வங்கிகளின் பணம்வழங்கிடும் இயந்திரத்தில் அதற்கான அட்டையில்லாமலயே பணம் எடுக்கலாம்

இதற்காக உதவதயாராக இருப்பதுதான் QR குறியீடுகள்எனும் புதிய வழிமுறையாகும் .அதாவது இனிவருங்காலத்தில் நம்முடைய வங்கிகணக்கிலிருந்து வங்கிகளின் பணம்வழங்கிடும் இயந்திரத்தில் அதற்கான அட்டையில்லாமலயே பணம் எடுத்திடும் வசதி வரவிருக்கின்றது இந்த வழிமுறையை பயன்படுத்தி எவ்வாறு நமக்கு தேவையான பணம் எடுப்பது என இப்போது காண்போம் படிமுறை.1. நம்முடைய கைபேசியில் வங்கிகணக்கினை கையாளும் பயன்பாட்டினை திரையில் தோன்றிடச்செய்திடுக படிமுறை.2. தொடர்ந்து நம்முடைய வங்கிகணக்கிலிருந்து பணம்எடுப்பதற்கான அடையாள குறியீட்டினையும் எவ்வளவு தொகை எடுக்கவிருக்கின்றோம்என்ற விவரத்தையும்அந்த வங்கி பயன்பாட்டின் வாயிலாக ஒருங்கிணைந்தQR குறியீடுகளை உருவாக்குக படிமுறை.3. பின்னர் அந்த QR குறியீடுகளை பணம் வழங்கும் இயந்திரத்தில் காண்பித்திடுக உடன் பணம் வழங்கும் இயந்திரமானது இந்த QR குறியீடுகளை வருடுதல் செய்து நம்முடைய கோரிக்கையை செயல்படுத்திடும் படிமுறை.4 பின்னர் நாம் கோரிய தொகை வெளியில் வந்துசேரும்
மேலும் இதேQR குறியீடுகளை பயன்படுத்தி நமக்கு தேவையானவாறு வங்கி வரைவோலைகள், காசோலை புத்தகங்கள்போன்றவைகளைகூட பெறமுடியும் இதே வழிமுறையை பயன்படுத்தி இந்திய தபால்துறையின்கீழ்செயல்படும் வங்கிகளிலும் தபால்துறைஊழியர்களின் கையடக்க சாதனங்களின் வாயிலாக QR குறியீடுகளை வருடுதல் செய்து நமக்கு தேவையான பணத்தினை தபால்துறைவங்கி கணக்கிலிருந்தும் எடுத்து கொள்ளும் நடைமுறை செயல்பாட்டிற்கு வரவுள்ளது திறன்பேசி வாயிலாக கூட இந்த QR குறியீடுகளை வருடுதல் செய்து நமக்கு தேவையான வங்கிபணிகளை செயல்படுத்திடமுடியும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: