவரங்களுக்கு https://play.google.com/store/apps/details?id=com.microsoft.office.outlook என்ற மின்னஞ்சல்முகவரிக்கு செல்க
3.ProtonMail எனும் பயன்பாடனது நம்முடைய மின்னஞ்சல்களை அனுமதியற்றவர்கள் காணமுடியாதவாறு மறையாக்கம் செய்து கடவுச்சொற்களுடன் பாதுகாப்பாக நண்பர்களுக்கு மின்னஞ்சல்களை அனுப்பவும் பெறவும் உதவுகின்றது மறையாக்கம் செய்திடாமல் வழக்கமான முறையில் மின்னஞ்சல்களை இதில்கையாளவும் முடியும் குறிப்பிட்ட வரையறைக்குமேல் கட்டணத்துடன் பயன்படுத்தி கொள்ளலாம் மேலும் விவரங்களுக்கு https://play.google.com/store/apps/details?id=ch.protonmail.android என்ற மின்னஞ்சல்முகவரிக்கு செல்க
4. Spike Conversational Emailஎன்பது சமீபத்திய நவீண மின்னஞ்சல் வசதிகளை கொண்டது அதாவது நேரடியாக உரையாடுவதைபோன்று செய்திகளைஅனுப்பி பதில் பெறுவது ஒன்றுக்குமேற்பட்ட நபர்களுடன் குழுவிவாதம் போன்று செயல்படுத்துவது மற்ற செய்திகளை தனியாக கையாளுவது என்பன போன்ற வசதி வாய்ப்புகளை கொண்டதாகும் இது ஆண்ட்ராய்டுமட்டுமல்லாமல் விண்டோ இயக்கமுறைமையிலும் செயல்படக்கூடியது கட்டணமற்றது அதிகபட்சம் 10 குழுக்களைஅனுமதிக்கக்- கூடியது மேலும் விவரங்களுக்கு https://play.google.com/store/apps/details?id=com.pingapp.app என்ற மின்னஞ்சல்முகவரிக்கு செல்க
5.Pulseஎனும் பயன்பாடானது மின்னஞ்சல்களை அனுப்பவும் பெறவும் ஆண்ட்ராய்டு சாதனங்கள் மட்டுமல்லாது விண்டோ செயல்படும் கணினிகளிலும் செயல்படும் திறன் மிக்கது. நம்முடைய கைபேசியை மாற்றினாலும் எங்கிருந்தும் எந்தவொரு ஆண்ட்ராய்டு சாதனத்திலிருந்தும் இதனை பயன்படுத்தி கொள்ளமுடியும் குறுஞ்செய்திகளையும் இதில் அனுப்பமுடியும்இதில் ஏராளமான வசதி வாய்ப்புகள் உள்ளன அதாவது நாம் இருசக்கர அல்லது நான்கு சக்கர வண்டியை ஒட்டிக் கொண்டிருக்கும்போது மின்னஞ்சல் ஏதேனும்வந்துசேர்ந்தால் உடன் அதற்கான முன்கூட்டியே தயார்நிலையிலுள்ள பதிலை தானாகேவே அனுப்பிவைத்திடும் வசதிமிக்கது மேலும் விவரங்களுக்கு https://play.google.com/store/apps/details?id=xyz.klinker.messenger என்ற மின்னஞ்சல்முகவரிக்கு செல்க

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: