இப்போதுEduBlocksஎனும் பயன்பாட்டின்உதவியுடன் பைத்தான் மொழியை எளிதாக கற்கலாம்

தம்முடைய மானவர்களுக்குஎளிதாக பைத்தான் மொழியை கற்றுகொடுக்க விரும்பும் ஆசிரியர்கள் அல்லது பைத்தான் மொழியை புதியதாக கற்றுகொள்ள ஆர்வமுள்ள துவக்க-நிலையாளர்கள் ஆகியோரிகளின் பேரவாவினை பூர்த்தி செய்வதற்காக கைகொடுக்க வருவதுதான் EduBlocks என்பதாகும் இதில் Python 3 எனும் மொழியை குறிமுறைவரி-களின் கோப்புகளை இழுத்துகொண்டு வந்து விடுதல் எனும் அடிப்படையில் வரைகலை பயனாளர் இடைமுகமாக(GUI) பிரபலமாக விளங்குகின்றது வரைகலை இடைமுகப்பில் கோப்புகளை உள்ளீடு செய்வதற்கு பதிலாக ஏற்கனவே உள்ளீடு செய்து தயாராக இருக்கும் அதனை இழுத்து கொண்டுவந்துவிடுவது மிகவசதியான செயலாகும் இதன் வாயிலாக பள்ளியில் பயிலும் மாணவர்களையும் பைத்தான் எனும் கணினிமொழியை எளிதாகவும் விரைவாகவும் கற்றுகொள்ள ஊக்குவிக்கமுடியும் இந்த EduBlocks என்பதை வகுப்பறையில் செயல்படுத்திட quite modest—a Raspberry Pi உம் அகல் கற்றை இணைய இணைப்பு ஆகியவை மட்டுமே நமக்கு தேவையாகும்
https://github.com/AllAboutCode/EduBlocks எனும் இணைய முகவரியில் இதனை எவ்வாறு நிறுவுகை செய்வது என்பதற்கான திரைபிடிப்புக்காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன அதனை பார்த்து அறிந்து கொண்டு நிறுவுகை செயலை துவங்கிடுக
curl -sSL get.edublocks.org | bash
எனும் கட்டளை வரிவாயிலாக Raspberry Pi -லிருந்து இந்த EduBlocks எனும் பயன்பாட்டினை நிறுவுகை செய்திடத் துவங்கலாம் நிறுவுகை பணிமுடிவடைந்தவுடன் Python 3 எனும் மொழியை குறிமுறைவரிகளின் கோப்புகளை இதில் இழுத்துகொண்டு வந்து விடுதல் எனும் அடிப்படையில் வரைகலை பயனாளர் இடைமுகமாக(GUI) திரையில் நம்முடைய பணியை துவங்கலாம் அதாவது இதிலுள்ள Samples எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குவதன் வாயிலாக நம்முடைய மாதிரி குறிமுறைவரிகளின் பணியை துவங்கலாம் இதனுடைய திரையின் மேல்பகுதியிலுள்ள பட்டியில் Themeஎனும் பொத்தானை சொடுக்குவதன் வாயிலாக பலவண்ண பலகத்திரையாக மாற்றிகொள்ளலாம் saveஎனும் பொத்தானை சொடுக்குவதன் வாயிலாக நம்முடைய குறிமுறைவரிகளை சேமித்து கொள்ளலாம் பின்னர் Downloadஎனும் பொத்தானை சொடுக்குவதன் வாயிலாக நாம் ஏற்கனவே சேமித்துவைத்துள்ள நம்முடைய குறிமுறைவரிகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம Run எனும் பொத்தானை சொடுக்குவதன் வாயிலாக நம்முடைய குறிமுறைவரிகளை இயக்கி பரிசோதித்து பார்த்திடலாம் Blockly எனும் பொத்தானை சொடுக்குவதன் வாயிலாக நம்முடைய குறிமுறைவரிகளை பார்வையிடலாம்
மாணவர்களும் புதியவர்களும் பைத்தான் மொழியை கற்று பயனடைவதற்காக EduPython, Minecraft, Sonic Pi, GPIO Zero, Sense Hat.போன்ற ஏராளமான குறிமுறைவரிகளின் நூலகங்கள் இதில்தயாராக உள்ளன இது GNU GPLv3.0 எனும் அனுமதியின் அடிப்படையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ளது மேலும் விவரங்களுக்கு https://edublocks.org/ எனும் இணையமுகவரிக்கு செல்க

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: